WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Federal judge upholds decision to bar SEP candidates
from Ohio ballot
கூட்டரசு நீதிபதி ஓகியோ வாக்குச் சீட்டில்
SEP
வேட்பாளர்கள் பதிவு செய்வதை தடுக்கும் முடிவை உறுதிசெய்கிறார்
By Jerry White
18 September 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஓகியோ அரசுத்துறை செயலர் கென்னத் பிளாக்வெலின் உத்தரவிற்கு எதிராக,
SEP
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் பில் வான் ஒகென், ஜிம் லோரன்ஸ் சார்பில், தற்காலிகத் தடுப்பு
நடவடிக்கை கோரும் சட்ட பூர்வமான மனு ஒன்றை அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிரிகொரி பிராஸ்ட், வெள்ளியன்று
தள்ளுபடி செய்தார். ஓகியோ மாநிலத்தில் வரும் நவம்பர் 2 நடைபெற உள்ள தேர்தல்களில்,
SEP இன், வேன்
ஒகென், ஜிம் லோரன்ஸ் இருவரும் போதுமான அளவு கையெழுத்துக்களை வாக்கச்சீட்டுப் பதிவிற்காகப் பெறவில்லை
என்று அரசுத்துறை செயலக அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.
SEP-யினால் பதிவு
செய்யப்பட்ட உரிமையியல் வழக்கில், பிளாக்வெல் தன்னுடைய அலுவலக முடிவை மாற்றிக் கொள்ளுமாறு உத்தரவு
இடவேண்டும் என்றும் கட்சியின் வேட்பாளர்கள் வாக்குச் சீட்டுப் பதிவில் இருத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பிராஸ்ட்,
SEP மனுத்தாக்கல்
செய்த கையெழுத்துக்கள் 7,983 ல் கிட்டத்தட்ட 4,200 கையெழுத்துக்களை அரசுத்துறை செயலக அலுவலகம்
நிராகரித்துள்ளதை தீவிரமாகச் சவால் விட முடியாமல் செய்துவிட்டது என்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த
சான்றை, அசட்டை செய்துவிட்டார். SEP
யின் சார்பில் வழக்கை தொடர்ந்த ராபர்ட் எப். நியூமன், எவ்வாறு தொடர்ச்சியான நடைமுறைத் தடைகள்,
SEP
யினால் நிராகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை நல்ல முறையில் பரிசீலனை செய்யவிடாமல் செய்துள்ளன என்றும்
அதையொட்டி வேட்பாளர்கள் முறையான சட்ட பரிகாரத்தைப்பெற முடியாமல் உள்ளனர் என்றும் விளக்கி
வாதிட்டிருந்தார். ஒருதலைப் பட்சமான, முற்றிலும் இயலாத வகையில், ஆறு நாட்கள் கொண்ட இறுதிக் காலக் கெடுவும்
இத்தடைகளுள் உள்ளடங்கும், இக்காலக்கெடுதான், SEP
க்கு மாநில, உட்பிரிவு தேர்தல் அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்த, 40 உட்பிரிவுகளுள் இருக்கும்
வாக்காளர் பதிவுப்பட்டியலுடன் ஒப்பிட்டு, வரிவரியாகச் சரிபார்ப்பதற்குக் கொடுக்கப்பட்டது.
இந்த ஒருதலைப்பட்ச, நியாமற்ற தடைகள் இருந்தபோதிலும்கூட,
SEP, சவாலுக்குட்பட்ட
கையெழுத்துக்களைப்பற்றிய ஒரு தொடக்கப் பரிசீலனையை மேற்கொண்டது, செப்டம்பர் 15 காலக்கெடுக்குள்
4,200 நிராகரிக்கப்பட்ட கையெழுத்துக்களில் கிட்டதட்ட 1,230 கையெழுத்துக்களாவது, சட்டபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட
ஓகியோ வாக்காளர்கள் கையெழுத்து என்று அரசுத்துறை செயலக அலுவலகத்திற்கு சான்றுகளை சமர்ப்பித்தது,
இந்த எண்ணிக்கை மொத்தமும் சட்ட பூர்வமாக மூன்றாம் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில்
அத்ஸ்து பெறப் போதுமானது என்றுள்ள 5000 ஐ விட அதிகமானது ஆகும்----
SEP
faxed தகவல்
மூலம் நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டிருந்த டேடன், ஓகியோ பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் சட்ட
பூர்வமான உறுதிமொழியையும் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருந்தது.
ஓகியோ தேர்தல் அதிகாரிகள் கூடுதலான, பொருளற்ற உள் விதிகளைப் பயன்படுத்தி
நூற்றுக் கணக்கில் கையெழுத்துள்ள வாக்காளர்களின், கையெழுத்துக்களை புறக்கணித்துள்ளது என்பதற்கு கட்சியின்
பரிசீலனை தக்க ஆதாரங்களையும் கொடுத்தது. அவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் என்பது
வெளிப்படையானது ஆகும்.
இக்கட்டுரை எழுதப்படும் வரையில், அரசுத்துறை செயலக அலுவலகம், வான்
ஒகென், லோரன்ஸ் இருவரையும் வாக்குச்சீட்டுப் பதிவில் இருந்து தள்ளிய உத்தரவிற்கு முறையீடு செய்துள்ளதற்கு
என்ன முடிவு என்பதை SEP
க்குத் தெரிவிக்கவில்லை.
SEP வேட்பாளர்களை ஓகியோ
வாக்கச்சீட்டுப் பதிவில் இருந்து நிராகரிக்கும் முடிவு அரசுத்துறை செயலகத்தினால் செப்டம்பர் 8 அன்று
எடுக்கப்பட்டது. ஆனால் இம்முடிவு பற்றி மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கட்சி பிரதிநிதி தொலைபேசியில்
தொடர்பு கொண்ட பின்னர்தான் அது SEP
க்கு தெரியவந்தது, மேலும் செப்டம்பர் 15-க்குள், ஒரு வாரத்திற்கும்
குறைவாக, SEP
தேர்தல் குழுக்களின் முடிவை எதிர்க்கலாம் என்றும் மாநில உத்தரவை சவாலுக்குட்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.
ஓகியோவினுள், டேடனில் வசித்துவரும் லோரென்ஸ், வாக்குச்சீட்டுப்பதிவு தனக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற
தகவலை, செப்டம்பர் 15 பிற்பகல், 5 மணி கெடுவிற்கு ஒரு மணிநேரம் முன்தான் தனக்கு வந்திருந்த ஒரு
கடிதத்தின் மூலம் அறிந்தார்.
அரசுத்துறை செயலகத்தின் அலுவலகம் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதை
எதிர்த்து முறையீடு செய்வதற்கான வழிகாட்டி நெறிகள் தம்மிடம் இல்லை என்று
SEP க்குத்
தெரிவித்ததுடன் சட்ட பூர்வமாக இதை எதிர்த்து முறையிடவும் வகையில்லை என்று கூறிவிட்டது.
SEPஇன் எதிர்ப்பு
பற்றிய பரிசீலனை, மூடிய கதவுகளுக்குள் உள்ள அறையில் நடத்தப்படும்.
தன்னுடைய நீதிமன்றத்தீர்ப்பில், நீதிபதி பிராஸ்ட், அரசுத்துறை செயலக
SEP
வேட்பாளர்களுக்கு "கொடுக்கப்பட்டுள்ள கையெழுத்துக்களின் உண்மையைப் பற்றி வாதிடுவதற்கு நியாயமான
வாய்ப்புக்கள்" அளிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார். ஆறு நாட்கள் கெடு சரியானதே என்றும்,
SEP
வேட்பாளர்கள் "தேர்தல் பற்றியதில் ஒரு குறுகிய வரம்பு தேவையற்றது" என்பதற்கு தக்க சான்றுகளைக்
கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
விமர்சனம் ஏதும் இன்றி, ஓகியோவில் வாக்குச் சீட்டில் பதிவு நிராகரிக்கப்படும்
வேட்பாளர்கள் முறையீடு செய்வதற்கு எந்தச் சட்ட விதிகளும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். "நாகரிக
நிமித்தம் பரிசீலனை தேவை என்று வைத்துக்கொண்டாலும், மனுதாரர்கள் அவர்களுக்கு அத்தகைய பரிசீலனைக்கு
உரிமையுடையவர்கள் என்று நிரூபிக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, SEP
வேட்பாளர்கள் தக்க பரிகாரத்தை மாநில நீதிமன்ற முறையின் மூலம் பெறுதல்தான் உகந்தது என்ற
ஆலோசனையையும் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை காலையில், ஓகியோவின் கொலம்பசில் உள்ள 10வது மாவட்ட
முறையீட்டு நீதிமன்றத்தில் SEP
ஒரு வழக்கை தாக்கல் செய்து அதன் வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் பதிவு செய்யப்படவேண்டும் என்று
அரசுத்துறை செயலகத்திற்கு உத்தரவு இடவேண்டும் என்று கோர உள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி அறிக்கையில், ஓகியோவில் உள்ள
டேடனில் வசிப்பவரும், ஒரு ஓய்வு பெற்ற மோட்டார்த் தொழிலாளியுமான லோரென்ஸ், தன்னை ஓகியோ
வாக்குச் சீட்டுப் பதிவில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளதை கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அவர் அறிவித்துள்ளதாவது; "நீதிபதி பிராஸ்ட் கொடுத்துள்ள தீர்ப்பு, ஆழ்ந்த
ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்டிருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதுதான். புஷ்ஷால் நியமிக்கப்பட்ட
ஒருவர், ஓகியோ மாநிலம் எங்களுக்கு உரிய சட்டவகையை ஒருதலைப்பட்சமாக மறுப்பதற்கு எங்களுடைய
மனுக்களில் இருந்த நூற்றுக்கணக்கான பதிவான வாக்காளர்களின் கையொழுத்துக்களை நிராகரித்து பின் எங்களுக்கு
அதன் உத்தரவு தவறானது என்று நிரூபிக்கப் போதிய வாய்போ அல்லது நேரமோ கொடுக்கவும் இல்லை என்ற
சோசலிச சமத்துவ கட்சியின் குற்றச்சாட்டை ஏற்பார் என்பதற்கு ஆதாரமில்லை..
"எங்களுடைய கையெழுத்துச் சேகரிக்கும் நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட வாக்குச்
சீட்டுப் பதிவிற்குத் தேவையான 5,000க்கும் அதிகமாக, 8,000 கையெழுத்துக்களை மாநிலம் முழுவதும் சேகரித்திருந்தோம்.
இந்த நுழைவாயில் ஒரு பெரும் தடை, ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் சேகரிக்கவேண்டிய கையெழுத்துக்களை
விட மிகவும் அதிகமானதாகும்.
"தேர்தல் அதிகாரிகள் இந்தக் கையெழுத்தைப் பரிசீலனை செய்தபோது, ஒரு
பொதுநோக்கமான நடுத்தரப் போக்குடன் SEP
வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் பதிவு செய்யப்பட போதுமான ஆதரவைக் கொண்டிருக்கிறார்களா, அதுதான்
இந்த வகையின் முதல் தேவை, என்பதைக் கருத்திற்கொள்ளவில்லை. மாறாக, அவர்களால் முடிந்த அளவிற்கு
வாக்காளர் கையெழுத்துக்களை, இரு கட்சிகளுக்கு அப்பால் வாக்காளர்களுக்கு எந்த விருப்பமும் கூடாது,
இருந்தால் அது அரசியல் வகையில் தீமை பயக்கும், இது எதிர்க்கப்படவேண்டும் என்ற கருத்தாய்வில்,
நிராகரித்துள்ளது. இந்த வழிவகையில் அது நூற்றுக் கணக்கான, மனுவில் கையெழுத்திட்டுள்ள ஓகியோ
வாக்காளர்களை, அவர்கள் ஒரு சோசலிச, போர் எதிர்ப்பு வேட்பாளர் வாக்குச் சீட்டில் பதிவு
செய்யப்படவேண்டும் எனக் கூறியதால், நிராகரித்து அவர்களை வாக்கிழக்கச் செய்துள்ளது.
