World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India reacts with dismay to recent US legislation on outsourcing

வெளிநாடுகளுக்கு ஒப்பந்தம் கொடுப்பதைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டத்திற்கு இந்தியா கலக்கத்துடன் எதிர்த்தாக்கு

By Kranti Kumara
16 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

வெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்கள் அல்லது அரசாங்கவேலைகளை அளித்திடல் இவற்றை தடைசெய்வதை இலக்காகக் கொண்ட ஏராளமான அமெரிக்கச் சட்ட நடவடிக்கைக்கு இந்தியாவில் உள்ள ஆளும் செல்வந்தத் தட்டும் ஊடகமும் பெரும் ஏமாற்றமும் சீற்றமும் நிறைந்த கலவைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. கொலொரோடோ, விஸ்கான்சின், இண்டியானா, மின்னிசோட்டா போன்ற மாநிலங்கள் அத்தகைய வேலை ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை செய்யும் சட்டவரைவை அறிமுகப்படுத்தியுள்ளன. அண்மையில், அமெரிக்க செனட் மன்றம் தனியார் நிறுவனங்கள் நடுவண் அரசாங்க ஒப்பந்தங்களை வெளிநாடுகள் மூலம் நிறைவேற்றுவதை தடைசெய்யும் சட்டவரைவைக் கொண்டு வந்துள்ளது. இந்நடவடிக்கை, ஒரே நேரத்தில் பல செயல்கள் செய்கின்ற $328 பில்லியன் நிதி ஒதுக்கு மசோதாவுடன் இணைந்ததாக, ஓகையோ மாநில செனட்டர் ஜோர்ஜ் வாயினோவிச்சினால் ஆதரிக்கப்பட்ட, புஷ் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆண்டில் ஒரு உந்துதல் கொடுக்கும் வகையில் அமைந்த ஒரு வெளிப்படை முயற்சியாகும். தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்னும் முறையில், ஜனநாயகக் கட்சியினரும்"அமெரிக்கர்களுக்கே வேலை" என்ற சட்டவரைவை செனட் மன்றத்தில் அறிமுகம் செய்துள்ளனர்; இதன்படி பெருநிறுவனங்கள் தங்கள் பணிகளை வெளிநாடுகளுக்கு மாற்றுமுன் வேலை செய்பவர்களுக்கும், பொதுச்சமூகங்களுக்கும் எச்சரிக்கை முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டுள்ளன.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டவரைவுகள் எதுவுமே, ஒப்புதலுக்குத் தேவையான வாக்குகளை இன்னும் பெறமுடியவில்லை. பொதுமக்களிடையே தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைகள் இழப்புப் பற்றி பெரும் கூச்சல் எழுந்துள்ளபோதிலும், இந்த ஆதரவற்ற நிலை உட்குறிப்பாக அமெரிக்க பெருநிறுவனங்கள் எவ்வாறு சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஆதரவைக் கொண்டிருக்கின்றன என்பதைப் புலப்பபடுத்துகின்றன. இதுவரை வெற்றிகண்டுள்ள ஒரே சட்டவரைவு செனட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒன்றுதான். இதுவும் இந்த நிதியாண்டு, செப்டம்பர் 30, 2004 ல் காலாவதியாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் சொற்ஜாலத்தை நிகழ்த்தினாலும், இரண்டு கட்சிகளிலும் உள்ள முக்கிய பிரிவினர், வெளிநாட்டுக்கு பணிகளை அனுப்புவதற்கு பெரும் ஆதரவு காட்டுபவர்கள்; ஏனெனில் அம்முறையில் பெரு நிறுவனங்கள் இலாபங்களை அதிகரிப்பதனால் ஆகும். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கும் அமெரிக்க வர்த்தக சபையும், பல பாரிய நிறுவங்களான IBM, Dell, HP மற்றும் Sun ஆகியவையும் இந்தச் சட்டவரைவுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளன. உண்மையில் HP/Compac உடைய முதன்மை நிர்வாக அதிகார, Carly Fiorina, பெரும் இறுமாப்புடன், "அமெரிக்க கடவுள் கொடுத்த உரிமை என்று எந்த வேலையும் இல்லை" என்று அறிவிக்கும் அளவிற்குச் சென்றார்.

தன்னுடைய ஆண்டுப் பொருளாதார அறிக்கையில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளுக்கு பணிகொடுத்தல் நன்மைகளை தந்துள்ளதாக புகழ்ந்துள்ளது. அமெரிக்க சட்ட மன்றத்தின் ஆதரவுடன் 1.8 மில்லியன் கூட்டரசாங்கப் பணிகளில் 425,000 வேலைகள் வெளிநாடுகளுக்கு, உழைப்புச் செலவினங்களைக்குறைக்கும் வகையில் கொடுப்பதாக திட்டங்களை வைத்திருக்கிறது; அமெரிக்க நிறுவனங்கள் இதே காரணத்தைக் காட்டித்தான் பணிகளை வெளியே அனுப்புகின்றன.

இதைத்தவிர, பல தகவல் தொழில்நுட்பவேலை இழப்புக்கள் 2000ம் ஆண்டு தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டதையும் கருதாமல், அமெரிக்க சட்டமன்றம் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒதுக்கப்படும் H1-B விசாக்களை - அமெரிக்காவில் கிடைக்காவிட்டால், வெளிநாடுகளிலிருந்து தருவிக்கக்கூடிய தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை, 1997ன் 65,000த்திலிருந்து 2003ல் 195,000 என உயர்த்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு பணிகளை அனுப்புவதால் உள்நாட்டு வேலைகள் இழப்புக்கள் ஏற்படுவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாகப் போய்விட்டது. ஜனநாயகக் கட்சி, அமெரிக்கத் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், வேலையிழந்த தொழிலாளர்களின் கொடுமையான உண்மையை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்த முயற்சி செய்துவருகின்றது. அமெரிக்கத் தொழிலாளர்களின் பாதுகாவலர் என்று பாசாங்கு செய்ய முற்பட்டு சட்டபூர்வமான தடைகளைக் கொண்டுவர முயற்சி செய்கின்றது.

இந்தியாவில் இதன் விளைவு

இதன் உடனடித்தாக்கம் மிகமிகக் குறைவு என்றாலும், அமெரிக்க செனட்டின் சட்டவரைவிற்கு இந்திய ஆளும் செல்வந்தத் தட்டு, பெரும் எதிர்மறையில் தன்னுடைய பதிலைக் கொடுத்து உள்ளது ஆச்சரியப்படத்தக்கதாக இல்லை. இந்திய தகவல் தொழில்நுட்பத் தொழில் துறையின் ஏற்றுமதி வருவாயில் அமெரிக்க கூட்டரசு ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை மிகக்குறைந்த சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் பிரதிநிதி அமைப்பான, National Association of Software and Service Companies (NASSCOM), தடையற்ற வர்த்தகத்தின் புது வெற்றிவீரர் போல் பாசாங்குடன் அறிவித்தது: "உலகளாவிய தடையற்ற வர்த்தக சகாப்தத்தில், எந்த நாட்டிலும் காப்புவாத நடவடிக்கைகள் நீடித்து இருக்க வாய்ப்பு இல்லை; சமீபத்தில் இந்தியாவில் சுங்கவரி விகிதக்குறைப்புக்கள் ஏற்பட்டது (WTO-ல் உடன்பட்டதைவிட அதிகக்குறைப்பு), அல்லது எஃகுத்தொழிலில் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து குவியாவண்ணம் தடைசெய்த நடவடிக்கைகள் அமெரிக்காவால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது இவை இதற்குச் சான்றுகளாகும்." வரவிருக்கும் உலக வர்த்தக அமைப்புடனான பேச்சுவார்த்தைகளைப்பற்றி குறிப்பிட்டு, இந்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி அருண் ஷோரி விடையிறுக்கும் வகையில் கூறினார், "இது வர்த்தகத்தில் பன்முக உடன்பாடுகளுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று கருதுகிறேன்."

முக்கிய இந்திய செய்தித்தாள்கள், ஒரேமாதிரியாக இந்தச் சட்டத்தைப்பற்றியும், இந்த வழியிலான எந்த முயற்சியைப்பற்றிய நடவடிக்கைகளையும் பற்றி எதிர்த்து தலையங்கம் எழுதின. The Economic Times of India சற்றே நம்பிக்கையுடன், "பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் சேமிப்புக்கள் வெளியே அனுப்பும் நடவடிக்கைகள்மூலம் பெறப்படலாம் என்று உணர்ந்துவிட்டதால், உயர்செலவின அமெரிக்காவிலிருந்து சில பணிகள் இந்தியாவிற்கு விரைவுபடுத்தப்படுவது, செனட்டர்கள் என்ன நினைத்தாலும், செய்தாலும், அதிகமாகத்தான் ஆகும்." என்று எழுதியது. ஆனால், Hindu, இந்திய நிறுவனங்கள் "முழுமையான கடினக் கொள்கை" கொண்டு, அங்குள்ள எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையில் செய்யும் பணியின் தரத்தை உயர்த்திக்காட்டவேண்டும் என்ற ஆலோசனையை நல்கியுள்ளது.

முன்பு சரிந்துவிட்ட தோகா உடன்பாடுகளை பற்றி புதுப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக இந்தியாவிற்கு அண்மையில் வருகைபுரிந்திருந்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி Robert Soellick இடம், இந்தியா அமெரிக்க செனட்டின் நடவடிக்கையினால் இப்பேச்சு வார்த்தைகள் பற்றிய வருங்காலம் பின்னடைவு பெற்றுவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது. தன்னுடைய பங்கிற்கு Zoellick, தன்னுடைய இந்திய விருந்தினர்களுக்கு அவர்கள் குறைகூறவதற்கு ஏதுமில்லை என்றும், இந்தியா பொருட்கள், பணிகளை அரசாங்கம் வாங்குதல் பற்றிய உடன்பாட்டில் கையெழுத்திட்டு உறுப்பினராகவே ஆகவில்லை என்று தெரிவித்தார். இத்தகைய உடன்பாட்டைத்தான் அமெரிக்காவும், ஐரோப்பாவும், மெக்சிகோவில் கான்கூனில், செப்டம்பர் 2003ல் WTO பேச்சு வார்த்தைகளின் போது மற்ற நாடுகளின் தொண்டையில் திணிக்க முற்பட்டன. Zoellick, இந்தியா, அமெரிக்க தொழில்நுட்ப பணிகளை பெறவேண்டும் என்றால், அதன் நிதி மற்றும் விவசாயத்துறைகளை வெளிநாடுகளின் போட்டிக்கு திறக்க வகைசெய்ய வேண்டும் என்று மேலும் வற்புறுத்தினார்.

இந்திய செல்வந்தத் தட்டு தொழில்நுட்பத்துறைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள புஷ் நிர்வாகம், கடல்கடந்து பணிகள் அனுப்பப்படுவதால் உள்நாட்டில் விளையும் நிலைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, இந்தியாவிடமிருந்து அமெரிக்க நிறுவனங்கள் தனிச்சிறப்பான நன்மைகள் கொண்ட துறையின் மூலம் சலுகைகளை வலுவில் கொள்ள முயற்சி செய்கிறது. விவசாயத்துறையில் மில்லியன் கணக்கில் அதிக நலன்கள் அற்றிருக்கும் விவாயிகளை திவாலாக்கி அவர்களை ஏற்கனவே பெரும் மக்கட்தொகுப்பு நிறைந்த நகரங்களுக்கு விரட்டிவிடுவதை எடுத்துக் கொண்டால், அமெரிக்க விவசாயத் தொழில்துறைக்கு இந்திய விவசாயத்துறையைத் திறந்து விடுவது குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடியது.

மொத்த இந்தியத் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி வருமானத்தில் 71சதவீதம் அமெரிக்காவிலிருந்து வரும் நிலையில் இருக்கும், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை, இந்தச்சட்ட வரைவு ஒரு முன்னோடியை ஏற்படுத்திவிடக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது. இந்திய ஆளும் செல்வந்தத் தட்டின் அமெரிக்கச் சட்டவரைவுகள் வளர்ச்சி பற்றிய கவலை, இந்தியாவை உலக அளவில் அறிவு-சார்ந்த துறையில் மிகப்பெரிய சக்தியாகச் செய்யவேண்டும் என்று அது கொண்டுள்ள நிலைப்பாட்டில் கவலையைக் கொடுப்பது இயற்கையேயாகும். அவர்கள் சீனா உற்பத்தித் துறையில் முதலீட்டை ஈர்த்ததால் கண்ட வெற்றியை, இத்துறையில் கண்டு இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் பூகோள முதலீட்டிற்காக இலக்காக அமைய வேண்டும் என்று நம்புகின்றனர்.

"உடல்விற்கும் கடைகளிலிருந்து" தகவல்தொடர்பு ராட்சத நிலை

மிகச் சாதாரணமான குறைந்த ஊதியத்திற்கு இந்தியத் தகவல் தொடர்பு உழைப்பை, அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு அளிக்கும் நிலையிலிருந்து, இன்று இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை மென்னியப் பணிகளுக்கு உலக அளவில் போட்டியிடும் தன்மையைப் பெற்று விட்டது. தொழில்நுட்பத்துறையில் பரபரப்புடன் முதலீடுகள், குறிப்பாக 1990 களின் பிற்பகுதியில் செய்யப்பட்டு, தொழில்நுட்பத்துறையில் பணியாளர்கள் "பற்றாக்குறையை" ஏற்படுத்தி விட்டது.

இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க, IBM, Microsoft மற்றும் Sun போன்ற அமெரிக்க நிறுவனங்கள், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்; அவர்கள் தங்களுடைய இந்திய ஊழியர்களை, பெரிதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள H1-B விசாக்கள் மூலம், திட்டக் காலங்களுக்கு அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கின்றனர். இந்தப் பணியாளர்கள் இந்திய நிறுவனங்களின் ஊழியர்கள் ஆதலின், அமெரிக்க பெருநிறுவனங்கள் இவர்களுக்கு சமுதாய பாதுகாப்பு வரிகளையும் மற்ற தொழிலாளர்களுக்கான நன்மைகளையும் செலுத்தவேண்டியதேவையில்லை என்பதால் அவர்கள் மிகப்பெரிய அளவில் உழைப்பிற்கான அடக்கவிலைச் செலவில் சேமிப்பைக் கொள்ளுகின்றனர். சில மதிப்பீடுகள் இந்தச் "சேமிப்புகள்" அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க ஊழியர்களை பயன்படுத்தும் செலவில் 80 சதவீதம் மிச்சமாகும் என்று கூறுகின்றன.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதன் மற்ற நாடுகளின் போட்டியாளர்களைவிட முக்கியமான நன்மையைக் கொண்டுள்ளனர். இவர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் ஆங்கிலம் பேசும் பொறியியல் பட்டதாரிகள் இருக்கின்றனர், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் காணமுடியாது உள்ளனர்.

தங்கள் ஊழியர்களுக்கு இந்தியமுறையில் மாதம் $200க்கும் குறைவாக ஊதியம் கொடுத்து, சுமாரான அமெரிக்க வாழ்க்கைத்தரப் படிகளையும் கொடுக்கும் வகையில், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை மிகப்பெரிய தொகைகளை இலாபமாகச் சேர்க்கமுடிந்தது. இதன் வருவாய் 1994-95 ஐ ஒட்டி, $150 மில்லியன் டாலர் என்ற சாதாரணதரத்தில் இருந்து 2000-01ல் $5.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. ஒரு பணியாளர்மூலம் இவர்களுக்குக் கிடைத்த வருவாய் இதேபோன்ற அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு, $10,000 லிருந்து, $50,000 என்று தற்பொழுது உயர்ந்து உள்ளது. இந்த மகத்தான வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் வருவாய் இப்பொழுது 5000 நிறுவனங்களையும், 70,000 ஊழியர்களையும் கொண்டு பெரிய அளவில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை படர்ந்து பல்கிப் பெருகி உள்ளது.

