WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா
China "overheating" spells trouble for world economy
உலகப்பொருளாதாரத்திற்கே சங்கடத்தை ஏற்படுத்தும் சீன முதலீடுகள் ''வீக்கம்''
By Nick Beams
5 May 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
உலகப்பொருளாதாரம் தொடர்ந்து சீனாவின் இடைவிடாத முதலீட்டு பெருக்கத்தை
நம்பியிருக்கும் முதலீட்டு பூரிப்புப்போக்கு, சீனப் பொருளாதாரத்தில் "அளவுக்கதிக சூட்டை" கட்டுப்படுத்தும் நடவடிக்கை
பற்றிய எச்சரிக்களை அடுத்து சென்றவாரம் உலகச்சந்தைகளில் அதிர்வு அலை உருவாகியதை கோடிட்டுக்காட்டுகிறது.
வளர்ந்து வரும் பண அளிப்பு, உயர்ந்து செல்லும் வங்கிக்கடன் மற்றும் நிரந்தர முதலீடுகள்
அதிகரிப்பு இவற்றுக்கு மத்தியில், சென்ற ஆண்டு நடுப்பகுதியில் சீன அதிகாரிகள் தங்களது நாட்டுப்பொருளாதாரம்
மந்த நிலைக்குச்செல்லும் என்று குறிப்பிட்டனர். ஆனால் அவர்களது வார்த்தைகள் பலிக்கவில்லை.
சென்ற மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள், இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில்
பொருளாதாரம் சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த வளர்ச்சி விகிதம் 7-சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டிற்கு
9.7 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்தது என்று காட்டியது. சென்ற ஆண்டு இதே மூன்று மாதங்களோடு ஒப்பிடும்போது
இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் கடன்கள் 21- சதவீதமும், பண அளிப்பு 20-சதவீதமும் மற்றும் நிரந்தர முதலீடு
43- சதவீதமும் உயர்ந்து நின்றது.
தற்போது வட்டி விகிதங்கள் உயர்வு கடன்களை வங்கிகள் வழங்குகின்ற அளவிற்கு
வரம்பு போன்ற வலுவான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 28-அன்று,
Reuters க்கு சீனாவின் பிரதமர் வென் ஜிபாவோ (Wen
jibao) பண அளிப்பு, வங்கிக்கடன் மற்றும் நிரந்தர முதலீடு
விரிவடைந்து வருவதால் உருவாகின்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டுகையில், இதுபோன்ற கடுமையான
நடவடிக்கைகளின் அறிகுறிகள் வந்தன. ''இந்த பிரச்சனைகளை தீர்க்க முடிந்தவரை விரைவாக பயனுள்ள
மிகக்கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியது அவசியமாகும்'' என்று அவர் கூறினார்.
உலக பங்குச்சந்தைகளில் இந்த அறிவிப்பு உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மற்றும் ஆஸ்திரேலியா பங்குச் சந்தைகளில் நாணயங்களின் மதிப்பு 1.2
முதல் 2.4- சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன, இந்த வீழ்ச்சி பிராந்தியம் முழுவதும் எதிரொலித்தது. வோல்
ஸ்ரீட் -லும் அதிர்வு அலைகள் ஏற்பட்டன, அந்த பேட்டியை தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்தது.
கடந்த ஒராண்டிற்கு மேலாக, பணம் நாட்டில் குவிந்ததால் சீனப்பொருளாதாரத்தின்
''நிதிக்குமிழி'' வளர்ச்சி பற்றி எச்சரிக்கைகள் தொடர்ந்து விடப்பட்டன, இதனால் முதலீடுகள் சொத்து ஆகியன
பூரிப்படைந்தன. 1997-98- ஆசிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் நிலவிய "அதே
அச்சமவிளைவிக்கும்" சூழ்நிலை என இதனை ஒப்பிட்டு சில ஆய்வாளர்கள் விளக்கம் தந்தனர். ஆனால் சீனாவில்
ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தாக்கம் அதைவிட மிகக்கடுமையாக இருக்கும்.
அமெரிக்க டாலருக்கு எதிராக சீன யுவான் நாணயத்தை மறுமதிப்பீடு செய்வதன்
மூலம் நிலைமையை தளர்த்த முயலலாம் என்ற ஒரு யோசனை பரவலாக கூறப்பட்டது. சீன அதிகாரிகள் சர்வதேச
நாணயச்சந்தைகளில் ஏராளமான பணத்தை செலவிட்டு அமெரிக்க டாலர்களை வாங்கிக் குவித்து அதன் மூலம்
தங்களது சொந்த நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால் சீன வங்கிகளிலும் நாணய
சந்தைகளிலும் பணம் பாய்வதற்கு வழிவகுத்தது. அதைப்பயன்படுத்தி நிதி முதலீடுகள் மற்றும் சொத்துக்களின்
ஊகபேரங்கள் பெருகின. இத்தகைய பணப்புழக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஊகபேரக்காரர்களின் முதலீடுகள்
பெருகின. மறுமதிப்பீட்டின் விளைவாக பெரும் இலாபம் ஈட்டமுடியும் என்று நம்பி ஊகவணிகர்களிடம் "பண
நோட்டுக்கள்" பெருக்கெடுத்தன.
சீனாவில் வழங்கப்பட்டுள்ள கடன்களில் 45-சதவீதம் வரை வராக்கடன்கள் என்று
மிதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், சீன அதிகாரிகள் தங்களது நாணயத்தை விடுவதற்கு அல்லது மறுமதிப்பீடு
செய்வதற்குக்கூட தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில் இப்படிச் செய்வதால் இழப்புக்கள் ஏற்படும் வங்கி
முறையில் நெருக்கடி ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.
''இந்த முறையை துடுக்குத்தனமாய் நாம் மாற்றுவோமானால், நிச்சயமாக
உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். அதே நேரத்தில் இந்த
பிராந்தியத்திலும், ஏன் உலகிலேயே கூட பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும்'' என
Wen, Reuters
க்கு தெரிவித்தார்.
அமெரிக்க Federal
Reserve தலைவர்
Alan Greenspan, ஒரு வாரத்திற்கு முன்னர் இதேபோன்ற
எச்சரிக்கையை விடுத்திருந்தார். ''சீனா சிக்கலை சந்திக்குமானால், அதனால் தென்கிழக்கு ஆசிய
பொருளாதாரங்களுக்கு, ஜப்பானுக்கு மற்றும் மறைமுகமாக நமக்கு குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை அது
உருவாக்கும்'' என அவர் அமெரிக்க காங்கிரசில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.
ஆசியப் பிராந்தியமும், உலகப் பொருளாதாரமும் ஒட்டுமொத்தமாக சீன
பொருளாதார வளர்ச்சியை சார்ந்துள்ளன என்பதை விளக்குகின்ற பல்வேறு புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு உலக வர்த்தக வளர்ச்சியில் சீனா 60-சதவீதத்திற்கு மேல்
பங்களிப்புச் செய்திருந்தது. சீனாவிலும், 420-பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு
உள்ளது. உலக வர்த்தகத்தில் 10-சதவீத பங்களிப்பு செய்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உலக
உற்பத்திப் பெருக்கத்தில் தன்னுடைய பங்களிப்பை இரு மடங்காக்கி 4-சதவீத அளவிற்கு
உயர்த்திக்கொண்டிருக்கின்றது.
உலக எண்ணெய் அளிப்பில் 7-சதவீத்தைத சீனா பயன்படுத்திக் கொள்கிறது.
அலுமினியத்தில் 25-சதவீதமும், இரும்புத் தாதுக்களில் 30-சதவீதமும், எல்லாவகையான
நிலக்கரியிலும்31-சதவீதமும், எல்லா வகையான எஃகு பொருட்களிலும் 27-சதவீதத்தையும் சீனா பயன்படுத்திக்
கொள்கின்றது. சென்ற ஆண்டு உலக கான்கிரீட் உற்பத்தியில் 40-சதவீதத்தை பயன்படுத்திக் கொண்டது.
ஆண்டிற்கு 57-பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடுகளால் ஊக்குவிக்கப்பட்ட,
இந்த சீன பொருளாதார பூரிப்பு கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆசிய பொருளாதாரம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு
முழுமையான காரணமாகும்.
2003-ல் ஜப்பானின் ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவுக்கான ஏற்றுமதியின் பங்களிப்பு
32-சதவீதம் ஆகும். சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்களில் மட்டுமே ஜப்பான் முதலீட்டு செலவுகள்
பெரும்பாலும் அதிகரித்து வருகின்றன. தென் கொரியாவில் 2003-ம் ஆண்டு ஏற்பட்ட ஏற்றுமதி வளர்ச்சியில்
36-சதவீதம் சீனாவிற்கு விற்பனை செய்வதோடு தொடர்புடையதாகும். ஓராண்டிற்கு முன்னர் இருந்ததைவிட ஏப்ரல்
மாதம் சீனாவிற்கு தென் கொரியாவில் ஏற்றுமதி 68-சதவீதம் வரை அதிகரித்து இருந்தது. சீன மொத்த உள்நாட்டு
உற்பத்தி ஒவ்வொரு சதவிகிதம் வீழ்ச்சியடையும் போதும் கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 3-சதவீதம் வீழ்ச்சியடையும்
என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிகாரிகள் பொருளாதார பூரிப்பை கட்டுப்படுத்துவதற்கு
எடுத்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக உலகப்பொருளாதாரத்தில் குறைந்த தாக்கமே இருந்தது. இப்போது
கதையே மாறிவிடும். ஏனெனில் உலகின் மற்ற பகுதிகளோடு குறிப்பாக அமெரிக்க பொருளாதாரத்தோடு சீனா
மிகப்பெருமளவில் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றது.
இறுதியாக பார்க்கும்போது, சீன பொருளாதார பூரிப்பு அமெரிக்க சந்தைகளுக்கு
பொருட்களை தயாரிப்பதற்கான முதலீட்டு பெருக்கத்தால் இயக்கப்பட்டு வருகின்றது. ஆயினும், அமெரிக்காவில்
நுகர்வோர் செலவினங்கள், வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய உயர்வுகளால் அதிகரிக்கவில்லை- கடந்த மூன்றாண்டுகளுக்கு
மேலாக அமெரிக்காவில் உண்மை ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் குறைந்துகொண்டே வருகின்றன. மாறாக
பெடரல் ரிசேர்வ் வாரியத்தின் குறைந்த வட்டிவிகித கொள்கை வீட்டுமனைகளின் விலைகளை உயர்த்தியுள்ளது மற்றும்
நுகர்வோர் கடன்கள் அதிகரிக்க நிதிஅளிக்கப்படுகின்றன.
சீன பொருளாதாரம் ஜூர வேகத்தில் வளர்ந்துகொண்டிருப்பது புதிய பொருளாதார
வளர்ச்சியுகத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கவில்லை. ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தின் ஆழமாகிவரும்
பிரச்சனைகளின் வெளிப்பாடாகவே அமைந்திருகின்றது. சீன குமிழி பொருளாதார வளர்ச்சி பொறியும் அல்லது அமெரிக்க
வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும். அல்லது இரண்டு நடவடிக்கைகளும் இணைந்தே மேற்கொள்ளப்படும் என்ற உண்மையானது,
கடுமையான சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.
Top of page |