World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of imperialism: Iraq and US foreign policy

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

முதல் பகுதி: ஈராக்கிய முடியாட்சியும், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியும்

By Joseph Kay
12 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் மாத மத்தியில் சதாம் ஹுசைனைக் கைப்பற்றியமை செய்தி ஊடகத்தாலும், புஷ் நிர்வாகத்தாலும், தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்ட பெரும் பரபரப்பான வரவேற்பைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், ஈராக்கின் பழைய ஜனாதிபதி மீதான விசாரணையின் சாத்தியக்கூறுகள் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரிடையே கலவரம் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, சதாம் ஹுசைன் மீதான விசாரணை, அமெரிக்கா ஈராக்கை தாக்குவதற்கு நியாயப்படுத்தப்பட்ட அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் அவர் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகள் கொண்டிருந்தபோது செய்தவை என்ற விவரங்கள் விவாதத்திற்கு வந்துவிடுமோ என்ற பயத்தைக் கொடுத்துள்ளது.

போரைப் பற்றியும் அந்நாட்டை ஆக்கிரமித்தது பற்றியும் தெரிந்து கொள்ளுவதற்கு இன்றியமையாதது, வரலாற்று அடிப்படையை அறிந்து கொள்ளுதலே ஆகும்; ஆயினும் கூட ஊடகங்களினால் ஈராக்கின் வரலாறு பற்றிய கவனமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கட்டுரைகளில், 1980 காலத்திய ஈரான்-ஈராக் யுத்த காலகட்டத்தை முக்கியமாக மையப்படுத்தி ஆராயும் இது முதல் கட்டுரையாகும். முதல் மூன்று கட்டுரைகள், ஈரான்-ஈராக்கியப் போரின் அரசியல், சமூக, வராலாற்று உள்ளடக்கத்தை விவாதிக்கும்.

சமீபத்தில் இரகசியக் காப்பு நீக்கப்பட்டுவிட்ட பாதுகாப்பு ஆவணங்கள், 1980 களில் சதாம் ஹுசைன் ஆட்சியுடன், அமெரிக்கா கொண்டிருந்த உறவுகள் பற்றி சீரழிந்த நிலையைத்தான் சித்தரித்துக் காட்டுகின்றன. அமெரிக்க அரசாங்கமும், அதன் ஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப் படைகளும், சதாம் ஹுசைன் இரசாயன, உயிரியல், அணு ஆயுதங்கள் பயன்படுத்தியதால் அல்லது பயன்படுத்துவதால் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதாகக் கூறிவருகின்றன. ஆனால், 1980 இலிருந்து 1988 வரை நடந்திருந்த ஈரான்-ஈராக் போரின்போது இந்த ஆயுதங்களை ஈராக் உண்மையில் பயன்படுத்தியபோது, அப்பொழுது பாக்தாத்திலிருந்த ஆட்சி றீகன் நிர்வாகத்தின் ஆதரவுடன்தான் அவ்வாறு செய்தது; றீகன் நிர்வாகத்தில் இருந்த அதே நபர்கள்தான், இப்பொழுது புஷ் நிர்வாகத்தில் மிக முக்கியமான பதவிகளில் இருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஹுசைன் ஒரு நண்பராகவும், பெறுமதியுள்ள சொத்தாகவும் இருந்த நிலையில் இருந்து, தற்போது புஷ் நிர்வாகத்தினால் உலக அமைதிக்கு பெரும் அச்சத்தைத் தோற்றுவிக்கக் கூடிய விராதிகளில் ஒருவர் என்று கூறி, ஈராக் தொடர்பாக அமெரிக்கப் பார்வை மாறி இருப்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

இந்த மாறுதல் புஷ், அல்லது துணை ஜனாதிபதி சென்னி அல்லது பாதுகாப்பு மந்திரி ரம்ஸ்பெல்ட் போன்றோரில் திடீரென ஏற்பட்ட வெளிப்படுத்தல் என்ற அடித்தளத்தில் விளங்கிக்கொள்ள முடியாது. மாறாக, வரலாற்று, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேரோடியுள்ள அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் வரம்பிற்குள் ஏற்பட்டுள்ள அடிப்படை மாறுதல்களின் அடித்தளத்தில்தான், வாஷிங்டனின் ஈராக் தொடர்பான கண்டோட்டத்தின் மாற்றத்தை விளங்கிக்கொள்ளப்பட முடியும்.

