World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Supreme Court grants trial in Gujarat riot case

குஜராத் கலவர வழக்கு விசாரணைக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

By Sarath Kumara
10 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய மாநிலமான குஜராத்தில் ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு முன்னர் 2002-ல் முஸ்லீம்களுக்கெதிரான இனப்படுகொலைகள் நடந்து 2000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், சில குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்த இந்தியாவின் உச்சநீதிமன்றம் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

உலக இந்து சபையில் (VHP) மற்றும், பஜ்ரங்கதளம் உட்பட பல்வேறு பழிப்புவாத இந்து வெறி (Chauvinist) அமைப்புக்கள் பாரதிய ஜனதாக் கட்சி (BJP) மாநில அரசாங்கத்தின் ஆதரவோடு பரவலான கலவரங்களை நடத்தின. இந்து கும்பல்கள் முஸ்லீம்களை தாக்கி, கற்பழித்து, கொன்றபோது மற்றும் அவர்களது வீடுகளையும், வர்த்தக நிறுவனங்ளையும் நாசப்படுத்திய போது மாநில போலீஸ்படை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

வகுப்புவாத பதட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான வழிகளாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியும் BJP தலைமை குழுவினரும் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக்கொண்டனர். 2002 டிசம்பரில் மிகபெரிய அளவிலான வகுப்புவாத சூழ்நிலையை நேரடியாக பயன்படுத்தி இந்து குறுகிய மேலாண்மைவாதத்தை தூண்டிவிட்டு அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் BJP வெற்றிபெற்றது.

வன்முறை தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்ட பெரும்பாலானவற்றை போதுமான சாட்சியம் இல்லை என்று குஜராத் போலீசார் கைவிட்டுவிட்டனர். நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் கூட போலீசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர் மற்றும் அரசுத்தரப்பு சாட்சிகளை மிரட்டினர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இப்படி சாட்சிகள் மிரட்டப்படுவதை தடுப்பதற்காக பல வழக்குகளை குஜராத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரும் மனுவை, தேசிய மனித உரிமைகள் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததும், இந்திய உச்சநீதிமன்றம் இதில் ஈடுபட்டது. மிகபரபரப்பாக நடைபெற்ற பெஸ்ட் பேக்கரி வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததன்மூலம் மோடி அரசாங்கம் இந்த முயற்சியைத் தடுத்துநிறுத்த முயன்றது. உச்சநீதிமன்றம் மாநில நீதிமன்றத்திற்குப் போகும்படி கூறியது.

எவ்வாறாயினும், ஜனவரி 30-ல் உச்ச நீதிமன்றம் ஜகிரா ஷேக்கின் மனுவை ஏற்றுக்கொண்டு குஜராத்திற்கு வெளியில் அந்த வழக்கு விசாரணையை நடத்த சம்மதித்தது. 11 முஸ்லீம்கள் 3 இந்துக்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட, கொலையில் ஈடுபட்ட 14-பேர் சம்பந்தப்பட்ட, பெஸ்ட் பேக்கரி வழக்கில் நேரில் கண்ட சாட்சியாக ஜகிரா இருந்தார். ஒரு கும்பல் அவரது தந்தையின் சொந்த வியாபாரமான வதோதராவில் உள்ள பெஸ்ட்பேக்கரியை தீ வைத்துக்கொளுத்தியது. கொல்லப்பட்டவர்களுள் அவரது தந்தையும் அடங்குவார்.

சென்ற ஆண்டு விசாரணை நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக ஜகிரா உட்பட எல்லா சாட்சிகளும் அறிக்கைக்கு எதிராக பல்டி அடித்தனர். அப்படி ஏன் மாற்றிச் சொன்னார்கள் என்பதை ஆராயாமல் செசன்ஸ் நீதிபதி H.U. மகிதா அவர்கள் மீது எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்ட 21-பேரையும் விடுதலை செய்தார். ஜூலை-7-ல் அந்த தீர்ப்பு வந்து சில நாட்களில் ஜகிரா மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். தனக்கும் இதர சாட்சிகளுக்கும் மரண அச்சுறுத்தல்கள் வந்ததால் சாட்சியங்களை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். பி.ஜே.பி- கட்சியின் எம்.பி-யான மது ஸ்ரீவஸ்தவ், மற்றும் அவரது உறவினரும், காங்கிரஸ் அரசியல் வாதியுமான சந்திரகாந்த் ''பட்டு'' ஸ்ரீவஸ்தவ் ஆகியோர் தன்னை மிரட்டியதாக நேரடியாக குற்றம் சாட்டினார்.

குஜராத் உயர்நீதி மன்றம் டிசம்பர் கடையில் மாநில அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. அனைவரையும் விடுதலை செய்து செஷன்ஸ் நீதிமன்றம் தந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது அதற்குப்பின்னர் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவித்தது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டது. ஜாகிரா தனது சாட்சியத்தை மாற்றிக்கொள்ள மிரட்டப்பட்டார் என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ''இந்த சாட்சியை முறைகேடாக பயன்படுத்திக்கொள்ள ஆழமான சதி ஆலோசனை நடந்திருக்கிறது" மற்றும் "சமூக விரோத மற்றும் தேசவிரோத சக்திகளின் கறைபடிந்த கரங்களில் விளையாட்டு பொம்மையாக ஜாகிரா மாறிவிட்டார்'' என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றத்தால் விசாரணையில் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய சொலிஸிட்டர் ஜெனரல் ஹரிஸ் சால்வே கூட உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு ''நீதி நிர்வாக முறையையே வெட்கக்கேடாக்குவது'' என்று வர்ணித்தார்.

ஜகிரா உச்சநீதிமன்றத்தில் செய்த மனுவில் ''இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் தனது வழக்கை நடத்தத் தாயாராக'' இருப்பதாக குறிப்பிட்டார். தனது பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணையின் எல்லா நிலைகளிலும், நீதிவிசாரணை தடம்புரண்டது என்பதற்கு சான்றாக உள்ள வழக்கு என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ''புலன் விசாரணை தவறான முறையில் நடத்தப்பட்டது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அரசாங்க வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் தனது கடமையிலிருந்து தவறிவிட்டார். இந்த வழக்கில் உண்மைகளை ஆராய்வதில் நீதிபதி தனது கவனத்தை எந்திரரீதியாக செலுத்தியிருக்கிறார்.....

''அரசுத்தரப்பு சாட்சிகள் படுபயங்கரமான குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்களையும் வழக்கு விசாரணை நடைபெற்ற காலம் முழுவதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அச்சுறுத்திக்கொண்டே இருந்தனர். இறுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு நிர்பந்தங்களால் குறிப்பாக அவர்களுக்கு ஆளுகின்ற அரசியல் கட்சியில் நெருங்கிய உறவினர்கள் இருப்பதால் இறுதியாக நிர்பந்தங்களுக்கு சாட்சிகள் பணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது'' என்று உச்சநீதிமன்றத்தில் ஜாகிரா தாக்கல் செய்த மனு விளக்குகிறது.

உச்சநீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டது, புதிய விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. பெப்ரவரி 27-ல் நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் டெல்லியிலுள்ள அரசாங்கம் இந்த வழக்கில் சாட்சியங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கட்டளையிட்டது. மார்ச் 15-வாக்கில் பதில் தருமாறு கட்டளையிட்டது.

பெப்ரவரி மாதம் இளம்பெண் பில்கஸ் யாக்கூப் ரசூல், சம்பந்தப்பட்ட ஒரு தனி வழக்கில் குஜராத் போலீசார் அட்டூழியங்களை மூடிமறைப்பதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள், என்பது அம்பலத்திற்கு வந்தது. மார்ச் 2002ல் நான்கு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொடூரமாக கொலைசெய்த பன்னிரெண்டு நபர்களை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குடும்பத்தின் மீது குண்டர்கள் குழு ஒன்று ஏவிவிடப்பட்டது. பல்கஸையும், இதர பெண்களையும் கற்பழித்தார்கள், இறந்து விட்டதாக கருதி விட்டுவிட்டார்கள்.

அந்த நேரத்தில் பில்கஸ் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அறிக்கையொன்றை தாக்கல் செய்தார். அப்போது அவர் ''மனநிலை சரியில்லாதவர்'' என்று கருதி அந்த வழக்கை முடித்து வைத்தார்கள். தேசிய மனித உரிமைகள் கமிஷன் ஆதரவோடு அவர் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்தார். மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்ற மாதக்கடைசியில் உச்சநீதிமன்றத்திற்கு CBI- தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையில் உள்ளூர் போலீசார் அடிப்படை நடைமுறைகளை பின்பற்றத் தவறிவிட்டனர், உடல்களை அப்புறப்படுத்துவதில் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று தெரிவித்தது. அற்குப் பின்னர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

குஜராத்தில் தொடரும் வன்முறையும் அச்சுறுத்தலும்

இந்த குஜராத் வழக்குகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டிருப்பது இந்தியாவின் ஆளும் செல்வந்த தட்டுகளுக்கிடையே குஜராத் கலவரங்கள், மற்றும் பின் விளைவுகள் ஆகியவற்றால் இந்தியாவிற்கு உள்ளேயும், சர்வதேசரீதியாகவும் குஜராத்தில் தொடரும் கொடூரங்கள் ஏற்படுத்தும், தாக்கங்கள் கவலையை உருவாக்கி இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நீதி தடம் புரளுவதால் குஜராத்திற்குள்ளேயும், வெளியிலும் தொடர்ந்து வகுப்புவாத பதட்டங்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது மட்டுமல்லாமல், அரசாங்கமும் பெரு வர்த்தக நிறுவனங்களும் சர்வதேச முதலீட்டார்களுக்கு விற்பனை செய்வதற்கு பாதகமான சித்திரத்தை உருவாக்குகிறது.

பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாய் அவரது தலைமையிலான BJP தலைமை வகிக்கும் அரசாங்கம் மே மாதத்தில் பூர்த்தியாகும் தேசிய தேர்தல்களை முன்கூட்டியே நடத்த முடிவு செய்தது. குஜராத் வன்முறையிலிருந்து தன்னை விலக்கிக்காட்ட முயன்றது. அதே நேரத்தில் மோடியையும் இதர மாநில BJP தலைவர்களையும் பகைத்துக்கொள்ளவில்லை. ஜனவரியில் ''குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' என்று வாஜ்பாய் உறுதியளித்தார். மோடியின் மேற்பார்வையில் குஜராத்திலேயே அந்த வழக்குகள் நடப்பதற்கு தனது அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மாநிலத்தில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்திலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்பும், முயற்சியாக குஜராத்திற்குள் மோடி அரசாங்கம் வகுப்பு விரோத உணர்வுகளைத் தூண்டிவிட தொடர்ந்து முயன்று வருகிறது. 2002-தேர்தல் பிரச்சாரத்தில் மாநிலத்திற்குள் ''பயங்கரவாதிகள்'' ஊடுருவலை பக்கத்து நாடான பாக்கிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றம்சாட்டினார். மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் ''இஸ்லாமிய பயங்கரவாதிகளை'' குறிவைக்க நாட்டின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை (Prevention of Terrorism Act -POTA) பயன்படுத்தினார்.

சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு ''குஜராத்தில் சட்ட முறைகேடு: அகமதாபாத்தில் முஸ்லீம்கள் சட்ட விரோதமாக கைது'' என்ற தலைப்பில் சென்ற நவம்பரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதானது, 2002-மார்ச் மற்றும் 2003-செப்டம்பர் ஆகிய காலத்தில் 240 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம் அல்லாதவர் என்ற உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியது. ''சட்ட விரோதமாகவும் தான்தோன்றித்தனமாகவும்'' அகமதாபாத் போலீசார் முஸ்லீம்களை கைது செய்து "முறைகேடாக நடத்துவதாகவும் சித்தரவதை செய்வதாகவும்" கண்டனம் செய்தது. ''மாநிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் தொடர்பாக சட்டத்தின் விதிமுறைகள் சிதைந்துள்ளது பற்றியும், POTA-வைப் பயன்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் மீறப்படுவது அதிகரிப்பது பற்றியுமான கவலைகள் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக'' அந்த சர்வதேச அமைப்பு எச்சரித்தது.

மனித உரிமைகள் தொடர்பான அமைப்புக்கள் உருவாக்கிய, குஜராத்தில் நீதியை நிலை நாட்டும் சர்வதேச குழு (International Initiative for Justice in Gujarat IIfjiG) சென்ற டிசம்பரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் மாநிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குண்டர்கள் கூட்டம் கூட்டமாக எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பதாக கூறினார். ''முன்னர் பகலில் உங்களை கொன்றோம், இப்போது இரவில் உங்களை தீர்த்துக்கட்டுவோம். இப்போது இது எங்கள் அரசாங்கம் இந்தப்பகுதி முழுவதையும் இந்து பகுதியாக ஆக்குவோம்'' என்று பாதிப்பு எதுவும் தமக்கு வராது என்ற மன உறுதியுடன் குண்டர்கள் கூறிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

2002-ல் பல முஸ்லீம்கள் தங்களது வீடுகளிலிருந்து தப்பி ஓடுவதற்கு நிர்பந்தம் ஏற்பட்டது. 2002-வன்முறைகள் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெறுவதாக உறுதியளித்த குடும்பங்கள் மட்டுமே திரும்பி தங்களது வீடுகளுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. தனிநபர்கள் அவ்வாறு செய்ய மறுத்தால் போலியான எதிர்க் குற்றச்சாட்டுக்களை சந்திக்க வேண்டிவருகிறது.

குஜராத்தில் நீதியை நிலைநாட்டுவற்கான சர்வதேச குழு (IIfjiG) தனது அறிக்கையில் இதுபோன்ற ஒரு வழக்கைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறது.''ஆனந்த் மாவட்டத்திலுள்ள BV13-கிராமத்தில் சுலேமான் மண்ணெண்ணை டிப்போ வைத்திருக்கிறார். கலவரத்தின் போது அவருக்கு பெருமளவில் பொருள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அவர் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இப்போது தாக்குதல் நடத்தியவர்களால், சுலேமான் "ஒரு கோயிலின் எல்லைச்சுவரை இடித்ததாகவும் அல்லது கோயில் சிலைகளைத் திருடியதாகவும்" குற்றச்சாட்டுக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தால் முஸ்லீம் சமுதாயத்தினர் கடைகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், நாசப்படுத்தப்பட்டதால் பெரும் பொருளாதார இழப்புக்களுக்கு ஆளாயினர்.. அதற்குப் பின்னர் அவர்கள் தொடர்ந்து பொருளாதார தடைகளுக்கு இலக்காகின்றனர். விவசாயம், செய்ய முடியாத அளவிற்கு உள்ளூர் அதிகாரிகளும், இந்து கும்பல்களும் நடவடிக்கையில் இறங்குவதாக ஒரு முஸ்லிம் பெண் IIfjiG குழுவிடம் கூறினார். அவர்கள் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர் மற்றும் தண்ணீர் தருவதில்லை. முஸ்லீம்களோடு பேசிக்கொண்டிருக்கின்ற இந்துக்களை பகிஷ்கரிக்கப்போவதாக மிரட்டி வருகின்றனர்'' என்று அவர் தெரிவித்தார்.

குஜராத்திற்கு வெளியில் சில வழக்குகள் விசாரணை நடத்தப்படலாம் என்கிற அதேவேளை, குஜராத்திற்குள் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத ஒடுக்குமுறைகள் எந்தவிதமான தொய்வுமில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளன. அதேநேரத்தில் மதம் எதுவாகயிருந்தாலும், சாதாரண உழைக்கும் மக்கள் எதிர் கொண்டு வருகின்ற சமூகப் பொருளாதார நெருக்கடி மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கொள்கைகளின் விளைவாக தொடர்ந்து மோசமடைந்து கொண்டு வருகின்றன.

Top of page