:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
UN endorses US plans for an unelected Iraqi government
தேர்ந்தெடுக்கப்படாத ஈராக்கிய அரசாங்கத்திற்கான அமெரிக்கத் திட்டத்திற்கு ஐ.நா ஒப்புதல்
By James Conachy
3 March 2004
Back to screen version
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நவ-காலனித்துவ செயற்திட்டத்திற்கு மீண்டும் ஐ.நா தனது
சட்ட அங்கீகார முத்திரையைத்தரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. வாஷிங்டனின் தேவைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஈராக் நிர்வாகத்திடம் ஜூன் 30-ல் சம்பிரதாய முறையில் இறையாண்மையை ஒப்படைக்கும்
புஷ் நிர்வாகத்தின் திட்டத்தின் முக்கிய அம்சங்களை சென்ற மாதம் ஈராக்கிற்கு ஐ.நா- அனுப்பி இருந்த உண்மை அறியும்
குழு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா தனது சொந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றதும், ஐ.நா-வின்
உதவியை நாடியது. அமெரிக்க தற்காலிக கூட்டணி ஆணையம்
(CPA) பொறுக்கி எடுத்த பொம்மைகளான 25-உறுப்பினர் கொண்ட
ஈராக் ஆளும் குழுவுடன் சென்ற நவம்பரில் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அதில் கண்டிருந்த விதிமுறைகளின்படி,
இடைக்கால தேசிய நாடாளுமன்றம் 2004- ஜூன் 30-ந்தேதி தொடக்கி வைக்கப்பட இருந்தது. சென்ற மார்ச்
மாதம் முதல் அமெரிக்காவும், அதன் கூட்டணி இராணுவத்தினரும் நியமித்துள்ள உள்ளூர் மற்றும் மாகாண சபைகள் கொண்ட
உள்ளூர் குழுக்கள் மூலம் அதன் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர்.
ஈராக்கில் மோசமடைந்து கொண்டிருக்கும் நிலவரம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
மேலோங்கி நிற்க்கக்கூடும் என்ற கவலைகளுக்கிடையில் அமெரிக்கத் துருப்புக்கள் மீது கொரில்லா தாக்குதல்கள் அதிகரித்துக்
கொண்டிருக்கும் நேரத்தில் புஷ் நிர்வாகம் இந்தத்திட்டத்தை உருவாக்கியது. திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் தனக்கு
கட்டுப்பட்டு நடக்கின்ற ஈராக்கிய ஆட்சியை உருவாக்கி அதன் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளை அமெரிக்க
துருப்புக்களுக்கு பதிலாக முன்னனியில் வைப்பதுதான்.
உள்நாட்டில் புஷ் இந்த செயற்திட்டத்தை, ஈராக்கில் அமெரிக்க இராணுவம்
நீடித்துக்கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருப்பதால் இந்தத்திட்டம் ஈராக்கிலிருந்து ''வெளியேறுவதற்கான
மூலோபாயத்தின்'' தொடக்கம் என்று அமெரிக்க வாக்காளர்களுக்கு முன்வைக்கக் கூடும். அதே நேரத்தில், புதிய
''இறையாண்மை'' பெற்ற அரசாங்கம் அமெரிக்க பெரு நிறுவனங்கள், ஈராக்கை சூறையாடுவதற்கும், அதற்கெல்லாம்
மேலாக எண்ணெய் வளத்தை சூறையாடவும், தொடர்ந்து அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நீடிப்பதற்கும் தேவைப்படும்
சட்ட மூடிமறைப்பை வழங்கும்.
ஆனால் அந்தத்திட்டம் உடனடியாக எதிர்ப்பை சந்தித்தது. ஷியைட் மதகுரு நவம்பர் மாத
உடன்படிக்கைகளுக்கும் படையெடுப்பிற்கு பிந்திய முதலாவது அரசாங்கத்தில் வாக்கெடுப்பு எதுவுமில்லாமல்
நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக வந்தார். நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீதத்தை ஷியைட்டுகள்
கொண்டிருக்கின்றனர். ஹூசேனின் பாத் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் ஏற்பட்ட இடைவெளியை ஷியைட் மத
அடிப்படையிலான கட்சிகள், குறிப்பாக நாட்டின் தெற்கில் பெரும்பாலான பகுதிகளில் நிரம்பத் தொடங்கின மற்றும்
தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்த முடியுமென்று நம்பின.
மற்றவர்களாலும் இந்தத்திட்டம் எதிர்க்கப்பட்டது. அமெரிக்க ஆலோசனைகளின் படி,
எதிர்காலத்தில் அமையும் இடைக்கால அரசாங்கம் இருக்கின்ற ஆளும் சபைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான
ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்படும். அத்தகைய உடன்படிக்கைகள் எண்ணெய்வளங்கள் மீதான
நீண்டகால ஒப்பந்தங்களை வழங்குவதிலிருந்து ஈராக் எல்லைகளை அமெரிக்க இராணுவத்திற்கான நிரந்தர தளங்களாக
தருவது மற்றும் ஈராக் சட்ட விதிகளின்படி அமெரிக்க துருப்புக்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலிருந்து பாதுகாப்பு தருவது
உட்பட எல்லா அம்சங்ளையும் உள்ளடக்கும் என்று பல ஈராக்கியர்கள் பயந்தனர்.
ஜனவரியில், ஷியைட்டுக்களின் தலைமை மதகுருவான அயத்துல்லா அலி அல் சிஸ்தானி நேரடி
தேர்தலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். ஜூன் 30-ந்தேதி காலக்கெடுவிற்கு முன்னர்
எத்தகைய ஆர்ப்பாட்டமும் செய்யக்கூடாது என்ற அமெரிக்காவின் கூற்றை ஏற்க மறுத்தார். பாக்தாத், பாஸ்ரா,
மற்றும் நஜாப் நகரங்கள் முதலிய பெரிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான ஈராக் ஷியைட்டுக்கள் கண்டனப்பேரணிகளை
நடத்தினர். ஏற்கனவே சன்னி முஸ்லீம்கள் வாழ்கின்ற பகுதிகளில் கொரில்லா கிளர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிய
சூழ்நிலையில், அதேபோல ஷியைட்டுக்கள் வாழ்கின்ற தென்பகுதிகளிலும் நவம்பர் உடன்படிக்கைக்கு தெரிவிக்கப்பட்ட
எதிர்ப்பு சமுதாய கொந்தளிப்பாக உருவாகிவிடும் என்ற அச்சுறுத்தல் தோன்றியது.
நிலவரம் மோசமடைந்தும் சிஸ்தானி பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமறுத்தார். தனது
உள்ளூர் அரசியல் குழு திட்டம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு வாஷிங்டன் ஐ.நா-வின் உதவிக்கு
கோரிக்கை விடுத்தது. ஐ.நா-விற்கு வழங்கப்பட்ட ஆலோசனை என்னவென்றால் புஷ் திட்டத்தின் மிக முக்கியமான
அம்சங்களை சிஸ்தானியையும் மற்றவர்களையையும் ஏய்த்து ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு ஐ.நா- தனக்குள்ள
செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதில் புஷ் நிர்வாக செயற்பட்டியலின் முக்கியமான அம்சம் ஜூன்
30-ந்தேதி அதன் தேர்வுக்குள்ளான ஈராக் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதாகும்.
ஆரம்பத்தில், ''பாதுகாப்பு'' தொடர்பான அச்சங்ளை எடுத்துக்காட்டி ஐ.நா-
தயக்கம் காட்டியது. உண்மையான கவலை தனது பணியை நிறைவேற்றுவதற்கு தேவையான அரசியல் செல்வாக்கை
ஈராக்கியர் மத்தியில் கொண்டுள்ளதா என்பதுதான். மில்லியன் கணக்கான ஈராக்கியர்களைப் பொறுத்தவரை,
ஐ.நா-விற்கும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ள அமெரிக்க படைகளுக்குமிடையே அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும்
இல்லை என்பதுதான்.