சமூக மோதலும் ஈராக்கிய மன்னராட்சியும்

1918ல் முடிவிற்கு வந்த முதல் உலகப்போருக்கு பின் ஒட்டோமான் பேரரசு சிதைந்ததில்தான், தற்கால ஈராக் மற்றும் தற்போதைய மத்தியகிழக்கின் தோற்றங்கள் வேர் ஊன்றியுள்ளன. முதல் உலகப் போருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பு, தற்கால துருக்கியிலுள்ள இஸ்தான்பூல் எனப்படும் பழைய கான்ஸ்டான்டிநோபிளை மையமாகக் கொண்டிருந்த, ஒட்டோமான் பேரரசின் கீழைக்கோடி மாநிலமாக ஈராக் இருந்தது.

போரின்போது ஒட்டோமான் பேரரசு ஜேர்மனியின் பக்கம் சேர்ந்திருந்தது, போருக்குப் பின்னர் வெற்றி பெற்றவர்கள், குறிப்பாக பிரிட்டனும், பிரான்சும் பழைய ஒட்டோமான் பேரரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த மத்தியகிழக்குப் பகுதிகளை தங்களுடைய செல்வாக்கிற்குள் உட்படுத்திக்கொண்டு விட்டனர். பிரிட்டிஷ் பேரரசின் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியாக ஈராக் கொண்டுவரப்பட்டது; ஹஷிமைட் முடியாட்சி குடும்பத்தில் ஒருவராகிய முதலாம் ஃபைசல் (King Faisal I) அரியணை ஏறுவதற்கு பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்தது. பிரிட்டன் இந்த மண்டலத்தில் நீண்ட கால நலனைக்கொண்டிருந்தது. வர்த்தக காரணங்களுக்கு மட்டும் அல்லாமல், ரஷ்ய செல்வாக்கைப் படரவிடாமல் செய்வதற்கும் மற்றும் இங்கிலாந்தின் மிக முக்கிய காலனித்துவ பகுதியான இந்தியாவிற்குத் தடையின்றிப் பாதுகாப்புடன் செல்வதற்காகவும், ஓட்டோமன் பேரரசை போருக்கு முன் பிரிட்டிஷார் முட்டுக்கொடுத்து வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

19ம் நூற்றாண்டிற்கு முன், இப்பகுதியின் சமூக கட்டமைப்பு, பாக்தாத் உட்படச் சில பெரிய நகரங்களைத் தவிர, ஒப்புமையில் தனிமைபடுத்தப்பட்ட பழங்குடிக் கூட்டமைப்பு முறையைச் சுற்றி முக்கியமாக அமைக்கப்பட்டிருந்தது. பிரிட்டீசாரின் செல்வாக்கினால் 19, 20ம் நூற்றாண்டுகளில், இப்பகுதி நவீன முதலாளித்துவ சொத்துடமை உறவுகளில் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டது.

"தகவல் தொடர்பு துறை பரவுதல், நகரங்களின் வளர்ச்சி, ஐரோப்பியச் சிந்தனைகளும் தொழில்நுட்பமும் பரவுதல், நிலப்பகுதியில் உறவுத்தொடர்புகளை தாழ்த்த வளர்ந்த கிராமப்புற முன்னேற்றம், குறைந்த உற்பத்தி, வாழ்க்கைத்தரம் இவற்றை மட்டும் கொண்டிருந்த பழைய பொருளாதாரம் நீங்குதல், பழங்குடியினரின் தன்நிறைவு பொருளாதாரம் அகலுதல், சமுதாயத்தில் பலபிரிவினரிடையே உட்தொடர்புகளின் பெருக்கம்" ஆகியவை இக்காலகட்டத்தில்தான் தோன்றின; பழைய மரபுவழி உறவுகள் சற்று மாறுதல்களுடன் புதிய வடிவமைப்புக்களுடன் தொடந்திருந்தன.1

20ம் நூற்றாண்டில் ஈராக்கிய வரலாற்றின் போக்கை அறிந்து கொள்ளுவதற்கு இந்தச் சமுதாய மாற்றங்கள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை. முதலாளித்துவ வளர்ச்சியை மிகக் குறைவாகவே கொண்டிருந்து 20-ம் நூற்றாண்டில் நுழைந்த பல நாடுகளைப் போலவே, பின்தங்கிய, அரை நிலமானிய அடிப்படை சமூக உறவுகள் ஈராக்கிலும் உலக முதலாளித்துவத்தின் புதிய அழுத்தங்களினால் கடும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நெருக்கடிகள் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வளங்களில் ஒன்றான, உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்ககைப்பெற்றுவிட்ட வளமான எண்ணெயினால் இந்நெருக்கடி இன்னும் கூடுதலான முக்கியத்துவத்தை அடைந்தது.

இந்த ஆட்சிக்காலத்தில் (1921-1958 பலமுறை 1930களிலும், 1940களிலும் ஆட்சிக் கவிழ்ப்புக்களுக்கு) உட்பட்டிருந்த ஈராக்கிய முடியாட்சி, பல பழங்குடி மற்றும் குழுவாத பிரிவுகளை ஒன்றுபடுத்தி ஒற்றுமையை ஏற்படுத்துதல், அதேநேரத்தில் பிரிட்டிஷ் பேரரசின் நலன்களுக்காக முழுச்சமுதாயத்தையும் அடிபணியவைத்தல் என்ற இரட்டைப் பிரச்சினைகளை எதிர்நோக்கியது. பழங்குடிகளின் பிளவுகளை தீர்த்துக்கொள்வதும் மற்றும் புதிய பொருளாதார வாழ்கைகையின் வளர்ச்சியும் தேசிய முதலாளித்துவம், அதிகரிக்கும் அறிவுஜீவிகள், எல்லாவற்றிற்கும் மேலாக விரைவில் அதிகரிக்கும் தொழிலாள வர்க்கத்தை கொண்ட புது நகரங்கள் வளர்ச்சி என்பதை அர்த்தப்படுத்தும். பாக்தாத் பெருநகர மக்கட்தொகை 1922ல் கிட்டத்தட்ட 200,000 லிருந்து 1947ல் 515,459 ஆகவும், 1957ல் 793,183 ஆகவும் உயர்ந்தது.

எண்ணெய் தொழில் வளர்ச்சி, கப்பல் கட்டும் தொழில், உற்பத்திகள் வளர்ச்சி போன்ற மட்டுப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதார அபிவிருத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நாடு முழுவதையும் அடிமையாக்கப்படுவதை எதிர்க்கும் பிரிவினரை கொண்டுவந்ததுடன், ஏகாதிபத்திய முறையினால் நன்மை அடைந்த மிகச்சிறிய ஈராக்கிய ஆளும் செல்வந்த தட்டையும் கொண்டு வந்து விட்டது.

எனவே இருக்கும் நிலையை அப்படியே பாதுகாக்கும் நோக்கத்தோடு பழங்குடிமக்கள் தலைவர்கள், நிலச்சுவான்தார்கள், வணிக வர்க்கத்தில் மிக அதிக செல்வம் கொண்டவர்கள்மீது முடியாட்சி முக்கியமாக கூடியளவு தங்கியிருக்கவேண்டியிருந்தது. வரலாற்று ஆசிரியர் ஹன்னா படாடு (Hanna Batatu) குறிப்பிடுகிறார்: "ஒரு கிராமியச் சமூக கட்டமைப்பிற்கு இணங்கவேண்டியிருந்த நிலையில், நாட்டின் பெரும்பாலான மக்கள் வறிய நிலையில் வாடுவதற்கு உட்படுத்தியிருந்த முறையை ஆதரித்த நிலை, ஈராக்கியப் பொருளாதாரம் முழுவதையும் வளர்ப்பதற்கு பெரும் தடையாக இருந்து. முடியாட்சி முறையே கூட, ஒரு நெருக்கடியான வகையில், சமுதாயத்தைப் பின்தங்க வைக்கும் கூறுபாடாயிற்று."2 இதன் பொருள் முடியாட்சியையே கூடுதலான பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாயிற்று என்பதாகும்.

இந்தப் பிற்போக்கான ஆளும் செல்வந்த தட்டின் பொருளாதார நலன்களும், அரசியல் ஆதிக்கமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்பை நம்பியிருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், பெரும் வெறுப்பிற்குட்பட்டிருந்த நூரி அல் சையத் (Nuri al Said) உட்பட முடியாட்சியின் தொடர்ச்சியான பிரதம மந்திரிகள் 1948, 1952, மற்றும் 1956ல் எழுந்த ஏராளமான நகரப்புற மக்களின் எழுச்சியை அடக்கப் பிரிட்டிஷாரைத்தான் நம்ப வேண்டியிருந்தது.

