World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Arson attack on Jewish social centre in Paris

பாரிஸ் யூத சமுக மையத்தில் தீ வைத்துத்தாக்குதல்

By Antoine Lerougetel
1 September 2004

Back to screen version

பாரிசில் இதற்கு முன்னர் யூத சமூக மையமாக இருந்ததில் ஆகஸ்ட் 21-22-ல் இரவில் ஒரு தீ தாக்குதல் தொடுத்து அழித்துள்ளனர். Sephardic யூத சமூகத்தின் பெயரளவில் இறைவழிப்பாட்டு திருகோயிலாக செயல்பட்டு வந்தது, 1960-தில் அனைவருக்கும் பொதுவான சமுதாய கூடமாக மாற்றப்பட்டது, அங்கு தற்போது 30- முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இரங்கத்தக்க நிலையில் உள்ள அழிக்கப்பட் சமூகக்கூடம் Popin Court உள்ள 11வது (arrondissement) வட்டாரத்தில் உள்ளது. ஒரு பாசிச தாக்குதலின் அனைத்து அடையாளங்களும் உள்ளன: சிவப்பு மார்கர் பேனாவினால் ஸ்வஸ்திகா சின்னம் வரையப்பட்டிருக்கிறது. பல வாசகர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ள ''யூதர்கள் இல்லாத உலகம் தான் தூய்மையானதாக இருக்கும்'' ''யூதர்கள் சாவு'' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

அடையாளம் தெரியாத அதிகாரப்பூர்வமற்ற குழு ஒன்று இஸ்லாமிய வலைதளத்தில் ஒரு அறிக்கையில் ''ஒரு இளம் முஜாஹிதீன் குழு... யூத திருக்கோயிலுக்குக் காலை 4-மணிக்கு தீ வைத்தது..... இஸ்லாமிற்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக பிரான்சில் யூத இனவெறியர்கள் நடத்திவரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ''இஸ்லாமிய புனிதப்போரினை ஆதரிக்கும் குழு' என்று அந்த அறிக்கையில் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

என்றாலும் Le Monde ஆகஸ்ட் 24-ல் ''இதில் தீவிர வலதுசாரிகள் செயல் என்று சந்தேகிக்கப்பட்டாலும், திங்களன்று புலனாய்வாளர்கள் மனக்கோளாறுள்ள ஒருவரது செயலாகவும் இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறை தள்ளி விடுவதற்கில்லை'' என்று தகவல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 30-ல் Le Figaro தந்துள்ள தகவலின்படி ''யூதர்களுக்கு எதிரானவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடுமென்ற யூகத்திற்கு மாறாக புலனாய்வு தற்போது மற்றொரு யூகத்தை நோக்கி செல்கிறது. தற்போது மூளை கோளாறுள்ள ஒரு யூதர் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்''

ஆகஸ்ட் 9-ல், Lyons பகுதியிலுள்ள யூதர் கல்லறையில் 60- கல்லறை கற்கலில் நாஜி சின்னங்களும், முழக்கங்களும் எழுதப்பட்டிருந்தன. அது Michael Tronchon என்ற வேலையற்ற இளைஞரின் செயல். தனித்து விடப்பட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட அவர் புதிய நாஜி பிரச்சாசரத்தினால் ஈர்க்கப்பட்டவர். அரபுகளுக்கு எதிரான தீவிர உணர்வுடையவர், அவர் அதற்கு முன்னர் அரபு மக்கள் மீது நடத்திய இரண்டு தாக்குதல்கள் ஊடகங்களால் தாக்குதலுக்குட்படுத்தப்படவில்லை. அவர் இழிவுப்புகழ்பெற்ற பயனால் பிறகு Phinéas என்ற புனைப்பெயரில், அந்த பெயரில் யூதர்களது கல்லறையில் தாக்குதல்களை நடத்திவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார்.

Popin Court பகுதியில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் உள்ளூர் சமுதாயத்தை சிதைத்துவிட்டது, பிரான்சு முழுவதிலும், அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. உடனடியாக தீயணைப்புப்படையினர் நடவடிக்கையில் இறங்கி குடியிருப்புப் பகுதிக்கு தீ பரவாது தடுத்தனர், எனவே உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

Andre Cohen கூறினார்: ''ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போய்விட்டு நான் இங்கே வருவேன். எதிர்பகுதியில்தான் நான் பிறந்தவன். இங்குள்ள பாருக்குத்தான் நான் வருவேன்.... பிற்பகலில் இங்கே சீட்டாடுவோம், மதுபானங்களை அருந்துவோம், எங்களது நீண்டகால நண்பர்களோடு பேசி காலத்தைக்கழிப்போம். இப்போது இங்கே நாங்கள் தெருவில் நின்று கொண்டிருக்கிறோம். எங்கே போவதென்று தெரியவில்லை''

Judeo-Spanish சங்கமான Aki estamos-ன் செயலாளர் Claire Romi, '' பிரான்சு செமிட்டிச-எதிர்ப்பு என்று நான் நினைக்கவில்லை. வரலாற்றோடு சம்மந்தமில்லாத புரிந்து கொள்ளாத மக்கள் இங்கே மனக்கோளாறுகளோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்'' என்று கூறினார். நாடு கடத்தப்பட்ட மகனின் தந்தை Armand Kac, '' நற்பேறு பயனாக பிரெஞ் சமுதாயம் முழுவதுமே இத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளது, ஆனால் 1940-ல் அப்படி அல்ல.'' என்று குறிப்பிட்டார்.

அந்தப் பகுதியைச்சார்ந்த மற்றொருவர், 1942 ஜூலையில் ''அந்த மாவட்டம் குறிப்பாக பாதிக்கப்பட்டது'' என்பதை சுட்டிக்காட்டினார். அவர் ''பாரிசில் 11வது (arrondissement) வட்டாரத்தில் உள்ள அந்த இடத்தில் முதல் சுற்றில் 7,000- யூதர்கள் கைது செய்யப்பட்டனர்'' என்று விளக்கினார். அவர் மேலும் குறிப்பிட்டார் யூத வெகுஜனங்கள் கைதுசெய்யப்பட்டனர்---- போலீசார், நாஜி ஆக்கிரமிப்பாளர்களின் கட்டளைப்படி பிரெஞ் அதிகாரிகளது ஒத்துழைப்போடு யூதர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று (the vélodrome d'Hiver round-up) சைக்கிள் ஓட்டும் போட்டி நடக்கும் பகுதிக்கு கொண்டு சென்று கொலை செய்யப்பட்டதைப்பற்றி அவர் குறிப்பிட்டார்.

பிரான்சில் செமிட்டிச-எதிர்ப்பு தாக்குதல் தொடர்ந்து சமீபத்தில் நிகழக்கூடியதாக உள்ளது. இது போன்ற அனைத்து தாக்குதலையும் ஐயத்திற்கிடமின்றி கண்டனம் செய்யவேண்டும். செமிட்டிச எதிர்ப்பு, நீண்ட மற்றும் துயரம் தோய்ந்த மரபுவழியாக உள்ளது, இது ஒரு இனவாதம் மற்றும் இனப்பழிப்பு துன்புறுத்தலின் மிகவும் துன்பகரமான அரசியல் விளைபயன் வடிவமாகும்.

வடக்கு ஆப்பிரிக்காவின் பிரெஞ் மக்களின் வறுமை வளர்ந்து வாழ்க்கை கீழ்நோக்கி சரிந்தும், பாவஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் சூரையாடியும் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற பெயரால் அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்தும், அரபு மற்றும் முஸ்லீம்கள் பரந்தரீதியாக ஒடுக்கப்படுவதாலும், வெகுஜனம் ஆத்திரமடைய வழிவகுத்துள்ளது. எவ்வாறாயினும் பிரான்சிலோ, வேறு எங்காயினும், யூத மக்களுக்கு எதிராக கொடுஞ்செயல் செய்ய நேரடியாக முயற்சிக்கும் எந்த செயலும் அரபு மக்களுடைய நிலைப்பாட்டிலிருந்து, அது முற்றிலும் பிற்போக்கான மற்றும் அவற்றிற்கு எதிரான உற்பத்தியாகும்.

