WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: May Day demonstrators protest attacks on social
programs
பிரான்ஸ்: மே தின பேரணியினர் சமூகநலத்திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு
By Antoine Lerougetel
3 May 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மே தினப்பேரணிகளில்
கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாரிஸ் நகரத்தில் பேரணியில் கலந்து கொண்டவர்கள்
எண்ணிக்கை 14,000-முதல் 30,000- வரை இருக்கும்.
Place
de la République
எனும் இடத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு வேலையில்லாதோர் அமைப்புக்கள் தலைமைதாங்கி அணிவகுத்து வந்தன.
அவர்களில் பலர் பொது சுகாதார சேவைகளுக்காக வழங்கப்பட்டுவரும் எலக்ரானிக் பச்சை கார்டுகளை
(Cartes Vitals)
காட்டிக்கொண்டு வந்தனர். CGT-
தொழிற்சங்க பதாகைக்கு பின்னால் ஆர்பாட்டக்காரர்களில் பாதிப்பேர் அணிவகுத்து வந்தனர்.
பாசிச ஜோன் மேரி லூபென் ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது சுற்றுக்கு
வந்ததைக் கண்டித்து 2002-ல் மில்லியன் கணக்கானோர் தெருக்களில் அணிவகுத்து வந்தனர். 2003-ல் சிராக் -
ரஃப்ரன் அரசாங்கம் பென்ஷன் உரிமைகளை வெட்டியதையும், அரசாங்க பொதுக்கல்வி திட்டத்தை அழித்ததையும்
கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இந்த ஆண்டு இதே பிரச்சனைகள் நீடிக்கவே செய்கின்றன. அரசாங்கம் தொடர்ந்து
தொழிலாளர்களது உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. வேலையில்லாதிருப்போருக்கு
வழங்கப்படுகின்ற மானியம் இரத்து செய்யப்பட்டுவிட்டதால் ஜனவரி 1-முதல் 2,00,000 க்கு மேற்பட்ட
தொழிலாளர்கள் தங்களது சலுகைகள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கு
வழங்கப்படுகின்ற உதவிகளும், சுகாதார சலுகைகளும் மிகக்கொடூரமாகக் குறைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு மே தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில்
மிகச்சிறிதாக இருந்தன, ஆளும் UMP
கட்சி பிராந்திய தேர்தல்களில் படுதோல்வி அடைச்செய்த பின்னர் வருகின்றதாக இருந்தது. அதில் பிரான்சின் ஒரே
ஒரு பிராந்தியம் தவிர மற்றய எல்லா பிராந்தியங்களிலும் சிராக்கின் பிரதிநிதிகள் தங்களது கட்டுப்பாட்டை இழக்கின்ற
அளவிற்கு தோல்வியடைந்தனர். இது இடது கட்சிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுவதில் அரசியல் முன்னோக்கு
இல்லாமையினால் மட்டுமே விளங்கப்படுத்த முடியும்.
பல அமைப்புக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தன,
ஆனால் அரசாங்கத்தின் எதிர்- சீர்திருத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம்
கொடுக்கும் தெளிவற்ற வேண்டுகோள்கள் தவிர்ந்து, அரசியல் முன்னோக்கு எதுவும் இல்லாமை மிகவும் கவனித்தற்குரியதாக
இருந்தது.
உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் குழு ஒன்று ''ஈராக் மீதான அமெரிக்க
படையெடுப்பிற்குப் பின்னர் ஓராண்டு'' என்ற உலக சோசலிச வலைத் தள அறிக்கையை விநியோக்கித்தனர். அமெரிக்கா
தலைமையிலான கூட்டணிப்படைகள் ஈராக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பின்னர் நடைபெற்ற ஓராண்டு இருப்பு
நிலை ஏடாகவும் போருக்கு ஒரு சோசலிச மாற்றைக் காண்பதற்கும் அழைப்பாக அந்த அறிக்கை இருந்தது.
பாரிஸ் சட்ட மாணவி, நைலா உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளிக்கும்போது
ஐரோப்பிய ஒன்றியத்தை அது உருவாக்கப்பட்டிருந்த முறையை தான் எதிர்ப்பதாக குறிப்பிட்டார். ''அதில்
சேருகின்ற நாடுகளுக்கு அது நல்லது என்று என்னால் கூற முடியாது. பொதுமக்கள் சமூக சேவைகள் மற்றும் உரிமைகளில்
பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டி வரலாம். பட்ஜெட் பற்றாக்குறைகளை, ஒரு சாக்குப்போக்காகக் கொண்டு
ஐரோப்பாவில் பிரான்ஸ் புதிய தாராளவாத கட்டற்ற முதலாளித்துவ நெறிமுறைகளுக்கு அடிபணிந்து கொண்டிருக்கிறது
மற்றும் அது பிரெஞ்சு மக்களுக்கு கேடாகும்" என்றார். "இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லூ பென் ஜனாதிபதி
தேர்தல்களில் இரண்டாவது சுற்றுக்கு வந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மே தினத்தில் மிகப்பெருமளவில்
மக்கள் திரண்ட போது சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது
என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று உணர்கிறேன். இடதுசாரிகளின் வாக்கைப் பெற்று சிராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்
அப்போது நான் தயங்கினேன்: அந்தச்சூழ்நிலையில் அது ஒரு வகை தார்மீக மிரட்டலாக இருந்தது. அதை நான்
மீண்டும் செய்யமாட்டேன்'' என்று அந்த மாணவி கூறினார்.