"கையெழுத்திட்டவர்களில் பாதிக்கு மேலானவர்களை, தேர்தல் அதிகாரிகள்,
நிராகரித்துள்ளனர்----- அதுவும் இந்த மாநிலத்தில் வாக்குப் போடும் வயது வந்தவர்கள், பதிவு செய்பவர்கள்
விகிதம் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது. எங்களுடைய மனுக்களில் கையெழுத்திட்டவர்களில்
பாதிக்கும் மேலானவர்கள், அவர்கள் பதிவு செய்துள்ளவர்களா எனக் கேட்கப்பட்ட பின் கையெழுத்திட்டவர்கள்,
நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பது பொது அறிவிற்கும் தர்க்கத்திற்கும் பொருந்தாத் தன்மையைக் கொண்டுள்ளது.
"வயதான வாக்காளர்கள், தேதியில் ஒரு எண்ணை விட்டவர்கள், கையெழுத்துக்களில்
அச்சு எழுத்தை, வளைவு எழுத்துக்களுக்கப் பதிலாகப் பயன்படுத்தியவர்கள், தங்கள் பெயர் தெரு முழுவதையும் ஒரு
கட்டத்திற்குள் அடைக்கமுடியாமல் சற்றுத் தள்ளிப் போட்டவர்கள் என்று பல கையெழுத்துக்களையும் அதிகாரிகள்
புறக்கணித்துவிட்டனர். டேடனில் என்னுடைய தெருவில் வசிக்கும் வாக்காளர்களையே, அவர்களுடைய கையெழுத்துக்கள்
உண்மையானவை அல்ல என்று கூறி, மான்ட்கோமரி உட்பிரிவு அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
"வாக்காளர்களின் கருத்தை உறுதிசெய்து கூடுதலான முறையில் அதிக மக்களை தேர்தலில்
பங்கு பெறச் செய்வதற்குப் பதிலாக, அதிகாரிகள் அற்ப காரணங்களை காட்டி தொழிலாள வர்க்கத்திடையே
வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இந்த ஜனநாயக விரோதப் போக்கும் நோக்கமும்தான் தலை வரி, கல்வித்
தேர்வு போன்றவை தெற்கில் முன்பு கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப் பயன்படுத்தப்பட்டன.
"இந்த வழிவகை, சாதாரண மக்களின் தேவைகளைப் புறக்கணித்து, ஒரு சலுகைமிக்க
செல்வந்த தட்டின் நலன்களுக்கு மட்டும் வெளிப்படையாகப் பணிபுரியும் இரு கட்சிகளைப் பற்றியும் பெருகி வரும் முறையில்,
பெரும் மாயையிலிருந்து விடுபட்டுள்ள உழைக்கும் மக்கள் ஓர் உண்மையான ஜனநாயக, சமத்துவத்தையுடைய மாறுதலுக்கு
வழிவகுத்துவடுமோ என்று கொண்டுள்ள அச்சத்தின் அடிப்படையில், நடத்தப்படுகிறது.
"நம்முடைய பிரச்சாரம் முடிவிடைவதற்கு இன்னும் அதிக தூரத்தில்தான் உள்ளது. ஈராக்
போரைத் தொடர்வதற்கு எதிர்ப்பும், அமெரிக்கில் பெருகிவரும் சமூக சமத்துவமற்ற நிலையை எதிர்த்துப்
போராடவும் ஒரு அரசியல் மாற்றீடை உழைக்கும் மக்களுக்கு அளிக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் தொடர்ந்து
பாடுபடுவோம். அதேநேரத்தில், இரு-கட்சி முறையின் ஜனநாயக விரோத ஏகபோகமான உரிமையை முற்றிலும்
அம்பலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுவோம்."
WSWS வாசகர்கள், மற்றும் ஜனநாயக
உரிமைகளின் ஆதரவாளர்கள் அனைவரும் ஓகியோ அரசுத்துறை செயலக அலுவலகத்தை பில் வான் ஒகென் மற்றும்
ஜிம் லோரென்சை மாநிலந்தழுவிய வாக்குச்சீட்டில் பதிவு செய்யக்கோருமாறு அழைப்பு விடுக்கிறோம். உங்களுடைய
கண்டன மின்னஞ்சல் செய்திகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும்.
Top of page |