World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman President Koehler says inequality must be the new norm ஏற்றத்தாழ்வுத்தான் புதிய நெறிமுறையாக இருந்தாக வேண்டும் என்கிறார் -ஜேர்மன் ஜனாதிபதி Koehler By Ulrich Rippert 1989-ல் பேர்லின் நெடுஞ்சுவர் வீழ்த்தப்பட்டு இரண்டு ஜேர்மனிகளும் இணைந்த பதினைந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் அதிகாரபூர்வமான விழாக்கள் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், ஜேர்மன் ஜனாதிபதி Horst Koehler ஒரு கருத்துவேறுபாட்டை கிளறிவிட்டிருக்கிறார். Koehler; ''Focus" பத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது "ஜேர்மனி முழுவதும் பெரிய வேறுபாடுகள் நிலவும் சூழலை" மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிக்கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சமூக வேறுபாடுகளை சமப்படுத்த முயலுபவர்கள் ஒரு ''மானிய அரசை'' உருவாக்கிவிடுவார்கள், இது இளைய தலைமுறைக்கு "சகித்துக்கொள்ள முடியாத கடன் சுமையை" ஏற்றிவிடும் என்று கூறியிருந்தார். ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) யை சார்ந்த பல அரசியல்வாதிகள் Koehler "துரதிருஷ்டவசமான ஒரு சூத்திரப்படுத்தலை" பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறியுள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழ்க்கைத்தரத்தை சமநிலைப்படுத்த வேண்டுமென்ற குறிக்கோள் கைவிடப்படுமானால் கிழக்கு ஜேர்மனியை சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கையை "ஆட்சியை கைவிடுவதற்கான அழைப்பாக" கருதுவார்கள் என்று SPD நாடாளுமன்றக்குழுவின் துணைத்தலைவரான Ludwig Stiegler - பேர்லினர் சைதுங் (Berliner Zeitung) பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். Saxony மற்றும் Brandenburg மாநிலங்களில் நடைபெற்றுவருகிற மாகாண தேர்தல்களை கருத்தில் கொண்டு பசுமைக் கட்சியின் பொருளாதார கொள்கை தொடர்பான தலைவர் Frizkuehn, "ஜனநாயக சோசலிசக் கட்சிக்கு (PDS) தேர்தலில் உதவுகின்ற வகையில் Koehler எவ்வித நோக்கமும் இல்லாமலேயே உதவியிருக்கிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே பல கிழக்கு ஜேர்மன் மக்கள் தாங்கள் "இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வில் இருக்கிறோம்", அந்த உணர்வுகளால் ஊட்டிவளர்க்கப்பட்டுவருவதுதான் PDS- கட்சி, இந்தச் சூழ்நிலையில் ''கிழக்கிற்கும், மேற்கிற்குமிடையில் எப்போதுமே சமத்துவம் ஏற்படப்போவதில்லை'' என்ற Koehler-ன் அறிக்கை அத்தகைய உணர்வுகளை மேலும் வலுப்படுத்துவதாகவே அமையுமென்று பசுமைக் கட்சித் தலைவர் புகார் கூறியுள்ளார்.Süddeutsche Zeitung, ''தவறான நேரத்தில் சரியான தத்துவம்'' என்ற தலைப்பிட்டு அதை வெளியிட்டிருக்கிறது. ஆனால் முந்திய சந்தர்ப்பங்களைப்போல் அல்லாமல், Koehler பின் வாங்கவிலை. அருவருக்கத்தக்க அல்லது சிந்தனையற்ற விமர்சனத்தை Koehler வெளியிட்டுவிட்டார், என்று கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் ஜனாதிபதி அலுவலகம் மறுத்திருக்கிறது. மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், ஜனாதிபதி கருத்துத்தெரிவித்துள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது.Koehler - ன் அறிக்கைக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் வர்த்தக பிரமுகர்கள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணி உடனடியாக திரண்டுவந்தது Hartz-IV உழைப்புச் சந்தை சீர்திருத்தப்பிரச்சனையில் எழுந்தது போன்ற ஒற்றுமை இதிலும் உருவாகியுள்ளது. SPD கட்சியைச்சார்ந்த அதிபர் ஷ்ரோடர் திட்டவட்டமாக ஜனாதிபதியின் அறிக்கையை ஆதரித்து நின்றார். அதே நேரத்தில் அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஜேர்மனியின் " கிழக்கிலும், மேற்கிலும் சமமான வாழ்க்கைத் தரங்களை" உருவாக்க வேண்டுமென்று உறுதியளிக்கப்பட்டிருப்பதை ஷ்ரோடர் எடுத்துக்காட்டியதை ஜனாதிபதி அறிக்கை தடுக்கவில்லை.CDU -வை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி Richard von Weizsaecker பொருளாதார அமைச்சர் Walfgang Clement (SPD) மற்றும் தொழிலதிபர்கள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஜனாதிபதி Koehler-க்கு உதவுகின்ற வகையில் விரைந்தோடிவந்தனர். Der Spiegel - TM Christian Malzahn மிக உற்சாகப்பெருக்கோடு ''ஜனாதிபதி அவர்களே உங்களது துணிவைப் பாராட்டுகிறேன்!'' என்று எழுதியுள்ளார். எல்லா கண்டனக்காரர்களையும் கண்டித்திருக்கிறார். ''இப்போது Koehler- பேசியுள்ள உண்மைகள் 15- ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கவேண்டும். அப்படி வராததுதான் மிகப்பெரிய மோசடியாகும்'' என்று அவர் எழுதியுள்ளார்.Koehler -ன் அறிக்கை முக்கியமான ஒன்று ஏனெனில் அவர்தான் அரசின் மிக உயர்ந்த பிரதிநிதி, அவர் அதிகாரபூர்வமாக சமுதாய சமரசக்கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அறிவித்துவிட்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலம் முழுவதிலும் சமுதாய வேறுபாடுகளை சமரசப்படுத்தும் நோக்கங்கொண்ட பொருளாதார சமுதாய கொள்கைகள் பெருமளவிற்கு ஜேர்மனியில் பின்பற்றப்பட்டு வந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கிடையில் வெளிப்படையாக பளிச்சிடுகின்ற சமுதாய முரண்பாடுகளைத் தவிர்ப்பதை நோக்கங்கொண்ட இந்தக் கொள்கையின் உள்ளார்ந்த ஓர் அம்சம் மாநிலங்களுக்கிடையில் நிதிவசதிகளை மாற்றித்தரும் கொள்கை ஆகும்.ஒர் உலகப்போர் மற்றும் பாசிச சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து சமுதாய பிளவுகளை சமாளிப்பது அரசியல் சட்டத்திலேயே எழுதப்பட்டது. அரசியல் சட்டத்தின் 20-வது பிரிவு ஜேர்மனியை ஜனநாயக நாடு என்று மட்டுமே விளக்கவில்லை, திட்டவட்டமாக ஜேர்மனி ''ஒரு சமூக அரசு'' என்று விளக்கியுள்ளது. பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "சேம நல அரசின் அரசியற் சட்ட விதிகள்" விரிவாக விளக்கப்பட்டன. அதற்கேற்ப அரசாங்கத்தின் ஒரு நடுநாயகமான பணிகளில் ஒன்று சமூக அநீதியை, துன்பத்தை, பாதிப்பை தக்க சமுதாய கொள்கைகள் மூலம் ஒழித்துக்கட்டுவதாகக் கூறப்பட்டது. இந்த கருத்தின் பொருள் என்னவென்றால் சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் எல்லா குடிமக்களின் நலனையும் வளர்ப்பது அரசின் கடமையாகும். சமுதாயத்தில் பலவீனமானவர்களை வலுவான நிலையில் உள்ளவர்களுடன் சமரசப்படுத்துவது தனிமனிதர்களை பொறுத்த நடவடிக்கை மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும் பிரந்தியங்களுக் கிடையிலும் இத்தகைய சமரசத்தை உருவாக்குவதுதான் அரசாங்கத்தின் கடமை. உலகின் வேறு எந்தநாட்டிலும் இந்த அளவிற்கு சமுதாய நல்லிணக்கம், சமரசம் பற்றி பேசப்படவில்லை. ''தனியார் சொத்துடமையின் சமுதாயக் கடமைகள்'' குறித்து திரும்பத்திரும்ப கூறப்பட்டது, மிக உயர்ந்த அரசியல் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது மற்றும் பல்வேறு ''சமுதாய பங்காளிகளுக்கிடையில் ''' ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது. அபூர்வமாய் 15-ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி ஒன்று பட்டது ''சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி'' என்று கொண்டாடப்பட்டது. முதலாளித்துவம், உயர்ந்த சமுதாயக் கட்டுக்கோப்புத்திட்டம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது, ஏனெனில் சமுதாயச்செழிப்பு வளர்வதோடு சுதந்திரமும் ஜனநாயகமும் இணைந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. என்றாலும், சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1994- ல் அரசியல் சட்டம் அரவம் காட்டாமல் மாற்றப்பட்டது. அரசியல் சட்டம் 72- வது பிரிவில் ''வாழ்க்கை நிலைமைகளில் சமத்துவம்" என்ற வாசகத்திற்கு பதிலாக கணிசமான அளவிற்கு பலவீனமான ''சமமான அளவிற்கு வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குவது'' என்ற வாசகம் சேர்க்கப்பட்டது. அதற்குப்பின்னர் சமுதாய நெருக்கடி மிகக் கூர்மையாகத் தீவிரமடைந்தது. அப்படியிருந்தும் சேமநல அரசாங்கத்தை நிலைநாட்டுவதே குறிக்கோள் என்று அதிகாரபூர்வமான பிரச்சாரம் வலியுறுத்தியது. ஜேர்மன் ஜனாதிபதி ஏற்றத்தாழ்வையே நெறிமுறை என்று அங்கீகரிக்கக் கோருவது முந்திய சமுதாய சமரசக்கொள்கை தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்வதற்கு சமமாகும். முன்னாள் கிழக்கு ஜேர்மனியை, ஒன்றுபட்ட 15- ஆண்டுகளுக்குப்பின்னர் பார்க்கும்போது கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையில் சமுதாய முரண்பாடுகள் குறைந்துவிடவில்லை, மாறாக வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. சென்ற ஆண்டு புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால் கீழ்கண்ட சித்திரம் உருவாகிறது: * வேலையில்லாத் திண்டாட்டம்- மேற்கு ஜேர்மனி 9.4-சதவீதம்; கிழக்கு ஜேர்மனி 20- சதவீதம். * எழுத்தர்கள் போன்ற பணியாளர்களுக்கு சராசரி மணிக்கணக்கு ஊதியம் - மேற்கு ஜேர்மனி 15.56 யூரோக்கள்; கிழக்கு ஜேர்மனி 10.89-யூரோக்கள். * சாதாரண எழுத்தர் போன்ற அரசு ஊழியர்களுக்கு சராசரி மாத வருவாய் - மேற்கு ஜேர்மனி 3,824 யூரோக்கள், கிழக்கு ஜேர்மனி 2,853 யூரோக்கள். * நபர் வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி - மேற்கு ஜேர்மனி 27,671 யூரோக்கள், கிழக்கு ஜேர்மனி 18,580 யூரோக்கள். இதில் உண்மையான சித்திரம் என்னவென்றால் சில தொழிற்சங்கத்தலைவர்களும், PDS அதிகாரிகளும் கூறுவதைப்போன்று கிழக்கிற்கும், மேற்கிற்குமிடையில் நிலவுகின்ற முரண்பாடுகளை மட்டும் குறிக்கும் வகையில் Koehler- ன் அழைப்பு அமையவில்லை அதற்கு அப்பாலும் அது செல்கிறது. பேர்லினிலுள்ள SPD -பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் Hartz-IV சட்டங்கள் என்று கூறப்படுபவை வடிவத்தில் கரும் சமூக வெட்டுக்களை நிறைவேற்றுவதுடனும் எல்லா பெரிய தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் செய்துவருவதுடனும் அது பார்க்கப்படாக வேண்டும். ஒவ்வொரு கம்பெனியாக தொழிலாளர்களை நோக்கி ஊதிய வெட்டுக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் அதனால் உங்களது வாழ்க்கைத்தரம் குறையத்தான் செய்யும், அல்லது தொழிற்சாலையையே குறைந்த ஊதிய ஊழியர்கள் கிடைக்கின்ற கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசிய நாடுகளுக்கு மாற்றிவிடுவோம் என்று எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். அண்மைய வாரங்களில் மிகப்பெருமளவில் சமூக நீதியை நடுநாயகமாக வலியுறுத்தி பெரும் கண்டனப்பேரணிகள் நடத்திருக்கின்ற சூழ்நிலையில் Koehler- ன் அரசியல் மற்றும் வர்த்தக செல்வந்தத்தட்டினரை விட்டுக்கொடுக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். சமுதாய சமரச திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு "சமுதாய" சுதந்திர சந்தைப் பொருளாதாரம் என்கிற கற்பனைக்கு ஒரேயடியாய் முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். கிழக்கு ஜேர்மனியின் இரண்டு முக்கியமான மாகாணங்களான Saxony மற்றும் Brandenburg ல் தேர்தல்கள் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி திட்டமிட்டே பேட்டியளித்திருக்கிறார். சில விமர்சகர்கள் கூறியிருப்பதைப்போன்று "அரசியல் அனுபவமின்மை" காரணமாக அந்த பேட்டியை அவர் தரவில்லை. தேர்தல் முடிவுகளால் இனி அதிகாரபூர்வமான அரசியல் இயக்கப்படமாட்டாது, நிச்சயமாக தெருக்களில் தரப்படும் நிர்பந்தங்களுக்கு கட்டுப்படாது, மாறாக தந்திரோபாய தேர்தல் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு மேலாக சுதந்திரமாக அந்தக் குறிக்கோளை எட்டவேண்டும் என்று Koehler- தெளிவுபடுத்த விரும்புகிறார். அவரது பேட்டி மூலம் Koehler- ன் ஜேர்மன் பொருளாதாரத்தில் இதுவரை காணாத அளவிற்கு நெருக்குதல்களை தந்துகொண்டிருக்கிற சர்வதேசப்போட்டி மற்றும் மோசமடைந்து கொண்டு வருகிற சர்வதேச பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கிற வகையில் ஜேர்மனி எவ்வாறு செயல்பட வேண்டுமென்று பேட்டியளித்திருக்கிறார். ஜேர்மன் முதலாளித்துவம் உலகச்சந்தையில் தனது நிலைப்பாட்டை நிலைநாட்டுவதற்காக ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஊதியங்கள் வெட்டு மற்றும் சலுகைகள் இரத்து முதலிய கொடூரமான தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. உயர்ந்த உற்பத்தித்திறன் மற்றும் புதிய சந்தைகள் உருவாவது ஆகியவற்றின் மூலம் ஜேர்மனி, ஏனைய பெரும்பாலான நாடுகளில் நீண்டகாலமாக அழிக்கப்பட்டு வரும், அல்லது ஒருபோதும் இருந்திராத சமுதாய நிலைமைகளைப் பாதுகாக்க வகைசெய்யும் என்ற கூற்று தவறானது என்று நிரூபிக்கப்பட்டிருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு பின்னர் சேமநல வெட்டுக்கள் தொடர்ந்து முடுக்கிவிடப்படுகின்றன. Koehler - ன் பேட்டி தொழிலாள வர்க்கத்திற்கும் முக்கியத்துவம் நிறைந்ததாகும். உழைக்கும் மக்கள் "சமுதாய பங்காளிகள்" மற்றும் "சமுதாய சுதந்திர சந்தைப் பொருளாதாரம்" என்ற மாய் மாலங்களுக்கு கட்டாயம் விடைகொடுத்ததாக வேண்டும். ஆளும் செல்வந்தத்தட்டினரை நிர்பந்தம் மூலம் மற்றும் "நியாய உணர்வுக்கு" வேண்டுகோள் விடுக்கும் அடிப்படையில் அவர்களது கொள்கைகளை மாற்றிக்கொள்ள கட்டாயப்படுத்திவிட முடியுமென்ற கருத்து ஒரு மாயை என்பதை Koehler- ன் வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன.பெருவர்த்தக மற்றும் அரசாங்கம் தொடுத்துள்ள இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கும் மற்றும் வர்க்க நலன்களில் சமரசத்திற்கு இடங்கொடா நிலையிலிருந்து கிளம்பி புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் கட்சியும் தேவை. |