:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Democrats agree to suppress photos of US torture in Iraq
ஈராக்கில் அமெரிக்க சித்திரவதை பற்றிய நிழற்படங்களை மறைத்து வைக்க ஜனநாயக் கட்சியினர்
சம்மதம்
By Alex Lefebvre
15 May 2004
Back to screen version
அமெரிக்கப்படைகள் ஈராக் கைதிகள் மீது மிகப்பெருமளவில் நடத்திவரும் சித்திரவதைகள்
தொடர்பான சான்றுகள் தொடர்ந்து அம்பலத்திற்கு வந்து கொண்டிருப்பதால் செனட் ஆயுத சேவைகள் குழு தனது பொதுவிசாரணைகள்
மூலம் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்கு சட்டாம்பிள்ளையாக மாறி, அமெரிக்காவின் போர்க்குற்றங்களின் தன்மைகளை
மறைக்கவும் ஈராக் போரின் காலனித்துவ தன்மையை மூடிமறைக்கவும் செயல்பட்டுவருகிறது. உண்மையான வடிவத்திற்கு
ஏற்ப, காங்கிரசின் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் புஷ்ஷின் வெள்ளை மாளிகையிலும் பென்டகனிலும் முதன்மை குற்றம் புரிந்தவர்களை
மறைப்பதற்கான முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக, சட்டசபையின் முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்கள், குடியரசுக்
கட்சிக்காரர்களோடு சேர்ந்து அமெரிக்கப்படைகள் பிடித்துவைத்திருக்கும் ஈராக் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது
மற்றும் முறைகேடாக நடத்தப்படுவது தொடர்பான நிழற்பட சான்றுகளை மூடிமறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.
பென்டகன் வசமுள்ள நூற்றுக்கணக்கான குற்றம் சாட்டுகின்ற நிழற்படங்களையும், பாதுகாப்பு செயலர் டொனால்ட்
ரம்ஸ்பீல்ட் மற்றும் அவரது அதிகாரிகள் வசமுள்ள வீடியோ, துண்டுப் படங்களையும் கோரி பெறுவதற்குக்கூட மறுத்திருப்பது
செனட் விசாரணையின் மோசடித்தன்மையை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.
நாடாளுமன்றக்குழு ரம்ஸ்பீல்டையும் அவருடன் சம்மந்தபட்டவர்களையும், வெளிவேடமாக விசாரித்து
வருகிறது. வெள்ளை மாளிகையும் பென்டகன் தன்னிடமுள்ள முக்கியமான சான்றுகளை நாடாளுமன்றத்திற்கு தாக்கல் செய்ய
முடியாது என்று கூறுவதை அந்த விசாரணைக்குழு அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்
தொடர்பான எல்லா சான்றுகளையும் பரிசீலிப்பதற்கு அமெரிக்க மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை துச்சமாக மதிக்கின்ற
போக்கு ஒருபக்கம் இருந்தாலும், இப்படி இராணுவத்தின் முன் மண்டியிடுவது அரசியல் சட்டப்படி இராணுவம் மற்றும் நிர்வாகப்பிரிவுகளின்
நடவடிக்கைகளை கண்காணிக்க நாடாளுமன்றத்திற்கு தரப்பட்டுள்ள பொறுப்பை கேலிக்கூத்தாக்குவதாகும்.
அமெரிக்க ஜனநாயகம் எந்தளவிற்கு அழுகிக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு
நடவடிக்கையாக நாடாளுமன்றத்தின் இன்றைய பங்களிப்பையும் 1970-களின் ஆரம்பத்தில் வாட்டர் கேட் ஊழலின்போது
நிக்சன் நிர்வாகத்தின்மீது மேற்கொண்ட நிலைமையையும் எடுத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் அமெரிக்க ஆளும்
செல்வந்த தட்டிற்குள்ளேயே போதுமான எதிர்ப்பு ஒளிவுமறைவற்ற வகையில் குற்றவியல் மற்றும் போலீஸ் அரசு
போக்குகளுக்கு துணிச்சலாக நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தும் நிக்சன் வெள்ளை மாளிகை வாட்டர் கேட்
மூடிமறைப்பின் ஒலிநாடா பதிவுகளை விசாரணைக்கு தாக்கல் செய்யவேண்டும் என்றும் கோரியது. இன்றையதினம், விட்டுச்
சென்ற அத்தகைய மிச்சமீத ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விசுவாசம் கொண்டவர்கள் எவரும்
இல்லை.
மே 12-ல் இராணுவக் காவலின் கீழ் சித்திரவதை, பாலியல் முறைகேடுகள் தொடர்பான
1,800- நிழற்படங்கள் செனட் ஆயுத சேவைகள் குழுவிற்கு இரகசியமாக காட்டப்பட்டன. அப்போது நடைபெற்ற
நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் தரம் தாழ்ந்துவிட்டது என்பதை
எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. அந்தப்படங்களை பார்ப்பதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
எழுத்துபூர்வமாக ஓர் எச்சரிக்கை தரப்பட்டது. அந்த நிழற்படங்களைப் பற்றி வெளியில் அதில் சம்மந்தப்பட்டவர்களை
அடையாளம் காட்டுகின்ற வகையில் விளக்கம் தருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ''கூட்டாட்சியின் இரகசிய
சட்டங்களை'' (federal privacy laws)
மீறுவதாக ஆகும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். அதற்கு மேலாக புஷ்ஷின் குடியரசுக் கட்சி ஆதரவாளரும்
ஈராக்போரை ஆதரிப்பவருமான, செனட் ஆயுத சேவைகள் குழு தலைவர்
John Warner,
அத்தகைய நிழற்படங்களை பிரசுரிப்பது, ஈராக்கிலுள்ள அமெரிக்க அலுவலர்களுக்கு ''மேலும் எதிரிகள் சேதம்
விளைவிப்பதற்கு தூண்டுதலாக அமைந்துவிடும்'' என்று எச்சரித்தார்.
செனட்டர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசிய சட்டம் இயற்றும் வளாகத்தில்
''பாதுகாப்பான அறையில்'' ஒன்றாக கூடி இராணுவக்காவலரால் அவர்களுக்கு மிகவிரைவாக ஒன்றன் பின் ஒன்றாக
அமெரிக்கப்படைகளின் சித்திரவதை மற்றும் கொடு வெறி காம நடவடிக்கை பற்றிய நிழற்படங்கள் காட்டப்பட்டன. அந்த
நிழற்படங்களில் வந்திருக்கும் முறைகேடுகள் பற்றி விவரங்களைத் தருவதற்கோ, கருத்து தெரிவிப்பதற்கோ, அங்கு
காவலுக்கு நின்ற இராணுவ அதிகாரிகள் மறுத்துவிட்டதாக ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தகவல் தந்தது.
அந்த நிழற்படங்களைப் பார்த்த பின்னர் பல செனட் உறுப்பினர்கள் தங்களது கடும்
வெறுப்பை வெளிப்படுத்தினர், தாங்கள் எதிர்பார்த்ததைவிட அல்லது அமெரிக்க ஊடகங்கள் எடுத்துகாட்டியதைவிட
''படுமோசமான காட்சிகள்'' இடம்பெற்றதாக குறிப்பிட்டனர்.
மே- 7-ல் செனட் குழு ஒன்று ரம்ஸ்பீல்ட் -ஐ விசாரித்த நேரத்திலேயே பென்டகனிடம்
கொடூரமான அட்டூழியங்களை சித்தரிக்கும் நிழற்படங்கள் இருக்கின்றன என்பது தெளிவாயிற்று. அந்த நேரத்தில் குடியரசுக்
கட்சி செனட்டர் Lindsey Graham
கூறினார், ''நாங்கள் கற்பழிப்பு மற்றும் கொலைபற்றி இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை பொதுமக்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.'' நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காட்டப்பட்ட நிழற்படங்களில் போர்வீரர்கள் மடிந்துவிட்ட
ஈராக்கியரின் உடல்களுக்கு அருகில் நிற்பது, ஈராக் பெண்கள் ஆடை களையுமாறு நிர்பந்திக்கப்பட்டது, சிறை அதிகாரிகள்
கட்டளைப்படி ஒரு கைதியின் தலையை திரும்ப திரும்ப சுவற்றில் மோதியது மற்றும் பல்வேறு வகையான பாலியல்
முறைகேடுகள் அந்தப் புகைப்படங்களில் இடம்பெற்றிருந்தன.
இப்படி சித்திரவதைகளை பரவலாக பார்த்த சில செனட்டர்கள் இவை ஒரு சில
கட்டுப்பாடில்லாத முரட்டு போர்வீரர்கள் ஒருசிலரது தனிப்பட்ட நிகழ்ச்சிகள் என்று நம்ப முடியவில்லை, இது போன்ற
செயலுக்கான சங்கிலிக் கட்டளைகள் உயர்ந்த அதிகாரத்திலிருந்து ஒப்புதல் பெற்றிருக்கூடும் என்று கருதினர்.
என்றாலும், இந்த ஒட்டுமொத்த காட்சிக்குப்பின்னர், அந்த நிழற்படங்கள் அடங்கிய
12-குறுந்தகடுகளும் (discs)
பென்டகனுக்கு திருப்பித்தரப்பட்டுவிட்டன. வார்னர் அந்த நிழற்படங்களை மூடிமறைப்பதற்கான அதிகாரபூர்வமான
சாக்குப்போக்கை குறிப்பிட்டார்--- அவை குற்றவியல் புலன் விசாரணையில் ''சான்றாக தாக்கல் செய்யப்படக்
கூடியவை'' என்று குறிப்பிட்டார். இது தகவலை மூடிமறைப்பதற்கு கூறப்படுகின்ற பொதுவான காரணம். அந்த
நிழற்படங்கள் அந்தக் குற்றங்களுக்கு பிரதான பொறுப்பாளர்கள் கையில் இருக்க நாடாளுமன்றம் ஏன் அனுமதிக்கவேண்டும்
என்பதை விளக்கவில்லை.
இந்த சாக்குப்போக்கை மனித உரிமைக்குழுக்களின் வழக்கறிஞர்களும் அரசியல் சட்ட மற்றும்
சிவில் உரிமை நிபுணர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுபவர்களது சட்டப்பூர்வ
மற்றும் அரசியல் சட்ட உரிமைகளை திரும்பத் திரும்ப நிர்வாகம் அப்பட்டமாக மீறி வருகிறது என்று
விளக்கப்பட்டுவருகின்றது.
முன்னணி ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பென்டகன் அந்த நிழற்படங்களை இரகசியமாக
வைத்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். கலிஃபோர்னியா செனட்டர்
Dianne Feinstein-ம்
அமெரிக்க மக்களது பெயரால் நடத்தப்படும் போர்க்குற்றங்ளை அமெரிக்க மக்கள் காண்பதற்கு அவசியமில்லை என்று
மொட்டையாக குறிப்பிட்டார். ''நாங்கள் பார்த்தோம் அது முக்கியமானது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
எங்களுக்குத் தெரியும், நாட்டிற்கு ஒரு முன்மாதிரி காட்டப்பட்டு விட்டது அது போதும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
நியூயோர்க் ஜனநாயகக் கட்சி செனட்டர் சார்லஸ் சூமர் இன்னும் மோசமான வாதத்தை
எழுப்பி நிழற்படங்களை மறைப்பதை நியாயப்படுத்தினார். தொடக்கத்தில் அந்தப் படங்களை வெளியிட விரும்பியதாகவும்
''அதை [புகைப்படங்களை]
வெளியிடுவது [கைதி]
இரகசியத்தையும் ஜெனீவா உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துவிடும் என்று இராணுவ அதிகாரிகள் விளக்கம்
தந்தபொழுது" தனது கருத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கே ஜனநாயகக் கட்சி
''தாராளவாதிகள்'' அதே ஜெனீவா ஒப்பந்தங்களை மிகப்பெரும் அளவிற்கு மீறப்பட்டிருக்கும் சான்றை மூடி
மறைப்பதற்கு அதே ஜெனீவா ஒப்பந்த விதிகளை மேற்கோள் காட்டுகிறார்கள்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் மற்றும் பிற இடங்களில் புரிந்து
வருகின்ற குற்றங்களை மூடிமறைப்பதற்கு இரு கட்சிகளும் இணைந்து உடன்பட்டு அந்த நிழற்படங்களை மறைத்திருக்கின்றன.
ஜனநாயகக் கட்சிக்காரர்கள், பெரும்பாலும், அமெரிக்க மக்களிடம் உண்மையை மூடி மறைப்பதில், சாத்தியமான அளவிற்கு,
மறைக்க தங்களது தயார்நிலையை எடுத்துக்காட்ட முறையற்ற வழிகளில் சென்றுள்ளனர்.
இரண்டு கட்சிகளுக்குமிடையே எந்த அளவிற்கு அரசியல் ரீதியில் மிகவும் முறைகேடான உறவுகள்
நிலவுகின்றன என்பதை மே12-ல் பிரசுரிக்கப்பட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
வார்ணருக்கும் ஜனநாயக செனட் ஆயுத சேவைகள் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்
Carl Levin-க்கும்
இடையில் நிலவுகின்ற நட்புமிக்க உறவுகளை அக்கட்டுரை பாராட்டியுள்ளது.
Rutgers- பல்கலைக்கழக
அரசியல் நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி, வார்ணரையும், லெவினையும் ''ஒரு வயதான திருமண ஜோடிக்கு''
ஒப்பிட்டிருக்கின்றது. ''மிச்சிகனைச் சேர்ந்த லெவின் அதை மறுக்கவில்லை, நாங்கள் மிக நெருக்கமானவர்கள், நாங்கள்
இருவரும் ஒட்டுமொத்தமாக ஒருவரை ஒருவர் நம்புகிறோம், அதுதான்
எல்லாவற்றிற்கும் திறவுகோல்'' என்று அவர் கூறியதாக அந்தக்கட்டுரை விளக்குகின்றது.
இதற்கிடையில் வெள்ளை மாளிகை, பென்டகன், நாடாளுமன்ற குடியரசுக் கட்சிக்காரர்கள்
மற்றும் ஊடகங்களில் சில பிரிவுகள் ஈராக்கில் அமெரிக்கப்படைகள் புரிந்து வருகின்ற போர்க்குற்றங்களை நியாயப்படுத்தவும்
முறைமையானதாக்கவும் ஒரு பிரச்சாரத்தை தொடக்கியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் படங்களை பார்த்த
பின்னர், அமெரிக்க மக்களவை பெரும்பான்மை தலைவர் Tom
DeLay கூறினார்: ''சிலர் அதிகமாகவே எதிர்விளைவுகளை உண்டுபண்ணுகின்றனர்.
போருக்கு எதிரான மக்கள் இதை தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்."
செனட்டர் James Inhofe
(Oklahoma
குடியரசுக்கட்சி), செனட் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினர் மே -11-ல் விசாரணையின் போது அவர்
எதிர்தாக்குதலை தொடுப்பதற்கு முன்னணியில் நின்றார். அவர் ''ஆத்திரமூட்டலால் ஆத்திரமடைந்தேன்'' என்று
தெரிவித்தும், சித்திரவதைகளைவிட அந்த சித்தரவதைகள் சித்தரிக்கப்பட்டது தன்னை அதிகமாக ஆத்திரப்படுத்திவிட்டதாக
கூறி அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கு தனது முழுமையான குரலுடன் பாதுகாக்க தொடங்கினார். இவர் ''மனித
உரிமை நலன்புரிபவர்கள் சிறைச்சாலைக்கு உள்ளே இவர்கள் இப்போது ஊர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் மனித
உரிமைகள் மீறப்படுகிறதா என்பதை தேடிக்கொண்டிருப்பதாகவும்'' அவர்களுக்கு எதிராக விஷத்தை கக்கினார்.
சிறைச்சாலை முறைகேடுகள் பற்றி கண்டனம் செய்கின்ற ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நாட்டிற்கு துரோகம்
செய்வதாகவும், இந்த சித்திரவதை நெருக்கடியில் ஜனாதிபதி புஷ் ''திறமையற்ற'' நடவடிக்கை எடுத்திருப்பதாக
ஜனநாயகக் கட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட்டிருப்பதை கண்டித்தார்.
இப்படி Inhofe
பாசிச பாணியில் வெறிகொண்டு ஆர்ப்பரித்தபோது அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்
எவரும் மூச்சுவிடவில்லை. |