WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
Marxism and the political economy of Paul Sweezy
Part 6: Writing
off the working class
மார்க்சிசமும், போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 6 : தொழிலாள வர்க்கத்தை நிராரித்தல்
By Nick Beams
13 April 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
இக்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர்
குழுவைச் சேர்ந்த, நிக் பீம்ஸ், தீவிர அரசியல் பொருளாதார நிபுணர் போல் ஸ்வீசியின் வாழ்வு, படைப்புக்கள்
பற்றி எழுதியுள்ள ஏழு தொடர் கட்டுரைகளில் ஆறாவது ஆகும். போல் ஸ்வீசி
Monthly Review
இன் நிறுவனர்-ஆசிரியராக இருந்து, 2004 பெப்ரவரி 27 அன்று நியூயோர்க், லார்ஷ்மன்டில் காலமானார்.
ஏகபோக மூலதனம், கருத்துருப்பெற்று எழுதப்பெற்ற காலத்தின் சூழ்நிலைகளின்
விளைவாகத்தான், போல் ஸ்வீசி "குறை நுகர்வுவாதத்திற்கு" வலியுறுத்தலை மாற்றிக் கொண்டார். 1950களின்
நடுப்பகுதியில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரையிலான பத்து ஆண்டு காலம், போருக்குப்பின்னான
பொருளாதார செழுமைக் காலம் ஆகும். குறிப்பாக மோட்டார்த்தொழில் நிறுவனங்கள் உள்ளடங்கலான பெருநிறுவனங்கள்,
விலைகளை நிர்ணயித்து, உற்பத்தி இலக்குளையும் நிர்ணயித்து இலாப விளைவுகளை திட்டமிட்டு அடைந்த காலத்தில், முதலாளித்துவமுறை
"நிலை முறிவு" என்று கூறப்பட்ட முற்கூறல்கள் தற்போது ஒருகாலும் நடைமுறைக்கு வராது என்றிருந்த நிலையில்,
உபரி மதிப்பை எப்படி பெருக்கி உறிஞ்சிக் கொள்ளுவது என்பதுதான் அது உற்பத்தி செய்வதைவிட முதலாளித்துவத்தை
எதிர்கொண்டு இருந்த முக்கிய பிரச்சினையாக இருந்தது.
தேக்க நிலையைத்தான் பெரிதும் கொண்டிருந்த போருக்குப் பிந்தைய ஆண்டுகளின்
கோட்பாட்டு மலட்டுத் தன்மையை கடந்து, மார்க்சிசத்தை நவீனப்படுத்துவதை தன்னுடைய ஆய்வு செய்கிறது என்ற
கருத்தை ஸ்வீசி கொண்டிருந்தார். ஆனால் இலாபவிகிதச் சரிவுக்போக்கைக் காட்டிலும், "குறைநுகர்வுவாதம்"
கருத்தின்மீது கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டிய நிலைப்பாட்டையும் தாண்டித்தான் ஆராயவேண்டும் என்று
இருந்தது. இதனால், சோசலிச போராட்டத்திற்கு முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது புறநிலையான தேவை
என்ற மார்க்சின் வரலாற்று முன்னோக்கை இவர் கைவிடவேண்டிவந்தது. மார்க்சை பொறுத்தவரையில், இலாபவிகிதச்
சரிவு போக்கு விதி, மூலதனம் தன்னுடைய தொடர்ந்த விஸ்தரிப்பை காணமுடியாத தடையின் வெளிப்பாடு ஆகும். முதலாளித்துவமே
தொடங்கியிருந்த, மனித நாகரிகத்தின் பாரிய முன்னேற்றத்தை தொடர்வதற்கு, சமூக உற்பத்தி முறையில் ஓர் உயர்ந்த
வடிவமைப்பு தேவைப்பட்டது.
ஆனால், ஸ்வீசி கருதியதுபோல், மூலதனம் முடிவில்லாமல் உபரி மதிப்பை கறந்து
கொண்டே செல்லமுடியும் என்றால், இந்த வரலாற்றுப் முன்னோக்கு தவறு என்று போய்விடும். இதை ரோசா
லக்சம்பேர்க் தெளிவுடன் விளக்கியுள்ளார்: "வல்லுநர்கள் கருத்தை ஏற்று, மூலதனக்குவிப்பின் பொருளாதார எல்லையற்றதன்மையை
எடுத்துக்கொள்வோமானால், சோசலிசம் தங்கியுள்ள முக்கிய அஸ்திவாரமே மறைந்துவிடும். அப்பொழுது நாம் தற்போதைய
உலகத்தின் அநீதி, தீமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உறுதியின் அடித்தளத்தில் மட்டும் சோசலிசத்தை
தொடர்புபடுத்திக்காட்டும் மார்க்சிசத்திற்கு முந்தைய அமைப்புக்கும் மற்றும் கோட்பாடுகளுக்கும்தான் சரணடையவேண்டும்.
[26]
இந்த வழிவகையைத்தான் சரியாக ஸ்வீசி பின்பற்றினார். ஏகபோக மூலதனத்தில்
சோசலிச முன்னோக்கு முதலாளித்துவ உற்பத்திமுறையில் உள்ள புறநிலையான முரண்பாடுகளில் அடித்தளமாக
கொண்டிருக்கவில்லை. மாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள பகுத்தறிவற்ற தடைகளைக் கடப்பதற்கும்,
அவை அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதை தவிர்ப்பதற்குமான வழியாக கையாளப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
"மனித வாழ்வை விஷமாக்கும் வெற்றுத்தன்மை, இழிவு, கஷ்டங்கள் என்ற சமுதாயத்தின் தன்மை, ஏகபோக முதலாளித்துவத்தின்
அறிவுபூர்வமற்ற, மற்றும் அறவழியில் திவாலான தன்மையினால்தான் வந்துள்ளன. ...ஒரு வீணான, அறிவுபூர்வமற்ற
அமைப்பை அகற்றுவதற்கு, உண்மையான அறிவுபூர்வமான தன்மையைக் கொண்ட முறையை பயன்படுத்தவேண்டிய
கட்டாய நிலைக்கு வந்து விட்டோம்."[27]
மார்க்சின் கருத்துக்களை, தத்துவார்த்த வளர்ச்சிப் பார்வையில் மறுபரிசீலனை
செய்கிறேன் என்று புறப்படுபவர்கள் அனைவரும் ஒருகட்டத்திற்கு வந்தவுடன் ஸ்வீசி கருதுவதுபோல் எதிர்கொள்ளுவது,
திரட்சியின் வழிவகையில் இருக்கும் முரண்பாடுகள் கடக்கப்பட்டுவிட்டன என்ற நினைப்பில், அவர்கள் தங்களது வழியை
முன்கொண்டுவருவதான விந்தைகளாகும். 1960 களின் நடுப்பகுதியில் இருந்து, இலாபவிகித வீழ்ச்சிப் போக்கு
சரியத்தலைப்பட்டது. 1970 களின் ஆரம்பத்தில், உலக முதலாளித்துவம் 1930 களுக்கு பின்னரான மிகப்பெரிய
நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
புதிய இடது
இந்த ஆழ்ந்த நெருக்கடிதான் அமெரிக்கா உட்பட தொழிலாள வர்க்கம் எல்லா
இடங்களிலும் எழுச்சியுற்றமைக்கு காரணமும், விளைவும் ஆகும். 1968லிருந்து 1975வரை, இந்தப் போராட்டங்கள்
பல நாடுகளில் புரட்சித் தன்மையை பெற்றிருந்தன. தன்னுடைய முடிவில்லாத உபரி மதிப்பின் திரட்சி என்ற
தத்துவத்தில், குறைந்த பட்சம் முன்னேறியுள்ள முதலாளித்துவ நாடுகளிலாவது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர
பங்கை பயனற்றது என்று நிராகரித்திருந்தார்.
எந்த சமூகசக்தி முதலாளித்துவத்தை தூக்கிவீச அடிப்படையாக இருக்கும் என்ற
கேள்வியை எழுப்பி, ஏகபோக மூலதனம் அதற்கு முடிவு கூறுகிறது: "மரபு வழியிலான மார்க்சிச நெறி
இதற்கு கூறும் விடை, முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் இறுதியில் புரட்சிக்கு எழும்
என்பது இனியும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. தொழிற்துறை தொழிலாள வர்க்கம் அமெரிக்காவிலேயே ஒரு
குறைந்துகொண்டிருக்கும் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அடிப்படை தொழிற்துறைகளில் அவர்களுடைய
அமைப்புமுறைகள் பெருமளவிற்கு நுகர்வோர் முறை என்ற விதத்தில் அவ்வமைப்பினுள் கரைந்துவிட்டதுடன்,
கருத்தியல்ரீதியாக சமுதாயத்தின் இயல்புகளை ஏற்றுக் கொண்டுள்ள உறுப்பினர்கள் என்ற நிலையில்தான்
இருக்கின்றனர். அவர்கள் மார்க்ஸ் காலத்தில் தொழிற்துறை தொழிலாளர்கள் இருந்ததுபோல் அவ்வமைப்பு முறையின்
முக்கிய பாதிப்புக்குள்ளானவர்களாக இல்லை; அவர்கள் அதன் அடிப்படைத்தன்மை, மற்ற அறிவுபூர்வமற்ற
தன்மையினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சமூகத்தின் மற்ற வர்க்கங்கள், தட்டுக்கள் போல்தான்
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாது ஒரேமாதிரி அத்தாக்கத்தை கொண்டிருக்கின்றனர்."
இந்தப் பார்வையை வலியுறுத்தும் வகையில் ஸ்வீசி தொடர்ந்தார்: "நம்முடைய
கவனத்தை சிறப்பான ஏகபோக முதலாளித்துவத்தின் உள் இயக்கங்களில் செலுத்துவோமே ஆயின், இருக்கும் நிலையை
அகற்றுவதற்கு புரட்சி நடவடிக்கையை மேற்கொள்ளும் முறை என்பது மிக மிக இயலாதது என்ற முடிவை
தவிர்ப்பதற்கு இல்லை. இந்தக் கோணத்தில் இருந்து காணும்போது, தற்போதைய சமுதாயத்தின் இழிநிலை
தொடரும் என்றும், இம்முறையின் கட்டாயங்களுக்கும் மனித இயல்பை ஒட்டிய அடிப்படை தேவைகளுக்கும் இடையே
உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் அழியும் என்றும்தான் தோன்றுகிறது. எனவே தர்க்கரீதியான விளைவு,
பெருகிய முறையில் ஆழ்ந்த மனப்பாதிப்புக்கள் பரவி, பெருங்குழப்பங்கள் மலிந்து, இறுதியில் முறை நிலை முறிவுற்று,
தகர்ந்து, தன்னுடைய விருப்பத்தின்படி அது செயல்படமுடியாமல் திகைத்து நிற்கும் நிலை வரும் என்பதே ஆகும்''.
