WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Opening report to WSWS-Socialist Equality Party conference
The political strategy of the SEP in the 2004 US
elections
உலக சோசலிச வலைத் தளம் - சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் ஆரம்ப அறிக்கை
2004 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் மூலோபாயம்
By David North
17 March 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
மிச்சிகன், அன் ஆர்பரில், மார்ச் 13-14ம் தேதிகளில், உலக சோசலிச
வலைத் தளம்
மற்றும் சோசலிச
சமத்துவக் கட்சி
இணைந்து நடாத்திய "2004 அமெரிக்க தேர்தல் சோசலிச மாற்றீட்க்கு
ஒரு வாதம்" என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டின் ஆரம்ப அறிக்கையை கீழே பிரசுரிக்கிறோம். இந்த அறிக்கை,
உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய
செயலாளருமான டேவிட் நோர்த்தினால் வழங்கப்பட்டது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்ச்சியை பற்றிய எமது விரிவான செய்தித்
தொகுப்பின் ஒரு பகுதியே இந்த வெளியீடு ஆகும். மாநாட்டை பற்றிய ஒரு சுருக்க அறிக்கை மார்ச் 15 அன்று (ஆங்கிலத்தில்)
வெளியிடப்பட்டது. வரவிருக்கும் நாட்களில், பில் வான் ஓகென், ஜிம் லோரன்ஸ் என, முறையே,
SEP உடைய, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களுடைய
உரைகளை வெளியிடுவது உட்பட பல செய்திகளை அளிக்க இருக்கிறோம்.
2004ம் ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் திட்டங்களையும்
முன்னோக்குகளையும் விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப மாநாட்டில், அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்து
அதை ஆக்கிரமித்துள்ள நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு நிறைவு இன்னும் ஒரு வாரத்தில் வரவுள்ளது என்பதைக் கருத்திற்கொள்ளுவது
மிகப் பொருத்தம் ஆகும். இந்த ஓர் ஆண்டில், இப்போரின் குற்றஞ்சார்ந்த தன்மை நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
படையெடுத்தலுக்குப் பின்னர், சதாம் ஹுசைன் பதுக்கிவைத்திருந்ததாகக் கூறப்பட்டிருந்த மிகப் பெரிய அளவிலான
விஷ ஆயுதக்கிடங்கை வெளியே கொண்டு வரும் தேடுதல் முயற்சியானது எதையும் புலப்படுத்தவில்லை.
ஈராக்கின் "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிய அமெரிக்காவால் செய்யப்பட்ட முழுப் பிரச்சாரமும்
அரசாங்கமே நடத்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட பெரும் முயற்சிதான். ஈராக்கின் மீது படையெடுப்பதற்காக
புஷ் நிர்வாகம் எடுத்துரைத்த வாதங்கள் அனைத்துமே பொய் என்று அம்பலப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால்
உண்மைக்கும்- ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பரபரப்பான கூற்றுக்களுக்கும், இடையில் உள்ள முரண்பாடுகள்
அனைத்தையும் அரசாங்கம் வெறும் "உளவுத்தகவல் தோல்வி" என்று சித்தரித்து வலியுறுத்தி வருகின்றது. போரினால்
எழுப்பப்பட்டுள்ள அனைத்துத் தீவிர அரசியல் பிரச்சனைகளையும் தவிர்க்க, இத்தகைய மயக்கந்தரும் இடக்கரடக்கல்
வசதியாகப் போய்விட்டது.
உண்மையிலேயே கடந்த ஆண்டு என்ன நடந்தது? அமெரிக்க ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும்,
திட்டமிட்ட ரீதியில் மற்றும் வெட்கமற்ற வகையில் அமெரிக்க மக்களிடமும், உலகமக்கள் அனைவரிடமும் பொய் கூறினர்.
இப்பொய்கள் காங்கிரசுக்குள்ளே சவால் விடப்படாமல் சென்றது, அது ஜோன் எட்வாட்ஸ் மற்றும் ஜோன் கெர்ரி
ஆதரவுடன் முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது, அனைத்து நடைமுறைகளிலும், போர்நடத்த தடையில்லாமல் வழியை
தெளிவாக்கியது.
போருக்கு பெரும் ஆதரவு கொடுத்த செய்தி ஊடகம், புஷ் நிர்வாகத்தின்
கூற்றுக்களை தேர்ந்த திறனாய்விற்கு உட்படுத்தும் முயற்சி எதையும் எடுக்கவில்லை. மாறாக, அரசாங்கத்தின்
பொய்களையும் தவறான தகவல்களையும் மக்களிடத்தே வெளியிடும் ஒலிபெருக்கி போல் அது செயலாற்றியது.
போர்ச் செய்திகளைத் திரட்டும் நிருபர்களுக்கு புதிதாக கொடுக்கப்பட்ட "அனுபவம் கொண்டுள்ள"
பத்திரிகையாளர்கள் என்ற அடைமொழி, தன்னையும் அறியாமல் கிட்டத்தட்ட அமெரிக்காவில் இருக்கும் அனைத்து
ஒலி/ஒளி நிலையங்கள் மற்றும், அச்சுச் செய்தி ஊடகத்தினது ஒட்டுமொத்தமான விலைமாதர் தன்மையை நன்கு
எடுத்துக் கூறுவதாகப் போயிற்று.
இல்லை, இந்தப் போர் "உளவுத்தகவல் தோல்வியினால்" நிகழ்ந்தது அல்ல;
அறிவார்ந்தமுறையில் பெரும் குறைபாடு கொண்டுள்ள ஜனாதிபதியின் தோல்வியின் விளைவினாலும் ஏற்பட்டதல்ல,
மாறாக, அரசியல் அர்த்தத்தில், இது ஒரு அமெரிக்க ஜனநாயக நிறுவன அமைப்புக்கள் நிலைமுறியும் கட்டத்திற்கு
சென்ற வரலாற்றுத் தோல்வியின் உற்பத்தியாகும்.
புஷ் நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்ப, அது நடத்தியே தீரவேண்டும் என்று
முடிவெடுத்திருந்த, போரை நியாயப்படுத்துவதற்காக உளவுத்துறைத் தகவல் திரித்து, திருத்தி மாற்றப்பட்டது என்ற
உண்மைக்குப் பதிலாக, அரசாங்கம் தவறான உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் தவறாக சென்றுவிட்டது என்ற
அரசாங்கத்தின் கூற்று, ஈராக் போர் தொடங்குவதற்கு முன்பே நிலைமைகளுக்குப் புறம்பானது என்பது
அப்பொழுதே பரந்த முறையில் அறியப்பட்டிருந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் தகவல் திரட்டு வலைப்பின்னல்,
பெருநிறுவனச் செய்தி ஊடகத்தைப் போல் பரந்து, படர்ந்தில்லாமல் சிறிய அளவினதாயினும், அதற்குக் கிடைத்த
உண்மைகள், மார்ச் 21, 2003 அன்று கீழே கொடுத்துள்ள முடிவைக் கொள்ள போதுமானதாக இருந்தது.
"புஷ் நிர்வாகமும் அதன் இலண்டன் கூட்டாளிகளும் நியாயப்படுத்துவதற்காக கூறிய
அனைத்தும் அரைகுறை உண்மைகள், தவறாகத் திரித்துக் கூறப்படுபவை, அப்பட்டமான பொய்கள் இவற்றின்
அடிப்படையில்தான் உள்ளன. இந்தப் புள்ளியில், ஈராக்கிடம் இருப்பதாகக் கூறப்படும் "பேரழிவு ஆயுதங்களை"
அழிப்பதுதான் இப்போரின் நோக்கம் என்ற கூற்றிற்கு மீண்டும் விடையளிப்பது அவசியம் இல்லை. பலவாரகாலம்
எந்தநாட்டிலும் கொள்ளப்படாத அளவிற்கு ஆழ்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரும்கூட, எவ்விதமான முக்கியத்துவம்
வாய்ந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஐ.நா. ஆய்வுக் குழுவின் தலைவர்களான ஹான்ஸ் பிளிக்ஸ், மொகம்மது எல்
பரேடி இவர்களுடைய சமீபத்திய அறிக்கைகள், குறிப்பாக அமெரிக்க அரசுத்துறை செயலர், கொலின் பவெல்,
பெப்ரவரி 5, 2003 அன்று ஐ.நா மன்றத்தில், ஆற்றிய இகழ்வுக்குரிய உரையில் காணப்படும் கருத்துக்களை
முற்றிலும் மறுக்கின்றன. நைஜரிலிருந்து யூரேனியம் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஈராக்கிய முயற்சிகள்
என்று அமெரிக்கா போலியாகக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தது, பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி
பிளேயருடைய உளவுத்துறை கொடுத்திருந்த போலி ஆவணங்களின் அடிப்படையில் எழுந்தவை என்று எல்பரேடி
அம்பலப்படுத்தியுள்ளார். மற்ற முக்கியமான குற்றச் சாட்டுக்களான, அணுவாயுத தயாரிப்பிற்காக அலுமினியக்
குழாய்கள் பயன்படுத்தப்பட்டது, இயங்கும் சோதனைக் கூடங்கள் உயிரியல்-இரசாயன ஆயுதங்களை உற்பத்தி
செய்கின்றன என்பவையும் ஆதாரமற்றவை என தெரிய வந்துள்ளன. ஒரு பொய் அம்பலப்படுத்தப்பட்ட உடனே, புஷ்
நிர்வாகம் வேறு ஒரு பொய்யை தயாரிக்கிறது. பொதுமக்கள் கருத்துப் பற்றி இவர்கள் கொண்டிருக்கும்
அவமதிப்பானது மிகப்பெரியதாக இருப்பது தங்களுடைய வாதங்களில் தொடர்ச்சித் தன்மையைக் கூட கைவிட்டுள்ள
நிலையைக் காட்டுகிறது."
அமெரிக்காவிற்குள்ளும், மற்றும் உலகெங்கிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்
புலப்படுத்திய, மகத்தான மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், மார்ச் 19, 2003 ல் ஈராக்கின்மீது விமானக்
குண்டு தாக்குதல் வழியாக போரை தொடங்கியது. மேலே நான் ஏற்கனவே மேற்கோள் காட்டிய கூற்றில்
விளக்கியவாறு:
"ஒரு சிறிய அரசியல் சதிக்குழுவினர், அதிகாரத்திற்கு மோசடியின்மூலம் வந்தவர்கள்,
ஒரு இரகசிய திட்டத்தைக் கொண்டுள்ளவர்கள், அமெரிக்க மக்களை அவர்களுக்குத் தேவையில்லாததும்,
புரியாததுமான ஒரு போருக்கு இழுத்துச் சென்றார்கள். ஆனால், போருக்கு எதிராக, ஜனநாயக உரிமைகள்
மீதான தாக்குதலுக்கு எதிராக, சமூக நலப்பணிகள் அழிவிற்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்தின்
வாழ்க்கைத்தரத்தின் மீது இடையறாது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள்
வெளிப்படுவதை தடுப்பதற்கு எந்த அரசியல் வகையும் இருக்கவில்லை. முதலாளித்துவ முறையின் தாராளவாதக்
கொள்கையின் துர்நாற்றம் வீசும் பிணமான, ஜனநாயகக் கட்சி, ஆழ்ந்தமுறையில் இழிவுற்றுள்ளது. பரந்த உழைக்கும்
மக்கள் முற்றிலும் வாக்குரிமை இழந்த நிலையில் உள்ளனர்."
எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்தாலும், அமெரிக்க
இராணுவத்தின் தொழில்நுட்ப ரீதியான உயர்ந்த தன்மை வெகு விரைவில் பாத்திஸ்ட் ஆட்சியை அழித்து, ஈராக்கை
ஆக்கிரமிக்க முடிந்தது. தன்னுடைய பிரச்சாரத்தாலேயே போதையடைந்திருந்த புஷ் நிர்வாகமும், செய்தி
ஊடகமும், அமெரிக்கப் படைகள் பாக்தாதிற்குள் நுழைந்த பின்னர் நிலவிய பெருங்குழப்பத்திற்கும், பின்னர்
ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பவர்கள் மீது நடத்தப்பட்டுவரும் கொரில்லாப்
போர்முறைக்கும் முற்றிலும் தயாரிப்பு செய்யாத நிலையில் இருக்கின்றது.
ஹோவார்ட் டீனுடைய பிரச்சாரம்
செய்தி ஊடகமும், அமெரிக்காவிற்குள்ளேயே தொடர்ந்து, ஆழ்ந்திருந்த புஷ்
நிர்வாகத்திற்கு எதிரான விரோதப் போக்கை கண்டு அதிக அளவில் ஆச்சரியப்படாமல் போகவில்லை. ஆனால்,
தானே பொதுமக்கள் பற்றி வைத்திருக்கும் வர்க்க தப்பெண்ணங்களாலும் பிரமைகளாலும், ஈராக்கின்மீது வெற்றி
கொண்டால் அது எதிர்ப்பை கிட்டத்தட்ட அமைதிப்படுத்திவிடும் என்றும் புஷ்ஷின் மறுதேர்தலுக்கு உத்தரவாதம்
அளித்துவிடும் என்றும் அது கருதிக்கொண்டது. எனவே, பெரும்பாலான ஜனநாயகக் கட்சி தலைமையுடன்
சேர்ந்துகொண்டு அதுவும், ஹோவார்ட் டீனுடைய 2003 கோடைகால, இலையுதிர்கால ஜனாதிபதிக்கான
வேட்பாளர் தேர்வு பிரச்சாரத்தில் மக்கள் காட்டிய ஆர்வத்தை எதிர்பார்ப்பதற்குத் தவறிவிட்டது.
ஓர் எழுச்சி இயக்கத்திற்கு தலைமை ஏற்கும் தன்மையை வெர்மான்ட் கவர்னர்
பெற்றிருக்கவில்லை. டீன் இந்த இயக்கத்தை தோற்றுவிக்கவில்லை; பல மரபுவழி முதலாளித்துவ அரசியல்வாதிகள்
போலவே, தன்னை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டும் ஏதேனும் பிரச்சினைக்காகத்தான்
அவரும் இருட்டில் துழாவிக் கொண்டிருந்த பொழுது, இது அவருக்கு தட்டுப்பட்டது. புஷ் நிர்வாகத்தின்மீதான
தாக்குதல்கள், ஈராக்கியப்போர், ஜனநாயகக் கட்சியின் இழிவான கோழைத்தனம் ஆகியவை பற்றி எதிர்த்துப்
பேசினால், மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்று அவருக்கு உணர்வு ஏற்பட்டது; இதற்காக அவருக்கு
உரிய பாராட்டை கொடுக்கத்தான் வேண்டும். ஜனநாயகக் கட்சியால் பெரிதும் அலட்சியப்படுத்தப்பட்ட, போர்
எதிர்ப்பு உணர்வு, புஷ்மீதான வெறுப்பு, பரந்த அளவில் இருந்தாலும் இதுவரை யாரும் பயன்படுத்திக் கொள்ளாத
நிலையில், இவற்றை அவர் வெளிப்படுத்தியதால், டீன் பெரும் கவனத்தை ஈர்த்தார். டீன் பிரச்சாரத்திற்கு
அவருடைய பெட்டியில் மாபெரும் அளவில் பணம் குவிந்தது; கருத்துக் கணிப்புக்கள், கவர்னர், அயோவாவிலும், நியூ
ஹாம்ப்ஷயரிலும் மகத்தான ஆதரவைக் கொண்டு முன்னணியில் இருந்தார் என்பதைப் புலப்படுத்தின; 2003 இறுதிக்குள்
செய்தி ஊடகம் டீன் உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக வருவதற்கு வெற்றிபெறுவார் என்று
தீவிரமாகக் கருதத் தொடங்கின.
ஆளும் செல்வந்தத் தட்டின் மிகக் கூர்ந்த அரசியல் பிரிவுகளுக்கு இந்த எதிர்பாரா
நிகழ்ச்சி திருப்பங்கள் ஒரு உந்துதல் அழைப்பாக வந்தது. தாங்கள் முன்பு கருதியதைவிட புஷ் நிர்வாகத்திற்கு
மக்களுடைய எதிர்ப்பு மிக ஆழ்ந்து இருக்கிறது என்பது அவர்களுக்குத் திடீரெனத் தெளிவாயிற்று. புஷ் ஒருவேளை மறு
தேர்தலில் தோல்வி அடையக்கூடும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத கருத்து ஒன்றும் அல்ல என்பது
அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும், ஆளும் செல்வந்தத் தட்டிற்குள்ளேயே ஏற்கனவே பெருகத் தொடங்கிய
மக்களுடைய அதிருப்தியைத் தவிர, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள், திசைவழி, விளைவுகள், ஏன் திறமையைப்
பற்றிய சந்தேகங்களும், சிலசமயம் கவலைகளும் கூட, ஏற்பட்டுவிட்டது. ஈராக் போர் பிரச்சினை பற்றிய
விஷயங்கள் மட்டுமின்றி, இன்னும் கூடுதலான தீவிரத்தில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் கடன்
மலிந்துவிட்ட ஆபத்தான நிலைமையின் தன்மை பற்றியும், தங்கள் சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டிருக்காத
ஆளும் வர்க்கத்தின் கூறுகள் இடையே எச்சரிக்கை மணியை அடித்துவிட்டன. புத்தாண்டின் தொடக்கத்தில், புஷ் 2004
ஆண்டுத் தேர்தலில் ஒருவேளை தோற்றுவிடக்கூடும் என்ற உணர்வு, ஆளும் செல்வந்தத் தட்டின் முக்கியத்துவம் வாய்ந்த
தட்டுக்களிடையே, அவர் தோற்றுவிடவேண்டும் என்ற உணர்வோடு இணைய ஆரம்பிக்கத்
தலைப்பட்டது. பழைய கருவூல அமைச்சர் போல் ஓ நீல் உடைய நினைவுக்குறிப்புக்கள் ஜனாதிபதியை திறமையற்ற
கொடுமைப்படுத்துபவராக காட்டிய எழுத்துக்களும், முலாளித்துவ அரசியல் நிறுவனத்திற்குள்ளே மாறுகின்ற
மனப்பாங்கின் ஒரு வெளிப்பாடாக இருந்தது.
இந்த அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாறுதல் ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப நிலை
பிரச்சார செய்தி சேகரிப்பைப் பாதித்தது. (1) புஷ் நிர்வாகத்திற்கு, ஆளும் உயர்சிறுகுழுவினருக்குள்ளே காட்டிய
எதிர்ப்பு அரசியலளவில் புறக்கணிக்கத்தக்கதாக இருந்தவரையிலும், (2) புஷ்ஷின் மறுதேர்தல் எளிதாக
அமைந்துவிடும் என்ற கருத்து இருந்தவரையிலும், ஜனநாயக வேட்பாளர்கள் மத்தியில் நிலவியிருந்த போட்டிகளை
செய்தி ஊடகம் ஒரு கவலைப்படாத வேடிக்கை தன்மையுடன் வெளியிட்டு வந்தது. ஆனால், டீன் வேட்புமனுவைப்
பெற்றுவிடக்கூடும் என்ற நிலையும், அதனால் பெரும் தோல்வியை அவர் சந்திக்கக் கூடும் என்ற விளைவு இருந்த
வரையில், அது முற்றிலும் வரவேற்கப்படாததாக இருந்திருக்காது. புஷ்ஷிற்கு மாபெரும் வெற்றி கிடைத்தால் 2000
தேர்தல்களில் வெளிப்பட்ட துர்நாற்றம் கூட கழுவிவிடப்பட அது உதவும் என்றும், அரசாங்கம் ஈராக்கியப்
போருக்கு மக்களுடைய இசைவைப் பெற்று விட்டது என்றும் கொள்ளப்படும்.
ஆயினும், ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப தேர்தல்களைப் பொறுத்தவரையில்,
மாறிவிட்டிருந்த புது சூழ்நிலைகளுக்கு, வேறுவிதமான மற்றும் அதிக தலையீட்டு அணுகுமுறைதான் தேவைப்பட்டது.
தன்னுடைய உட்பூசல்களைத் தீர்த்துக் கொள்ளவும், பெருநிறுவன ஒருசிலவர் ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைத்
திசைதிருப்பிவிடவும், சவால் செய்யமுடியாத, தன்னுடைய அரசியல் அதிகாரத்தின் ஏகபோக உரிமையைக்
காத்துக்கொள்ளவும், வரலாற்றளவில் நன்கு சோதிக்கப்பட்டு வெற்றியும் அடைந்திருந்த, முதலாளித்துவ
இரு கட்சிமுறையின் முக்கியத்துவம், மீண்டும் விளக்கிக் காட்டப்பட இருந்தது.
ஜனநாயகக் கட்சியின் தொடக்க தேர்தல்கள் இப்பொழுதுள்ள ஜனாதிபதியை
அகற்றவிடக்கூடிய பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற முடிவிற்கு ஆளும் செல்வந்தத் தட்டு வந்தவுடனேயே, விஷயம்
தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. மக்கள் எதிர்ப்பு மற்றும் ஆளும் செல்வந்தத் தட்டிற்குள்ளே உள்ள அரசியல்
அதிருப்தி இவை இணைவதால் புஷ் மாற்றப்படவேண்டும் என்றால், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்புமனு
பெறக்கூடியவர் தேர்வு மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டும்.
இந்தப் புதிய கண்ணோட்டம் டீனுடைய ஜனாதிபதி அபிலாசைகளைப் பற்றி விரைவான
முடிவை எடுக்கச் செய்தது. இருக்கும் முறைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத மிகுந்த பழைமைப் பற்றாளர் அவர்
என்றாலும், டீனுடைய வேட்பாளர்தன்மை, தேர்தலை உலகம் முழுவதும் ஈராக் போர் பற்றிய வாக்கெடுப்பு என்று
பார்க்கக்கூடிய சாத்தியத்தை திறக்கிறது என்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு
தொலைநோக்கிலான மற்றும் ஆபத்தான உட்குறிப்புக்களையும் கொடுக்கலாம் என்று ஆகிவிட்ட நிலைமையைக்
கொண்டு வந்தது. எனவே பழமொழி ஒன்று கூறுவது போல், செய்தி ஊடகம், கவர்னர் டீனுடைய கடிகாரம்
சுற்றுவது அல்லது கால உயர்வு முடிக்கப்படவேண்டும் என்று முடிவு எடுத்தது. ஆனால் புத்தாண்டின் தொடக்கத்தில்
தொடுக்கப்பட்ட இந்த செய்தி ஊடக தாக்குதலுக்கு, மரபுவழியாளரான, சற்றே முன்கோபியான,
வெர்மான்டிலிருந்து வந்திருந்த முதலாளித்துவவாதி முற்றிலும் அறிவார்ந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தயாரிப்பின்றி
இருந்தார்.
போருக்குச் சென்ற புஷ்ஷின் முடிவை விமர்சித்திருந்தாலும், அமெரிக்க படைகளை
ஈராக்கிலிருந்து அண்மையில் திருப்பி அழைத்துக்கொள்ளும் எண்ணம் கிடையாது என்று செய்தி ஊடகத்திற்கு, உறுதிகள்
அளித்து மேற்கொள்ளப்பட்ட டீனின் முயற்சிகளுக்கு பலன் கிட்டவில்லை. டீனுடைய விருப்பங்கள் பிரச்சினையல்ல,
இவருடைய வேட்பாளர் தகுதிகூட அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும், ஈராக்கிய ஆக்கிரமிப்பை அமெரிக்கா
மேற்கொண்டுள்ளதற்கு வந்த எதிர்ப்பை நியாயப்படுத்தி ஊக்குவித்தது போல் ஆகிவிடும் என்பதுதான் பிரச்சினை
ஆயிற்று.
இந்த உள்ளடக்கத்தில், போருக்குப் பிந்தைய ஈராக்கின் நிலைபற்றி, வெளிவிவகாரக்
குழுவால் ஆதரிக்கப்பட்ட, இருகட்சிகளுடைய சுதந்திர செயல்பாட்டுப் பிரிவால் தயாரிக்கப்பட்ட ஆவணம்
ஒன்றிலிருந்து மேற்கோள் காட்ட எனக்கு அனுமதி கொடுங்கள்: ஈராக்: ஓராண்டிற்குப் பின், என்ற
தலைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஆவணம், ஈராக்கில் நீண்ட காலம் அமெரிக்கத் துருப்புக்கள் நிறுத்தி
வைப்பதற்கான ஆதரவு, அமெரிக்காவில் வலுவிழந்ததாக இருக்கிறது என்றும், அது உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற
அக்கறையையும் தெரிவித்துள்ளது.
"செயற்பாட்டுக்குழு, இந்தப் பொதுக்கருத்து மக்களிடையே நீடிப்பது
இன்றியமையாதது, அதிலும் குறிப்பாக அமெரிக்கர்களின் அரசியல் விருப்பம், வரக்கூடிய மாதங்களிலும் ஆண்டுகளிலும்
ஈராக்கில் தொடர்ந்து சோதனைக்கு உட்படும் என்று நம்புகிறது. இச்சோதனைகள், அமெரிக்க துருப்புக்கள்
மீதான தாக்குதல்கள் உயர்ந்த அளவு நடப்பதை உள்ளடக்கி இருக்கக் கூடும், அதுவும் அமெரிக்காவில் கூடுதலான
அரசியல் விவாதங்கள் 2004 தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி இறுதிக் கட்டத்தை நெருங்க இருக்கும்பொழுது,
வரக்கூடும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ஈராக் தவிர்க்கவியலாத வகையில்
விவாதத்திற்குரிய ஒரு விஷயம் ஆகும். இந்த விவாதம் உறுதியாக, கிட்டத்தட்ட போருக்குச் சென்றதற்கான மூல
காரணம் பற்றியும், ஈராக்கில் போருக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள அரசியல் மாறுதல்கள், மறுசீரமைப்பு பற்றியும்
முழுமையாகப் படரும். ஆயினும் கூட, பரந்த மாறுபட்ட அரசியல் முன்னோக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும்,
செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், அமெரிக்கா, மக்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிக்கும் தலைமை கொண்ட
வலுவான, ஈராக்கின்பால் முக்கிய அக்கறை கொள்ளவேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறார்கள்.
அமைதியான அரசியல் போட்டிக்கு மாற்றாக, ஈராக்கில் உட்பூசல் ஏற்பட்டு விட்டால், அது ஈராக்கின் அண்டை
நாடுகள் குறுக்கிடும் அபாயம், எண்ணெய் உற்பத்தி, பங்கீட்டு முறையில் நீண்ட-கால உறுதியற்ற தன்மை நேரும்
அபாயம், பயங்கரவாதிகளுக்கு பெரும் புகலிடமாக அமையும், தோல்வியுற்ற நாடு என்பதின் எழுச்சியாக ஈராக்
மாறிவிடும் என்ற அபாயம் இவற்றையெல்லாம் கொண்டுள்ளது. மேலும் அமெரிக்கக் கொள்கைக்கு மகத்தான
தோல்வி என்ற கருத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும், அதை ஒட்டி அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை
அப்பகுதியில் இழக்கவும் நேரிடும்."[1]
இதையே வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க மக்கள் அமெரிக்கா
ஆக்கிரமித்துள்ளதை சட்டபூர்வமாக கேள்வி கேட்கும் மற்றும் ஏற்றுக்கொண்டதை கீழறுத்துவிடும் அரசியல் விவாத
அரங்கங்களுக்கு உட்படுத்திவிடக்கூடிய கருவியாகத் தேர்தல் அமைந்துவிடக்கூடாது. இந்தக் கண்ணோட்டத்தில்,
முதலாளித்துவ இருகட்சி முறையின் தலைவர்கள் மத்தியில் இரு கட்சியினரின் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ள கருத்தில்,
டீனுடைய வேட்பாளர் தகுதி மனு ஏற்பதற்கில்லை.
செய்தி ஊடகம், மற்றும் அவருடைய ஜனநாயகக் கட்சிப் போட்டியாளர்கள்,
அயோவா உட்பிரிவு கூட்டத்திற்கு சிலவாரங்கள் முன்வரை டீன் மீது நடத்திய தாக்குதல்கள், அவை அவருடைய
கொள்கையை வாக்குப்போடும் மக்கள் நிராகரித்தனர் என்பதன் காரணமாக அந்த அளவுக்கு செயல்திறம்
மிக்கதாக இல்லை. உண்மையில், பெரும்பாலான வாக்குகள், ஜனநாயக வாக்காளர்களிடையே போருக்கான
எதிர்ப்பு பெரும் ஆதரவைக் கொண்டிருந்தது என்பதைத்தான் காட்டியது. மாறாக டீன் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்கள், ஒரு தேசிய தேர்தலில் வேட்பாளர் என்ற முறையில் டீன் வலுவற்றவர் என ஜனநாயக
வாக்காளர்களிடையே இருந்த உணர்வுதான் வெளிப்படுத்தப்பட்டது. அவரை ஏற்கனவே பிடிக்காதவர்களுடன்
மட்டுமல்லாது, இந்தத் தாக்குதல்கள் அவரது போர் எதிர்ப்பு நிலைப்பாடு என தாங்கள் நம்பியதுடன்
உடன்பட்டவர்களோடும் இணைந்துவிட்டது; அதாவது டீனைப் பிடித்திருந்து, ஆனால் தேசிய தேர்தலில் டீன் குடியரசுக்
கட்சியின் தாக்குதல்களை சமாளிக்கமுடியாது என்பதை நிரூபிப்பபார் என்று நினைத்தவர்களும் எதிராக
வாக்களித்தனர். ஒரு விந்தையான வகையில், டீன் மீதான தாக்குதல், புஷ்ஷைத் தோற்கடிக்கும் திறன் உடைய ஒரு
வேட்பாளரைக் காண்பதற்கான ஜனநாயகக் கட்சி வாக்காளர்களின் பரந்த பகுதியினரின் அடிப்படை விருப்பத்தைச்
சுரண்டும் தன்மை படைத்ததாக தொடக்க தேர்தல்கள் போயின.
அயோவா உட்பிரிவு, நியூஹாம்ப்ஷயர் தொடக்க தேர்தல்களில் டீனுடைய வேட்பாளர்
தகுதிக்கான ஆதரவு வெளிப்பட்ட பின்னர், ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தின் தன்மையும், குரலும் விரைவாக
மாறின. அந்தக்கட்டத்தில் இருந்து, பிரச்சாரம், ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பிற்கு வாக்களித்திருந்த
செனட் உறுப்பினர்களின் வேட்பாளர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டது. பின்னர் இறுதியில் கெர்ரி
தேர்ந்தெடுக்கப்பட்டது (அது ஜோன் எட்வார்ட்ஸாகக் கூடவும் இருந்திருக்கலாம்), ஆளும் செல்வந்தத்தட்டு
நிர்ணயித்து ஏற்றுக்கொண்டுள்ள வரம்பிற்கு உட்பட்டுத்தான் தேர்தல் பிரச்சாரம் அதிகாரபூர்வமாக அமையும்
என்பதை உறுதிப்படுத்தியது.
ஜனநாயகக் கட்சியின் பிரச்சினை
இந்த முழு நடவடிக்கையும், மிக அரிய திறமையுடன் செய்துமுடிக்கப்பட்டது என்றுதான்
கூறப்பட வேண்டும். போரெதிர்ப்பு உணர்வை நன்கு தூண்டிவிட்டிருந்த டீனின் பிரச்சாரம் விரைவில் காற்றுப்
போனதாக ஆயிற்று; ஈராக் பற்றிய புஷ்ஷுடனான கருத்து வேறுபாடுகள், மற்ற பிரச்சினைகளிலும்
கருத்துவேறுபாடுகள் கொள்கை அளவில் இல்லாமல் அடிப்படையில் தந்திரோபாய ரீதியாக மட்டுமே கொண்டிருந்த
தன்மை உடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுத்ததில் வேட்புமுறை முடிவுற்றது.
இது எவ்வாறு நிகழமுடியும்? செய்தி ஊடகத்தின் பங்குபற்றி மட்டும் பேசிப் பயன்
கிடையாது. முதலாளித்துவ முறையின் இருகட்சிமுறை வரம்பிற்கு உட்பட்டுத்தான் தொழிலாள வர்க்கத்தின் அரசியல்
சிந்தனை ஓட்டம் இருக்கும் என்ற மட்டத்துக்கு ஊடகம் பொதுக் கருத்தை சூழ்ச்சியுடன் காட்டுவது வெற்றி அடையும்.
எப்பொழுதுமே தேர்தல்களில் பாதியிலிருந்து மூன்றில் இருபங்கு வாக்காளர்கள் ஒவ்வொரு முறையும் செய்யும்
முற்றிலும் தேர்தல் வழிவகையில் ஈடுபாடு கொள்ளாத தன்மையைக் கையாண்டுதான், தங்களுடைய முதலாளித்துவ
அரசியலின்பால் உள்ள, உள்ளிருக்கும் அதிருப்தியை, பரந்த அளவில் இருக்கும் தொழிலாளர்கள் வெளிப்படுத்த
முடியும். இந்த அசாதாரணமான அரசியலில் பங்குபெறா தன்மை, அமெரிக்க மக்களில் மில்லியன்
கணக்கானவர்களின், அவர்கள் பெரும்பான்மையாகக் கூட இருக்கலாம், முழு அரசியல் அமைப்புகளிலிருந்தும்
அந்நியமாய் இருப்பதின் வெளிப்பாடு என்றுதான் உணர முடியும். இவர்கள் தேர்தல் வழிவகையில் பங்குபெறாததற்குக்
காரணம், இந்த முறையில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள அவர்கள் அதில் எதையும் காணவில்லை.
அதேநேரத்தில், இந்த அக்கறையில்லாத தன்மையுடன், பல பொய் தோற்றங்களும்
காணப்படுகின்றன; அவற்றில் மிகவும் தளர்வூட்டுவதும், உள்ளத்தை சோர்வடையச் செய்வதும் எப்படியும் ஜனநாயகக்
கட்சி, ஏதோ தெளிவற்ற முறையில், குடியரசுக் கட்சிக்கு மாற்று ஆகும் என்ற நம்பிக்கைதான். இந்தப் பிரமை,
அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ இரு கட்சி முறையின் உறுதித் தன்மைக்கு இன்றியமையாதது ஆகும்.