முடியாட்சிமுறைக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குமான எதிர்ப்பு, மிகவும் அதிகரித்த பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்த்த மக்களிடையே சொத்துக்களை கொண்ட தேசிய முதலாளித்துவ தலைமையை கொண்டிருந்த இயக்கங்களிலிருந்து தோன்றின. இத்தகைய எழுச்சிகள், 1930 களிலும், 1940களிலும் மக்களின் மத்தியதர தட்டுக்களிலிருந்து வந்திருந்த இராணுவ அதிகாரிகள் நடத்திய இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்களின் மூலமும் வெளிப்பட்டன.

தேசிய முதலாளித்துவம், இதுவரை வெளிநாட்டு பெரு நிறுவனங்களுக்கு சென்று கொண்டிருந்த ஈராக்கிய தொழிலாள வர்க்கத்தின் உழைப்பினால் வரும் உபரி மதிப்பை ஊதியத்தில் கூடுதலான பகுதியை விழுங்கும் வழிவகைகள் உள்ள நிலைமைகளைப் பெருக்கவும் விரும்பியது. அந்த நலன்கள், உதாரணமாக வெளிநாட்டு எண்ணெய் பெரு நிறுவனங்கள் ஈராக்கிய பெட்ரோலியத்தை சுரண்டுவதின்மீது தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்றன.

இந்த தேசிய முதலாளித்துவம் 1980களில் தெளிவாகியது போல், பெரிதும் வலிமை அற்றதாகவும் இறுதியில் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் பொருளாதார, இராணுவ உதவிகளுக்கும் உலக முதலாளித்துவத்தைதான் முற்றிலும் நம்பவேண்டியதாயிற்று. மேலும் இது ஈராக்கில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டும் வலுவுற்றும் இருந்த தொழிலாள வர்க்கத்திடமும் எப்பொழுதும் பெரும் பயத்துடன் இருந்தது; ஏனென்றால் இது எந்நேரத்திலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சியை முதலாளித்துவ சொத்துஉடைமைகள் உறவிற்கு அப்பால் எடுத்துச்செல்ல அச்சுறுத்தியது.

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக் கொடுப்புகளும்

ஈராக்கின் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி, ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் (ICP) விரைவான வளர்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது. 1920 களில் ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்பின் பின்னரும், ஈராக்கிலும் மற்ற இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி 1917 இன் ரஷ்யப்புரட்சி, மற்றும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் பிரதிநிதியாகவே கருதப்பட்டது. 1920 களிலும் 1930 களிலும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஈராக்கில் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் பலகாலம் மிகுந்த அரசியல் செல்வாக்கு உடைய கட்சியாகத்தான் அது இருந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஈராக்கிய வரலாறு, பாத் கட்சியின் (Baath Party) எழுச்சி உட்பட, ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும். ஈராக்கிய ஸ்ராலினிசவாதிகளின் கொள்கைகள் எவ்வாறான திருப்பங்கள், வளைந்துசெல்லும் தன்மையை கொண்டிருந்த போதிலும், உண்மையில் முதலாளித்துவம் எவ்வளவு ஜனநாயகத்தன்மையற்று இருந்தபோதிலும்கூட, இந்தத் "ஜனநாயக தேசிய முதலாளித்துவ'' த்திற்கு பின்னால் ஆதரவு காட்டி அதை வலுப்படுத்தவேண்டும் என்ற ஒரே ஒரு கூறுபாடுதான், அவர்களின் உறுதியானதான கருத்தாக இருந்தது. இவ்வழியில், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை உறுதியாக்க உதவி, பல ஈராக்கியர்களின் ஆதரவையும் கொண்டிருந்த சோசலிச இயக்கத்தைச் செயலற்றதாக்கியது.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி, இராணுவ அதிகாரிகள் முடியாட்சி ஆட்சியை எதிர்க்காத போதிலும், பொதுவாக 1930களிலும், 1940களிலும் நடைபெற்ற தொடர்ச்சியான இராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்புக்களை ஆதரித்து வந்தது. இவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவை என்று கூறப்பட்டு, எனவே அவை முற்போக்கான தன்மை உடையவை என்று அவற்றிற்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. உதாரணமாக, 1936ல் தலைமை அமைச்சர் பதவியைக் கைப்பற்றிய Bakr Sidqi க்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆதரவு அவ்வகையைச் சேர்ந்ததுதான். மார்ச் 1937ல் "எத்தகைய இயக்கமாயினும், கம்யூனிஸ்டுகள் அல்லது மற்றவையாயினும், முடியாட்சிமுறைக்கு எதிர்ப்புத்தெரிவித்தால், அது நசுக்கப்படும்." என்று அவர் உறுதி கொண்டு கூறியவரை, அவருக்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

