World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Bush administration backs new power-grab by Pakistan's military strongman பாக்கிஸ்தானின் இராணுவ வல்லாட்சியாளரின் புதிய அதிகார பறிப்பை புஷ் நிர்வாகம் ஆதரிக்கிறது By Vilani Peiris பாக்கிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரி- ஜனாதிபதியான ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் ஆயுதப்படைகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து கீழிறங்குவதாக உறுதி அளித்ததை கைவிட்டபொழுது, அவர் ''மக்களது விருப்பங்களுக்கு'' அடிபணிவதாக கூறிக் கொண்டதை அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் இதர மேற்கு நாடுகள் ஆதரவுடன் நாடகபாணி நடவடிக்கையாக்கினார். பாக்கிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரி- ஜனாதிபதியான ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் மேற்கொண்டுள்ள நாடகபாணி நடவடிக்கை போக்குகளை அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் இதர மேற்கு நாடுகள் ஆதரித்து நிற்பதால் அவர் ''மக்களது விருப்பங்களுக்கு'' அடிபணிந்து பாக்கிஸ்தானின்; ''ஆயுதப்படைகள் தலைமை பொறுப்பை'' விட்டுவிடுவதாக முன்னர் அறிவித்திருந்ததை இப்போது இரத்துசெய்துவிட்டார். முஷாரஃப் ஆட்சி மேற்கொண்ட பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும், அரசாங்க கொள்கைகளை வகுப்பதில் இராணுவத்தின் பங்களிப்பை மேலும் உயர்த்துவதற்கும் வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்தங்களை அப்படியே மாற்றமின்றி நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள வகைசெய்யும் ஒரு பேரத்தின் ஓர் அங்கமாக சென்ற டிசம்பர் மாதம் முஷாரஃப் பாக்கிஸ்தானின் ஆயுதப்படைகள் (COAS) தலைமைப் பொறுப்பிலிருந்து 2004- இறுதிவாக்கில் விலகிக்கொள்வதாக உறுதியளித்தார். அந்த நேரத்தில் முஷாரஃப்பின் உறுதிமொழியை மேற்குநாட்டு அரசாங்கங்களும், மற்றும் ஊடகங்களில் பெரும் பகுதியும் அவரது உறுதிமொழி ''முழுமையான சிவிலியன் ஆட்சியையும் மற்றும் ஜனநாயகத்தையும்'' திரும்பக்கொண்டு வருகின்ற ஒரு சரியான நடவடிக்கை என்று பாராட்டினர். ஆனால் அவரது மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு அரணாக விளங்குகின்ற இராணுவத்தின் மீது தனது பிடிப்பு எந்த வகையிலும் பலவீனப்பட்டாலும் அதனால் ஆபத்து ஏற்படுமென்று முஷாரஃப் அதிகரித்த அளவில் கவலைப்படலானார். பல மாதங்களாக அவரும் மற்றும் அவரது உதவியாளர்களும் சென்ற டிசம்பர் மாதம் அளித்துள்ள உறுதிமொழியை அவர் புறக்கணிக்க முடியுமென்று ஆலோசனைகளை கூறிவந்தனர். முஷாரஃப் அமைச்சரவைக்கு ஆதரவை உறுதிப்படுத்த விதிமுறைகள் திருத்தி எழுதப்பட்ட ஒரு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கிஸ்தானின் நாடாளுமன்றம் அண்மையில், "2004 ல் ஜனாதிபதி மற்றொரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள" வகைசெய்யும் சட்டத்தை எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பிற்கிடையே நிறைவேற்றியது. பேனசிர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு விசுவாசமுள்ள பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான முத்தாஹிதா மஜிலிசே அமல் அல்லது MMA ஆகிய கட்சிகள் அடங்கிய நாடாளுமன்ற எதிர்கட்சிகள் அந்த சட்டம் முனைவரைவை கண்டித்தன- அந்த சட்ட முனைவரைவு ''தற்போது பாக்கிஸ்தான் ஜனாதிபதி பதவி வகிப்பவர், பாக்கிஸ்தான் சேவையில் மற்றொரு பதவியை வகிக்க வகைசெய்கிறது'', அது - சட்டவிரோதமான மற்றும் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கண்டித்தன. அக்டோபர் 14-ல் நாடாளுமன்றத்தின் முன் அந்த சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்ட போது துணை சபாநாயகர் விவாதம் நடப்பதற்கு அனுமதி மறுத்தார், அதனால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ய ஆத்திரமூட்டப்பட்டன. அதேபோன்று பாக்கிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் இராணுவ ஆதரவு ஆளும் கட்சியை சார்ந்த பாக்கிஸ்தான் முஸ்லிம்லீக் -Q வைச்சார்ந்த ஆளும்கட்சி செனட்டர்கள், அந்த மசோதாவை கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தபின்னர் மசோதாவை நிறைவேற்றினர். முஷாரஃப் ஜனாதிபதி என்ற போர்வையில் அந்த சட்டத்தில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக செயல்படத் தொடங்கும்; ஞாயிறன்று ரம்ஜான் நோம்பு முடிந்ததும் அவர் அந்த சட்டத்தில் கையெழுத்திடுவார் என்று பாக்கிஸ்தான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத MMA அந்த மசோதாவை குறிப்பாக மிக ஆவேசமாக கண்டிக்கிறது. இது அந்த அமைப்பின் முந்திய பங்களிப்பை மூடிமறைப்பதற்கான ஆவேசக்குரலாகும். 1999-ல் அவர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி செய்து ஆட்சியை பிடித்தபின்னர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தனது ஜனாதிபதிபதவியை 2007-வரை நீடிக்கவும் மற்றும் ஒரு புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உருவாக்கி அரசாங்கக் கொள்கைகளை முடிவு செய்வதில் இராணுவத்திற்கு ஒரு நிரந்தர திட்டவட்டமான பங்களிப்பை தருவதற்கும், வகைசெய்யும் சட்டக்கட்டமைப்பு கட்டளை (LFO) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு முஷாரஃபின் கரம் வலுப்படுத்தப்படுவதில் MMA அப்போது தந்த ஆதரவை மூடிமறைப்பதற்காக இப்போது கண்டனப்போக்கை மேற்கொண்டிருக்கிறது. சென்ற டிசம்பரில் LFO விற்கு வாக்களிப்பதற்காக MMA இதர எதிர்கட்சிகளுடன் தனது உறவை முறித்துக்கொண்டது. முஷாரஃப்பிற்கு ஆதரவு தந்ததை நியாயப்படுத்தியது. தனது ஆதரவிற்கு கைமாறாக ஜனாதிபதி 2004 டிசம்பர் 31-உடன் பாக்கிஸ்தான் இராணுவ முப்படைகள் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் உறுதி மொழியை நிறைவேற்றுவார். அந்த உறுதிமொழியை MMA பெற்றிருக்கிறதென்று அப்போது சமாதானம் கூறப்பட்டது. உண்மை என்னவென்றால் முஷாரஃப் ஆட்சி மிகப்பெருமளவில் முற்றுகையிடப்பட்டுள்ள நெருக்கடியிலுள்ளது. IMF பாணி பொருளாதார சீரமைப்பினாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததற்கு ஆதரவு தெரிவித்ததாலும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களிடம் எதிர்ப்பை தீவிரமடையச்செய்துள்ளது. இராணுவத்தலைமை பொறுப்பை தான் விட்டுவிட்டால் பயங்கரவாதத்தின் மீதான போர் முன்னெடுத்துச் செல்வதற்குரிய தனது