எங்கு பிரமைகள் உள்ளனவோ, அங்கு அப்பிரமைகளை தோற்றுவிப்பவர்களும்
உள்ளனர்; அதாவது, தனிநபர்கள், அமைப்புக்கள், அரசியல் போக்குகள் என்ற முறையில் இவை இருகட்சி முறைக்கு
ஆதரவு திரட்டி நிற்பவை; இதில் குறிப்பாக ஜனநாயகக் கட்சிதான் இருக்கிறது. உதாரணமாக, ஜனநாயகக்
கட்சியின் ஆரம்ப தேர்தல்களின் பல சிந்திக்கவைக்கும் நடைமுறைகளில், மிகப் பெரிய அளவுக்கு காங்கிரஸ்
உறுப்பினர் டென்னிஸ் குஷினிக்கிற்கும், மிகுந்த சமயப்பற்றுள்ள வணக்கத்திற்குரிய அல் ஷார்ப்டனுக்கும் கொடுக்கப்பட்ட
விளம்பரங்களும் ஒன்று ஆகும்.
ஒவ்வொரு வாரமும், ஒரு விவாதத்தைத் தொடர்ந்து மறுவிவாதத்தின்போதும், இந்த
இரு பெருமக்களும் மற்றய வேட்பாளர்களோடு, ஒரே மேடையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பல ஆரம்ப தேர்வு
மாநிலங்களிலும் 3 சதவிகிதத்திற்கும் குறைந்த வாக்குகளையே இவர்கள் பெற்றிருந்த போதிலும், அவர்கள் அடுத்து
பங்குபெற வேண்டிய விவாதங்களுக்கான அழைப்புக்கள் நிறுத்தப்படவில்லை. அவர்கள் பெருநிறுவனங்களை பற்றித்
தாங்கள்கூற வேண்டிய குறைபாடுகள் அனைத்தையும் பேசுவதற்கும், இடதுசாரி கருத்துக்களை கூறுவதற்கும் எல்லா
வாய்ப்புக்களும் தரப்பட்டன. இதற்குப் பதிலாக, அவர்கள், அமெரிக்காவில் அரசியல் முன்னேற்றத்திற்கு ஒரே
முறைமையான கட்சி ஜனநாயகக் கட்சிதான் என்று பிரகடனப்படுத்தினர்.
முடிவில், அவர்கள் பங்குபெற்றது ஜனநாயகக் கட்சி ஒரு உண்மையான "மக்கள்"
கட்சி, அடிப்படையில் குடியரசுக் கட்சிக்கு எதிரானது, மக்கள் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்கக் கூடியது,
முக்கியமான, முற்போக்கான சீர்திருத்தங்களைக்கூட உழைக்கும் மக்களுக்காக அமெரிக்க சமுதாயத்தில்
கொண்டுவரக்கூடியது என்ற பொய்த்தோற்றத்தை வளர்க்கத்தான் உதவியது.
ஹோவார்ட் டீன் இதைத்தான் தன்னுடைய ஜனாதிபதி வேட்புத்தகுதிக்கான பிரச்சாரம்
முடிந்தவுடன் செய்தார். தன்னுடைய ஆதரவாளர்களை, மூன்றாம் கட்சி அரசியலில் எந்தத் தொடர்பும்
கொள்ளக்கூடாது என்றும் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே தொடர்ந்து மாறுதல்களுக்குப் போராடுமாறும்தான்
வலியுறுத்தினார்.
குஷிநிக், ஷார்ப்டன், டீன் இவர்களுடைய அறிக்கையில் காணப்பட்ட அரசியல்
முக்கியத்துவத்தைவிட, இவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் வாழ்வை ஜனநாயகக் கட்சிக்குள் கொண்டிருந்தவர்கள்
மற்றும் வேறு எந்த முதலாளித்துவ எதிர்ப்பு அரசியைலையும் அறியாதவர்கள், தாரளவாத முன்னோக்கை கொண்ட
அமெரிக்க சஞ்சிகையான Nation
உடைய நிலைப்பாடும் அதுவேயாகும். இந்த அமெரிக்க மத்தியதர வர்க்கத்தின் தீவிரக் குரல் -சோவியத்
ஒன்றியத்தில் மார்க்சிச புரட்சியாளர்களை ஸ்ராலின் அழித்ததை அது ஆதரித்த பொழுது, 1930களில் பின்னோக்கிப்
பார்த்தோமானால் அரசியல் இழிவை பதிவுசெய்திருக்கிறது- இப்பொழுது ஜோன் கெர்ரியுடைய வேட்பாளர்
மனுவிற்கு ஆதரவு கொடுக்கிறது.
இதன் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான ஆதரவு பற்றிய நிலைப்பாட்டை, மிக
விரிவாக எடுத்துரைத்த விளக்கம் ரால்ப் நாடெருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் பெப்ரவரி 16
Nation
ல் வெளியிடப்பட்டுள்ளது; அதில் 2004 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொள்ள
வேண்டாம் என்று அவரை வலியுறுத்தியது. "ரால்ப், இது தேர்தலில் நிற்பதற்கு தவறான ஆண்டு ஆகும்: 2004
என்பது 2000 இல்லை."
இதில் என்ன வேறுபாடு?
"ஜோர்ஷ் டபுள்யூ. புஷ் நம்மை சட்டவிரோதமான, முன்கூட்டிய போருக்கு
அழைத்துச் சென்று விட்டார், அவருடைய தோல்வி முக்கியமானது... ...பெரும்பாலான முன்னேற்றக் கருத்துக்கள்
உடைய மக்கட்திரளின் வாக்குகள், நாட்டின் திசையை மாற்றக்கூடிய ஒரு சக்தியைக் கொண்டுள்ள முயற்சிகள்
எல்லாம், இந்த ஆண்டு புஷ்ஷை தோற்கடிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு இலக்கைத்தான் குவிமையமாகப்
பெற்றுள்ளன. அந்த இலக்கிலிருந்து வழிவிலகச்செய்யும் எந்த வேட்பாளரும் எதிர்கால முற்போக்கான
வாக்காளர்களின் முழுத் தட்டினாலும் தோலுரிக்கப்படுவார்கள். நீங்கள் நின்றால், ஒருவேளை இனி மாற்றமுடியாத
அளவிற்கு, சக்தி கொண்ட செயல்பாட்டாளர்களிடமிருந்து உறவுகளைக் கொள்ள முடியாமல் உங்களை நீங்களே
பிரித்துக்கொண்டு விடுவீர்கள்."
Nation இவ்வாறு
எழுதுகிறது!
சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் அடிப்படையான,
சமரசத்திற்கிடமில்லாத வேறுபாடுகளை ரால்ப் நாடெரின் அரசியலுடன் கொண்டுள்ளன. ஆனால் அந்த வேறுபாடுகள்
அவர் தேர்தலில் நிற்பதற்கான அவரது முடிவுக்கு எதிர்ப்பை உள்ளடக்கி இராது. அவருடைய பிரச்சாரம்
ஜனயாயகக் கட்சி வேட்பாளருக்கு கிடைக்கும் எண்ணிக்கையைக் குறைத்து செனட்டர் கெர்ரியை தேர்தலில்
தோல்வியடைய வைத்தாலும், அவருக்கு அவ்வாறு செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு.
Nation முன்வைக்கும்
வாதங்கள் அரசியல் முறையிலும், அறிவார்ந்த தன்மையிலும் திவாலாகி விட்டதாகும். 2004க்கும் 2000க்கும் உள்ள
வேறுபாடு, புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை தவிர்ப்பதுதான் எல்லா "முற்போக்குவாதிகளுடைய" முக்கியமான
அரசியல் இலக்காக இருக்கவேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை வாதமாகும். அது உண்மையானால், 2000ம்
ஆண்டில் முதலில் புஷ் பதவிக்கே வராமல் தடுத்திருக்கவேண்டியதற்கும் அதுதானே முக்கிய இலக்காக
இருந்திருக்கவேண்டும்? அப்படியானால் Nation
நான்கு ஆண்டுகளுக்கும் முன் நாடெர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டபோது, அதற்கு ஆதரவு கொடுத்தது
பேரழிவுதரக்கூடிய தவறு என்று ஆகிவிடும்.
Nation இந்த
வாதத்திலுள்ள வெளிப்படையான முரண்பாட்டைத் தீர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, அபத்தமான
முறையிலும், இழிவுபெறும் வகையிலும், செனட்டர் கெர்ரியை பெருமைப்படுத்தும் முயற்சியைக் கொண்டுள்ளது.
அவருடைய "தைரியம், நீதியின்பால் அவருக்கு உள்ள பற்று, நேர்மைக்கு கொடுக்கும் முதலிடம், வெளிப்படையான
அரசாங்கம் மற்றும் அரசியலுக்கும் மேலான கொள்கைகள்" இவற்றைப்பற்றி இப்பொழுது எழுதுகிறது. "வெகு சில
செனட்டர்களுக்குத்தான் இத்தகைய அடைமொழிகள் கூறப்பட முடியும்" என்றும் குறிப்பிடுகிறது.
2004 ல் இத்தகைய பிதற்றல்கள்
எழுதப்படமுடியும் என்பது, அமெரிக்காவில் தீவிர அரசியலின் வறிய நிலையைத்தான் சாட்சியமிடுகிறது. திருவாளர்
கெர்ரி ஒன்றும் வித்தியாசமான அரசியல்வாதி அல்லர். இவர் சிறிதும் தவறாமல், உறுதியுடன் ஆளும் செல்வந்தத்
தட்டின் சமூக நலன்களையும் முதலாளித்துவ அமைப்பு ஒட்டுமொத்தத்தையும் பாதுகாப்பவர் என்பதற்கு எத்தகைய
சிறப்பான அரசியல் பகுப்பாய்வு திறனும் தேவையில்லை.
மேலும், கெர்ரியினுடைய குறிப்பிடும்படியான ஆளுமைக் கூறுபாடுகள், அரசியல்
முக்கியத்துவத்தில் மிகவும் புறக்கணிக்கத்தக்கவை. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கொள்கை நிலைப்பாட்டைப் பற்றி
விவிரிக்கும்போது, அதாவது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை நிலைநிறுத்துதல் என்ற ஒன்றுதான்- அது
முதலாளித்துவ முறையின் இருகட்சி முறைபற்றிய ஒரு வரலாற்று மதிப்பீட்டிலிருந்து, குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின்
வர்க்கத் தன்மையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ஜனநாயகக் கட்சியின் பிரச்சினை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே, சோசலிச
இயக்கத்தை விந்தையில் தள்ளியுள்ளது. மார்க்ஸ், ஏங்கல்ஸ் காலத்திலிருந்தே சோசலிச தத்துவார்த்தவாதிகள்
குறிப்பிட்டவாறு, அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான கூறுபாடு தன்னை அது அரசியலில் ஒரு
தனிச் சக்தியாக நிறுவிக்கொள்ளாது இருந்து வருவதுதான்.
தன்னுடைய வரலாற்றில், அமெரிக்க தொழிலாள வர்க்கம், பல போராட்டங்களில்
ஈடுபட்டு, அடிக்கடி மிகவெடிப்பான அளவுகூடச் செயல்பட்டுள்ளது. அதன் வேலைநிறுத்தங்கள், உள்நாட்டுப்
போர்க்காலத்தைத்தவிர, பலநேரமும் ஐரோப்பிய நாடுகள் கண்டிராத அளவு வன்முறையை வெளிப்படுத்தியுள்ளன.
ஆயினும்கூட, ஐரோப்பிய வர்க்க சகோதர சகோதரிகள் போல் இன்றி, அமெரிக்க தொழிலாள வர்க்கம்
தங்களுடைய ஆலைகளிலும், தெருக்களிலும் கடுமையாக எதிர்த்துப் போராடும் முதலாளிகளின் அரசியல் கட்சிகளின்
ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் வெற்றிபெற்றதில்லை.
