WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
சிஷீறீஷீஸீமீறீ நிணீபீலீணீயீயீவீs றீஷீஸீரீ ழீஷீuக்ஷீஸீமீஹ் ணீஸீபீ tலீமீ நீஷீறீறீணீஜீsமீ ஷீயீ கிக்ஷீணீதீ ஸீணீtவீஷீஸீணீறீவீsனீறிணீக்ஷீt
1
கேர்னல் கடாபியின் நீண்ட பயணமும், அரபு தேசிய வாதத்தின் சரிவும்
பகுதி 1 |
பகுதி 2
By Steve James
19 May 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
லிபியாவின் முஅம்மர் கடாபியின் சமீபத்திய புருஸ்ஸல்ஸ் விஜயத்தின் உள்ளார்ந்த காரணங்கள்
பற்றிய இரு பகுதிக் கட்டுரை தொடரின் முதல் பகுதியை கீழே காணலாம்.
ஏப்ரல் மாதம் புருஸ்ஸல்ஸிற்கு கடாபி சென்றது, 15 ஆண்டுகளுக்குப் பின் அவர் லிபியாவை
விட்டு வேறு ஒரு நாட்டிற்கு சென்ற முதலாவது நிகழ்வாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிடத்திற்கு இவர்
இரண்டு சரக்கு விமானங்கள், ஒரு Bdouin
முகாம், ஒரு பெரிய மெர்சிடன் லிமோசின் மற்றும் முற்றிலும் இளம்பெண்கேளே இருந்த பாதுகாப்புக் குழு இவற்றோடு
சென்றடைந்தார். "பெருந்தலைவர்" நடனக் குழுக்கள் மற்றும் ஐரோப்பிய குழுவின் பரவசமடைந்திருந்த தலைவர்
ரோமனோ பிரோடி ஆகியோரால் வரவேற்கப்பட்டார். பிரோடி கடாபியின் வருகையை ஐந்து ஆண்டுகள் தயாரிப்பிற்குப்பின்
நடந்த சம்பவம் என்றும் இந்நாள் "மகத்தான நாள்" என்றும் புகழ்ந்தார்.
உலக ஏகாதிபத்திய தலைவர்கள் ஒருகாலத்தில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கிவைத்தவரை
மீண்டும் புணருத்தாரனம் செய்யும் வகையில் நடந்த மற்றொரு நிகழ்வே இந்த விஜயம் ஆகும். கடந்த மாதங்களில்
ஸ்பெயின் நாட்டு முன்னாள் பிரதம மந்திரி ஜோஸ் மரியா அஸ்னர், இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி, பிரிட்டிஷ்
பிரதம மந்திரி டோனி பிளேர் ஆகியோர், கடாபியைச் சந்தித்திருந்தனர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக
சுமத்தப்பட்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தடைகள் அநேகமாக முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டன.
பிரோடியுடனும், ஐரோப்பிய ஒன்றியக் குழுவுடனும் நடந்த பேச்சுவார்த்தைகள் பார்சிலோனா வழிவகையுடன் லிபியா
இணைதலை பற்றி குவிமையப்படுத்தின -இதன்மூலம் ஐரோப்பிய வல்லரசுகள் மத்தியதரைக் கடல் பகுதியில்
வர்த்தகம், ஆற்றல் இவற்றில் மேலாதிக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் தெற்கு
எல்லையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில், லிபியக் கடற்கரையிலிருந்து புலம்பெயர்தல் நடக்காமல் தடுப்பதில்
உதவுவதாகவும் கடாபி தெரிவித்தார்.
லிபியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான இந்த நல்லுறவு நடவடிக்கைகளின்
அடிக்காரணமாக இருப்பது உலகின் பெரிய எண்ணெய் வளங்களில் ஒன்றாக இருக்கும் லிபியப்பகுதியில் ஐரோப்பிய
எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் அமெரிக்க போட்டியாளர்களை விடக் கூடுதலான செல்வாக்கு பெற்றிருக்கும் நிலையாகும்.
