World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக் The Australian 2004 election: the secret of Howard's "success" 2004 ஆஸ்திரேலியத் தேர்தல்: ஹோவர்ட்டின் "வெற்றியின் இரகசியம்" பகுதி 2 By Nick Beams இது ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் பற்றி நிக் பீம்ஸ் எழுதிய இரு-கட்டுரைத் தொடரின் முடிவுப் பகுதியாகும். முதல் பகுதி நவம்பர் 3ம் தேதி (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது. அக்டோபர் 9ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதம மந்திரி ஹோவர்டின் தாராளவாத-தேசிய கூட்டணி கூடுதலான பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை, மற்றும் சர்வதேச நிதிச்சந்தைகளின் இடைவிடாத அழுத்தங்களினால், ஹாக்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கங்கள், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் முதலே இருந்து வந்த தேசியப் பொருளாதார கட்டுப்பாட்டு முறைகளை அகற்றிவிட்டு, உலகளாவிய சந்தை சக்திகள் தடையற்ற முறையில் இயங்க வகைவகுத்தன. இதன் விளைவாக பணிகளின் மேம்பாட்டு நிலை அழிவுற்றது, உண்மை ஊதியங்கள் குறைவுற்றது, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் "பணம் கொடுத்துப் பயனடைக" என்ற கொள்கை புகுத்தப்பட்டது. அத்துடன் செல்வந்தர்களுககும், பெருவணிகத்திற்கும் வரிச்சலுகைகளும் கொடுக்கப்பட்டன. இவற்றின் மொத்தத் தாக்கம் மிகப்பெரிய முறையில் பணப்பங்கீடு புதிய முறையில் நடைபெற்றது ஆகும். 1982-83ல் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஊதியங்களுக்கு சென்ற பங்கு 63.3 சதவிகிதமாக இருந்தது 1996 ஐ ஒட்டி, அது 57.8 ஆகக் குறைந்தது மட்டுமின்றி இதேகாலகட்டத்தில் இலாபத்தின் பங்கு 12.1 சதவிகிதத்தில் இருந்து 16.3 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தச் செல்வ மாற்ற முறை நடைபெற்றதற்கு முக்கிய கருவியாக ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள் குழுவின் தலைமையின் கீழ் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையே விலைவாசிகள், வருமானங்கள் பற்றிய உடன்பாடு (Prices and Incomes Accord) இருந்தது. ஆனால் அத்தகைய திட்டம் அமைதியான முறையில் செயல்படுத்தப்பட முடியவில்லை. மற்ற பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள், அதிலும் குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா போன்றவற்றில் இருந்ததைப்போல், 1980 களின் தசாப்தம் ஆளும்வர்க்கத்தின் நோக்கம் உழைக்கும் வர்க்கத்தில் எவ்விதமான தனிப்பட்ட சுதந்திரமான இயக்கத்தை முற்றிலும் நசுக்குதல், அழித்தல் போன்ற தன்மையைத்தான் கொண்டிருந்தது. ஆனால் முறையே தாட்சராலும், றேகனாலும் இயக்கப்பட்டிருந்த பிரிட்டன், அமெரிக்க அனுபவங்களுக்கு எதிரான முறையில் ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தகுந்த தன்மை அது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் மிக நெருங்கிய முறையில் இணைந்து ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது ஆகும். தென்கிழக்கு குவின்ஸ்லாந்து மின் வாரியத் தொழிலாளர்களின் (SEQEB) காட்டிக் கொடுப்பில் இருந்து, கட்டிடத்தொழிலாளர்கள் கூட்டமைப்பு நசுக்கப்பட்டதும் அதன் பின்னர், நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களின் தொழில் நிலைமைகளை அழித்தது, 1990ல் விமான ஓட்டிகளின் வேலைநிறுத்தத்தை முறிக்க இராணுவத்தைப் பயன்படுத்தியது வரை, உழைக்கும் மக்கள் மிகக் கசப்பான படிப்பினைகளையே பெற்றனர். இவ் உடன்படிக்கையினால் உலகச் சந்தையில் "சர்வதேசப் போட்டி நிலைமைக்காக" உழைக்கும் மக்களின் நலன்களைக் கீழ்ப்படுத்திக்கொள்ள முயலும் அமைப்புக்களாக தொழிற்சங்கள் மாற்றம் அடைந்தன. சமூக சீர்திருத்தத்தின் உடைவு அதற்கு முன்பு 80 ஆண்டு காலத்தில் பரந்த தொழிலாளர் இயக்கத்தின் முன்னோக்கின் முக்கிய கூறுபாடாக விளங்கியிருந்த சமூக சீர்திருத்த முன்னோக்கின் உடைவைத்தான் ஹாக்-கீட்டிங் அரசாங்கம் கண்ணுற்றது. இம் முன்னோக்கின் அழிவு அரசியல் உளவியலிலும், உணர்மையிலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து, சமூகசீர்திருத்தங்கள் உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளினால் அவையே இறுதி இலக்கு என்று கொள்ளப்படாமல், ஒரு பரந்த சோசலிச போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டு வந்தன. அநேகமாக தெளிவாக வரையறுக்கப்படாத இந்த முன்னோக்கு, "உயர்ந்த இடத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும்" என அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் மூலமோ அல்லது நேரடியான பொதுமக்கள் உடைமையின் மூலமோ முக்கிய பொருளாதார, நிதிய அமைப்புக்களை ஜனநாயக முறையில் கொண்டுவந்துவிடக்கூடிய கருவியாகத்தான் நினைத்திருந்தனர். ஆஸ்திரேலிய மக்களில் பெரும்பாலானோருக்கு எது கொடுக்கப்படவேண்டும் என்பதை, "இலாப நோக்கம் அதிகப்படுத்தப்படவேண்டும்" என்ற நலனை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு சிறிய "ஏகபோக உரிமை கொண்ட முதலாளித்துவத்தினர்" நிர்ணயிப்பது என்பது "கொடூரமானது" என்ற கருத்தை 1974-75 வரையில்கூட ACTU வின் தலைவராக இருந்து, தான் ஒரு இடதுசாரியாளர் என்ற தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற முறையில் பொப் ஹாக் பிரகடனப்படுத்தியிருந்தார். தான் ஒரு சோசலிஸ்ட் என்றும், எப்பொழுதும் அவ்வாறுதான் இருக்கத்தயாரென்றும், "ஜனநாயக சோசலிசமுறை" அதைத் தொடர்ந்து வருமேயானால், தான் முதலாளித்துவ முறையின் "உடைவைக்கூட" ஆதரிப்பதாகவும் ஹாக் கூறிவந்திருந்தார். 1974 ம் ஆண்டு எண்ணெய் தொழில் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று ஹாக் வாதிட்டிருந்தார்: இத்துறை பொதுமக்களுடைய நலன்களை பற்றிச் சிறிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு, அவரே ஒரு அரசாங்கத்திற்கு தலைமை வகித்து காமென்வெல்த் வங்கி, மற்றும் அரசாங்க உடமையாக இருந்த விமானப் பணித்துறைகளை தனியார்மயமாக்கும் திட்டங்களை செயல்படுத்தினார்.அரசியல் ரீதியாக, ஹாக்-கீட்டிங் அரசாங்கத்தின் மிக முக்கியமான விளைவு முந்தைய சமுதாய நலன்களை பின்நோக்கி கொண்டுசென்றது மட்டுமல்ல, தொழிலாளர்கள் இயக்கத்தில் அது வெளிப்படுத்திய முன்னோக்கின் நெருக்கடிதான். மிகப்போர்க்குணமிக்க தொழிலாளர்களின் செயற்பாடுகளை வழிநடத்தியதும், தொழிலாளர் இயக்கத்தை ஒழுங்கமைப்பதிலும் தீர்க்ககரமான பாத்திரத்தை வகித்த "சோசலிச'' பார்வை பெரும் தாக்கத்திற்குள்ளானது. அது ஒரு தேசியப் பார்வையில் அடித்தளத்தை கொண்டுவிட்டது. சர்வதேச அளவில் ஒரு பொது முன்னோக்கை கொண்ட உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் எழுச்சியாகக் கருதப்படாமல், சோசலிசம் ஒரு தேசிய நாட்டின் எல்லைக்குள் வளரும் ஒரு கருத்தாக ஏற்கப்பட்டிருந்தது. லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பாளர்கள் கொண்டிருந்த சர்வதேச முன்னோக்கு தோற்கடிக்கப்பட்டதும், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னுடைய ஒரு நாட்டில் சோசலிசம் என்ற பார்வையில் தேசியப் பாதையில் சோசலிசத்தை கட்டியெழுப்பவேண்டும் எனக் கூறி அதிகாரத்திற்கு வந்ததும்தான், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கண்ணோட்டம் மேலாதிக்கம் கொண்டதற்குக் காரணமாகும். முக்கியமான முதலாளித்துவ நாடுகளின் ஆளும்வர்க்கங்கள் போருக்குப் பிந்தைய காலத்தில் ஒரு தேசியப் பொருளாதார திட்டத்தை தொடர்ந்துவந்த வரையில், இந்த தேசியத்தை தளமாகக் கொண்டிருந்த ''சோசலிச'' முன்னோக்கு செயல்படுத்துவதற்கு உகந்ததாகத் தோன்றியதுடன் அதைப்பற்றிய பொய்க் கற்பனைகளும் பரந்திருந்தன. ஆனால், 1980களின் ஆரம்பத்தில் இருந்து உற்பத்தி முறை, நிதியங்கள் அதிகரித்தளவில் பூளோளமயமாகியதுடன் அக்கற்பனைகள் சிதைவுறத் தொடங்கின. "தடையற்ற சந்தை முறை", இலாப முறை இரண்டிற்கும் வேறு மாற்று இல்லை என்ற கருத்திற்கு நம்பிக்கையளித்த சோவியத் ஒன்றியத்தின் சரிவு இறுதியில் அதன் முடிவை கொண்டுவந்துவிட்டது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கில் உழைக்கும் மக்களுடைய அரசியல் உளவியலில் குறிப்பிடத் தகுந்த மாறுதல்கள் ஏற்பட்டன. 1851 டிசம்பர் மாதம் நிகழ்ந்த லூயி போனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றியது பற்றிய ஆய்வில் மார்க்ஸ் புதிய ஆட்சிக்கான சமூக அடித்தளம் பிரான்சின் விவசாயக் குடி என்று விளக்கினார். "மோசமான தகமையை'' கொண்டிருந்தவர்" என்று மார்க்சால் விவரிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் எவ்வாறு மிக உயர்ந்த அரசியல் அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டார் என்பதை ஆராய்ந்தபோது, அவர்களை மற்ற வர்க்கங்களில் இருந்து பிரிக்கும் ஒரு பொதுப் பொருளாதார நிலைமையில் வாழும்வரையில், அவர்கள் ஒரு வர்க்கமாக அமைந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குறுகிய உட்தொடர்பு மட்டும்தான் இருக்கும்வரை "அவர்களுடைய நலன்களைப் பற்றிய தனி அடையாளங்கள் ஒரு சமுதாயத்தையோ, தேசியப் பிணைப்பையோ, அரசியல் அமைப்பையோ அவர்களுக்கிடையே ஏற்படுத்திவிடவில்லை. அத்தன்மையில் அவர்கள் ஒரு வர்க்கமாக வடிவமெடுக்கமாட்டார்கள் என்றும்" மார்க்ஸ் விளக்கினார். 19ம் நூற்றாண்டின் பிரெஞ்சு விவசாயக் குடியினருக்கும் 21ம் நூற்றாண்டின் உழைக்கும் மக்கள் திரளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு என்பது உண்மையேயாகும். அப்படியாயினும்கூட, மார்க்சுடைய கருத்துக்கள் உள்விளக்கம் அளிக்கின்றன; ஏனெனில் அரசியல் அதிகாரம் எவ்வாறு லூயி போனபார்ட் போன்ற ஒரு நபரிடம் அளிக்கப்பட்டது என்பதை அவர் விளக்க முற்பட்டிருந்தார். உயர் உத்தியோகத்தில், தொழிற்துறையில் இருப்பதின் மூலமாயினும், உற்பத்தி அல்லது பணி தொழில்கள் மூலம் என்ற விதத்திலேனும் உள்ள, பரந்த அளவில் ஊதியத்திற்காக உழைக்கும் மக்களுடைய நலன்களில் ஒரு புறநிலையான அடையாளத்தை காணமுடியும். இந்த தனி அடையாளம் தெளிவான முன்னோக்கு, வேலைத்திட்டம் இவற்றைக் கொண்டுள்ள ஓர் அரசியல் அமைப்பின் மூலம் வெளிப்படுத்தப்படாத வகையில், தனிப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நினைப்பதில்லை. முன்பு அவ்வாறு ஒரு பார்வை கொண்டிருந்தனர். இப்பொழுது அவ்வாறு இல்லை. தொழிலாளர் இயக்கத்தின் பழைய முன்னோக்கு அழிந்து விட்டது; அதனுடன் அதைத் தளமாகக் கொண்டிருந்த அமைப்புக்களும் அழிந்துவிட்டன; ஒரு புதிய அரசியல் பார்வை இனிமேல்தான் வளர்க்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் இயக்கத்தில் உள்ள முன்னோக்கு தொடர்பான ஆழ்ந்த நெருக்கடிதான் ஹோவர்டுடைய வெற்றியின் இரகசியமும், அவருடைய அரசாங்கத்தின் உண்மையான தளமும் ஆகும். தொழிற் கட்சி மறைதல் தன்னுடைய தோல்விக்கும், லிபரல்களில் வட்டிவிகித அச்சுறுத்தல் பிரச்சாரத்திற்கும், தன்னுடைய பொருளாதாரத் திட்டத்தை மறு ஆய்வு செய்ததின் மூலம், தொழிற்கட்சி தக்க முறையில் விடையைக் கொண்டுவிட்டது. ஆனால் அவர்களின் இந்த மறு ஆய்வின் நோக்கம் மில்லியன் கணக்கான மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்கான உண்மைக் காரணங்களை அம்பலப்படுத்துவதாக இல்லை; அவர்களுடைய நலன்களுக்காக சார்பு கொள்ளும் ஒரு கொள்கையை வளர்ப்பதாகவும் இல்லை. இவ்வாறன்றி, வேறு எவ்விதம் அது இருக்க முடியும்? மக்கள் வட்டிவிகித அச்சுறுத்தல் பிரச்சாரத்திற்கு விடையிறுத்தனர் என்பதைப் பற்றிய உண்மையான மதிப்பீடு, உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுடைய சமுதாய நிலைப்பாட்டில் ஆதிக்கம் கொண்டுள்ள பொருளாதாரப் பாதுகாப்பின்மைகள், சமத்துவமற்ற நிலை இவற்றை விரைவில் வெளிப்படுத்திவிடும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் கூறப்பட்டுள்ள மிகவும் உயர்நிலையை அடைந்து விட்டிருக்கும் வேலைகள் பெருக்கம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை அது விளக்கும். ஏழாண்டு காலத்திற்கும் மேலாக "வலுவான" பொருளாதார வளர்ச்சி அடைந்த பின்னரும் கூட, 1996ல் இருந்து தோற்றுவிக்கப்பட்டுள்ள 1.3 மில்லியன் வேலைகளில், கிட்டத்தட்ட 700,000 பகுதி நேர வேலைகளாகவும், 400,000 வேலைகள் தற்காலிகமானவையும் ஆகும். கிட்டத்தட்ட 4.1 மில்லியன் மக்கள், தொழிலாளர் தொகுப்பில் மொத்தத்தில் பாதிபேர் வாரம் ஒன்றுக்கு $650க்கும் குறைவாகவேத்தான், அதாவது ஆண்டு ஒன்றுக்கு $33,700தான், 2 மில்லியன் மக்கள் வாரம் ஒன்றிற்கு $400க்கும் குறைவாகத்தான் ஊதியம் பெறுகின்றனர் என்பது தெரியவரும். அதாவது பகுதி நேர வேலை என்பது முழுநேர வேலையைவிட முன்று பங்கு வளர்ந்து வருகிறது என்பது தெரியவரும். இத்தகைய ஆய்வு கடந்த தசாப்தத்தின் வழமை பற்றிய ஐயத்திற்குரிய தன்மை, மலைபோன்று பெருகி வளரும் கடனை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் புலப்படுத்துகிறது; ஒரு கால கட்டத்தில் இது சரிவிற்கு உட்பட்டே தீரவேண்டும். இவ்வகையானது இரண்டு பாதைகள்தான் உள்ளன என்பதைக் காட்டும்: அதாவது உழைக்கும் வர்க்கம் சுயாதீனமான இயக்கத்தை, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கில் தளம் கொண்டு வளர்க்க வேண்டும்; அது முதலாளித்துவ சொத்துரிமைகளில் முக்கியமான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பெருவணிக, நிதிக் குழுக்களில் உலக ஆதிக்கத்திற்கு முற்றப்புள்ளி வைக்கும் அல்லது சந்தையின் தேவைகள் அனைத்தையும் முற்றிலும் அரவணைத்துச் செல்லும் திட்டத்தைக் கொள்ளும். எனவே, தேர்தல் பற்றிய பின்னாய்வின் மையக்கருத்தே தொழிற்கட்சி ஹாக்-கீட்டிங் ஆண்டுகளின் தடையற்ற சந்தை: "சீர்திருத்தங்கள்" பற்றித் தன்னுடைய எஞ்சியிருக்கும் தெளிவின்மையை கைவிட்டு, ஆதிக்கம் செலுத்திவரும் பெருநிறுவனம் மற்றும் நிதியங்களின் நலன்களை முழுமையாக ஏற்கவேண்டும் என்பது ஆகும். குறிப்பிடத்தக்கவகையில், தொழிற்சங்க அதிகாரவர்க்கத்துவத்தின் பிரதிநிதிகள்தான் இதைப்பற்றிய விவாதத்தில் முதலில் குதித்தவர்கள் ஆவர். புதிய செளத் வேல்சில் தொழிலாளர் குழுவினால் வெளியிடப்படும் Workers Online 15ம் தேதி பதிப்பின் தலையங்கத்தின்படி, ஹோவர்டின் வெற்றி, ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அது ஹோவர்டின் செயல் அல்ல. தேர்தல் முடிவை நிர்ணயித்திருந்த பொருளாதார நிர்வாகம் பற்றிய பிரச்சினை "தன்னியல்பாக வளர அனுமதிக்கப்பட்டு, கடந்த எட்டரை ஆண்டுகாலமாக ஒரு பொய்யின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அந்தப் பொய் ALP மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டும் ஹாக்-கீட்டிங் அரசாங்கத்தின் உடன்பாட்டு ஆண்டுகளின், மிகப் பெரிய பொருளாதார சாதனைகளில் சொந்தம் கொண்டாடியதை அடுத்து நிகழ்ந்ததாகும். இந்தச் சகாப்தத்தில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் உலகிற்கு திறந்துவிடப்பட்ட காலகட்டமாகும்; ஒரு சமூக ஜனநாயக கட்சி மற்றும் ஒழுங்குமுறை படுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் இடையே இருந்த கூட்டத்தன்மையால் உந்துதல் பெற்றது; உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இதுபோன்று நடந்தது இல்லை." என குறிப்பிட்டது. தொழிலாளர் குழு தொடர்கிறது: கீட்டிங் அரசாங்கம் 1996ல் தோல்வியுற்றதை தொடர்ந்து, "வாக்காளர்களைவிட கூடுதலான முறையில் தான் சென்று விட்டோம் என்பதை நிர்ணயித்துக் கொண்டு, இன்னும் அதிகமான பிற்போக்குத்தன்மை நிறைந்த பொருளாதார செயற்பட்டியலுக்கு திரும்பியது"; தொழிற்சங்கங்களோ மறுக்கும் காலகட்டத்தில் நுழைந்து பொருளாதாரச் சீர்திருத்த நலன்களை கைவிட்டு, அதன் நன்மைகள் வரத் தொடங்கிய நேரத்தில் மாறுதல்களை அகற்றவேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டது." இதன் விளைவாக, தொழிற்கட்சி தன்னுடைய சமீபத்திய வரலாற்றுடன் இயைந்து நிற்க வேண்டியதாயிற்று. தொழிற்சங்கங்கள், மாறுதல் தவிர்க்கமுடியாது என்பதை ஏற்று அதற்கேற்ப நெறியான செயற்பட்டியலை கொள்ளவேண்டும் என்று" கூறத்தலைப்பட்டனர்." முன்னாள் தொழிற்கட்சியின் முன்னணித் தலைவரான லிண்சே ரானர், தேர்தலுக்கு பின்னர், லாதமின் நிழல் அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்; தொழிற் கட்சி தான் எத்தகைய நிலைப்பாட்டைக் கொள்ளவேண்டும் என்று இப்பிரச்சினையில் நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் காரணம் கூறிவிட்டார். அது "போட்டியிடும் கட்சியாக, திறந்த சர்வதேசப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் தக்க முறையிலான தொழிலியல் உறவுகளை பற்றிய வடிவமைப்பையும் பாதுகாப்பு வலையையும் கொள்ளவேண்டும் என்றும், கட்சி உற்பத்தித்திறன் மேம்பட வகை செய்யவேண்டும் என்றும், மக்கள் பொருளாதார வாய்ப்புக்களை பெறுதல் வேண்டும் என்பதற்கு பாடுபடும் கட்சியாக இருக்கவேண்டும்" என்றும் வலியுறுத்தினார். இதற்கு லாதம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. "ஹாக் மற்றும் கீட்டிங் அரசாங்கங்களின் சீர்திருத்தங்களின் நலன்களை வளர்க்க கட்சி இன்னும் அதிகமாகப் பாடுபடவேண்டும்" என்றும், "தொழிற் கட்சியின் ஆரம்பமுயற்சிகளால் வருங்காலத்தை இன்னும் சிறப்பாக வளர்ப்போம்" என்றும் உறுதியாக இருந்தார். இப்பொழுது கூடுதலான முறையில் "போட்டிகள், உற்பத்தித்திறன், பெருகிவரும் சந்தைப் பொருளாதாரம், ஊக்கத் தொகைகளை அதிகரித்தல், இவை ஆஸ்திரேலிய பொருளாதார அமைப்பிற்குள் பங்குகளை கொண்டு இயைந்து நிற்கும் வகையில் ஒரு புதிய பொருளாதார சீர்திருத்தத்தைக் காண முன்னேறுவோம்" என்றும்" அவர் தெரிவித்தார். இதையே வேறுவிதமாகக் கூறினால், வருங்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால், தாராளவாதிகளைவிடக் கூடுதலான முறையில் நிதிச் சந்தைகளின் தேவைகளுக்கு தொழிற்கட்சி தான் தயாராக இருப்பதை நிரூபிக்கவேண்டும்; இந்த முன்னோக்கு இன்னும் தெளிவான முறையில் புதிய தொழிற்கட்சி தொழில்துறைச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டது. ஒரு புதிய "போட்டிச் சீர்திருத்தங்கள்" அலைக்கு அழைப்பு