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்கு 3 சதவிகிதத்திற்கும் குறைவு என்றாலும், இது இந்திய அரசாங்கத்தின் இணையற்ற அரசியல் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்தத் துறை1999 லிருந்து இன்றுவரை வியத்தகு ஆண்டு வளர்ச்சியாக 45 சதவீதத்திற்கும் மேல் கொண்டுள்ளது. NASSCOM, இந்தியத் தகவல், தெழில்நுட்பத்துறையின் வருவாய் தற்போதைய 2003ம் ஆண்டின் 16.5 பில்லியன் டாலர்களிலிருந்து 2008 ஐ ஒட்டி $70 பில்லியன் டாலர்களாகப் பெருகும் என்று கணித்துள்ளது.

கடல் கடந்தமுறையில் வளர்ச்சி

2000-01ல் நிகழ்ந்த தொழில்நுட்பத்துறை சரிவைத் தொடர்ந்து, பல அமெரிக்க நிறுவனங்களும் எப்படியும் செலவினங்களைக் குறைத்துவிடவேண்டும் என்று முயற்சித்தன. முந்தைய பொருளாதாரப் பின்னடைவிற்குப் பிற்பட்ட காலத்தில் உள்நாட்டு வேலை அதிகரித்திருந்தபோது, இதற்கு மாறாக தற்பொழுது உயர்ந்த ஊதியம் கிடைக்கும் உள்நாட்டு வேலைகள் இழக்கப்பட்டுவிட்டதுடன், வெளிநாடுகளுக்கும் அவை சென்றுவிட்டன. குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களின் இம்முடிவினால் பெரிதும் பயனடைந்தன; இதன் விளைவாக, WIPRO, Tata Consultancy Services (TCS), மற்றும் Infosys போன்றவை மிகப்பெரிய நிறுவனங்களாக வளர்ந்துவிட்டன.

இக்கடல் கடந்த வளர்ச்சி, தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் வழங்கு அட்டை பணிகளை இவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் அழைப்பு மையங்கள் உட்பட பல மாறுபட்ட பணிகளை அடக்கி உள்ளது. Citigroup, Bank of America உட்பட பல அமெரிக்க நிதிநிறுவனங்கள் கடல்கடந்து நிதிப் பணிகளான, பணப்பத்திரங்கள் மாற்றுதல், கடன்கள் அடைத்தல்/வழங்கல் போன்றவற்றை அளிக்கின்றன. இந்தப்பணிகள், "பின் அலுவலக நடைமுறைகள்" என அழைக்கப்படுபவை, இந்தயாவில் நம்பமுடியாத வகையில், 2000 ம் ஆண்டில் 565 மில்லியன் டாலர்களிலிருந்து, 2003 ல் 2.4 பில்லியன் டாலர்கள் என உயர்ந்து வருகிறது. 2006க்குள் இந்திய அழைப்பு மையங்கள் ஒரு மில்லியன் ஊழியர்களை பணியில் அமர்த்தும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலையில்லாத் தொழிலாளர்கள் 50 மில்லியனிலிருந்து 100 மில்லியன் வரை என்ற மதிப்பீட்டில், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு, இருக்கக்கூடிய சில வாய்ப்புக்களில் அழைப்பு மையங்கள்தான் அதிக அளவில் வேலைதரும். நீண்ட, ஒழுங்கற்ற வேலைநேரமும், தொடர்ந்து பணிகள் மேற்பார்வை இடப்படுவதும், இந்தப் பணிகளை பெரும் அழுத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளன, இதையொட்டி பலரும் இதிலிருந்து மாறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை, மிக அதிகமான பொறியியல், கணினி அறிவியல் பட்டதாரிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது; இதிலிருந்த அவர்கள் தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்திய தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் (Indian Institutes of Technology) என்ற உயர்ந்த பல்கலைக் கழகத்தில் தேர்ச்சிபெற்றுள்ள சிறப்புத்தர பொறியியல் பட்டதாரிகளுடைய ஊதியம் ஆண்டு ஒன்றுக்கு $12,000 த்திற்கு மேல் இருப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 151,000 பொறியியல் பட்டதாரிகளையும் கிட்டத்திட்ட 100,000 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளையும் அதன் 250 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 900 கல்லூரிகளிலிருந்து உருவாக்குகிறது.

இத்தகைய பெரிய பட்டதாரி தொகுப்பைக் கொண்டுள்ளதால், தொழில்நுட்ப வேலைகளுக்கு இந்தியாவில் போட்டி கடுமையாக உள்ளது; இந்திய நிறுவனங்கள் இந்த சுற்றிவந்துள்ள அளிப்பை நன்கு சுரண்டுகின்றன. பெரும்பாலான நுழைவு மட்ட பட்டதாரிகள் மாதம் ஒன்றுக்கு மிகக்குறைவான $300 ஊதியத்தைத்தான் பெறுகின்றனர்; இவர்கள் வாரத்திற்கு ஆறு நாட்களில், கூடுதலான வேலை நேரத்திலும் அதிகப்படி ஊதியமின்றி உழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வேலைக்கான நேர்காணல்போதே, இந்த வேலைக்கு வரும் இளைஞர்கள் திட்டவட்டமாக, எட்டு மணி நேரம் என்று ஒப்பந்தம் இருந்தாலும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுவிடுகின்றனர். அவர்கள் முனகினால், மற்றவர்கள் அவர்கள் இடங்களை எடுத்துக்கொள்ளக் காத்திருக்கின்றனர் எனக் கூறப்பட்டு விடுகின்றனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் நாள் ஒன்றுக்கு 16 மணிநேரம்கூட உழைக்கவேண்டி இருப்பதால் சில ஆண்டுகளுக்குள்ளேயே பெரும் தளர்ச்சிக்கு உட்பட்டு மருத்துவமனைகளிலும் சேரவேண்டியுள்ளது. முன்பு காணப்படாத மனத் தளர்ச்சி இப்பொழுது பல இளைஞர்களை தாக்கி உள்ளது; இத்தகையவர்களுடைய சராசரி வயதே 26.5 ஆண்டுகள்தாம்.

பல பெரிய அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் மிக நுட்பமான ஆராய்ச்சி, வளர்ச்சி வேலைகளை இந்தியாவிற்கு மாற்றிக்கொண்டு வருகின்றன. GE நிறுவனம், John F. Welch Technology Centre என்னும் தன்னுடைய $80 மில்லியன் டாலர்கள் பெறுமான மையத்தை, தெற்கு நகரமான பெங்களூரில் திறந்துள்ளது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் நகரத்தில் உள்ள இந்த மையம் ஒரு படைப் பிரிவு போல் 1,800 பொறியாளர்களை, கிட்டத்தட்ட அவர்களில் 25 சதவிகிதம் ஆராய்ச்சிப் பட்டம் வாங்கியவர்கள் என்ற ரீதியில், அமர்த்தியுள்ளது. அவர்கள் மிக முன்னேற்றப் பிரிவுகளான கணினி நீர்மையின் இயக்கவியல் (computational fluid dynamcis), மின்னணுக் காந்த இயல் (electromagnetics), மின்விசை மின்னணு (power electronics), கலவை மூலப்பொருட்கள் (composite materials) என்ற துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். GE Global Research -ஐ சார்ந்த இது அமெரிக்காவிற்கு வெளியில் வசதி வாய்ப்புக்கள் இருக்கும் இத்தகைய ஆராய்ச்சிமையங்களில் மிகப்பெரியது ஆகும்.

இதேபோல், இன்டெல் நிறுவனம் ஒரு $40 மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்த மையத்தை பெங்களூரில் தொடங்கி, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த Xeon, Centrino செயலிகள் (processors) வளர்ச்சிக்குத் திட்டமிட்டு வடிவமைக்க கருதியுள்ளது. Oracle, IBM, SAP போன்ற பெரிய அளவு ஆராய்ச்சி நிறுவனங்களும் இங்கு உள்ளன.

இந்திய நிதி தட்டினர் தொழில்நுட்பத்துறையில் குவிப்பைக் காட்டினாலும், பெரும்பாலான இந்திய மக்களுக்கு நல்ல குடிநீருக்குக் கூட வழியில்லை. இந்தியாவில் 75 சதவீத மக்கள் கிராமப்புறத்தில் வசிப்பவர்கள், தொழில்நுட்பத்துறை வளர்ச்சி, ஒப்பிட்டுகாணும்போது மக்கட்தொகையின் விகிதத்தில் குறுகிய அளவே ஆகும், அதாவது நகரமக்களுக்கும், பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கும் இடையே துருவமுனைப்படலை அதிகரித்துள்ளது.

கடல்கடந்து பணிகளைப் பெறுதல் என்ற அலையுடன், அமெரிக்காவில் மிக உயர்ந்த தேர்ச்சி பெற்றவர்களுடைய வருங்காலம் சிறப்பில்லாமல் போக்கடிக்கக் கூடிய சில அச்சுறுத்தும் புள்ளிவிவரங்களும் வந்துள்ளன. இந்திய மென்னியத் தொழில்துறையின் ஏற்றுமதி 2003 ல் கிட்டத்தட்ட $10 பில்லயன் டாலர்களாக, அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் வருமானமாக 70 சதவிகிதம் ஆக உள்ளது. ஒரு அமெரிக்க ஆலோசனை நிறுவனம், மொத்த அமெரிக்கத் தொழில்நுட்ப வேலைகள் 10.3 மில்லியனில், கிட்டத்தட்ட 500,000 வேலைகள், 2003-04 ல் கடல் கடந்துவிடும் என்று மதிப்பீடு செய்துள்ளது.

Deloitte Consulting என்னும் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் $536 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிதியப் பணிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளது; இனால் அங்கு $139 பில்லியன் டாலர்கள் மிச்சமாகும். இதையொட்டி அங்கு 2 மில்லியன் வேலைகள் இழப்பு நேரிடும். NASSCOM அமெரிக்க நிறுவனங்கள் கடல் கடந்து இந்தியாவிற்குப் பணிகள் தருவதால் அவற்றிற்கு $10 பில்லியன் டாலர்களுக்கும் மேல் சேமிப்புக்கள் இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளது.

அதிக ஊதியம் கொடுக்கும் வேலைகள் இழப்பு அமெரிக்கா முழுவதும் ஏற்படும் என்பது இப்போது மறுக்கமுடியாத உண்மை ஆகிவிட்டது; பல தொழிலாளர்களும் இருண்ட எதிர்காலத்தை நோக்கியுள்ளனர். உற்பத்தித்துறையிலும், தொழில்நுட்பத்துறையிலும், தொழிலாளர்கள் முன்பு ஓரளவு அதிகம் பெற்றவர்கள், இப்பொழுது வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

கடல்கடந்து பணிகளை அனுப்பவதற்கு எதிரான சட்டங்கள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசியல்வாதிகளும், தொழிற்சங்க அதிகாரத்துவமும் மக்களை திருப்திப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டாலும், இந்த முறையை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. இலாபமுறை முழுமைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்திற்கு வெளியில் இதற்குத் தீர்வு கிடைக்கப்போவது இல்லை.

உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் உற்பத்திச்கக்திகள் வளர்ச்சி பற்றிய தங்களுடைய சொந்த முன்னோக்கை, அறிவுபூர்வமான மற்றும் முற்போக்கான வழியில், ஒரு நிதி ஆளுமை கொண்ட செல்வந்தத் தட்டின் மேலும் அதன் சொந்த செல்வத்தைப் பெருக்குவதற்கான கொள்ளை முயற்சிகளுக்கு எதிராக முன்வைக்க வேண்டும். இறுதியாக, அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தால் கைக்கொள்ளப்பெறும் உற்பத்தியின் உடைமை மற்றும் உற்பத்தியை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்துவது இவைதான் மனித உழைப்பின் இந்த மாபெரும் பூகோள உற்பதித் திறனிலிருந்து கிடைக்கும் செல்வத்தை எல்லோரும் பயன்பெறச் செய்வதற்கு வழிவகுக்க முடியும்.

Top of page