World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

Haiti's US-installed prime minister hails fascist gunmen

ஹைட்டியில் அமெரிக்கா நியமித்த பிரதமர் பாசிச கிளர்ச்சிக்காரர்களை பாராட்டுகிறார்

By Keith Jones
25 March 2004

Back to screen version

மார்ச் 20-ல் Gonaïves பகுதியில் நடத்திய அரசாங்கப் பேரணியானது, புஷ் நிர்வாகம், ஹைட்டியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி அரிஸ்டைட்டின் "அரசியல் எதிர்ப்பினர் மற்றும் கரீபியன் தீவு நாட்டில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பாசிச துப்பாக்கி ஏந்தியவர்கள் ஆகியோர் இணைந்தே செயல்படுகிறார்கள் என்பதற்கு மேலும் சான்றை தந்திருக்கிறது.

ஹைட்டியின் பிரதமராக பதவி ஏற்றபின்னர் Gérard Latortue முதல் தடவையாக போர்ட் ஆப் பிரின்சுக்கு வெளியில் தோன்றி கிளர்ச்சிக்காரர்களை பாராட்டினார். FRAPH கொலைப்படை உட்பட முன்னாள் சர்வாதிகாரங்களில் பங்கெடுத்துக் கொண்ட முரடர்களை மற்றும் அவர்களால் வழிநடத்தப்படும் படையினரை "சுதந்திர போராளிகள்" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க மற்றும் பிரெஞ்சு இராணுவத்தினர், பாதுகாப்பு வளையமாக சுற்றிநின்ற ஹைட்டி அரசாங்க பிரநிதிதிகள் Latortue- தலைமையில், 200,000க்கு மேற்பட்ட மக்கள் வாழும் Gonaives பகுதியில் வெறுமனே கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் மூவாயிரம்பேர் கொண்ட கும்பல் ஹைட்டியில், தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவிநீக்கப்பட்டதைக் கொண்டாடினர்.

தங்களது அந்த பேரணி முழுவதிலும், Latortue-ம் அவரது குழுவினரும் கிளர்ச்சிக்காரர்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்றுத் தருவதையும் அவர்களோடு இணைந்து "புதிய ஹைட்டியை" உருவாக்கும் தங்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

ஹைட்டியின் நான்காவது பெரிய நகருக்கு Latortue-வந்தபோது கிளர்ச்சித் தலைவர்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அவர்களில் ஹைட்டியின் முன்னாள் இராணுவ மற்றும் போலீஸ் தலைவரான Guy philippe- யும் அடங்கியிருந்தார். அப்பொழுது மற்றொரு கிளர்ச்சித்தலைவர் பிரதமரிடம் மரத்தாலான ஒரு சாவியைக் கொடுத்தார். Gonaïves நகரத்தை பெப்ரவரி 5-ல் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்கா நியமித்துள்ள Latortue-ஆட்சிக்கு சம்பிரதாய முறையில் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சியாகும்.

ஆனால் Gonaives -ஐ போன்று ஹைட்டி முழுவதிலும் கிளர்ச்சிக்காரர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். Latortue-விற்கும் அவரது குழுவினருக்கும் Gonaives- ல் பாதுகாப்பு அளிப்பதற்கு சில ஹைட்டி போலீஸ் அதிகாரிகளுடன் சிறிதளவு கிளர்ச்சிப் படையினர் சேர்ந்த அதேவேளை, Philippe உட்பட கிளர்ச்சித் தலைவர்கள், அரசாங்க ஆதரவு பேரணி நடந்த மேடையில் பிரதம மந்திரிக்கு இருமருங்கிலும் படைசூழ அணிவகுத்து வந்தது உச்சக்கட்டக் காட்சியாக இருந்தது.

அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களை ஒடுக்கவேண்டும் என்று அந்தக்கும்பல் கூச்சலிட்டது மற்றும் அரிஸ்டைட் அரசாங்கத்தில் பிரதமர் பதவியிலிருந்த Yvan Neptune உட்பட அமைச்சர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரினார். புதிய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருக்கும் Bernard Gousse ''எல்லாக் குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் மேடையில் அமர்ந்திருந்தவர்களில் பலர் கொலைகாரர்கள், குற்றம் புரிகின்ற கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் மறந்துவிட்டார்.