செமிட்டிச-எதிர்ப்பு மற்றும் இனவாதத்தை பிரெஞ்சு அரசாங்கம் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது, அதை செய்வதின் பாகமாக, தலையணிக்கு எதிராக சட்டத்தையும் கொண்டுவருவதின் விளைவாக அது இளைஞர்களை அடக்குவதற்கும், வகுப்புவாத பதட்டங்களை கிளறிவிடவும் செய்யும்.

பாரிசில் சமீபத்தில் தீ வைத்து தாக்குதல் தொடுத்த சம்பவத்தின் சமாதானப்படுத்த முடியாத எதிர்ப்பால் வேறு வழியின்றி இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிப்பதை குறித்துக்காட்டுவதாக உள்ளது, இது தவிர்க்கமுடியாது எந்த வித மற்றும் அனைத்துவித எதிர்ப்புகளையும் செமிட்டிச-எதிர்ப்புக்கு சரிநிகராக காட்டி மிருகத்தனமான தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும்.

இஸ்ரேல் அரசாங்கத்தின் தலையீடு

பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து தனது குறைகாணும் அடிப்படையில் இஸ்ரேல் அரசு உடனடியாக தலையிட்டது. Sylvan Shalom, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் பிரெஞ் தலைநகரத்திற்கு திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொண்டார். ஆகஸ்ட் 24-ல் பிரெஞ் உள்துறை அமைச்சர் Dominique de Villepin-டன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் போக்கைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பேச்சோடு நிறுத்திக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

Villepin "செமிட்டிச-எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கைகள் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து கடுமையாக உயர்ந்துவிட்டதாகவும்'' இந்த ஆண்டு கடந்த 7- மாதங்களுக்கு மேலாக செமிட்டிச-எதிர்ப்பு நடவடிக்கையால் 160- தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன, மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 2003- முதல் ஏழு மாதங்களில் 75- தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக'' Villepin ஒப்புக்கொண்டார். அதிகாரப்பூர்வமான தகவலின்படி பிரான்சில் 2003-ல் யூதர்களுக்கு எதிராக 127- தாக்குதல்களும், 2002-ல் 195- தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. Villepin இப்போது நாட்டில் நடக்கின்ற நிலவரம் ''நமது குடியரசின் அடிப்படைக்கும், உண்மையான உணர்வுகளுக்கும்'' முரணானது என்றும் ''பிரெஞ் அரசை ஒட்டுமொத்தமாக அணிதிரட்டப்''போவதாக மேலும் குறிப்பிட்டார். கடைசி ஏழு மாதங்களில் 147 மக்கள் சச்ரவுக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரான்சில் யூதர்கள் நிலவரம் தொடர்பாக மிக மோசமாக சித்தரிப்பதில் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு இரட்டிப்பு அக்கறையுள்ளது. முதலாவதாக பிரான்சின் வெளிநாட்டுக்கொள்கை, மத்திய கிழக்கில் மற்ற மேற்கத்திய அரசாங்கங்களின் கொள்கைகளைவிட ஓரளவிற்கு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான வழியில் சென்று கொண்டிருக்கிறது, எனவே செமிட்டிச எதிர்ப்பு குற்றச்சாட்டை பயன்படுத்தி அவற்றிற்கு அழுத்தம் கொடுக்கிறது.

மேலும் சியோனிஸ்ட் ஆட்சி பிரெஞ் யூதர்களுக்கு அச்சமூட்டி இஸ்ரேலுக்குள் குடியேற வேண்டுமென்று விரும்புகிறது. ஆறு வாரங்களுக்கு முன்னர், இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் பகிரங்கமான அவதூறை உருவாக்கினார். அமெரிக்க யூத அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் முடிந்தவரை விரைவாக இஸ்ரேலில் குடியேறுமாறு கேட்டுகொண்டார். அப்போது அவர் கூறினார்: ''இன்றைய தினம் பிரான்சில் மக்கள் தொகையில் 10- சதவீதம் பேர் முஸ்லீம்களாக இருக்கின்றனர். அதனால் இஸ்ரேலுக்கெதிரான உணர்வுகள் அடிப்படையில் செமிட்டிச எதிர்ப்பு புதிய வடிவம் பெறுகிறது.... நான் பிரான்சிலுள்ள நமது சகோதரர்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால்: விரைவாக முடிந்தவரை இஸ்ரேலுக்குள் குடியேறுங்கள் என்பதுதான்''

