WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The diplomacy of imperialism: Iraq and US foreign policy
Part six: Reagan administration deepens ties with
Hussein
ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்
பகுதி ஆறு: றீகன் நிர்வாகம் ஹுசைனுடன் உறவுகளை ஆழமாக்குகின்றது
By Alex Lefebvre
24 March 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஈராக்கின் வரலாறு, அதன் அமெரிக்காவுடனான உறவு பற்றிய தொடர்கட்டுரைகளில்
இது ஆறாவது ஆகும். முதல் 5 கட்டுரைகளும் மார்ச் 12, 13, 16, 17, 19-ம் தேதிகளில் (ஆங்கிலத்தில்)
வெளியிடப்பட்டன. கீழேயுள்ள கட்டுரையில், 1980-களின் ஈரான்-ஈராக்கியப் போரின் பொழுது இருந்த அமெரிக்க-ஈராக்கிய
உறவுகளை, நாம் நம்முடைய ஆய்வில் தொடர்கிறோம். கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு மேற்கோள், சமீபத்தில்
இரகசிய ஆவணக்காப்பகத்திலிருந்து நீக்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு ஆவணங்கள் ஆகும்; இவை தேசிய பாதுகாப்பு
ஆவணங்கள் (National Security Archive),
http://www.gwu.edu/`nsarchive.chadwyck. com/.
என்னும் வலைதளத்தில் அனைவருடைய பார்வைக்கும் காணக் கிடைக்கும்.
1983 டிசம்பரில், ஈராக் விஷவாயுவை பயன்படுத்துகிறது என்ற ஈரானிய குற்றச்சாட்டுக்களிடையே,
ஹுசைனுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுவதற்காக மேற்கொள்ளப்பட்ட டொனால்ட் ரம்ஸ்பெல்டின் பாக்தாத்
விஜயம், பெரும் வெற்றியைத்தான் கொண்டிருந்தது. அமெரிக்காவுடன் முழு இராஜதந்திர உறவுகளை புதுப்பித்திக்
கொள்ளவதற்கு ஹுசைன் உடன்பட்டார்.
அமெரிக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு, ஈரானுக்கு எதிரான ஈராக்கியப்
போர்முயற்சிக்கு உதவினர். 1984 ஜனவரி 14ம் தேதி, இஸ்ரேலில் இருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட
ஒரு தந்தியின்படி, ஒரு தூதர்-மட்ட அரசுத்துறை அதிகாரி, "நாம் கடந்த மாதம் ஆரம்பித்த இராஜதந்திர முயற்சியை
மேற்பார்வையிட்டு, மேற்கத்திய மற்றும் சீனாவிலிருந்து
(PRC) ஆயுதங்கள் ஈரானுக்குச் செல்வதைத் தடுக்கவேண்டும்."
அரசுத்துறை செயலர் ஜோர்ஜ் ஷீல்ட்ஸ், "பயங்கரவாதத்திற்கு எதிரான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை ஈரான் மீது
சுமத்துவதென்று முடிவெடுத்துள்ளார்" என்று கூறி நியாயப்படுத்தப்பட வேண்டும்'' என கூறியதன் மூலம் இது நியாயப்படுத்தப்பட்டது.
ஈரான் பயங்கரவாதத்தை வளர்க்கும் அரசு என்ற பட்டியலில் அமெரிக்காவால்
சேர்க்கப்பட்டு, அதன் பின்னர், ஈராக் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. எவ்வறாயினும், தன்னுடைய முழு வலிமையையும்
ஈராக்கிற்குப் பின்னால் அமெரிக்கா பிரயோகிக்கவில்லை:
ஈரானின் நிதிக்கு முக்கியமான வளமாக இருந்த ஈரானிய எண்ணெய் இறக்குமதி அமெரிக்காவினால் பாதிப்பிற்குட்படுத்தப்படவில்லை.
அதேநேரத்தில், "வெடிமருந்துகள் இல்லாத, இரட்டைப் பயன்பாட்டுக் கருவிகள் ஈராக்கில்
விற்பனை செய்வதற்கு" அமெரிக்க அதிகாரிகள் அனுமதிப்பர். இதைத்தவிர, அமெரிக்க அதிகாரிகள் எகிப்திற்கு
US K-60
பீரங்கிகளை வழங்குவது என்றும், அதையொட்டி எகிப்திய இராணுவம் தன்னிடத்தில்
உள்ள சில சோவியத் T
-62-களை ஈராக்கிற்கு அனுப்பமுடியும்.
எவ்வாறாயினும், ஈரான்-ஈராக் போரில் ஏற்பட்ட மாறுதல்கள், ஹுசைனிடம்
நெருங்கும் றீகன் நிர்வாகச் செயல்களைச் சிக்கலாக்கின. 1984 பெப்ரவரி மாதம் ஈரானால், ஈராக்கில் பாஸ்ராவிற்கு
அருகிலுள்ள இடங்களின் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் ஈராக்கிய இராணுவம் 9,000 வீரர்களை இழந்தது; ஈரானில்
மக்கள்தொகை அதிகமாக உள்ளதை நனவுபூர்வமாக சாதகமாக்கிக் கொண்ட ஹுசைன், ஈரானியர்மீது விஷவாயுவை
மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார். 1984 பெப்ரவரி 24ம் தேதி அமெரிக்க வெளிவிவகாரத்துறை குறிப்பு
ஒன்றில் இது நிகழ்வதற்கு முன்பே, ஒருகால் ஈராக் விஷவாயுவைப் பயன்படுத்தக்கூடும் என்று பின்வரும் ஈராக்கிய
இராணுவ அறிக்கையை மேற்கோள் காட்டியது: "ஒவ்வொரு கெடுதல் செய்யும் பூச்சிக்கும், அது எத்தனை எண்ணிக்கையானாலும்,
ஈராக்கிடம் அதைக்கொல்ல தேவையான பூச்சிக் கொல்லி மருந்து உள்ளது என்பதை ஈரானிய படையெடுப்பாளர்கள்
அறியவேண்டும்." ஈராக்கின் விஷவாயுக்கள் பலவும் மேற்கத்திய கம்பெனிகளிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுவதற்கு
என்று கூறப்பட்டு தருவிக்கப்பட்டிருந்தன.
இம்முறை, ஈராக் விஷவாயுவை பயன்படுத்தியதை கவனத்திற்கு
எடுக்கவிடமுடியாதளவிற்கு மிகவெளிப்படையாகப் போய்விட்டது; றீகன் நிர்வாகம் மார்ச் 5ம் தேதி ஒரு
அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிடும் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டது: "அமெரிக்கா இருக்கும் சான்றுகள்
ஈரானியக் குற்றச்சாட்டுக்களான ஈராக் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திவிட்டது என்பதை நிரூபிக்கின்றன என்ற
முடிவுக்கு வந்துள்ளது." இருந்தபோதிலும்கூட அறிக்கை, தொடர்ந்தது; "தற்போதைய ஈரானிய ஆட்சி தொடர்ந்து
ஈராக்கில் இருக்கும் முறையான ஆட்சியை அகற்றவேண்டும் என்ற உறுதிகூறியுள்ள இலக்கிலிருந்து மாறமுடியாது என்ற
பிடிவாதத்துடன் இருக்கிறது; இது நாடுகளுக்கு இடையே நெறியுடன் நடந்து கொள்ளவேண்டியவிதத்தில் ஏற்கத்தக்கது
அல்ல என்று அமெரிக்கா கருதுகிறது..."
பல மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா இறுதியாக ஈரானுடைய குற்றச்சாட்டுக்களை
ஒப்பக்கொண்டதில் கோபமுற்ற ஹுசைன் ஆட்சி, அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி இவற்றை அணுகுண்டு
வீசித்தாக்கியதை குறிப்பிட்டு, "போர் தர்மத்தைப் பற்றிப் பேசும் உலகில் கடைசி நாடாகத்தான் அமெரிக்கா
உள்ளது" என்ற ஆத்திரமான முறையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அதிகாரபூர்வ நிலைப்பாடு இவ்வாறு இருந்தபோதிலும், ஈராக்கிய அரசாங்கத்திடம்
இந்தக் கண்டனம் உலகப் பொதுமக்களைச் சமாதானப்படுத்துவதற்குத்தான் என்று தனிப்பட்ட முறையில் விளக்குவதற்கு
அமெரிக்க அதிகாரிகள் பெரிதும் கவனம் கொண்டனர். அமெரிக்க அரசுத் துறை செயலர், ஷீல்ட்ஸ், தன்னுடைய
துணை அதிகாரி லாரென்ஸ் ஈகில்பர்ஜர், ஈராக்கிய பிரதிநிதி இஸ்மெட் கட்டானியை இருவரும் சந்தித்துப் பேசிய
கூட்டத்தில் தானே நேரில் கலந்துகொண்டார். மத்திய கிழக்கில் அமெரிக்கப் பிரதிநிதகளுக்கு ஷீல்ட்ஸ் அனுப்பிய
அரசுத்துறை குறிப்புக்களின்படி, "ஈகில்பர்ஜர், விவாதம் தொடங்க இருக்கும் முன், கட்டானியை ஒருபுறம்
அழைத்துச் சென்று அவர் எடுத்துச் செல்லவேண்டிய செய்தியின் மையக் கருத்தை வலியுறுத்தினார்: எவ்விடத்திலும்
தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் நம்முடைய உறுதியான
கொள்கை ஆகையால், மார்ச் 5ம் தேதி, ஈராக் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை கண்டனம் செய்து
அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. கொமேனியின் பிரச்சாரப் போருக்கு இரைபோடுவதற்காகவோ அல்லது
அமெரிக்க கொள்கை ஈரான், ஈராக் பற்றி மாறிவிட்டது என்ற கருத்திலோ இவ்வறிக்கை அமையவில்லை.
அமெரிக்கா ஈரானிய வெற்றி தடுக்கப்படுவதற்கான முயற்சிகளைத் தொடரும், ஈராக்குடனான உறவுகளில்
முன்னேற்றம் தொடரவேண்டும் என்று ஆர்வத்துடன் நம்புகிறது. இதற்குப் பின்னர் வெளிவிவகார செயலர் (ஷீல்ட்ஸ்)
உள்ளே நுழைந்த மேற்கூறிய கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தனார்."
அமெரிக்க அரசாங்கம் விஷவாயு பயன்படுத்தப்பட்டதை பெரிய பிரச்சினையாக
எடுத்துக்கொள்ள வில்லை என்ற உத்தரவாதம் ஈராக்கிய அரசாங்கம் போதுமான அளவிற்குப் பெறவில்லை என்ற
கருத்தைக் கொண்டிருந்த, ஷீல்ட்ஸ், மார்ச் 1984 ல் ரம்ஸ்பெல்டை மீண்டும் பாக்தாத்திற்கு அனுப்பி வைத்தார்.
ரம்ஸ்பெல்ட் இரண்டாம் முறை பாக்தாத்திற்கு சென்றது பற்றி குறைவான ஆவணங்கள்தாம் இரகசியக் காப்பிலிருந்து
நீக்கப்பட்டுள்ளன; அவற்றில் என்ன அடங்கியருக்கும் என்ற ஊகம் இருப்பதால், இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால், கிடைத்துள்ள ஆவணஙகள் ரம்்ஸ்பெல்டின் பணி ஈராக்கிய விஷவாயுப்
பயன்படுத்தல் அமெரிக்காவுடனான நல்ல உறுவுகளுக்குத் தடையாக இராது என்பதற்கு மீண்டும் உறுதிமொழிகள்
கொடுத்தல்தான் என்பதைத் தெளிவாக்குகின்றன. அவருக்கு ஷீல்ட்ஸ் கொடுத்த கட்டளைகளில் கீழ்க்கண்டவாறு
கூறப்பட்டுள்ளது: "செயலர் (ஷீல்ட்ஸ்), மற்றும் லாரி ஈகிள்பர்ஜர் இருவரும் ... நம்முடைய நலன்கள் (1)
ஈரானிய வெற்றி தடுக்கப்படுதல் வேண்டும், மற்றும் (2) ஈராக்குடனான இருபுறத்து உறவுகள், ஈராக் விரும்பும்
வகையில் முன்னேற்றுவிக்கப்படவேண்டும் என்பவை சற்றும் குறையாத அக்கறையில்தான் உள்ளன... இந்தச் செய்தி
மீண்டும் அவர்களுக்கு வற்புறுத்தப்படவேண்டும்." அமெரிக்கா, அதன் உதவியுடன், இன்னும் எண்ணெய் குழாயை
ஜோர்டான் வழியாக அமைப்பதில், ஆர்வம் காட்டுகிறது என்பது ஈராக்கிற்கு உத்தரவாதமாக தெரிவிக்கவேண்டும்
என்ற பணியும் ரம்ஸ்பெல்டிற்குக் கொடுக்கப்பட்டது.
1984 ஏப்ரல் 5ம் தேதி,
ரம்ஸ்பெல்ட் பாக்தாத்திற்குச் சென்று திரும்பிய பின்னர், ஜனாதிபதி றீகன், "அமெரிக்க நிலைப்பாட்டை
முன்னேற்றவும், ஈரான்-ஈராக் போரின் நடப்புக்களில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும்" என்ற தலைப்பில்
தேசியப் பாதுகாப்பு முடிவின் வழிகாட்டி ஆணை எண் 139ல் கையெழுத்திட்டார். இது குறைக்கப்பட்டுவிட்ட வடிவில்
வந்துள்ளது என்றாலும், றீகன் அமெரிக்க அரசாங்க நிறுவன அமைப்புக்களை பாரசீகவளைகுடாவில் இராணுவத்
தலையீட்டிற்கு தயார் செய்யுமாறு உத்திரவிட்டார் என்பது தெளிவாகிறது.
"அண்மையில் இப்பகுதியில் மத்தியகிழக்கு சிறப்புத் தூதர் (ரம்ஸ்பெல்ட்) பயணத்தை
மேற்கொண்டதை அடுத்து "கீழேயுள்ள நடவடிக்கைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது;
1) பெரிய முறையில் அமெரிக்க
இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக, பாதுகாப்பு தளங்கள், மற்றும் உதவிநிலை அமைப்புக்கள்
நிறுவுதலுக்கு, குறிப்பாக பாரசீகவளைகுடாவில் எண்ணெய் சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பிற்காக, அரசியல் தூது
ஒன்றை வளைகுடா நாடுகளுக்கு (செளதிய அரேபியா, ஓமன், பஹ்ரின்), அனுப்புதல்.
2) இப்பகுதியில்
CIA, பென்டகன்
வெளிநாட்டு அரசுத் துறையுடன் இணைந்து, அமெரிக்க இராணுவ தளவாட தளங்களை காப்பதற்கு, அமெரிக்க வேவு
வேலை மேற்கொள்ளப்படுதல்.
3) வளைகுடா நாடுகள் மற்றும்
முக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆகியவற்றுடன் இராணுவ, ஒற்று வேலைகளுக்காக இணைந்து செயல்படும் திட்டம்
தயாரித்தல்.
4) "ஈராக்கிய அரசு
உடைந்துபோகாது தடுக்க வடிவமைப்புடைய ஒரு திட்டத்தை", வெளிவிவகாரத்துறை, பென்டகன் மற்றும்
CIA உடன்
ஒத்துழைத்து தயாரித்தல். திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான உள்ளுரைகள் நீக்கப்பட்டுவிட்டன.
இறுதியாக, அமெரிக்கா ஈராக்கிய விஷ வாயு பயன்படுத்துதல் பற்றி தெளிவற்ற,
கூர்மையற்ற அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்றும் ஆவணம் குறிப்பாகத் தெரிவிக்கிறது. ஈரான்
அதுவரை விஷ வாயுவைப் பயன்படுத்தவில்லை என்ற உண்மை இருந்தாலும், இந்த இயக்க ஆணை: "இராசயன
மருந்துகள் போரிடும் நாடுகளால் பயன்படுத்தப்படுவதை பற்றி நாம் கண்டனம் கூறுவதுடன், சமீபத்திய
தாக்குதல்களின் ஈரானாலும் காட்டப்பட்ட இந்த இரக்கமற்ற, மனிதாபமானமற்ற தந்திரத்தை
மேற்கொள்ளப்படவேண்டாம் என்றும் சமமான அளவு அழுத்தத்தை காட்டப்படவேண்டும். என்று கூறுகிறது.
ஈரான்-ஈராக்கிய போரில் அமெரிக்க கொள்கை, 1987ல் வளைகுடா கப்பல்
போக்குவரத்து பாதுகாப்பிற்காக அது தலையிட்டது, 1988ல் அதிகாரபூர்வமில்லாமல் குறுகிய காலத்திற்கு
தீர்க்ககரமாக ஈராக்கியப் போரில் நுழைந்தது, இதன் ஈராக்கிய விஷவாயுப் பயன்படுத்துதல் பற்றிய பார்வை,
அனைத்தும் இந்த ஆவணத்தில் கோடிடப்பட்டுள்ள பரந்த நிலைப்பாட்டின் வழிதான் பின்பற்றப்பட்டுவந்தன என்பது
முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
றீகனுடைய அதிகாரபூர்வ முடிவு ஒருபுறம் இருந்தபோதிலும், அமெரிக்க அரசாங்கம்
ஈராக்கிற்கு தன்னுடைய ஆதரவைத் தொடர்ந்து மறுத்து வந்ததுடன், ஹுசைனுக்குத் தன் ஆதரவு இருந்தது என்பதின்
அரசியல் விளைவைக் குறைக்கும் வகையில், போரில் அது "நடுநிலை வகித்ததாகத்தான்" அறிவித்து வந்தது. 1984
நவம்பர் மாதம், டாரிக் அசீஸ் வாஷிங்டனுக்கு வருகைபுரிந்தபோது, அமெரிக்காவும், ஈராக்கும்
அதிகாரபூர்வமான இராஜதந்திர தொடர்புகளை மீண்டும் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசுத்
துறை அதிகாரிகள் தங்களுடைய வெளிநாட்டுத் தூதரகங்களில், "ஈரான்-ஈராக் போரைப் பொறுத்தவரை,
நம்முடைய அடிப்படை நிலையான நடுநிலை என்பது, இதனால் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்ற
முறையில் பேசுமாறு வற்புறுத்தப்பட்டனர்.
1984 மார்ச் 20 தயாரிக்கப்பட்டிருந்த வெளிவிவகாரத்துறையின் மிக இரகசியக் குறிப்பில்,
ஹுசைன் ஆட்சியோடு கொண்டுள்ள நட்பை ஏன் அமெரிக்கா பாதுகாக்கிறது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, ஈரானியப் படைகளின் முன் ஒரு முழுமையான ஈராக்கிய தோல்வி ஏற்ப்பட்டால், அப்பகுதியில் அமெரிக்க
நலன்களுடைய விளைவுகள் எவ்வாறு இருக்கும் எனக் கூறுகிறது.
"ஈராக் ஒருவேளை தோல்வியுற்றால்... இது ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை
சார்ந்த ஈரான் சார்புடைய ஆட்சியைப் பாக்தாத்தில் கொண்டுவரக்கூடும். இத்தகைய விளைவினால், இப்பகுதியின்
உறுதியற்ற தன்மையைப் பெருகி, கீழ்ப்புற வளைகுடாப்பகுதியில் நம்முடைய நலன்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடும்."
இந்த அறிக்கை உட்குறிப்பாக சதாம் ஹுசைன் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது அமெரிக்க நலன்களுக்கு மிகச்சிறந்ததாக
இருக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளது முக்கியமானதாகும். "மாற்றீடாக ஒரு சமரச உடன்பாட்டின்படி சதாம்
ஹுசைன் இறக்கப்பட்டு மற்றொரு மதசார்பற்ற அரசு ஈராக்குடன் அமைதியாக உடன்பாடு கொண்டு அது தன்னுடைய
சுதந்திரத்தை தெஹ்ரானிலிருந்து தக்கவைத்துக் கொள்ளுவது என்பது அந்த அளவு அச்சத்தை ஏற்படுத்தாவிடினும்,
அவ்வாறான ஒன்று ஈரானுடைய மதிப்பை உயர்த்தி, அதை இப்பகுதியின் மற்ற இடங்களில் தன்னுடைய செல்வாக்கைப்
பெருக்கிக் கொள்ள இடம் அளித்துவிடும்."