1990-91 முதலாவது வளைகுடா போரிலிருந்து, ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க
ஆக்கிரமிப்புக்கு ஐ.நா உடந்தையாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. சதாம் ஹூசேன் ஆட்சியில் ''பேரழிவுகரமான
ஆயுதங்கள்'' இருப்பதாகவும் அவற்றை நீக்கிவிடுவதற்கு ஒரு வழியாக ஐ.நா- ஈராக் மீது பொருளாதார தடைகளை
விதித்து அவற்றை நியாயப்படுத்தியதால் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் மடிந்தனர். 2002 முழுவதிலும் அமெரிக்கா
போர் முயற்சிக்கு நேரடியாக உதவுகின்ற வகையில் ஐ.நா செயல்பட்டது. கடுமையான புதிய ஆயுதசோதனை
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள ஈராக் தவறுமானால் ''செயல் முனைப்பான விளைவுகள்'' ஏற்படும் என்று எச்சரிக்கும்
தீர்மானம் 1441 நிறைவேற்றப்பட்டது. ஐ.நா- பாதுகாப்பு சபை அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற சட்டவிரோத
படையெடுப்பை முறையாக அனுமதிக்கவில்லை. அப்படியிருந்தும் ஐ.நா சென்ற மேயில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு -
மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஈராக் எண்ணெய் வருவாயில் அதன் கட்டுப்பாடு - இவற்றுக்கு அங்கீகாரம் தந்தது
உட்பட அடங்கும்.
ஐ.நா- மீது ஈராக்கிய விரோதத்தை எடுத்துக்காட்டுகின்ற வகையில் சென்ற ஆகஸ்டில்
பாக்தாத்திலுள்ள ஐ.நா தலைமை அலுவலகங்கள் மீது குண்டு வீச்சுத்தாக்குதல்கள் நடைபெற்றன. அதில் ஐ.நா ஊழியர்கள்
தலைமை அதிகாரிகள் உட்பட டஜன் கணக்கில் மாண்டனர் அல்லது காயமடைந்தனர். அந்த குண்டுவெடிப்பில் ஈராக்கில்
பணியாற்றிவந்த ஐ.நா- தலைமை உயர் அதிகாரியான ஷெர்கியோ வியர்ரா டே மெல்லோ கொல்லப்பட்டார்.
ஐ.நா-தனது ஊழியர்களை ஈராக்கிலிருந்து வெளியேற்றியது, எல்லாவற்றுக்கும் மேலாக ஈராக் மீதான ஆக்கிரமிப்பிலிருந்து
தன்னை தள்ளி வைத்துக் கொண்டது மற்றும் மிச்சமிருக்கும் தனது செல்வாக்கைப் பாதுகாத்துக் கொண்டது.
பெப்ரவரியில் ஐ.நா ஈராக்கிற்கு திரும்பியது ஈராக் மக்கள் மீது கொண்ட அக்கறையால்
அல்ல, அமெரிக்க ஆக்கிரமிப்பால் மத்தியகிழக்கு முழுவதிலும் ஸ்திரமற்றநிலை ஏற்படும் என்று இதர பெரிய
வல்லரசுகளிடையே நிலவிய அச்சத்தின் எதிரொலியினால்தான். ஜூன் 30-க்கு முன்னர் நேரடியாக தேர்தல்களை
நடத்துவதற்கு ''செய்யத்தக்க தன்மையை'' ஆராயுமாறு உண்மை அறியும் குழு கேட்டுக்கொண்டது.
''நம்பகத்தன்மையுள்ள'' தேர்தலை நடத்துவதற்கு காலக்கெடுவை நிர்ணயிப்பது பற்றியும் "ஈராக் மக்களது விருப்பை"
எடுத்துக்காட்டுகிற வகையில் ''மாற்று ஏற்பாடு'' எதையாவது செய்ய முடியுமா என்பதையும் ஆராயுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டது.
அந்தக் குழுவிற்கு தலைமை வகிக்குமாறு ஐ.நா- துணை பொதுச்செயலாளர் லக்தார் பிராகிமியை
அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆப்கானிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியாக பெரும் எடுப்பிலான நிர்வாக
அதிகாரங்களுடன் வாஷிங்டன் தேர்ந்தெடுத்த ஹமீத் கர்ஸாயை ஆப்கனிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியாக
நியமிப்பதற்கு காரணமாக இருந்தவர். பெப்ரவரி 6-முதல் 13-வரை பிராகிமியும் அவரது குழுவினரும் ஆளும் கவுன்சில்
உறுப்பினர்களோடும் ஈராக் ஆக்கிரமிப்பை ஏற்று ஒத்துழைக்கும் மற்றவர்களோடும்,
CPA- பிரதிநிதிகளோடு
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிஸ்தானி தொடர்ந்து மறுத்து வந்த ஷியைட் தலைவர் சிஸ்தானியோடும் பலசுற்று
பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
அந்தப் பேச்சு வார்த்தைகளின் உள்ளடக்கம் இடம்பெற்ற அறிக்கையை உண்மை அறியும் குழு
ஐ.நா- பாதுகாப்பு சபைக்கு பெப்ரவரி 23-ல் தாக்கல் செய்தது. அமெரிக்காவின் உள்ளூர் அரசியல் குழு திட்டத்திற்கு
எதிர்ப்பு நிலவியதையும், நவம்பர் உடன்படிக்கையின் ''முறைமையான மற்றும் சட்டபூர்வமான தன்மை" பற்றி ''பல
ஈராக்கியர் ஆட்சேபித்ததையும்'' அந்த அறிக்கை கோடிட்டுக்காட்டியது. ஈராக் மக்களின் ஜனநாயக அபிலாசைகளுக்கு,
அனுதாபம் காட்டுவதாக பாவனை செய்தாலும், கால அவகாசம் இல்லை என்றும் பாதுகாப்பு தொடர்பான
கவலைகளையும் அது சுட்டிகாட்டியும் அடுத்த ஆண்டு வரையிலாவது வாக்குப்பதிவு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஐ.நா- எடுத்த நடவடிக்கையைப்போல் ''ஈராக் ஜனநாயக ஆட்சிமுறையை நிறுவுவதற்கு
நெடும்பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும்'' மற்றும் அது ''தேர்தல்கள் நடப்பது மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது"
என்றும்' ஐ.நா- குறிப்பிட்டது.
இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிற வகையில், ஐ.நா- அறிக்கை ''குறுங்குழுவாதம்
சூழ்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றது" மற்றும் "ஈராக்கில் உள் வகுப்புவாத அரசியல் அதிகமாய் துருவமுனைப்பட்டுள்ளது"
என்று எச்சரித்தது. "மிகப்பெருளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது", "ஆவேசமும் விரக்தி மனப்பான்மையும்
பெருகிக்கொண்டிருக்கிறது" மற்றும். "உள்நாட்டு கலவர மோதல்கள் மற்றும் வன்முறைகள் நடப்பதற்கான நிலவுகின்ற வாய்ப்புக்களை
பதட்டங்கள் மேலும் தூண்டிவிடக் கூடும்'' என அந்த அறிக்கை எச்சரிக்கிறது. இந்த வாதம் முற்றிலும் அகந்தை மனப்பான்மை
கொண்டது. தானே உருவாக்கிய, உருவாக்க உதவிய சமுதாய குழப்பத்தை ஐ.நா- இப்போது பயன்படுத்திக்
கொண்டிருக்கிறது. சட்டவிரோத அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஐ.நா- தான் அங்கீகாரம் அளித்தது. இப்போது ஜனநாயக
உரிமைகளை மிதித்து நசுக்குவதை மேலும் நியாயப்படுத்துவதற்கு ஆயுதம் ஏந்திய எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஈராக் தலைவர்களுடன் ஒரு வாரம் பேச்சுவார்த்தைகள் நடத்திய
பின்னர் ஐ.நா- அறிக்கை அறிவித்திருப்பது என்னவென்றால், ''இறையாண்மை கொண்ட அரசாக விரைவில் மாற்றுவதற்கான
ஈராக்கிய மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற" ஜூன் 30-என்ற காலக்கெடுவை அறிவிக்கிறது. தேர்தல் இல்லை என்பதற்கான
ஆணை தவிர்த்து, உண்மை அறியும் குழு, எப்படி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று பரிந்துரை எதையும் செய்யவில்லை.
