:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Behind State Department, CIA shake-up:
Bush-Cheney regime prepares a second term of all-out militarism
வெளிநாட்டு உறவு அமைச்சரக,
CIA
பதவிகள் மாற்றத்தின் பின்னணியில்: புஷ்- செனி ஆட்சி இரண்டாவது தடவையாக ஒட்டுமொத்த இராணுவவாதத்திற்கு
தயாராகிறது
By Patrick Martin
17 November 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
வெளியுறவுத்துறை செயலர் கொலின் பெளலின் ராஜிநாமா மற்றும்
CIA தலைமை
அதிகாரிகளின் ஒட்டுமொத்த தட்டும் பதவி நீக்க நிர்பந்திக்கப்பட்டவை, புஷ்- செனி இரண்டாவது தடவை ஆட்சிகாலத்தில்
இன்னும் மூர்க்கமான ஆக்கிரமிப்பு மற்றும் ஒருதலைப்பட்சமான வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளை கடைபிடிப்பதற்கு
புஷ் நிர்வாகம் தயாராகிக்கொண்டிருப்பதற்கான ஒரு சமிக்கையாகும்.
பெளலின் ராஜிநாமா திங்களன்று பகிரங்கப்படுத்தப்பட்டது, மற்றும் மறுநாள் புஷ்
தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ்ஸை, புதிய வெளியுறவுத்துறை செயலராக நியமிப்பதாக
அறிவித்தார். ரைஸின் நியமனம், குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிலுள்ள செனட்டில் ஜனவரி 20ல் புஷ்
2-வது முறை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நடப்பதற்கு முன்னரே விரைவாக உறுதிசெய்யப்பட்டுவிடும்.
புஷ் நிர்வாகத்தின் முதல் நான்கு ஆண்டுகள் முழுவதிலும், பென்டகனிலும் துணை ஜனாதிபதி
செனியின் அலுவலகத்திலும் நிலைபெற்றுள்ள வலதுசாரி நவீன-பழமைவாத சக்திகள், பெளல் மற்றும் வெளிவிவகாரத்துறையை
சந்தேகம் கண்டோடு அல்லது வெளிப்படையான விரோதப்போக்கோடு பார்த்தன.
பெளல் அல்லது அவரது தலைமை துணை செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இருவரும் புஷ்
நிர்வாகத்தின் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை, ஆனால், அமெரிக்காவின்
அரசுத்துறையில் இடம்பெற்றுள்ள நிரந்தர அதிகாரிகளும்,
CIA அதிகாரிகளும் நேட்டோ போன்ற கூட்டணிகளையும் ஐக்கிய
நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களையும் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கருதும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய வெளியுறவுக்கொள்கை நடைமுறையில் நெருக்கமாக நம்பிக்கையுள்ளவர்கள்.
பெளல் துணை ஜனாதிபதி செனியோடும், பாதுகாப்பு செயலர் டொனால்ட்
ரம்ஸ்பெல்ட்டோடும் திரும்பத்திரும்ப மோதலில் ஈடுபட்டார், ஈராக்கில் மட்டுமின்றி ஈரான் மற்றும் தென்கொரியா
தொடர்பாவும் ஒரு மிகக்கடுமையான நிலைப்பாட்டுக் கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும்
முக்கியமாக வாதாடினர், ஈராக்கைப்போன்று அவ்விரு நாடுகளையும் புஷ் இழிவுபுகழ்பெற்ற ''தீய அச்சுகளின் ஓர்
அங்கம்'' என்று வகைப்படுத்தினார். இந்த மோதல்களால் ஈரான் தொடர்பான அமெரிக்கக்கொள்கை
செயலிழக்கப்பட்டன---- நான்காண்டுகளில், இது தொடர்பாக ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டுக்கொள்கை
நகலை உருவாக்குவதில் புஷ் நிர்வாகம் எப்போதுமே வெற்றிபெற்றதில்லை--- இதனால் வடகொரியா
தொடர்பாக பல்வேறு தவறான மாற்றங்களுக்கு வழிவகை உருவாயிற்று.