ஈரானிய செல்வாக்கு வளைகுடாப்பகுதியில் தலையெடுத்து எழுச்சி பெற்றால், அது
ஈரானிய சார்பு ஷியா எழுச்சிகளை, அமெரிக்க ஆதரவு உடைய அரேபிய தீபகற்ப முடியரசுகளில் (சவுதி
அரேபியா, குவைத், ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள், மற்றவை.,) ஏற்படுத்தும். அந்த நேரத்தில் ஈரான்
அமெரிக்காவிற்கு எதிராக கொண்டிருந்த விரோத உணர்வைக் கருத்தில் கொண்டால், இது அமெரிக்காவிற்கு
எண்ணெய் வழங்கலை பெரிதும் பாதிப்பிற்கு உட்படுத்திவிடும். இந்த அறிக்கை, பின்னர், ஈரான் ஒருவேளை
வெற்றியடைந்தால் பாதுகாக்கப்படவேண்டிய அமெரிக்க நலன்களை பட்டியல் இடுகிறது.
"வளைகுடா நாடுகளிலுள்ள நட்பு அரசாங்கங்கள் உறுதி நிலையில்
காப்பாற்றப்படவேண்டும்; அதை ஒட்டி அவர்களுடைய எண்ணெய் தடையற்ற முறையில் வளைகுடாவிற்குப்
பாதுகாப்பாகக் கொண்டுவரப்படவேண்டும்."
அமெரிக்காவிற்கு நட்பு நாடுகளாக இருக்கும் மிதவாத அரசாங்கங்களுடைய
இழப்பில், ஈரானிய விரோதப் போக்குடைய செல்வாக்கு மத்தியகிழக்கின் மற்றைய பகுதிகளில் பரவாமல்
தடுக்கவேண்டும்.
"வளைகுடா நட்பு நாடுகளிடையேயும் மற்றவர்களுக்கும், அவர்களுடைய பாதுகாப்பு
நலன்களைப் பேணி, ஈரானிய, மற்றைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவர்களுடன் ஒத்துழைக்க தயாராக
இருக்கிறோம் என்ற அமெரிக்க உத்தரவாதங்களின் நம்பிக்கைத்தன்மை பாதுகாக்கப்படல்."
ஹுசைன் ஆட்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இராணுவ நடவடிக்கைகளினால் இராது
என்றும், அதன் இகழ்வு ஈராக்கிய மக்களிடையே ஈரான்-ஈராக் போருக்கு விரோதப் போக்கினால் குறிப்பாக
அமையும் என்ற கருத்தை இந்த அறிக்கை கொண்டிருந்தது. "ஈராக்கின் உள் அரசியல் ஒன்றிணைவு, வலிமை, அதன்
எதிர்க்கும் சக்தி போன்றவற்றின் சரிவுகள் அல்லது இல்லாதொழிதல் போன்றவற்றால்தான் ஈரான் வெற்றி
காணமுடியுமே ஒழிய, ஈராக்கிய இராணுவ வலிமை, ஆயுதங்கள் குறைவினாலோ அல்லது ஈரானின் கூடுதலான வலிமை
என்பதால் வெற்றிகாணப்படமுடியாது. அப்படியானால், ஒரு ஈரானிய வெற்றித் தடுப்பை காண்பதில் ஈராக்கிற்கான
ஒரு வெளி இராணுவ ஆதரவு பயனற்றுப் போகும்.
ஒரு சர்வாதிகார ஆட்சியையும், ஆதரவில்லாத போரையும் ஈராக்கிய மக்கள்மீது
சுமத்தி, ஹுசைன் மக்கள் வளைகுடா கீழைப்பகுதிகளின் நிலப்பிரப்புத்துவ சமுதாயத்தின் மீது கொண்டுள்ள விரோதப்போக்கு
வெடித்து விடாமல் செய்வதால், அமெரிக்காவிற்கு வந்து கொண்டிருக்கும் எண்ணெய் வரவிற்கு உறுதி செய்வார்
என்பதுதான் அமெரிக்க அரசாங்கம் அவரை ஆதரித்ததின் காரணமாகும்.
இன்னொரு இறுதி ஆவணமும் மேற்கோளிடவேண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
பாதுகாப்பு உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கை, செப்டம்பர் 1984ல், ஹுசைன் பாத் கட்சியின்மீது தன்னுடைய
கட்டுப்பாட்டை வலுவாக்கிவிட்டார் என்று கூறுகிறது; "ஈராக் செல்வக் கொழிப்பும், அப்பகுதியில் சக்திவாய்ந்த
நாடாக பாத்திஸ்ட் கட்சியினால் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனுடைய இரக்கமற்ற, ஆனால் நடைமுறை நன்கறிந்த
தலைவராக ஜனாதிபதி சதாம் ஹுசைன் உள்ளார்." இந்த அறிக்கையின்படி, "ஹுசைன், ஷியாத்-தளமுடைய, ஈரானிய
ஆதரவுடைய டாவா கட்சி (Dawa Party)
ஆதரவாளர்களின் எதிர்ப்பிற்கு, அவர்களை தூக்கிலிடுதல், சிறையில்
அடைத்தல், சந்தேகத்திற்குரிய உறுப்பினர்களை நாடுகடத்தல் போன்றவற்றால் பதிலளித்தார்."
இவ்வறிக்கை ''போர் முடிவடைந்த பின்னர் கூட, ஈராக் தன்னுடைய இராணுவ இயந்திரத்தைக்
குறைத்துக் கொண்டு விடாது. "இது ஈராக்கை மிகப்பெரிய, அனுபவம் உடைய இராணுவ சக்தியாக நிலைநிறுத்தி,
தன்னுடைய மிகப்பெரிய மரபு முறை ஆயுதங்களையும், இரசாயனத் திறனையும் வளர்க்கவும், ஒருவேளை அணு ஆயுத
வளர்ச்சியை மேற்கொள்ளவும் செய்யும்." என குறிப்பட்டது.
பின்னர் ஹுசைனுடைய உள்நாட்டு அடக்குமுறை, ஈராக் அணுவாயுதத் தயாரிப்பு முயற்சிகளில்
ஈடுபடக்கூடும் என்பதைக் கூறி அமெரிக்க அரசாங்கம் அந்த நாட்டின்மீது படையெடுத்து, ஆக்கிரமித்துள்ளதைக்
காணும்போது, இந்த நிறுவனத்தின் அறிக்கை பென்டகனுடன் நெருக்கமான தொடர்பு உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளர்ச்சிகளைப் பெரும் அச்சுறுத்தல் என்று கருதாமல், அறிக்கை அவற்றை மிகச் சாதகமாகக் கொள்ளுகிறது;
ஹுசைன் அப்பகுதியில் அமெரிக்காவிற்கு பெரும் செல்வம் போன்ற திறன் உடையவர் என்று கருதுகிறது. "போருக்கு
ஒரு முடிவு காணமுடியாததால், ஈராக் இப்பொழுது அரேபிய மிதவாதிகளுடன் சேர்ந்து அரேபியத் தீவிரபோக்குடையவர்களை
எதிர்க்கிறது" என்றும் பாதுகாப்பு உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க, ஈராக்கிய நாடுகளுக்கிடையே மீண்டும் முழு அளவில் இராஜதந்திர உறவுகள்
மேற்கொள்ளப்பட வேண்டிய தன்மையை பற்றிக்கூறி இந்த அறிக்கை முடிகிறது; அந்த உறவு புதுப்பித்தல் 1984
நவம்பரில் இறுதியாக நடந்தது.
தொடரும்.......
See Also :
முதல்
பகுதி: ஈராக்கிய முடியாட்சியும், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியும்
இரண்டாம்
பகுதி: ஈராக்கியத் தேசிய இயக்கங்கள், நிரந்தரப் புரட்சி, மற்றும் பனிப்போர்
மூன்றாம் பகுதி: ஈராக்கின் பாத் கட்சியின் தோற்றுவாயிலிருந்து, அரசியல் அதிகாரம் பெற்ற வரை
நான்காம் பகுதி: 1970 களில்
ஈராக்கும், ஈரான்-ஈராக் போரின் ஆரம்பமும்
ஐந்தாம் பகுதி: டொனால்டு
ரம்ஸ்பெல்டும், வாஷிங்டன்-சதாம் ஹுசைன் தொடர்பும்
Top of page
|