World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆபிரிக்காUN hints at possible intervention in northern Uganda's conflict உகாண்டாவின் வடக்குப்பகுதி மோதலில் தலையிடுவதற்கான சாத்தியக்கூறை ஐ.நா கோடிட்டுக் காட்டுகிறது By Brian Smith உகாண்டா வடக்குப்பகுதி நிலவரம் ''உலகிலேயே மிகப்பெரிய மனிதநேய அவரச உதவி புறக்கணிப்பு'' நடவடிக்கையாகும் என்று ஒரு ஐ.நா அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் அதை சூடானின் டார்பர் மண்டலத்து நெருக்கடியோடு ஒப்புநோக்கியுள்ளார். மனிதநேய விவகாரங்களுக்கான ஐ.நா துணைப்பொதுச்செயலாளரும் அவசர நிவாரணப் பணியின் ஒழுங்கமைப்பாளரும்மான Jan Egeland நிலவரம் ஒரு ''தார்மீக நெறிக்கு'' எதிரான கொடூர செயலாகும் என்று கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்புக்குழுவை நோக்கி Egeland வெற்றாரவார கேள்விக்கணைகளை எழுப்பியுள்ளார்: ''வேறு எங்கு 20,000- குழந்தைகள் கடத்தப்பட்டிருக்க முடியும்? வேறு எங்கு உலகிலேயே 90- சதவீதம் மக்கள் பெரிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்திருக்க முடியும்? வேறு எங்கு பயங்கரவாத கிளர்ச்சி இயக்கத்தில் 80- சதவீத குழந்தைகள் இடம் பெற்றிருக்க முடியும்?'' Darfur பெற்றிருப்பதில் மிகக்குறைந்த அளவிற்கான சர்வதேச உதவிதான் வடக்கு உகாண்டாவிற்கு கிடைத்திருக்கிறது. Darfur நெருக்கடி மிக அண்மைக்காலத்தின் நடவடிக்கைதான். இந்த ஒப்புநோக்கலை கம்பாலா தள்ளுபடி செய்திருக்கிறது. சூடானைப்போன்று இங்கு அரசாங்க தலையீடு இல்லை என்று கம்பாலா கூறியுள்ளது. உகாண்டாவிற்கான ஐ.நா தூதர், Egeland- ன் விமர்சனங்கள் வெளியிடப்பட்ட நேரம் நல்லதல்ல. "கிளர்ச்சிக்குழுவிற்கு ஒரு தேவையற்ற ஊக்குவிப்பை தருகின்ற வகையில்" இந்தப்பிரச்சனை திடீரென்று நடுநாயக கட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறினார்.மத்திய அரசாங்கம் வடக்குப்பகுதியை புறக்கணிப்பதாக கூறிக்கொண்டு தொடக்கத்தில் அதற்கெதிராக ஆரம்பித்த கிளர்ச்சி இறுதியாக உகாண்டாவின் வடக்குப்பகுதி மக்களுக்கெதிரான மிகக்கொடூரமான மோதலாக மாற்றப்பட்டிருக்கிறது. கிளர்ச்சிப்படைகள் Lord's Resistance Army (LRA) என்ற பெயரில் இயங்கிவருகின்றன. அதில் சில ஆயிரம் துருப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு தன்னைத்தானே கிறிஸ்துவ தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் ஜோசப்கோனி மக்களது பாரம்பரிய மதநம்பிக்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அச்சத்தை வைத்து அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உகாண்டாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள, அக்கோலி மக்களது பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டாலும், அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை. அக்கோலி மக்கள்தான் அவரது கொடூரமான நடவடிக்கைகளின் நேரடி தாக்கத்திற்கு அதிக அளவில் இலக்காகின்றனர். இவற்றுள் தனது இராணுவத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக திட்டமிட்டு குழந்தைகளை கடத்திசெல்வது மற்றும் அதற்குப்பின்னர் அவர்களை மூளைச் சலவை செய்து கற்பழித்து மற்றும் சித்திரதை செய்வது, ஆகிய கொடூரமான நடவடிக்கைகள் அடங்கும். தப்பி ஓட முயலுபவர்கள் அல்லது சிறிய குற்றங்களைச் செய்பவர்கள்கூட மிதிக்கப்படுகிறார்கள், உதைக்கப்படுகிறார்கள் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர் அல்லது தங்களது சொந்த வாழ்விற்காக உந்தப்படுகிற மற்ற குழந்தைகளால் கடித்துக்குதறப்பட்டு கொலைசெய்யப்படுகின்றனர். பிரிட்டனில் இருந்து வெளிவரும் அறிவியல் இதழான Lancet- ல் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு ஆய்வின்படி, அவர்கள் ஆய்வு செய்த 300- குழந்தைகளில் 77- சதவீத குழந்தைகள் மற்றொருவர் கொல்லப்படுவதை நேரில் பார்த்திருக்கின்றனர். 39-சதவீத குழந்தைகள் மற்றொருவரை கொன்றிருக்கின்றனர் மற்றும் 39- சதவீத குழந்தைகள் மற்ற குழந்தைகளை கடத்தியிருக்கின்றனர். மூனறில் ஒரு பங்கு பெண் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டிருக்கின்றனர் மற்றும் 18- சதவீத பெண் குழந்தைகள் காவலில் இருக்கும்போது குழந்தைகளை பெற்றிருக்கின்றன. உகாண்டாவில் UPDF அருகாமையிலுள்ள சூடானில் இருந்த LRA முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தி எல்லைக்கப்பால் விரட்டிய பொழுது 2002-க்கு பின்னர் வடபகுதி குழந்தைகள் கடத்தப்படுவது மும்மடங்காகிவிட்டது. குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்துவிட்ட காரணத்தினால் "இரவு நேர நடைபயிலுநர்களாக ஆவதன் மூலம் இந்த மண்டலத்து குழந்தைகள் கடத்தப்படுவதை தவிர்க்கின்றனர். 40,000 முதல் 50,000- குழந்தைகள் இரவு நேரத்தில் மைல் கணக்காக நடந்து பாதுகாப்பான நகரங்களுக்கு செல்கிறார்கள். இங்கு வராண்டாக்களிலும் பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும், வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் இரவில் தூங்கிவிட்டு காலையில் தங்களது கிராமங்களுக்குத் திரும்புகிறார்கள். பலர் சுகாதார கேடான சூழ்நிலைகளில் திறந்த வெளியில் கொசுக்கடிகளுக்கிடையில் படுத்துத்தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக மலேரியா, வாந்தி பேதி, சொறிகள், சுவாச நோய்கள் ஆகியவற்றிற்கு பெருமளவில் இலக்காகின்றனர். வட பகுதியில் சுகாதார பராமரிப்பு கட்டுக்கோப்பு சீர்குலைந்துவிட்டது. World Vision International (WVI) என்கிற சர்வதேச அமைப்பு தந்துள்ள ஒரு அறிக்கையின்படி, உகாண்டாவின் வட பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கிற மோதல்களில் பலியாகிறவர்களைவிட ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோய்களுக்கு பலியாகியிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் அவை இரண்டிற்கும், தெளிவான தொடர்புகள் உள்ளன. இந்த மோதலில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான Gulu பகுதியில் எய்ட்ஸ் நோய்களால் 69-சதவீதம் பேர் மடிந்திருக்கின்றனர். இராணுவ மோதலில் நேரடியாக கொல்லப்பட்டவர்களைவிட இது மும்மடங்கு அதிகமென்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உகாண்டாவில் சராசரியாக 6.3- சதவீதம் பேர் எய்ட்ஸ் நோய்க்கு இலக்காகின்றனர். ஆனால் Gulu வில் 11-சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தப்போரினால் இடம்பெயர்ந்து செல்லுகின்ற பலர் ஆதரவற்றவர்களாக விடப்படுவதால் பல பெண்கள் உணவு அல்லது பணம் மற்றும் இதர பொருட்களுக்காக "உயிர்வாழ்வதற்காக பாலியல் உறவுகளில்" ஈடுபடவேண்டிய நெருக்கடி ஏற்படுவதால் எய்ட்ஸ் நோய்க்குறிகள் பெருகிவருவதாக World Vision அமைப்பு நம்புகிறது. பாதுகாப்பான நகரங்களை தேடிச்செல்கின்ற "இரவுப் பயணிகளான்" இளம் பெண்களும், அடிக்கடி கற்பழிக்கப்படுகின்ற சம்பவம் நடைபெறுகின்றது. இந்தக்கண்டம் முழுவதிலும் எய்ட்ஸ் சாவுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து கொண்டிருப்பதால் ஏராளமான அனாதைகள் உருவாகி விடுகின்றனர். அவர்கள் சுரண்டப்படுகிறார்கள் அல்லது LRA போன்ற உள்ளூர் சேனைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. ''பயங்கரவாதிகளே பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள்தான்'' என்று World Vision- குறிப்பிட்டிருக்கிறது. உகாண்டாவில் மக்கள் தொகை 25- மில்லியன், இதில் ஏறத்தாழ 2-மில்லியன் பேர் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கம்பாலாவிற்கு வடக்கே 400- கி.மீ அப்பால் உள்ள பப்போ அகதிமுகாம்தான் மிகப்பெரியது. அதில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 62,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். சூறைக்காற்று, மழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் தற்காலிக குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன, உணவுப்பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன மற்றும் வயல் வெளிகளும் தானியங்கிகளும் அழிவுக்காளாகின. மூன்று பள்ளிக்கூடங்கள் மற்றும் முகாமின் மருத்துவ நிலையம் ஆகியவையும் சேதமடைந்தன. UPDF -ம் அதன் கொடூரமான ஊழல் அதிகாரிகளும் இந்த மோதல்கள் நீடிப்பது தங்களது லாபத்திற்கான ஒரு வாய்ப்பு என்று கருதி அதை நீடிக்கவே விரும்புகின்றனர். அதில் மகிழ்ச்சியடைகின்றனர். LRA-ஐ போன்று UPDF- ம் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்கிறது. இவர்கள் பெரும்பாலும் LRA- ன் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் ஆவர்.ஜனாதிபதி யோவேரி முசவேனி அரசாங்கம் அக்கோலியில் மிகக்குறைந்த அளவிற்கு நடைபெற்றுவரும் கிளர்ச்சி குறித்து மன நிறைவடைகின்றனர். ஏனென்றால் அது அவர்களை கம்பாலா அரசியலில் இருந்து ஒதுக்கிவைக்க முடிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான மில்டன், ஓபோட் மற்றும் இடி அமீன். ஆகியோரது முந்திய ஆட்சிகளில் நடந்ததைப்போல் வடபகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்து விடக்கூடும் என்ற அச்சத்தை பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை முசவேனி திரட்டிவருகிறார். மேற்சொன்ன இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் கொடூரச் செயல்களை புரிவதில் பிரபலமானவர்கள் என்றாலும் தனது பாரம்பரிய ஆதரவு அடித்தளங்களான மேற்கு மற்றும் மத்திய உகாண்டாவில் நிலவுகின்ற பிளவுகளால் வடபகுதியின் வாக்குகளையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் மூசவேனிக்கு ஏற்படலாம். விரைவாக கோனி சரணடைவாரானால் அவருக்கு பொது மன்னிப்பு அளிக்க அண்மையில் அவர் முன்வந்தார். இராணுவத் தலையீடு வடக்கு உகாண்டாவின் 1.6- மில்லியன் அகதிகளுக்கும் உணவு வழங்க இயலாக நிலை தனக்கு விரைவில் ஏற்பட்டுவிடுமென்று ஐ.நா உலக உணவுத்திட்டட (WFP) அமைப்பு அறிவித்துள்ளது. 2004-ல் மட்டுமே 112- மில்லியன் டாலர்கள் உதவி வழங்குமாறு ஐ.நா கேட்டுகொண்டது. இதில் பெரும்பகுதி உகாண்டாவின் வடபகுதியில் WFP வழங்குவதற்கான உதவிதான் மருந்துகளும், தற்காலிக குடியிருப்புக்களும் இதில் அடங்கும். உகாண்டா ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்புக்களில் இருந்து ஒரு வெளிநாட்டு இராணுவத்தலையீட்டுக்கு கோரிக்கைகள் வந்திருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்பினரான பிரிட்டனின் தூதர் சர் எமிர் பாரிஜோன்ஸ் உகாண்டாவில் மனிதநேய முயற்சியை பாதுகாப்பதற்கு ஆபிரிக்க யூனியன் மற்றும் உகாண்டா படைகள் தலையிடுவதை ஆதரித்திருக்கிறார். ஆனால் எந்த மேற்கு நாட்டு இராணுவ தலையீடும் நேரடியாகவோ அல்லது பதிலீட்டுப்படைகள் மூலமோ நடத்தப்பட்டால், ஏகாதிபத்திய அரசுகளின் சூறையாடல் நோக்கங்களை மேலும் கொண்டு செல்வதற்கே அவை பயன்படுத்தப்படும். சூடானில் Darfur மண்டலத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எதிரொலிக்கிற வகையில் உகாண்டாவில் தலையீடு தொடர்பான முயற்சிகள் நடந்து வருகின்றன. மேற்கு நாடுகளின் ஆதரவோடு ஆபிரிக்க யூனியனின் படைகள் சூடானில் ஒரு முக்கியமான கட்டத்தில் தலையிட்டன. மனிதநேய முயற்சிகளை பாதுகாக்கும் நோக்கோடு தென்பகுதி சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நேரத்தில் இந்த இராணுவத்தத்தலையீடு நடந்தது. வரலாற்று அடிப்படையில் பக்கத்துநாடான சூடான் LRAவை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவைப்போன்று உகண்டா கார்ட்டூமிற்கு எதிராக செயல்படும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தை (SPLA) ஆதரிக்கிறது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததை ஏற்றுக்கொண்ட சில ஆபிரிக்க நாடுகளில் உகாண்டாவும் ஒன்று. SPLA- ம், கார்ட்டூமும் ஒரு அமெரிக்க தரகு வேலை அடிப்படையிலான சமாதான உடன்படிக்கைக்கு வருகின்ற நிலைக்கு வந்திருக்கின்றன. அந்த உடன்படிக்கை நாட்டின் தென்பகுதி எண்ணெய் கிணறுகளில் மேற்கு நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெருமளவில் வாய்ப்புக்களை வழங்க வகை செய்யும். சென்றவாரம் உகாண்டா சுரங்கங்கள் அமைப்பின் இயக்குநரும் உகாண்டா சுரங்கங்கள் சங்க பொதுச்செயலாளருமான Rashid Reich நாட்டின் நான்கு மண்டலங்களில் யூரேனியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். ''உகாண்டா கனிமவளங்கள் தொடர்பான நான்காவது அறிக்கை ஆழமாக ஆராய்ந்த பின்னர் காலனி அரசாங்கம் தயாரித்தாகும். அதில் உகாண்டா ஒரு கனிமவளமிக்க பகுதியென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டார். உகாண்டாவில் நூற்றுக்குமேற்பட்ட கனிமப்பொருட்கள் கிடைக்கின்றன என்று அவர் அறிவித்தார். 46- பகுதிகளில் தங்கம் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. உகாண்டாவில் ஓரளவிற்கு எண்ணெய் வளமும் உள்ளது. இதற்கிடையில், பெல்ஜிய இராணுவம் கம்பாலாவிற்கு தெற்கிலுள்ள லேக்விக்டோரியாவில், என்டெபியில் ஒரு இராணுவ முகாமை அமைக்கவிருக்கிறது. காங்கோ, ஜனநாயக குடியரசின் இட்டூரி பிராந்தியத்தில் பெனின் இராணுவ அமைதிகாப்புப் படையினருக்கு கேந்திர ஆதரவு தருவதற்காக இந்த முகாம் அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறவிருப்பதை ஜனாதிபதி முசவேனி வரவேற்றுள்ளார். |