இஸ்ரேல்-பாலஸ்தீனய மோதல் தொடர்பாக அமெரிக்கக் கொள்கையில் மோதல்கள்
நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு தரப்பிற்கும் ஒரு தரகராக வாஷிங்டன் செயல்படுகிறது என்ற
நப்பாசையை காப்பாற்றுவதற்காக இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனுக்கு கட்டுத்திட்டமற்ற அதிகாரம் தருகின்ற
வெள்ளிமாளிகையின் போக்கை பெளல் எதிர்த்தார்.
ஈராக் தொடர்பாக உள்ளுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நீண்டகால
மோதல்களில் வெளிவிவகாரத்துறை, வென்றதைவிட இழந்ததுதான் அதிகம். 2002 ஆகஸ்டில் பெளல், ஈராக்மீது
தாக்குதல் நடத்துவது என்ற அமெரிக்காவின் முடிவிற்கு ஒரு முகமூடியாக ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம்
ஒன்றை புஷ் நாடவேண்டுமென்று வலியுறுத்தி வந்தார். ஆனால் படையெடுப்பு தாயாரிப்புக்கு மட்டுமல்ல,
படையெடுப்பிற்குப் பிந்திய திட்டமிடல், இடைக்கால கூட்டணி ஆணையம் அனைத்திலும் பென்டகனுக்கு முழு அதிகாரமும்
தரப்பட்டது. அதன் தலைவர் போல் பிரேமர், ரம்ஸ்பெல்ட் கட்டளையின் கீழ் பணியாற்றிவந்தார். 2004 ஜூன்
30, அல்லாவியின் பொம்மை அரசாங்கம் உருவாக்கப்படுகின்ற வரை, ஈராக்கின் புதிய தூதராக அமெரிக்க
ஆளுநர் ஜோன் நெக்ரோபோன்ட் நியமிக்கப்பட்ட பின் வெளிவிவகாரத்துறைக்கு ஆக்கிரமிப்பு ஆட்சியில் முன்னணி
அரசியல் பங்களிப்புத்தரப்பட்டது.
பெளல் மற்றும் ஆர்மிட்டேஜ் நீக்கப்பட்டிருக்கின்றனர், தனது துணை செயலர் போல்
வுல்போவிச் உடன் ரம்ஸ்பெல்ட் பென்டகனில் நீடிக்கிறார், இது நிர்வாகத்தில் மிகவும் சண்டையிடும் போக்குள்ள குழுவிற்கு
தெளிவான வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. கொள்கை தொடர்பான உள்போராட்டங்களில் பொதுவாக
ரம்ஸ்பெல்ட் மற்றும் செனியின் பக்கம் ரைஸ் சாய்ந்திருந்தார், என்றாலும் அவர் சுதந்திரமாக எந்த பங்களிப்பையும்
செய்யவில்லை மற்றும் ஈராக்கிய போர் ஆதரவாளர்களே கூட அவர் பயனற்றவர் என்று மறைமுகமாக கருதுகின்றனர்.
நியூயோர்க் டைம்ஸ் செய்வாயன்று ரைஸ் முக்கிய பிரச்சனைகளில் என்ன
நினைத்தார் என்பது ஒரு புதிராகவே உள்ளது என்று எழுதியிருக்கிறது. ''ரைஸ் தனது வெளியுறவுக்கொள்கை
தொடர்பான கருத்துக்களை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே தனக்குள்ளேயே வைத்துக்கொண்டார்'' என்று
அவரது நியமனம் தொடர்பான முதல் பக்க கட்டுரையில் அந்த செய்திப்பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. கடந்த
நான்கு ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவந்தவர் பற்றி டைம்ஸ் தந்திருக்கும்
விளக்கம் குறிப்பிடத்தக்கது, அவர் புகழ் பெற்றதற்கு முதன்மையான காரணம் வெளியுறவுக்கொள்கையில் அவர்
புஷ்ஷிற்கு ஆசிரியராக இருந்தார் என்பதுதான்.
வெளிவிவகாரத்துறை செயலர் என்ற முறையில் ரைஸின் பிரதான பங்களிப்பு
அந்தத்துறையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு பதவிகளில் அதிக கடுமையான நிலைப்பாடுகளை கொண்டு
அதிகாரிகளை நியமிப்பதாக இருக்கும். மற்றும் வெளியுறவுசேவை நிரந்தர அதிகாரிகளுக்கிடையில் புஷ் நிர்வாகத்தின்
கொள்கை குறித்து எந்த விமர்சனத்தையும் அடக்குவதும் அவரது பங்களிப்பாக இருக்கும். வெள்ளை மாளிகையிலும்,
பென்டகனிலும், கடுமையான பற்றாக்குறையாகவுள்ள குறிவைக்கப்பட்டுள்ள நாடுகளின் உண்மையான நிலவரம் பற்றிய
அறிவின் அடிப்படையில் புஷ் நிர்வாகத்தின் நடைமுறைகள் உண்மையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால
அக்கறைகளை கீழறுக்கின்றது என அத்தகைய விமர்சனங்கள் கவலைகொண்டுள்ளன.
புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக்கொள்கை கட்டுப்படுத்த அல்லது உள் இலாகாவிற்குள்,
விமர்சனங்களைத் தெரிவிக்கும் வாய்ப்புள்ள எந்த வட்டாரத்தயும் அடக்கிவிட வேண்டுமென்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற
வகையில் CIA
தலைமை அதிகாரிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர். நவம்பர் 12ல்
CIA துணை இயக்குநர்
John McLaughlin
ராஜிநாமா செய்தார், மூன்றுநாட்களுக்கு பின்னர் நடவடிக்கைகளுக்கான துணை இயக்குநர்
Stephen
Kappes உம்
அவரது தலைமை துணை அதிகாரியான Michael
Slusick உம் ராஜிநாமா செய்தனர். அமெரிக்க கீழ்சபை புலனாய்வுக்
குழுவின் தலைவரும் குடியரசுக் கட்சி உறுப்பினருமான
Porter Goss முன்னாள்
CIA தலைமை
நிர்வாகி ஜோர்ஜ் டெனட் பதவி விலகிய பின் நியமிக்கப்பட்டார், அவர் நியமனத்திற்குப்பின் இதுவரை
CIAவின் ஒன்பது
தலைமை அதிகாரிகள் பதவி விலகியிருக்கின்றனர். டெனட்டின் தலைமை உதவியாளர்கள் இரண்டுபேர் மட்டுமே மிச்சமிருகின்றனர்.
CIA தலைமை நிர்வாகி பதவிக்கு மேலாக
Goss நியமிக்கப்பட்டதை தொடர்ந்து
McLaughlin ஓய்வு பெறுவது எதிர்பார்க்கப்பட்டதுதான். அவர் 2000
முதல் அந்த ஏஜென்ஸியில் இரண்டாம் நிலை அதிகாரியாக பணியாற்றி வருபவர்.
என்றாலும் Kappes
உம்
Slusick உம், இந்த கோடைகாலத்தில் தான் பதவி
ஏற்றனர். நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பான தலைவராக பணியாற்றிவந்த ஜேம்ஸ் பாவிட் ஓய்வுபெற்றதை
ஒட்டி இவர்கள் பதவிக்கு வந்தனர். Goss
இன் தலைமை உதவியாளர்
Patrick Murray
உடன்
ஒரு ஆத்திரமான மோதலை அடுத்து அந்த இருவரும் பதவி விலகினர்.
கீழ்சபை குழுவின் முன்னாள் உறுப்பினரான Slusick,
Murray யை ஒரு வாந்தி குவியல் என்று குறிப்பிட்டார். அவர்
Murray Slusick ஐ பதவி நீக்கம் செய்யவேண்டுமென்று
Kappes இடம் கோரினார், அந்த கட்டளையை ஏற்க
Kappes
மறுத்துவிட்டார்.
நவம்பர் 2 இல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அந்த ஏஜென்ஸிக்குள் கொந்தளிப்பை
உருவாக்கின. அந்தக் கொந்தளிப்பு ஒருவரை நோக்கி மற்றொருவர் கூச்சலிடுகின்ற அளவிற்கு முற்றிவிட்டது.
Goss
குழு செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி ஒரு அறிக்கையை தயாரித்தது. அந்த அறிக்கை
CIA
நடவடிக்கைகள் தலைமைப்பீடம் ''செயல்படாத'' அமைப்பு என்று வர்ணித்தது, கெர்ரி வெற்றி பெறுவாரானால்
நொண்டி வாத்து என அழைக்கப்பட்ட Goss
ஜனவரியில் பதவியிலிருந்து விலகிச்செல்ல வேண்டியவர் என்று பரவலாக
கருதப்பட்டது.
CIA அலுவலகத்தின் சில பிரிவுகள்
ஜனநாயகக்கட்சி பிரச்சாரத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு பத்திரிகைகளுக்கு பல்வேறு இரகசிய
தகவல்களை கசியவிட்டன, ஈராக் போருக்கு முந்திய முன்னேற்பாடுகள் பற்றியும் பிந்திய நடவடிக்கைகளுக்கு
திட்டமிட்டது பற்றியும் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' தொடர்பாகவும் புஷ் கூறிய பல பொய்களை
அம்பலப்படுத்துவதற்கு அந்த இரகசியத்தகவல்கள் பயன்பட்டன. அந்த அமைப்பில் பின் லேடன் பிரிவுத்தலைவராக
பணியாற்றிய அதிகாரி Michael Scheuer ஒரு புத்தகத்தை
பிரசுரிப்பதற்கு அந்த ஏஜென்ஸி அனுமதி அளித்தது, அந்த புத்தகம் ''அநாமதேய'' என்ற புனைப்பெயரில்
வெளியிடப்பட்டது----- 9/11- தாக்குதல்களுக்கு முன்னர் பின் லேடனின் அச்சுறுத்தலை கடுமையாக
எடுத்துக்கொள்வதற்கு தவறிவிட்ட வெள்ளை மாளிகையை அந்த புத்தகம் கண்டித்தது. நவம்பர் 11ல்
Scheuer உம் அந்த ஏஜென்ஸியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
Goss தன்னோடு CIA
விற்குள் கீழ்சபை புலனாய்வுக்குழுவில் பணியாற்றிய நான்கு தலைமை
உதயவியாளர்களை நியமித்திருக்கிறார், இவர்கள் 4 பேரும் குடியரசுக் கட்சியில் தீவிரமாக இருப்பவர்கள்
CIA வின் தலைமையில் அரசியல் எதிர்ப்பாளர் எவரும் இல்லாது
நீக்குவதில் உறுதியுடன் உள்ளவர்கள்.
வலதுசாரி பத்திரிகையான, வோல்ஸ் ஸ்ரீட் ஜோர்னல் தனது தலையங்கக்
கட்டுரையில் CIA
விலும் அரசுத்துறையிலும் அத்தகைய களையெடுப்பு நடத்தவேண்டுமென்று தலையங்க பக்கங்களில் தாக்கி வெளியிட்டுள்ளது.