லிபிய எண்ணெய் மலிவானது, அதன் இருப்புக்கள், கூறப்பட்டுள்ள 36 மில்லியன் பீப்பாய்களைவிட முன்று மடங்கு கூடுதலாக
இருக்கும், மற்றும் அவை ஐரோப்பாவிற்கு அருகில் அமைந்த நிலையிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. லிபியாவில்
குறிப்பிடத்தக்க இயற்கை வாயுக்களின் இருப்புக்களும் உள்ளன; பிரிட்டன், நோர்வே, கிரீஸ் போன்ற நாடுகளிலுள்ள
பல ஐரோப்பிய ஆற்றல் நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்த விரைகின்றன.
1986ம் ஆண்டில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்ட எண்ணெய் வளங்களை மீண்டும் கைப்பற்றும்
வகையில் அமெரிக்க நிறுவனங்கள் அரும்பாடுபடும்போது, வாஷிங்டனுக்கு வருகை தருமாறு கடாபிக்கு ஆழைப்பு
வந்தாலும் கூட அது முடியாதது அல்ல. அமெரிக்க அரசாங்கத்தால் நீண்ட காலமாக கொடுமையுடன் சித்தரிக்கப்பட்டுள்ள
லிபிய ஆட்சி, "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" தன்னுடைய ஆதரவை கொடுக்க முன்வந்துள்ளது, தன்னிடமுள்ள
முக்கிய ஆயுதங்களையும் அது அளித்து, பல பயங்கரவாத தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு பொறுப்பேற்று,
இழப்புத் தொகையும் அளித்துள்ளது; இதில் குறிப்பிடத்தக்கது
Lockerbie
குண்டுவீச்சாகும்.
அரபு தேசியவாதத்தின் முட்டுச்சந்து
முன்னாள் புரட்சிகர இராணுவத்தின் கேர்னல் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய எல்லையின்
போலீஸ்காரராக மாறியது, அரபு தேசியவாதத்தின் மிகத் தீவிரமான பிரிவுகூட முட்டுச்சந்தில் வந்து சேர்ந்திருப்பதை
உருப்படுத்திக் காட்டுகிறது.
இவரது வளைபாதை, லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சி
தத்துவத்தின் ஒரு சக்திமிக்க நிரூபணமாகும், அவ் ஆய்வின்படி, ஒடுக்கப்பட்ட நாடுகளில், முதலாளித்துவ
அபிவிருத்தியுடன் பாரம்பரியமாக தொடர்புடைய தேசிய ஐக்கியம் மற்றும் ஜனநாயக அபிவிருத்தி என்பன ஒரு
சோசலிச முன்னோக்கில் செயல்படும் அரசியல்ரீதியாய் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் மூலம் மட்டுமே
நிறைவேற்றப்பட முடியும்.
மத்திய கிழக்கில், ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு சவால் விடக்கூடிய ஒரே அடிப்படை,
அப்பகுதியில் ஒடுக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் தலைமையை தொழிலாள வர்க்கம் ஏற்பதற்கு வருவதன் மூலம்
மட்டுந்தான். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தினரின் கட்சிகள் கட்டியமைக்கப்பட்டு, மத்திய
கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகள் முன்னோக்கில் அவற்றின் ஐக்கியம் தேவைப்படுகிறது - இதன் மூலம் மட்டுமே
அப்பகுதியின் செயற்கையான எல்லைகள் அழிக்கப்பட முடியும், மக்களின் பெரும்பகுதியை பீடித்துள்ள பேரழிவு தரும்
வறுமை அகற்றப்பட அப்பகுதியில் நாளும் எடுக்கப்படும் பெருஞ்செல்வம் பயன்படுத்தப்பட முடியும்.
