:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Why did Bush give Israel a green light to assassinate Hamas leader
Rantisi?
ஹமாஸ் தலைவர் ரன்டிசியை படுகொலைசெய்ய இஸ்ரேலுக்கு புஷ் பச்சக்கொடி காட்டியது
ஏன்?
By Chris Marsden
21 April 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஏப்ரல் 17-ல் ஹமாஸ் தலைவர் அப்துல் அஜீஸ் அல் ரன்டிசியை இஸ்ரேல், குண்டுவீச்சு
விமானம் தாக்குதல் நடாத்திப் படுகொலை செய்ததற்கு வாஷிங்டன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
ஒப்புதல் தந்ததா என்று கேட்பதை விட ஏன் ஒப்புதல் தந்தது என்றுதான் கேட்கவேண்டும்.
அரபு அரசுகளின் பகிரங்க விமர்சனங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி புஷ்ஷின்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் இந்த படுகொலைபற்றி முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்
வந்தது என்பதை மறுக்கின்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இப்படி தெரிவித்திருப்பது நம்பகத்தன்மை கொண்டதல்ல,
ஏனென்றால் மூன்று நாட்களுக்கு முன்னர்வரை கூட இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் ஜனாதிபதி புஷ்ஷோடு தீவிரமாக
கலைந்துரையாடல்களை நடத்திவந்தார்.
குறிப்பிட்ட நோக்கம் தெரிந்திராவிட்டால் கூட, அமெரிக்காவற்கு இதற்கு முன்னரே
அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது தெரியும் மீண்டும் நடகக்கூடும் என்பதும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும்
ஷரோனுக்கு மேலும் படுகொலைகளைச் செய்ய வேண்டாமென்று புஷ் எப்போதுமே எச்சரிக்கை செய்யவில்லை
அல்லது அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தவில்லை, அப்படி அவர் எளிதாக செய்திருக்க
முடியும்.
மாறாக, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை படுகொலையைக் கண்டித்து அறிக்கை எதுவும்
வெளியிட தவறியதுடன் சென்ற மாதம் Al-Rantisi-
ன் முன்னோடி ஷேக் அஹமது யாசின் கொல்லப்பட்ட நேரத்தில் வெளியிடப்பட்டதைப் போன்று ''பயங்கரவாதத்
தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு'' என்பதனையே வெளிப்படுத்தி
இருக்கின்றது.
பாலஸ்தீன பிரதமர்
Ahmed Qureia நியாயமான முடிவிற்கு வந்திருக்கிறார்.
''அமெரிக்கா ஊக்குவித்ததாலும் அமெரிக்க நிர்வாகத்தின் முற்றுமுழுதான சார்பினாலும் விளைந்ததுதான் இந்த இஸ்ரேல்
பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகள் என பாலஸ்தீன மத்திரி சபை கருதுகின்றது".
பாலஸ்தீன மக்களிடமிருந்து ''ஒரு தலைபட்சமாக பிரிதல்'' என்னும் ஷரோனின்
திட்டத்திற்கு வாஷிங்டன் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தந்ததன் முதல் விளைவுதான் ரன்டிசியின் கொலை. ஷரோன்
மேற்குக்கரை எல்லைகளை தன் நாட்டோடு இணைத்துக்கொள்ளும் திட்டத்திற்கு புஷ் ஆதரவு தந்ததனது, மத்திய
கிழக்கிலும் உலக விவகாரங்களிலும் ஒரு திருப்புமுனையாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் ''நேர்மையான
தரகராக'' தன்னை சித்தரித்துக்காட்ட வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சி இப்போது கைவிடப்பட்டுள்ளதை இந்த
நிகழ்ச்சி சமிக்கை காட்டுகிறது. இது மத்திய கிழக்கு முழுவதிலும் அரசியல் பதட்டங்கள் தீவிரப்படுவதைத்தான்
விளைவாக்கும்.
பாலஸ்தீன ஆணையத்தின் பேச்சாளர்
Yasser Abed Rabbo
எச்சரித்திருப்பதைப்போல் புஷ்ஷின் சமீபத்திய திருப்பம் ''மத்திய கிழக்கில் சமாதான முன்னெடுப்புகளின்
அஸ்திவாரம் முழுவதையும் அழிக்கின்ற ஆற்றல் கொண்டது''
இது மறுக்கவியலாதது. அமெரிக்கா சர்வதேச சட்டங்களைப் புறக்கணிக்கின்ற
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது, பாலஸ்தீனியர்கள் ஏற்கும் சாத்தியமில்லாதது. கிழக்கு ஜெருசலெம் உட்பட
மேற்குக்கரையின் 55 முதல் 60 சதவீத பகுதியை தன்வசம் சேர்த்துகொள்கிற வகையில் பாதுகாப்புச்சுவரை
கட்டுவதனை புஷ் ஆதரித்தார். இஸ்ரேலில் உள்ள தங்களது வீடுகளுக்கு பாலஸ்தீன அகதிகள், திரும்புகின்ற சர்வதேச
அங்கீகாரம் பெற்ற உரிமையை ஷரோன் மறுத்திருப்பதை அவர் ஆதரிக்கவும் செய்கிறார். வாஷிங்டனால்
உருவகிக்கப்படும் பாலஸ்தீனய அரசு என்று அழைக்கப்படுவது, அமெரிக்கா இப்பொழுது நடைபெறும் அபிவிருத்திகளை
தீவிரமாக ஆதரிக்கும் என்ற சூழ்நிலையில் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால் இன ஒதுக்கல் பாணியில்,
Banthustans
பாணியில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எல்லைகளைக் கொண்ட தேசமாக இருக்கும். அதே நேரத்தில் இஸ்ரேல்
''வான்வெளி, நிலவழித்தடங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள்'' ஆகியவற்றை மேற்குக்கரையிலும், காசாவிலும் தனது
கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கும்.
இந்த ஆக்கிரமிப்பு திருப்பத்துடன் இஸ்ரேல் பாதுகாப்புப்படைகளும்
Shin Bet
இயக்கமும் பாலஸ்தீனிய தலைவர்கள் தலையைத் துண்டாடுவதற்கான தனது முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்த
பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகள் மேற்குக்கரை மற்றும் காசா பகுதி அல்லது ஹமாசின் துவக்க
இலக்குகளோடு நின்றுவிடாது.
ஹமாஸ் ஒட்டு மொத்த தலைவரான
Khaled Meshaal
டெமாஸ்கசை தளமாக கொண்டுருக்கின்றார். இஸ்ரேல் காபினெட் அமைச்சர்
Gideon Ezra
''ரன்டிசியின் முடிவுதான் Khaled Meshaal-க்கும்
ஏற்படும்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய அறிக்கையின் தெளிவான விளைவுகள் என்னவென்றால் அரபு தலைநகரில் நடத்தப்படுகிற
தாக்குதல் தெளிவாக ஒரு போர் நடவடிக்கையாக அமையும்.
ஷரோன் பாலஸ்தீனய ஆணையத்தலைவர் யாசீர் அராஃபத்தின் உயிர்வாழ்க்கைக்கு
எதிராக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 4-ல்
Maariv
செய்தி பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் அராஃபத்திற்கும்
Hezbollah தலைவர்
Hassan Nasrallah- விற்கும் பாதுகாப்பு எதுவுமில்லை
என்று கூறியுள்ளார். ''ஒரு யூதரை கொல்லும் அல்லது ஒரு இஸ்ரேல் குடிமகனுக்கு தீங்குகள் செய்யும், அல்லது யூதர்களைக்
கொல்வதற்கு ஆட்களை அனுப்பும் எவரும் குறிவைக்கப்பட்ட மனிதர்தான். அவர் எந்த நேரத்திலும் தீர்த்துக்கட்டப்படலாம்''
என்று கூறியிருக்கின்றார்.
Nasrallah மீது தாக்குதல்
நடத்தப்படுவது லெபனான் மீதான தாக்குதாலாக அர்த்தப்படுகிறது. சிரியாவிலும் ஈரானிலும்
Hezbollah-வின்
ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் நடவடிக்கையாக அது அமையும்.
அராஃபத்தை கொலை செய்வது மேற்குகரை மற்றும் காசா பகுதிகளை அதிர
வைக்கும் மோதலில் ஆழ்த்துவதை தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டதல்ல. அந்த நோக்கத்தை, ஒரு
சாக்காகக்கொண்டு இஸ்ரேல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள
பாலஸ்தீன மக்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டுவதற்கு முயலும். இது இஸ்ரேலின் சமாதான இயக்கமான
Gush Shalom-ஐ
சேர்ந்த Uri Avnery
எச்சரித்திருப்பதைப் போல், ஷரோனின் ''உயர்ந்த பட்சத்திட்டமான மத்தியத்தரைக்டலுக்கும் ஜோர்தான்
ஆற்றுக்கும் இடையிலுள்ள அனைத்து நிலப்பரப்பையும் யூத அரசாக ஆக்கிவிட்டு அதில் யூதர்கள் அல்லாதவர்கள் எவரும்
இருக்கக்கூடாது'' என்பதாகவே இருக்கும். இந்த கடைசி இலக்கை தவிர்த்து இஸ்ரேல் பிரதமருக்கு இப்பொழுது
முன்னெடுத்து செல்வதற்கு வேறொன்றுமில்லை.
வாஷிங்டனில் மூலோபாயங்களை வகுக்கின்றவர்களுக்கும் அரசியல் ஆலோசகர்களுக்கும்
இவை நன்றாகத்தெரிந்திருந்தும், Tel Aviv-வில்
உள்ள தங்களது கைப்பொம்மையை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளையும் வெள்ளை மாளிகை கைவிட்டது ஏன்?
பெரும் அளவில் இது புஷ் நிர்வாகத்தின் ஆழமகிவரும் அரசியல் நெருக்கடியிலிருநது வரும் பதிலாகும்.
ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்ததன் முதன்மையான நோக்கம், மத்தியக்கிழக்கு
முழுவதன் எண்ணெய்வளத்தில் அமெரிக்காவின் எகபோகத்தினை தகராறுக்கிடமின்றி பாதுகாக்கவும், அதனது
ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்களிறுகு மேல்லாக பூகோள மேலாதிக்கத்தை
உறுதிபடுத்துவதுமேயாகும். ஆனால் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை.
ஈராக்கில் அமெரிக்கா பெருகிவரும் எதிர்ப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதை
ஊக்குவித்து வாஷிங்டனுடைய எதிரியான ஐரோப்பிய நாடுகள் அரபு பிராந்தியத்தில் தங்களது சொந்த நலன்களை
வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் ஈராக்கில் ஆக்கிரமிக்கப்பை தொடவது, தொழிலாளர்களது
வாழ்க்கைத்தரம் மற்றும் அவர்களது ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் ஆகிய இரட்டைத்
தாக்குதலைகளால் உள்நாட்டில் பொதுமக்களது எதிர்ப்பினை துண்டிவிட்டிருக்கின்றது, இதனால் நவம்பர் ஜனாதிபதி
தேர்தலில் புஷ் தோல்வியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் குடியரசுக்கட்சிக்காரர்கள் பெருகிவரும் துன்பங்களால் தங்களது கொள்கையை
கைவிடுவார்கள் என்று நம்புவது முற்றிலும் தவறானது. புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கை
செயற்திட்டங்ளை உருவாக்கித் தீவிரப்படுத்துவது அமெரிக்கச் சமுதாயத்தின் உச்சநிலையில் அமர்ந்திருக்கும்
அரை-கிரிமினல் நிதியாதிக்கக் குழுவாகும், இது வெள்ளை மாளிகை பின்வாங்குவதை சகித்துக்கொள்ளாது.
புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள வலுவான குரல்கள் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற
நிலையை ஏற்படுவதை வரவேற்பது மட்டுமன்றி அதை அடைவதற்கு வெளிப்படையாக அதை நோக்கி வேலை
செய்கிறன.
முதலாவதாக, இஸ்ரேலை ஆதரிப்பதால் கிடைக்கின்ற அரசியல் ஆதாயம்
என்னவெனில், தன் சொற்படி ஆடுகின்ற சியோனிச ஆதரவு ஊடகங்கள் இதனை இஸ்ரேலின் சொந்த
''பயங்கரவாத்திற்கு எதிரான போர்'' என சித்தரித்துக்காட்டும்.
இரண்டாவதாக, துணை ஜனாதிபதி டிக் செனியையும் பாதுகாப்பு அமைச்சர்
டொனால்டு ரம்ஸ்பீல்ட்டையும் சுற்றி வலம் வருகின்ற தீவிர வலதுசாரிக்குழு, சிரியாவுடன் அல்லது ஈரானுடன் ஒரு
போரைத்துவக்குதவதற்கு ஷரோனை ஊக்குவிக்க முடிவு செய்துவிட்டது, அது நடக்காவிட்டாலும், அந்த சாத்தியக்கூறு
உண்டு. அதே குழுவினர் ஈராக்குடன் ஒரு போரைத் துவக்குவதற்கு பல மாதங்கள் முயன்றனர். இந்த இரண்டு
நாடுகளையுமே புஷ் தனது ''தீய அச்சு'' நாடுகளில் சேர்த்திருக்கிறார். இந்த தன்னைத்தான ''போர்க்கால
ஜனாதிபதி'' என்று பிரகடனப்படுத்திக் கொண்டவரின் ஆலோசகர்கள் அவர் திரும்ப ஜனாதிபதியாகக் தேர்ந்தெடுக்கதப்படுவதற்கு
ஒரே வழி மற்றொரு போரை தூண்டிவிடுவதுதான் என்று நன்றாக முடிவு செய்வார்கள்.
இறுதியாக, புஷ் நிர்வாகம் உள்நாட்டிற்குத் நெருக்கமான வகையில், தேர்தலை
புஷ்ஷிற்கு சாதகமாக திருப்ப அல்லது, தேர்தல் நடக்காது தடுக்க ஒரு சம்பவத்தை உருவாக்குவார்கள்.
நியூயோர்க்கிலும், வாஷிங்டனிலும் 9/11- பயங்கரவாதி தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க மக்களை
யுதத்திற்குள் இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அச்சம் மற்றும் தேசபக்தி அகிய இரண்டு உணர்சிகளையும் மீண்டும் ஒரு
முறை தூண்டிவிடக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை நிர்வாகத்திற்கு வழங்கக்கூடிய ஒரு வகை
சம்பவத்தை உருவாக்கிக்காட்ட புஷ்ஷின் உள் அதிகார வட்டாரம் முயலும் என்பதை எந்த வகையிலும்
பொருத்தமற்றதென விலக்கிவிட முடியாது.
ஞாயிறன்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கொண்டலீசா ரைஸ் பயங்கரவாதிகள்
நவம்பர் தேர்தலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடுமென்று எச்சரிக்கை செய்தார். ''தேர்தல் சுழற்சி
நடைபெறுகின்ற நேரத்தில் அவர்கள் ஏதாவது செய்ய முயலக்கூடும் என்பதை நாம் கடுமையாக எடுத்துக்கொள்ள
வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார். ஈராக் போரை எதிர்ப்பவர்களை பயங்கரவாதிகளோடு மிகவும்
தொடர்புபடுத்தி ரைஸ் குறிப்பிட்ர். மார்ச் 11-ல் மாட்ரிட் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து ஸ்பெயினில்
போருக்கு ஆதரவான அஸ்னர் அரசாங்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்டது ''தவறான தகவல்களை'' காட்டுவதாக
அமைந்திருப்பதாகக் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இஸ்ரேல் இலக்குவைத்த ஹமாஸ்
மற்றும் இதர இஸ்லாமிய குழுக்களை கொலை செய்வது ஆகியவற்றால், பாலஸ்தீனய மக்களிடையே உருவாகின்ற ஆவேச
உணர்வு வெளிப்பாடுகள், பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகள் தூண்டிவிட அல்லது அப்படி ஒரு நடவடிக்கையை
அனுமதிக்க புஷ் நிர்வாகத்திற்கு போதுமான வாய்ப்பை உருவாக்கும். அத்தகைய ஒரு வாய்ப்பு நழுவவிடப்படாது,
ஏனெனில் புஷ் களவாடப்பட்ட தேர்தல் மூலம்தான் பதவிக்கு வந்தார், அதற்குப்பின்னர் ஆத்திரமூட்டல் மற்றும்
மோசடி மூலம்தான் ஆட்சி நடத்திவருகிறார், 2001-செப்டம்பர் 11-க்கு முந்திய மாதங்களில் அமெரிக்கா மீது
அல்கெய்டா உடனடி தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை திரும்பத்திரும்ப விடுக்கப்பட்டதை ஏன்
பொருட்படுத்தவில்லை என்பதற்கு இதுவரை எந்த விளக்கத்தையும் அவர் தரவில்லை.
நிலவரம் மேலும் ஆபத்தாகி கொண்டிருப்பதற்குக் காரணம் புஷ் மற்றும் ஷரோனுக்கு
ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் வராததாகும். ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர்
ஜோன் கெர்ரி, ஷரோனின் நிலம் பறிப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதுடன், ரன்டிசி கொலை செய்யப்பட்டதனை,
இஸ்ரேலுக்கு ''இந்த உலகில் பயங்கரவாத செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எல்லாவகையான உரிமையும்
உண்டு'' என்று நியாயப்படுத்தியுள்ளார்.
Top of page |