World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain: Zapatero chooses a business-friendly cabinet

ஸ்பெயின்: சப்பதேரோ தேர்ந்தெடுக்கும் வர்த்தக-நட்பு அமைச்சரவை

By Chris Marsden and Vicky Short
2 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஸ்பெயினின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Jose Luis Rodriguez Zapatero தனது புதிய சோசலிசத் தொழிலாளர்கட்சி (PSOE) அரசாங்கத்தில் செயற்குழுவினரை தேர்ந்தெடுத்திருக்கிறார். அது ஏப்ரல் 18-ல் பதவி ஏற்கிறது.

மார்ச் 14- ஸ்பெயின் மக்கள் வெறுப்பின் இழிவிற்குள்ளான ஜோசே மரியா அஸ்னருடைய மக்கள் கட்சி (PP) அரசாங்கத்தின் தேர்தல் முடிவால் வேறு எவரையும்விட PSOE-கே அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

புதிய PSOE நிர்வாகம் நெருக்கடியை சமாளிக்கும் அரசாங்கம் என்று உறுதியளித்துள்ளது. மாரச் 11-ல் மாட்ரிட் பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய குழுக்களே பொறுப்பு என்பதற்கு சாத்தியமான சான்றுகள் மிகப்பெருமளவில் கிடைத்ததை மறைத்துவிட்டு Basque ETA பிரிவினைவாதிகள் மீது PP-கட்சி பொய்யான முறையில் பழிபோட முயன்றதால் பொதுமக்களிடையே பெருகிய ஆத்திரத்தால் இது பயனடைந்தது. PP அவ்வாறு நடந்து கொண்டதற்கு காரணம்; இவ்வாறு திடீரென உண்மை வெளிவந்தால், ஈராக்கிற்கு எதிராக புஷ் நிர்வாகம் சட்ட விரோத ஆக்கிரமிப்புப்போரை நடத்தியதை அஸ்னர் ஆதரித்து நின்றதற்கும் அரசாங்கத்தின் வலதுசாரி பொருளாதார மற்றும் சமூக திட்டங்களுக்கும் இருந்த பொதுவான எதிர்ப்பு ஒரு பெரும் எதிர்ப்பாக மாற்றிவிடுவதற்கு உத்வேகமாகிவிடும் என்ற பயமே ஆகும்.

PSOE இற்கு பெரும்பான்மை வந்தது PP-ன் வாக்குச்சாவடி வீழ்ச்சியடைந்ததால் என்பதிலும் பார்க்க திடீரென வந்த எழுச்சி வாக்கு தொகையாக மாற்றியதனால் ஆகும். பல தொகுதிகளில் ஊழியர்களும் இளம் வாக்காளர்களும் PSOE -ற்கு வாக்களித்தது, PP கட்சியை பதவியிலிருந்து விரட்டுவதற்கு அதுதான் சிறந்தவழி என்று கண்டதனால் ஆகும். சமூக ஜனநாயக வாதிகளுக்கு பரவலான அளவில் ஆதரவும் நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதை அது காட்டுகின்றது என்பது கடினம்.

இது PSOE-க்கு பெரிய பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது, பெரும்பாலான ஸ்பெயின் நாட்டு மக்கள் பொருளாதார சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை இடதுபக்கம் இட்டுச்செல்ல விரும்புகின்ற பொழுது பெரு வர்த்தக வட்டாரங்களுக்கு கட்டுப்பட வேண்டியநிலை PSOE -க்கு ஏற்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஈராக்கிலிருந்து ஸ்பெயின் நாட்டுத்துருப்புக்களை திரும்ப அழைத்துக்கொள்வதாக உறுதியளிக்க வேண்டிய கட்டாயம் PSOE -க்கு ஏற்பட்டது. அப்படி செய்யத் தவறினால், அதற்கு பொறுப்பேற்க வேண்டிவரும். PP யும் தானும் சம்மந்தப்பட்ட பிரபலமான ஊழல்களை ஒழித்துக்கட்டுவதாக PSOE பிரகடனப்படுத்தியிருந்தது. PP இன் பாரம்பரியத்தால் விளைந்த துன்பத்தை PSOE ஏற்று சீரமைத்து தரவேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக PSOE-ற்கு ஒட்டுமொத்த அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தானாக மந்திரிசபை அமைக்க முடிவு செய்த பின்னர் தன்னாட்சி பிராந்தியத்தில் ஸ்ராலினிஸ்டுகள் மேலாதிக்கம் செலுத்தும் ஐக்கிய இடது (Izquierda Unida) மற்றும் இதர தேசியவாத கட்சிகளுடன் இன்னும் உடன்படிக்கைகள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய உடன்படிக்கைக்கு பதிலாக அக்கட்சிகள் தங்களது கோரிக்கைகளை எழுப்பும்.

 

ஏற்கெனவே மூன்று இடது தேசியவாதக்கட்சிகளின் தலைவர்களான Catalan Esquerra Republicana பொதுச்செயலாளர் Josep Carod Rovira, Begona Errazzi, தலைவர் Basque Eusko Alkartasuna மற்றும் Aragon Chunta Aragonista தலைவர் Fuster ஆகியோர் பகிரங்கக்கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். ''இரண்டாவது ஜனநாயக மற்றும் பலதேசிய மாற்றத்திற்காக". என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தேசிய பன்முகத்தை கலாச்சார மற்றும் மொழிக்கொள்கையை "கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவது" மற்றும் பிராந்திய தன்னாட்சியை வலுப்படுத்துவது என இதர கோரிக்கைகளை எடுத்திருக்கின்றனர். இந்தப் பிரச்சனையில் ஏற்கெனவே சலுகைகள் வழங்கப்பட்டு பிராந்திய அராசங்களின் அமைச்சரவை தலைவர்கள் பாதுகாப்பு நீதி பொதுப்பணி மற்றும் தொழில்துறை, சுற்றுலா, மற்றும் வர்த்தக அமைச்சர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

அஸ்னாரை தனது முக்கிய கூட்டாளியக பார்த்துவந்த வாஷிங்டனது கோபத்தைக் கிளறாமல் ஐரோப்பாவின் பிரதான சக்திகளான ஜெர்மனி மற்றும் பிரான்சுடன் தனது அணுகுமுறையை அமைத்துக்கொள்ளும் மற்றொரு பணியையும் PSOE எதிர் நோக்கியுள்ளது.

PP ஆட்சியின கீழ் ஸ்பெயின் ஒருவகையான வீக்கம் உணரப்பட்டது, இது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மிகப்பெருமளவிற்கு மானியத்தொகையை பெற்றதாலும், மலிவான கூலி உழைப்பு மற்றும் குறைந்த வரிவிதிப்புள்ள ஐரோப்பிய சந்தையை தேடிவந்த சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முடிந்ததாலும் இந்த செழுமை ஏற்பட்டது. மே மாதம் EU- வில் புதிதாக பத்து நாடுகள் இணைந்ததால் ஸ்பெயினிற்கு கிடைத்துவரும் இந்த அனுகூலங்கள் பறிக்கப்பட்டுவிடும். புதிய EU உறுப்பினர்கள் கிழக்குப்பகுதியிலிருந்து ஸ்பெயினுக்கு போட்டி நாடுகளாக உருவாகி EU நிதி ஒதுக்கீட்டிலும் மற்றும் குறைந்த ஊதியங்கள், இதர ஊக்குவிப்புக்களை வழங்குவதிலும் எளிதாக ஸ்பெயினை முறியடித்துவிட முடியும்.

இந்தக்குறிக்கோளை கருத்தில் கொண்டு Zapatero மிகக் கவனமாக தனது அமைச்சரவையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்தலில் தந்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்களை சம உரிமை அடிப்படையில் அமைச்சர்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அத்துடன் இரண்டு துணைத்தலைவர்களையும் தெரிவு செய்திருக்கிறார். முந்திய PSOE Felipe Gonzalez அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த பலர் உட்பட அரசியல் வாதிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் 1996-ல் நடைபெற்ற நிதி மோசடியில் அரசியல் அரங்கிலிருந்து காணாமல் போய்விட்டவர்ள் இதில் 7 பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் ஒரு ''நீதிபதி உட்பட'' 6 பொருளாதார நிபுணர்கள் மற்றும் 2 அரசியல் பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் Gonzalez அரசாங்கத்திலும் அதற்குப்பின்னரும் EU- வில் பதவிகளில் இருந்தவர்கள். ஐரோப்பிய பொதுச் சந்தையில் ஸ்பெயின் சேருவதற்கு சிலர் பொறுபாளர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் நிபுணர்களான சிலர் மத்தியக்கிழக்கில் பதவி வகித்தவர்கள்.

அரசாங்கத்தின் தன்மையை மதிப்பிடுவது அதன் நிதியமைச்சர் மற்றும் திறைசேரியின் ஆழுனர் பதவியைப் பொறுத்துத்தான். முதலில் Zapatero முன்னணி வங்கியாளரும் PSOE ன் பொருளாதார திட்ட வரைவாளருமான Miguel Sebastian-ஐ தேர்ந்தெடுக்க விரும்பினார். ஆனால் Sebastian அந்த பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்து பிரதமரின் ஆலோசகராக இருக்க ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு பதிலாக Zapatero, Pedro Solbes-ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது நியமனம் PPன் பொருளாதார திட்டத்தை தொடர்வதற்கான உறுதிப்பாட்டையும் ஐரோப்பாவை நோக்கி உறுதியான அணுகுமுறையையும் மேற்கொள்வதாக அமையும். தற்போது அவர் EU-வில் பொருளாதார விவகார கமிஷனராக பணியாற்றி வருகிறார், இவர் Felipe Gonzalez இன் POSE அரசாங்கத்தில் 1996-வரை நிதியமைச்சராக இருந்தவராவார்.

தனது EU பதவியில் Solbes ஐரோப்பிய ஆணையத்தில் உறுதியன உடன்படிக்கையை உருவாக்கி செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கிறார். இது EU நாடுகளில் உறுப்பினர்களாக உள்ள யூரோ மண்டலத்தைச் சார்ந்வர்கள் பட்ஜெட் பற்றாக்குறைகளைக் கட்டுப்படுத்தவும், நலன்புரி பட்ஜெட்டுக்கள் மற்றும் ஊதிய மட்டங்கள் மீது திட்டமிட்டமுறையில் தாக்குதல்தொடுக்க இந்த ஒடன்படிக்கை வகை செய்கிறது. அவர் நிதியமைச்சராகவும் அதே நேரத்தில் மத்திய வங்கித் தலைவராககவும், இருக்கும் இரண்டு பொறுப்புக்களையும் கேட்டு பெற்றிருக்கிறார். இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார விவகாரங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வருகிறது.

Zapatero வர்த்தக சமூகத்திற்கு வேண்டிய மனிதன் தானே என்பதை ஏற்கனவே அவர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார். தேர்தல் முடிவுகள் வந்ததும் பங்குச்சந்தைகளில் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தது. புதிதாக அரசுடைமையாக்கப்பட்ட சேவைகளில் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள PP ஆதரவாளர்களை POSE வெளியேற்றிவிடும் என்ற வதந்திகளின் காரணமாக இவ்வாறு நடந்தது. உடனடியாக அவர் வர்த்தகம் வழக்கம்போல் நடக்குமென்று உறுதியளித்தார்.

மத்திய கிழக்கிற்கு முன்னாள் EU தூதரான Migue Angel Moratinos வெளியுறவு அமைச்சராக இருப்பார் இதற்கு முன்னர் Castille தன்னாட்சி அரசாங்கத்தில் தலைவராக இருந்த Jose Bono-வை பாதுகாப்பு அமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களது முக்கியமான பணிகள் ஈராக் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையே உருவாகும் பேரங்களை செயல்படுத்துவதுதான்.

தேர்தலின்போது Zapatero அமெரிக்காவுடனான அஸ்னாரது கூட்டினை எதிர்ப்பதாக நாடகமாடினார். ஈராக்கிலிருந்து ஸ்பெயினின் 1,300-துருப்புக்களையும் திரும்ப அழைப்பதை ஆதரிப்பதாகச் சொன்னார். அதற்குப்பின்னர் இப்போது அமெரிக்காவுடன் எந்த உறவும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு பாடுபட்டு வருகிறார். ஐ.நா ஈராக்கை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளாவிட்டால் அல்லது முறையான அரசியல் சட்டம் உருவாகும் வரை காத்திருக்கப்போவதாகவும் அதற்குப் பின்னர்தான் தனது துருப்புக்களை விலக்கிக்கொள்வது பற்றி பரிசீலிக்கப்போவதாகவும் கூறுகிறார்.

வாஷிங்டன் ஜூன் 30 வாக்கில் தனது பொம்மை அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக பதவியில் அமர்த்த கருதியுள்ளது. அப்படி செய்வதன் மூலம் ஈராக்கின் இறையாண்மை மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பார்கள், ஐரோப்பிய அரசுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வகையில் ஐ.நா-வின் பங்களிப்பை ஈராக்கில் அதிகரிப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. EU வெளியிட்டிருக்கிறது ஒரு அறிக்கையில் ஈராக்கில் சுதந்திரமான அரசுக்கு அதிகாரம் மாற்றித்தரப்படுவதில் ஐ.நா விற்கு முக்கிய பங்கு இருக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

இதர பதவிகளை பொறுத்தவரை Jose Antonio Alonoso உள்துறை அமைச்சராக Jose Montilla தொழில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா அமைச்சராகிறார். Juan Frenando Lopez Anguilar நிதி அமைச்சராகவும் Jordisevilla பொதுநிர்வாக அமைச்சராகவும் பொறுப்பேற்கின்றனர்.

முன்னாள் நீதித்துறை துணை அமைச்சர் Maria Teresa Fernandez de la Vega துணை பிரதமராகவும் பிரதமரின் அலுவலகத்தில் அமைச்சராகவும் பணியாற்றுவார். அவர் மிக முக்கியமான மந்திரிசபை பெண் உறுப்பினர் மற்றும் Elena Salgado சுகாதார அமைச்சராகவும் Elena Espinosa விவசாயம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும், Carmen Calvo பண்பாட்டுத்துறைக்கும், Maria Jesus Sansegundo கல்வி துறைக்கும், Cristina Narbona சுற்றுப்புறச்சூழலுக்கும், Magdalena Alvarez தொழில்துறைக்கும் மற்றும் Maria Antonia Trujililo வீட்டுத்திட்ட அமைச்சுக்கும் பொறுப்பேற்கபார்கள்.

வீட்டுத்திட்ட அமைச்சர் புதிததாக உருவாக்கப்பட் ஒரு பதவியாகும், இது கட்டுப்படியாக்கூடிய வீடுகள் வசதிக்கேற்ப கிடைக்கவில்லையே என்ற மக்களது ஆத்திர உணர்விகு ஒரு பதிலாகப் படுகின்றது.

மில்லியன் கணக்கான இடதுசாரி முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் கிளர்ந்தெழுந்தாலேயே தான் பதவிக்கு வந்ததையும், PP அரசாங்கத்தின் அதே கொள்கைகளை இவ் அரசாங்கம் நீடிக்கின்றது என்பதை காண்டால் அவர்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் Zapatero நன்றாக உணர்ந்திருக்கிறார்.

Zapatero பொதுமக்களது ஆதரவை நிலைநாட்டிக் கொள்வதற்காக தாராளவாத சமுதாய கொள்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளை எடுக்கும் நேரத்தில் பெரிய நிறுவனங்களின் நலன்களை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அலிகளாக இருப்பவர்களின் உரிமைகளை காக்கவும், பள்ளிகள் சுகாதார சேவைகளில் கத்தோலிக்க மத ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் நடுநிலை அரச தொலைக்காட்சி உருவாக்கவும், வேலைவாய்ப்பிலும், சமுதாயத்தின் இதர பகுதிகளிலும் பாலியல் பிரையோகங்களிற்கு எதிரான சங்கடங்களை நிறைவேற்றவும் உறுதியளித்திருக்கிறார். முற்றுமுழுதான பாலியல் சம உரிமைக்கும், கிரிமினல் கும்பல்களுக்கு எதிரான இடைவிடாத போர் நடத்த துவக்கப்பட்ட நவடிக்கையாக தமது அரசு முழு மூச்சாக பாடுபடுமென்று அறிவித்திருக்கிறார்.

சென்ற ஆண்டு PP அரசாங்கம் அறிமுகப்படுத்திய மதக் கல்வியை கட்டாயமாக்கி அதில் மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும் என்ற நிலையை ஒழித்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார். அந்தச் சட்டம் மக்களது எதிர்ப்பிற்கு இரையானது. ஓரினச் சேர்க்கை உறவுளை "திருமணத்திற்கு இணையாக அங்கீகரிக்கவும்" எந்தக்காரணத்தினாலும் பெண்கள் கருவுற்ற 12 முதல் 14 வாரங்களுக்குள் கருச்சிதைவிற்கு அனுமதிக்க வகைசெய்யும் சட்டத்திருத்ததைக் கொண்டு வரவும் முடிவு செய்திருக்கிறார். தற்போது, கற்பழிப்பினால் உருவான அல்லது சிக்கலான மற்றும் தாயின் உடல் நிலை அல்லது மூளையை பாதிக்கும் கருக்களை கலைக்க மட்டுமே வகை செய்யப்பட்டிருக்கிறது. இதர எல்லா வகையான கருச்சிதைவும் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரிக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன, எனினும் PP மற்றும் கத்தோலிக்க சபையினால் வழிநடாத்தபப்டும் அணிதிரட்ப்பட்ட வலதுசாரிகளது எதிர்ப்பையும் இது சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.

Top of page