அதிகாரம் குறைந்துவிடுமென்றும் இந்தியாவுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் சீர்குலைந்துவிடுமென்றும் முஷ்ராஃப் கூறுகிறார். அதே நேரத்தில் அமெரிக்காவின் தீவிர நிர்பந்தத்தின் கீழ் முஷாரஃப் பூகோள அரசியல் மற்றும் உள்நாட்டு மூலோபாயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியிருப்பது பாக்கிஸ்தானின் ஆளும் மேல் தட்டினருக்குள் கடுமையான பிளவுகளை உருவாக்கியிருக்கிறது. மற்றும் பாரம்பரிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டாளிகள் மற்றும் இஸ்லாமிய மதபோதகர்களுக்கிடையிலும் இராணுவத்திற்கிடையிலும், கடுமையான மோதல்கள் அதிகரித்துவருகின்றன. முதலாவதாக தலிபான் ஆட்சியோடு தனது உறவுகளை இரத்து செய்வதற்கு இஸ்லாமாபாத் நிர்பந்திக்கப்பட்டது. அதற்குப்பின்னர், இந்தியாவோடு ஒரு மூலோபாய பங்காளி உறவை உருவாக்குவதற்கான தனது முயற்சியை வெட்டி முறிக்கின்ற வகையில் இந்திய- பாக்கிஸ்தான் மோதல் நடைபெற்று வருகிறதென்றும் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சிகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு ஊற்றுக்கால் என்றும் புஷ் நிர்வாகம் கருதியதால், வாஷிங்டன் புது தில்லியுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபடுமாறு முஷாரஃப்பிற்கு அழுத்தத்தை கொடுத்தது. என்றாலும் இந்தியாவிற்கெதிரான போராட்டம் நீண்ட நெடுங்காலமாக பாக்கிஸ்தான் முதலாளித்துவ வாதிகளின் தேசியவாதக் கொள்கைகளுக்கு உயிர்நாடியாகவும், மற்றும் நாட்டின் விவகாரங்களில் ஒரு முன்னணிப்பங்கு வகிக்க இராணுவம் கோரிக்கை விடுப்பதை நியாயப்படுத்தும் ஒரு பிரதான அம்சமாகவும், கருதப்பட்டு வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய பீதி உணர்வுகளும் வாஷிங்டனை முஷாரஃப்பிற்கு நிர்பந்தம் கொடுத்து மதரஸாக்கள் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரவும் மற்றும் வேறுவகைகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அரசியல் செல்வாக்கை கட்டுப்படுத்தக்கோரியும் நிர்பந்தம் கொடுத்தது. முஷாரஃப் தொடர்ந்து இந்த சக்திகளோடு தனது உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். பலூச்சிஸ்தான் உட்பட பாக்கிஸ்தானின் இரண்டு மாகாணங்களில் MMA ஆட்சிபுரிந்து வருகிறது. பலுசிஸ்தானில் முஷாரஃப் ஆதரவு PML(Q) வுடன் கூட்டணியில் உள்ளது. ஆனால் இந்த சமநிலைப்படுத்தும் நடவடிக்கை பெரும் அளவில் சிக்கலுக்கும் ஆபத்தான நிலைக்கும் சென்று கொண்டிருக்கிறது. COAS பதவியை முஷாரஃப் கைவிடாதிருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்குள்ளும் அதிருப்தி உருவாகிவிடுமென்ற அவரது அச்சமாகும். இரண்டுமுறை சென்ற டிசம்பரில் முஷாரஃப்பை கொலை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இராணுவத்திற்குள்ளிருக்கும் சக்திகளின் தார்மீக ஆதரவு இல்லாமல் நடைபெற்றிருக்க முடியாது என்று பரவலாக கருதப்படுகிறது.ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலைவாழ் இனங்கள் வாழ்கின்ற பகுதிகளில் தலிபான் போராளிகள் மற்றும் அல் கொய்தா அமைப்பைச் சார்ந்தவர்களென்று கூறப்படுபவர்களுக்கு எதிராக பாக்கிஸ்தான் ஆயுதப்படைகள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அனைத்துப்பிரிவுகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பயங்கரவாதிகளை தேடுகின்ற தேடுதல் வேட்டை ஒரு காலனி ஆதிக்கப்பாணியில் நடைபெற்று வருகிறது. தெற்கு Wazirstan- ல் துருப்புக்கள் வீட்டுக்குவீடு தேடுதல் வேட்டைகளை நடத்திவருகின்றன. கிராமங்கள் மற்றும் ஒட்டுமொத்த மலைவாழ் இனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. சென்ற மார்ச் மாதம் தெற்கு Wazirstan பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவம் தனது தாக்குதலை நடத்தத் தொடங்கிய பின்னர் இதுவரை சுமார் 400- பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிர்வாகம் சர்வாதிகாரி முஷாரஃப்பை பயங்கரவாதத்தின் மீதான தனது போரில் தனது முக்கிய கூட்டாளி என்று திரும்பத்திரும்ப பாராட்டிவருகிறது. அவரது சர்வாதிகார ஆட்சிக்கு தனது ஆசிகளை தந்துவருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாக்கிஸ்தானுக்கு ''பெரிய நேட்டோ சேராத நண்பன்'' என்ற பட்டத்தை வெகுமதியாக தந்திருக்கிறது. ''ஆக முஷாரஃப் கடைசியாக மேற்கொண்டுள்ள ஜனநாயக விரோத அதிகாரப்பறிப்பு நடவடிக்கைக்கு புஷ் நிர்வாகம் தனது ஆதரவை தந்திருப்பதில் கிஞ்சிற்றும் வியப்பிற்கு வழியில்லை. ஜனநாயகத்தை "நோக்கி முன்னேறுவதில்" முஷ்ராஃப் தனது உறுதிமொழிகளை மீறி ஆயுதப்படைகள் தலைமை பொறுப்பை ஏற்பது எந்தவகையிலும் பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரியான Richard Boucher ''பாக்கிஸ்தானில் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவது இந்த நடவடிக்கையை மட்டுமே நம்பியிருக்கவில்லை...... நாங்கள் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல ஊக்குவித்து வருகிறோம், மற்றும் பாக்கிஸ்தானியர் முன்னேற்றப்பாதைக்கு வழிகாண்பதை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்துவருகிறோம்'' என்று குறிப்பிட்டார். காமன்வெல்த் பொதுச்செயலாளர் டொனால்டு மக்கின்னான் அக்டோபர் 21-ல் பாக்கிஸ்தான் விஜயம் செய்தார். மேலும் வெளிப்படையாகவே தனது ஆதரவை தெரிவித்தார். முஷாரஃப் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டை தன் கையில் வைத்துக்கொண்டிருப்பது, ''நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளுமானால் அது ஜனநாயக முறைதான்'' என்று அறிவித்தார். 1999- இராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் பாக்கிஸ்தான் காமன்வெல்த் அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் தான் அது இரத்து செய்யப்பட்டு மீண்டும் காமன் வெல்த்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. "ஜனநாயகத்தை நோக்கி" பாக்கிஸ்தான் நடைபோடுகிறதா? என்பது தொடர்பான காமன்-வெல்த்தின் மதிப்பீடுகளை மறு பரிசீலனை செய்வதற்கான எந்த கருத்தையும் மக்கின்னன் ஏற்றுக்கொள்ளவில்லை. பாக்கிஸ்தானிலுள்ள ஆஸ்திரேலிய தூதர் Zorica Mccarthy, Mcknnon- ன் கருத்துக்களை வழிமொழிந்தார் ''ஆஸ்திரேலியர்களாகிய நாங்கள் ஜனாதிபதி முஷாரஃப்பிற்கும், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பாக்கிஸ்தானில் மட்டுமல்ல, மற்ற நாடுகளிலும் நிலவுவதற்கெதிராக அவர் மேற்கொண்டுள்ள கொள்கைகளுக்கு பெருமதிப்பு வைதிருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார். |