அமெரிக்காவில் ஒவ்வொரு தலைமுறையின் சோசலிஸ்டுகளும் இந்தப் பிரச்சினையை
எதிர்கொண்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான, அரசியல் நனவுடைய, ஒரு பரந்த சோசலிசக் கட்சியின்
அபிவிருத்தியினூடாக முதலிலும், முக்கியமாகவும் தீர்வுகாண முற்பட்டிருக்கின்றனர். மிகக் கடுமையான
வர்க்கப்போராட்டம் நடைபெற்று, ஒரு பெரும் வெற்றி வரக்கூடிய வாய்ப்பு இருந்த காலமும் உண்டு, முதல்
உலகப் போருக்குமுன் தொழிலாள வர்க்கம் எழுச்சியுற்ற போதும், 1930களில் பெரும் மந்தநிலைக் காலத்திலும்,
இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனேயும், இறுதியாக 1960களின் கடைசிப்பகுதியிலும், 1970களின்
முதற்பகுதியிலும் அத்தகைய சூழ்நிலை இருந்தது. ஆயினும், ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், புறநிலை மற்றும்
அகநிலைக் காரணிகள் இணைந்து, தொழிலாள வர்க்கம் அரசியலில் தனித்தியங்கக்கூடிய நம்பிக்கைகொடுக்கும்
இயக்கமாக மலரமுடியாமல் அறைகுறையாக நிறுத்திவிட்டன.
தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமான அரசியல் சக்தியாக அமைக்கும் இந்த முக்கிய
பிரச்சினையைப்பற்றிய ஆய்வு, ஜனநாயகக் கட்சியின் பிரச்சினையை முன் நிறுத்துகிறது. 100 சுதந்திரமான
தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியைத் தடைசெய்வதற்கு, முதலாளித்துவ இரு-கட்சி முறையின் மேலாதிக்கத்தைப்
பாதுகாப்பதற்கு மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஏகபோக உரிமையைத்தான் தக்கவைத்துக்கொள்ளும்
அரசியல் கருவியாக இது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க முதலாளித்துவத்தால் பயன்படுத்தப்பட்டு
வருகின்றது.
ஜனநாயகக் கட்சியின் வரலாற்றைப்பற்றி விரிவாகப் பரிசீலனை செய்யும் அரங்கு இது
இல்லை. அத்தகைய ஆய்வின் பொருள் கிட்டத்தட்ட அமெரிக்காவின் முழு அரசியல் வரலாற்றையும் ஆய்வு செய்யும்
தன்மையைக் கொண்டிருக்கும். மொத்தத்தில், சில கருத்தாய்வுகளின்படி, ஜனநாயகக் கட்சியின் தோற்றங்கள்,
1790 களில் வாஷிங்டனுடைய நிர்வாகத்திலேயே தோன்றிய அரசியல் பிரிவுகளில் (கன்னைகளில்) காணப்படுகின்றன
எனக் கொள்ளப்படுகிறது.
ஆனால், ஜனநாயகக் கட்சியின் ஒரு தொடர்ந்திருக்கும் சிறப்பியல்பு பற்றி
குறிப்பிடப்படவேண்டும். முதன் முதலில் பகுதி-நவீனமுறையில், அதாவது 1830 களில் அது வெளிப்பட்ட காலத்தில்
இருந்து அது தன்னை வர்த்தக நலன்களுக்கு எதிராக சாதாரண உழைக்கும் மனிதனின் பாதுகாவலன் என்றுதான்
காட்டிக் கொண்டு வந்தது. ஆர்தர் ஷ்லெசிங்கர் ஜூனியர் என்ற வரலாற்று ஆசிரியரால் தன்னுடைய நூலான
The Age of Jackson
என்பதில் இந்தத் தன்மை துதிபாடப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தினிடம், சோசலிசக் கருத்துக்களுடைய
செல்வாக்கு படராமல் இருக்கும் வகையில், ஜாக்சன் நிர்வாகம், தன்னுடைய அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி,
சக்திவாய்ந்த நிதி நலன்களுடைய அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தாராண்மை ஜனநாயக
ஆட்சிக்கான மாதிரியை வழங்கியது, அது பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாடு என்பதில் அதன் இறுதி
மேன்மையைக் கண்டது என்று ஷ்லெசிங்கர் வாதிட்டுள்ளார்.
ஷ்லேசிங்கர் வசதியுடன் பூசி மெழுகிடுவது, வடக்கு வர்த்தக நலன்களுக்கு எதிராக
ஜாக்சன் கொண்டிருந்த விரோதப்போக்கு, முன்னேற்றக் கருத்துக்களின் விளைவாகத் தோன்றவில்லை, மாறாக
தெற்கில் இருந்த அடிமை உடைமையாளர்களின் பிற்போக்கான நலன்களைப் பிரதிபலித்தது என்பதுதான்.
ஜாக்சனுடைய அவநம்பிக்கை முறையில் நகர்ப்புறத் தொழிலாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க அவர்களுடைய
குறைகளைச் சுரண்டிக் கொண்டு, அடிமை உரிமையாளர்களின் பக்கம் ஈர்த்தது, அமெரிக்காவில் தொழிலாளர்கள்
இயக்கத்தில் பின்னர் வரவிருக்கும் அவர்களுடைய அடிப்படை பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டதின் ஆரம்ப
அடையாளமாகும்: மற்றொரு பிற்போக்கு வர்க்கத்தின் பிரிதிநிதகளுடன் ஊழல் மிக்க அரசியல் கூட்டுக்களின்
அடிப்படையில் ஆழமான சமூகப் பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வுகளைக் காண முயற்சிப்பதாகும்.
ஷ்லெசிங்கரின் ஜாக்சனின் காலம் 1944ம் ஆண்டு, அமெரிக்க
ஜனாதிபதியாக நீண்ட காலம்வரை பதவியில் இருந்த ரூஸ்வெல்ட்டின் ஆட்சிக்கால முடிவில் வெளியிடப்பட்டது.
ரூஸ்வெல்ட்டின் சகாப்தத்தில் இருந்து சில தலைமுறைகள் நமக்கு இடைவெளி ஆகிவிட்டன என்றாலும், அவரைப் பற்றிய
நினைவுகள் பெரும்பாலான அமெரிக்க மக்களின் உணர்விலிருந்து மறைந்து விட்டன என்றாலும், பதவியில் நான்கு முறை
அவர் இருந்தது, ஜனநாயகக் கட்சியை மக்களுடைய செல்வாக்கில் இருத்திவைப்பதற்கு உறுதுணையாயின.
ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாடு, அரசியல் கிராமியப் பாடலின் பகுதியாக வந்துவிட்டபின்னர், மீண்டும், மீண்டும்
தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் கூறப்பட்டு அமெரிக்காவில் சமுதாய நீதியின் (பீனிக்ஸ் போல்)
விளங்காப் புதிரின் மறுபிறப்புப் போல் ஆகியுள்ளது. அது முன்னோடி இல்லாத சமூக முன்னேற்றச் சகாப்தம்
போலவும், அமெரிக்க முதலாளித்துவத்தை ரூஸ்வெல்ட் முற்போக்கான முறையில் மறு சீரமைத்ததாகவும்
கூறப்படுகிறது.
உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டது ஆகும். பெருமந்த நிலையினால்
முதலாளித்துவத்தின் பால் மக்களுக்கு இருந்த ஆழ்ந்த விரோத உணர்விற்கேற்றவாறு தன்னுடைய நிர்வாகச்
செயல்பாட்டைத் திருத்தி அமைத்துக் கொள்ளுவதில் ரூஸ்வெல்ட் வியத்தகு அரசியல் அறிவைக் காட்டினார் என்பதில்
சந்தேகம் இல்லை. ஆனால் பெரும்பாலும், அவர்களுடைய கொள்கைகள், உலக முதலாளித்துவ அமைப்பின்
முரண்பாடுகளில் வேரூன்றியிருந்த ஆழ்ந்த காரணங்களுடன் மோதி முடிவிற்கு வராமல், பேரழிவைத் தரக்கூடிய
பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காமல், அப்போதைக்குத் தணிக்கின்றவையாக இருந்தன. தொழிலாள
வர்க்கம் கொண்டுள்ள முக்கியமான நலன்கள் அது நேரடிப் போராட்டங்களின் விளைவாகக் கண்டவை, பொதுவாக
ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் எதிர்ப்பிற்கிடையே அடையப்பட்டவை. 1937ல் இரண்டாம் முறையாக நிகழ்ந்த
பொருளாதாரச் சரிவு, புதிய உடன்பாட்டின் தோல்வியை அம்பலப்படுத்தியதுடன் அமெரிக்கா இரண்டாம் உலகப்
போரில், டிசம்பர் 1941ல் புகவிருந்தபோது வேலையின்மையை கிட்டத் தட்ட 25 சதவிகிதத்திற்கு ஆக்கியது.
தொழிற் கட்சிக் கோரிக்கை
1930களின் இடைப்பகுதியில் பெரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின்
வெடிப்பு, டோலிடோ Auto-Lite
வேலைநிறுத்தம், மினியாபொலிஸ் பொது வேலைநிறுத்தம், சான் பிரான்சிஸ்கோ பொதுவேலை நிறுத்தம், சற்றுப்
பின்பு, Flint
உள்ளிருப்புப் போராட்டம் போன்றவை, தொழிலாள வர்க்கம் தனித்த அரசியல் சக்தியாகச் செயல்படவேண்டிய
பிரச்சினையை முன்னுக்குக் கொண்டுவந்தன. புதிதாக அமைக்கப்பட்டிருந்த
Congress of Industirial Organizations
(CIO), போர்க்குணம் மிகுந்த தொழிற்சங்கவாதத்தின்
மட்டுப்பாடுகளுடன் மேலும் மேலும் எதிர்த்து நிற்கத் தலைப்பட்டுவிட்டது. தனித்த வேலைநிறுத்த நடவடிக்கைகளால்
மட்டும், தொழிற்துறை ஜனநாயகம், சமூக சமத்துவம் மற்றும் பாசிசம், ஏகாதிபத்திய இராணுவாதம் இவற்றால்
முன்வைக்கப்படும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது.
அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பை நிறுவனங்களிலிருந்து
எதிர்கொண்ட நிலைமையில் --சிக்காகோ தொழிலாளர்கள்
Republic Steel
க்கு எதிராக 1937ம் ஆண்டு நினைவு தினத்தன்று வேலைநிறுத்தம் செய்தது சான்றாகிறது-- தொழிற்சங்கப்
போர்க்குணம் தொடர்ந்து முட்டுச்சந்தாகத் தோன்றியது. மேலும் ரூஸ்வெல்ட் நிர்வாகம், சங்கங்கள் அமைப்பதற்கு
தொழிலாளர்கள் கொண்டிருந்த போராட்டங்களுக்கு பெரும் விரோதப் போக்கைக் காட்டியபோது-- நினைவுதினப்
படுகொலைகளுக்கு வேலைநிறுத்தம் செய்தவர்கள், நிர்வாகிகள் இருவரையுமே
கண்டனத்திற்கு உட்படுத்தி ரூஸ்வெல்ட் தொழிற்சங்கத்தினரைப் பெரும் சீற்றத்திற்கு உள்ளாக்கினார் (ஷேக்ஸ்பியரை
மேற்கோளிட்டு "உங்கள் இருவருடைய வீடுகளிலும் கொள்ளை நோய்தான்" என்று ஜனாதிபதி அறிவித்தார்) --
ரூஸ்வெல்ட் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் சிஐஓ கொண்டிருந்த எழுதப்படாத உடன்பாட்டின் முறைமை
மற்றும் செல்தகைமையை கேள்விக்கு உட்படுத்திவிட்டது. அப்பொழுது
CIO இரண்டு
ஆண்டுகளாகத்தான் செயல்பட்டுவந்தது; ஆனால் ஏற்கனவே அது நெருக்கடியான நிலைக்கு வந்துவிட்டிருந்தது.
இந்த நிலைமையின் பின்னணியில்தான் தொடர்ச்சியான அசாதாரணமான பேச்சு
வார்த்தைகள், மெக்சிகோவிலுள்ள கோயாகானில் மே 1938ல் சோசலிசத் தொழிலாளர் கட்சியின்
தலைவர்களுக்கும், (அப்பொழுது அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கம் என்ற பெயரைக் கொண்டிருந்தது),
புலம்பெயர்ந்திருந்த 1917 அக்டோபர் புரட்சியின் தலைவரும் நான்காம் அகிலத்தை தோற்றுவித்தவருமான
லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் இடையே நடைபெற்றன. CIO
உடைய பிரச்சினைகள், ஒர் அரசியல் போராட்டமாக
மாற்றப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார். தொழிற் கட்சியை ஆரம்பிப்பதற்காக ஒரு புதிய தொழிற்சங்க
அமைப்பிற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சியை
வலியுறுத்தினார்.
"இது ஒரு புறநிலை உண்மை; புதிய தொழிற்சங்கங்கள், தொழிலாளரால்
தோற்றுவிக்கப்பட்டவை, முன்னே செல்லமுடியாமல் முட்டுச்சந்துக்குள் நெருக்கடிநிலைக்கு வந்துள்ளன; ஏற்கனவே
அமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்களில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள், சட்டமியற்றுதலில் செல்வாக்கு செலுத்தவும்,
வர்க்கப் போராட்டத்தில் செல்வாக்கு செலுத்தவும், தங்களுடைய சக்திகளுடன் ஒன்று சேர வேண்டும். தொழிலாள
வர்க்கம் ஒரு மாற்றுக்குமுன்னால் நிற்கிறது: தொழிற்சங்கங்கள் கலைக்கப்படவேண்டும் அல்லது அவை அரசியல்
நடவடிக்கைகளில் சேரவேண்டும்" என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.
இந்த விவாதங்களின் போது, தான் பிரிட்டிஷ் தொழிற்கட்சியைப் போன்றதொரு
சீர்திருத்தக் கட்சியை அமைக்க வாதிடவில்லை என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். மாறாக, ஒரு தொழிலாளர்
கட்சிக்காகப் பாடுபடுவது என்பது தவிர்க்கமுடியால் தொழிலாளர்கள் அதிகாரத்திற்காகப் போராடுவதன்
இடைமருவு கோரிக்கைகளோடு தொடர்புகொண்டுள்ளது. தொழிற் கட்சிக்கான கோரிக்கை, தொழிற்சங்க
அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஜனநாயகக் கட்சியின் நலன்களுக்காகவும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்
கட்சியின் நலன்களுக்காகவும் கீழ்ப்படுத்துவதற்கு எதிரானது.
சோசலிசத் தொழிலாளர் கட்சியின் வேலைத் திட்டத்தில், தொழிற் கட்சி
தேவைக்கான கோரிக்கையைப் புகுத்தியது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர
மூலோபாயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தைக் குறித்தது. இது அமெரிக்காவில்
தொழிலாளர் இயக்கத்தின் மையப் பிரச்சினனையை அடையாளம் கண்டது -- அதாவது இவை முதலாளித்துவ
வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுக்கு அடிபணிந்து நிற்கின்றன--இந்நிலையிலிருந்து முன்னேற ஒரு வழியும் காட்டப்பட்டது.
ஒரு தொழிற் கட்சி அமைக்கப்படவேண்டும் என்பதற்கான போராட்டம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை இன்னும்
கூடுதலான முறையில் AFL, CIO
எனும் இரண்டு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் தீவிரமான மோதலுக்குக் கொண்டு வந்தது; அவை இரண்டும்
தங்கள் வேறுபாடுகள் எவையாயினும், தொழிலாள வர்க்கம், ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து நிற்கவேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம்
வியத்தகு அளவில் முன்னேற்றம் கண்டது. இந்த நலன்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தங்களுடைய ஜனநாயகக்
கட்சியுடனான அரசியல் கூட்டிற்கு நிரூபணமாகக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வசதிகள், உலகப் போருக்குப்
பின் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் விளைவே அன்றி, ஜனநாயகக் கட்சியுடனான
உடன்பாடுகளினால் விளைந்தவை அல்ல. அமெரிக்கத் தொழிலாளர்கள் பெற்றதை விட அவர்கள் இழந்ததுதான்
முக்கியத்துவம் வாய்ந்தது; அதாவது அமெரிக்க சமுதாயத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பை தொழிலாள
வர்க்கத்தின் நலன்களுக்காக மாற்றும் வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டனர்.
ஆரம்பத்தில், ரூஸ்வெல்ட் காலத்தில், ஜனநாயகக் கட்சியுடன் கூட்டு என்றால்,
எல்லாவற்றையும் விட, தொழிற்சங்கங்கள், புரட்சிகரமான சோசலிசக்கருத்துக்கள், அபிலாசைகள் என்பது
ஒருபுறம் இருக்கட்டும், எந்த முற்போக்கான ஜனநாயகக் கொள்கையையும் கைவிட்டுவிடவேண்டும் என்று
பொருளாயிற்று. தொழிற்சங்க இயக்கத்திற்குள்ளேயே, அமெரிக்காவின் செல்வத்தை மறுபங்கீடு செய்தல், வேலை
செய்யுமிடத்தின் ஜனநாயக முறை, தொழிலாளர்களுக்கு பெருநிறுவன நிதியை ஆய்வு செய்யும் அதிகாரம், மற்றும்
தொழில்துறைமீது அரசாங்கக் கட்டுப்பாடு -1930களில் மிகவும் விரும்பப்பட்ட கருத்துக்களாக இருந்தது-- இவை
பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். இது இயல்பிலேயே தொழிற்சங்கங்களுக்குள்ளே
கருத்துவேறுபாடு வெளியிடுதலை தடை செய்தது; இதற்காக அதிகாரத்துவம் குண்டர்கள் படையின் வன்முறையிலும்,
அரசியல் ரீதியான களையெடுப்புக்களிலும் ஈடுபட்டது.
வரலாற்று ஆசிரியர் அலன் பிரிங்க்லி, தொழிலாளர் இயக்கம் ரூஸ்வெல்ட்டிற்கும்,
ஜனநாயகக் கட்சிக்கும் அடிபணிந்து நின்றதின் அரசியல் உட்குறிப்புக்களை நன்கு சுருங்கக் கூறியுள்ளார்"
"இதன் ஜனநாயகவாதிகள், தாராளவாதிகள், அரசாங்கம், ஆகியவற்றுடனான புதிய
பங்குமுறையில், தொழிற்சங்கங்கள் அடிபணிந்த சக்தியாகத்தான் செயல்படமுடியும் என்ற விதிக்கு உட்படுத்திக்
கொண்டதுடன், சிறிதுகூடக் கூடுதலான தாராளவாத செயல்பட்டியலை உருவாக்கும் திறனையும் இழந்து
விட்டனர்."[2]
இதைத் தவிர, ஜனநாயகக் கட்சியுடனான கூட்டு, தொழிலாள வர்க்கத்தை மிக
அழிவுதரும் விலையையும் கொடுக்கவைத்த விளைவுகளை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்,
அமெரிக்கா முக்கிய ஏகாதிபத்திய சக்தியாக வெளிப்பட்டது. அதன் பரவியிருந்த நலன்கள், அமெரிக்க பெரு
நிறுவனங்கள் உலக இருப்புக்களை சுரண்டும் திறனை எவர் தடுத்தாலும் சமரசத்திற்கு இடம் இன்றி அவர்களுடன்
விரோதப்போக்கை காட்டவேண்டும் என்று ஆயிற்று. தாராளக் கொள்கையுடைய ஜனநாயகத்தை காக்கிறோம்
என்ற பெயரில், அமெரிக்க தொழிலாளர் இயக்கம், அமெரிக்காவால் 1946ல் தொடக்கப்பட்ட பனிப்போரின்
அணியில் நிற்கவேண்டியிருந்ததோடு, உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஒவ்வொரு கடும்
போராட்டத்திற்கும், ஒவ்வொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் வெளிப்பாட்டை நசுக்கும் முயற்சிகளிலும்
தீவிரமாகப் பங்காற்றியது. AFL-CIO
உடைய சர்வதேசப் பிரிவின் நடவடிக்கைகள் CIA
செயல்கள் போலவே இழைந்து காணப்பட்டன.
AFL-CIO கம்யூனிச எதிர்ப்பை ஒரு நெறியாக
ஏற்கமறுத்திருந்தால், அமெரிக்காவிற்குள் மக்கார்த்திய செயற்பாடுகள் நடந்திருக்கவே முடியாது.
ஜனநாயகக் கட்சியுடன் இரண்டாம் உலகப் போருக்குப்பின் கொள்ளப்பட்ட
உடன்பாட்டின் மற்றொரு முக்கியமான அம்சம் தொலைநோக்கான விளைவுகளை காண இருந்தது. 1940 களிலும்
1950 களிலும் போருக்குப் பிந்தைய ஜனநாயகக் கட்சியின் அதிகாரக் கட்டமைப்பு அப்பொழுதும் "வலுவான
தெற்கில்" ஜிம் க்ரோவுடைய நிறவெறி முறையை ஒரளவு கொண்டிருந்ததால், தொழிலாளர் அதிகாரத்துவம்
நாட்டின் அப்பகுதியில் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் சேர்க்கும் தீர்மானகரமான முயற்சியை மரியாதையுடன்
விலக்கிக் கொண்டது. இவ்வாறு, 1950 களிலும் 1960ன் முற்பகுதிகளிலும் வளர்ந்த மாபெரும் மக்கள் உரிமை
இயக்கம், தொழிலாளர் இயக்கத்திலிருந்து தனியேதான் நடத்தப்பட்டது.
AFL-CIO இரண்டும், தெற்கில்
ஜிம் க்ரோவுடைய இயக்கத்திற்கெதிரான போராட்டத்திற்கும். வடக்கில் ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களுடைய
ஜனநாயக, சமூக அபிலாசைகளுக்கும், பிற்போக்குத்தனமாக விரோதம் காட்டாமல் விலக்கிக் கொண்டது,
கறுப்பர்களின் மத்தியதர வகுப்பின் பல பிரிவுகளுக்கும், குடிமை உரிமை இயக்கத்தின் தலைமையை அளிக்க
நேர்ந்தது. ஜனநாயக உரிமைகளுக்கும், சமூக சமத்துவத்திற்கும் நடக்கும் போராட்டங்களின் ஒரு பாகமாக ஒரு
சக்திவாய்ந்த வர்க்கப் போராட்டமாக வளர்ச்சி அடையாமல், குடிமை உரிமை இயக்கம் இறுதியில் முதலாளித்துவ
கட்டமைப்பிற்குள், கறுப்பர்களிடையே ஒரு சிறிய பிரிவினரின் சலுகைகளுக்காக பாடுபடும் இயக்கமாக சீரழிந்து
விட்டது.
1960களில், ஜனநாயகக் கட்சியும்,
AFL-CIO உம்
ஒரு பெரும் நெருக்கடியிலும், சரிவிலும் நுழைந்தன. குடியுரிமை இயக்கத்தின் வெடிப்பு, ஜனநாயகக் கட்சியின்
தாராளக் கொள்கையுடைய வடக்கையும், நிறவெறி இனஒதுக்கல் கருத்தைக் கொண்டிருந்த தெற்குப் பிரிவிற்கும்
இடையே நிலவியிருந்த சமநிலையை அழித்துவிட்டது. போருக்குப் பிந்தைய பூரிப்பு சிறிது சிறிதாக முடிவுக்கு வந்ததும்
அமெரிக்காவின் சவால் செய்ய முடியாத பொருளாதார மேலாதிக்கத்தின் சீரழிவும், கெயின்சியக் கொள்கைகளின்
அடிப்படையில் போருக்குப்பின் ஏற்படுத்தப்பட்டிருந்த சீர்திருத்த திட்டங்களின் வரம்புகளை அம்பலப்படுத்தின.
இறுதியாக, வியட்நாம் போர் என்ற பேரழிவு -அதுவே பிரதானமாய் ஜனநாயகக் கட்சியால் வகுக்கப்பட்ட
பனிப்போர் மூலோபாயத்தின் விளைவுதான்- இடது அமெரிக்க தாராளக்கொள்கையினரை பிரித்து, தார்மீக ரீதியில்
சமரசத்திற்கு உட்படுத்தி, செல்வாக்கிழக்கப் பண்ணிவிட்டது.
ஜனநாயகக் கட்சியுடன் கட்டிப்போடப்பட்டிருந்த, தொழிற்சங்க அதிகாரத்துவம்,
எப்போதுமே அமெரிக்க முதலாளித்துவமுறையின் இருப்புக்கள் தீர்ந்தே போகாதவை என்று கருதியதுடன், தேசிய
பொருளாதாரத்தின் முடிவிலா வளர்ச்சியும், சீர்திருத்தக் கொள்கைகளுக்கு நிலைத்த அஸ்திவாரத்தைக் கொடுக்கும்
என்றும் கருதின.
1970களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் அந்த முன்னோக்குகள்
சிதறடிக்கப்பட்ட நிலையில்- ஒரேநேரத்தில் பொருளாதாரப் பின்னடைவும், பணவீக்கமும் வெடித்தெழுந்தது அல்லது
Stagflation
என அப்பொழுது அழைக்கப்பட்டது - ஜனநாயகக் கட்சி சார்ந்த ஜனாதிபதி
ஜிம்மி கார்ட்டரால் 1979ல் நியமிக்கப்பட்ட, கூட்டமைப்பின் ரிசேர்வ் வங்கியின் தலைவர் போல் வோல்க்கர்,
அறிமுகப்படுத்தியிருந்த வர்க்கப் போர்க் கொள்கைகளுக்கு எதிராக தெளிவான கொள்கைகளை
AFL-CIO ஆல்,
முன்வைக்க முடியாமல் போயிற்று. AFL-CIO,
அமெரிக்க தாராளக் கொள்கையின் சரிவு, குடியரசுக் கட்சியின் மறு எழுச்சி, 1981ல் தொழிற்சங்கங்களுக்கு
எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கமான
PATCO-வின்
11,000 உறுப்பினர்களை வேலை நீக்கம் செய்தது போன்ற அரசியல், சமுதாய விளைவுகளுக்கு ஏஎப்எல்-சிஐஓ
தாயாரிப்பின்றி இருந்தது. அமெரிக்க தொழில்துறையை மிகப்பெரிய அளவில் மறுசீர்திருத்தம் செய்வதை ஏற்று
அடுத்த 20 ஆண்டுகளில் மில்லியன் கணக்கில் வேலை இழப்புக்களை ஏற்படுத்திய நிலையையும் அது ஏற்றது.
தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகள்
அனைத்தையும் தொழிற்சங்க அதிகாரத்துவம் நாசவேலைக்கு உட்படுத்தியது. 1980களில்
AFL-CIO
இவற்றால் காட்டிக்கொடுக்கப்பட்ட வேலை நிறுத்தங்களின் பட்டியல் உண்மையில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள
வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியையும் அநேகமாகக் கொண்டிருந்தது. 1990 அளவில்
AFL-CIO இவை
உண்மையிலேயே தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் கருவியாக, மத்தியதர வர்க்கத்தின் இரண்டாம் முகவாண்மையாக
பயன்படுகிறது என்பது அதிகரித்த அளவில் தெளிவாகியது. அது உண்மையாக எந்த யதார்த்தபூர்வமான அர்த்தத்திலும்
தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு என்று விளக்கப்படமுடியாமற் போயிற்று.
CIO அமைக்கப்பட்டு 55
ஆண்டுகள்தான் ஆகியுள்ளன. உலகிலேயே பெரிய மற்றும் செல்வம் நிறைந்த
AFL-CIO ஒற்றை
தொழிற்சங்கக் கூட்டமைப்பாக இணைந்து 35 ஆண்டுகள்தாம் ஆகின்றன. ஆனால் இந்தக் குறுகிய காலத்தில்,
அதனுடைய வர்க்க ஒத்துழைப்புக் கொள்கை, ஜனநாயகக் கட்சியுடன் அரசியல் உடன்பாடு, தொழிலாள
வர்க்கத்தில் சோசலிசக் கருத்தியலின் எந்தவிதமான சாயலுக்கும் எதிரான அதன் கடும் தாக்குதல் ஆகியவை
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தை முற்றிலும் உடைத்தெறியும் விளவைக் கொடுத்துவிட்டன. மார்க்சிசம் இல்லாமல்
தொழிலாளர் இயக்கம் இல்லை என்று முன்னர் கூறப்பட்டது. இது
AFL-CIO
கூட்டமைப்பால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
சோசலிச சமத்துவக் கட்சியுடைய முன்னோடியான, வேர்க்கஸ் லீக் தன் அரசியல்
திட்டத்தில் தேவையான மாறுதல்களைச் செய்திருந்தது. தொழிற்சங்கங்களின் அடிப்படையில், தொழிற் கட்சி
அமைக்க விடுத்த அழைப்பு, மற்றய நிகழ்ச்சிகளால் பணியிலிருந்து ஒதுக்கிச்செல்லப்பட்டு விட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் அரசியல் அடிப்படை
ஆனாலும், இதையும் விட முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைக் கோட்பாடு -
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்து தன்னுடைய அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டியாக
வேண்டும் என்பதும், சமரசத்திற்கிடமில்லாத முறையில் ஜனநாயக மற்றும் சோசலிச தன்மையுடன் தன்னுடைய
சொந்த அரசியல் வேலைத்திட்டத்தை வகுத்தாக வேண்டும் என்பதும், தன்னுடைய சொந்த உரிமையிலேயே அரசியல்
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராடியாக வேண்டும் என்பதும் - முற்றிலும் செல்தகைமை உடையதாக
உள்ளது என்பதுடன், அதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிக்கு அடிப்படையும் ஆகும்.
அமெரிக்க தொழிலாள வர்க்க வரலாற்றின் படிப்பினைகளின் அடிப்படையில்,
ஜனாதிபதி புஷ்ஷை தோற்கடிப்பதற்காக அனைத்து அக்கறைகளும் கருத்துக்களும் அதற்குக் கீழ்ப்படுத்தப்படவேண்டும்
என்ற கூற்றுதான் 2004 ஆண்டின் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினை என்பதை, சோசலிச சமத்துவக் கட்சி
முற்றிலும் நிராகரிக்கிறது.
இல்லை; மிக அவசரமானதும் அழுத்தமானதுமான பணி சோசலிச மற்றும் சர்வதேச
வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போரடுவதுதான். புஷ்
பிரச்சினையை தொழிலாள வர்க்கத்தால்தான் தீர்க்கமுடியும். அது தன்னுடைய வேலைத்திட்டத்தை இதற்காக
முன்னெடுக்க வேண்டுமே அன்றி, ஆளும் செல்வந்தத் தட்டின் எந்தப் பிரிவிற்காவது இதை விட்டுவிடக்கூடாது.
இந்தக் கோட்பாட்டை வலியுறுத்துவதன் மூலம், நாங்கள் புஷ் நிர்வாகத்தின்,
பிற்போக்குத்தனமான மற்றும் குற்றஞ்சார்ந்த தன்மையைச் சிறிதும் குறைக்கவில்லை.
Nation
போல் இல்லாமல், ஜனநாயக வழிவகைகள் மீது நடத்தப்படும் தாக்குதலின் புதிய இயல்பு பற்றி நன்கு அறிவோம்;
முதலில் இது பெரிய பதவிநீக்க விசாரணையாக வெளிப்பட்டது; பின்னர் 2000ம் ஆண்டு தேர்தலிலும் வந்தது.
ஆனால் அது இத்தகைய ஆபத்துக்களும், வளர்ச்சிகளும் எப்படி எதிர்க்கப்படவேண்டும் என்ற எங்களுடைய
கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தை மாற்றவில்லை.
புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள், முழு உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியில்
இருந்து விளைகிறது என்றும், அடுத்த தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும், அந்த நெருக்கடி இன்னும் ஆழ்ந்தும்,
ஆபத்தானதுமாகப் போகும் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி உணருகின்றது. சோசலிச சமத்துவக் கட்சியைப்
பொறுத்தவரையில், வெறுமனே தேர்தல் பிரச்சாரத்தில் நவம்பர் மாதம் என்ன செய்யப் போகிறோம் என்பது
அல்ல, தேர்தலுக்குப் பின் நடக்க இருப்பவற்றை சந்திக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்.
ஜனநாயகக் கட்சி மற்றும் ஜோன் கெர்ரிக்கு வாக்களியுங்கள் என்று இன்று
தொழிலாள வர்க்கத்திடம் கூறுபவர்கள், இத்தகைய அரசியல் ஆலோசனையின் விளைவுகளுக்கும் பொறுப்பு
ஏற்றாகவேண்டும். கெர்ரி தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் தொழிலாளர்களிடம் என்ன கூறுவார்கள்? ஒரு
ஆட்சி, அது பிரதிநிதியாக இருக்கும் வர்க்க நலன்களின் அழுத்தத்தில் கூடுதலான இராணுவ நடவடிக்கைகளை
அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக மேற்கொண்டால், இவர்களுடைய அரசியல் நம்பிக்கைத்தன்மை என்ன
ஆவது? அல்லது அந்த ஆட்சி தொழிலாள வர்க்கத்தையே தாக்க முற்பட்டால்?
கெர்ரி தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன மாறுதல்கள் தொடரும்? அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்குநிலைகளில் அடிப்படை மாறுதல்கள் ஏற்பட்டுவிடுமா? அமெரிக்கக்
கொள்கைகள் சில உலகளாவிய கட்டாயங்களினால் உந்தப்படுகின்றன என்ற உண்மையை கெர்ரியின் தேர்வு
மாற்றிவிடுமா? இப்பொழுது புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும், புறநிலையான
புவியியல்-மூலோபாய கட்டாயங்களை, அதாவது மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இவற்றின் எண்ணெய் வளம் மற்றும்
ஏனைய முக்கிய மற்றும் பற்றாக்குறை கொண்ட வளங்களின் மீதான கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்துவதற்கான
கட்டாயங்களை மாற்றிவிடுமா? கெர்ரி வெற்றிபெற்றால், மத்திய கிழக்கில் இருந்தோ அல்லது மத்திய ஆசியாவில்
இருந்தோ, அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டுவிடுமா?
அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், எந்தவிதத்தில், ஜோன்
கெர்ரியின் தேர்தல் அடிப்படை உணர்வை மாற்ற இயலும்? வேலைகள் அழிப்பு, வாழ்க்கைத் தரங்களில் சரிவு,
இவை தொடர்ந்து இருக்கும். கெர்ரி நிர்வாகம், இன்றைய அமெரிக்க சமுதாய கட்டமைப்புக்கும், சமுதாய
கொள்கைக்கும் ஆதாரமாக இருக்கும் செல்வக் கோட்டையைத் தாக்கிவிடும் முயற்சிகளை முன்னெடுக்க துணிவு
கொள்ளுமா?
