:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Libya confirms it "bought peace" with the US
அமெரிக்காவுடன் ''சமாதானத்தை விலைக்கு வாங்கியதாக'' லிபியா உறுதிப்படுத்தியது
By Steve James
11 March 2004
Back to screen version
சர்வதேச ராஜதந்திர முறை என்கிற களங்கம் நிறைந்த உலகில், உண்மை வெளிப்படுகிறபோது
அது வேண்டாத விருந்தாளியாக கருதப்படுகிறது. அந்த உண்மையானது, அரசியல் அதிகார வட்டாரங்களில் உருவாக்கியுள்ள
மோசடி மற்றும் பொய்கள் என்கிற மேகமூட்டத்தை கிழித்துக்கொண்டு அவர்கள் மறைத்து வைத்திருக்கின்ற உண்மையான நலன்களை
அம்பலத்திற்கு கொண்டு வந்துவிடுகின்றது.
பெப்ரவரி 25 ல் BBC
வானொலிக்கு பேட்டியளித்த லிபியாவின் பிரதமர் சுக்கிரி கானேம்
(Shukri Ghanem)
வாய் தவறி தனது அரசாங்கம் ''அமைதியை விலைகொடுத்து'' வாங்கிவிட்டது
என்று சொல்லிவிட்டார். 1988 ல் பான் அமெரிக்கன் 103 (Pan
Am 103) பயணிகள் விமானத்தை லோக்கர்பி என்ற இடத்தில் குண்டு
வைத்து தகர்த்தது, அல்லது 1984 ல் பிரிட்டிஷ் பெண் போலீஸ் அதிகாரி பிளட்சரை கொன்றது ஆகிய குற்றங்களை அவர்
ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அவர் வாய்தவறி வெளியிட்ட வார்த்தையானது ''சர்வதேச சமூகத்தில்'' லிபியா
இணைத்துக்கொள்ளப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்திலுள்ள தனி நீதிமன்றம், அமெரிக்கப் பயணிகள் விமானத்தில் குண்டு வைத்து தகர்த்ததாக
குற்றம்சாட்டப்பட்ட அல்துல் பாசட் அல்-மெகிரகிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பின்னர், சென்ற ஆண்டு ஆகஸ்டில்தான்
லிபியா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இதனை ஏற்றுக்கொண்டது.
இத்துடன் ''மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை'' ஒப்படைக்கிறோம் என்ற உறுதிமொழியும்,
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புஷ் நிர்வாகத்திற்கு உதவுவதற்கான உறுதியளிப்பும், லிபியா அரசாங்கத்திற்கு
சர்வதேச அளவில் புதிய மரியாதையை உருவாக்கியுள்ளது. பல பத்தாண்டுகளாக லிபியா மீது அமெரிக்காவும், பிரிட்டனும்
நடத்திய பல்வேறு தாக்குதல்கள் மற்றும் பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக அமைதியை கடைப்பிடிக்க
லிபியா உடன்பட்டதோடு, மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள அமெரிக்கா கொண்டிருக்கும் முயற்சிக்கு
ஒத்துழைப்பு வழங்கியுமுள்ளது.
1984 ல் லண்டனில் உள்ள லிபியா தூதரகத்திற்கு வெளியில், லண்டன் காவல்துறையில் பணியாற்றும்
அதிகாரி யுவோனே பிலெட்சர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். லிபிய அரசாங்கத்தின் எதிரிகள் அப்போது மும்மர்
கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த நேரத்தில் தூதரக கட்டடத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால்
பிலெட்சர் கொல்லப்பட்டார். மேலும் 10 பேர்கள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய பிரிட்டிஷ்
போலீசாருக்கும் லிபியாவின் தூதரக அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. லிபியா அரசாங்கம் திரிப்போலியில்
உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தைச் சுற்றி முற்றுகையிட்டதால் லண்டன் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் இரு நாடுகளின்
தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் திரும்ப நாட்டுக்கு அழைக்கப்பட்டனர். தூதரக உறவுகள் முறிந்தன.
