World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

After the US election: the political issues

SEP/ WSWS public lecture in Colombo on December 5

அமெரிக்கத் தேர்தலின் பின்: அரசியல் விவகாரங்கள்

கொழும்பில் டிசம்பர் 5 அன்று சோ.ச.க/உ.சோ.வ.த பகிரங்க கூட்டம்

24 November 2004

Back to screen version

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதிலிருந்து வெளித்தோன்றியுள்ள தவிர்க்க முடியாத அரசியல் பிரச்சினைகளைப் பற்றி கொழும்பில் இடம்பெறவுள்ள பகிரங்கக் கூட்டத்திற்கு வருகைதருமாறு உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (இலங்கை) உலக சோசலிச வலைதள வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் உலகில் மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பாவிக்கப்பட்ட பொய்கள் அனைத்தும் அம்பலமாகியதுடன் அமெரிக்காவிற்குள்ளேயே பரந்தளவிலான யுத்த விரோத ஆர்ப்பாட்டங்கள் வெடித்த நிலையில், புஷ் எவ்வாறு வெற்றிபெற்றார்? ஜனநாயகக் கட்சி போட்டியாளர் ஜோன் கெர்ரி இந்த யுத்த விரோத உணர்வுகளுக்கு அல்லது புஷ்ஷின் வலதுசாரி பொருளாதார மற்றும் சமூக வேலைத் திட்டங்களுக்கு எதிரான ஆழமான எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?

புஷ்ஷின் வெற்றிக்கு இந்திய துணைக்கண்டம் முழுவதுமுள்ள அரசியல் ஸ்தாபனங்களின் கோழைத்தனமான பிரதிபலிப்புகளும் மேலதிக கேள்விகளை எழுப்பியுள்ளன. தற்போது ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள படுகொலைகளை புறக்கணித்த இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ இருவரும் புஷ்ஷுக்கு வாழ்த்து தெரிவித்து கெஞ்சிப் பசப்பும் செய்தியை அனுப்பியுள்ளனர். இதே போல் அவர்களது கூட்டணி பங்காளிகளான மார்க்சிஸ்டுகள் என சொல்லிக்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எதிர்ப்புத் தெரிவிக்காததோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையிட்டு மெளனம் காக்கின்றது. எதிர்க் கட்சிகளும் இலங்கை ஊடகங்களும் இதையே பிற்பற்றியுள்ளன.

அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் சகோதரக் கட்சி மட்டுமே சோசலிச மாற்றீட்டுக்காக போராடும் ஒரே ஒரு கட்சியாகும். கொழும்பிலும் கண்டியிலும் இடம்பெற்ற பொதுக் கூட்டங்களில் சோ.ச.க வின் ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகென், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் என சுட்டிக்காட்டினார். இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை நனவுப்பூர்வமாக ஐக்கியப் படுத்துவதற்கான ஒரு உலகக் கட்சியின் தேவையை அவர் வலியுறுத்தினார்.

புஷ்ஷின் மறுதேர்வை அடுத்து, இந்த அத்தியாவசியமான முடிவுக்குவரல் மிகமிக அவசரமானதாகும். அமெரிக்கத் தேர்தல் முடிவிலிருந்து பெறவேண்டிய அரசியல் படிப்பினைகளை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு விரிவுரைக்கு வருகைதருமாறு நாம் உ.சோ.வ.த வாசகர்களுக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சோ.ச.க பொதுச் செயலாளரும் உ.சோ.வ.த சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ் இந்த விரிவுரையை நிகழ்த்துவார்.

திகதி: டிசம்பர் 5 ஞாயிறு, மாலை 3 மணி

இடம்: வை.எம்.சீ.ஏ மண்டபம், கொழும்பு கோட்டை


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved