World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Contradictions of Bush-Kerry debate: pro-war candidates confront debacle in Iraq and antiwar sentiment at home

புஷ்-கெர்ரி விவாதத்தின் முரண்பாடுகள்: போர் ஆதரவு வேட்பாளர்கள், ஈராக்கில் படுவீழ்ச்சி, உள்நாட்டில் போர் எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றனர்

By Patrick Martin
5 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தொலைக்காட்சி விவாதம் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே, முதல் விவாதம் வெளிநாட்டுக் கொள்கை பற்றியும், உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் இருக்க வேண்டும் என்று புஷ் பிரச்சாரத்தின் பொறுப்பைக் கொண்டுள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையொட்டி, செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகளை அள்ளி வீசிக் கொண்டிருத்தல், மற்றும் உழைக்கும் மக்களின் பொருளாதார இடர்ப்பாடுகள் என்னும் உள்நாட்டுப் பிரச்சினைகளவிட, தன்னுடைய அரசியலில் வலுவான நிலைப்பாடு என்று அவர் கருதிக் கொண்டிருக்கும் "பயங்கரவாதத்தின்மீதான போர்" மீது புஷ் குவிமையம் கொள்ள இது அனுமதிக்கும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் கடந்த வார விவாதம், வெள்ளை மாளிகை ஆலோசகர்களான கார்ல் ரோவ் மற்றும் அவரது குழுவினர் பற்றிச் செய்தி ஊடகத்திலும், ஜனநாயகக் கட்சி எதிரணியில் புஷ்ஷிக்கு விசுவாசமானவர்களிடத்தும் நிலவும் மிகைப்படுத்தப்பட்ட உயர்ந்த மரியாதை ஒரு புறம் இருக்க, அரசியல் மேதைகள் என்று கருதப்படுவதைவிட குறைவான ஏதோ ஒன்று என்பதை நிரூபித்தது. இந்த விவாதம் அநேகமாக முழு அளவில் ஈராக் போரைப் பற்றி எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருடைய தடுமாற்றம் நிறைந்த, தெளிவற்றிருந்த, நம்பகத்தன்மை இல்லாத விவாதக் கருத்துக்களுடன், புஷ் தொடர்ச்சியாக தன்னை காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அவருடைய பெரும் ஆதரவாளர்கள் கூட திடுக்கிட்டுப் போகும் வகையில் அமைந்தன.

செப்டம்பர் 11 தனித்த நிகழ்வுகளின் வேண்டுதலில் தன்னுடைய வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்துவதை மீண்டும் பிரச்சாரத்திற்கு வெறுமனே திருப்பிக்கூற அனுமதிக்காத இந்தப் புதிய அரங்கில், ஈராக்கில் பெருகி வரும் தேசியவாத எதிர்ப்புகளினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். மனத்தில் பாடம் செய்யப்பட்டிருந்த அதே சொற்றொடர்களான, "கடின வேலை" - நன்கு செய்துள்ளோம், "இரண்டும் கலந்த தகவல்கள்" ஆனால் நன்கு செய்யவில்லை, போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருந்தது. முடிந்த நிகழ்வைப் பற்றிய செய்தி ஊடக ஆய்வுகளில், விவாதத்தில் இவருடைய பங்கு விரைவில் ஏளனத்திற்குத்தான் ஆளாயின.

பொது வானொலி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஜிம் லேரெர் எழுப்பிய பெரும்பாலான கேள்விகள், குறிப்பிட்ட தலைப்பு பற்றி, இரண்டு வேட்பாளரிடையே நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றங்களின் பெரும் பகுதி இரண்டுமே, வேட்பாளர்களை நியமனம் செய்திருந்த இரு கட்சி மாநாடுகளிலும் எந்தக் கவனத்தையும் பெறவில்லை என்ற உண்மை முதலாளித்துவ செய்தி ஊடகத்தால் சரியாக அக்கறையுடன் கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜனநாயகக் கட்சியின் மாநாடு, ஈராக்கின்மீதான போரைவிடக் கூடுதலான கவனத்தை வியட்நாம் போர் பற்றிக் கூறியிருந்தது. குடியரசுக் கட்சி கெர்ரி மீது சகதியை எறிந்த தந்திரங்களை எதிர்பார்த்து அதற்கு நச்சுமுறிவு மருந்தாக, ஜனநாயகக் கட்சியினர் கெர்ரியின் போர்க்காலவீரர் என்ற வாழ்க்கையை சிறப்பித்துக் கூற விழைந்தனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை; ஏனெனில் வியட்நாமின் கெர்ரியின் பங்கு பற்றிய உண்மையற்ற தகவல்களை பற்றி குடியரசுக் கட்சி விரைவான படகு விளம்பரங்கள் செய்த உடனேயே அது ஜனநாயகக் கட்சியினரால் நடத்தப்பட்டிருந்தது.

இதேபோல் குடியரசுக் கட்சி ஈராக்கைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை; அந்நாட்டின் மீதான படையெடுப்பு, 9/11 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தொடக்கப்பட்ட "பயங்கரவாதத்தின் மீதான போரின்" ஒரு பகுதிதான் என்று புஷ் நிர்வாகம் அதனை முன்வைக்கும் முயற்சிகளின் அடிப்படையில் அது கொள்ளப்பட்டிருந்தது. வெளியேற்றப்பட்ட ஈராக்கிய ஜனாதிபதியையும் 9/11 தாக்குதல்களையும் தொடர்புபடுத்தும் சான்றாவணங்கள் இல்லை என்று வெள்ளை மாளிகையே ஒப்புக் கொண்ட பின்னரும் கூட, பேச்சாளருக்குப் பின் பேச்சாளர் பயங்கரவாதத்துடன் சதாம் ஹுசைனை பிணைத்துப் பேசுவதையே நாடினர்.

ஈராக்கிய படையெடுப்பு பற்றி, கருத்திற்கொள்ளாத நிலைப்பாட்டை ஜனநாயக அரங்கு மேற்கொண்டு, அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்து, "நல்லெண்ணமுடைய மக்கள்" போர் நியாயப்படுத்தப்படமுடியுமா என்பது பற்றி கருத்து வேறுபாடு கொள்ளலாம் என்றும் கூறிவிட்டது. இவருடைய வாய்ப்புக்களைப் பற்றிய கணிப்பு குறையத் தொடங்கி, ஈராக்கியப் பேரழிவின் முழு வகையும் தொடர்ந்து வெளியாகும் வரை, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குக் கெர்ரி இந்த நிலையைத்தான் கொண்டிருந்தார்.

நியூ யோர்க் பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் 20ம் தேதி நிகழ்த்திய உரையில்தான் தன்னுடைய போக்கை அவர் மாற்றிய முறையில் பேசினார்; புஷ் போருக்குச் செல்வதற்கான முடிவை தாக்கிய வகையில் போரெதிர்ப்பு உணர்விற்கும் குறைந்த அளவில் குரல் கொடுத்தார். முக்கியமான குடியரசுக் கட்சித் தலைவர்களான ஜோன் மக்கெய்ன், ரிச்சர்ட் லூகர், சக் ஹாகெல் ஆகியோர் பகிரங்கமாக புஷ்ஷின் போர் நடவடிக்கை பற்றி பகிரங்கமாக விமர்சித்த பின்னர்தான் இந்த மாற்றத்தை அவர் கொண்டார்; அதாவது ஆளும் செல்வந்தத் தட்டு தேர்தல் பிரச்சாரத்தில் இப்பிரச்சினை அணுகப்படலாம் என்று சமிக்கை காட்டிய பின்னர்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

போருக்கு பெருகி வரும் மக்கள் எதிர்ப்புணர்விற்கு ஏற்றாற்போல் தன்னுடைய பிரச்சார ஒலியை மாற்றிக்கொண்டு, புஷ்ஷின் அணுகுமுறை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என்று கருதும் ஆளும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறும் வகையிலும், கெர்ரி அமெரிக்கா ஈராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் இராணுவ வலமையின் மூலம் எதிர்ப்பை நசுக்க வேண்டும் என்பதையும் உறுதியாகக் கூறிவந்தார். பல நேரங்களில் இப்பொழுதைய நிர்வாகத்தைவிட ஆக்கிரோஷத்துடன் போரை முடுக்கிவிடப் போவதாகவும் அவர் உறுதிமொழியை அளித்தார்.

ஒரு போராதரவு வேட்பாளர், போரெதிர்ப்புணர்வு வாக்காளர்கள் ஆதரவின் அடிப்படையில் ஒரு தேர்தலில் வெற்றி காணவேண்டும் என்ற முயற்சிதான் செப்டம்பர் 30ம் தேதி விவாதம் முழுவதிலும் படர்ந்திருந்தது. கடுமையான குரல், குற்றஞ் சாட்டும் முறை இவற்றின் மூலம் கெர்ரி, ஈராக்கைப் பற்றிய புஷ்ஷின் கொள்கைகளுக்கு தான் உரைத்ததைவிடக் கூடுதலான எதிர்ப்பை உட்குறிப்பாகக் காட்ட நினைத்தார். இரட்டைப் பேச்சுக்களான, ஈராக் போர் "ஒரு தவறு", "தீர்மானம் எடுப்பதில் நிகழ்ந்த பிழை" என்றெல்லாம் விளக்கிய பின்னர், அவர் ஈராக்கில் "வெற்றியடையத்" தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறினார். இவருடைய சொற்கள் இவர் புஷ்ஷை இடது புறத்தில் இருந்து தாக்குகிறாரா, வலது புறத்தில் இருந்து தாக்குகிறாரா, குறைவான இராணுவ வன்முறை வேண்டும் என்கிறாரா அல்லது கூடுதலான வன்முறை வேண்டும் என்கிறாரா என்று உறுதியாகக் கூறமுடியாத வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

புஷ்ஷின் போர்க்கொள்கைகள் நிராகரிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் உழைக்கும் மக்கள், இளைஞர் கூட்டம், தேசிய நலனுக்காக ஈராக்கையும் அதன் பரந்த எண்ணெய் வளங்களையும் கட்டுப்படுத்துவற்காக ஈராக்கில் தொடர்ந்து ஆக்கிரமிப்பைக் கொள்ளவேண்டும் என்று கருதும் அமெரிக்க ஆளும் தட்டினர் என்ற இரு வேறு புறத்து பார்வையாளர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு கெர்ரியின் உரை நேர்த்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஓர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வற்புறுத்தப்பட்டபோது, தன்னுடைய முடிவுரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் அதிகம் சார்ந்த முறையில், இராணுவ வெற்றிக்கு உறுதிமொழியளிக்கும் வகையில், "நாம் வெற்றிபெறவோம் என்பதில் நம்புகிறேன். அவ்விடத்தில் இருந்து நீங்குவதைப் பற்றிப் பேசவில்லை. வெற்றி அடைவது பற்றித்தான் நான் பேசுகிறேன்" என்று கூறினார்.

போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு அழைப்பு விடுகையில், புஷ் நிர்வாகத்தைப் பற்றி தொலைதூர விளைவுகள் தரக்கூடிய உட்குறிப்புக்கள் கொண்ட விமர்சனத்தை, கெர்ரி வெளிப்படுத்தினார். "கடைசிப் பட்சமாகத்தான் போருக்குப் போவேன்" என புஷ் கூறியதைக் குறிப்பிட்டு, "அச்சொற்கள் எனக்குப் பொருளற்றவையாகத் தோன்றுகின்றன. குடும்பங்களை உற்று நோக்கிப் பெற்றோர்களிடம், 'உங்கள் மகன் அல்லது மகளின் இழப்பை தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்' என்று கூறவேண்டும். அமெரிக்கா அவ்வாறு செய்தது என்று நான் நினைக்கவில்லை" என்றார்.

இது உண்மையாக இருந்தால் -அதைப்பற்றி சந்தேகம் இல்லை- ஈராக்குடனான போர் என்பது கெர்ரி அடிக்கடி முத்திரையிடுவது போல் "ஒரு வெறும் தவறு" மட்டும் இல்லை. அது ஒரு குற்றம் ஆகும்.

புஷ் நிர்வாகம் விரும்பிய முறையில், வேண்டுமென்றே போரைத் தொடர்ந்துள்ளது. உதாசீனமான முறையில் ஓர் ஆயிரம் அமெரிக்கப் படைவீரர்கள் மற்றும் பத்தாயிரக் கணக்கான ஈராக்கிய உயிர்கள் இழப்பிற்கு காரணமாக இருந்துள்ளது; அதுவும் "தன் அதிகாரத்தில் உள்ள அனைத்தையும்" பயன்படுத்தி தவிர்க்காமல், அத்தகைய இரத்தம் சிந்துதலைச் செய்துள்ளது.

அத்தகைய முடிவு எதையும் தான் கூற கெர்ரி தவிர்த்துள்ளார். அவர் அவ்வாறு கூறுவதற்கும் தள்ளப்படவில்லை. விவாத நடுவராக இருந்த லேரெர், அண்மையில் ஐ.நா.வின் தலைமைச் செயலர் கோபி அன்னன் தெரிவித்துள்ள கருத்தான அமெரிக்கப் படையெடுப்பு சட்ட விரோதமானது என்ற அறிவிப்பு பற்றியும், அபு கிறைப் சிறைச்சாலை கொடுமைகள் பற்றியும் பிரச்சினைகளை எழுப்பவில்லை.

ஈராக்கின்மீது படையெடுப்பதற்கான புஷ் நிர்வாத்திற்கு உந்துதல் கொடுத்த கொள்ளையிடும் நலன்களை பற்றி கெர்ரி நயம்படக் குறிப்பிட்டார். "அமெரிக்க ஆக்கிரமிப்பில் ஒரு பொருள் உள்ளது. பாக்தாதிற்கு படைகள் அனுப்பப்பட்டபோது எண்ணெய் அமைச்சகம் ஒன்றுதான் நன்கு பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்த கட்டிடம் ஆகும். நாம் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்திருக்கக் கூடிய வெளியுறவுத்துறை அலுவலகத்தை பாதுகாக்கவில்லை. அணு ஆயுத வசதிகளை பாதுகாக்கவில்லை. நாம் நாட்டின் எல்லைகளையும் பாதுகாக்கவில்லை" என்று அவர் கூறினார்.

அத்தகைய நடவடிக்கைகள், புஷ் நிர்வாகம் நாட்டின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிப்பதில்தான் அக்கறை காட்டியது என்றும், பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஈராக்கிய மக்கள் முடிவு செய்வதற்கு ஏதுவாயிருந்தது என்று கெர்ரி ஒப்புக் கொண்டார். "எண்ணெய் அமைச்கத்தை நீங்கள் பாதுகாத்து, அணுசக்தி வசதிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்காவிட்டால், மக்களில் பலரும் 'வாவ், அவர்கள் நம்முடைய எண்ணெயில்தான் கவனத்தைக் கொண்டுள்ளனர்' என்ற கருத்தைத்தான் கொள்ளுவர்" என்றார் அவர்.

ஆயினும் அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கியர்கள் ஆயுதமேந்தித் தாக்குதல் நடத்தியது, ஈராக்கிய மக்களின் சீற்றம் மிகுந்த, நியாயமான தேசிய உணர்வுகளின் வெளிப்பாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தது என்ற கருத்தைப் பற்றி எந்த வெளிப்பாடும் வரவில்லை. மாறாக, புஷ்ஷைப் போலவே, கெர்ரியும் ஈராக்கியரின் எதிர்ப்பு முயற்சிகளைப் பயங்கரவாதம் என்று முத்திரையிட்டு, அமெரிக்க இராணுவத்தின் வெற்றி ஒன்றுதான் ஏற்கப்படவேண்டிய முடிவாகும் என அறிவித்துவிட்டார்.

வியட்நாமில் இருந்து வீடு திரும்பிய பின்னர் அவருடைய போரெதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட தன்மையை, தன்னுடைய ஈராக்கிய போர் பற்றிய நிலைப்பாட்டுடன் கெர்ரி அபத்தமான முறையில் ஒப்பிட்டார். "ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், அதைச் சரி செய்யவேண்டும். அதுதான் நான் வியட்நாமில் கற்றுக்கொண்ட படிப்பினையாகும். போரில் இருந்து வந்த பின்னர், அங்கு நடந்தது தவறு என்று நான் கண்டேன். அவ்வாறு நான் உறுதியுடன் கூறியது சில பேருக்குப் பிடிக்கவில்லை; ஆயினும் நான் அதைக் கூறினேன். ...இப்பொழுது நான் அந்தப் படைகளை வெற்றிக்கு அழைத்துச் செல்லுவேன்."

