:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spain attempts to appease the US on Iraq
ஈராக் தொடர்பாக அமெரிக்காவை அமைதிப்படுத்த ஸ்பெயின் முயற்சி
By Vicky Short
27 April 2004
Back to screen version
ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமரான
Jose Luis Zapatero
சாத்தியமான வகையில் விரைவாக தனது துருப்புக்களை ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப் போவதாக தொலைபேசியில்
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷிடம் தனது முடிவை தெரிவித்தார். அவர் அதன் பின்னர் தனது வெளியுறவு அமைச்சர்
Miguee Angel Moratinos-க்கு கட்டளையிட்டு அரசுத்துறை செயலர்
கொலின் பவலுடன் கலைந்துரையாடலை நடத்துவதற்காக வாஷிங்டன் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.
ஏப்ரல் 21 பவல் உடன்
Moratinos பேச்சுவார்த்தை நடத்தியதில், ஐக்கிய நாடுகளின்
மூடுதிரையின் கீழ் எவ்வளவு காலம் வரையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் எங்கு தேவைப்பட்டாலும்
துருப்புக்களை அனுப்புவதற்கு ஸ்பெயின் உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்திக்கூறினார்.
அதற்கு ஒரு நாளைக்கு முன்னர் புஷ்
Zapatero-வை
தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் ''திடீரென்று ஸ்பெயின் எடுத்துள்ள நடவடிக்கை'' ''பயங்கரவாதிகளுக்கு
தவறான முறையில் ஆறுதலை'' தந்துவிட்டதாக கோபத்தோடு தெரிவித்தார்.
Moratinos தான் பவலுக்கு எந்த உறுதி மொழிகளையும்
தரவில்லை என்று மிகுந்த சிரமப்பட்டு வலியுறுத்திக் கூறினார். ஆனால் அவர் ஈராக்கை ஐ.நா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளுமானால்,
அப்போது ஈராக்கிற்கு ஸ்பெயின் துருப்புக்கள் திரும்புமா? அல்லது அவை ஆப்கனிஸ்தானுக்கு அனுப்பப்படுமா? அதன் மூலம்
அங்குள்ள அமெரிக்க துருப்புக்கள் ஈராக் வருவதற்கு வழிவகை செய்யப்படுமா? என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில்
அளிப்பதை தவிர்த்துவிட்டார்.
எவ்வாறாயினும், ஐ.நா-வில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும்
விடையமான ஈராக் தொடர்பான புதிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவது எனபதில் ஸ்பெயின் முழுமையாக
ஒத்துழைப்பு தரும் என்று வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார். இராணுவம் தவிர்த்து இதர வழிகளில் ஈராக்கில் ஸ்திர
தன்மைக்கு தொடர்ந்து பங்களிக்க ஸ்பெயின் உறுதியளிப்பதாக அவர் வலியுறுத்திக் கூறினார். இதில் ஈராக்
போலீசாருக்கும் ராணுவ வீரருக்கும் பயிற்சி தருவதும் அடங்கியிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
ஸ்பெயினின் புதிய அரசாங்கம் சமரச முயற்சிகளை முன்னெடுத்தாலும், துருப்புக்களை
விலக்கிக்கொள்ளும் அதனது முடிவினை இட்டு அமெரிக்க நிர்வாகம் தனது கோபத்தை வெளிப்படையாகக்
காட்டிக்கொண்டதுடன், இதனால் ஈராக்கில் உள்ள கூட்டணிப்படைகளிடையே ஏற்பட்டுள்ள தாக்கத்தினை பற்றியும் கவலை
கொண்டுள்ளது.
Moratinos பகிரங்கமாக இழிவுபடுத்தப்பட்டார்.
பவல் Moratinos -சை பின் தொடர்ந்து நிருபர்பேட்டிக்கு
வரவில்லை. இதுபோன்ற சந்திப்புக்கள் நடக்கும்போது அமெரிக்க அரசுத் துறை நிருபர்பேட்டிக்கு இணைந்து வருவது
வாடிக்கை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் எவரும் அங்கு வரவில்லை விவாதிக்கப்பட்டது என்ன? என்ற விபரமும்
தரவில்லை. புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டாலீசா ரைசுடன் சுருக்கமான பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டதில், புகைப்படம் கூட அப்பொழுது எடுக்கப்படவில்லை.
அப்படியிருந்தும் சாந்தப்படுத்தும் மொழியிலேயே தொடர்ந்து
Moratinos
பேசினார். ''எதிர்கால தோற்றத்தைப்பற்றி'' மிக முக்கியமாக பேசியதாகவும் அதில் பவலுக்கும் அவருக்கும் இணக்கம்
ஏற்பட்டதாகவும், ''ஒரு நீண்ட பாரம்பரிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு'' தொடர்ந்து கவனஞ்செலுத்தப்
போவதாகவும் குறிப்பிட்டார்.