20ம் நூற்றாண்டில் வெளிப்பட்ட அரபுத் தேசியவாதம், 19ம் நூற்றாண்டில் தேசத்தை
ஸ்தாபித்த ஐரோப்பிய அனுபவத்தை பின்பற்ற வெளிப்படையாக முயன்றதோடு அரபுமொழி பேசும் மக்கள்
அனைவரையும் ஒரு அரசியல் தொகுப்பாக ஒன்றுபடுத்த முற்பட்டது. அரேபிய அறிவுஜீவிகளும், அரசியல்
தலைவர்களும் ஒன்றுபடுத்தப்பட்ட அராபிய முதலாளித்துவ அரசை உருவாக்குதல், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க
பகுதி முழுவதின் ஏகாதிபத்திய பிரிவினையை தூக்கி எறிவதற்கு ஒரு வழிவகையாகக் கண்டனர் மற்றும் ஐரோப்பிய
சக்திகள் மேற்கொண்ட வழியில் இப்பகுதியின் வளர்ச்சிக்கான பாதை திறக்கும் என்று கருத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அரபு தேசியவாதம் காலம் கடந்து வந்திருந்ததோடு, ஐரோப்பிய,
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் ஏற்கனவே பிளவுபடுத்தப்பட்டுள்ள நிலையைத்தான் எதிர்கொண்டது. மத்திய
கிழக்கு முழுவதிலும், எண்ணெய்க்காகவும், மூலோபாய அனுகூலங்களுக்காகவும் பிரதான வல்லரசுகள் அப்பகுதியைத்
தங்கள் சொந்த நலனுக்கேற்ப துண்டாடி, அவர்களுடைய சார்பாளர் ஆட்சிகளை ஏற்படுத்தியதோடு, அப்பகுதியில்
இருந்த பழங்குடியினருடன் விருந்தோம்பும் உறவுகளை ஏற்படுத்தி, முடியாட்சிக் கைப்பாவை ஆட்சிகளுடனும் பற்பல
தொடர்புகளை நிறுவியிருந்தன. தேசிய முதலாளித்துவம் வளர்ந்திருந்த முறையில், அது வலுவற்றதாகவும், அதன்
சலுகைகள் அப்பகுதியின் ஏகாதிபத்திய சுரண்டல் மற்றும் பிராந்தியங்கள் பிரிவினையை ஒட்டித்தான் காணப்பட்டது.
செல்வம் அப்பகுதியில் இருந்து சுரண்டப்பட்டு பெரும் எண்ணெய் நிறுவனங்களால் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததன்
காரணமாக, அந்த மட்டத்துக்கே ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் மோதலில் இருந்தது. பிராந்திய முதலாளித்துவ
வர்க்கத்தினர், எண்ணெய் வளத்தின் கூடுதலான பங்கைத்தான் கோரினர். ஆயினும், அவ்வாறு செய்வது அரபு
தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் சுரண்டுவதன் மீதாக தமது சொந்த உரிமையை நிலைநாட்டுதல் என்று
அர்த்தமாகும்.
இந்நிலை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தவேண்டிய எந்த போராட்டத்திற்கும்
கட்டாயம் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய அதே சக்திகளுடன் தங்களை மோதலில் வைத்துக் கொண்டனர்-
அதாவது எந்த வர்க்கத்தின் எதிர்கால சமூகத்திறன் ஏகாதிபத்திய சக்திகளைவிட அதன் சலுகைகளுக்கு கூடுதலான
அச்சுறுத்தலை தரக்கூடும் என்று முதலாளித்துவ வர்க்கம் சரியாகக் கணித்ததோ அதையே எதிர்த்து நிற்றல் என்ற
நிலை ஆகும்.
எனவே, அரபு முதலாளித்துவ வர்க்கம், தேசிய எல்லைகளை அழிக்கவும் இப்
பிராந்தியத்தில் ஏகாதிபத்திய ஆட்சியைப் பண்பிடும் கொடும் சுரண்டலை அழிக்கவும் தேவையான ஒரு வகை நீடித்த
வெகுஜனப் போராட்டத்திற்கான வெகுஜனங்களை அரசியல்ரீதியாய் மின்முலாம் பூசவும் (ஒட்டுப்போடவும்)
அணிதிரட்டவும் முற்றிலும் திராணியற்றதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அத்தகைய போராட்டத்தின்
சாத்தியத்தை, என்ன விலை கொடுத்தாயினும் தவிர்க்கப்படக் கூடிய ஒரு வகை மோசமான தீயகனவாக
பார்த்தது.
ஆயினும்கூட 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அரபு தேசியவாதம் அப்பகுதியில் சக்தி
வாய்ந்த அரசியல் காரணியாக மாற இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் சீரழிவு இதற்கு ஒரு
பெரும் காரணமாக இருந்தது. ஸ்ராலினிஸ்டுகளால் மேற்கொள்ளப்பட்ட கணக்கிலடங்கா காட்டிக் கொடுப்புக்கள்,
பலரின் பார்வையில் சோசலிசத்தை செல்வாக்கிழக்க வைக்க சேவைசெய்தது, மத்தியகிழக்கு முழுவதும் கம்யூனிஸ்ட்
கட்சிகள், குறிப்பாக எகிப்தில், தலைமை மேற்கொள்ளும் என்று கருதியவர்கள், போராட்டத்தின் சுயாதீனமான
முன்னோக்கிற்குப் பதிலாக, பிராந்திய முதலாளித்துவத்திற்கு தங்களை அரசியல் பிணைக் கைதியாக்கிக் கொண்டனர்.
"இரு-கட்ட" தத்துவத்தின் கீழ், எகிப்தில் இருந்த ஸ்ராலினிச மயமாக்கப்பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி, எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து வர்க்கங்களின்
ஜனநாயக இயக்கம் என கூறப்படுவதன் வரவிருக்கும் வெற்றிக்காக, சோசலிசத்திற்கான வர்க்கப் போராட்டம்
நசுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.
நாசரும் "படர்ந்த அரபுவாதமும்"
இந்த அடிப்படையில் ஸ்ராலினிஸ்டுகள் வலதுசாரி இராணுவக் கேர்னல் கமால் அப்துல்
நாசர் எகிப்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை 1952ல் ஏற்றனர். நாசர் எகிப்திய படைகளை பிரிட்டிஷ் ஆதரவு
மன்னர் பரூக்கின் முடியாட்சிக்கு எதிராகச் செலுத்தி, ஏகாதிபத்தியத்துடனான அதன் பேரத்தில் எகிப்திய மூலதனம்
சிறப்பாக சேவைசெய்வதற்கு நோக்கங்கொண்டார். இவர் படர்ந்த அரபுவாதம் என்ற கருத்தியலை முன்வைத்து,
பாலஸ்தீனிய விடுதலை அமைப்பைத் தோற்றுவித்து, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி, 1956 ல் சூயஸ்
நெருக்கடியில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுத் தலையீடுகளை தூதரக முறையில் அவமானப்படுத்தினார்.
Free Officers Union, Revolutionary Command
Council என்ற அமைப்பின் மூலம், அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும்
அடக்கி, வேலை நிறுத்தம் செய்திருந்த தொழிலாளர்களைத் தூக்கிலிட்டு அதிகாரத்திற்கு வந்திருந்தபோதிலும்,
நாசர் அப்பகுதி முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தலைவராக புகழப்பட்டார். சில சமுதாய நன்மைகள்
கல்விக்கும், வீட்டு வசதிகளுக்குமாக தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்பட்டு, பொருளாதாரத்தின் பெரும்பகுதி
தேசியமயமும் ஆக்கப்பட்டன.
ஈராக்கிலும், சிரியாவிலும் இருந்த பாத் கட்சிகளுடன் சேர்ந்து இந்த மூன்று
நாடுகளையும் இணைத்து நாசர் ஒரு ஐக்கிய அரபுக் குடியரசு ஒன்றை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.
எகிப்தும் சிரியாவும் இணையும் வகையை 1958ல் தொடங்கின, ஆனால் இந்த ஒன்றியம் 1961 லேயே எகிப்தியத்
தலைநகர் தன்னுடைய சிறிய, ஏழ்மையான நாட்டுப்பகுதியின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து ஏமாற்றத்தினால்,
முறிந்து போயிற்று. 1967ல் இஸ்ரேலுடன் ஆறு நாட்கள் போரிட்ட பின்னர் எகிப்து அழிவுகரமான தோல்வியைக்
கண்டது, நாசரின் படர்ந்த அரபு அபிலாஷைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
இதன்பின்னர், அரபு அரசாங்கங்கள் வெவ்வேறு வழிகளில் செல்லத் தொடங்கின.
எகிப்திய, சிரிய, ஈராக்கிய அரசாங்கங்கள் தங்களுடைய தேசியப் பொருளாதாரத்தை வளர்க்கும் முயற்சியில் அமெரிக்காவிற்கு
எதிராக சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கை சார்ந்திருந்தன. ஜோர்டான், செளதி அரேபிய முடியரசுகள் மேற்குநாடுகளுடன்
நேரடி உறவுகளை வளர்க்கத்தொடங்கின. பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் (PLO)
தலைவரான யாசீர் அரஃபாத்தை இந்நிலை, இஸ்ரேலுக்கு எதிரான பின்புற காவற்படைக்கு எதிரான
போராட்டத்தை மேற்கொள்ள வைத்தது. இது அரபு ஆட்சியாளர்களால் பிரச்சார நோக்கங்களுக்காக சுரண்டப்பட்டது
அல்லது அவர்களால் நேரடியாகக் காட்டிக் கொடுக்கப்பட்டது.
லிபிய அனுபவம்
லிபியா, எகிப்தின் நீண்ட மேற்கு எல்லைப்பகுதியை அடுத்து உள்ளது. ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட
நாடு என்னும் முறையில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர்தான் அது இத்தன்மையை கொண்டிருக்கிறது. மிகப்பரந்த
நிலப்பரப்பு, பிரான்சைப் போல் இரண்டு பங்கு ஆகும், ஆனால் அப்பொழுது 1.8 மில்லியன் ஜனத்தொகையைக்
கொண்டிருந்த இப்பகுதி, டிரிபோலிடானியா, சிரெனைக்கா, பெஜ்ஜன் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது.
பழைய இத்தாலிய காலனித்துவ பகுதிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டகாரணம் பிரதான வல்லரசுகள் யார் அதை
கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் போனதினால்தான்.
சகாரா பாலைவனப் பகுதியின் வழியே வரும் வர்த்தகத்தில் வாழ்ந்திருந்த லிபிய
சிறுநகரங்கள் ஏகாதிபத்திய எழுச்சிக்குப்பின் தடைபட்ட வர்த்தகத்தினால் சீரழிந்திருந்தன. ஒட்டோமன், பின்னர்
இத்தாலிய காலனியாக விளங்கியிருந்த இந்நாட்டின் கடற்கரைப்பகுதிகள் சற்று விவசாயத்தால் நிலைத்த போதிலும்,
பெரும்பாலான பகுதிகள் பாலைவனங்களாகவும், மக்கள் குடியேறாமலும், உற்பத்தி ஏதுமின்றியும் இருந்தன. இரண்டு
உலகப் போர்களின்போதும், வளர்ந்திருந்த அடிப்படைக் கட்டுமானங்களும் அழிவிற்கு உட்பட்டிருந்தன; 1959ல்
எண்ணெய் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன், புதுநாட்டின் முக்கிய ஏற்றுமதி இதன் எல்லைகளில் பெரும் போர்களுக்குப்
பின் கைவிடப்பட்டிருந்த இராணுவ வண்டிகளில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்ட உலோகக் கழிவுகள்தாம். இரண்டு பெரிய
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இராணுவ முகாம்கள் அரசாங்கத்திற்குத் தேவையான நிதியில் பெரும் பங்கை அரசர்
இட்ரிசின் முடியாட்சிக்குக் கொடுத்து வந்திருந்தன; அவர் நீண்ட காலமாக அப்பகுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்
உற்ற நண்பராக இருந்து வந்தார். நாட்டின் நகர, கிராம, மற்றும் நாடோடி மக்கட் பகுதியினர் உலகிலேயே
வறிய நிலையில் இருந்தவர்களுள் ஒருவராகத்தான் இருந்தனர்.
1961ம் ஆண்டு முதல்முதலாக எண்ணெய் ஏற்றுமதி நடைபெற்றது ஒரு புதிய அரசியல்,
சமூக அபிலாஷைகளையும் பதட்டங்களையும் இந்த வறுமை நிறைந்த நாட்டில் ஏற்படுத்தின. 1967ம் ஆண்டை ஒட்டி,
லிபியா உலக எண்ணெய் உற்பத்தியில் 6.8 சதவிகிதத்தைக் கொண்டிருந்தது; 40 அமெரிக்க, ஐரோப்பிய
நிறுவனங்கள் என்றுமிராத அளவிற்கு எண்ணெய் வளத்தை உறிஞ்சின. அரசாங்க வருமானம் 1957ல் 20 மில்லியன்
லிபிய பெளண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளில் 187 மில்லியனாக உயர்ந்தது. 1960 களில் ஆண்டு வளர்ச்சிவிகிதம்
20 லிருந்து 30 சதவிகிதம் வரை இருந்தது. எண்ணெய் வெள்ளம் ஒரு புதிய ஊகவணிகர் தட்டை ஏற்படுத்தி, ஒரு புதிய
நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைக் கொண்டுவந்ததுடன், பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களையும்
கொண்டுவந்து, இட்ரிஸ் ஆட்சியை நம்பிக்கையற்ற முறையில் ஊழல் நிரம்பியதாகச் செய்து, புதிய செல்வத்தை லிபிய
மக்களிடையே பகிர்வு செய்ய முடியாமலும் தேசியப் பொருளாதாரத்தை வளர்க்க முடியாமலும் செய்து விட்டது.
"எண்ணைய் சகாப்தம்" முழுவதும், வியட்நாம் போருக்கு எதிராக, பாலஸ்தீனிய மக்களுக்கு
எதிராக, அரசியல் அமைப்புக்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக- அப்பொழுது அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை-
பெருகிய முறையில் சூறாவளியாய் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை லிபியாவும் கண்டது. விரிவடைந்து வந்திருந்த எண்ணெய்த்
துறைமுகங்களில், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம் செய்தனர். இது 1967ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் நடைபெற்ற ஆறு நாள் சண்டையில்
மோதலுக்கு வந்தது. பெரும்பாலான லிபிய மக்கள் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பெரும் சீற்றத்துடன் வெடித்தெழுந்தனர்;
துறைமுகப் பணியாளர்கள் எண்ணெய் வண்டிகளை நிரப்ப மறுத்ததுடன் எண்ணெய்க்குழாய்கள் வழியே பெட்ரோல் அனுப்பவும்
அனுமதி மறுத்தனர். அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, நாசர் அவை மூடப்படவேண்டும்
என்று கோரியவுடன் தீவிரமாக வளர்ந்தது. எகிப்து ஆறு நாட்கள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, நாசர்
இத்தளங்கள்தான் இஸ்ரேலியப் போர் முயற்சிக்கு ஆதரவு கொடுத்தன என்று கூறினார்.
இதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள பலரும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தில்
உள்ளவர் உட்பட, ஆங்கிலேயர்களும், குறுகிய லிபிய செல்வந்தத் தட்டும், எண்ணெய் நிறுவனங்களில் இருந்த வெளியார்
அனைவரும் இட்ரிசின் ஆட்சி முடிந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்தனர். தொழிலாளர்கள் மற்றும் மாணவர் இயக்கத்தைக்
கட்டுப்படுத்தும் அல்லது திசைதிருப்பும் ஒரு புதிய ஆட்சி உடனடித்தேவையாகக் கருதப்பட்டது. முடியாட்சி, ஒரு
சிறிய லிபிய இராணுவத்தையே தன்னுடைய ஆட்சிக்கு உடனடி ஆபத்தாகக் கருதியது.
கடாபியும் லிபியாவின் அரசியல் விழிப்புணர்வும்
அந்த சகாப்தம் ஒரு அரசியல் விழிப்புணர்வின் ஆரம்பங்களையும் கண்டது; அதன்
வடிவம் நாட்டின் அறிவுஜீவிதப்போக்குகள் எகிப்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததை பிரதிபலித்த தன்மையைக்
கொண்டிருந்தது. லிபிய பள்ளிகளில் இருந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் லிபியர்களாக இல்லாமல் எகிப்தியர்களாக
இருந்தனர். வக்கீல்களும், நீதிபதிகளும் எகிப்தில் பயிற்சி பெற்றிருந்தனர்; இல்லாவிடின் எகிப்தியர்களாகவே இருந்தனர்.
எழுச்சியுற்று இருந்த மாணவர் இயக்கம் அரபு தேசிய இயக்கத்தின் இடது சாரித் தன்மையை ஆதரித்தது. ஆனால்
நாசரிசம், பாத்திசம் இவற்றின் சார்பாளர்கள்தான் இராணுவத்தில் இருந்தனர், இவர்கள் கெய்ரோவிலோ,
பாக்தாதிலோ பயிற்சிகள் முலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததோடு பெரும் செல்வாக்கிற்கு ஆளாகி இருந்தனர். பல
அதிகாரிகளும் இட்ரிசின் முடிவான, எண்ணெய்வளச் செல்வத்தைத் தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்க பயன்படுத்தப்பட
முடியாத ஆயுதங்கள் மட்டுமே வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புக் காட்டினர்.
ஒரு வறிய Bedouin
பின்னணியைக் கொண்டிருந்த கர்னலான கடாபி, நாசரைப் பெரிதும்
போற்றியவராவார். முறைமையான அரசியல் செயல்பாட்டின் அரங்கு இராணுவம் ஒன்றுதான் என்ற பார்வையை அவர்
கொண்டிருந்தார். ஒரு 60-80 இராணுவ அதிகாரிகள்
Free Officers Union என்ற பெயரில் கூட்டாக மேற்கொண்ட
அவருடைய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு, இன்னும் மூத்த அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த இருந்த சில தினங்களுக்கு
முன்பே நடத்தப்பட்டது. பெரும்பாலான கடாபி ஆதரவாளர்கள், சமீபத்தில் நிறுவப்பட்டிருந்த லிபிய இராணுவப்
பள்ளியில் இருந்து வந்தவர்கள், ஆனால் பெரும்பாலான மூத்த அதிகாரிகளும் அமெரிக்கத் தூதரகத்துடன் நெருக்கமான
தொடர்பு உடையவர்களும் இந்த இரத்தம் சிந்தாத இராணுவத்திடம் அதிகார மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தனர்.
இட்ரிசின் ஆட்சி 1969 செப்டம்பர் 1ம் தேதி சிறு முனகல்கூட இல்லாமல் நாசரின் இசைவுடன் சரிந்தது.
(Revolutionary Command Council (RCC))
புரட்சிகர ஆணைக்குழுவின் புதிய அரசாங்கம் கடாபியின் தலைமையில்
ஏற்படுத்தப்பட்டு அனைத்து லிபியர்களின் அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, அதன்
புதுத்தலைமையின் எளிய தோற்றங்களையும் பறைசாற்றிக்கொண்டது. இந்த ஆட்சி வங்கிகளைத் தேசிய மயமாக்கி,
அமெரிக்க, பிரிட்டிஷ் தளங்களை அகற்றி, இட்ரிஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், செய்தித்தாள் ஆசிரியர்களை
விசாரணைக்கு உட்படுத்திய போதும், எண்ணெய் நிறுவனங்களை பெரும்பாலும் விட்டுவைத்தது.
நாசரைப்போலவே, RCC
மற்றும் கடாபியின் அணுகுமுறை, ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள
வர்க்கம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமாகத்தான் இருந்தது. புதிய அரசாங்கம், எண்ணெய்
தொழிலாளர்களின் தலைவர்களை அரசாங்கத் தலைமையிடத்தில் இணைத்துக் கொண்டது; ஆனால் உடனே எவ்விதமான
அரசியல் கட்சிகள் அமைக்கும் முயற்சியும் "அரச துரோகம்" எனக் கருதப்படும் என்று விவரித்தது.
Benghazi அறிவுஜீவிகளின்
தொழிற்சங்கம் அமைக்கவேண்டும் என்பதும், மாணவர்கள் மகளிர் உரிமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகளும்
உடனடியாக நிராகரிக்கப்பட்டன. ஒரு சில அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவை தொழிலாளர்
அமைச்சரகத்தால் தோற்றுவிக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தன. விரைவில் வேலை நிறுத்தங்கள்
தடை செய்யப்பட்டன. 1973 அளவில், உலகிலேயே விகிதாசார முறையில் லிபியாவில்தான் சிறைக்கைதிகள் அதிக
அளவில் இருந்தனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கைதிகள் ஆவர்.
ஆட்சி "மக்களிடம்" பெரிதும் நெருக்கத்துடன் இருப்பதாகக் கூறப்படும் அலங்காரச்
சொற்கள் உண்மையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் முறையில் ஒடுக்கும் தன்மையைத்தான் கொண்டிருந்தது.
இதுதான் கடாபி அரசாங்கத்தின் முதலாளித்துவ தன்மையை அறிந்து கொள்ள திறவு கோலாகவும் பயன்படுகிறது.
கடாபி, எண்ணெய் வளத்தின் பெரும்பகுதியை ஒரு வளைந்து கொடுக்கக் கூடிய அரசு மற்றும் இராணுவக் கருவிகளை
வளர்க்க இலக்கு கொண்டிருந்தார், அதேவேளை தொழிலாள வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப் படவேண்டும்
என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் இது விளக்குகிறது. வியத்தகு முறையில்
வளரும் எண்ணெய் செல்வத்தால் நிதியம் பெற்றிருப்பதால், லிபியா, அரேபிய ஆபிரிக்க ஒற்றுமை பற்றி தீவிரக்
கொள்கை, ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு, பாலஸ்தீனிய விடுதலைக்கு ஆதரவு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகக்
கூறியுள்ளது.
1970 களில் கடாபி பின்வருமாறு கூறினார், "சகோதரர்களே, நாங்கள் பாலஸ்தீனத்திற்கு
வருவோம், அரபு மக்கள் போரில் ஒன்றாக இணைவதைத் தடுக்கும் சுவர்களை இடித்துத் தள்ளும்பொழுது
வருவோம். எல்லைகளையும் பிரிவினைகளையும் அகற்றும்பொழுது நாங்கள் புனித நாட்டை அடைவோம். ... அரேபிய
நாடு ஒரு ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த நாடாக ஆகும்பொழுது நாம் பாலஸ்தீனத்தை விடுவிப்போம்."
See Also :
காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத
அரசியலும்
பி.எல்.ஓ
வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்
பகுதி1|பகுதி2|பகுதி3
Top of page |