இவ்விடத்தில் போருக்கெதிரான பரிவுணர்வுகள் பற்றிய அவருடைய போலித்தனமும், அவருடைய உண்மையான போர் ஆதரவுக் கொள்கையும் ஜனநாயக வேட்பாளரைக் கிட்டத்தட்ட சீர் இல்லாத முறையில் பேச வைத்துவிட்டன. லெப்டினன்ட் ஜோன் கெர்ரி வியட்நாமில் இருந்து வீடு திரும்பி வியட்நாம் போரெதிர்க்கும் மூத்த போர்வீரர்களின் தலைவரானபோது அவருடைய அழைப்பு "அந்தப் படைகளை வெற்றிக்கு அழைத்துச் செல்லுவேன்" என்று இல்லாமல் வியட்நாமில் இருந்து எவ்வளவு விரைவில் வெளியேறமுடியுமோ அவ்வளவு விரைவில் அதைச் செய்வேன் என்பதாகத்தான் இருந்தது.

நடுவர் ஜிம் லேரெர் இந்த இடத்தில் குறுக்கிட்டு, கெர்ரியிடம் 1971ல் அவருடைய புகழ் பெற்ற போரெதிர்ப்பு உணர்வு பற்றி செனட் குழுவிடம் அவர், "ஒரு தவறுக்காக ஒரு மனிதன் இறப்பது கடைசி மனிதனாக இருக்க வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்" என்று கேட்டதைப் பற்றிக் குறிப்பிட்டார். ஈராக்கின் மீது படையெடுக்கவேண்டும் என்ற முடிவு "தவறானது" என்று அறிவித்தபின்னரும் கூட, கெர்ரி இப்பொழுது அமெரிக்க வீரர்கள் ஒரு தவறுக்காக ஈராக்கில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுத்தார். "இதில் நாம் வெற்றபெற வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஜனாதிபதியும், நானும் எப்பொழுதும் அதில் உடன்பட்டுள்ளோம்" என்றார் அவர்.

எதிர்ப்புச் சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பல்லுஜா, மற்ற ஈராக்கிய நகரங்களின்மீது ஒரு புதிய அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கு, கெர்ரி தன் ஆதரவைக் குறிப்பிட்டார். இன்னும் பரந்த முறையில் அவர், புஷ்ஷுடைய முன்கூட்டிய திடீர் போர்க் கொள்கை விளக்கத்தை ஒரே ஒரு ஆட்சேபனையுடன், அதாவது உள்நாட்டிலும் வெளியேயும் அதற்குத் தேவையான நம்பிக்கைத் தன்மையை மக்களிடையே பெறும் வகையில் அமெரிக்க கூற்று இருக்கவேண்டும் என்று ஆரத்தழுவினார்.

இந்த அறிக்கை, நியூ யோர்க் டைம்ஸ்-ன் வலதுசாரி, போராதரவுக் கட்டுரையாளர், நிக்சனின் முன்னாள் உரையெழுதுபவர், வில்லியம் சபையரின் கவனத்தை ஈர்த்து, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் புஷ் நிர்வாகத்தின் இராணுவத் தலையீட்டிற்காக அவர் அளித்திருந்த சிந்தை வடிவமைப்பு பற்றிய புதிய பழமைவாத கெள்கைக்கு ஒரு புதிய ஆதரவாளராக கெர்ரி வந்துள்ளார் என்று இறும்பூது எய்த வைத்துள்ளது. "இராணுவ தந்திரோபாயம் மற்றும் வீறார்ந்த மூலோபாயம் இரண்டிலும், புதிய பழமைவாதிகள் அறிவித்துள்ள கோட்பாடுகளுக்கு ஜனாதிபதி புஷ்ஷைவிடக் கூடுதல் கூர்மையைக் கெர்ரி காட்டியுள்ளார்" என்று அவர் எழுதியுள்ளார்.

மற்றொரு கட்டுரையாளர், Boston Globe இன் ஜேம்ஸ் பிங்கர்ட்டன், இகழ்வுணர்வுடன் எழுதியதாவது: "கெர்ரிக்கு எப்பொழுதும் வாக்களிப்பவர்களும், இப்பொழுது ஒருகால் வாக்களிக்கவேண்டும் என்ற கருத்துடையவர்கள் இருதிறத்தாருமே புறாக்கள் போன்றவர்கள்தாம். எனவே, வியட்நாமில் இருந்து எவ்வாறு இறுதியில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டனவோ, அவ்வாறே ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை கெர்ரி திருப்பப் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையுடன் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லக் கூடும். வேறுவிதமாகக் கூறினால், கெர்ரிக்கு வாக்குகளைப் போடுபவர்கள், கெர்ரி ஈராக்கை விட்டுக் கொடுத்துவிடுவார் என்று புஷ் கூறுவது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புவதோடு, வெற்றி அடையும் வரை போராடுவேன் என்று கெர்ரி கூறுவது வெறும் உற்சாகப் பேச்சு என்றுதான் நம்புகின்றனர்."

தன்னுடைய பங்கிற்கு, உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் பரந்த வகையில் போரை எதிர்க்கும் சூழ்நிலையில், ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகள் அதைப் பேரழிவு என்று கருதும் சூழ்நிலையில் தான் ஒரு வெற்றிகரமான போர்க்கால ஜனாதிபதியாக இருப்பதைக் கொண்டு வெள்ளை மாளிகையை தக்கவைக்கலாம் என்று புஷ் முயன்று வருகிறார். ஒவ்வொரு அடி முன்வைக்கும் போதும், தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு இரவும் காணும் உண்மை நிலைமையுடன் முரண்படும் வகையில் புஷ்ஷின் அறிக்கை உள்ளது. ஈராக் இப்பொழுது கார் குண்டுகள் நிறைந்து, இருட்டடிப்புக்கள் தொடர்ந்து, 50 சதவிகிதத்தினர் வேலையின்மையில் தவிப்பதுடன், அமெரிக்கா திணித்துள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைப்பாவை அரசாங்கத்தையும் வெறுக்கும் நாடாகத்தான் உள்ளது. உண்மையில் அமெரிக்க பீரங்கிவண்டிகளும், போர் விமானங்களும் அவர்களைக் கொன்று கொண்டிருக்கும்போது, அதை உயிர்த்துள்ள ஜனநாயகம், மக்கள் அங்கு தாங்கள் அமெரிக்கப் படைகளால் "விடுவிக்கப்பட்டதற்கு" களிப்படைகின்ற ஜனநாயகம் தழைத்தோங்குதல் என்று அதனை புஷ் சித்தரித்துக் காட்டுகிறார்.

கெர்ரியின் போர் நிலைப்பாட்டின் மையத்தில் உள்ள முரண்பாடுகளை அழுத்தத்துடன் தாக்க முடியாமல் புஷ் உள்ளார்; இது அவருடைய அறிவாற்றல் குறைவினால் மட்டும் அல்ல; தன்னுடைய அடிப்படை அரசியல் முரண்பாடுகளின் காரணமாக அவர் அந்த நிலையில் உள்ளார்.

கெர்ரியின் போர் எதிர்ப்புத் தோற்றம் பொய்யானது; அவருடைய போராதரவு நிலைப்பாடுதான், கிளின்டன் நிர்வாகத்தின் முதுநிலைத் தலைமைப் பொறுப்புக் கொண்டிருந்த பெரும்பாலோரின், ஜனநாயகக் கட்சியின் உண்மையான பார்வையாகும். ஆனால் குடியரசுக் கட்சி, கெர்ரியின் நிலைமை போர்க்காலத்தின் அமெரிக்கப் படைகளுக்குக் காட்டும் எதிர்ப்பு அரைகுறைத் தன்மை உடைய காட்டிக்கொடுக்கும் தன்மை என்று பசப்பி ஆதரவுபெறுவதுடன், தன்னுடைய மிகத் தீவிர வலது தளத்தை நன்கு முடுக்கிவிடுவதைத் தேவையாகக் கொண்டிருக்கிறது.