Latortue-உரையாற்றும்போது அரிஸ்டைட்டுக்கு எதிராக ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் இறங்கியவர்கள் முரடர்களும், கொள்ளைக்காரர்களும் என்று வெளியில் இருந்தவர்கள் நம்பினார்கள், "அவர்கள் சுதந்திர போர் வீரர்கள்'' என்று தனக்கு தெரியுமென்றும் குறிப்பிட்டார்.

Latortue-மற்றும் புரட்சித் தலைவர்களோடு Gonaives பேரணியில் OAS-ன் சிறப்புப் பிரதிநிதியாக ஹைட்டியில் பணியாற்றும் டேவிட் லீ கலந்துகொண்டார். அரிஸ்டைட் விரோத எதிர்ப்பினர் முற்றுகையிட்டுள்ள ஜனநாயக எதிர்ப்பினர்ராக இருப்பதாகக் கூறிக் கொள்வதில் முக்கிய பாத்திரம் வகித்த கனேடிய ராஜீய அதிகாரி, லீ அவர்களுக்காக குரல் கொடுத்து கிளர்ச்சிக்காரர்களை பகிரங்கமாக ஆதரிக்க முன்வந்துள்ள Latortue-வை வாழ்த்தினார். ''நாங்கள் சமரசத்தை உற்சாகப்படுத்த முயன்று வருகிறோம். வன்முறைக்கு வெகுமதி கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இங்கே நாம் இன்றையதினம் பார்ப்பது என்னவென்றால் Gonaives குடிமக்கள் புதியதொரு வாழ்வை தொடங்கவிருக்கின்றனர், என்பதற்கான முயற்சிதான்'' என்று லீ குறிப்பிட்டார்.

Phillippe- நான்கு நாட்களுக்கு முன்னர் ஹைட்டியின் புதிய உள்துறை அமைச்சர்- கலைக்கப்பட்ட ஹைட்டி இராணுவத்தின் முன்னாள் தலைவர், ஜெனரல் ஹெரார்டு ஆம்ரஹாமை சந்தித்து பேசியவர், Reuters- க்கு பேட்டியளிக்கும் போது ''இன்றைய தினம் எங்களுக்கு மிகமுக்கியமான நாளாகும். இது அதிகாரபூர்வமாக, சண்டைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கிறது'' என்று குறிப்பிட்டார். ஆயினும், எப்போது கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்று சொல்ல அவர் மறுத்தார்.

இதற்கிடையில், Gonaives பகுதியில் செயல்பட்டுவரும் கிரிமினல் கும்பல் தலைவர் Butteur Metayer கிளர்ச்சிக்காரர்களோடு, தன்னை இணைத்துக் கொண்டார். அவர் அசோஸியேடட் பிரஸ்ஸுக்கு பேட்டியளிக்கும் போது, ''எங்களது திட்டம் அரசாங்கத்தோடு பணியாற்றுவதுதான். ஆனால் எங்களோடு அரசாங்கம் பணியாற்ற முடியாவிட்டாலும், அவர்களை நாங்கள் தூக்கி எறிந்துவிடுவோம்'' என்று கூறினார்.

Latortue- கிளர்ச்சிக்காரர்களை அரவணைத்துக் கொண்டிருப்பது ஹைட்டி மற்றும் சர்வதேச மனித உரிமை குழுக்களது கண்டன விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கிறது. ஆனால் ஹைட்டி அரசாங்க மற்றும் 184- குழுவிற்கான பேச்சாளர், அரிஸ்டைட்டுக்கு எதிரான கூட்டணிகள் ஆதிக்கம் செலுத்தும் ஹைட்டியின் பாரம்பரிய, சர்வாதிகார, வர்த்தக மற்றும் அரசியல் செல்வந்தத் தட்டுக்களின் பிரதிநிதிகள் Latortue-வை ஆதரித்தனர். ''கிளர்ச்சிக்காரர்கள் Gonaives- ல் வீரர்கள் தான் ஹைட்டி முழுவதிலும் நீங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் அவர்கள் வீரர்கள்தான்'' என்று பணக்கார தொழில் அதிபரும் 184- குழுவின் தலைவருமான Charles Baker அறிவித்தார்.