''ஸ்பெயின் நாட்டுடன் தனது உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள அமெரிக்கா
விரும்புகிறது'' (துருப்புக்களை) திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவது, கடந்த கால பிரச்சனையாகும், இரண்டு நாடுகளும்
பகிர்ந்து கொள்ளும் விடையங்களைத்தான் நாம் நோக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
அவற்றுள் அவர் முதலாவதாய் ''இரண்டு அரசாங்கங்களும் அடிப்படையில்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மேற்கொள்வதற்கே முன்னுரிமை அளிக்கின்றன'' என அறிவித்தார்.
எவ்வாறாயினும், Moratinos
நிருபர்கள் மாநாட்டில் பேசிய ஜூன் 30-க்கு முன்னர் தனது துருப்புக்களை
விளக்கிக்கொள்ள மாட்ரிட் முடிவு செய்திருப்பது தொடர் விளைவுகளின் தாக்கங்களுக்கு வித்திட்டுவிடும் என்று
''அஞ்சுவதாக'' பவல் கூறியதாக தெரிவித்தார்.
தெற்கு ஈராக்கில் ஸ்பெயின் பிளஸ் அல்ட்ரா படைபிரிவின் கீழ் செயற்பட்டுவரும் மூன்று
நாடுகளின் துருப்புளில் இரண்டு Honduras
மற்றும் டோமினிக்கன் குடியரசினதாகும், அவை ஸ்பெயினை தொடர்ந்து தாங்களும்
படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. நிகரகுவா ஸ்பெயின் துருப்புக்கள் கட்டுப்பாட்டில்
தனது மருத்துவக் குழுக்களை பங்களிப்பு செய்து வருகிறது, அவர்களும் ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள். இது
விலக்கப்பட்டால் El Salvador
இன் 374 சிப்பாய்கள் மட்டுமே மோதல்கள் நிறைந்த நஜாப்பில் பணியாற்றுவார்கள். ஆனால் அந்த நாட்டில் கூட
சமுதாயத்திலும், அரசியல் ஸ்தாபனத்திலும் இது சம்மந்தமாக பெரும் பிளவுகள் நிலவுகின்றன.
பன்னாட்டுப் பிரிவு என்ற படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி நடத்திச்செல்லும் போலந்து
அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருகின்ற நேரத்தில் தனது துருப்புக்களை ஈராக்கிலிந்து விலக்கிக்கொள்ள
வேண்டுமென்று மிகப்பெருமளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மே 1-ந் தேதி போலந்து
EU- வில் நுழைகின்ற
நேரத்தில், பதவியிலிருந்து விலகும் பிரதமர் Leszek
Miller, நாட்டின் மனப்பாங்கை எதிரொலிக்கும் வகையில்
வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: ''தனது துருப்புக்களை (ஸ்பெயின்) விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்திருப்பதை
நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அதே நேரத்தில் அதிரடி வழி நடவடிக்கையும் எடுக்க
முடியாது..... எங்களது முடிவு முற்றிலும் நல்ல சிந்தனை வயப்பட்டதாகவும், அதற்கெல்லாம் மேலாக, அந்தப்பகுதி
சம்பவங்களின் அபிவிருத்தியில் நிலைநாட்டப்படுவதாகவும் அமைந்திருக்க வேண்டும். எப்போது நாங்கள் (ஈராக்கிலிருந்து)
வெளியேறுவோம் என்று நான் சொல்ல முடியாது. ஆனால் புதிய பிரதமர் இதில் திட்டவட்டமாக ஏதாவது சொல்ல
முடியுமென்று நான் உறுதியாகக் கருதுகிறேன்''
ஈராக்கில் 2500 போலந்து போர் வீரர்கள் உள்ளனர். மில்லரின் அலுவலகத்தில்,
சர்வதேச விவகாரங்களின் பொறுப்பு அதிகாரி Tadeusz
Iwinski, Irish Times-ற்கு அளித்த பேட்டியில்
படைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைக்கப்படலாம் என்ற சாத்தியக்கூறை வெளியிட்டிருக்கிறார்.
Zapatero-வின்
முடிவுகள் போலந்து திட்டங்களில், போலந்து துருப்புக்களில் ''கணிசமான அளவிற்கு குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள"
ஏற்படுத்தியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இதர நாடுகளும் தங்களது சொந்த நிலைபாடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. தாய்லாந்து
தனது ராணுவ மருத்துவர்கள் மற்றும் பொறியியல்லாளர்கள் தாக்குதலுக்கு இலக்கானதால் 451- பேரையும், விலக்கிக்கொள்ளப்
போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இத்தாலியில் நடத்தப்பட்ட ஆன்-லைன் வாக்கெடுப்பில் 60-சதவீதம் பேர்
உடனடியாக துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டுமென்பதற்கும், 27-சதவீதம்பேர் ஈராகில் அமெரிக்க பொம்மை
ஆட்சிக்கு அதிகாரத்தை மாற்றித்தருவதற்கான கடைசி நாளான ஜூன் 30-வரை காத்திருக்கலாம் என்பதற்கும் சார்பாக
உள்ளனர்.
புஷ் நிர்வாகத்திற்கு அதிக கவலை தருவது ஸ்பெயின் நாட்டுத் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படுவதால்
தனது சொந்த நாட்டு மக்களிடையே ஏற்படுகின்ற தாக்கம் தான். ஆக்கிரமிப்புக்கு மக்களது எதிர்ப்பு ஆழமாகிக்கொண்டே
போவதால் தமது அரசாங்கம் ஒருபோதும் இல்லாதவாறு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக உணருகின்றனர்.
Moratinos-ம் பவலும் விவாதித்த மற்றொரு பிரச்சனை
மத்தியகிழக்கு நிலவரமாகும். இங்கு இருவருக்குமிடையில் அதிக உடன்பாடு காணப்பட்டது. இதற்கு முன்னர் முந்திய சோசலிஸ்ட்
கட்சி அரசாங்கத்தில் Moratinos ஸ்பெயின் நாட்டுத்தூதராக இஸ்ரேலில்
பணியாற்றியவர் மற்றும் பல ஆண்டுகள் மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றிய தூதராகப் பணியாற்றியவர். மேற்குக்கரையின்
பாதிக்கு மேற்பட்ட பரப்பை இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் நிரந்தரமாக தன் நாட்டோடு இணைத்துக்கொள்வதற்கு
முடிவு செய்திருப்பதை அமெரிக்க அரசாங்கம் ஆதரிப்பதை ஏற்றுக்கொண்டார் ''ஷரோனால் பிரதிநிதித்துவம்படுத்தியுள்ள
ஒரு சந்தர்ப்பம் புதிய ஆற்றல் வாய்ந்த அறிவிப்பாகும்'' என்று குறிப்பிட்டார்.
அவர் தனது ஆதரவோடு சில ஆறுதல் வார்த்தைகளையும் கூறினார். '' ஐயத்திற்கிடமின்றி,
எல்லைகள் குறித்து ஐரோப்பாவும், ஸ்பெயினும் குறிப்பாக கவலையடைந்துள்ளன. (ஷரோன் நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளும்
முறையில்) எங்களைப் பொறுத்தவரை இஸ்ரேலின் எல்லைகள் 1967-க்கு முந்தியதாக இருக்கவேண்டும், ஆனால் நாம் இப்போது
இறுதிக்கட்ட உடன்படிக்கைக்கு வந்துவிடவில்லை. தற்காலிகமாக இதில் ஆக்கபூர்வமான அம்சம் என்னவென்றால் காசா பகுதியில்
குறிப்பிட்ட பகுதி ஆக்கிரமிப்பை அவர்கள் காலிசெய்கிறார்கள். அவர்கள் ஒருதலைப்பட்சமாக செய்தாலும் அது ஆக்கப்பூர்வமானதுதான்''
மாட்ரிட்டில் மார்ச் 11 அன்று பயங்கரவாதி குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து
Moratinos
வெளியிட்டுட்ட ஒரு எச்சரிக்கையில் இஸ்ரேல்-பாலஸ்தீனய மோதல் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை அல்கைடா மற்றும்
பயங்கரவாத இஸ்லாமியக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை
என்று எச்சரித்திருந்தார்.
ஸ்பெயின் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு போகும் சாத்தியக்கூறுபற்றியும், ஈராக்கிலிருந்து
படைகள் விலக்கிக்கொள்ளப்படுவதற்கு ''ஈடுசெய்யயும்'' வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர்
திட்டமிட்டே தெளிவில்லாமல் பதில் சொன்னார். ஆனால்
El Pais தந்துள்ள தகவலின்படி ஆப்கானிஸ்தானில் நிர்வாகத்தை
பேணும் பொறுப்பினை ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத்திற்கு மாற்றுவதன் மூலம் அமெரிக்கா தனது படையின் அளவை
அங்கு குறைத்துக்கொள்ள விருப்பம் கொண்டிருக்கிறது என்பது பரவலாக அனைவரும் அறிந்ததுதான். மேலும் ஸ்பெயின்
பால்கன் பகுதிகளிலும், ஆப்கானிஸ்தானிலும், தனது ராணுவப் பங்களிப்பை அதிகரிக்க விருப்பமாக உள்ளது என்பதும்
நன்றாக அனைவருக்கும் தெரியும். |