எனவே புஷ்ஷின் பிரசாரம், நிலைமையைத் தலைகீழாக மாற்றி, கெர்ரியின் போராதரவு அறிக்கைகளை தவறானவை என்றும் அவருடைய மறைத்துவைக்கப்பட்டுள்ள உண்மையான நிலை பின்வாங்குதலும், ஈராக்கிற்குச் சரணடைதலும் என்று வலியுறுத்துகின்றது.

தன்னுடைய நியூ யோர்க் பல்கலைக் கழக அறிவிப்பில் கெர்ரி, "ஈராக்கியப்போர், தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான போராகும்" என்று கூறியதை அடிக்கடி புஷ் மேற்கோளிட்டு, இது எவ்வாறு தான் கூடுதலான முறையில் அமெரிக்க நட்பு நாடுகளை ஈராக்கைக் காப்பதில் தொடர்புபடுத்துவேன் என்று கெர்ரி கூறியுள்ளதற்கு மாறாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார். புஷ் கேட்டார்: "எனவே உங்கள் செய்தி என்னவாக இருக்கப் போகிறது? ஈராக்கை பொறுத்தவரையில் எங்களோடு உடன்படுங்கள். நாங்கள் ஒரு பெரிய மாற்றத்தில் இருக்கிறோம். தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான போரைத் தொடர எங்களுடன் சேருங்கள் என்பதா?"

இங்கு அமெரிக்க ஆளும் தட்டிற்குள் அரசியல் மோதல்கள் என்ற வகையில், இதுதான் உண்மைப் பிரச்சினை. புஷ், கெர்ரி இருவருமே ஈராக் ஒரு மதிப்புடைய நிலச் சொத்து என்று ஒப்புக்கொள்ளுகின்றனர். அதைவிட்டுக் கொடுப்பதற்கு, ஈராக் மக்களுடைய விருப்பம் எதுவாயினும், இவர்கள் தயாராக இல்லை; ஆனால் கெர்ரி மற்ற பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் ஓரளவிற்கு அதைப் பங்கிட்டுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்.

ஜனநாயகக் கட்சிக்காரர் இந்தப் பொருளைப் பற்றி மறைமுகமாகத்தான் குறிப்பிட்டு, பிரான்ஸ், போருக்குப் பின் பெருந்தொகை ஒப்பந்தங்கள் கொடுக்கப்படுவதில் ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை ஒதுக்கியதற்காக புஷ்ஷைக் குறைகூறினார். புஷ் நிர்வாகத்தின் போரின் கொள்ளை பொருட்களில் பங்கு போடுவதில், பிற அமெரிக்கப் பெருநிறுவன அமைப்புக்களை ஒதுக்கிவிட்டு, தன்னுடைய நெருங்கிய பெருநிறுவன நட்பு அமைப்புக்களுக்கு மட்டும் அளிக்கும் ஹாலிபர்ட்டனுடைய செயலைக் குறிப்பிட்டு, அதற்கான புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு ஹாலிபர்ட்டன் இப்பொழுது ஒரு குறியீட்டுப் பெயராகி விட்டது என்றும் கூறிவிட்டார்.

ஈராக்கை அடக்குவதற்கு ஒரு நாட்டினால் கொள்ளப்படும் செலவினங்கள், முயற்சிகள் அதிக சுமை என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஐரோப்பியப் போட்டியாளர்கள் நடக்கும் செயற்பாட்டில் ஒரு பங்கைக் கொள்ளவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். குருதி சிந்துதல், பூசல் இவற்றில் பங்கு கொள்வதற்காக அவற்றிற்கு இவர் கொடுக்கும் ஊக்கப் பரிசு -அது ஒன்றும் ஓர் ஈர்ப்பு இல்லை என்று புஷ் குறிப்பிட்டு விட்டார்- போரின் கொள்கைப் பொருட்களில் ஒரு பங்கு, மற்றும் ஈராக்கின் மகத்தான எண்ணெய் வளத்தில் ஒரு பங்கு என்கிறார்.

ஒரு நாடு முழுவதுமான பார்வையாளர்களை கொண்டிருந்த பொது விவாதத்தில், இந்த வாதத்தில் ஆளும் வர்க்கத்தின் எந்தப் பகுதியும் தன்னுடைய உண்மையான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்துக் கூற இயலவில்லை.

Top of page