World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Man commits suicide at World Trade Center site to protest Iraq war and Bush reelection

ஈராக்கியப் போர், புஷ் மறுதேர்தல் இவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உலக வர்த்தக மைய வளாகத்தில் ஒருவர் தற்கொலை

By Jamie Chapman
9 November 2004

Back to screen version

ஆண்ட்ரூ வீல் என்ற ஒரு 25-வயது நிரம்பிய மனிதன், நவம்பர் 6ம் தேதி, செப்டம்பர் 11, 2001க்கு முன் உலக வர்த்தக மைய வளாகம் இருந்த இடத்தில் தன்னேயே சுட்டுக்கொண்டு இறந்தார். தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும்கூட தற்கொலை செய்து கொள்ளுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் ஈராக்கியப் போர் மற்றும் சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி புஷ் மறுதேர்தல் இவற்றை எதிர்க்கும் வகையில் இருந்திருக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஜோர்ஜியா பல்கலைக்கழக ஆய்வு மையத்தில், ஒரு அழைப்பு மையத்தின் (Call Center) பொறுப்பைக் கொண்டிருந்த, வீலுடைய மேற்பார்வயாளர் செய்தியாளரிடம் கூறினார்: "இது உறுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலான செயல்தான். ஏன் தற்கொலையை அவர் மேற்கொண்டார் எனபது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் எங்கு அவர் செய்து கொண்டார் என்பது சிறப்பு அடையாள முறையில் ஆனது."

அவருடன் வேலைபார்த்து வந்த மற்றொருவரான ஸ்டேசி சுதெர்லாந்த், இதை ஏற்கும் வகையில் தெரிவித்தார்: "இதை நான் ஓர் அரசியில் அறிக்கையாகக் காண்கிறேன். அவர் போருக்கு எதிராகத் தீவிரமாக இருந்திருந்தார்."

நீண்ட காலமாக சுத்தப்படுத்தப்பட்டு, முட்கம்பி வேலியால் சூழப்பட்டுள்ள, புதிய கட்டடவேலைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முந்தைய உலக வர்த்தக மைய வளாகப் பகுதியில் ஓர் உணவு விடுதித் தொழிலாளி ஒருவரால் வீலின் சடலம் காணப்பட்டது. தற்கொலையுண்டவர் 15 அடி உயரம், வேலிப்பகுதி உடைய, எப்பொழுதும் காவலுக்குட்பட்டிருந்த பகுதிக்கு எவ்வாறு ஏறிச் சென்றார் என்பது பற்றி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஈராக்கிய போரை கடுமையாக எதிர்ப்பவராக இருந்ததைத் தவிர, புஷ்ஷின் பொதுவான கொள்கைகளையும் வீல் எதிர்த்துவந்தார்; குறிப்பாகச் சுற்றுச் சூழலில் அவருடைய கொள்கைகள் பற்றி இவருக்கு உடன்பாடு இல்லை. எளிதில் மன உளைச்சலுக்கு இடம் கொடுக்காத, எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் மனம் உடையவராகத்தான் அவருடைய நண்பர்களும் சக ஊழியர்களும் அவரை அறிந்திருந்தனர்.

ஜூன் மாதம் இவருக்கும், அயோவாவில் சிம்சன் கல்லூரியில் நடனக் கலை பயின்று வரும் மேல்நிலை மாணவியான 21 வயதான Audrey Grieme என்பவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருந்த ஆய்வு மையத்தில் இவருக்குப் பதவி உயர்வு தரவிருப்பதாகக் கூறப்படுகிறது; ஆனால் அவர் ஓர் சமையற்காரராக வேலை பார்க்கும் எண்ணத்துடன் ஒரு சமையற்கலைப் பள்ளியில் சேர விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய முழுநேர வேலையைத் தவிர அவர் உள்ளூர் உணவு விடுதி ஒன்றில் பகுதி நேர வேலை ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

புதன்கிழமையன்று, வீல் பணிக்கு வராததைத் தொடர்ந்து அவருடைய நண்பர்களும், சக ஊழியர்களும் அவர் ஜோர்ஜ் புஷ், ஜனநாயக வேட்பாளரான ஜான் கெர்ரியைத் தோற்கடித்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்தனர். அதற்கு அடுத்த சில நாட்களில் பலமுறையில் அவருடைய பெற்றோர்களிடம் இருந்தும், நிச்சயமாகியிருந்த மணப்பெண்ணும் விடுத்த தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதில் இல்லாமல் போகவே, எச்சரிக்கை உணர்வு எழுந்தது.

இந்த இளைஞரை எத்தகைய குறிப்புடைய எண்ண வழிவகை உந்தி, வாழ்க்கையை சோகமாக முடித்துக் கொள்ளத் தூண்டியிருந்தாலும், இந்தச் செயலின் முக்கியத்துவத்தை அசட்டை செய்ய முடியாது. போரைப் பற்றி வீலின் உணர்வுபூர்வமான அதிர்ச்சி, பெருந்திகைப்பு, நாட்டின் நிலைமை, இரண்டாம் புஷ் நிர்வாகம் மீண்டும் வரக்கூடிய சூழ்நிலை, ஆகியவை இவரைப் பொறுத்தவரையில் மிகக் கூடுதலாக, அறிவிற்குப் பொருந்தா வகையில் உயர்ந்தது; மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களும் தேர்தலுக்குப் பின் இத்தகைய உணர்வில் பங்கு கொண்டுள்ளனர்.

புஷ் தேர்தல் முகாம், உலக வர்த்தக மைய கட்டிட தோற்றங்களை சிடுமூஞ்சித்தனமாக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது. அச்சத்தைக் கிளப்பிவிடுதலுக்கு அது கொண்ட முயற்சி, புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" குறித்து கெர்ரி கொடுத்த ஆதரவினால் அதிகமாக, இப்பிரச்சாரத்தின் மையக் கருத்தாக மாறி, குழப்பம், தப்பெண்ணங்கள் மற்றும் பிற்போக்கான சமய உணர்வுகளை தூண்டிவிட்டன. ஜனநாயகக் கட்சியினர், புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினரது தீவிர வலதுசாரித் திட்டங்களுக்கு உண்மையான மாற்றை வழங்க முன்வரவில்லை.

வீலுடைய தற்கொலை, போருக்கு எதிரான முந்தைய அடையாள அறிவிப்பைத்தான் பிரதிபலிக்கிறது. 1965ம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்கத் தலையீடு தேவை என்ற கருத்து தீவிரமாகக் கொள்ளப்பட்டபோது, Quaker இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுடையவரும், மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமான நோர்மன் மொறிசன் என்பவர், லிண்டன் ஜோன்சனுடைய பாதுகாப்பு மந்திரி றொபர்ட் மக்நமாராவின் பென்டகன் அலுவலகத்திற்கு முன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய ஜன்னல் வழியாக அந்தக் கொடூரமான நிகழ்வு முழுவதையும் மக்நமாரா பார்த்துக் கொண்டிருந்தார்.

வியட்நாமிய கிராமங்களை நாபாம் குண்டுகள் மூலம் தாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மொறிசன் செய்து கொண்ட எதிர்ப்புத்-தற்கொலை, பின்னர் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக அமெரிக்காவின் மில்லியன் கணக்கான மக்களும், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களும் நடத்திய இயக்கம், பின்னர் மிகப் பெரிய முறையில் தோன்றியதற்கு ஒரு முன்னறிகுறி காட்டலாய் இருந்தது.

See Also:
After the 2004 elections: the political and social crisis will intensify
[3 November 2004]
On eve of 2004 election: US faces unprecedented social conflict
[1 November 2004]
Support the Socialist Equality Party in the 2004 US elections
[20 September 2004]


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved