World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Scientists identify a gene that may block HIV

HIV ஐ தடைசெய்யக் கூடிய மரபு அணுவை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுணர்ந்துள்ளனர்

By Perla Astudillo
6 May 2004

Back to screen version

அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவ கல்வி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள், TRIM5-ஆல்பா என்னும் மனித மரபு அணு ஒன்றை அடையாளம் கண்டுணர்ந்துள்ளனர்; இது HIV எனப்படும் மனித தடுப்புசக்தியை முறிக்கும் விஷக் கிருமி உடலினுள் இருக்கும் திசுக்களை கிருமித்தன்மையுடன் பெருக்காமல் தடை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உடனடியாக மருத்துவத்துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் வாய்ப்பு இல்லை என்றாலும், பெப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு HIV உடைய வாழ்க்கை சுழற்சி பற்றி அறிவதற்கு முக்கியமான கட்டமாக இருந்து, வருங்காலத்தில் HIV தொற்றுக்கிருமி பரவாமல் தடுப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்குப் பெரிதும் உபயோகமாக இருக்கும்.

ரெசஸ் (Rhesus) குரங்கின் மரபு அமைப்பை நன்கு ஆராய்ச்சி செய்ததின் விளைவே இந்தக் கண்டுபிடிப்பாகும். குரங்கினத்தில் உள்ள மரபுக் கூறுபாடு ஒன்று HIV ஐ தடை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது என்பதை விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே அறிந்திருந்தனர். 1983ம் ஆண்டு HIV கண்டுபிடிக்கப்பட்டுச் சிறிது காலம் கடந்த உடனேயே, ஆராய்ச்சியாளர்கள், சிம்பான்சீ (மனித இனத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய) குரங்குவகையை தவிர வேறு எந்த உயிரினங்களையும் HIV தாக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். அப்பொழுதில் இருந்தே எந்த அல்லது எத்தகைய மரபு அணுக்கள் HIV தொற்றை தடைசெய்ய இயலும் என்பதைப் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்று, அதன் விளைவின் மூலம் இயன்ற அளவு மருத்துவ முறைகளை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சமீபத்திய கண்டுபிடிப்பு ரிசஸ் குரங்கின் 40,000 மரபு அணுக்களை ஒன்று விடாமல் ஆராய்ச்சிக்கு உட்படுத்திய நிலையைக் கொண்டிருந்தது. ஒரு பத்து ஆண்டுகள் முன்பு இவ்விதமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கமுடியாது; மனித இன மரபுத் தொகுப்புக்கள் (Human Genome Project) என்ற பிரிவில், ஆய்வுகளின் மூலம் மரபு அணு உத்திகளில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றத்தால், மரபு அணுக்களை வகைப்படுத்தி, குறித்துக் கூறக்கூடிய நிலை வந்துள்ளது.

ஹார்வர்ட் மருத்துவக் கல்வி நிலையத்தின் மாசச்சூசட்ஸ், பாஸ்டன் நகர Dana Farber புற்று நோய் கல்விக் கூடத்தில் இருக்கும் அறிவியல் வல்லுனர்கள், இந்தக் குறிப்பிட்ட புதுமையானவகை ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஒரு AIDs ஆராய்ச்சியாளரான ஜோசப் சோட்ரோஸ்கி இந்த ஆய்விற்குத் தலைமை தாங்கினார்; ஒரு ஹார்வர்ட் மருத்துவக் கல்வி நிலைய முனைவர் பட்ட முயற்சியாளர் மாத்யு ஸ்ட்ரெம்லெள பெப்ரவரி மாத இறுதியில் Nature என்ற விஞ்ஞான இதழில் வந்த அறிவியல் கட்டுரையின் தலைமை ஆசிரியராவார்.

27 வயதான ஸ்ட்ரெம்லெள கூறுகிறார்: "ஒரு வைக்கோல் போரில் ஊசியைத் தேடியது போல்தான் இது இருந்தது." முதலில் இவர் குரங்கின் மரபணுத் தொகுப்பைவைத்து 40,000 மரபு அணுக்களைப் பற்றிய முழுவிவரங்களை ஒரு நூலகம் போல் சேர்ந்தார். இது ஒவ்வொன்றும் பின்னர் மனித உயிரணுவில் நுழைகப்பட்டது; பொதுவாக HIV பாதிப்பிற்கு உட்பட்டிருந்துதான் தொற்றப்பட்டிருந்து இருக்கும். பின் விஷக்கிருமி உயிரணுவிற்குள் சேர்க்கப்பட்டு, மரபு அணு தொற்றைத் தடுக்கும் வலிமை கொண்டிரிந்ததா என்பது ஆராயப்பட்டது.

பாதிக்கப்பட்டிருந்த உயிரணுவை அடையாளம் காண்பதற்காக ஹார்வர்ட் குழு HIV கிருமி ஒரு பச்சைநிற ஒளிர் வண்ணத்தை வெளியிடுமாறு மாற்றி அமைந்தனர். வேறு விதமாகக் கூறினால் பாதிக்ப்பட்ட செல்கள் பளிரென்ற பச்சை நிறத்தில் ஒளிரும். இதைப் பற்றி டாக்டர் சோட்ரோஸ்கி விளக்கினார்: "உயிரணுக்கள் TRIM5 ஆல்பாவைக் கொண்டிருந்தவை, எவ்வளவு HIV யைச் செலுத்தினாலும் தொற்றுக்கு உட்படவில்லை. அவை கறுப்பாகவே இருந்தன. இது சக்தியுடன் HIV ஐ தடுத்திநிறுத்தியது."

TRIM5 ஆல்பா மரபு அணு உடலின் தடுப்பு முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படும் புரதம் ஒன்றை உற்பத்தி செய்கிறது; இது அயல் பொருட்டகளை இலக்கு கொண்டு தாக்கி அவற்றின் பாதிப்பு, தொற்றுத்திறனை தடைசெய்துவிடுகிறது. TRIM5 ஆல்பா புரதத்தின் மனித வகை குரங்குகளின் புரதத்துடன் முற்றிலும் இணையானவை அல்ல, அந்த அளவு திறமையுடன் HIV தொற்றைத் தடுக்கவும் அதனால் முடியாது.

வருங்காலத்தின் இக் கண்டுபிடிப்பின் மூலம் வரும் சாத்தியக் கூறுகள் பற்றி, சோட்ரோஸ்கி கூறினார்: "இந்தப் புரதம் கூடதலான செயலை மேற்கொள்ள உந்ததுதல் கொடுக்க முடியலாம். அதையொட்டி HIV தொற்றுக்கு எதிர்ப்புசக்தியின் அளவு பெருக்கப்படலாம்."

TRIM5 ஆல்பாவின் வலிமை தனிநபர்களுக்கு இடையே வேறுபடும் வாய்ப்புக்களும் உள்ளன. பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் குறிப்பிட்ட குழு மக்களை மட்டும், பல ஆண்டுகளாக விஷக் கிருமித் தொற்றுதல் வாய்ப்பு இருக்கக் கூடிய ஆனால் HIV தொற்றாத கென்ய (Kenyan) விலைமாதர்கள் உட்பட, ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்பு TRIM5 ஆல்பா புரதம் இம்மக்களிடையே தொற்றை எதிர்க்கும் தன்மையை கூடுதலாக கொண்டிருக்கக்கூடும் என்ற விளக்கத்தை அளிக்கலாம்.

HIV தொற்றை தடுப்பதில் TRIM5 ஆல்பாவின் பங்கு இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், இப்புரதம் HIV தன்மையை அறுத்து, விஷக்கிருமி தன் காப்புச் சுவரை உதிர்க்காமல் செய்யக்கூடும். விஷக் கிருமியில் மரபணு பொருளைக் காக்கும் வகையில் அதைச்சுற்றி ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ள வலுவான புரதம் தான் HIV உடைய தன்மையாகும். ஒரு விஷக் கிருமி உள்ளே நுழைந்து உயிரணுக்களை தாக்கும்போது இந்த காப்பை உதிர்த்து புதிய விஷக் கிருமிகள் உற்பத்தியாக வகை செய்கிறது.

TRIM5 ஆல்பா புரதம் இவ்வாறு "உதிர்தல்" வழிவகையை தடுக்கக் கூடும் என்று சோட்ரோஸ்கி கண்டுபிடித்துள்ளார். "எவ்வாறு HIV உயிரணுக்களில் நுழைகிறது என்பது பற்றி பல ஆண்டுகளாகவே தெரிந்து வருகிறோம். சமீபத்தில் விஷக்கிருமியின் வாழ்வுச் சுழற்சியின் கடைசிக் கட்டங்கள், அது உயிரணுவை நீங்கும்பொழுது, உள்ளன என்று ஒரு சித்திரத்தைக் கொண்டுள்ளோம். ஆனால், விஷக்கிருமி உள்ளே நுழைதல், விஷ RNA, DNA ஆக மாறுதல் பெறுகின்றன என்பவை இன்னும் இருண்ட பகுதியாகத்தான் உள்ளன" என்று அவர் விளக்கினார்.

அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று வியாதிகள் கல்விக்கூடத்தின் (US National Institute of Allergy and Ifectious Diserases) இயக்குனரான ஆன்டனி பெளக்கி என்பவருடைய கருத்தின்படி, இக்கண்டுபிடிப்பு, "HIV தீவிரமடைவதற்குமுன்பே, தொற்றின் தொடக்க கட்டங்களில் தலையிடுவதற்கு புதிய வகைகளை காட்டுகின்றது".

TRIM5 ஆல்பா மரபு அணு உற்பத்தி செய்யும் இந்தப் புரதம், தொற்றை தடுப்பதற்கு தனி உயிரணுக்களுக்குள் செயல்படும் ஒரு ஊக்கியின் முதல் உதாரணமாகும். உடலின் மற்ற தடுப்புச் சக்தி கூறுபாடுகள், anti-bdoies, வெள்ளை இரத்த அணுக்கள் ஆகியவை இரத்தசுத்திகரிப்பு முறையில் அயல் பொருட்களை அழித்துவிடுகின்றன.

TRIM உடைய மற்றைய உட்பகுதிகள் பல ஆண்டுகளாகவே கண்டறியப்பட்டவை ஆகும்; ஆனால் அவற்றின் பயன்பாடுகள் இதுவரை தெரியாமல் இருந்துவந்தன. "நாங்கள் உண்மையில் கண்டுபிடித்துவருவது இயற்கை முறையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஆகும்; இவை HIV தவிர மற்ற விஷக்கிருமிகளுக்கு எதிராகவும் செயல்பட்டுவரக்கூடும். நாங்கள் "முதல் உதாரணத்தை" இங்கு பார்த்து வருகிறோம். இயற்கையில் இது ஒன்றுதான் உதாரணமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என சோட்ரோஸ்கி விளக்கினார்.

HIV என்பது மறு இயக்க விஷக்கிருமிகள் (Retroviruses) என்ற பிரிவை சேர்ந்ததாகும். இவை உள்ளேயே "உற்பத்தி செய்யும்" உயிரணுக்களை புதிதாக பலமுறை பிறப்பிக்கச் செய்யும் வகையில் இடம் கொடுக்கும் உயிரணுக்களைக் கொன்று தாமே உடல் முழுவதும் பரவும் சக்தியையும் உடையவை ஆகையால் குறிப்பிடத்தக்க வகையில் தீய தொற்றுக்கள் ஆகும். தங்களுடைய நீண்ட கால பரிணாம வளர்ச்சியில் குட்டிபோட்டு பால் கொடுக்கும் உயிரனங்கள் இத்தகைய கிருமிகளைத் தாங்கியுள்ளன; ஆனால் அவற்றின் தீய விளைவுகளை அகற்றும் வகையில் அவை பிறப்பித்துக்கொள்ள முடியா வகையில் அதிக அளவு மரபு அணுக்களை வளர்த்திருக்க வேண்டும்.

"இந்த மரபு அணுக்கள், நாம் அறிந்தவரை, (TRIM-ஆல்பா போன்றவை) வெடித்துப் பெருகும் தன்மையுடையவை, விஷக் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை உடையவை" என்று டாக்டர் ஸ்டீபன் கோப், என்னும் கொலம்பியா பல்கலைக் கழக உயிரியில் பெளதிகப் பேரசிரியர் கூறியுள்ளார். "ஒருவேளை அவை அக்காரணத்தினாலேயே வளர்ந்திருக்கவும் கூடும்."

எனவே இந்தச் சமீபத்திய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி உலகில் ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மரபு அணுக்கள், புரதங்களை இவற்றை அடையாளம் கொள்ளவும், அவை எவ்வாறு குறிப்பிட்ட விஷக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் என்பது பற்றித் தகவல் கொடுத்தும், கொடிய, கொல்லும் வியாதிகளின் தீவிரங்களைக் குறைப்பதற்கும் எதிர்ப்பதற்கும் புதிய வகைகளை வளர்ப்பதற்கு அடிப்படையைக் கொடுக்கக் கூடும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved