WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
கிழக்கு ஐரோப்பா
Slovakia takes up membership in the European Union with extreme
right-wing presiden
ஸ்லோவக்கியா அதி-வலதுசாரி ஜனாதிபதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறுகின்றது
By Ute Reissner
26 April 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஸ்லோவாக்கிய ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு ஏப்ரல்
17-ல் நடைபெற்றது. Ivan Gasparovic
முன்னாள் பிரதமர் Vlakdimir Meciar
க்கு எதிராக வெற்றியாளராக முன்னுக்கு வந்தார். அரசியலில் மிகவும் வலதுசாரிப்போக்குள்ள இந்த இரண்டு
வேட்பாளர்களும் பரந்துபட்ட மக்கள் பிரிவினரால் வெறுக்கப்படுகின்றனர்.
ஒரு தசாப்தங்களுக்கு மேலாக
Meciar-ன்
நெருக்கமான நம்பிக்கையாளராக Gasparovic
விளங்கிவந்தார். 1991-ல் இவர்கள் இருவரும் அதிதீவிர வலதுசாரி
இனவாத ஜனநாயக சுலோவாக்கியா இயக்கத்தை (HZDS)
உருவாக்கினார். 1992 முதல் 1998 வரை Meciar
பதவியிலிருந்த போது ஸ்லோவாக்கியன் ஜனாதிபதி பதவியை
Gasparovic
வகித்திருந்தார்.
அண்மைக்காலத்தில், இருவருக்கும் இடையிலிருந்த உறவுகளில் தனிப்பட்ட பகை ஆதிக்கம்
செலுத்தியது. இதன் காரணமாக Meciar
2002 செப்டம்பரில் நடந்த தேர்தலில் கட்சியின் வேட்பாளர் பட்டியலில்
Gasparovic-க்கு
இடம் தரமறுத்துவிட்டார். அதற்குப் பதலடியாக
Gasparovic
HZDS-ல் இருந்து
பிரிந்து சென்று ஜனநாயகத்துக்கான இயக்கம் (HZD)
என்பதை தோற்றுவித்தார். பொதுவாக ஸ்லோவாகியாவில் இந்த இயக்கத்தை ''Meciar
இல்லாத HZDS"
என்று வர்ணிக்கிறார்கள்.
முடிவு செய்யும் இரண்டாவது சுற்றுவாக்குப்பதிவில்
Gasparovic-க்கு
1,079,592 வாக்குகள் (60 சதவீத வாக்குகள்) கிடைத்தன.
Meciar-க்கு
722,368 (40 சதவீத) வாக்குகள் வீழ்ந்தன. ஆக மொத்தமாக 44 சதவீத வாக்களரே
வாக்களித்திருந்தனர்.
ஏப்ரல் 3-ல் நடைபெற்ற முதல்சுற்று தேர்தலில்,
Meciar
தெளிவாக வென்றார். 6,50,242-வாக்குகள் (33 சதவீதம்) பெற்றார்.
Gasparovic
442,564 வாக்குகள் (22 சதவீத) பெற்றார் சில நூறு வாக்குகளள் பின்தங்கிய நிலையில்
Eduard Kukan
வந்தார். அவர் ஆளும் மிகப்பெரிய கட்சி வேட்பாளர் மற்றும் ஸ்லோவேனியா வெளியுறவு அமைச்சர்.
வாக்களிக்கும் உரிமைபடைத்த 4.2-மில்லியன் ஸ்லோவேனியர்களில் 48-சதவீதத்திற்கும் குறைவானவர்களே
வாக்களித்திருந்தனர்.
ஆளும் பழமைவாத கூட்டணி கடந்த ஆறு ஆண்டுகளுக்குமேலாக மேற்கொண்ட
கொடூரமான சமூகத் தாக்குதல்களின் காரணமாக மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டதால்,
Meciar மற்றும்
Gasparovic
போன்றவர்கள் அரசியலில் வெற்றி பெற முடிகிறது.
ஸ்லோவேகியா அரசாங்கம் ஏற்கெனவே ஸ்திரமற்ற நிலையில் உள்ளதால் இந்தத்
தேர்தல் முடிவுகள் நெருக்கடியை முற்றவே செய்யும். 68-நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஸ்லோவேகியா ஆளும்
கூட்டணிக்கு தேசிய சபையில் 150- சீட்டு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
Meciar
கட்சியான HZDS
26 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. கூட்டணி அரசாங்கத்திற்கு மேலும் இடர்பாடுகள் ஏற்படும் என்று
ஏற்கனவே அறிவித்திருக்கிறது. Gasparovic-ன்
HZD கட்சி நாடாளுமன்றத்தில் இப்பொழுது இடம்
பெற்றிருக்கவில்லை. ஆனால் மூன்றாவது பெரிய கட்சியான
Smer-ன்
ஆதரவைப் பெற்றிருக்கின்றது. அக்கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கிளர்ச்சி செய்து வருகின்றது.
அரசாங்கம் கவிழுமானால் ஜனாதிபதி தீர்க்கமான பாத்திரத்தை வகிப்பார் என்று
கருதப்படுகிறது, அரசியலமைப்பு படி புதிய பிரதம மந்திரியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவருடையதாகும்.
தேர்த்தெடுக்கப்ட்டவர் புதிய மந்திரி சபையை அமைப்பார் ஆனால் அந்த நியமனங்கள் ஜனாதிபதியால்
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இது தவிர ஜனாதிபதிக்கு உள்நாட்டு கொள்கை தொடர்பாக சில அதிகாரங்கள்
உண்டு. நகல் சட்டங்களை அவர் பாராளுமன்றத்திற்கு திரும்ப அனுப்பலாம், நாட்டின் இன்றைய ஜனாதிபதி
Rudolf Schuster சமூக கொந்தளிப்பிற்கு பயந்து பல
நிகழ்ச்சிகளில் நகல் சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்ப அனுப்பியுள்ளார்.
ஆளும் கூட்டணி குறுகலான சமூகத் தட்டை அடித்தளமாகக் கொண்டது மற்றும் அதற்குள்ளேயே
பிளவுகள் நிலவுகின்றன. ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னர் பொதுவான வேட்பாளர்பற்றி உடன்பாடு ஏற்படவில்லை.
துவக்கத்தில் பிரதமர் Mikulas Dzurinda
வின் ஸ்லோவாகிய கிருஸ்துவ மற்றும் ஜனநாயக ஒன்றியம் (SDKU)
அதன் வெளியுறவு அமைச்சர் Eduard Kukan-ஐ
முன்மொழிந்தது. அதற்குப்பின்னர் கிறிஸ்துவ-ஜனநாயக இயக்கம் (KDH)
தனது சொந்த வேட்பாளரை முன்மொழிந்தது. அதை ஹங்கேரியன் கூட்டணிக் கட்சி (SMK)
அதை ஆதரித்தது. தேர்தல்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்காவது கட்சியான
நியூ சிட்டிசன் கூட்டணி (ANO) Kukan
க்கு ஆதரவாக தனது சொந்த வேட்பாளரை விலக்கிக்கொண்டது. மொத்தம் 11 வேட்பாளர்கள் தேல்தலில்
போட்டியிட்டனர்.
கருத்துக்கணிப்புக்கள், பெருமளவில் மக்கள் கருத்துக்களை உருவாக்கும் தன்மை
கொண்டவை, கடைசி நிமிட கருத்துக்கணிப்பின் படி ஆளும் கட்சியான
SDKU விற்கு
தெளிவான வெற்றி முதல் சுற்றில் கிடைக்கும் என்று கோடிட்டு காட்டினர். அவரது தோல்வி
Dzurinda
அரசாங்கம் மேற்கொண்ட ''சீர்திருத்தக் கொள்கையை'' விடாப்பிடியாக ஆதரித்து வந்ததால்தான் உருவானது
என்று பல்வேறு விமர்சனங்ள் வெளிவந்தன. கிழக்கு ஐரோப்பா நாடுகளின் தரத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால்கூட
அரசாங்கம் மேற்கொண்ட சமூகநல வெட்டுத்திட்டங்கள் மற்றும் முதலாளிகளுக்கு காட்டிவந்த சலுகைகள்
மிகத்தீவிரமான தன்மை கொண்டவை. அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை பாராட்டுகின்ற வகையில்
ஸ்லோவேகியா வர்த்தக வட்டாரங்கள், அந்த நாட்டை ''Tatras
பகுதியின் புலி'' என்று பாராட்டினர்.
இறுதிச்சுற்று வாக்குப்பதிவின் போது முதலாளித்துவ ஆளும் கூட்டணியைச் சேர்ந்த
நான்கு கட்சிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தன.
பேச்சாளர் குறிப்பிட்டதைப்போல் Meciar-கும்,
Gasparovic
கும் இடையில் எவர் குறைந்த தீங்கு விளைவிப்பவர் என்று கூறிவிட முடியாது
என்றார். KDH-யும்
SMK-
யும் தனது ஆதரவாளர்கள் தேர்தலில் பங்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
SDKU மற்றும்
ANO ஆகிய இரண்டு கட்சிகளும் யாருக்கு வாக்களிக்கவேண்டும்
என்று பரிந்துரைக்கவில்லை மற்றும் வாக்குப் பதிவு செய்வது பற்றி தாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று
முன்னணித்தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் முற்றிலும் தந்திரோபாய எண்ணங்கள் உள்ளன. மிக
அதிகமான அளவிற்கு வாக்காளர்கள் தேர்தல்களை புறக்கணித்திருந்தால்,
Meciar
தனது ஸ்திரமான நம்பகத்தன்மையுள்ள வாக்காளர் ஆதரவோடு வெற்றி பெற்றிருக்க முடியும். முடிவு அரசாங்கத்திற்கு
மிகவும் அனுகூலமாக இருந்திருக்கும் ஏனெனில் ஜனாதிபதி
Meciar
பழமைவாத ஆளும் கூட்டணியுடன் இணைந்த முறையில்
தனது போட்டியாளர் காஸ்பரோவிக்கினால் ஆதரிக்கப்படும்
எதிர்க்கட்சியான
Smer
ஐ சிறந்த முறையில் எதிர் கொண்டிருக்க முடிந்நிருக்கும்.
காஸ்பரோவிக்கை பொறுத்தவரை தனது ஜனாதிபதி பதவிக்கு மிகப்பெரிய எதிர்கட்சி
ஆதரவு கிடைப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். ஏப்ரல் 17- தேர்தல்களுடன்
Smer மற்றும் தொழிற்சங்கங்களும் முன்கூட்டியே தேசிய
தேர்தல்களை நடத்துவதற்கான பொதுவாக்கெடுப்பையும் இணைத்துக்கொண்டிருகின்றன. வாக்குப்பதிவு மிகக்குறைந்த
அளவாக (36-சதவீதமாக) இருந்ததால் பொதுவாக்கெடுப்பிற்கான (referendum)
முன்மொழிவு தோல்வியடைந்தது.
சமுதாயப் பிரச்சனைகளை முன்நிறுத்தி மக்களை கவரும் ஆவேச உரையாற்றும்
SMGR
கட்சி தனது செல்வாக்கை பயன்படுத்தி நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அதிதீவிர பிற்போக்கு பிரமுகரை
உயர்த்திவிட்டது. Meciar
க்கு எதிராக காஸ்பரோவிக் குறைந்த தீங்குவுடையவர் என்று
Smer கட்சி
இடைவிடாது பிரச்சாரம் நடத்திவந்தது.
இரண்டு வேட்பாளர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் தேர்தல்
பிரச்சாரம் மிக கீழ்மட்டமான வழிவகைகளை எடுத்தது. பத்திரிகை செய்திகளின் படி தலைநகர வாக்குச்
சாவடிகளுக்கு வந்த பல வாக்காளர்கள் தங்களது கரங்களை ரப்பர் உரைகளால் மூடிக்கொண்டும் மற்றவர்கள்
தங்களது மூக்கை மூடிக்கொண்டு வந்தனர்.
Slovak Spectator
என்னும்
ஆன்லைன் செய்திப்பத்திரிகையான
Gasparovic
பற்றி எழுதியிருந்தது; ''ஆனால் அவரது கடந்த காலம் மிக நெருக்கமாக
Meciar-டன்
பின்னப்பட்டிருந்தால் பல வாக்காளர்கள் இருவருக்கும் இடையே நிலவும் வேறுபாடுகளை கண்டுபிடிக்க இயலாமல்
போய்விட்டனர், Meciar
ஐ வாக்காளர்கள் விரும்பாவிட்டால் அது காஸ்பிரோவிற்கும் தீங்காகவே
அமையும்''
Slovak Spectator -ன்
கருத்துப்படி, இந்த தர்மசங்கடமான நிலை ''அனாமதேய தேர்தல் பிரச்சாரம்'' என்ற பிரத்தியேக தன்மையை
உருவாக்கிவிட்டது. "காஸ்பரோவிக்கின் அரசியல் வரலாற்றை மக்கள் நன்கு அறிந்திருந்தும்,
Meciar
எதிர்ப்புப் போக்கு இருந்த, எல்லா பிரதான ஸ்லோவோக்கிய நகரங்களிலும் 'வாக்களிக்காவிட்டால் அது
Meciar-க்கு
ஆதரவாகப் போய்விடும்' என்ற பிரச்சார சுவரொட்டிகள் காணப்பட்டன..... உண்மையான பிரச்சாரத்தில்
ஈடுபடமுடியாத நிலையில் Gasparovic
தனக்கும் Meciar-கும்
கணிசமான வேறுபாடு உள்ளது என்று வாக்காளர்கள் கருதுவார்கள் என்று நம்பினார்."
Meciar முடிவற்ற நிலையில்
Gasparovic வெற்றி
Smer கட்சியிடம்
இருந்து பெற்ற ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. முன்னாள் ஸ்ராலினிச ஆளும் கட்சியின் வாரிசு அமைப்பான
மக்கள் கட்சியாகும். அக்கட்சிக்கு நடப்பு கருத்துக்கணிப்பில் கணிசமான ஆதரவு உள்ளது.
ஜூன் 13-ல் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில்
Smer கட்சி
30-சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஸ்லோவேகியாவின் சார்பில்
14-உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் அதில் நடப்பு நிலவரப்படி
Smer கட்சி
5-உறுப்பினர்களைப் பெறும். இந்த வேறுபாட்டை ஒப்புநோக்கும் போது கட்சித்தலைவர் அரசாங்கத்தின் சார்பில்
2 இடங்களைத்தான் பெற முடியும். 2002 செப்டம்பர் தேர்தல்களில் 13.6 சதவீத வாக்குடன்
Smer மூன்றாவது
இடத்தை பிடித்தது.
முன்னாள் ஸ்டாலினிச அரசாங்கக் கட்சியின் வாரிசு அமைப்பான ஜனநாயக இடது
கட்சியிலிருந்து (SDL)
பிரிந்த கட்சிதான் Smer. SDL
தலைவர் Robert Fico
1999 டிசம்பரில் கட்சியிலிருந்து பிரிந்தார். Smer
என்றால் ''செல்லும் திசை, நோக்கம்'' என்று பொருள்.
''ஸ்லோவாக்கியாவிற்கு சமூக மாற்று'' என்று அந்த அமைப்பு வாய்வீச்சு விவரணம் செய்கின்றது.
1998-ல் தேர்தல்களுக்குப் பின்னர்
SDL
அரசாங்கத்தை அமைத்த பின் விளைவாக இந்த பிளவு ஏற்பட்டது. அரசாங்கம் சமூக நலத்திட்டங்கள்மீது ஒன்றன்பின்
ஒன்றாக கொடூரமான தாக்குதல் தொடுக்க துவங்கியது.
SDL-கட்சி மிக
வேகமாக மக்களது செல்வாக்கை இழக்கத்துவங்கியது மற்றும் மூழ்குகின்ற கப்பலில் இருந்து தப்பினால் போதும்
என்று Fico
வெளியேறினார். SDL
க்கும் அக்கட்சிக்கும் சந்தை பொருளாதார ஆதரவுக்கொள்கைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.
''சீர்திருத்தங்கள்'' ''துன்பம் தருபவை ஆனால் அவசியமானவை'' என்று பிக்கோ வர்ணித்தார். ''சமூகத்தில்
நியாயத்தை நிலைநாட்டுகின்ற'' அதை மட்டும் ஒழுங்கமைக்க வேண்டும் என்கின்றனர்.
Fico அரசியல் வாய்வீச்சு மற்றும்
தேசியவாத கூச்சல்களுடன் இனவாத அடிப்படையில் ஸ்லோவேக்கியாவில் சிறுபான்மையினராக உள்ள ஹங்கேரிய
மற்றும் ரோமா மக்களை ஒதுக்கி வேட்டையாடி வருகின்றார்.
டோனி பிளேரையும் ஹெகார்ட் ஷ்ரோடரையும் முன்மாதிரியாகக் கொண்டுள்ளதாக
அவர் அறிவித்தார். அத்தோடு "Smer -மூன்றாவது
வழி" என்று தன்னை தெரிவித்துக்கொள்கிறது. EU
வில் ஸ்லோவேகியா உறுப்பினராக வேண்டும் என்று அது தீவிரமாக வலியுறுத்தி வருகின்றது. மார்ச் கடைசியில்
நேட்டோ கூட்டணியில் நாடு சேரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளது.
Fico மெக்கேருக்கு எதிராக பயன்படுத்திய
வாதம் 2001-ம் ஆஸ்திரிய அரசாங்கத்தில் Jörg
Haider இணைந்த முன்மாதிரியை அடிப்படையாகக்கொண்டது.
Haider
அரசாங்கத்தை சேர்ந்ததும் EU
ஆஸ்திரியாவுடன் தனது உறவுகளை தற்காலிகமாக முடக்கவிட்டது.
Meciar தேர்தலில்
வெற்றி பெற்றால் அது EU-
உறவில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று Fico
கூறினார். ஸ்லோவேகிய ஊடகங்களில் பல இதே நிலைப்பாட்டை மேற்கொண்டன. காஸ்பரோவிக்-கும் அதே
கொள்கைகளை பின்பற்றியபோதிலும் அவர் வெளிநாடுகளில் அதிகம் அறியப்பட்டவராக இருக்கவில்லை, எனவே
ஸ்லோவேக்கியாவின் செல்வாக்கு வெளிநாடுகளில் அதிகம் பாதிக்கப்படாது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
இத்தகைய விவாதங்கள் ஸ்லோவேக்கிய தொழிலாளர்கள் தங்களது சுதந்திரமான நலன்களை
காப்பதற்கு தெளிவான முடிவு எடுப்பதை தடுக்கும் நடவடிக்கையாகும்.
EU-ஐ பொறுத்தவரை
அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்தாலும், அவரை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான
பிரச்சனையும் இல்லை.
1990-களின் மத்தியில்
Meciar அரசாங்கத்தலைவராக இருந்த போது
EU அவருடன்
உறுப்பினர் நுழைவு தகுதிக்கான உடன்பாட்டுபேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்தது. அவர் இனவாதி என்றும் ஊழல்
மலிந்தவர் என்றும் முற்றிலும் ஜனநாயக விரோதக்கொள்கைகளை கடைபிடிப்பவர் எனவும்
EU-
சுட்டிக்காட்டியது, ஆனல் என்ன, அரசியல்ரீதியில்
Meciar-னது அப்பழுக்கில்லாத இரட்டைப் பிறவியான ஒரு ஜனாதிபதியுடன்
ஸ்லோவேகியா இப்போது EU
வில் இணைகின்றது.
Top of page |