WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
Marxism and the political economy of Paul Sweezy
Part 5: "The tendency of the surplus to rise"
மார்க்சியமும், போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 5 : " உபரி மதிப்பின் எழும் போக்கு
By Nick Beams
12 April 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
இக்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவைச்
சேர்ந்த, நிக் பீம்ஸ், தீவிர அரசியல் பொருளாதார நிபுணர் போல் ஸ்வீசியின் வாழ்வு, படைப்புக்கள் பற்றி
எழுதியுள்ள ஏழு தொடர் கட்டுரைகளில் ஐந்தாவது ஆகும். போல் ஸ்வீசி
Monthly Review
இன் நிறுவனர்-ஆசிரியராக இருந்து 2004 பெப்ரவரி 27 அன்று நியூயோர்க்,
லார்ஷ்மன்டில் காலமானார்.
மார்க்ஸ் கண்டறிந்த விதிகள் 19ம் நூற்றாண்டின் போட்டிப் பொருளாதாரத்திற்குத்தான்
பொருந்தும் என்னும் போல் ஸ்வீசியின் கூற்றிற்கு உழைப்பின் உற்பத்தித்திறனில் உள்ள வளர்ச்சி, இலாபவிகித வீழ்ச்சிப்போக்கிற்கு
இடமளிக்காது என்பது ஆகும். மாறாக, ஏகபோகத்தின் இருப்பானது ''உபரிமதிப்பு போக்கு உயர்வதற்கு இடமளிக்கும்''
என்பது அவரது கருத்தாகும்.
ஸ்வீசியின் கருத்தின்படி, போட்டி முதலாளித்துவத்தின் கீழ் நிறுவனங்கள் "கிடைக்கும்
விலையை" எடுத்துக்கொள்ளவேண்டும்; ஏகபோக முதலாளித்துவத்திலோ அவை "விலையை நிர்ணயம் செய்பவர்கள்"
ஆவர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாரிய நிறுவனங்களால் ''தமது பொருட்களுக்கான விலையை
தீர்மானிக்ககூடியதாக இருந்தது''[21]
ஏகபோகத்தின் கீழ் நிறுவனங்கள் விலையை வெட்டுவதில் ஈடுபட்டிருக்கவில்லை.
ஆனால் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் செலவினை குறைப்பதால் ''உற்பத்தி செலவை குறைக்கும் போக்கிற்கு
இட்டுச்சென்றன''.
"செலவினக்குறைப்பின் காரணமே, இலாபங்களை அதிகரித்தல் ஆகும், ஏகபோக உரிமை
அமைப்பிலான சந்தைகள் அதிக உற்பத்தித்திறன் காரணமாக விளையும் இலாபங்களை, நேரடியாக உயர்ந்த இலாபங்கள்
என்ற முறையில் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ள முடியும் என்ற நிலையைக் கொடுக்கின்றன. ஏகபோக முதலாளித்துவ
வழிகளில் செலவினங்களின் குறைவு தொடர்ச்சியான இலாப அளவின் மட்டத்தை அதிகரிக்கும் என்பதுதான் பொருள்.
தொடர்ந்து பெருகும் இலாப மட்டத்தின் அளவு என்பது மொத்த இலாபம் பெருகும் என்பதையும், இறுதிநிலையில்
மட்டுமல்லாது இது நாட்டின் உற்பத்தியின் ஒரு பங்கு என்றவகையில் அதிகரிக்கும் என்பதுதான் இதன் உட்குறிப்பு
ஆகும். தற்காலிகமாக மொத்த இலாபங்களை, சமுதாயத்தில் பொருளாதார உபரியுடன் (எஞ்சியவற்றுடன்) ஒப்பிட்டால்,
இறுதியாகவும், ஒப்பீட்டுரீதியாகவும் இந்த அமைப்புமுறை அபிவிருத்தியடைகையில் உபரி உயரும் போக்கு உடையது
என்ற விதியை இயற்ற முடியும்." [22]
இது ஒரு புதிய ஆய்வு முன்வைக்கப்பட்டபோதிலும், பலவகைகளில், ஆடம் ஸ்மித்
முன்வைத்திருந்த இலாப விகித வீழ்ச்சி தத்துவத்தின் தலைகீழ் வடிவமே இது எனக்கூற முடியும். ஸ்மித்தின்
கருத்தின்படி, இலாபவிகித வீழ்ச்சி பெருகிய போட்டியின் விளைவு என்பதாகும்; பரனும் ஸ்வீஸியும், போட்டி
அற்ற நிலையில், திறமை கொண்ட நிறுவனங்கள் "விலை நிர்ணயிப்பவர்கள்" என்ற திறனைக் கொள்ளக்கூடும்,
அதாவது உபரி அல்லது இலாபம் உயரும் எனக் கூறுகின்றனர்.
உயரும் உபரி விதியை இயற்றிய பின், பரனும் ஸ்வீசியும் இது மார்க்சின் ஆய்விலிருந்து
அடிப்படை மாறுதலை இது குறிக்கிறது என்பது தெளிவு என்ற கூற்றையும் தெரிவித்தனர்.
"இந்த விதி, உடனடியாக மார்க்சிசத்திற்குரிய விதியான இலாபவிகித வீழ்ச்சிப்போக்குடன்
ஒப்பிடப்படவேண்டிய தேவையை உருவாக்குகின்றது. இலாபவிகித வீழ்ச்சிப்போக்கு விதியைப் பற்றிய வித்தியாசமான
ஆய்வுகளில் ஈடுபடாமல், அவை அனைத்துமே போட்டி முறை உள்ளது என்பதை முன் ஊகித்துள்ளது எனக்கூறலாம். உயரும்
இலாபம் பற்றிய விதியை, வீழ்ச்சியடையும் இலாப விதியால் பிரதியீடு செய்வதால், நாங்கள் பலகாலமாக பெருமதிப்பிற்குட்டபட்டுள்ள
இந்த அரசியல் பொருளாதாரக்கோட்பாட்டை நிராகரிக்கிறோம் என்று கொள்ளக்கூடாது; அக்கோட்பாடு
இயற்றப்பட்ட காலத்திற்குப் பிறகு, முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஐயத்திற்கு இடமின்றி அமைப்பில் அடிப்படை
மாறுதல் ஏற்பட்டுள்ளதைத்தான் நாங்களை கருத்தில் கொண்டுள்ளோம். போட்டி முதலாளித்துவத்திலிருந்து, ஏகபோக
முதலாளித்துவத்திற்கான அடிப்படை மாற்றத்தில் மிக முக்கியமானது இந்த பிரதியீடுமூலம் தத்துவார்த்தரீதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது."[23]
இந்தப் புதிய விதியை இயற்றியதில், ஸ்வீசி தவறான விவாதமுறையை செய்துள்ளார்.
ஒரு நிறுவனமோ, சில நிறுவனங்களோ தங்கள் உற்பத்தி சந்தைகளை ஏகபோக உரிமையாக்கிக்
கொள்ளுவதன் மூலமும், விலையை உயர்த்துவதன் மூலமும் இலாபங்களை பெருக்கிக் கொள்ள முடியம் என்பது உண்மையே.
ஆனால் இதானல், முழு பொருளாதாரத்திலும் உபரி உயர்ந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. சராசரி விகிதத்தைவிடக்
கூடுதலான வருவாய் பெற்று அதிக இலாபம் பெறக்கூடிய அளவு தனிப்பட்ட நிறுவனங்கள் விலையை உயர்த்துமேயானால்,
இந்தப் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திச் செலவினங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதால்
அவற்றின் இலாபவிகதம் குறைவாகும் போக்கு ஏற்படும். இந்நடவடிக்கையால் உபரி மதிப்பு சேர்க்கப்படாததுடன்,
அது வெறுமே ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது; ஒரு மோசடிமூலம் அல்லது
கொள்ளையடிப்பதின் மூலம் எவ்வாறு புதிய மதிப்பு சேருவதில்லையோ அதை ஒத்திருக்கும்.; சில தனி நபர்கள்
தங்கள் வருமானங்களை இம்முறைகளை பயன்படுத்தி உயர்த்திக் கொண்டாலும், பொது நிலையில் மாற்றம் இல்லை.
தொழிலாள வர்க்கத்தால் நுகரப்படும் பொருட்களில் ஒரு பகுதியாக, ஏகபோக உரிமை நிறுவனத்தின் பொருட்கள்
எந்த அளவில் இருக்குமோ, அந்த அளவிற்கு உழைக்கும் சக்தி உயரும் போக்கைக் கொள்ளும். இதனால் ஊதியங்கள்
உயர்த்தப்பட்டு இலாபங்கள் குறையும். ஊதியங்கள் மந்த நிலை அடைந்து உழைப்புசக்தியின் மதிப்பைவிடக் குறைவாகும்
என்று வாதிடலாம். ஆனால் அத்தகைய நிலையில், நமக்கு ஒரு புதிய விதிதான் தேவையில்லை, மாறாக மார்க்சினால்
தெளிவாக கண்டறியப்பட்டுள்ள முறைகளில் ஒன்றான இலாபவிகித வீழ்ச்சிப் போக்கை தடுப்பதற்கு மூலதனம்
தொடர்ச்சியாக முயற்சி செய்யும் என்பதுதான் தேவைப்படும்.
இலாபவிகித வீழ்ச்சிப்போக்கின் விதியை ஒதுக்கித்தள்ளும் ஸ்விசியன் கருத்து,
முதலாளித்துவத்தின் உற்பத்தி முறையின் வரலாற்று முரண்பாடுகள் பற்றிய அவரது மதிப்பீட்டில் தத்துவார்த்த
உட்குறிப்புக்களில் நீண்டகாலவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இலாபவிகித வீழ்ச்சிப் போக்கானது "நவீன அரசியல் பொருளாதாரத்திலேயே
மிகவும் முக்கியமான விதி", அதிலும் குறிப்பாக "வரலாற்று நிலைப்பாட்டில்", என்று மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால், இதன் விளைவுகளை எப்படியும் கடக்கவேண்டும் என்ற உந்ததுல்தான், முதலாளித்துவத்தின் கீழ்
உற்பத்திசக்திகளில் புரட்சிகரமாக்கும் தொடர்ச்சியான மாறுதல்களைக் கொண்டுவருவதற்கு காரணிகளாகும்.
முதல் தடவையாக வரலாற்றில் "எல்லாரும் தடையற்று வளர்ச்சியுறும் வகையில்,
ஏழ்மையில்லாத, உண்மையான மனித நாகரிகம் வளர்ச்சியுறுவதற்கான அடிப்படைப் புறநிலையான அஸ்திவாரங்களை
அமைப்பது, உழைப்பின் சமூக உற்பத்தித்திறன் வளர்ச்சி மேம்பட்டால்தான் முடியம் என்று மார்க்ஸ் வலியுறுத்தினார்.
ஆனால் இவ்விதி, உழைப்பின் உற்பத்தித்திறன் வளர்ச்சி அடையும்போது, உற்பத்திமுறைகள் தனியார் உரிமையாக
இருந்தால் அதோடு இயைந்து விளங்காது என்று நிரூபித்துள்ளது. "ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குமேல், உற்பத்தி
சக்திகளின் வளர்ச்சியே உழைப்பின் உற்பத்திசக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிடுகின்றன." அந்தக் கட்டம்
வரும்போது, "சமுதாய செல்வத்தின் வளர்ச்சி உற்பத்தி சக்திகளின் உறவுமுறைகளோடு, வர்த்தக முறை,
விவசாயத்தொழிலாளியின் அடிமைமுறை, பொது அடிமை முறை இவற்றின் உறவுகளோடு எப்படி விளங்குமோ அப்படி
மாறி, தளைகள் அகற்றப்படும் தேவைக்கு இயல்பாக உட்படுத்தப்பட்டுவிடும். மனிதச் செயற்பாடுகளில் கடைசி
வடிவத்தில் இருக்கும் அடிமைமுறையான, ஒரு புறத்தில் கூலிஉழைப்பும், மறுபுறம் மூலதனமும் உரிக்கப்பட்ட
தோல்போல் அமைந்துவிடும்." உற்பத்திசக்திகளின் வளர்ச்சிக்கும், இருக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள
பொருந்தாத்தன்மை வளரும்போது, இது மூலதனத்தின் நெருக்கடிகள், முரண்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது; "இது
இந்தமுறை தேவையில்லை என்ற அறிவுறுத்தலை கொடுப்பதுடன், ஓர் உயர்ந்த வகைச் சமுதாய அமைப்பிற்கு
வழிவிடுதல்வேண்டும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறது."[24]
குறை நுகர்வுவாதம்
ஸ்விசி தனது எப்போதும் அதிகரிக்கும் உபரி பற்றிய விதியில், மார்க்ஸ் கருதியது
போல் முதலாளித்துவத்தின் மத்திய முரண்பாடானது உற்பத்திமுறையிலும், உபரி மதிப்பிற்கான திரட்டுதலின்
உந்தலிலோ தங்கியிருக்கவில்லை என நினைத்தார். மாறாக, இது சந்தை உறவுகள் மண்டலத்தில்தான் உள்ளது
என்பது இவருடைய கருத்து. முதலாளித்துவத்தின் மத்திய வரலாற்று பிரச்சினை, உபரி மதிப்பின் திரட்டு அல்ல அதன்
பங்கீட்டுமுறைதான் என்பது அவருடைய வாதம்.
ஸ்வீசி குறிப்பட்டதுபோல் இந்த "குறை நுகர்வுவாத" பார்வை மால்தூஸ் மற்றும்
சிஸ்மொண்டி காலகட்டத்திற்குப் பின்னேயுள்ள நீண்ட வரலாறு உடையது. "இந்த இரு சீரிய வல்லுனர்கள் மற்றும்
மார்க்ஸும், உபரியை எடுத்துக்கொள்ளும் வகைகளில் திருப்திகரமான விடையில்லாத சிக்கல்தான்.
"இலாபவிகிதத்தின் வீழ்ச்சிப்போக்கு" என்று சுருக்கமாக முறையில் அவர்கள் முதலாளித்துவப்போக்கின் சங்கடத்தை
உணர்ந்த அவர்களின் முக்கிய நம்பிக்கையில் இது தங்கியிருக்கலாம். இந்த வகையான பார்வையில், மூலதனவிரிவிற்கு
வரும் தடைகள் திரட்சியை பாதுகாத்துக்கொள்ள உபரியின் பற்றாக்குறையிலே தங்கியுள்ளதே அல்லாது உபரியை
பயன்படுத்தும் தனிச்சிறப்பான வழிகளில் அல்ல" என்று ஸ்வீசி கருதினார்.[25]
"குறை நுகர்வு" ஆய்வு, 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிஸ்மொண்டியிலிருந்து இன்று
வரை தொடர்ந்து இருப்பது, முதலாளித்துவ நெருக்கடிகளின் தோற்ற வடிவங்களுடன் நேரடியாக இசைந்து காணப்படுகிறது.
பொருட்கள் விற்பனையாகாமல் இருக்கும்போது, நிறுவனங்கள் மிகை தகவு (overcapacity)
, வேலையின்மை தொடர்ந்து இருக்கிறது; எனவே மிகை உற்பத்திதான் பொது உற்பத்தியில் விளைவதை சந்தை முற்றிலும்
எடுத்துக் கொள்ள முடியாமல் போவதற்குக் காரணம் என்று கூறுவது தர்க்கரீதியாக மிகவும் பொருந்தும். ஆனால்
மார்கஸ் பல முறை எச்சரித்துள்ளபடி, தோற்றம் சாரத்துடன் ஒத்திருக்குமானால், விஞ்ஞானத்திற்கு வேலை
இல்லை.
முதலாளித்துவ உற்பத்திமுறையில் உருவாகும் பொருட்களின் உள்ளடங்கியுள்ள உபரி
மதிப்பைப் பெறுவது, முதலாளித்துவத்தில் எப்பொழுதும் உள்ள பிரச்சினை ஆகும். திரட்சி வழிவகை
தொடர்வதற்காக, இந்தப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவதன்மூலம் மீண்டும் பணமாக மாற்றப்படவேண்டும்.
"திறனுடைய தேவை" தொழிலாளர்களுடைய நுகர்வுச் செலவுகளிலிருந்து தோன்றி,
ஆக்க நுகர்வின் ஒரு பகுதியாக, அதாவது உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள் வாங்குவதற்கும், உற்பத்திமுறைக்குமாக
முதலாளித்துவ நிறுவனங்களுக்குப் பயன்படும். ஆனால் நிறுவனங்கள் புதிய முதலீட்டை மேற்கொள்ளவில்லை என்று கூறினால்,
இந்தத் தேவை பற்றாக்குறையில்தான் இருக்கும். புதிய உற்பத்தி தொடரப்பட்டால்தான் சந்தை உபரி மதிப்பை
அடைவதற்குத் தக்க விரிவைக் கொள்ளும். அதுவும் எஞ்சிய மதிப்பு தொடர்ந்து கறந்தெடுக்கப்பட்டால்தான் நடக்கும்.
எனவே, உபரி மதிப்பு தொடர்ந்து பற்றி எடுக்கப்படுவதுதான் அதை அடைவதற்கான பிரச்சினையைத்
தீர்க்கமுடியும்.
திரட்சி தொடர்ந்தால், உபரி மதிப்பின் ஒரு பகுதி முதலீட்டிற்காகப் பயன்படுத்தப்படும்,
அதாவது கூடுதலான தொழிலாளர்களை நியமிப்பதற்கும், கூடுதலான மூலப் பொருட்களை வாங்குவதற்கும், கூடுதலான
இயந்திரங்கள், மற்ற உற்பத்திவகைகளை வாங்குவதற்கு உபயோகமாகும். பொருளாதாரத்தின் ஒரு பகுதியில்
செலவினம் பெருகும்போது, வேறு ஒரு பகுதியில் உற்பத்தியாகும் உபரி மதிப்பு அடையப்படுவதற்கான "திறமையான
தேவையை" வழங்கும். ஆனால் திரட்சிப்போக்கு இயங்காத நிலைக்கு உட்பட்டால், மூலதனத்தில் வெட்டு ஏற்பட்டு,
பொருட்கள் விற்காமல் தேங்கி, மிகைதகவும், வேலையின்மை மற்றும் பின்னர் கூடுதல் உற்பத்திப் பிரச்சினை இவை
தோன்றும்.
இதையே, வேறு விதமாகக் கூறினால், சந்தையில் வெளிப்படும் தேவைக்கு அதிகமான
உற்பத்திப்போக்கின் தோற்ற வடிவம், உற்பத்திமுறையில் (உபரி மதிப்பு திரட்சியில்) ஏற்பட்டுள்ள சிக்கல்களின்
எழுச்சியைக் குறிக்கும்; அவை இலாப விகித வீழ்ச்சி என்ற முறையில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும்.
குறிப்புகள்:
21. Paul Baran and Paul
Sweezy, Monopoly Capital Monthly Review Press New York 1968 p. 57
22. Baran and Sweezy op cit pp. 71-72
23. Baran and Sweezy op cit p. 72
24. Marx, Grundrisse pp. 748-750
25. Baran and Sweezy op cit p. 113
See Also :
மார்க்சிசமும் போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 1 : ஆரம்பகால ஆதிக்கம்
மார்க்சிசமும் போல்
ஸ்வீசியின்அரசியல் பொருளாதாரமும்
பகுதி 2 : முதலாளித்துவ அபிவிருத்தியின் தத்துவம்
மார்க்சியமும், போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி-3 : தத்துவத்தின் நிலைமுறிவு
மார்க்சிசமும், போல்
ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 4: ஏகபோக மூலதனம்
Top of page |