World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைFinal public meeting for SEP election campaign in Sri Lanka இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் 25 March 2004 இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), அதன் தேர்தல் பிரச்சாரத்தின் முடிவாக கொழும்பில் பொதுக்கூட்டமொன்றை மார்ச் 29 அன்று நடத்தவுள்ளது. இலங்கைத் தேர்தல் விதிமுறைகளின் கீழ், சகல பகிரங்க பிரச்சாரங்களும் வாக்குபதிவு ஆரம்பிக்கபடுவதற்கு 72 மணித்தியாலத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டமானது சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் கோட்பாடுகளையும், தொழிலாள வர்க்கத்திற்கான அதன் முன்னோக்கையும் தெளிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தின் மைய விடயம் அனைத்துலக வாதத்திற்கான போராட்டமாகும். சோசலிச சமத்துவக் கட்சியானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை, ஆசியா, ஆபிரிகா, லத்தீன் அமெரிக்கா மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்படுத்துவதன் மூலம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோள எதிர்த்தாக்குதலை அபிவிருத்தி செய்யப் போராடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி, தீவின் வடக்கு கிழக்கில் இருந்து சகல அரசாங்கத் துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தினையின்றியும் வெளியேற்றப்பட வேண்டும் என கோருகிறது. அதேவேளை, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக, தொழிலாளர் வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் --அவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர்களானாலும் சரி-- சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே, 20 வருடகால அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான ஒரு நம்பிக்கையானதும் முன்னேற்றகரமானதுமான நிலமையை அடைய முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி தெளிவுபடுத்துகிறது. கடந்த சில வாரங்களாக தொழிற்சாலைகள், தொழிலாளர் குடியிருப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பிரச்சாரங்களை முன்னெடுத்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள், இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள நிலைமைகள் சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளின் பிரதிகளை பத்தாயிரக்கணக்கில் விநியோகித்தனர். சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் எமது ஆய்வுகள் மற்றும் முன்னோக்கு பற்றி கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளரும் உ.சோ.வ.த சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பனருமான விஜே டயஸ் பிரதான உரையாற்றுவார். டயஸ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் 23 வேட்பாளர்களுக்கும் தலைமை வகிக்கின்றார். சோ.ச.க வின் அரசியல் குழு உறுப்பினரும் வேட்பாளருமான நந்த விக்கிரமசிங்க கூட்டத்திற்கு தலைமை வகிப்பார். சோ.ச.க வேட்பாளர்களான விலானி பீரிஸ், எம்.தேவராஜா, பானினி விஜேசிரிவர்தன, பிரியதர்ஷன மெத்தவத்த மற்றும் எஸ்.ரி. சந்திரசேகரன் ஆகியோருடன் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டான அருன் குமாரும் உரையாற்றுவார். Venue: Hyde Park, Ibbanwela Junction, Colombo 2 Time: 4 p.m. Monday, March 29 நிகழிடம்: ஹைட் பார்க், இப்பங்வல சந்தி, கொழும்பு 2 காலம் : பிற்பகல் 4 மணி, திங்கட்கிழமை, மார்ச் 29 |