அந்த நேரத்தில் தேர்தலுக்கு முந்திய கசிவு தகவல்கள் ஒன்றைப்பற்றி ஜோர்னல் பிரசுரித்த ஒரு தலையங்கத்தில்
புஷ் வெள்ளை மாளிகை மீது CIA
''போர் தொடுத்திருப்பதாக'' கண்டித்தது. பெளலின் ராஜிநாமா குறித்து மகிழ்ச்சி தெரிவித்து அந்த செய்திபத்திரிகை
எழுதியிருக்கும் ஒரு தலையங்கத்தில் இராஜதந்திர பட்டாளத்திலும் இத்தகைய களையெடுப்புக்களை நடத்தவேண்டுமென்று
புஷ்ஷை கேட்டுக் கொண்டிருக்கிறது.
வெளியுறவுத்துறையிலும்,
CIA இலும் ஆக இரண்டு அமைப்புக்களிலுமே புஷ்ஷிற்கு தெரிவிக்கப்படுகின்ற
எதிர்ப்பு ஏகாதிபத்திய நலன்களை தற்காத்து நிற்க வேண்டும் என்ற கட்டுக் கோப்பிற்குள் வெளிப்படுபவைதான்
என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த இரண்டு அமைப்புக்களிலுமே உலகின் ஒவ்வொரு
கண்டத்திலும் உழைக்கும் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட கணக்கில்லாத குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தாங்கிநிற்கும் பல போர்க்களங்களை கண்ட அனுபவமிக்கவர்கள்தான் ஊழியர்களாக
இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களது எதிர்ப்பு புஷ்ஷிற்கு பெரும்பாலும் ஈராக்கில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற தோல்விகளை
அடிப்படையாகக் கொண்டது. அந்த நாட்டின் சிக்கல் நிறைந்த அரசியலையும் மத்திய கிழக்கின் ஒட்டுமொத்தமான
சிக்கல் நிறைந்த அரசியலையும் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டு ஒரு கொள்கையை உருவாக்கி அந்த கொள்கை அமெரிக்க
ஆயுதபலத்தால் மட்டுமே தன் விருப்பத்திற்கு வளைக்க முடியும் என்ற ஒரு மூர்க்கமான தத்துவத்திற்கு ஆதரவாக
செல்கிறது என்பதால்தான்.
இப்படி அதிகாரத்துவத்திற்குள் நடந்து கொண்டிருக்கின்ற உள்மோதல்களின் விளைவு
என்னவென்றால் புஷ் வெள்ளை மாளிகை அதிகாரங்களை ஒரு சிலர் கையில் குவித்துவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம்
ஸ்தாபிக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் மீது தாறுமாறாக நடவடிக்கைகளை எடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
Knight Ridder செய்தி சேவை குறிப்பிட்டிருப்பதைப்போல்
''பெளலின் ராஜிநாமாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலமும் புதிய
CIA தலைவர்
Porter Goss
மேற்கொண்டுள்ள தெளிவான களையெடுப்பிற்கு சம்மதித்திருப்பதன் மூலமும் புஷ்ஷும்,
துணை ஜனாதிபதி டிக் செனியும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பில் செயல்பட்டு வருகின்ற சில சுதந்திர
அதிகாரமையங்களையும் ஒழித்துக்கட்டிவிட முடிவு செய்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது மற்றும் தங்களது நேரடி
கட்டுப்பாட்டில் அந்த அமைப்புக்கள் செயல்படுவதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது''
இந்த வளைவரைபாதை தவிர்க்க முடியாத அளவிற்கு ஈராக்கில் மட்டுமல்ல, இதர
நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வெள்ளை மாளிகை கொள்ளைக்காரர்கள் குறிவைப்பதன் மூலம் புதிய மற்றும்
பெருமளவில் இரத்தக்களரி பேரழிவுகளுக்கு இட்டுச்செல்கின்றது. அதன் காரணமாய் அமெரிக்க மக்கள், ஒரு புதிய
சுற்று இராணுவ நடவடிக்கைகளுக்கான விலையை செலுத்தவேண்டியுள்ளது.
Top of page
|