அரிஸ்டைட் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் சிலநாட்கள் வரை புஷ் நிர்வாகம் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்காட்ட முயன்றது. ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கிரிமினல்கள் மற்றும் குண்டர் கும்பல்களுக்கு விட்டுக்கொடுத்ததாக ஆகிவிடும் என்று ஒதுங்கியிருந்தது. ஆனால் Latortue- கிளர்ச்சிக்காரர்களை புகழ்ந்து பேசியதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. Phillippe அமெரிக்கா நியமித்துள்ள ஹைட்டி அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டு, அமெரிக்கா தலைமையிலான ஹைட்டி இராணுவ ஆக்கிரமிப்பு தலையிடாதவரை வாஷிங்டனுக்கு ஹைட்டி அராசங்கத்தின் நண்பர்களாக ஆயுதந்தாங்கிய குழுக்கள் செயல்படுவதில் ஆட்சேபனையில்லை என்பதை இவ்வாறு சமிக்கை காட்டியது.

டுவாலியர்கள் Avril மற்றும் Cedras இராணுவக்குழுக்களின் ஆட்சியின் போது, ஹைட்டியின் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதை அமெரிக்கா சகித்துக்கொண்டது. தனது நலன்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்ற ஆட்சியை அந்தப்பகுதிகளிலேயே மிகுந்த வறுமையில் வாடுகின்ற நாடாக அவர்கள் மாற்றிக்கொண்டு வரும் சமூகப் பொருளாதார ஒழுங்கை வாஷிங்டன் சகித்துக் கொண்டிருந்தது, தனது நலன்களைக் காக்கின்ற அரசாங்கம் இருந்தால் போதும் என்று மட்டுமே கருதியது.

கிளர்ச்சிக்காரர்களின் பயங்கரநடவடிக்கைகள்

பெப்ரவரி 29-ல் அரிஸ்டைட் அரசாங்கம் கழவிந்தபின்னர் தற்போது ஏறத்தாழ நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. 3,200-க்கு மேற்பட்ட அமெரிக்கா, பிரெஞ்சு, கனடா மற்றும் சிலி துருப்புக்கள் ஹைட்டியில் இப்போது நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அப்படியிருந்தும் ஹைட்டியின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய நகரங்களான முறையே Cap-Haitien, Les Cayes மற்றும் Gonaives ஒரு சில "சர்வதேச அமைதிகாப்பு துருப்புக்கள்தான்" உள்ளன. எனவே அரிஸ்டைட்டின் ஆதரவாளர்ள் மீது கிளர்ச்சிக்காரர்கள் மிக கொடூரமான தாக்குதல்களை நடத்துவதற்கு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றனர்.

உட்பகுதிகளில் உண்மையான நிலவரம் பற்றிய தகவல்கள் மிக சொற்பமாக கிடைத்தாலும் அவை அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கின்றன. Cap-Haitien லுள்ள அசசியேடட் நிருபர் Paisley Dodds தந்துள்ள தகவலின்படி, FRAPH- வின் முன்னாள் இரண்டாவது தளபதியான Louis-Jodel Chamblain தற்காலிக "நீதிமன்றத்திற்கு" தலைமை வகித்து திருட்டு முதல் அரிஸ்டைட்டின் ஆதரவாளர்கள் என்ற அனைத்து குற்றத்தையும் விசாரணை நடத்துக் கொண்டிருக்கிறார். அவரே 1993-ல் அரிஸ்டைட் முன்னணி ஆதரவாளரை கொலை செய்ததற்காகவும், 1994-ல் ஏழ்மை குடியிருப்புப் பகுதியில் கொலைகளை செய்ததற்காகவும் தலைமறைவாக இருந்தபோது தண்டிக்கப்பட்டவர்.

உள்ளூர் மீனவர்களும் Cap-Haitien பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள பிரான்சு இராணுவ பிரதிநிதியும் தந்துள்ள தகவல்களின்படி, ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரமான bestrides குடா பகுதியில் இறந்த உடல்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. "சென்ற மாதம் சவக்கிடங்கிற்கு டஜன் கணக்கில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த உடல்கள் கொண்டுவரப்பட்டதாக" அதிகாரிகள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு Dodd தகவல் தந்திருக்கிறார்.

Les-Cayes பகுதியில் கிளர்ச்சிக்காரர்கள் பகிரங்கமாக கொலை செய்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற முறையில் வழக்கு நடப்பதாக ஒரு பாசாங்கு கூட இன்றி, திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொது சதுக்கத்தில் அணிவகுக்க விட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றன்ர் என்று செய்தி அனுப்பியநதாக, ஐ.நா- பிரதிநிதி Elisabeth Byrs கூறுகிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved