WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
US forces attack in Baghdad, tensions
build around Najaf
பாக்தாத்தில் அமெரிக்கப்படைகள் தாக்குதல், நஜாப்பைச்சுற்றி பதட்டங்கள் உருவாகிறது
By James Conachy
11 May 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஷியைட்டு மத குருமார், மோக்தாதா அல் சதர் (Moqtada
al-Sadr) தலைமையில் உருவாகியுள்ள எழுச்சியை நசுக்குவதற்காக
அமெரிக்காவிறன் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் பாக்தாத்தில் மிக கடுமையான சண்டையில் ஈடுபட்டிருக்கின்றன.
திங்கள் அதிகாலையில் சதர் புறநகரில், தொழிலாள வர்க்கம் பெரும்பாலும் வாழுகின்ற ஷியைட்டுகள் பகுதிகளில்
அமெரிக்க டாங்கிகள், ஹெலிகாப்டர் போர் விமானங்கள் தாக்கியதில் டசின் கணக்கான ஈராக் போராளிகளும்,
குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
சனி இரவு, அமெரிக்கத் துருப்புக்கள் ஆத்திரமூட்டும் வகையில் புறநகர் பகுதியில் சதர்
அமைப்பின் இரண்டு தலைவர்கள் உட்பட ஆறு ஆதரவாளர்களை திடீர் சோதனையில் கைது செய்தனர். அதே நாள்,
சதருடைய மகிதி (Mahdi)
ராணுவ போராளிகள், மக்கள் நெரிசல் மிக்க புறநகர் வழியில் அமெரிக்கப் படைகள் மீண்டும் நுழைந்துவிடாது
தடுப்பதற்காக பல சாலைத் தடைகளை மூடிவிட முயற்சிகள் எடுத்தனர். போராளிகள் முக்கிய கட்டிடங்களை தமது
கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு பொது மக்களை வெளியில் வரவேண்டாம் என்றும் அவர்களது கடைகளை வியாபாரத்துக்காக
திறக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்ளும் துண்டு அறிக்கைகளை வெளியிட்டனர். அச் சம்பவத்தை அவதானித்த
பத்திரிகையாளர்கள் கொடுத்த தகவலின்படி, பிரதான சாலைகளில் சாலைத் தடைகளை ஏற்படுத்துவதற்கு
பாரந்தூக்கிகளையும், புல்டோசர்களையும் பயன்படுத்திய அப் போராளிகள் தற்காப்பு அரண்களையும் ஸ்தாபித்தனர்.
சாதாரண ஆயுதங்களை தாங்கிய ஈராக்கியருக்கு எதிராக அமெரிக்க ராணுவம்
கனரக கவச ஆயுதங்களை பயன்படுத்தியது. டாங்கிகளாலும், பிராட்லி (Bradley)
போர் வாகனங்களாலும் சாலைத் தடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
திங்கள் அதிகாலை இரண்டு மணிக்கு, அமெரிக்க கவசபடையணி சதர் நகர மையப் பகுதியில்
Mahdi ராணுவத்தின்
தலைமையகத்தை தாக்குதவற்காக பாய்ந்து வந்தது.
உள்ளூர் தலைவர்,
Sheikh Fakher al-Azawi நியூயார்க் டைம்ஸ் நிருபரிடம்
கூறினார்: ''டாங்கிகளும் கவசவாகனங்களும் எங்களது தெருவில் நுழைந்தன. எங்களது இளைஞர்கள் பதில்
நடவடிக்கையில் இறங்கினர். மக்கள் வீடுகளில் ஒளிந்து கொண்டிருந்தனர். அது ஒரு தெருச்சண்டை''. அங்கு
குடியிருப்பவர் கூறினார்: ''கட்டிடங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து
Mahdi
ராணுவத்தினர் அமெரிக்கர்கள் மீது சுட்டார்கள். அதற்கு பதிலடியாக அமெரிக்கர்கள் அந்தத் தெரு முழுவதையுமே
குண்டுவீசி தாக்கினார்கள். உண்மையிலேயே அது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. நாங்கள் அதை பார்த்துக்
கொண்டிருந்தோமே தவிர, ஒன்றும் செய்ய முடியவில்லை.''
ஈராக் போராளிகள், ராக்கெட்டால் இயக்கப்பட்ட வெடிகுண்டுகளாலும் சிறிய
ஆயுதங்களாலும் அமெரிக்க ராணுவத்தை எதிர்த்து போரிட்டதாக அமெரிக்க இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டது.