ஈராக்கில் போர் நடத்தப்பட்டிருக்கக்கூடாது என தான் கருதுவதாக நைலா
குறிப்பிட்டார். ஜனாதிபதி சிராக் ஐ.நா ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை
விரும்புகிறார் என்பதை தான் அறிந்திருப்பதாகவும் துருப்புக்களை அந்த நாட்டிலிருந்து விலக்கிக்கொள்வது
தொடர்பாக என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என்பதில் நிச்சயமில்லாதிருக்கிறார் என்றும் நைலா
குறிப்பிட்டார். ''இது ஒரு பூகோள பிரச்சனை என்பதை நான் அறிவேன், மத்திய கிழக்கு நாடுகள் தங்களது
பிராந்திய கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்கத்
துருப்புக்கள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்தை சொல்வது, ஐ.நா துருப்புக்கள்
அங்கு செல்ல வேண்டுமா என்பது பற்றியும் எனக்கு தெரியாது. அப்படி அவர்கள் செல்வார்களானால் மற்றொரு
இஸ்லாமிய குடியரசு உருவாகும்'' என்று நைலா குறிப்பிட்டார்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியரும்
CGT தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான
வலெறி,
சிராக்கின் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சமுதாயத்திற்கு பேரழிவை
உருவாக்கும் கொள்கைகளை கடைபிடித்து வந்தாலும், அதை மையமாக வைத்து மே தின கண்டனப் பேரணிகள் நடந்து
வந்தாலும், சிராக்கிற்கு வாக்களிக்க இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்ததை ஆதரித்தார். ''சிராக்கிற்கு வாக்களித்தற்காக
நான் வருந்தவில்லை. நான் லூ பென்-ஐ அனுமதித்துவிட முடியாது. பிரான்சில் குடியேறியவர்களுக்காக நான் வாக்களித்தேன்''
என வலெறி குறிப்பிட்டார். முன்னாள் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோஸி குடியேறியவர்கள் மீது கடுமையாக
நடவடிக்கை எடுத்ததுடன் சிராக் நிர்வாகத்தில் அவர்கள் சிறப்பாக நடத்தப்படவில்லை என்பதை அப்பெண்
ஒத்துக்கொண்டார். ஆனால் இரண்டாவது சுற்றில் லூ பென்- மிகக்குறைந்த 18-சதவீத வாக்குகளை பெற்றது நல்லதாகப்
போய்விட்டது என்றும் வலெறி கருத்து தெரிவித்தார்.
மேலும் 11-நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைவது நல்லது என கருத்துத் தெரிவிதார்.
ஐரோப்பிய ஒன்றியம் முதாலளித்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது, மாறாக சோசலிச அடிப்படையில்
அல்ல என்ற உண்மையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இசை மற்றும் ஒலியியல் ஆய்வாளர் ஜோன் பிலிப் லம்பேர்ட், ஐரோப்பிய ஒன்றியம்
விரிவடைவது பொருளாதார அடிப்படைகளை கொண்டதே தவிர சமூக நிலைப்பாடுகளைப்பற்றியதல்ல என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை ஒரே அக்கரையுள்ள விஷயம் என்னவென்றால் பல்வேறு நாடுகளை
சேர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தொடர்பு ஏற்படுத்தி விவாதங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தின் உந்துசக்தி சுதந்திர சந்தை முதலாளித்துவமாகும். பிரெஞ்சு அரசிற்கு சொந்தமான
மின்சாரம், மற்றும் எரிவாயு சேவைகளான EDF-GDF-
ஐ தனியார் உடைமையாக்கும் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்திருக்கிறது.
அவர் தனது விமர்சனத்தில், ''இரண்டாண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் ஏராளமான
பிரசாரங்களை செய்து வந்தன. அதற்குப்பின்னர் ஒன்றையும் காணோம். தேர்தல்கள் எதையும் மாற்றிவிடுவதில்லை,
தேர்தல்கள் அரசியலில் எது குறைந்த தீங்கோ அதை நிலைநாட்டுவதுதான் சோசலிசக் கட்சியும் பெரிய தொழிற்சங்கங்களும்,
மக்கள் வாழ்கின்ற நிலையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. கட்சி மற்றும் தொழிற்சங்க கிளர்ச்சிவாதம் நல்லதல்ல,
கட்டமைப்புக்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகின்றன. பொதுமக்கள் கட்சிகளுக்கப்பால் தொழிற்சங்கத்திற்கு
அப்பாற்பட்டு கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்படுகின்றது," எனக் குறிப்பிட்டார்.
Top of page |