விடுத்திருந்த, உற்பத்தித்திறன் குழு கொடுத்த அறிக்கை ஒன்றைப் பெரிதும் பாராட்டி, அதன் தலைவர் "ஆஸ்திரேலியாவில் நாம் செய்யவேண்டிய அடுத்த உற்பத்தித் திறன் ஆதாயங்களை பற்றி அரசாங்கம் அசட்டையாக இருக்கிறது", என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கை தொழிற்கட்சி அரசாங்கத்தை "உரிய தரத்தில்" நிலைத்திருக்க உதவும் என்றும் "இத்துறையில் அதன் கொள்கைகளை இன்னும் வளர்க்கவும்" உதவும் என்றும் அறிக்கை தெரிவிப்பதாக ஸ்மித் வாதிட்டுள்ளார். தேர்தல் நெருக்கடிக்கு கட்சி தலைமை இன்னும் கூடுதலான முறையில் வலதுபுறம் செல்லவேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் விடையை காண முறைபட்டாலும், பழைய பாராளுமன்ற உறுப்பினரான பாரி ஜோன்ஸிடம் இருந்து கடுமையான வர்ணனைகள் வெளிவந்துள்ளன; இவர்தான் கட்சியின் தேசியத் தலைவராக நவம்பரில் வரவிருக்கிறார். இவர் ஹோவர்ட் விரும்பிய முறையில்தான் ALP தேர்தலில் போட்டியிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஈராக்கைப்பற்றியோ, காணாமற்போய்விட்ட பேரழிவு ஆயுதங்கள் பற்றியோ, "அரசாங்க நடப்பில் உண்மை" ஆகிய பிரச்சினைகள் பற்றி விவாதம் ஏதும் இல்லை. சமூக, அறிவார்ந்த நிலைப்பாடுகளின் நோக்கில் தொழிற் கட்சியுடைய கருத்துக்கள் கூட்டணியிலிருந்து பிரிக்க முடியாத வகையில் உள்ளன. நாம் ஒரு மிகக் குறுகிய நோக்கத்திற்காக பாடுபட்டுள்ளோம். இரண்டு கன்சர்வேடிவ் கட்சியில் ஒன்றிற்கு ஆதரவு தர வேண்டும் என்ற நிலையில் வாக்காளர்கள் உண்மையானதிற்குத்தான் நியாயமான விருப்பத்தை தெரிவித்துள்ளனர்." "ALP ஒர் இயந்திர கதியில் ஒவ்வொரு சில ஆண்டுகளிலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது; தேவையான ஆன்மிக நலன், அறநெறி முறைபற்றி அறிவார்ந்த வகையில் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஊட்டம் கொடுக்கவேண்டும்; முன்னேறும் போக்கை கொண்டு, நாட்டை படைப்புத்திறன், பெருந்தன்மை உடையதாக மாற்றும் வகையை கொள்ள வேண்டும். அனைத்தையும் ஈர்த்துக்கொள்ளும் செயல்பட்டியலை தொழிற்கட்சி கொள்ள வேண்டுமே ஒழிய ஒதுக்கித் தள்ளும் செயற்பட்டியல் கூடாது. நம்முடைய மரபுவகையிலான வாக்களாளர்களை கணிசமாக நாம் தற்பொழுது இழந்துள்ளோம்; அவர்கள் எப்பொழுதும் வாக்களித்திருந்த கட்சியில் இருந்து அவர்களை விரோதப்படுத்தியுள்ளோம். அவர்களை மீண்டும் நம்மிடையே அழைத்துக் கொளாவிட்டால், கட்சியில் இதயமும், மனமும் மடிந்து விடும்." என அவர் முடிக்கின்றார். உண்மை என்னவென்றால், தொழிற்கட்சி ஏற்கனவே சிறிதுகாலத்திற்குமுன் மடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இதுகாறும் கண்டிராத அளவு குறைந்த வாக்குகளை அக்டோபர் 9 அன்று அது பெற்றது ஏதோ வானத்திலிருந்து வரவில்லை. 