WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆபிரிக்கா
Zimbabwe government arrests coup plotters
ஜிம்பாப்வே அரசாங்கம் ஆட்சிக்கவிழ்ப்புச் சதிகாரர்களை கைது செய்தது
By Chris Talbot
18 March 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஜிம்பாப்வேயில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 64-பேர் அடங்கிய
கூலிப்படையினர் கைது செய்யப்பட்டிருப்பது இந்த நடவடிக்கைகளில் மேற்கு நாட்டு புலனாய்வு அமைப்புகளின்
தொடர்புபற்றிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மார்ச் 7-ல், அந்த விமானம்
Equatorial Guinea நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில்
ஈடுபடுவதற்காக சென்ற வழியில் ஹராரே
விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் வந்த குழுவின்
தலைவர்களில் ஒருவரான சைமன் மேன், ஜிம்பாப்வேயில் அந்த விமானத்தை வேறு இரண்டு நபர்களுடன்
சந்தித்தார். அப்போது ஜிம்பாப்வேயின் பாதுகாப்பு தொழிற்துறை இயக்குநரான ஜிம்பாப்வேயின் இராணுவ அதிகாரி
கேர்னல் Tshinga Dube
உடன் 1,80,000 டாலர்கள் பெறுமதியான AK 47
துப்பாக்கிகள்,
பீரங்கிகள் மற்றும் வெடிபொருள்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு பேரம் நடத்தியதாக
நினைத்துக்கொண்டார்.
Equatorial Guinea - நடைபெற்ற
ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி மேற்கு ஆபிரிக்காவில் நடைபெற்ற இதுபோன்ற முயற்சிகளின் தொடர் நடவடிக்கைகளில்
சமீபத்திய ஒன்றாகும். அந்நாட்டின் கடற்பகுதியில் ஏராளமான எண்ணெய் வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை
தொடர்ந்து அக்கறைக்குரியதாக ஈர்க்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டுமே மாரிடானியா மற்றும் சாடோமே
மற்றும் பிரின்ஸிபி ஆகிய பகுதிகளில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது அதேபோல
Guinea Bissau-
வில் வெற்றிகரமாக ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது.
ஜிம்பாப்வேயில் கைது செய்யப்பட்ட நேரத்திலேயே
Equatorial Guinea -தலைநகரான
Malabo-
வில் 15-கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது தலைவரான
Nick du Toit
அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிப்பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவர்
சொன்னார்: ''ஆட்சித் தலைவரை கொலை செய்வது எங்களது நோக்கமல்ல, அவரை ஸ்பெயினுக்கு கடத்தி சென்றுவிட்டு
அங்கு எங்காவது தஞ்சம் புகவைப்பது, பின் உடனடியாக இப்போது வெளிநாட்டில் புலம்பெயர்ந்த
Severo Moto
அரசாங்கத்தை நிறுவி விடுவ ஆகும். இந்த குழு மூலோபாய இலக்குகளான ஜனாதிபதி மாளிகை, இராணுவ பாசறைகள்,
போலீஸ் சாவடிகள் மற்றும் அரசாங்க அமைச்சர்கள் இல்லங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்ட இருந்தது.''
Equatorial Guinea
-ன் ஜனாதிபதியான
Teodoro Obiang Nguema-
வின் பிரதான எதிரி Moto
தற்போது ஸ்பெயின் நாட்டில் புலம்பெயர்ந்த நிலையிலிருக்கிறார்.
ஜிம்பாப்வே உள்துறை அமைச்சரான
Kembomohadi,
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் உளவு அமைப்புக்கள், கூலிப்படையினரை ஆதரிப்பதாக குற்றம்
சாட்டினார். "மேற்கத்திய உளவுத் துறையினர் எங்களது நாட்டு படைத் தளபதிகளை எதிர்ப்பு தெரிவிக்க
வேண்டாம் என்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களோடு ஒத்துழைக்கவேண்டும் என்றும் அவர்களை திருப்புவதற்கு முயன்று
வருகிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஜிம்பாப்வேயை ஆபிரிக்காவிலேயே தீண்டத்தகாத முதல் நாடாக அமெரிக்கா, பிரிட்டன்
மற்றும் மேற்கு நாடுகள் நடத்தி வருகின்றன. எனவே ஜிம்பாப்வே அரசாங்கம் வெள்ளைக்கார கூலிப்படையினரை
கைது செய்வதை முக்கிய கடமையாகக் கொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 20-பேர் தென்னாபிரிக்காவை
சேர்ந்தவர்கள், 18-பேர் நமிபியா நாட்டினர், 23-பேர் அங்கோலா நாட்டைச் சேர்ந்தவர்கள், இருவர்
காங்கோ ஜனநாயகக் குடியரசை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் ஜிம்பாப்வேகாரர் தென்னாபிரிக்கா பாஸ்போட்
வைத்திருக்கிறார். இது ஜிம்பாப்வேக்கு ஒரு பிரச்சார வெற்றி. மேற்கு நாட்டு அராசங்கங்கள் தங்களுக்கு சம்மந்தமில்லை
என்று அறிவித்திருக்கின்றன. BBC
Mohadi
ன் குற்றச்சாட்டை ''போலியானது'' என்று வர்ணித்திருக்கிறது.
என்றாலும், Du Toit,
மேன், மற்றும் ஜிம்பாப்வே குழுவின் மற்றொரு தலைவரான
Simon witherspoon
ஆகியோர் மேற்கு நாடுகளின் ஆதரவோடு கூலிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்கள். சவுத்ஆபிரிக்கன்
மெயில் மற்றும் கார்டியன் "முக்கிய தலைவர்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்புகளோடு
தொடர்புகள் கூட கொண்டிருக்கின்றனர் " என ஒப்புக்கொண்டிருக்கிறது.
மேன் மற்றும்
Witherspoon இருவரும் கூலிப்படை அமைப்பான
Exectiues out comes (EO)
என்ற அமைப்பை இன்றைய MPLA
அங்கோலா அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள்
உருவாக்கியதாகும். 1990-களில் UNITA
புரட்சிப்படைகளுக்கு எதிராக போரிட்டு அந்தப் போரில்
MPLA வெற்றி
பெறுவதற்கு பிரதான பங்களிப்பு செய்தவர்கள். Mann
ஒரு முன்னாள்
SAS அதிகாரி
பிரிட்டிஷ் இராணுவத்தோடு நெருக்கமான உறவு உள்ளவர்
Sandline என்ற சர்வதேசக் கூலிப்படையை நிறுவியவர்.
அந்தக்குழு கிளர்ச்சிப் படைகளுக்கெதிராக Sierra
Leone அரசாங்கத்திற்கு ஆதரவாக போராடியது ஆகும்.
2000-த்தில் Sandline
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு பெற்றது என்ற தகவல் அம்பலத்திற்கு வந்ததும் அவர்கள் கைவிடப்பட்டனர்.
1999ல் கூலிப்படையினர் நடவடிக்கையில் இறங்குவதைத் தடை செய்யும் மசோதா வந்த பின்னர் தென்னாபிரிக்கா
EO-வை
தடை செய்தது.
தற்போதுள்ள கூலிப்படையினரில் மிகப்பெரும்பாலோர்
EO வில் இருந்திருக்கலாம்.
அதற்கும் முன்னர் இன ஒதுக்கல் கொள்கையை கடைபிடித்துவந்த தென்னாபிரிக்கா அரசாங்கம் தனது இரகசிய நடைவடிக்கைகளுக்காக
அங்கோலா மற்றும் நமிபியா நாடுகளில் பயன்படுத்திய பயங்கர 32-கமண்டோ குழுவில் இருந்தவர்களாக
இருக்கக்கூடும். Mail and Guardian
தகவலின்படி du Toit
தென்னாபிரிக்காவின் இராணுவ சிறப்புப் படையின் உறுப்பினராக இருந்தவர். தற்போது தென்னாபிரிக்காவில் செயல்படும்
Military Technical Services (MTS) என்ற
நிறுவனத்தின் டைரக்டர் ஆவார். இதன் நிறுவனர் தாய் மினார், சிஐஏ- வுடன் நெருக்கமான உறவு கொண்டவர்,
2001-ல் மர்மமான சூழ்நிலையில் இறந்துவிட்டார்.
Equatorial Guinea -ன்
முக்கியத்துவம் அதன் மிகப்பெரும் எண்ணெய் வளத்தில் அடங்கியிருக்கிறது. 500,000- மக்களுக்கும் குறைந்த மிகச்சிறிய
நாடு, தென்னாப்பிரிக்கா கடற்கரைக்கும் Gabon
மற்றும்
Cameroon க்கும் நடுவில் உள்ளது. தற்போது
Sub-Sahara
ஆப்பிரிக்காவில் நைஜீரியா மற்றும் அங்கோலாவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக தினசரி
200,000 பீப்பாய்களுக்கும் மேலாக எண்ணெய் உற்பத்தி செய்துவருகிறது. 1990-களின் மத்தியில், தலைநகர்
Malabo
பகுதியில் உள்ள Bioko
தீவில் முதலில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது அதற்குப்பின்னர்
Equatorial Guinea -உலகளவில்
இல்லாவிட்டாலும், ஆப்பிரிக்காவிலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டுள்ள பொருளாதாரமாக ஆகிவிட்டது. அதன்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 70-சதவீதமாகும்.
Sub-Sahara ஆபிரிக்காவில் அமெரிக்க முதலீடுகளில்
நான்காவது இடத்தைப்பெற்றிருக்கிறது. Exxon Mobil
மற்றும் Chevron Texaco
உள்பட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.
உலகிலேயே மிக கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் இரகசிய நடவடிக்கை ஆட்சி
ஒன்று Equatorial Guinea
-ல் ஆட்சி புரிந்து வருகிறது. ஊடகங்கள் முழுவதும் அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டில் உள்ளன. மனித உரிமைகள் மீறல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. சென்ற ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு
சதியில் சம்மந்தப்பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 68- எதிர்கட்சிக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும்
இந்த நடவடிக்கைகளில் அடங்கும். 2002- தேர்தல்கள் பல கட்சி தேர்தல் என்று வர்ணிக்கப்பட்டாலும் ஜனாதிபதி
Teodoro obiang Nguema
அப்பட்டமான மோசடித்தேர்தலில் ஏறத்தாழ 100-சதவீத வாக்குகளையும் பெற்றார். 150-ஆண்டுகள் ஸ்பெயின்
நாட்டு ஆட்சிக்குப்பின்னர் 1968-ல் Equatorial
Guinea -க்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதற்குப்பின்னர்
Nguema
குடும்பம்தான் ஆண்டு வருகிறது. ஜனாதிபதி Francisco
Nguema 1970-களில் மேற்கொண்ட மனித உரிமைகள் மீறல்
நவடடிக்கைகளால் அந்நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தப்பி ஓடினர். அல்லது கொல்லப்பட்டனர்.
1979-ல் அவரது மைத்துனரும் இன்றைய ஜனாதிபதியுமான ஒபியாங் நிகாமா பதவியேற்றார்.
மேற்கு நாட்டு புலனாய்வு அமைப்புக்கள்
Nguema பதவி
நீக்கத்தில் சம்மந்தப்பட்டிருந்தன என்று நம்புவதற்கு எல்லாவிதமான அடிப்படைகளும் உண்டு.
Africa Confidential
தகவலின்படி, அவர் தனக்குப் பதிலாக தனது மூத்த மகன்
Teodorin-ä
தயாரித்து வந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் இராணுவ
தளபதியுமான Agustin Ndong ona
உட்பட இராணுவ அதிகாரிகள் அந்தத்திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தனர். ஏனெனில் அவரது மகன் நிலையில்லாதவர்,
லொஸ் ஏஞ்சல்ஸில் அவர் நடவடிக்கைகள் விரும்பத்தகாதவை என்று.
Ndong கைது செய்யப்பட்டு
சென்ற ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்பதற்காக சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார்.
இறுதியாக ஸ்பெயினுக்கு தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார்.
Africa Confidential ஆசிரியர்
Patrick Smith, ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் அஸ்னார்
உடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை, எதிர்கட்சித்தலைவர்
Severo Moto
நடத்தினார் என்றும் அவர் வெற்றிகரமாக ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தி முடித்தால் ஸ்பெயின் அங்கீகரிக்க வேண்டுமென்று
கேட்டுக்கொண்டதாகவும் கூறுகிறார். Moto
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு Equatorial
Guinea -ஐ திறந்துவிடுவதன் மூலம் இதுவரை எண்ணெய்வள பூரிப்பை
பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க கம்பெனிகளோடு ஐரோப்பிய நிறுவனங்களையும், அனுமதிக்க விரும்பி
இருக்கக்கூடும்.
பிரிட்டனின் கார்டியன் மற்றும் ஒப்சேர்வர் பத்திரிகைகள்,
Equatorial Guinea -தகவல்துறை அமைச்சர்,
Moto லண்டனை
அடிப்படையாகக் கொண்ட லெபனான் வர்த்தகர் இலை காலில் உடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார், அவர்
ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு 5-மில்லியன் டாலர்களை வழங்கினார் என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்ததாக
கூறியதை மேற்கோள் காட்டியுள்ளன. காலில் உடன் அவருக்குள்ள உறவு,
Mann- க்கு
சொந்தமான Logo Logistics
மற்றும் காலிலுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் ஆசிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்குழு ஆகியவற்றுக்கு
இடையே உள்ள உறவுகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேயில் தரையிறக்கப்பட்ட விமானம்
Logo Logistics
நிறுவனத்திற்கு சொந்தமானது.
Asian Trading, Mann-
னோடு ஒரு பேரம் செய்து கொண்டிருக்கிறது. அந்த பேரத்தில் கண்டுள்ள நிபந்தனைகளில் ஒன்று "மேற்கு ஆபிரிக்காவில்
வர்த்தக பாதுகாப்புத்திட்டங்கள், மீன்பிடி திட்டங்கள், சுரங்க நடவடிக்கைகளுக்காக 5-மில்லியன் டாலர்கள்
ஒதுக்க வகைசெய்வதாக" Observer
கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை
Calil மறுத்திருக்கிறார்.
அவர் நைஜீரியாவில் Abacha
ஆட்சியில் வர்த்தகம் செய்ததில் பெரும் செல்வம் குவித்தவர்.
France எண்ணெய்
நிறுவனமான Elf-ன்
துணை நிறுவனம் ஒன்றின் மூலம் நைஜீரிய ஆட்சிக்கு சட்ட விரோதமாக கமிஷன்களை வழங்கினார், என்பதற்காக பிரான்சு
நாட்டு போலீஸார் அவரை 2002-ல் கைது செய்தனர். புலன்விசாரணைத் தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டிருந்தாலும் மேல்முறையீட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். பிரிட்டனின் உயர் அதிகார வட்டாரங்களில்
Calil
தொடர்புள்ளவர் என்று தோன்றுகிறது.
தென்னாபிரிக்க கூலிப்பபடையினர் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ஜிம்பாப்வேக்கும்
Equatorial Guinea -விற்கும் பயணம் செய்ய அனுமதித்து,
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு மிகப்பெருமளவில் விளம்பரம் கொடுத்து அம்பலப்படுத்தியது. தனது நாட்டை
நோக்கி ஒரு கூலிப்படைக் குழு வந்து கொண்டிருப்பதாக தென்னாபிரிக்கா அரசாங்கம் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி
Obiang Nguema
அரசாங்க தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதற்கு பின்னர் தென்னாபிரிக்கா அரசாங்கத்தின் சார்பில் குரல்தரவல்ல
ஒருவர் அந்தத்தகவலை உறுதிப்படுத்தினார்.
Equatorial Guinea -ல் கைது செய்யப்பட்டுள்ள
15-பேர் மீது "பகிரங்கமாக நியாயமான விசாரணை" நடத்துவற்கு உதவ தென்னாபிரிக்கா சம்மதம் தெரிவித்திருக்கிறது.
ஜிம்பாப்வேயைத் தொடர்ந்து
Equatorial Guinea -ல் கைது நடவடிக்கைகள் நடைபெற்றிருப்பதால்
தென்னாபிரிக்க புலனாய்வு அதிகாரிகள் Logo
Logistics விமானம் பறந்து செல்வதை தடுத்து நிறுத்தாமல்
சந்தடியில்லாமல் அனுமதித்துவிட்டனர் என்று எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அந்த விமானம் ஜோஹென்னஸ்பர்க்கிலிருந்து
புறப்படும்போதே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தென்னாபிரிக்கா அதிகாரிகளுக்கு முழுமையாக தெரிந்திருக்கும்.
அந்த விமானம் Pretoria
அருகிலுள்ள wonderboom
விமான நிலையத்தில் தங்கிவிட்டு தென்னாபிரிக்காவின் வடக்கிலுள்ள
Polokwane நகருக்கு
பறந்து சென்றது. அங்கு 63-பயணிகளை ஏற்றிக்கொண்டு
Harare புறப்பட்டது. இதிலிருந்து என்ன முடிவு செய்ய முடிகிறதென்றால்
தென்னாபிரிக்கா அரசாங்கமே இத்தகைய "ஆட்சி மாற்ற" முறைகளை எதிர்க்கிறது என்பதை மேற்கு நாடுகளுக்கு
தெளிவுபடுத்திவிட்டது என்பதுதான். ஏனெனில் தென்னாபிரிக்கா
ANC அரசாங்கமும்
திட்டவட்டமாக அதன் பக்கத்து நாடான ஜிம்பாப்வேயும் அத்தகைய வெளிநாட்டு தலையீட்டிற்கு இலக்காகக் கூடும்
என்று அச்சம் ANC
அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
Top of page |