1941ல் ரஷிட் ஆலி கைலானி (Rashid Ali Gailani), அதிவலதுசாரி மற்றும் யூத எதிர்ப்புவாத பிரிவுகளின் தொடர்பு கொண்டிருந்தபோதிலும்கூட, ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தான் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்த முக்கிய தூணாக இருந்தது. 1941 ஜூன் மாதம் ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தபின்னர், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷார் புறம் சாய்ந்தது; நடைமுறையில் இது பிரிட்டிஷ் சார்புடைய முடியாட்சியை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்தியது. சோவியத் கொள்கையின் நடைமுறையை ஒட்டி, பாலஸ்தீனத்தை பிரித்து 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு இது ஆதரவு கொடுத்திருந்தது இதன் நிலைப்பாடுகளிலேயை மிக மோசமானது என்று கூறலாம்.

இத்தகைய காட்டிக்கொடுத்ததல்களுக்கு பிறகும், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின் முக்கிய மையங்களில் செல்வாக்கைத்தான் கொண்டிருந்தது: பாக்தாத் ஆலைகள், கிர்குக் மற்ற இடங்களில் இருந்த எண்ணெய் தளங்கள், பஸ்ரா துறைமுகம் ஆகியவை சான்றுகள் ஆகும். ஈராக்கிய தொழிலாள வர்க்கத்திடம் சோசலிச கருத்துக்கள் பெற்றிருந்த செல்வாக்கின் வலிமையால், தேசியவாத முதலாளித்துவ மற்றும் சில தீவிர பிற்போக்கு கட்சிகள்கூட மக்களிடையே ஆதரவைப் பெறுவதற்கு சோசலிசக் கோஷங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். இது இக்காலக்கட்டத்தில் அராபிய உலகு முழுவதிலுமே ஏற்கப்பட்டிருந்த செயலாகத்தான் இருந்தது. அப்பகுதியில் 50 களிலும், 60 களிலும் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களில் ஒருவரான எகிப்தின் ஜெனரல் கமால் அப்துல் நாசர் (Gamal Abdul Nasser), தன்னுடைய கம்யூனிச எதிர்ப்புக் கொள்கைகளுக்கு மத்தியிலும் தன்னை சோசலிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.

ஒருபுறம் மிகத்தீவிரமான சமுதாய சமத்துவமின்மை, மறுபுறம் தேசிய முதலாளித்துவத்தின் வலுவற்ற தன்மைதான் சோசலிச சிந்தனைகளின் வலிமைக்கு காரணம் என்பதை விளக்க இயலும். சமூக சமத்துவமின்மை 1950களில் எண்ணெய் வள உயர்நிலையின் காலத்தில் பெருகியது; பணவீக்கத்தால் உழைக்கும் மக்களும், மத்தியதர தட்டுகளும் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டிருந்த நிலையில் ஒரு மிகச்சிறிய மக்கட்பிரிவு தன்னுடைய இலாபங்களை பெருவாரியாக அதிகரித்துக்கொண்ட காலகட்டமாகும் அது.

இக்கால கட்டத்தில் அதிக செல்வாக்கற்று இருந்த பாத் கட்சி அரேபிய சார்புள்ள, பிரிட்டிஷ் எதிர்ப்பு தேசியவாதிகள் 1941 ஆட்சிக்கவிழ்ப்பின்போது, அவர்கள் பாசிசத்துடன் கொண்டிருந்த தொடர்புகளினால் இழிவுற்றனர். எந்தத் தேசிய முதலாளித்துவக் கட்சியும் மக்கள் ஆதரவைத் திரட்ட முடியவில்லை; ஏனெனில் உள்நாட்டு முதலாளித்துவ வர்க்க, முடியாட்சியின் அடக்குமுறையைவிட, தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்போக்கைக் கண்டு கூடுதலான அச்சத்தை கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் தேசிய முதலாளித்துவம் ஆட்சியை கைப்பற்றியதோ, அப்பொழுதெல்லாம், அது ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வேலைநிறுத்தங்களை நசுக்கவும், தொழிலாள வர்க்கத்தின் அமைப்புக்களை தகர்க்கவும்தான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

தொடரும்......

Top of page