கடந்த 20 ஆண்டுகளில், முன்இருந்திராத அளவிற்கு சமுதாயத்தின் உயர்மட்ட ஒரு
சதவிகிதத்திடம் செல்வக்குவிப்பு உள்ளது. அமெரிக்காவில் தனியார் செல்வக் குவிப்பின்மீது தாக்குதல் இல்லாமல்,
அமெரிக்காவிற்குள்ளே சமுதாய நிலைமைகளில் எந்த தீவிர மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. அது ஒரு
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தால் செய்யப்படமாட்டாது; இதேபோல் இந்த நாட்டை ஆளும்
பெருநிறுவனங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தையும் ஜனநாயகக் கட்சி தொடங்கி வைக்காது.
ஒவ்வொரு தேர்தல் ஆண்டிலும் போலவே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள்
உழைக்கும் மக்களுடைய "நண்பர்கள்" என்று காட்டிக் கொள்ளுகிறார்கள். ஆனால் இந்த மக்களைத்
திருப்திப்படுத்துவதற்காக பேசும் இந்த அரசியல் தொழில் நடத்துபவர்களின் வாய்ச்சவடால் தன்மை, அவற்றை பல
பத்தாண்டுகளுக்கு முன்பு இவர்கள் கொடுத்த உறுதிமொழிகளுடன் ஒப்பிடப்படும்பொழுது மிகத்தெளிவாக
அம்பலப்படுகின்றது. கிட்டத்தட்ட சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, மே 12, 1964ல் இங்கு, மிச்சிகன்
பல்கலைக் கழகத்தில் லிண்டன் ஜோன்சன் தன்னுடைய மாபெரும் சமுதாயத்தைத் திறந்துவைத்தார். அப்பொழுது
அவர் கூறினார்:
"அடுத்த அரை நூற்றாண்டின் சவால், நாம் நம்முடைய அறிவைப் பயன்படுத்தி,
(அமெரிக்க) செல்வத்தை, நம்முடயை தேச வாழ்வை வளமாக்கவும் உயர்த்திக்கொள்ளவும், அமெரிக்க
நாகரித்தின் தன்மையையும் முன்னேற்றவும் பயன்படுத்துவோமா என்பதுதான். ... ஏனெனில் உங்கள் காலத்தில்,
நமக்கு செல்வம் கொழித்த, அதிகாரம் நிறைந்த சமுதாயமாகக்கூடிய வாய்ப்பு மட்டும் அல்லாமல் மாபெரும்
சமுதாயமாக, உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.....
"இந்த மாபெரும் சமுதாயம் அனைத்திலும் நிறைவு, அனைவருக்கும் சுதந்திரம் என்ற
அடிப்படையைக் கொண்டுள்ளது. வறுமை, இன அநீதி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் இது
கூறுகின்றது; இதற்கு நாம் நம் காலத்தில் முழுமையாக கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் இது
ஒரு தொடக்கம்தான்."
இதுதான் இங்கு மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு லிண்டன்
ஜோன்சன் கூறியது. வறுமையை ஒழிக்கும் உறுதிமொழி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது? இந்த உரையை ஓரளவு
நேர்மையான அம்சத்துடனாவது, ஜோன்சன் பேசியபொழுது, முழு தாராளக்கொள்கை செயற்பட்டியலும்,
போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் விரிவாக்கத்தின் உச்ச கட்டத்தில் சிதைவதற்கு இருந்தது.
ஆனால், பெரும் பள்ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வானவில்லை
மட்டுமே பார்த்துக் கொண்டு சென்ற லிண்டன் ஜோன்சன், வறுமையை அகற்றுவதை மாபெரும் சமுதாயத்தின்
"தொடக்கப் பணியாக" கருதினார். "மாபெரும் சமுதாயம்" என்ற ஜோன்சனால் கணிக்கப் பெற்றது புறப்பாடே
இல்லாமற் போயிற்று. இன்று இருக்கும் நிலைமைகள் அவருடைய முதலாளித்துவ அமெரிக்காவின் வருங்காலம் பற்றிய
பிரமைகளை கேலிக்கு ஆளாக்கி விட்டன.
சில நாட்கள் முன்புதான்,
Detroit Free Press, நகரத்தின்
மையப்பகுதிவாழ் மக்களைப் பற்றிய ஒரு புள்ளி விவரங்களை கொடுத்தது.
Free Press
ன் படி, 39.1 சதவிகித மையநகர டிட்ரோயிட் மக்கள் $10,000க்கும்
குறைவான வருமானத்தையும், 21 சதவிகிதத்தினர் $10,000 லிருந்து $19,000 வரையிலான வருமானத்தையும்
கொண்டுள்ளனர்; அதாவது 60 சதவிகிதத்தினர் அதிகாரபூர்வமான வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
மற்றொரு 14 சதவிகிதத்தினர், ஆண்டு ஒன்றுக்கு $20,000 லிருந்து $29,999 வரை வருமானம்
கொண்டுள்ளனர். அதாவது டிட்ரோய்ட் மத்திய நகரத்தில் 75.4சதவிகிதம் மக்கள் ஆண்டு ஒன்றுக்கு
$30,000க்கும் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள்.
நியூயோர்க் நகரத்தின் ஏழ்மை பற்றிய மற்றொரு அறிக்கை,
Communit7 Service Society
- என்ற அமைப்பால் கடந்த செப்டம்பர் அன்று வெளியிடப்பட்டது. இது அமெரிக்க மக்கட்தொகை கணக்கெடுப்புக்
கழகத்தை மேற்கோளிட்டு, 12.1 சதவிகித அமெரிக்கர்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது,
அதாவது, 30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் என்று பொருள். நியூயோர்க் நகரத்தில் வறுமை விகிதம் 20
ஆகும். இதே அமைப்பின், இன்னொரு அறிக்கையின்படி, நியூயோர்க்கில் கறுப்பின ஆண்களின் சுருக்கமான
வேலையின்மை பற்றிய தகவல் தொகுப்பு உள்ளது. உழைக்கும் வயதில் இருக்கும் 48.2 சதவிகித கறுப்பர்கள்
வேலையின்றி உள்ளனர்.
இந்த ஆழ்ந்த பிரச்சினைகள் ஒன்றைக்கூட முதலாளித்துவத்தால் தீர்த்துவைக்க
இயலாது. அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரம் புரட்சிகரமான முறையில் மறுசீரமைக்கப்படுவதுதான் இதற்கு
இன்றியமையாத தேவையாகும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, முழு நியாயத்துடனும் சோசலிஸ்டுகள், மாபெரும்
சமுதாய வேலைத்திட்டத்தை வெறும் தணியச்செய்யும் திட்டம் என்று குறை கூறியிருக்கலாம். ஆனால் தற்கால
முதலாளித்துவத்தின் செயல்பட்டியலில் தணியச் செய்வதற்குக் கூட இடம் இல்லை. உண்மையில், 1960 களுக்குப் பிறகு
குறிப்பிடத்தகுந்த எந்த சீர்திருத்த மசோதா சட்டமும் இயற்றப்படவில்லை.
அதேநேரத்தில், அரசாங்க அடக்குமுறைக் கருவிகளில் மிகப்பெரிய வளர்ச்சி
ஏற்பட்டுள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன்பு 1961 ஜனவரியில் ஜனாதிபதி ஐசனோவர், இராணுவ-தொழில்துறைக்
கூட்டின் தலையீடு பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவர் இராணுவ-தொழில்துறைக் கூட்டு என்று 1961ல்
கூறியது இன்றைய முன்னோக்கில் இருந்து பார்க்கும்போது தகர வீரர்கள் பொம்மைப் படை போல்தான்
இருந்திருக்கும், இன்றோ அவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் இல்லாமல் ஜனநாயகத்திற்காகப்
போராடுவது என்பது சாத்தியம் இல்லாதது. அத்தகைய அடிப்படையான மற்றும் தேவையான சீர்திருத்தங்கள்
சாதிக்கப்படுவது கூட, இவை சோசலிசத்தை சேர்ந்தவை அல்ல என்றாலும், தேர்வுக் குழு அகற்றுதல், விகிதாசார
பிரதிநிதித்துவ அடிப்படையில் புதிய வாக்களிப்புமுறை கொண்டுவருதல் போன்றவை, முதலாளித்துவ இரு கட்சிமுறையின்
நன்மைகளைப் பிரதானமாகப் பெறும் ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சி இவற்றை எதிர்த்து ஒரு பரந்த மக்கள்
இயக்கம் இல்லாமல் கொண்டு வருவது என்பது நினைத்தும் பார்க்கமுடியாதவை.
இந்த ஆண்டு நமக்கு நாம் விதித்துக் கொள்ளும் அடிப்படைப்பணி, ஒரு உண்மையான
தொழிலாளர்கள் இயக்கத்தை அமைக்கப் பாடுபடுதல்; இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ்தான் முடியும்.
இந்த வளர்ச்சியின் தேவைபற்றி அறிந்து கொள்வதற்காக, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பகுதிகள்,
மிகவும் சமூக நனவுள்ள சிறப்புத் தேர்ச்சி உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், இவர்களுக்குள்ளே ஒரு விவாதத்தை
முன்னெடுக்க, நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்த நோக்கங்கொண்டுள்ளோம். நாங்கள் ஒரு இயக்கத்தை
அடிமட்டத்திலிருந்து அமைக்க முயற்சி எடுத்துக் கொள்ள இருக்கிறோம்; இதற்காக காங்கிரஸ் தேர்தல்களிலும் பங்கு
கொண்டு இயன்ற அளவு நம்முடைய வேட்பாளர்களை எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் மாநில வாக்குச்சீட்டுக்களில்
இடம்பெறச்செய்ய உள்ளோம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விவாதமானது புதிய ஆட்சேர்ப்புக்கள்,
புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்குள்ளே இந்த நனவான சக்தியைக்
கட்டி எழுப்புதலை நோக்குநிலைப்படுத்தி இருக்கிறது.
இதில் மிகமுக்கியமானது அரசியல் நனவை உயர்த்துவது ஆகும். இதில் குறுக்கு வழிகள்
ஒன்றும் கிடையாது. நாங்கள் பல்லாயிரக் கணக்கான வாக்குகளைப் பெறுவோம் என்ற பாசாங்கையோ எதிர்பார்ப்பையோ
கொள்ளவில்லை; அல்லது எல்லா மாநிலங்களிலும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்திவைக்க முடியும் என்றும் கூறவில்லை.
அது இயலாது. ஆனால் இந்த ஆண்டின் எங்கள் பிரச்சாரத்தின் மூலம், இது இயலக்கூடும் என்ற சூழ்நிலையைத் தோற்றுவிப்போம்.
Nation இன் தாராண்மைவாதிகள்
அல்லது தீவிரவாத அரசியல்வாதிகள் போன்றோருக்கு நாம் ஒன்றைக் கூறிக்கொள்வோம், 2004ல் "யதார்த்தமான"
ஒன்றை செய்வதாக கூறுகிறார்கள், இன்னும்சொல்லப் போனால், அவர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்,
தொழிலாள வர்க்கத்தை தவறான பாதையில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள், இப்பொழுது தொடங்க
வேண்டிய பணியை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிவு எவ்வாறு இருந்தாலும், தொழிலாள வர்க்கம் தன்னுடைய உரிமைகளைக்
காத்தலும், மேலும் போருக்கான தயாரிப்புக்களை முறியடிப்பதும், ஒரு புதிய முன்னோக்கின் மற்றும் மிக உயர்ந்த
மட்டத்திலான அரசியல் வர்க்க நனவின் வளர்ச்சியில்தான் தங்கியிருக்கிறது. வரும் எட்டுமாதங்களிலும் இதை அடைவதற்கு
நாம் போராடுவோம்.
Notes:
1 P. 13
2 The End of Reform: New deal Liberalism in Recession and War (New York,
1995), p. 224.
Top of
page
|