நான்கு அமெரிக்கத் துருப்புக்கள் இதனால் காயமடைந்தனர் என்று மேலும் அவ் அறிக்கையில் கூறப்பட்டது.
துருப்புக்கள் அந்தக் தலைமையகத்தை சோதனையிட்ட போதிலும் அதில் எவருமில்லை. அப்படி இருந்த போதிலும்
இஸ்ரேல் பாணியில், பதிலடி கொடுப்பதற்காக நகரத்தின் மையத்தில் அமைந்த அந்த தெருக்களின் கட்டிடமே
டாங்கிகளாலும், ஹெலிகாப்படர் குண்டுவீச்சு விமானங்களாலும் தகர்த்து தரைமட்ட மாக்கப்பட்டன. அந்த
அலுவலகத்தை அழித்த பிறகு, சதர் நகரத்தின் முனையிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொண்டன.
இரவில் நடைபெற்ற போர் நடவடிக்கையில் 35 போராளிகள்
கொல்லப்பட்டதாகவும் அத்துடன் ஞாயிறன்று நடைபெற்ற மோதலில் 18 பேர் இறந்ததாகவும் அமெரிக்க ராணுவம்
தெரிவித்தது. உள்ளூர் மருத்துவமனை அதிகாரி ஒருவரின் தகவலில், நேற்றிரவு தாக்குதலுக்கு முன்னர் காயமடைந்த
32 பேருக்கு சிகிச்சையளித்ததாக தெரிவித்தார்.
ஈராக்கில் பொதுமக்கள், பரவலான விடுதலை இயக்கத்தை எதிர்கொள்ளவில்லை
என்ற அமெரிக்க கூற்று எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை நிரூபிக்கின்ற வகையில் நடைபெற்ற இரத்தக்களரி
சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. மத்திய பாக்தாத்தில் கிரீன் மண்டலத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆணையம்
தற்காப்பு அரணை அமைத்துள்ளது, அதற்கு ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் இரண்டு மில்லியனை நெருங்கிக்
கொண்டிருக்கின்ற மக்களை கொண்ட சதர் நகரம், அல் சதருடைய கோரிக்கையான ஆக்கிரமிப்புக்கு உடனடியாக
முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிக்கின்றனர். இதற்கு வாஷிங்டனின் ஒரே பதில்
பலாத்காரம்தான், ஈராக் போராளிகளிடம் அமெரிக்க டாங்கிகளை நேரடியாக போர்களத்தில் எதிர்கொள்கிற
கனரக போர் தளவாடங்கள் இல்லை என்பது உண்மைதான்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது பாக்தாத் நகர ஏழைமக்கள் பகைமை பாராட்டி
வருவது நீண்டகால அனுபவத்தின் விளைவாகும். சதாம் ஹூசைன் அமெரிக்காவின் விசுவாசமான கூட்டாளியாக இருந்த
நேரத்தில், 1980 களில் பாத்திஸ்டு ஆட்சிகளால் இவர்கள் அடக்குமுறையில் நீடித்திருந்தனர், ஐ.நா மற்றும்
அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடைகளால் 1990 களில் மிகப் பெருமளவிற்கு இழப்புகள் ஏற்பட்ட
நிலையைத் தொடர்ந்து அமெரிக்க படையெடுப்பால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
தற்போது சதர் நகரம் என்று அழைக்கப்படும் பகுதியில், 1980 களின் துவக்கத்தில்
முன்னாள் பாத்திஸ்டு கட்சி அமெரிக்காவின் ஆதரவோடு ஸ்ராலினிச ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ஆயிரக்
கணக்கானோரை கொலை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தியது. 1991 ல் பாத்திஸ்டு கட்சிக்கு எதிரான
ஷியைட்டுகள் கிளர்ச்சியில், மேலும் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையில்
அடைக்கப்பட்டனர், இவ் எழுச்சியை ஹூசைனின் குடியரசு காவலர்கள் நசுக்குவதற்கு அமெரிக்கா அனுமதித்தது. அல்
சதரின் தந்தையை சதாம் ஹூசைன் படுகொலை செய்ததைத் தொடர்ந்து 1999 ல் நடைப்பெற்ற தோல்வியுற்ற
கிளர்ச்சியில் மற்றுமொரு ரத்தக்களரி இடம் பெற்றது.
அமெரிக்காவின் ஆட்சியில் பாக்தாத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை, பாத்திஸ்ட்
ஆட்சியின் கீழ் இருந்ததை விட சிறிய வித்தியாசத்தை கொண்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் 50 சத வீதத்திற்கு
மேல் உள்ளது. படையெடுப்பு நடைபெற்று பதிமூன்று மாதங்களுக்கு பின்னர் வடிகால், மின்சாரம் மற்றும் அடிப்படை
சேவைகள் சதாம் ஹூசைன் ஆட்சியின் இறுதி காலத்தில் இருந்த அளவிற்கு கூட அமையவில்லை. நூற்றுக்கணக்கான
இளைஞர்கள் அமெரிக்க சிறைகளுக்கு அமெரிக்கத் துருப்புக்களால் இழுத்துச் செல்லப்பட்டு அல்லது கொல்லப்பட்டும்,
உடல் ஊனமாக்கப்பட்டும் உள்ளனர். கிளர்ச்சி துவங்கிய, ஏப்ரல் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் குறைந்த
பட்சம் 100 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் படையெடுப்பை பற்றி சதர் நகரத்தின் மதிப்பீடு ஒரு பழமொழியாக
நிலவிக் கொண்டிருக்கிறது: ''மாணவர் (ஹூசேன்) போய்விட்டார், மற்றும் ஆசிரியர் (அமெரிக்கா)
வந்துவிட்டார்''. ஈராக் கைதிகள் சித்தரவதை செய்யப்படுவது தொடர்பான தகவல்கள் அம்பலத்திற்கு வந்ததும்,
ஆக்கிரமிப்புக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த வாரக் கடைசியில் ஈராக்கின் பல நகரங்களில் சண்டை நடக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள் முழுவதிலும் சதர் நகரத்திலும் அதே போல தெற்கு ஷியைட்டுகளின் புனித
நகரமான கர்பலா நகரிலும் மேலும் மோதல்கள் நடந்துள்ளன.
Al- Makhayam
மசூதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஷியா போராளிகள் மோதலில் ஈடுபட்டபோது திருப்பி
அமெரிக்க டாங்கிகள் சுட்டன, அமெரிக்கப் படைகள் புனித கர்பலா நினைவிடத்திற்கு அருகில் நின்றுவிட்டன.
அமெரிக்கத் துருப்புக்கள் பிரதான ஷியைட் இமான் அலி சிரைன் நினைவிடத்தை நஜாப்பில் நெருங்கிக் கொண்டுள்ளன.
பாஸ்ராவிலும் அமாராவிலும் சதர் போராளிகளுக்கு எதிராக பிரிட்டிஷ் துருப்புக்கள் தங்களது நடவடிக்கைகளை
எடுத்து வருகின்றன.
அமெரிக்கா, பல்லூஜா நகரத்திற்குள் அதனது முதலாவது ராணுவ கவசவாகனத்தை
அனுப்பியது, இது அந் நகரத்திற்குள் முன்னாள் ஈராக் படை தளபதிகளும், போர்வீரர்களும் அடங்கிய ''பல்லூஜா
பாதுகாப்பு படை பிரிவு'' நடவடிக்கைக்கு பின்னால் இடம் பெறுகிறது. எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அந்த
வாகனம் நகரத்தின் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் சுற்றுப்புற பகுதியில் அமெரிக்கப்
படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து கொண்டும் பதட்டங்கள் அதிகரித்தும் வருகின்றன.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலளிக்கின்ற வகையில் அல் சதரின் பேச்சாளர் ஒருவர்
Reuters
க்கு கூறினார்: ''கர்பலா மற்றும் நஜாப் புனித நகரங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து எச்சரிக்கை
எல்லைகளையும் கடந்து ஆக்கிரமிப்பாளர்களது ராணுவம் முற்றுகையிட்டிருப்பதால் ஈராக்கின் எல்லாப் பகுதிகளிலும்
அரசுக்கு எதிர்ப்பு நீடிப்பது இப்போது எங்களது கொள்கையாகிவிட்டது''
Mahdi போராளிகள் தற்காப்பு நிலைபாடுகளை உருவாக்கிக்
கொண்டுள்ள Ali Shrine
நினைவிடத்திற்கு அருகில் சதர் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
அலி அல் சிஸ்தானி என்பவரின் தலைமையில் இயங்கி வரும் பிரதான ஷியைட் மத
குருமார்களின் தலைமை ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இருந்துவரும் ஈராக்கிய இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் சபை (SCIRI)
உடன் இணைந்து கொண்டு, நஜாப்பில் இடம் பெறும் கிளர்ச்சிக்கும், சதர் அங்கே இருப்பது ஆகிய இரண்டையும்
எதிர்த்து வருகின்றன. சிஸ்தானி உட்பட மூத்த மத குருமார்கள் பலர் சதர் தனது படைகளை புனித ஷியைட்
நகரிலிருந்து விலக்கிக் கொண்டு கலைத்துவிட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நஜாப்பிற்கும், கர்பலாவிற்கும் வருகின்ற ஏராளமாள யாத்திரிகர்கள் தரும் பெரும்
நன்கொடைகள் ஷியா குருமார்களின் ஜடரீதியான நலன்களுக்கான பணத் தொகையாகும். ஏப்ரல் துவக்கத்தில்
ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் நஜாப் நகரை சுற்றிக்கொண்டு நிற்பதால், யாத்திரிகர்கள் வருகை
கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. நீண்ட கால அடிப்படையில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக
செயல்பட்டுவரும் சிஸ்தானி மற்றும் அவரோடு தொடர்புடைய ஷியைட் அமைப்புக்கள் எதிர்கால ஈராக் அரசுகளில்
ஆதிக்கம் செலுத்துகிற இடத்தை பெறுவதற்கான வழி என்று கருதுகின்றன.
SCIRI யை
சேர்ந்த உறுப்பினர்கள், ஏற்கனவே பொம்மை ஈராக் நிர்வாக சபையில் (IGC)
செயல்பட்டு வருகின்றனர்.
சதரின் போராளிக்களுக்கும், சிஸ்தானியை சுற்றியுள்ள ஷியைட் குழுக்களுக்கும் இடையே
பதட்டங்கள் முற்றுவதற்கான சமிக்கைகள் தென்படுகின்றன. நேற்றைய தினம்,
SCIRI யின்
பிரதிநிதியான Sadreddin al-Kubbanji
என்பவர், சதரையும் அவரது போராளிகளையும் கண்டித்தும், அவர்களை ''வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்தி''
வருவதாகவும் குறிப்பிட்டார். ''அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிகிறோம் என்ற பெயரால்
துரோகம் இழைக்கும் சதிச்செயல் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது'' என்று அவர் மேலும் அறிவித்தார்.
அங்கே ஒரு சிறிய சந்தேகத்துடன் அமெரிக்க இராணுவம், சதரை எதிர்க்கும் ஷியாக்
குழுக்கள் Mahdi
ராணுவத்தைக் தாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
SCIRI ன் பாதர் படை போராளிக் (Badr
Brigade militia) குழுவில் எடுத்துக்காட்டாக ஏறத்தாழ
10,000
பேர் உள்ளனர். கையெழுத்திடப்படாத துண்டு அறிக்கை ஒன்று நஜாப் நகரில் விநியோகிக்கப்பட்டு அந்நகரை விட்டு
வெளியேறுவதற்கு மறுக்கும் சதர் போராளிகளை கொன்று விடப்போவதாக அந்த அறிக்கை அச்சுறுத்தியுள்ளது.
இரண்டு போட்டி பிரிவுகளுக்குமிடையே வெள்ளிக் கிழமையன்று பலமான மோதல்
உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன. சதர் நஜாப் நகரைவிட்டு வெளியேற வேண்டுமென்று தொழுகைக்கு முன்னர் ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு SCIRI
கோரிக்கை விடுத்திருக்கிறது. அந்த நகரத்தில் ஆயுதம் தாங்கிய மோதல்கள் நடைபெறுமானால் அவற்றை
தடுப்பதற்கு அமெரிக்க இராணுவம் தலையிடாது என்று அமெரிக்க இராணுவ பிரதிநியான படைத்தளபதி மார்க்
கிம்மிட் நேற்று நிருபர்கள் பேட்டியில் மறைமுகமாக குறிப்பிட்டார்.
நியூயோர்க் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, ''250,000
மக்களைக்'' கொண்ட பேரணியை திரட்ட முடியுமென்று
SCIRI
நம்புகிறது. சிஸ்தானியின் எதிர்ப்பு கிளர்ச்சிக்கு சதரின் ஆதரவாளர்களை அல்லது ஷியா மக்களில் பெரும்பகுதியினரை
மாற்றிவிட்டது என்பதற்கான சான்று எதுவுமில்லை.
நஜாப் நகரில் நேற்று
SCIRI நடத்திய பேரணியில் 200 பேர் மட்டுமே கலந்து
கொண்டனர், சதரின் போராளி இராணுவத்தினர் அவர்களை நையாண்டி செய்தனர் என்று அறிக்கை அறிவிக்கிறது.
எப்படியாயினும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஷியைட்டுத் தலைவர்கள் மிகப்
பெருமளவில் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருகின்றனர்.
Top of page |