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டங்கள் என்ற முறையில்
கியூபா புரட்சி, வியட்நாம் போர் என்ற வெடிப்புக்களின்மூலம் தொடுவானத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஸ்வீசி
கூறுகிறார்: "மிக உயர்ந்த எதிர்ப்பின் வடிவமைப்பு, ஒரு புரட்சிப்போர் தோன்றி உலக முதலாளித்துவ முறை
திருப்பப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படுதலும், சோசலிச அடிப்படையில் சமூகப், பொருளாதாரச் சீரமைப்பு
தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது ஆகும்."[28]
இந்த வெகுஜன போராட்டங்கள் 1960களின் நடுப்பகுதியிலிருந்து முன்னேற்றமடைந்த
முதலாளித்துவ நாடுகளில் உள்ள மாணவ இளைஞர்கள் தீவிரமயப்படுத்துவதில் மத்திய பங்கை வகித்தது. ஆனால் இந்த
மாணவர் இயக்கம், ஓர் ஆழமான போக்கின் ஆரம்ப வெளிப்பாடு மட்டுமே ஆகும். முன்பு அடிக்கடி நடந்தது
போலவே, பெரும் வர்க்க மோதல்களின் எழுச்சிக்கு முன்னோடியாகத்தான் சமுதாயத்தில் எளிதில் கிளர்ச்சியடையும்
பிரிவான மாணவர்களில் இத்தகைய கிளர்ச்சிகள் நடந்தன.
அனைத்துவிதமான குழப்பங்களும், தப்பான எண்ணங்களும் மாணவர் இயக்கங்களை ஆதிக்கத்திற்கு
உட்படுத்தியிருந்தன; அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் பங்கு பற்றி தெளிவு இல்லை. அமெரிக்காவில் குறிப்பாக
இது இவ்வாறுதான் இருக்கமுடியும்; ஏனெனில் கம்யூனிச எதிர்ப்பு உணர்வு தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால்,
குளிர்யுத்த காலத்தில் தொழிலாளர் இயக்கத்தை நலிவுறச்செய்வதற்கு பெரும் மோசமான பங்கை வகித்தது.
ஆனால், ஏகபோக மூலதனத்தின் மேலே கூறப்பட்டுள்ள பகுதிகள்
தெளிவாக்கி இருப்பதைப் போல், மாணவர்களின் தவறான கருத்துக்களுக்கு அறைகூவல் விடுவதற்கு பதிலாக,
மற்றைய அரசியல் போக்குக்கள் இணைத்துக் கொண்டுவந்து "புதிய இடது" என்று கூறப்படுவதைத்தான் ஸ்வீசி
வலியுறுத்தியும், அதுவும் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரப்
பங்கு கிடையாது என்று வலியுறுத்தியும், மூன்றாம் உலகத்தின் தேசிய விடுதலை விடுதலைப் போராட்டங்களை
புகழ்ந்து எழுதியும்தான் பேசியிருக்கிறார்.
சோசலிசத்தின் சர்வதேச தன்மையை ஸ்வீசி பொதுவாக ஏற்றுக்கொண்டிருந்தாலும்,
ஸ்வீசி சோசலிசப் புரட்சியை, தேசிய அடித்தளத்திலான பல போராட்டங்களின் தொடராக கருதியதுடன், இதில்
முதலாவதாகத் தோன்றியது சோவியத் ஒன்றியம் என்கிறார். ஆனால் 1960 களில் குருஷ்சேவின், 1956
சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ம் காங்கிரசின் "இரகசிய உரையில்" பல விடயங்கள் வெளிவந்ததை
அடுத்து, பல அறிவுஜீவிகளுக்கு, ஸ்வீசியும் அவர்களில் ஒருவர்தான், ஸ்ராலினிசத்தின் குற்றங்களை மறுக்கவோ, அது
உருவாக்கிய பேரழிவுகளை மறுக்கவோ இயலாமல் போய்விட்டது. ரஷ்ய புரட்சியின் சீரழிவிற்கு காரணம் என்ன
என்ற முழுமையான மதிப்பீட்டை அவர்கள் மேற்கொள்ளவில்லை. தங்களுடைய விசுவாசத்தை காஸ்ட்ரோவிற்கும்,
மாவோவிற்கும் மாற்றிக் கொண்டனர்.
இந்த நிலைப்பாடு, ஸ்வீசியை நான்காம் அகிலத்திற்குள் வளர்ந்த பப்லோவாதப்
போக்கின்பால் இட்டுச் சென்றது; அதுவோ தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கை நிராகரித்திருந்தது.
1950ன் முற்பகுதிகளில், மிசேல் பப்லோ மற்றும் அவருடன் நெருங்கி ஒத்துழைத்த ஏர்னஸ்ட் மண்டேல் இருவரும்,
1938ல் நான்காம் அகிலத்தை தோற்றுவிக்க ட்ரொட்ஸ்கி கொண்டிருந்த முன்னோக்கு மறு ஆய்வுக்குட்படுத்தவேண்டும்
என்ற கருத்தைக்கூறி "ஒரு புதிய உலக யதார்த்தத்தை" பிரதிபலிக்க, சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான
போராட்டத்தின் மூலம் புரட்சிக் கட்சியின் தலைமையின் கீழ் வெளிப்படாது என்ற கருத்தை வளர்த்தனர். மாறாக,
அது "முதலாளித்தவ ஆட்சிகள் மற்றும் ஸ்ராலினிச உலகம்" இவற்றிற்கு இடையே எழும் மோதல்களின் விளைவாகத்
தோன்றும் என்றும் இதற்கிடையில் உருக்குலைந்த தொழிலாளர்களின் அரசாங்கங்கள் என்ற வழிவகை தோன்றலாம்
என்றும் அவை பல நூற்றாண்டுகள் கூட செயல்படும் என்றும் கூறியிருந்தனர்.
1960களின் ஆரம்பத்தில்
Monthly Reviewம்
பப்லோவாதிகளும் நெருக்கமாகவரத் தலைப்பட்டனர். ஹபர்மன்னும், ஸ்வீசியும் காஸ்ட்ரோ தலைமையிடத்திடம்
நெருங்கிய உறவுகளை கொள்ள தலைப்பட்டனர். அதேநேரத்தில் பப்லோவாதிகள், உலகப்புரட்சியின் மையத்தானம்,
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டாமாக மாற்றம் கண்டு விட்டது என்று கொள்ள தலைப்பட்டனர். அவர்கள்
காஸ்ட்ரோ, கியூபாவில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவிய "நனவற்ற மார்க்சிஸ்ட்" என்றும் கூறினர்.
இந்தப்புதிய கூட்டு 1960களின் பிற்பகுதியில், 1953ல் அமெரிக்க சோசலிச
தொழிலாளர் கட்சியிலுருந்து பிரிந்திருந்து, ஒரு காலத்தில் பப்லோவாத கொக்கிரான்-கிளார்க் போக்கின் முக்கிய
சிந்தனையாளராக இருந்த ஹாரி பிரேவெர்மன் (Harry
Braverman)
Monthly Review பதிப்பக முயற்சிகளின் பொறுப்பை
ஏற்றுக்கொண்டதில் தனது புது அடையாளத்தை காட்டியது.
குறிப்புகள்:
26. Rosa Luxemburg
Anti-Critique in Imperialism and the Accumulation of Capital Kenneth
J. Tarbuck ed. Allen Lane London 1972 p. 76
27. Paul Baran and Paul Sweezy, Monopoly Capital Monthly Review
Press New York 1968 p. 363
28. Baran and Sweezy op cit pp. 363-365
See Also :
See Also :
மார்க்சிசமும் போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 1 : ஆரம்பகால ஆதிக்கம்
மார்க்சிசமும் போல்
ஸ்வீசியின்அரசியல் பொருளாதாரமும்
பகுதி 2 : முதலாளித்துவ அபிவிருத்தியின் தத்துவம்
மார்க்சியமும், போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி-3 : தத்துவத்தின் நிலைமுறிவு
மார்க்சிசமும், போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 4: ஏகபோக மூலதனம்
மார்க்சியமும், போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 5 : " உபரி மதிப்பின் எழும் போக்கு
Top of page |