ஆயினும், தற்போது வாஷிங்டன் கடைப்பிடித்துவரும் நடைமுறையை ஆதரிக்கிறது. தற்போது செயல்பட்டு வரும்
ஆட்சிக்குழுவை 150-முதல் 200- உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தினால் அது முறைமையான "இடைமருவு சட்ட
சபையை" உருவாக்கலாம் என அறிக்கை ஆலோசனை கூறியுள்ளது.
ஐ.நா- பரிந்துரைகளுக்கு சிஸ்தானி சாதகமாக கருத்துக்தெரிவித்தார். அமெரிக்க
நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வாக்குச்சீட்டு இல்லாமல் இப்போது அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை
ஒப்புக்கொள்வதாக சிஸ்தானி அறிவித்தார். தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால ஆட்சி அங்கத்தில் தனக்கு பெருமளவிற்கு
செல்வாக்கு இருப்பதற்கு அனுமதிக்கப்படும் என்பதை வாஷிங்டன் ஏற்றுக்கொள்வதாக பிராகிமி தனக்கு கோடிட்டு
காட்டியிருக்கலாம், என்றும் சிஸ்தானி குறிப்பிட்டார்.
ஐ.நா- குழுவின் ஒட்டுமொத்த தாக்கம் என்னவென்றால் புஷ் நிர்வாகத்திற்கு ஒரு வகை
அரசியல் மூச்செடுப்பை வழங்க இருக்கிறது. ஆளும் சபையும் பிரேமரும் இடைக்கால அரசியல் அமைப்பு தொடர்பாக
மறைமுக பேரத்தில் ஈடுபட்டனர். அது விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஏப்ரலில் பிராகிமி திரும்பி வந்து இடைக்கால
அரசாங்கம் எவ்வாறு நியமிக்கப்படும் என்பது குறித்து சமரசப்பேச்சு நடத்துவார்.
2005-ல் வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை தொடங்குவதற்காக
ஐ.நா- தேர்தல் பிரிவைச்சார்ந்த ஒரு குழு ஈராக் வரவிருக்கிறது. என்றாலும் ஏற்கனவே ஐ.நா- சமிக்கை
காட்டியிருப்பதைப்போல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையினால் தேர்தல்கள் காலவரையின்றி தள்ளிவைக்கப்படலாம்.
சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு ஒரு முன் நிபந்தனை என்னவென்றால் பாதுகாப்பு
சூழ்நிலை மேம்பட்டதாக இருக்கவேண்டும் என்று ஐ.நா- குழு அறிக்கை வலியுறுத்தியது (அழுத்தம் சேர்க்கப்பட்டது)
ஐ.நா- தலையீடு உண்மையான ஈராக் அரசியல் நிலவரத்தை மாற்றிவிடவில்லை. ஈராக்
இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு அமெரிக்காவின் சட்டவிரோத படையெடுப்பினால் பாதிக்கப்பட்டிருகிறது.
மிகப்பெருமளவில் தனது மதிப்பை இழந்து கொண்டிருக்கிற ஐ.நா- இதையெல்லாம் அங்கீகரித்துள்ளது. அமெரிக்கத்
துப்பாக்கிகளின் கீழ் நிறுவப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் எந்த ஈராக்கிய அரசாங்கமும் எந்தவித
சட்டமுறைமையையும் கொண்டிருக்காது. ஈராக் மக்கள் தங்களது தலைவிதியை ஜனநாயக முறையில் முடிவு செய்வதற்கு
ஏற்ற முன் நிபந்தனை என்னவென்றால், உடனடியாக எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அமெரிக்கா மற்றும்
வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து இராணுவத்தினரும், ஏனைய ஊழியர்களும் வெளியேற வேண்டும் என்பதாகும். |