பிரெஞ் அரசாங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. ஜூன் 29-ல் வெளிவிவகார அமைச்சர் Michel Barnier யாசீர் அராபத்தை சந்தித்ததை இஸ்ரேல் விமர்சித்தது. ஷரோனின் கோபம் குறித்து பாலஸ்த்தீனத்தலைவர் ஷரோனிடமிருந்து விளக்கம் கோரினார். ஜனாதிபதி சிராக் தொலைபேசியில் ஷரோனை அழைத்து, ''இஸ்ரேலில் பிரான்சுக்கு எதிராக நடைபெற்றுவரும் பிரச்சாரத்தை முறையாக எதிர்ப்பதாகவும், செமிட்டிசத்திற்கு எதிரான நாடு என்று சித்தரிக்கும் நோக்கில் நடத்தப்பட்டுவரும் ''பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றும் தெரிவித்தார்.

உண்மையாகவே இஸ்லாம் என்றாலே பயந்து நடுங்கும் ஷரோனின் போக்கை பிரான்சிலுள்ள யூத சமுதாயத்தினர் பலர் விமர்சித்துள்ளனர். LICRA (இனவாத மற்றும் செமிட்டிச-எதிர்ப்புக்கு எதிரான சர்வதேச இயக்கம்) அமைப்பின் தலைவரான Patric Gaubert, ஏரியல் ஷரோன் ''வாய்யை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.'' அவரது வார்த்தைகள் நாங்கள் விரும்புகிற அமைதியையும், சமாதானத்தையும் சாந்தத்தையும் உருவாக்கித்தராதென்று கூறியுள்ளார். பிரான்ஸ் யூத மாணவர்கள் தொழிற்சங்க முன்னாள் தலைவரும் SOS Racisme அமைப்பின் தலைவரான பேட்ரிக் கிளக்மான் ''பிரான்சில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் பிரான்சில் யூதர்களது உண்மையான நிலவரம் குறித்தும் ஷரோனுக்கு மிகவும் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன'' என்று அறிவித்தார். MRAP- (மக்களுக்கிடையில் நட்பு மற்றும் இனவாதத்திற்கு எதிரான இயக்கம்) சேர்ந்த Mouloud-Aounit கருத்துத் தெரிவிக்கும்போது ஷரோன் யூத இன எதிர்ப்பைப்பயன்படுத்தி இஸ்ரேலில் மக்களை குடியேறுவதற்கு மற்றொரு திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 20-இல் Le Monde பத்திரிகை சுட்டிக்காட்டியது ''ஷரோன் வார்த்தைகள் மறுபடியும், ஐயத்திற்கிடமின்றி யூதர்கள் இஸ்ரேலில் குடியேறுவதை ஊக்குவிப்பதற்கான அமைப்பிற்காக குரல் கொடுக்கிறார். இந்த அமைப்புகள், அமெரிக்க யூதர்களுக்கு அடுத்தப்படி பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த 600000 யூதர்கள் இஸ்ரேலில் குடியேறுவதற்கு தயாராக இருக்கிறார்கள். முன்னாள் சோவியத் குடியரசுகள் அல்லது அர்ஜெண்டினாவிலிருந்து குடியேறுகின்ற யூதர்களின் எண்ணிக்கை வரண்டுவிட்டது''. என்று குறிப்பிட்டது

சோசலிஸ்ட் கட்சியின் செனட்டரும் அரசியல் நிர்ணய சபை முன்னாள் தலைவருமான Robert Badinter Le Monde-கு ஜூலை 23 அளித்த பேட்டியில் ''ஷரோனின் இந்த வார்த்தைகள் மில்லியன் கணக்கான பிரான்ஸ் முஸ்லீம், செமிட்டிச-எதிர்ப்பு வெறுப்புணர்வு கொண்டவகள் என்று குற்றம் சாட்டுவதாக அமைந்திருக்கிறது. அந்த வார்த்தைகள் பிரெஞ் நாட்டு யூதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தங்களது நாட்டைவிட்டு வெளியேறுமாறு அவர்களை கேட்டுகொண்டிருக்கிறார். வரலாற்றுரீதியாக பிரரெஞ்சுப்புரட்சி தான் யூதர்களை பிரான்ஸ் நாட்டு குடிமக்களாக ஆக்கியது''. என்று சுட்டிக்காட்டினார்.

பிரெஞ் யூதர்களுக்கு ஷரோன் விடுத்துள்ள வேண்டுகோளை எதிர்ப்பதன்மூலம் பிரான்ஸ் அரசாங்கமும், ஊடகங்களும் தங்களது நலனுக்காக வகுப்புவாதத்தை உசுப்பிவிட்டு வருகின்றன, அரசாங்கம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதற்கும், நலன்புரி சேவை திட்டங்களை சிதைப்பதற்கும், ஒருங்கிணைந்த எதிர்ப்பு தோன்றாது தடுப்பதற்குத்தான். முன்னாள் உள்துறை அமைச்சர் Nicolas Sarkozy-ஆல் பிரெஞ் முஸ்லீம் மத சபையை கடந்த வருடம் உருவாக்கிய முஸ்லீம் சிறுமிகள் பள்ளிகளில் தலையணி அணிவதை தடுக்கும் சட்டத்தை அதே அளவுக்கு Stasi கமிசன் பரிந்துரையால் சிராக்-ரப்ஃபரின் அரசாங்கம் எதிர்ப்பு தோன்றிவிடும் கருதி பல்வேறு மதக்குழுக்களையும் சார்ந்த ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஒரு வியப்பளிக்கும் வழக்கு பற்றிய செய்தியும் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. Marie L- ஒரு இளம் தாய் ஜூலை 9-ல் அவரை மெட்ரோவில் யூதப் பெண் என்று நினைத்து யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று பொய்புகார் கொடுத்தார். 4 அராபியர்கள் இரண்டு கருப்பர்கள், தன்னை ஒரு யூதர் என்று நினைத்து கத்தியால் தாக்கி தனது வயிற்றில் ஸ்விஸ்திகா சின்னத்தை வரைந்து தனது குழந்தையுடன் தன்னை சேரிலிருந்து பிடித்துத் தள்ளியதாக கூறினார். 13 நிமிடங்கள் இந்தத்தாக்குதல் நடந்ததாகவும் இதற்கிடையில் மூன்று ரயில் நிலையங்களில் ரயில் நின்றதாகவும் பயணிகள் எவரும் தமக்கு உதவ முன்வரவில்லை என்றும் கூறினார். இறுதியில் அந்தப்பெண் வழக்கமாக பொய்சொல்லி திரிபவர் என்றும் பிறரின் கவனத்தைத் தக்கவைப்பதற்காக இனவெறி கட்டுக்கதைகளை சொல்பவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையில் நான்கு நாட்கள் சந்தேகத்திற்குரிய இந்த கதைப்பற்றி ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் குடியேறியவர்களுக்கு எதிரான ஆவேச உணர்வுகளை கிளறிவிடுவதற்கும் சக ரயில் பயணிகளின் மனித நேயமற்ற தன்மையை பறைசாற்றவும் பயன்படுத்திகொண்டன.

பிரான்சில் சமுதாய மற்றும் இன கொந்தளிப்புக்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் இந்தக் கொந்தளிப்புக்களின் பிரதான ஊற்றுக்கால் ''இடது'' மற்றும் வலது அரசாங்கத்தால் நலன்புரி அரசு திட்டங்கள் வெட்டப்படுவதால் உருவானது. ஒய்வூதிய விதிகள் சுகாதாரம், வேலை நிலைமைகள், வேலைப் பாதுகாப்பு, வேலையில்லாதிருக்கும் போது கொடுக்கப்படும் வருவாய்கள் ஆகியவை மூர்க்கத்தனமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் போலீசாரின் வசதிகளும், அதிகாரங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நீதிபதிகளின் கட்டுப்பாட்டு அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கால வரிசைப்பட்டி பல ஆண்டுகளாக உயர்ந்து கொண்டே வருகிறது. இப்போது 10-சதவீதத்தை தொட்டுவிட்டது. இதில் பெரும்பாலும் இளைஞர்கள், குடியேறியோர் மற்றும் முஸ்லீம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved