WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
போர்த்துக்கல்
Iraq debacle creates crisis in Portugal
ஈராக்கிய பேரிடர் போர்த்துக்கல்லில் நெருக்கடிகளை
உருவாக்கியுள்ளது
By Paul Mitchell
13 May 2004
Back to screen version
ஸ்பெயினில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கம் தனது படைகளை ஈராக்கிலிருந்து
விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்திருப்பது அயலிலுள்ள போர்துக்கல்லின் ஆளும் செல்வந்த தட்டிற்கு நெருக்கடிகளை
உருவாக்கியுள்ளது.
போர்துக்கல்லின் வலதுசாரி சமூக ஜனநாகக் கட்சி கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர்
யிஷீsங விணீஸீuமீறீ ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ
சென்ற நவம்பரில் தெற்கத்திய ஈராக்கிலுள்ள நசீரியாவிற்கு 128 இணை இராணுவமான குடியரசு தேசிய பாதுகாப்பு
படையை (Republican National Guard-GNR)
அனுப்பினார். அப்படைகள் அங்கு செல்வதற்கு சிறிதுகாலத்திற்கு முன்னர் அந்த நகரத்தில் டிரக் குண்டுவெடித்ததில் 15
இத்தாலிய போலீசாரும் இராணுவத்தினரும் மடிந்தனர்.
சென்ற மாதம் GNR
காவலர்கள் மூன்று பேர் திடீர் தாக்குதலில் காயமடைந்தார்கள், அப்போது அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள
வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், போர்துக்கல் மக்களில் 75-சதவீதம்
பேர் GNR
படைகளை திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தனர்.
பொதுமக்களது எதிர்ப்பையும் மீறி,
ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ
யுத்தத்திற்கு தீவிர ஆதரவாளராக செயல்பட்டார், அது ''நாட்டின் சிறந்த நலன்களுக்கு'' ஏற்புடையது என்று கூறினார்.
1974-ல் போர்த்துக்கல்லில் புரட்சி நடந்த போது அவர் போர்த்துக்கல் தொழிலாளர் மாவோவாத
கம்யூனிஸ்ட் கட்சி-யின் முன்னாள் தலைவராக இருந்தவராவார். சென்ற ஆண்டு ஈராக்படையெடுப்பு நேரத்தில்
Azores-
உச்சி மாநாட்டில் புஷ், பிளேயர், மற்றும் ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் ஜோசே மரியா அஸ்னர் ஆகியோருடன் மேடையில்
தோன்றியதுடன் அவருக்கு சர்வதேச புகழ் ஏற்பட்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரவணைப்பில் இருப்பதன் மூலம் தான் தங்களது நலன்களை
சிறப்பாக காப்பாற்றிக்கொள்ள முடியுமென்று கருதுகின்ற போர்துகீச ஆளும் செல்வந்த தட்டின் பிரிவை
ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ
பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ''இந்த பிரிவுகளை சார்ந்தவர்கள் போர்துக்கல்லின் ஏகாதிபத்திய வரலாற்றையும்,
அந்நாட்டு மிகப்பெரும் மாலுமிகளின் வரலாற்று சாதனைகளையும் நினைவு கூர்ந்து, மங்கிய பழைமைக்கு வர்ணம்தீட்டி உயர்வாய்
போற்றித் திளைப்பவர்கள்... (1974- புரட்சிக்கு பின்னர்) திடீரென காலனிகளுக்கு சுதந்திரம் தரப்பட்டது தவறான
நடவடிக்கை என்ற ஆதங்கத்தோடு நடமாடுபவர்கள்'' என்று இன்டர் பிரஸ் சர்வீஸ் ஆங்கில நியூஸ் அமைப்பின்
Mario de Querioz
கூறுகிறார்.
ஆளும் செல்வந்த தட்டின் எதிர்கால நோக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்ட
ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ
GNR படை
நடவடிக்கையில் கிடைக்கும் அனுபவம் ''இதுபோன்ற எதிர்கால நடவடிக்கைகளுக்கு பயனளிக்கும்'' என்று குறிப்பிட்டார்.
ஸ்பெயின் புதிய பிரதமராக
José Luis Rodriguz Zapatero ஈராக்கிலிருந்து தனது
1400 துருப்புக்களையும் திரும்ப அழைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்ததும் அவர் ''சந்தேகத்திற்குரிய
கொள்கைகளை'' கடைபடித்து வருவதாகவும் ''மங்கலான நடுநிலைவாத்தை'' கடைபிடிப்பதாகவும் அதனால்
பயங்கரவாதம் தான் ஊக்குவிக்கப்படும் எனறும் ஞிuக்ஷீஏஷீ
ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ அவர் மீது தாக்குதல் தொடுத்தார். போர்துக்கல்
"மேன்மை, துணிவு, மற்றும் சுதந்திரம்'' ஆகியவற்றை துறந்துவிடாது என்றும் போர்துக்கல்
GNR பிரிவை
ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
எதிர்கட்சியான சோசலிசக் கட்சி ஐ.நா-வின் கட்டளையின்றி ஈராக் போருக்கு
துருப்புக்களை அனுப்பக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் போர்த்துகல் ஈராக்கில் ஆக்கிரமிப்பு தொடர்வதில்
இணைந்துக்கொள்ளும் என்று சம்மதித்தது. கட்சித்தலைமை GNR
துவக்கத்தில் அனுப்பப்பட்டதற்கும் மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி நிர்வாகத்தில் வெளிவிவகார அமைச்சராக
பணியாற்றிவந்த Jose Lamego
-வை அரசுத் துறை செயலகத்தால் (Secretary
of state) அமெரிக்க ஆளுநர் (proconsul)
போல் பிரேமரின் கீழ் ஈராக்கில் ''முதன்மை ஆலோசகராக'' நியமிப்பதற்கும் ஆதரவு தெரிவித்து, இப்போது
Jose Lamego
ஈராக்கில் குடிவரவு-குடிபெயர்வு விவகாரங்களை கவனித்துவருகிறார்.
GNR ஐ விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற
கோரிக்கை ''மிக உயர்ந்த ஆபத்தான பணியில்... ஒரு பிளவினை ஊக்குவிக்கும் அரசியல் மோதலை ஏற்படுத்தும்''
என்று கூறிய Barroso, அக் கோரிக்கையை
எழுப்பவேண்டாம் என சோசலிச கட்சியிடம் கேட்டுக்கொண்ட வேளையில்,
போர்த்துக்கல்லின் தற்போதைய ஜனாதிபதியும் சோசலிசக் கட்சி தலைவருமான Jorge Sampaio,
அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்படைகளின் கடமைகளை ஐ.நா அங்கீகரிக்குமானால் ஈராக்கில் "இறையாண்மையை
மாற்றித்தருவதற்கு" நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதியான ஜூன் 30 வரை GNR
பிரிவு அங்கு நீடிப்பதை தாம் ஆதரிப்பதாக அறிவித்தார்.
தற்போது ஸ்பெயின் தனது படைகளை விலக்கிக்கொண்டிருப்பதாலும் ஈராக்கிலுள்ள
ஆக்கிரமிப்புப்படைகள் பேரழிவை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு போர்த்துக்கல்
நெருக்கமாக அடையாளம்காணப்படுவது லிஸ்பொன்-னில் அபாய ஒசையை ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
Zapatero-மீது தான் தெரிவித்த விமர்சனத்தை
ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ தற்போது மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.''
Madrid- க்கும், Lisbon-க்கும்
இடையே ஈராக் ஒரு சென்டி மீட்டர் அளவுக்குக்கூட கருத்து வேறுபாடுகளை உருவாக்கிவிட முடியாது'' என்று இப்போது
கூறியுள்ளார். போர்த்துக்கல் பக்கத்து நாட்டை பெரியளவு சார்ந்துள்ளது என்பதை இது அங்கிகரித்துள்ளது. (ஐரோப்பிய
ஒன்றியத்துடன் தனது வர்த்தகத்தில் 80 சதவீதத்தை நடத்தி வருகின்ற போர்த்துக்கல் மிகப்பெரும் பகுதி வர்த்தகத்திற்கு
ஸ்பெயினையே சார்ந்திருக்கிறது.) ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ அண்மையில்
Zapatero-வை சந்தித்து பயங்கரவாத எதிர் நடவடிக்கைகள் குறித்து
கலைந்துரையாடினார். ஜூன் மத்தியில் Euro 2004- கால்பந்துப்
போட்டிகள் நடைபெறவிருப்பதால் மீண்டும் எல்லைக்கட்டுப்பாடுகளை விதிப்பதுபற்றி போர்த்துக்கல் அரசாங்கத்தின்
உத்தேசம் குறித்தும் விவாதித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் கிரேக்க அராசங்கம் செய்ததைப்போல்
கால்பந்து போட்டிகளில் நேட்டோவின் (NATO) உதவியையும்
நாடப்போவதாக உள் நிர்வாக அமைச்சர் கிஸீtரஸீவீஷீ திவீரீuமீவீக்ஷீமீபீஷீ லிஷீஜீமீs-
ம் குறிப்பிட்டார்.
ஐ.நா- அமைப்பை ''சீர்திருத்தும்'' வகையில் அந்த அமைப்பின் ஈடுபாடு அதிகரிக்க
வேண்டுமென்ற சோசலிஸ்ட் கட்சி கோரிக்கையை ஞிuக்ஷீஏஷீ
ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ பயன்படுத்திக்கொண்டார். இது சம்மந்தமாக மே-7-ல்
International Herald Tribune
பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ
இணைந்து Mozambique-ஜனாதிபதியும்
ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருமான Joaquim Chissano-ம்
இணைந்து அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள், அதில் ''ஐக்கிய நாடுகள் அமைப்புமுறை தொடர்பான தோல்வி''
என்று அடையாளப்படுத்தி '' தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பல மோதல்கள் எதிர்பார்க்கப்பட்டிருக்குமானால்
அவற்றில் சிலவற்றை உரிய நேரத்தில் தகுந்த தலையீட்டின் மூலம் தடுத்திருக்க முடியும்'' என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
''தோல்வியுற்ற அரசுகளில்'' ''தடுப்பு'' நடவடிக்கையை எடுப்பதற்கு ஐ.நா பிரதான
பாத்திரத்தினை வகிக்கவேண்டுமென்றும், அதன் மூலம் இத்தகைய நாடுகளின் பொருளாதாரங்களை செயற்படுத்துவதற்கு
சர்வதேச நாணய நிதியமும் (IMF)
உலக வங்கியும் மற்றும் ஐ.நா- அமைப்புக்களும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் இருவரும் கோரிக்கை
விடுத்திருக்கின்றனர்.
1986-முதல் 1996-வரை போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவராக
இருந்த விஊக்ஷீவீஷீ ஷிஷீணீக்ஷீமீs
சென்ற மாதம் போர்த்துக்கல்லின் ஆழும் செல்வந்த தட்டினர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு அதிக நெருக்கமாக
இனங்காணப்படுவதனை பற்றிய அச்சத்தை மிக வெளிப்படையாக வெளிப்படுத்தினார். இப்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்
சோசலிஸ்ட் உறுப்பினராக பணியாற்றி வரும் இவர் Zapatero-வின்
''துணிவையும், அறிவுக்கூர்மையையும்'' பாராட்டினார்.
Azores உச்சிமாநாட்டை ''பொய்களின் உச்சிமாநாட்டு'' என்றும்
''அமெரிக்காவிற்கு கீழ்படிந்து நடக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான நடவடிக்கையை அந்த மாநாடு
துவக்கிவைத்துள்ளது எனவும்'' Soares
கண்டித்தார்.
போர்த்துக்கல்லில் தற்போது ''மிக ஆழ்ந்த நெருக்கடி நிலவுவதாகவும் அதில்
சிக்கிக்கொண்ட சில ஆளும் குழுவினர் சரியான பாதை எதுவென்று கண்டுபிடிக்கமுடியாமல் திணறுவதாகவும் அதே நேரத்தில்
மிகக்கடுமையான சமத்துவமின்மையாலும் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் வாடிக்கொண்டிருக்கும் மிகப்பெரும்பாலான
போர்த்துக்கல் மக்கள் இந்தச் சமுதாயத்தில் எல்லைதெரியாமல் கண்ணோட்டமின்றி விடப்பட்டுள்ளனர்'' என புகார் கூறினார்.
Soares போர்த்துக்கல் ஆளும் செல்வந்த தட்டில்
நிலவுகின்ற ஆழமான இருதலை கொள்ளி நிலையை கண்டித்தார். 10 புதிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1 தேதி
இணைகிற வரை போர்த்துக்கல் EU-வில் பரம ஏழை நாடாக
இருந்தது. EU- நிதிகளிலிருந்து போர்த்துக்கல்லுக்கு மிகப்பெருமளவில்
வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது புதிய உறுப்பினர்களுக்கு திருப்பிவிடப்படும் அல்லது ஒட்டுமொத்தமாக ரத்துச்செய்யப்படும்.
முந்திய சோசலிஸ்ட் நிர்வாகம் பல ஆண்டுகளாக மேற்கொண்டுவந்த சுதந்திர சந்தை கொள்கைகளின் விளைவாக
2002-ல் போர்த்துக்கல்லில் பொருளாதார மந்த நிலை தோன்றியது. EU-
பட்ஜெட் பற்றாக்குறை இலக்கை மீறிய முதலாவது EU நாடாக
போர்த்துக்கல் ஆயிற்று.
ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ வின் சோசலிச ஜனநாகக்கட்சி
கூட்டணி அரசாங்கம் 2002-ல் பதவிக்கு வந்தபோது கூட்டுநிறுவனங்களின் வரிகளை குறைப்பது பொதுசேவைகளுக்கான செலவினங்களை
வெட்டுவது மீதமிருக்கும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவது என்ற திட்டங்ளின் அடிப்படையில்
பதவிக்கு வந்தது. இந்த ஆண்டு கம்பெனி வரி 30 இலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும். 2006-ல் 20 சதவீதமாக
நிர்ணயிக்கும் இலக்கினைக் கொண்டிருக்கின்றது. இதனால் நிலவரம் மேலும் மோசமடையும் என்று அண்மையில்
Edinburgh Evening News ஒரு கட்டுரையில் வர்ணித்திருக்கிறது,
''போர்த்துக்கல்லின் 8-மில்லியன் மக்களில் எட்டில் ஒரு பகுதி மக்கள் பட்டினிகிடக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என ஒரு
மதிப்புமிக்க சமுக ஆய்வுக் குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறது. |