World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian
government uses Madrid bombings to justify further police-state powers

ஆஸ்திரேலிய அராசங்கம் போலீஸ் ஆட்சி அதிகாரங்களை அதிகரிப்தை நியாயப்படுத்த மாட்ரிட் குண்டுவெடிப்புக்களைப் பயன்படுத்துகின்றது

By Mike Head
7 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல்கள் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ளன. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களில் படுதோல்வியை எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் வளர்ந்துவரும் அரசியல் பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மீண்டும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற நிலையையும் மக்களிடையே வளர்துதவிட முடியும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ''பயங்கரவாதத்திற்கெதிரான போரை'' பிடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ''தேசிய பாதுகாப்பு'' அமைச்சரான Attorney-General Philip Ruddock புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார். அது நீண்ட காலமாக நிலைபெற்றுள்ள ஜனநாயக உரிமைகளை மேலும் கீழிறுக்கப்படுவதாக அமைந்திருக்கிறது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 2001-ல் நடைபெற்ற தாக்குதல்களையும் 2002 அக்டோபரில் பாலியில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதல்களையும் பிரதமர் ஜோன் ஹோவார்ட் பிடித்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஏஜென்சிகளுக்கு முன்கண்டிராத அதிகாரங்களை தந்ததைப் போல், அண்மையில் மாட்ரிட் ரயில்கள் மீது குண்டுவெடிப்பு நடந்ததையொட்டி தனது அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார். இது சென்ற ஆண்டில் Ruddock அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து பல மதாங்கள் தயாரிக்கப்பட்டு வந்த புதிய ஆலோசனைகளின் அசாதாரணமான வீச்சினையும் விவரமான தன்மைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.

சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டிற்கான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் கொண்டுவந்து குற்றத்தாக்கல் செய்வதற்கு முன்பு எவரையும் கைது செய்து 24-மணி நேரம் வரை காவலில் வைத்து விசாரிக்க கூட்டமைப்பு மற்றும் அரசு போலீசுக்கு அதிகாரம் வழங்குவது. ஏற்கெனவே கூட்டாட்சி போலீசாருக்கும், ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பிற்கும் (ASIO) குற்றச்சாட்டு இல்லாமல் ஒரு வாரம்வரை விசாரிக்க சென்ற ஆண்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கு மேல் இன்னும் அதிகமானதாகும்.

கூட்டரசாங்கம் ''பயங்கரவாத குற்றத்தின்'' கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரை போலிஸ் அதிகாரிகள் 4-மணிநேரம் தான் விசாரிக்கவேண்டும் என்றிருந்தது 24 மணிநேரமாக நீடிக்கப்பட்டிருக்கிறது. போலீசார் கைது ஆணையியில் விசாரணையை நீடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு நீதிபதி அல்லது மாஜிஸ்திரேட் அல்லது அமைதியின் நீதிமன்றம் ரப்பர் முத்திரையிட்டால் 20-மணி நேரம் நீடிக்கப்படும். ''கடுமையான குற்றங்களுக்கு'' 12-மணிநேர விசாரணை என்று ஏற்கனவே நீடிக்கப்பட்டிருப்பது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு போதுமானதல்ல என்று அட்டர்னி ஜெனரல் Ruddock உறுதியாக கூறுகிறார்.

கைதியை சிறைக்குக் கொண்டு செல்வது அல்லது கைதி தனது வழக்கறிஞர், குடும்பத்தினர் அல்லது நண்பரோடு பேசுவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் ஆகியவற்றை ''கணக்கில் அடங்காத நேரம்'' எடுத்துக்கொண்டு போலீசார் விசாரணைக்காலத்தை நீடிக்கலாம். அதே போன்று மருத்துவ சிகிச்சை, அடையாள அணிவகுப்பு, ஓய்வு அல்லது உடல் தேருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் (தூங்குவது உட்பட) மற்றும் வெளிநாடுகளிலிருந்து தகவல்களை திரட்டுவதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றையும் ''கணக்கில் அடங்காத நேரம்'' என்று கோருவர். இதை வேறு வார்த்தைகளில் விளக்குவதென்றால் தொடர்ந்து 24-மணிநேரம் விசாரணை செய்யப்படும் வரை பல நாட்களுக்கு கைதிகளை சிறையில் வைத்திருக்க முடியும்.

ஆஸ்திரேலியாவில் போலீசார் பெறுகின்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் படுமோசமானவை. இரண்டு வழக்குகளில் 1986-ல் வில்லியம்ஸ் வழக்கிலும், 1991-ல் மெக் கின்னி வழக்கிலும் உயர்நீதிமன்றம் போலீஸ் விசாரணையை கட்டுப்படுத்த கட்டளையிட வேண்டியுள்ளது. மற்றும் நீதிபதிகள் போலீஸ் பெறும் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தண்டித்துவிடக்கூடாது என்று ஜூரிகளை எச்சரிக்கவேண்டும் என்று கட்டளையிட்டது. அதற்குப்பின்னர் மாகாண மற்றும் மத்திய சட்டங்கள் திருத்தப்பட்டன. வீடியோ டேப்பில் பதிவு செய்யும் வகையில் போலீசாரின் புலன்விசாரணை நடைபெறவேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. ஆனால் அப்படி வீடியோ படம் பிடிப்பதால் மட்டும் போலீசார் பொய் சாட்சிகளை கற்பனையான, தவறான ஒப்புதல் வாக்கு மூலங்களை பதிவு செய்வதை தடுத்துவிடலாம் என்பதற்கு உத்தரவாதத்தை வழங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் ''பயங்கரவாத குற்றங்கள்'' என்பவை மிக பரவலான அடிப்படையில் அமைந்திருப்பதால் போலீசார் முறைகேடாக நடந்துகொள்வதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளும் முயற்சி அல்லது தூண்டிவிடுவது மற்றும் பயங்கரவாதத்தோடு தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சதி செய்வது பயங்கரவாதக் குழுக்கள் என்று அறிவிக்கப்பட்ட அமைப்புக்களில் உறுப்பினர்களாக இருப்பது அல்லது ஆதரிப்பது ஆகியவை பயங்கரவாத செயல்கள் என்று விளக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் அந்த அமைப்பு பயங்கரவாதக் அமைப்புஎன்று தெரிந்துகொள்ளாமலேயே அந்த அமைப்போடு பயிற்சியில் ஈடுபடுவாரானால் அதைக்குற்றமாகக் கருதி 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மசோதாவில் வகைசெய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் அறிவிக்கும் சட்டவிரோத அமைப்பு பாரம்பரியமாக குற்றத்தை நிரூபிக்கும் நடைமுறைக்கு மாறான நடவடிக்கைக்கு உள்ளாகும். அரசாங்கம் அவர்களது நோக்கத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் "நேர்மையாக மற்றும் நியாயமான தவறான நம்பிக்கையின் அடிப்படையில்" அந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பல்ல என்று கருதி செயல்பட்டதாக நிரூபிக்கவேண்டும்.

டேவிட் ஹிக்ஸ் மற்றும் Mahdouh Habib போன்ற வர்களை சிறையில் அடைக்க மசோதாவின் இன்னொரு பிரிவு வகைசெய்கிறது, இவர்களை ஹோவர்ட் அரசாங்கம் தானே விருப்பி அனுமதித்ததனால் புஷ் நிர்வாகம் கியூபாவிலுள்ள குவாண்டநாமோ வளைகுடா சிறைமுகாமில் ''எதிரி போராளிகள்'' என்று குற்றம் சாட்டி இரண்டாண்டுகளுக்குமேல் சிறையில் வைத்திருக்கிறது. அந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் ஊடகங்கள் மூலம் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஹிக்ஸ் அல்கொய்தா மற்றும் தலிபானோடு பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. ஆஸ்திரேலியா சட்டத்தின் பிரகாரம் ஹிக்ஸ் மீது குற்றம்சாட்ட முடியாது ஏனெனில் அல்கொய்தாவும், தலிபானும், ஆப்கானிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமாக கருதப்பட்டது.

எதிர்காலத்தில் அத்தகைய பிரச்சனைகள் ஏற்படாது தவிர்ப்பதற்காக எந்தக்குழுவையும் அட்டர்னி ஜெனரல் தடைவிதிக்கப்பட்ட அமைப்பாக அறிவிக்கலாம் அதற்குப்பின்னர் அமைச்சர் அந்தக்குழு ஒரு வெளிநாட்டு ஆயுதப்படையின் ஒரு பகுதியல்ல என்று அறிவிப்பார். இதனுடைய விளைவு என்னவென்றால் அண்மையில் சட்டத்தின் மூலம் ''பயங்கரவாத அமைப்புக்களை'' தடை செய்யும் அதிகாரத்தை பெற்றிருந்தது, இதைவிட மேலும் இம் மசோதா நிர்வாகத்தின் கட்டளை மூலம் அமைப்புக்களை தடைசெய்ய மற்றொருவகை அதிகாரத்தை வழங்குகிறது.

பயங்கரவாதத் தடுப்பு என்ற போர்வையில் பயங்கரவாதிகள் தங்களது நடவடிக்கைகளை புத்தகங்களாக எழுதி லாபம் சம்பாதிப்பதை தடுக்கின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அரசியல் முன் தணிக்கைக்கு இந்த நடவடிக்கைகள் வகைசெய்கின்றன. நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தண்டனைக்குரிய குற்றங்களை புரிந்து பிரபலமடைந்தவர்கள் அவர்கள் ஆஸ்திரேலியா அல்லது வெளிநாட்டு பிரஜைகளாக இருந்தாலும் அவர் எழுதுகின்ற நூலை பறிமுதல் செய்யவும் அவரை கட்டுப்படுத்தவும் கட்டளையிட மசோதாவில் வகைசெய்யப்பட்டிருக்கிறது. புத்தக வெளியீட்டார்களும், விற்பனையாளர்களும் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல் நெல்சன் மண்டேலா, யாசீர் அராஃபத், ஜெரி ஆடம்ஸ் மற்றும் Xanana Gusmao எழுதிய நூல்களைக்கூட பறிமுதல் செய்துவிட முடியும்.

கண்காணிப்பு சாதனங்கள் மசோதா என்ற மற்றொரு நவடிக்கை AFP மற்றும் இதர மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, அப்படி ஒட்டுக்கேட்ட தகவல்களை பதிவு செய்வது கம்பியூட்டர்களில் புகுந்து விசாரிப்பது மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கு மிக நுட்பமான கருவிகளை பயன்படுத்துவதற்கு வகைசெய்கிறது. சில சாதனங்கள் தொடர்பாக ஒரு நீதிபதி அல்லது நடுவர் மன்ற உறுப்பினரிடம் வாரன்டுகளை பெறவேண்டும் ஆனால் மூத்த போலீஸ் அதிகாரி ''அவசர'' சூழ்நிலைகளில் ''சொத்துக்கு கடும் ஆபத்து'' ஏற்படக்கூடும் என்பது உட்பட மிக அவசரமான சூழ்நிலைகளில் சோதனையிடுவதற்கு அங்கீகாரம் தர முடியும். இதர சாதனங்கள் குறிப்பாக தொலைதூர கண்காணிப்பு, டெலஸ்கோப்புகள், காமிராக்கள் மற்ற இதர கண்காணிப்பு தொழில் நுட்ப சாதனங்களை சோதனையிடுவதற்கு வாரன்ட்டுகள் எதுவும் பெறதேவையில்லை.

இந்தச் சட்டங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மிகுந்த ரகசியத்தோடு நடத்துவதுற்கு வகைசெய்கின்றன. கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்படாத எந்தத் தகவலையும் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று அத்தகைய நடவடிக்கைகளில் திரட்டப்படும் தகவல்களை வெளியிடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும். வன்முறை ஆபத்து அல்லது சொத்து சேதம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவற்கு தேவைகள் என்று போலீசார் கருதுகின்ற தகவல்களை வெளியிடுவதற்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

ஆக கண்காணிப்பிலுள்ள எவரும் வேவுபார்க்கப்படுவதாக கண்டிக்கவோ அல்லது பகிரங்கமாக அதை அம்பலப்படுத்தவோ கூடாது. அதே நேரத்தில் போலீசார் சில தகவல்களை ஊடகங்ளுக்கு வெளியிடலாம் பொதுமக்களை தீங்கிலிருந்து தடுப்பதாகக் கூறி அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

மற்றொரு சட்டம் தகவல் தொடர்புகள் பறிமுதல் திருத்த மசோதா இது போலீசார் மற்றும் இதர சட்ட செயலாக்க ஏஜென்சிகள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கவும் மின்னஞ்சலை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் ''சைபர் குற்றங்கள்'' தொடர்பாகவும் இத்தகைய பறிமுதல் வாரண்டுகள் பிறப்பிக்கப்படும்.

குற்றவாளிகள் என்று தெரிந்த நபர்களோடு "தொடர்புடையவர்களையும்" கைது செய்து குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்வதற்கு போலீசாருக்கு அதிகாரம் வழங்கும் புதிய சட்டங்களை கொண்டுவர Ruddock திட்டமிட்டிருக்கிறார். இந்த விதிகளை போலீசார் முறைகேடாக பயன்படுத்தக்கூடும் என்பதால் சில மாநிலங்களில் போலீசாருக்கு இந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. Ruddock இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ''பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர்களை'' கண்காணிப்பது அவசியம் ஏனெனில் இப்போது ''நாம் ஒரு போரில் இருக்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் "வரையறுக்காத உறுப்பினர்கள்" மற்றும் ஆதரவாளர்களுக்கு 25 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்க ஏற்கெனவே வகைசெய்யப்பட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்போடு "தொடர்புள்ளவர்கள்" என்பதை நிரூபிக்க வேண்டிய சான்றுகள் குறைந்த அளவிற்கே தேவைப்படுவதால் கைதுசெய்வது சுலபமாகி விடுகின்றது. யாராவது ஒருவர் பயங்கரவாத அனுதாபி என்று குற்றச்சாட்டப்பட்ட நபரோடு பேசினால் அல்லது அவரை சந்தித்தால் அல்லது கூட்டத்தில் கலந்து கொண்டால் அவர் குறிவைக்கபட முடியும்.

இந்த நடவடிக்கைகளை சிவில் உரிமைக்குழுக்கள் கண்டித்திருக்கின்றன. சிவில் உரிமைகள் தொடர்பான ஆஸ்திரேலிய குழுவின் தலைவர் Terry O'Gorman இந்த தொடர்புபற்றிய சட்டம் ''சங்கம் சேரும் அடிப்படை சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக'' ஆகும். அப்பாவி மக்களை போலீஸ் விசாரணைக்கு இழுத்துச் செல்ல முடியும். ''இதன் பொருள் என்னவென்றால் யாரோ ஒருவர் பின்நாளில் பயங்கரவாதி என்று கண்டுபிடிக்கப்படுவாரோ, தொடர்புடைய இன்றைய அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் மீதும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டை கூறிவிட முடியும்'' என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சட்டத்திருத்த கமிஷன் மூலம் Ruddock தேசிய பாதுகாப்பு தகவல் நடைமுறைகள் சட்டத்தையும் உருவாக்கி வருகிறார். இந்தச்சட்டம் முற்றிலும் ரகசியமாக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு வகை செய்யும். ரகசியமாக நடைபெறும் விசாரணையில் அரசாங்க சாட்சிகள் மறைமுக வேடத்தில் கூட வீடியோக்கள் மூலம் சாட்சியமளிக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளமுடியாது.

முடிவற்ற தீவிரப்படுத்தல்

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஹோவர்ட் அரசாங்கம் 2001செப்டம்பர் 11 தாக்குதல்களை உறுதியான போலீஸ் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பயன்படுத்தி வருகிறது. Ruddock ன் சொந்த மதிப்பீடுகளின் படி அராங்கம் 100-க்கும் மேற்பட்ட புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. பாதுகாப்பு, மற்றும் புனாய்வு கட்டுக்கோப்பை வலுப்படுத்துவதற்காக $2-பில்லியன்களை செலவிட்டிருக்கிறது.

''பயங்கரவாதம்'' மிகப்பரவலாக சட்டவிளக்கத்திற்கு உட்பட்டிருப்பதால் பாரம்பரிய அரசியல் நடவடிக்கைகள் கண்டனங்கள், வேலை நிறுத்தங்கள், மறியல்கள், தெருக்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றிற்காகவும், ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவான கட்சி என்று சொல்லி எந்தக் கட்சியையும் விரைவில் தடைசெய்து அவற்றின் ஆதரவாளர்களை சிறையில் அடைக்க முடியும். ஒரு வாரத்திற்கு விசாரணை அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் ரகசியமாக காவலில் வைத்திருப்பது உட்பட இதற்கு முன்னர் நினைத்துக்கூட பார்திருக்க முடியாத அளவிற்கு ASIO- விற்கு அதிகாரங்கள் கிடைத்திருக்கின்றன.

குறிவைக்கப்படும் தனியாட்களை இரவிலும் பகலிலும் கண்காணிக்க முடியும், அவர்களது வீடுகளை மற்றும் கம்பியூட்டர்களை சோதனையிட முடியும். அவர்களது குடும்பத்திற்கு அல்லது ஊடகங்களுக்கு தகவல் ஏதும் தராமல் எந்தவிதமான வாய்ப்பும் கொடுக்காமல் ரகசியமாக அவர்களை விசாரிக்க முடியும். இப்படி காவலில் வைக்கப்படுபவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் சம்மந்தப்பட்டவர்கள். அல்லது அனுதாபிகளாகக்கூட இருக்க வேண்டியதில்லை. பயங்கரவாதம் தொடர்பாக ஏதாவது தகவல் இருக்கிறது; என்று ஒரு நபரைக் குறிப்பிட்டு அரசாங்கம் மற்றும் அதன் ஏஜென்சிகள் வலியுறுத்திக் கூறுமானால் அந்த பயங்கரவாத நடவடிக்கை நடக்காவிட்டாலும் அல்லது திட்டமிடப்படாவிட்டாலும் கைது செய்யப்படலாம்.

கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுட்டுக்கிடக்கும் வலியில் விசாரணைக்கு பதில் தந்தாக வேண்டும், குற்றம் சாட்டப்பட்டுவிட்டால் அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜராக்கப்படுமுன் மேலும் 24-மணி நேர விசாரணைக்கு உட்படுவார்கள். இத்தகைய நடவடிக்கைகள் வழக்கமாக ராணுவ அல்லது பாசிச சர்வாதிகாரங்களோடு சம்மந்தப்பட்டவை.

அதே நேரத்தில் அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் கட்டுக்கோப்பை மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பிரதமர் ஜான் ஹோவார்ட் மத்திய போலீஸ் மற்றும் பாதுகாப்பு கட்டுக்கோப்பிற்கு மேலும் $400 மில்லியன் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார். ASIO-விற்கு தேவைப்படும் ஆதாரங்கள் அனைத்தையும் தருவதாகவும் உறுதியளித்தார். இந்த உள்நாட்டு உளவு அமைப்பு அரசாங்க எதிர்கள் மீது 1950,1960 மற்றும் 1970 களிலும் கெடுபிடிப்போர் மற்றும் வியட்நாம் போரிலும் அருவருக்கத்தக்க தந்திரங்களையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என்ற கெட்டபெயரை எடுத்தது. ஆனால் இந்த அமைப்பில் முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிகமாக 830 அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் நிதியூட்டம்பெறும் இதர உளவு ஸ்தாபனங்களாவன ஆஸ்திரேலிய ரகசிய புலனாய்வு சேவை (Australian Secret Intelligence Service -ASIS)- இதற்கான பட்ஜெட் ஹோவார்ட் அராங்கத்தில் இரட்டிப்பாக்கப்பட்டிருகிறது- மற்றும் தேசிய மதிப்பீட்டு அமைப்பு (ONA) ஆகியவையாகும். அண்மையில் ONA ஈராக் படையெடுப்பிற்கு முன்னர் ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' என்ற கூற்றை பொய்யாக்கியதில் அதன் பொறுப்பினை நாடாளுமன்ற அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தபோதிலும் அந்த அமைப்பும் இந்தில் ஊட்டம் பெறும்.

சென்ற வாரம் மாநில அரசாங்கங்களோடு இணைந்து மத்திய ஏஜென்சிகள் மிகவும் பிரபலமாக விளம்பரப்படுத்தப்பட்ட 5-நாள் பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் நடத்தின. அதில் 3,000 ராணுவ மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மத்திய தேர்தல்களுக்கு முன்னர் நாட்டின் பாதுகாப்புப்பற்றிய அச்ச உணர்வை தூண்டுகின்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு தொடர் நடவடிக்கைகளில் இது முதலாவதாகும். வெளியுறவு அமைச்சர் அலெஸ்சாண்டர் டோனர் திடீரென்று தேர்தலுக்கு முன்னர் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பாக உருவாகிவரும் மெத்தனப்போக்கை எதிர்த்து நிற்பதற்காக அந்த வெள்ளை அறிக்கை அவசியமென்றும் அறிவித்திருக்கிறார்.

எதிர்கட்சியான தொழிற்க்கட்சி உடனடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தது. தொழிற்கட்சித் தலைவர் Mark Latham புலனாய்வு சேவைகளுக்கு செலவுகள் பெருகியிருப்பதை வரவேற்றார். அட்டர்னி ஜெனரல் Robert McClelland, Ruddock நடவடிக்கைகள் தொடர்பாக தொழிற்கட்சி "மிகுந்த ஆதரவுடன்" இருப்பதாக குறிப்பிட்டார். தொழிற்கட்சி அரசாங்கம் அமைக்கும்போது இந்த வகையில் முழுமையான அதிகாரங்களையும் பெறும் எனறு கருத்துத்தெரிவித்தார். பாலி குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து New South Wales பகுதியில் இயற்றப்பட்ட பயங்கரவாதம் (போலீஸ் அதிகாரங்கள்) சட்டம் 2002- இதுவரை பயன்படுத்தப்படாவிட்டால் கூட அப்பகுதி தொழிற்கட்சி பிரதமர் Bob Carr சட்டத்தை கடுமையாக்கப்போவதாக உறுதியளித்திருக்கிறார். குயின்ஸ்லாண்ட் தொழிற்கட்சி பிரதமர் Peter Beattie 50 குற்றங்கள் தொடர்பான கமிஷன் பரிந்துரைகளை "கடுமையாக பரிசிலித்து" வருவதாகவும் வாரண்டுகள் இல்லாமலே மறைமுகமாக போலீசாரை விசாரிக்க அனுமதிப்பது இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விதிகள் எதுவும் சாதாரண மக்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பதற்காக கொண்டுவரப்படவில்லை. முடிவின்றி அதிகாரங்கள் மேலும் மேலும் வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தபோதிலும், செப்டம்பர் 11-ற்குப் பின்னான நடவடிக்கையளின் கீழ் பயங்கரவாத குற்றம் தொடர்பாக எவரும் இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை.

எவ்வகையிலும் பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை, கொலை விமானக்கடத்தல் ஆட்களைக் கடத்துவது, வெடி குண்டுவீசுவது போன்ற பயங்கரவாதச் செயல்கள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள சட்டப்படி கடுமையான குற்றங்களாகும். ASIO-விற்கு மேலும் அதிகாரங்கள் வேண்டியதில்லை, அந்த அமைப்புக்கு ஏற்கெனவே தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க, வீடுகளில் வேவுபார்க்கும் கருவிகளை பொருத்த, தபால்களை இடைமறித்துப் பார்க்க, கம்பியூட்டர்களில் புகுந்து விசாரிக்க, அமைப்புக்களில் ஊடுருவ எல்லாம் அதிகாரங்களைப் பெற்றுளள்து. இந்த கூடுதல் அதிகாரங்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்று சொல்லி வருங்காலத்தில் வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்திகளின் எழுற்சிகளை சமாளிப்பதற்கு பரவலான ஒடுக்குமுறை நடவடிக்கைக்களுக்கான செயற்த்திட்டத்தை உருவாக்குவதுதான்.

Top of page