World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Divisions within ruling elite drive impeachment of Lithuanian president

ஆளும் செல்வந்த தட்டில் நிலவும் பிளவுகளால் லித்துவேனியா ஜனாதிபதி மீது பதவி நீக்க குற்றச்சாட்டு நிறைவேறியது

By Niall Green
23 April 2004

Back to screen version

லித்துவேனியா சமுதாய செல்வந்த தட்டுகளுக்குள் பெருகிவரும் பதட்டங்களை குறிக்கின்ற வகையில் அந்த நாட்டு நாடாளுமன்றம், ஜனாதிபதி ரோலன்டாஸ் பக்ஸாஸ் (Rolandas Paksas) மீது பதவி நீக்க விசாரணையை மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியுள்ளது. பக்ஸாஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக நாடாளுமன்ற சபாநாயகரும் பிரதான அரசியல் எதிரியுமான ஆர்துராஸ் போலோக்காஸ் (Arturas Paulauskas) தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

சென்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க பாதுகாப்பு அறிக்கையானது, பக்ஸாஸ் நிதிமுறை கேடுகளில் ஈடுபட்டதாகவும், ரகசிய தகவல்களை வெளியிட்டதாகவும், தனது சொந்த லாபம் கருதி ரஷ்யாவின் தொழிலதிபர் யூரி பொரிசோவிற்கு (Yuri Borisov) குடியுரிமை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பக்ஸாஸ் கருத்து வேறுபாடுகளில் சிக்கியுள்ளார்.

அரசாங்கத்தின் தலைவர், ஆனால் விரிவான அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதியின் பதவி நீக்க விசாரணையானது பெரும்பாலும் பிரதமரின் கையிலேயே உள்ளன. இது லித்துவேனியாவில் பல தசாப்தங்களுக்கு மேலாக சிக்கியுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையில் ஒரு வெடிப்பைக் குறிக்கிறது. 1991 ல் பழைய சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சி நடைபெற்றதிலிருந்து, பன்னிரண்டிற்கும் குறைவில்லாத அரசாங்கங்களால் லித்துவேனியா ஆளப்பட்டு வருகின்றது.

13 மாதங்களுக்கு முன்னர் பக்ஸாஸ் எதிர்பாராத வெற்றி பெற்று வால்டாஸ் அடம்குஸ்ற்கு (Valdas Adamkus) பிறகு பதவி வகித்தார். அவர் இரண்டுமுறை இதற்கு முன்னர் பிரதம மந்திரியாகவும், தலைநகர் வில்னியூசின் (Vilnius) மேயராகவும் இருந்துள்ளார். பக்சாஸ்சின் வெற்றியானது வழக்கமான விரோதப் போக்கில் அவரது எதிர்ப்பாளர்களால் பார்க்கப்பட்டது. அவர் லித்துவேனியாவில் ரஷ்ய மொழி பேசுகின்ற சிறுபான்மையினரின் செல்வமிக்க பிரமுகர்களோடு ஓரளவிற்கு தொடர்புகள் கொண்டவர் ஆவர். லித்துவேனியாவின் பெருவர்த்தக நலன்களை பிரதிபலிக்கின்ற அளவிற்கு போதுமான ரஷ்ய எதிர்ப்பு இல்லாதவர் என்று கருதப்பட்டு வருகிறார். 1990 கள் முழுவதிலும் அந்த நாட்டின் செல்வந்த தட்டினர் லித்துவேனிய பேரினவாதத்தை ரஷ்யாவிற்கும், அதிகமாக ரஷ்ய மொழி பேசுகின்ற சிறுபான்மை லித்துவேனிய மக்களுக்கும் எதிராக திருப்பிவிட்டுள்ளனர்.

இந்த ரஷ்ய எதிர்ப்புப் பிரச்சாரம், லித்துவேனியா ஆழமாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தயத்திற்கும் அடிமையாகிக் கொண்டுவருவதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடு ஏப்ரல் 1 ந் தேதி நேட்டோவில் சேர்ந்து ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும்'' ஈராக் ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டது. இதன் உறுதிமிக்க ஆதரவாளர்களாக முன்னணி அரசியல்வாதிகள் செயல்பட்டனர். மே முதல் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் லித்துவேனியா உறுப்பினராக சேரவிருப்பதால், இதற்கு முன்னேற்பாடாக பெருவர்த்தக நிறுவன ஆதரவுக் கொள்கைகளை இவர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

பக்ஸாஸ் நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பினராக சேர்வதை ஆதரிப்பவராக இருக்கிரார். மற்றும் அரசியல் முடிவுகளுக்காக பேரினவாதங்களையும் பயன்படுத்தவும் செய்கிறார். எவ்வாறாயினும், பக்ஸாஸிற்கு எதிராக பிரச்சாரம் நடத்தியவர்கள் அவரை ரஷ்ய நலன்களுக்கு அடிபணிந்து நடப்பவர் என்று சித்தரித்துக் காட்டி வருகின்றனர். லித்துவேனிய செல்வந்த தட்டினர் தங்களது கொள்கைகளுக்காக, மக்களது ஆதரவை திரட்டுவதற்காக ரஷ்யாவிற்கு எதிரான மிகுந்த பீதிகளைக் காட்டி தங்களது இயலாமைக்கு ஈடுகட்ட முயன்று வருகின்றனர்.

இதை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில், பக்ஸாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்காக, நாட்டின் பாதுகாப்புத்துறை தலைவர் மேர்சி லொறின்கஸ் (Mercys Laurinkus) மூலம் வேவுபார்க்க பாதுகாப்புத்துறை ஆரம்பித்தது. ஆறு மாதங்களுக்கு பின்னர் லொறின்கஸ் ஒரு பெரிய ஆவணங்கள் அடங்கிய குறிப்பை ஜனாதிபதி மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக தயாரித்து ஆர்துராஸ் போலோக்காஸ்ற்கு வழங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆவணம் ரஷ்ய அரசாங்க பாதுகாப்பு சேவைகளின் ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட்டன என்பதுதான். புட்டின் நிர்வாகத்திற்கு எதிரிகளாக ஆகக்கூடியவர்கள் என்று கருதப்படும் போரிசோவ் போன்ற வர்த்தக பிரமுகர்கள் செல்வாக்கை மட்டுப்படுத்த ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் முயன்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக லித்துவேனிய செல்வந்த தட்டுடன் இணைந்து செயல்பட அவை தயாராகின.

பக்ஸாஸ் சந்தேகத்திற்குரிய அல்லது கிரிமினல் நடவடிக்கைகளில் கூட ஈடுபட்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் மீது நடத்தப்பட்ட புலன்விசாரணை மற்றும் அதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பதவிநீக்க தீர்மானம் என்பன அரசியல் வாழ்வை தூய்மையாக்குவதற்கு உதவுவதாக இல்லை.

ஜனாதிபதிக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்கள் மீது நாடாளுமன்றம் முடிவு செய்யவேண்டும். எந்த ஒரு பதவிநீக்க குற்றச்சாட்டும் 141 உறுப்பினர் உள்ள நாடாளுமன்றத்தில் (Seimas) 85 உறுப்பினர்கள் ஆதரவோடுதான் நடைபெறமுடியும். ஆனால், பக்ஸாஸ் எந்த தவறையும் செய்யவில்லை என்று கூறினார். தன்னை அரசியல் நோக்கில் பழிவாங்கும் இறுதிக்கட்டம்தான் இந்த பதவிநீக்க குற்றச்சாட்டு என்று கூறினார். ''அரசியல் நோக்கங்களுக்காக ரகசிய சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அரசையே அழித்துக் கொண்டிருக்கவில்லையா?'' என்று அவர் கேட்டார்.

இறுதியில், நாடாளுமன்றத்தின் 86 உறுப்பினர்கள் யூரி பொரிசோவ்விற்கு சட்ட விரோதமாக லித்துவேனிய குடியுரிமை வழங்கியதாகவும் பொரிசோவ், தேர்தல் பிரச்சாரத்தின் போது பக்ஸாசிற்கு பிரதானமாக நிதியுதவி வழங்கினார் என்றும் கூறி அவருக்கு எதிராக வாக்களித்தனர். அத்துடன், லித்துவேனிய பாதுகாப்பு அதிகாரிகள், பொரிசோவ்வின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பதாக பக்ஸாஸ் எச்சரிக்கை செய்து ரகசியத் தகவலைகளையும் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதே நபர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இறுதியாக ஒரு சாலை அமைப்பு நிறுவனத்தை தனியார்மயமாக்கும்போது தனது நண்பர்களுக்காக சட்டவிரோதமாக பங்குகளை மாற்றித் தந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதரவாக 89 பேர் வாக்களித்தனர்.

இவ்வளவு குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது லித்துவேனிய அரசியல் விமர்சகர்கள் பலருக்கு வியப்பளித்திருக்கிறது. அவர்கள் ஜனாதிபதி வாக்கெடுப்பில் படுதோல்வியடைவார்கள் என்று எதிர்பார்த்தனர். இதற்கு முன்னர் அரசியல் நிர்ணய நீதிமன்றம் பக்ஸாசிற்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பை, பதவிநீக்க குற்றச்சாட்டு முடிவை முன்கூட்டியே தெரிவித்து விட்டதாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. மேலும் அவர் டிசம்பர் மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொள்ளவிருந்ததை புஷ் நிர்வாகம் மட்டம் தட்டியதால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன் மூலம் அவர் அதிகாரத்தில் இருக்கும் ஆற்றல் பெருமளவில் குறைந்துவிட்டதாக கருதப்பட்டது.

லித்துவேனியாவில் அதிகாரபூர்வமான அரசியலில் பொதுமக்கள் எந்தளவிற்கு வெறுப்புணர்வோடு ஆளும் வர்க்கத்தின் மீது இருக்கிறார்கள் என்பது இந்த பதவி நீக்க குற்றச்சாட்டின் மூலம் நீரூபிக்கப்பட்டிருக்கிறது. மக்களது அலட்சியத்தை எதிரொலிக்கிற வகையில்தான் மிகக்குறைந்த அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் பக்ஸாஸை பதவியிலிருந்து நீக்குவதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை. மறு தேர்தலில் அவர் கலந்துகொள்வாரானால் அவருக்கு வலுவான வெற்றி வாய்ப்புக்கள் உண்டு. அவர், மீண்டும் ஜனாதிபதியாகிவிடுவார் என்று சில கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்தன. தாராளவாத ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் கருத்து தெரிவிக்கும் போது, இவ்வளவு குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தங்களது தலைவர் லித்துவேனிய அரசியலில் செயலூக்கத்துடன் பங்கெடுத்துக்கொள்வார் என்பதைக் காட்டுவதாக குறிப்பிட்டார். ''இந்த வாக்கெடுப்பில் எந்த சிறப்பும் இருப்பதாக நான் கருதவில்லை. 100 பேர்கள் அவரை பதவியிலிருந்து அகற்ற வாக்களித்திருந்தால், அப்பொழுது நாங்கள் தோற்றிருப்போம்'' என்று குறிப்பிட்டார்.

தாராளவாத ஜனநாயகக்கட்சி தலைவர் வலான்டிநோஸ் மஸுருனி (Valentinas Mazuronis) இதுபற்றி நிருபர்களிடம் கூறிய போது, கோடை காலத்தில் நடைபெறவிருக்கும் புதிய ஜனாதிபதி தேர்தலில் பக்ஸாஸ் போட்டியிடுவதற்கு தமது கட்சி ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

லித்துவேனிய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்ஸாசிற்கு எதிரான பிரிவினர் ஜனாதிபதி பதவிக்கு ஏற்ற வேட்பாளரை தற்பொழுது பார்த்து வருகின்றனர். ஆனால் அந்தப்பணி சிக்கலானது. ஏனென்றால் மக்களில் ஒரு சிலர்தான் பெரியளவில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களாக உள்ளனர்.

1993 முதல் 1998 வரை ஜனாதிபதியாகப் பணியாற்றி வந்த சமூக ஜனநாயக கட்சி பிரதமர் அல்ஜிர்டாஸ் பிரசுஸ்காஸ், பக்ஸாஸ் போட்டியிட கருதுவதாகத் தெரிவித்தார். பக்ஸாஸ் பதவிநீக்கக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னணியில் நின்ற தற்காலிக ஜனாதிபதி போலோக்காஸ், தாராளவாத ஜனநாயக கட்சியைத் தவிர இதர கட்சிகள் ஒரே வேட்பாளரின் பின்னே அணி திரள முடிவு செய்வதைப் பொறுத்தே தான் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved