World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Global recovery could be short lived

பூகோள அளவில் அற்ப ஆயுள் பொருளாதார மீட்சி
By Nick Beams
17 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) உலக பொருளாதாரத்தை இன்ப காட்சியாக சித்தரித்திருக்கிறது. சென்றவாரம் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அரையாண்டு பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் அந்த அமைப்பின் 30 உறுப்பு நாடுகளின் இணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2004-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் மிக அதி வேகமான வீதத்தில் அதிகரித்திருக்கிறது என்று விளக்கியுள்ளது.

பூகோள பொருளாதார மீட்சி தற்போது ''வலுவாகவும் நிலையான போக்கிலும்'' முதலீடுகள், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OECD பகுதியில் இந்த ஆண்டு 2003-ம் ஆண்டு உருவான 2.2 GDP வளர்ச்சி 3.4- சதவீதமாக உயரும் என்று முன்கணித்திருக்கிறது, சென்ற நவம்பரில் கணிப்பிடப்பட்ட 3-சதவீதத்தைவிட இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

என்றாலும், OECD ஊடகங்களுக்கும், நிதி சந்தைகளில் நிலவுகின்ற ஸ்திரமற்ற தன்மைக்குமிடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது. சென்றவாரம் வோல்ஸ் ஸ்ரீட் பங்கு சந்தையில் இந்த ஆண்டிலேயே மிகக்குறைந்த அளவிற்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பான் பங்குச்சந்தையில் ஒரே நாளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அண்மை வாரங்களில் ''முன்னேறி வருகிற சந்தைகள்'' என்று கருதப்படும் துருக்கி, ரஷ்யா, மற்றும் பிரேசில் பங்குச்சந்தைகளில் பங்குப்பத்திர விலைகள் அண்மைய வாரங்களில் மிக்கக்கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. எக்கனாமிஸ்ட் தந்துள்ள தகவலின் படி, மோர்கன் ஸ்ரான்லி குறியீட்டின்படி இப்படி புதிதாக வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் பங்குவிலை உச்சாணியிலிருந்து 17-சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் பங்குச்சந்தைகளில் அண்மையில் உயர்ந்த நிலையிலிருந்து பங்குச்சந்தைகள் 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்போது அமெரிக்காவில் மத்திய ரிசர்வ் கடந்த 46-ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய நிதிகளுக்கான விகிதத்தை 1 சதவீதமாக நிர்ணயித்திருப்பதை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பிலும் இப்படி உயர்த்தப்படுவதால் கடன் பத்திர சந்தைகளில் விலைகள் படுவீழ்ச்சியடையக்கூடும் என்று பயத்தினாலும் பங்குப் பத்திர சந்தைகளில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க மத்திய ரிசேர்வ் கூட்டத்தில் அந்த விகிதத்தை மாற்றப்போவதில்லை என்றும், ஆனால் ''[நாணயக்] கொள்கை ஒத்துப்போதல் நீக்கப்படும் நடவடிக்கை போல முன்னேற்ற வேகம் எடுக்கப்படும்" என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன் நோக்கம் நிதி சந்தைகளின் விகிதம் உயர்த்தப்படவிருக்கிறது என்பதை அவற்றுக்கு உணர்த்துவதற்காகவும் அதே நேரத்தில் 10-ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அனுபவத்தைப்போன்று, மத்திய ரிசேர்வ் ஒராண்டிற்குள் இரண்டு முறை வட்டி விகிதங்களை உயர்த்த, அதனால் பங்குச்சந்தைகளில் படுவீழ்ச்சி ஏற்பட்டு மெக்சிகோவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட அனுமதிக்கப்படமாட்டாது என்பதை உணர்த்துவதற்காகவும், இவ்வாறு முடிவு செய்தது. ஆனால் வட்டி விகிதங்கள் மிகக்குறைவாக நிலைநாட்டப்பட்டு வருவதாலும் பணவீக்கம் விகிதம் 1.7- சதவீதமாக இருப்பதாலும் ஒரு சதவீத அடிப்படை விகிதம் உண்மையான மதிப்பீடுகளின் படி எதிர்விளைவுகளை கொண்டது என்பதால் எதிர்பார்க்கப்படுவதைவிட வேகமாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஒரு மதிப்பீட்டின் படி, பொருளாதாரத்தை மந்தமாக்க அல்லது ஊக்குவிக்க, இயலாத நடுநிலை வட்டி விகிதம் சுமார் 5-சதவீதமாக இருக்கலாம்.

நிதி சந்தைகளில் நிலவுகின்ற அச்சத்திற்கு அடிப்படை என்னவென்றால் சிறிதளவிற்கு விகிதங்கள் உயர்த்தப்பட்டாலும் ''முன்னெடுக்கும் வர்த்தகங்கள்'' (Carry Trade) என்றழைக்கப்படும் சந்தைகளில் நிதி ஊக வணிகர்கள் அமெரிக்காவில் நிலவும் குறைந்த வட்டி விகிதங்களை சாதகமாக பயன்படுத்தி பிற நாடுகளில் ஆபத்து நிறைந்த நீண்டகால தொழில்களில் முதலீடு செய்துவிடுவார்கள். இதனால் ஊகபேரங்களில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. பைனான்சியல் டைம்ஸ் அதன் மே 10- வெளியீட்டில் பிரசுரித்துள்ள ஒரு கருத்தின் படி, அமெரிக்கா அடிப்படை வட்டிவிகிதத்தை 1.25 அல்லது 1.5 சதவீதமாக உயர்த்துவதால் "நிகழக்கூடிய பூகோள பொருளாதார மீட்சியை தடம்புரளச் செய்துவிடாது'', அதனால் ''முன்னெடுப்பு வர்த்தகம் மிகுந்த ஆபத்தான முதலீடாக ஆகக்கூடும்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

அதே நேரத்தில், அமெரிக்க மத்திய ரிசேர்வ் வரலாற்று அடிப்படையில் மிகக்குறைந்த அளவிற்கு வட்டிவிகிதங்களை நிலைநாட்டி வருவதற்கு பொருளாதார நிபுணர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அப்படிச்செய்வதால், நிதிக்குமிழிகளை உருவாக்குவதன் மூலம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை தூண்டும் கொள்கையை ஏற்றிருப்பதாக நம்புகின்றனர்.

மத்திய ரிசேர்வ் வட்டி விகிதங்களை உயர்துவதில்லை என்று முடிவு செய்திருப்பது பற்றி கார்டியன் பொருளாதார விமர்சகர் Larry Elliott விளக்கம் தரும்போது, அமெரிக்க மத்திய ரிசேர்வ் தலைவர் Alan Greenspan "பொதுமக்களை நம்ப வைத்திருப்பதுபோல் அமெரிக்க பொருளாதார மீட்சி மிக உற்சாகமான அளவை விடக்குறைவாக இருப்பதால், நாணய பணப்புழக்க ஊக்குவிப்பை நிறுத்திவிடுவதால் அந்த நம்பிக்கை சிதைந்துவிடும் என்று நம்புகிறார்." இந்தப்பிரச்சனைகளை Greenspan தீர்வுகாண்பதற்கு பங்கு சந்தை வீழ்ச்சியைப் பயன்படுத்தி இரண்டு புதிய குமிழிகளை வீட்டுவசதி மற்றும் பங்குபத்திர சந்தைகளில் ஏற்படுத்திவிட்டார், என்பதற்கு Elliott பொருளாதார நிபுணர் Kurt Richebacher சுட்டிக்காட்டியுள்ள சில குறிப்பான விமர்சனங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

Richebacher கூறியிருப்பதாவது: ''1920-களில் பங்குச்சந்தை குமிழி போன்று முன்கண்டிராத நுகர்வோர் செலவின பூரிப்புகளால் முடிவிற்கு வந்தது. அதுதான் தற்போது 1997-முதல் மற்றும் குறிப்பாக 2001-பின்னர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதற்குப்பின்னர் GDP வளர்ச்சியில் 92- சதவீதம் நுகர்வோர் செலவினமாக ஆகிவிடுகிறது. அப்படியிருந்தும், வருமான வளர்ச்சி தெளிவாக உயராத நிலையில் மத்திய ரிசர்வ் வரலாற்றில் முன்மாதிரி இல்லாத ஒரு கொள்கை நிலைப்பாட்டை கண்டுபிடித்திருக்கிறது: செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்களால் வீட்டுமனை விலைவாசிகளில் மிகப்பெரிய பூரிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நுகர்வோர் கடன்வாங்குகின்ற அளவை மிக வேகமாக உயர்த்திவிட்டது''.

இது குறைந்த வட்டி விகித ஆட்சி நிலவும் பொருத்தமின்மைகளை தாளால் அழகுபடுத்தும் நிலைக்கு இட்டுச்செல்கிறது, ''பூரிப்பிலிருந்து இன்னும் பெரிய, புதிய குமிழிகள் மற்றும் பருவினப்பொருளாதார பொருத்தமின்மைகள் மூலம் நிலவுகின்ற பொருத்தமின்மை, எதிர்காலத்தில் இன்னும் படுமோசமான நிலவரம் வர இருப்பதற்கு முகமன் கூறிக்கொண்டிருக்கிறது."

மோர்கன் ஸ்ரான்லி தலைமை பொருளாதார நிபுணர் Stephen Roach, உலக பொருளாதார மீட்சி நீடிப்பது ஒரு கேள்விக்குறியாகிவிட்டதாக கூறுகிறார். மே 10-ல் பிரசுரிக்கப்பட்டுள்ள கருத்தில், பூகோள பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புக்கள் தலைகீழாக அடிவானில் ''சரியான சூறாவளி'' அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளார். இப்போது முளைத்துக்கொண்டுவரும் பொருளாதார மீட்சி, எண்ணெய் விலைவாசிகள் உயர்வு, சீனாவில் கடும் பொருளாதார வீழ்ச்சி, அத்துடன் மத்திய ரிசேர்வ் சுழற்சியை இறுக்கமாக்கும் நடவடிக்கை ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தைகள் வட்டி விகிதங்கள் இறுக்கமாக்கப்படலாம் என்று எதிர்பார்ப்போடு ஏற்கனவே இயங்க தொடங்கிவிட்டன என்பதை Roach சுட்டிக்காட்டியுள்ளார். ''இதில் ஆபத்து என்னவென்றால் மிகப்பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புகின்ற தூரத்தைவிட நெடுந்தொலைவு மத்திய ரிசேர்வ் கடந்து செல்ல வேண்டியுள்ளது'' என Roach குறிப்பிட்டிருக்கிறார்.

வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் மத்திய ரிசேர்வ் கொள்கையை "இயல்பாக்குதல்" தற்போதுள்ள வரலாற்றிலேயே மிகக்குறைந்த விகிதங்களை மாற்றுமானால் தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் நிலவியதைவிட பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும், இதுதான் விளைவு என்று Roach எழுதுகிறார். இது ஏனென்றால் தற்போது ''முன்னெடுப்பு வர்த்தகம்'' மிகக்குறிப்பிடத்தக்க அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. நாணயத்தை இறுக்கமாக்கினால் ''வீட்டு அடமான மறுநிதி கடன் சுழற்சி மிகவேகமாக கீழ்நோக்கி சரியக்கூடும்'' ஏனென்றால் அத்தகைய கடன் சுழற்சி நுகர்வோர் செலவினங்களில் மிகப்பெரிய ஆரமாக உள்ளது.

இந்த மூன்று முக்கியமான பணவீக்க சக்திகள்---- பெருகிவரும் எண்ணெய்விலை, சரிந்துவரும் சீனப்பொருளாதாரம் மற்றும் பெருகிவரும் அமெரிக்க வட்டி விகிதங்கள் ஒன்றாக சந்திப்பதால்---- இப்போது உருவாகிக்கொண்டுள்ள பூகோள பொருளாதாரம் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகக்குறுகிய காலமே நீடித்திருக்குமென்று Roach எச்சரித்துள்ளார்.

Top of page