1983 தேர்தலுக்குப் பிறகு முதல் ஹாக் அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்தே இந்தச் சரிவு தொடர்ந்த இப்பொழுது உச்சக்கட்டத்தை எய்தியுள்ளது. அப்பொழுது கிட்டத்தட்ட இரு வாக்காளர்களில் ஒருவர் தன் ஆதரவை தொழிற்கட்சிக்கு கொடுத்தார். இன்று மூன்றில் ஒருவர் அளிப்பது கூட கடினமாக இருக்கிறது. தொழிற்கட்சியின் முடிவு புறநிலையான போக்குகளில் வேர்களைக் கொண்டுள்ளது. சமூக நலன்களின் தேவைகளுக்காக இலாப முறையில் சில தடுப்புக்கள் தேவை எனக் கருதிய உழைக்கும் வர்க்கத்திடம் இருந்தும், மத்தியதர வர்க்கம், அறிவுஜீவிகளின் பிரிவுகள் சிலவற்றில் இருந்தும் ஆதரவைப் பெற்றிருந்த அதன் சமூக சீர்திருத்தத் திட்டம் இப்பொழுது பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை மற்றும் நிதியமைப்பானல் உடைக்ககப்பட்டுவிட்டது. ஜோன்சும் மற்றவர்களும் தொழிற்கட்சியின் நெருக்கடி அதன்பழைய உழைக்கும் வர்க்கத் தளத்திற்கும், அதை இன்னும் கூடுதலான மனிதாபிமான சமுதாய, அரசியல் நோக்கத்தை கையாண்டு பெறவேண்டும் என்ற கருத்துடைய தாராளவாத அறிவுஜீவிகள் தட்டுக்களுக்கும் இடையே உள்ள மோதலை ஒட்டி எழுத்தது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர். உண்மையில் எவ்விதமான மோதலும் இல்லை. ஈராக்கியப் போருக்கு தொழிற்கட்சி கொடுத்த ஆதரவு, ஹோவர்ட் அரசாங்கத்தின் பொய்யுரைகள் பற்றிய அதன் மெளனம், அகதிகள், தஞ்சம் கோருவோர் இவர்களை சிறையில் அடைத்ததற்கு அது கொடுத்த ஆதரவு ஆகியவை இதன் சமூகரீதியான பிற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து சிறிதும் தனிப்பட்டிருக்கவில்லை. இந்தக் கொள்கைகள் அனைத்தும் ஒரு பிற்போக்குவாத செயற்பட்டியலின் பல விரிவுகள்தாம். செய்தியூடக நிபுணர்கள் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், ஹோவர்டின் தேர்தல் வெற்றி ஈராக்கிய படையெடுப்பிற்கு ஆதரவு என்ற கருத்தையோ, அரசாங்கத்தின் பொய்களைப் பொருட்படுத்தவில்லை என்றோ கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதார சமூக கொள்கைகளுக்கு வளமான, திருப்தியடைந்துள்ள வாக்களாளர்களின் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது என்றோ பொருள் ஆகாது. மாறாக, இரு-கட்சி முறையின் கட்டமைப்பிற்குள் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்த முடியாத தன்மையைத்தான் முக்கியமாக காட்டுகிறது. உழைக்கும் வர்க்க இயக்கத்தின் புத்துயிர்ப்பு பழைய அமைப்புகளான தொழிற்கட்சி, தொழிற்சங்கங்கள் இவற்றின் மூலம் நடைபெறாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தி வந்துள்ளதின் முக்கியத்துவத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது; இது முதலாளித்துவ இலாபமுறையையே அகற்றும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டுள்ள ஒரு சோசலிச கலாச்சாரத்தை புத்துயிர்ப்பு செய்வதில் தான் தங்கியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டுள்ளதுபோல், "ஒரு சுயாதீனமான பரந்த சோசலிசக் கட்சியை உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாக அமைக்கப்படுவதற்கு தளராத, பொறுமையான, கொள்கை ரீதியான போராட்டத்தினை தவிர வேறுபதிலீடு ஒன்றும் கிடையாது." முற்றும். |