நேட்டோவும், அமெரிக்காவும் லிபியா அரசாங்கத்தின் மீது மிகப்பெரும் அளவில் குறிவைத்து
நடவடிக்கைகளில் இறங்கிய நேரத்தில் இந்த நெருக்கடி தோன்றியது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட
மூலோபாயத்தின் ஒரு பகுதியாக லிபியா மீது அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்து வந்ததோடு, ஆயுதங்களுக்காக
தன்னைச் சார்ந்திருக்கும் நாடுகள் மீதும் இந்த நிர்பந்தங்களை கொடுத்து வந்தது. அடுத்த கட்டத்தில், கடாபி ஆட்சி
பாலஸ்தீனம் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் நடைபெற்றுவரும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட
ஆதரவு தந்து வந்ததால், லிபியாவை ஒரு ''தீண்டத்தகாத'' நாடாக அவர்கள் ஒதுக்கிக் தள்ளினார்கள்.
குறிப்பாக Pan Am 103
பயணிகள் விமானத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல பயங்கரவாத
தாக்குதல்களை லிபியா நேரடியாக தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. ஆரம்பத்தில் பாலஸ்தீன விடுதலைக்
குழுக்கள் மீது இந்த விமானத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டபோதும், 1991 ல் லிபியா மீது பொறுப்பு
சாட்டப்பட்டு 5 மில்லியன் மக்களைக்கொண்ட எண்ணெய் வளமிக்க இந்த நாட்டின் மீது ஐ.நா பொருளாதாரத் தடைகளை
விதித்தது.
இப்படி தனிமைப்படுத்தப்பட்டு, பொருளாதார அழிவை சந்தித்த கடாபி அரசாங்கம்,
1990 களில் தன்னை உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் இணைந்துக் கொள்ளவும் நாட்டின் எண்ணெய் தொழிற்துறைக்கு
அதிகம் தேவைப்பட்ட முதலீட்டு தடைகளை நீக்கவும் முயன்று வந்தது. 1999 ல் கடாபி லண்டன் பெண் போலீஸ் அதிகாரி
பிளட்சரது குடும்பத்திற்கு இழப்பீடுகளை வழங்கினார். லோக்கர்பி விமான வெடிப்பு தொடர்பான வழக்கை நடுநிலை
நாடான நெதர்லாந்தில் உள்ள சியஸ்ட்டில் (Zeist)
நடத்துவதற்கு சம்மதித்து இரண்டு லிபியா அதிகாரிகள் மீது குற்றம்
சாட்டுவதற்கும் கடாபி சம்மதித்தார். 1992 ல் ஐ.நா தடைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. பிரதானமாக
ஐரோப்பிய முதலீடுகள் சிறுதுளிகளாக லிபியாவிற்கு வரத் துவங்கின. அத்துடன் ஐரோப்பிய தொழிற்துறை பிரமுகர்களும்
வந்தனர்.
சியஸ்ட் விசாரணைகளும் அதற்கு பின்னர் தொடர்ந்த மேல் முறையீட்டிலும் லோக்கர்பீ
தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் பலவீனமான அடிப்படையில் இருப்பது தெளிவாயிற்று. அதில் அல் மெக்ராகி மட்டுமே
தண்டிக்கப்பட்டார். அந்த நேரத்தில் லோக்கர்பி விமான வெடிப்பில் இறந்து போனவர்கள் குடும்பங்கள் அனைத்திற்கும்
இழப்பீடு வழங்க லிபியா முன் வந்தது. அதற்கு எல்லா பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்று லிபியா
நிபந்தனை விதித்தது. கடந்த கோடைக்காலத்தில் ஐ.நா விற்கு லிபியா அனுப்பிய கடிதத்தில் தனது ஏஜெண்டுகளின்
நடவடிக்கைகளுக்கான ''பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதாகவும்'' பயங்கரவாதத்தை கைவிடுவதாகவும் அறிவித்தது.
ஜோர்ஜ் W.
புஷ்ஷின் 'தீய அச்சு'' நாடுகளில் லிபியா சேர்க்கப்பட்டிருந்தாலும் 2001
செப்டம்பர் 11 க்கு பின்னர் கடாபி அரசாங்கம் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் மத்திய கிழக்கில் அவர்களது போர்
முற்றுகைக்கு தீனிபோடுகின்ற பல மதிப்புமிக்க புலனாய்வு தகவல்களை வழங்கி வந்தது. 1970 களின் தொடக்கத்தில் அயர்லாந்து
குடியரசு இராணுவத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் பற்றிய எல்லா புலனாய்வு விவரங்களையும் பிரிட்டனின் புலனாய்வுத்துறைக்கு
லிபியா கொடுத்தது.
கடந்த செப்டம்பர் சம்பவங்கள் இந்த போக்கை மேலும் முடுக்கிவிட்டன. கடாபியும்
அவரது முதலீட்டைச் சார்ந்த வர்த்தக தலைவர்களும் லண்டனுக்கும் வாஷிங்டனுக்கும் அவர்களுக்கு தேவைப்பட்ட அதிக
மதிப்புள்ள சேவைகளை தர முன்வந்தனர். ''பேரழிவுகரமான ஆயுதங்களையும்'' இவர்கள் துறந்தனர். புஷ் மற்றும்
பிளேயரின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு'' இது உற்சாகம் வழங்கியது. அந்த நேரத்தில் இரண்டு
தலைவர்களும் உள்நாட்டில் எளிதில் கையாள முடியாத யுத்தத்திற்கான எதிர்ப்பை எதிர்கொண்டனர். லிபியாவின்
அறிவிப்பை, ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துதவற்கு இருவரும் பயன்படுத்திக்கொண்டனர். ''முரட்டு
ஆட்சிகளுக்கு'' ஆயுதங்களை துறக்க அழுத்தங்களும் கொடுக்கப்பட்டன. ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA)
ஆகியவற்றின் ஆய்வாளர்கள் லிபியாவிற்கு அழைக்கப்பட்டு அங்கு சாதாரண ஆயுதங்கள் கைவிடப்படுவதை பார்வையிடச்
செய்தனர். 2004 ஜனவரி இறுதியில் அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக 25 தொன்களுக்கு மேற்பட்ட எடையுள்ள
''ஆயுத திட்டப் பாகங்களை'' லிபியா ஒப்படைத்தது.
லிபியாவின் இந்த நகர்வு குறிப்பாக ஈரானையும், சிரியாவையும், தனிமைப்படுத்த
உதவியுள்ளது. இவ்விரு நாடுகளும் தங்கள் வசமுள்ள அணுசக்திகளை சோதனை இடுவதற்கு ஐ.நா மற்றும்
IAEA அமைப்புக்களுக்கு
அனுமதி வழங்க அமெரிக்கா விடுக்கும் கோரிக்கைகளை ஏற்க மறுத்து தயக்கம் காட்டி வருவதை லிபியாவோடு
ஒப்புநோக்கி உலக ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன. அமெரிக்க ஆக்கிரமிப்பின் அடுத்த இலக்குகள் ஈரான்
மற்றும் சிரியாவாக இருக்கக்கூடும். தேவைப்படுகிற நேரத்தில் புதிய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு புஷ்
நிர்வாகத்திற்கு சரியான ''விசை'' லிபியா மூலம் கிடைத்திருக்கிறது.
லிபியாவின் உதவிக்கு பதிலளிக்கின்ற வகையில் அமெரிக்கா தடைகளை நீக்கியுள்ளதுடன் மற்றும்
அமெரிக்க குடிமக்கள் லிபியாவிற்கு பயணம்செய்ய அனுமதியும் வழங்கியுள்ளது. அத்தோடு, லிபியாவை அமெரிக்க
அரசுத்துறை பாராட்டியுள்ளது. 1969 ல் கடாபி பதவிக்கு வந்த பின்னர் முதலாவது அமெரிக்க இராணுவ விமானம்
அமெரிக்க காங்கிரஸ் குடியரசுக் கட்சி உறுப்பினர் கர்ட் வெல்டன் தலைமையில் திரிப்போலி வந்து சேர்ந்தது.
''தங்களது எதிர்பார்ப்பிற்கு மேலாக'' லிபியாவின் கொள்கைத் தந்திரோபாயம் மிகவும் ''ஆர்வமூட்டப்பட்டும்,
மகிழ்ச்சியூட்டப்பட்டும்'' இருப்பதாக தூதுக்குழுவின் தலைவர் பெருமைப்பட்டுக்கொண்டார்.
லிபியாவின் தூதர்களும் பரபரப்பாக பணியாற்றத் தொடங்கியுள்னர். லிபியா வெளியுறவு
அமைச்சர் அப்துல் ரஹ்மான் முஹமது சால்கம் லண்டனுக்கு சென்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ராவை
சந்தித்தார். ''எப்போதுமே லிபியாவை நல்ல நாடாகவே மதித்து நோக்குவதாக'' ஸ்ட்ரா குறிப்பிட்டார். கடந்த
காலத்தில் ''கடினங்கள்'' நிலவியது குறித்தும் வருத்தம் தெரிவித்தார். அத்தோடு கடாபி மற்றும் பிரதமர் டோனி
பிளேயர் சந்திப்பிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடாபியை ''வெறிபிடித்த நாய்'' என்று வர்ணித்து வந்த பிரிட்டிஷ் பத்திரிகைகள் தற்போது
லிபியா ஆதரவு நிலைக்கு திரும்பிவிட்டன. ரூப்பார்ட் முர்டோக்கின் (Rupert
Murdoch) சன் பத்திரிகை பிளேயர் மற்றும் கடாபி சந்திப்பிற்கான
சாத்தியக்கூறுபற்றி கருத்து தெரிவித்துள்ளது. ''சமாதானத்திற்கு இதுதான் விலையென்றால் அது அப்படியே இருக்கட்டும்''
என்று இப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
F டைம்ஸ் பத்திரிகையில் சைமன் ஜென்கின்ஸ் என்பவர் இதனை தொலை
நோக்கோடு எழுதியுள்ளார். ''கடாபி, வாஷிங்டன் வலுவான நாடு என்பதை உணர்ந்து இப்படி மாறவில்லை. லிபியாவும்
லண்டனும் திடீரென்று பலவீனமடைந்து விட்டதாக அவர் கருதுகிறார். அவர்கள் உலகில் எந்த இடத்தில் அச்சுறுத்துகின்ற ஆயுதங்கள்
இருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்து நீக்கிவிட தீவிரமாக முயன்று வருகின்றனர்'' என்று எழுதியுள்ளார்.
சுக்கிரி கானேமுடைய (Shukri
Ghanem) விமர்சனங்கள் வெளிவந்திருக்கிறது. முன்னாள் பொருளாதார
நிபுணரும் OPEC
ன் முன்னாள் தலைவருமான இவர், லிபியா அரசாங்கத்தில் தனியார்மயமாக்கல் திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டவராவர்.
இவர், BBC
யின் செல்வாக்கு மிக்க டுடே (Today)
வானொலி நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில், பெண் போலீஸ் அதிகாரியான
பிலேட்சர் மடிந்ததற்கு காரணமாக இருந்த குண்டு லிபியன் தூதரகத்திலிருந்து வந்ததா? என்று சந்தேகத்தை எழுப்பும்
கருத்துக்களை ஏற்றுக்கொண்டார். சமாதானத்தை விலைக்கு வாங்குவது எளிது என்று லிபியா கருதியதால் லாக்கர்பியில்
இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடுகள் வழங்க சம்மதித்ததாகவும் குறிப்பிட்டார். அவரது கருத்தை லிபியாவின் வெளியுறவு
அமைச்சர் சால்கம் (Shalgam)
ஏற்றுக்கொண்டார். ''லிபியா அரசாங்க அதிகாரிகளது நடவடிக்கைகளுக்கு பொறுப்பு
ஏற்றுக்கொண்டோமே தவிர பான் அமெரிக்கன் பயணிகள் விமானத்தை குண்டுவைத்து தகர்த்ததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்று''
அல் ஜஸிரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.
இப்படி சங்கடமளிக்கின்ற வகையில் பகிரங்கமாக கானேம் ஒப்புக்கொண்டிருப்பது பானாம்
103 விமானத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டது
தொடர்பான ஆழமான இன்னும் பதிலளிக்கப்படாத பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தப் பேட்டி உலகம் முழுவதும்
உடனடியாக எதிரொலித்தது. ஆனால் அது ஒருநாளில் பரபரப்போடு அடங்கிவிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம்
விமர்சனங்களை மிகைப்படுத்தாமல் இதனை அமுக்கிவிட்டது. லாக்கர்பி சம்பவம் தொடர்பாக பொறுப்பை
ஏற்றுக்கொள்ளும் பல்வேறு அறிக்கைகளையும் லிபியா வெளியிட்டிருப்பதாக சமாதானம் கூறியது.
அத்துடன், இதற்குப்பின்னர் 24 மணி நேரத்திற்குள் லிபியாவின் செய்தி நிறுவனமான
ஜனா (Jana)
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ''அண்மையில்
முரண்பாடான அல்லது சந்தேகங்களை கிளப்பும் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருப்பது வருந்தத்தக்கது மற்றும் அது
சரியானதல்ல'' என்று இச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. 2003 ஆகஸ்டில் ஐ.நா விற்கு லிபியா அனுப்பியிருந்த
கடித வாசகத்தை ஜனா மீண்டும் பிரசுரித்திருந்தது. அந்த வாசகத்தில் ''லிபியா இறையாண்மை கொண்ட ஒரு நாடு
என்ற முறையில் பான் அமெரிக்கன் 103 விமானம் மீதான தாக்குதல் தொடர்பாக சந்தேகத்திற்குரியவர்கள் என்று
குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரை நீதியின் முன் நிறுத்துவற்கு வசதி செய்திருக்கிறது. மற்றும் தனது அதிகாரிகளின்
செயல்களுக்கு பொறுப்பேற்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் அரசாங்கம், லிபியாவை மீண்டும் சர்வதேச அரங்கில் சேர்ந்துக்
கொள்வதற்கான, ஒரு சிறிய சங்கடமான பாதையை ''blip"
என்று வர்ணித்தது. உடனடியாக அமெரிக்கா தனது மக்கள் பயனம் செய்வதற்கான தடையை நீக்கியதுடன்,
காலப்போக்கில் பொருளாதாரத் தடைகளையும் நீக்குவதாக அறிவித்தது. இதனால், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின்
அதிகாரிகள் திரிப்போலிக்கு படையெடுத்தனர்.
அமேரதா ஹேஸ்,
மராதொன் மற்றும் கொனொகொ (Amerada
Hess, Marathon and Conoco) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள்
லிபியாவின் கணிசமான எண்ணெய் வளத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கும், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிராக ஈடுபட
வேண்டுமென்பதற்காகவும் லிபியாவுடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு அமெரிக்காவை நிர்பந்தித்துள்ளன.
கானேமுடைய விமர்சனங்கள் மற்றும் ஐ.நா விற்கு எழுதிய கடிதத்தில் காணப்படும்
வாசகத்தில் உள்ள தெளிவில்லாத நிலை ஆகியவற்றால், பான் அமெரிக்கன் 103 விமானத் தாக்குதலுக்கு திட்டமிட்டது
என்ற குற்றச்சாட்டை லிபியா மறுப்பதற்கு வழிசெய்கிறது. லிபியா அரசாங்கம் உலகப் பத்திரிகைகளுக்கு சொல்வதற்கும்
தனது மக்களுக்கு சொல்வதற்குமிடையிலான முரண்பாட்டிற்கு இடமளித்திருக்கிறது.
லிபியாவில் ஊடகங்கள் மீது இன்னமும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் நீடிக்கவே
செய்கின்றன. அரசாங்கத்தின் ஊடக ஏகபோக அதிகாரமானது செயற்கைக் கோள், தொலைக்காட்சி மற்றும் இணையத்
தளம் ஆகியவற்றில் கணிசமாக ஊடுருவல்களை செய்து வந்தாலும், உள்நாட்டில் அல் மெக்ராஹி (al-Megrahi)
எடுக்கிற நிலைப்பாட்டைத்தான் மேற்கு நாடுகள் அப்படியே எடுத்துக்
கொள்வதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஏதாவது ஒரு நிலைப்பாடு விலகிச்செல்லுமானால் சாதாரண
லிபியா மக்களுக்கு உண்மை புரிந்துவிடும். இப்போது லிபியா அரசாங்கம் தனது செயற்கைகோள் தொலைக்காட்சியை
கிளாஸ்கோவில் (Glasgow)
தனியாக அமைத்து கடாபியின் சிறப்புக்களை லிபியா மக்களுக்கு இடைவிடாது
கூறிவருகிறது. இதிலிருந்து விலகிக்செல்வதானது தற்கொலை முயற்சியாகிவிடும். எண்ணெய், சுற்றுலா, விவசாயத்திற்கான
முதலீடுகள் மற்றும் சர்வதேச செல்வாக்கு என்பன லிபியாவின் ஆளும் தட்டுக்களால் கடாபி ''பெரும் தலைவராக''
அரவணைக்கப்படுகிறார். |