WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
èEQ
தொழில்நுட்பம்
Microsoft threat to discontinue Windows 98 and NT operating systems
விண்டோஸ் 98
மற்றும் NT
இயக்க முறைமையை நிறுத்திவிடுவதாக மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல்
By Kerem Kaya and Mike Ingram
19 February 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
பழைய தலைமுறை விண்டோஸ் இயக்க முறைமை
(Operating Systems[OSs]), விண்டோஸ்98 மற்றும்
NT
இவற்றிற்கு ஆதரவுகொடுப்பதை நிறுத்திவிடுவதாக மைக்ரோசாப்ட் எடுத்த முடிவு, நீண்ட காலத்திற்கு முடிவை
ஒத்திவைக்கும் விளைவை சந்தை எதிர்விளைவினால் ஏற்படுத்தியுள்ளது.
எளிதாகக் கூறவேண்டுமென்றால்
OS என்பது, ஒரு
கணினியின் பயன்பாட்டுமுறைகளான, சொல் செயலிகள் (word
processors), மின்னஞ்சல் நிரல்கள்
(email programs),
விளையாட்டுக்கள் போன்றவை அந்தக் குறிப்பிட்ட கணினியின் வன்பொருளுடன்(computer
hardware) ஒத்துச்செயல்புரியுமாறு செய்தலாகும்.
OS ம் கணினியின்
வன்பொருளைப் போலவே மிக முக்கியமானதாகும். ஒரு சராசரி கணினிப் பயனர்
OS ஐப்பற்றி அறிவது,
குறிப்பிட்ட பயன்பாட்டை அவர்கள் அதைப் பயன்படுத்தி நடைமுறையில் செயல்படுத்தும்போதுதான். மைக்ரோசாப்ட்
நிறுவனம், மேசை கணிப்பொறியை(desktop
computer) பொறுத்தவரையில், அதன் செயல்முறை விண்டோஸ்
இயக்க முறைமைகளினால், கணிசமான ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது என்பது மட்டுமின்றி மைக்ரோசாப்ட்
ஆபீஸ் எனப்படும் வணிக பயன்பாடுகளிலும் (business
applications) ஆதிக்கம் செலுத்துவதற்கு இதைப் பயன்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்டின் நீண்ட காலப் போட்டியாளர்களான சன் மைக்ரோசிஸ்டம்ஸ்,
சமீபத்தில் அதன் புதிய ஜாவா டெஸ்க்டாப் என்பதை வெளியிட்டது; இது பிரபலமாகியுள்ள நிழிஹி-லிவீஸீuஜ் திறந்த
மூல முறைமையை (open source system)ஆதாரமாகக்
கொண்டிருக்கிறது. சன் நிறுவனத்துடைய புதிய உற்பத்திப் பொருள் புகழ்பெற்ற ஜாவா அடையாளப் பெயரைத்
தன்னுடைய குறுக்கு பனித்தள நிரல் மொழிக்கு (cross
platform programming language) பயன்படுத்துவதில்
தீவிரமாக இருக்கிறது; இது இணைய பயன்பாடுகளுக்கான (Internet
applications) தேர்வுகளின் உருவாக்க பனித்தளமாக (development
platform) மாறியிருக்கிறது. தன்னுடைய ஏகபோக உரிமைக்கு
அச்சுறுத்தல் என்று கருதி, ஜாவா மொழியைத் தகர்க்க மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பழைய
கிளின்டன் நிர்வாகத்தால் இந்நிறுவனத்திற்கு எதிராக 2000ம் ஆண்டில் நிறுவனக்குவிப்பு எதிர்ப்பு வழக்கின் மையத்திற்கு
கொண்டுசெல்லப்பட்டது.
ஏப்ரல் 2003ல் மைக்ரோசாப்ட் ஓர் அறிவிப்பில், "டிசம்பர் 15 லிருந்து" அதன்
விண்டோஸ் 98 மற்றும் NT
இயக்க முறைமைகள், மற்றைய மைக்ரோசாப்ட் பொருட்களுடன், தங்களுடைய வினியோகமுறைகள் மூலம் "வாடிக்கையாளர்களுக்குக்
கிடைக்காது" என்று தெரிவித்தது. "2001 ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட ஒர் உடன்பாடுதான்" தன்னுடைய முடிவிற்குக்
காரணம் என்று மைக்ரோசாப்ட் குற்றஞ்சாட்டியது. மைக்ரோசாப்டிற்கும், சன் மைக்ரோசிஸ்டம்ஸிற்கும் இடையே,
சன்னுடைய ஜாவா தொழில்நுட்ப முறையைப் பற்றிய நீதிமன்றத்தலையீட்டினால் ஏற்பட்ட உடன்படிக்கையை இது
குறித்தது. இந்த உடன்படிக்கை மைக்ரோசாப்ட் தன்னுடைய ஜாவா மெய்நிகர் பொறியை
(Java Virtual Machine)
வழங்கத் தடை செய்திருந்தது; இந்த மென்னியம் ஜாவா மொழியில் ஒரு பயன்பாட்டின் குறிமுறையை விளக்கும் திறனைக்
கொண்டிருக்கிறது.
டிசம்பர் 17ம் தேதி, இதற்குப் பதில் கூறும் வகையில் சன், தன்னுடைய
மென்பொருள் குழுவின் நிர்வாகத் துணைத் தலைவரான ஜோநதன் ஷ்வார்ட்ஸிடமிருந்து "ஒரு பகிரங்கக் கடிதத்தை"
வெளியிட்டது. "இந்தப் பிரச்சினை ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் உடன்பாட்டின் பகுதியென்றும், இதை சன்
அடுத்த ஆண்டு [2004]
செப்டம்பர் வரை நீடித்து வைப்பதாகவும்" சன் அறிவித்தது. மேலும் மைக்ரோசாப்ட் "ஒருதலைப்பட்சமாக
தங்களுடைய பொருட்களைச் சந்தையிலிருந்து அகற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், பின்னர் இதற்காகச்
சன்னைக் குறை கூறிவிட்டதாகவும்" சன் அறிவித்தது. இந்த நிர்வாகத் துணைத்தலைவர் பின்னர் மைக்ரோசாப்டைத்
தாக்கிக் கூறுகையில் இந்தச் செயல் "ஒரு நிர்வாகம், மிகப் பெரும் புகழுடன் சந்தையில் ஆதிக்கம்
கொண்டிருந்தபோதிலும்கூட, எவ்வாறு வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமைகளை மறுப்பதற்கு உதாரணப்
படிப்பினையாக இருக்கிறது என்றும், ஏற்கனவே வாடிக்கையாளர் தளம் வைரஸ் தொல்லைகளாலும், பாதுகாப்புப்
பிளவுகளாலும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கையில், தேவையற்ற மாறுதலைக் கட்டாயமாக கொண்டுவர நினைக்கிறது."
எனக் கூறியுள்ளார்.
"ஜாவா தொழில்நுட்பத்திற்கான அனுமதி உரிமத்தை சன் கொடுப்பதாக இசைவு தெரிவித்துள்ளது,
தொடர்ந்தும் கொடுக்கும்" என்று ஷ்வார்ட்ஸ் சேர்த்துக் கொண்டார். அதாவது, ஒரு உபயோகிப்பாளரின் பார்வையிலிருந்து
ஜாவா எப்பொழுதும் மைக்ரோசாப்டிற்குக் கிடைக்கும், அதாவது சன்னிடத்தில் மைக்ரோசாப்ட் இந்த முக்கிய
தொழில்நுட்பத்திற்கு நம்பியிருக்கிறது என்று ஒப்புக்கொண்டால்; இதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும்
என்ற கட்டாயமும் கிடையது. ஒரு தனி அறிக்கையில், ஆக்ரோஷமான சந்தைக் கொள்கையை அறிவித்து,
மைக்ரோசாப்டே இலக்கு வைக்கும் முறையில் தன்னுடைய டெஸ்க்டாப் மென்னியத்தில் விலையை மைக்ராசாப்ட்
குறிக்கும் விலையை விட 50 சதவிகிதம் குறைவாக விற்கும் என்றும் ஷ்வார்ட்ஸ் கூறியுள்ளார்.
இதற்கான மைக்ரோசாப்டின் விடை சற்று கலவையாகத்தான் இருந்தது. உருவாக்குபவர்
பிரிவின் பொருள் மேலாளரான டோனி குட்ஹ்யூ, துவக்கத்தில், "2004 ஜனவரி 2ம் தேதியிலிருந்து சில பட்டியலில்
இருக்கும் பொருட்களை நாங்கள் விற்பனை செய்வதற்கில்லை; ஏனெனில் அவை மைக்ரோசாப்ட் மெய்நிகர்
பொறியின் (Microsoft virtual machine)
ஒரு கூறுபாட்டைக் கொண்டிருக்கிறது; நாங்கள் அதை சன்னுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்குவதற்கில்லை."
என்று கூறினார்.
இதன்பிறகு, மைக்ரோசாப்ட் தன்னுடைய இறுதிக் கெடுவை, சில உற்பத்திப்
பொருட்களை "ஓய்வடைந்துவிட்டது" என அறிவிப்பதை டிசம்பர் 23, 2003க்கும், அதன்பின்பு 2004 ஜனவரி
16க்குமாக ஒத்திவைத்தது. இப்பொழுது அது ஜூன் 2006க்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
இந்த இறுதிக் கெடு 2006 ஜூன் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டபின்னர்,
மைக்ரோசாப்டின் ஆஸ்திரேலியப் பகுதியின் மூத்த விண்டோ டெஸ்க்டாப் உற்பத்திப் பொருளின் சந்தை மேலாளரான
டானி பெக், அறிவித்தார்: "உலகெங்கிலும் இருக்கும் நம் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பொருட்டு
மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது." வளரத்தலைப்பட்டுள்ள சந்தைகளைப் பற்றிய குறிப்பு முக்கியத்துவம்
வாய்ந்தது; ஏனெனில் இது நிறுவனம் இப்பகுதிகளில்
Linux க்கு இழந்துவிடக்கூடும் என்ற அக்கறையையும் பயத்தையும்
காட்டுவதாக உள்ளது.
இந்தப் பழைய உற்பத்திப் பொருட்களின் "ஓய்வு" என்பது இந்த முறைமைகளை இப்பொழுது
பயன்படுத்துபவர்களுக்குத் தீவிரமான விளைவுகளைக் கொடுத்திருக்கும். "ஓய்வு" எனக் கூறும்போழுது, உற்பத்திப்
பொருட்கள் சந்தைகளில் இனி விற்பனை செய்யப்படமாட்டாது என்று மட்டுமின்றி, இதற்கான ஆதரவு இனி
வழங்கப்படமாட்டாது என்ற பொருளையும் கொடுக்கும். இப்பொழுது இதைப் பயன்படுத்துபவர்கள்,கிட்டத்தட்ட
அன்றாட வாடிக்கையாகி விட்ட புதிய பாதுகாப்பு ஆபத்துக்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வழியின்றித்
திணறுவர். மைக்ரோசாப்டின் கணக்கின்படி, பயன்படுத்துவோர் வேறுவழியின்றி புதிய
XP செயல்முறைக்குத்
தம் கருவிகளை உயர்த்திக்கொள்ளவேண்டும்; இது நிறுவனத்திற்கு கூடுதலான வருவாயைத் தரும்.
விண்டோஸ் XP
உடைய மந்த விற்பனை
எனவே பொருட்களின் விற்பனை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் "கட்டாயமாக
மேம்படுத்தல்" உத்தியாகக் காணப்பட்டது. வணிகத்தலங்களில், வீடுகளில் பயன்படுத்துவோர் என்ற
இருசாராருமே, கூடுதலான வன்பொருட் தேவைகளைப் பெருக்கும் முறைக்கு உயர்த்திக் கொள்ளத் தயக்கம்
காட்டிவருகின்றனர். ஆட்டாவாவைத்(Ottawa)
தளமாகக் கொண்டுள்ள தகவல் நுட்பத்துறை சொத்துமதிப்பு பகுப்பாய்வாளர்களும் கருவிகள் விற்பனையாளர்களுமான,
AssetMetric Inc.
என்பவர்கள் அமெரிக்காவில் 670 நிறுவனங்களில் வெவ்வேறு வகையிலான,
370,000 தனிக் கணினிகள் விற்றதைப் பயன்படுத்துவோரை ஆராய்ந்து, விண்டோஸ் 95/98/NT
ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்திற்கும் மேலாக அனைத்துப் பெருநிறுவன விண்டோஸை
உபயோகிப்பவர்களைக் காட்டிலும் அதிகம் என்று கூறுகிறது. ஜனவரி 2001ல் வெளியிடப்பட்ட விண்டோஸ்
XP 6.6 சதவிகிதத்தினரால்தான்
உபயோகிக்கப்படுகிறது என்றும், 19.8 சதவிகிதத்தினர் விண்டோஸ் 95 அல்லது விண்டோஸ் 98 ஐப் பெற்றிருக்கவில்லை
என்றும் மேலும் தெரிவிக்கிறது. மற்ற ஆய்வுகளும் பழைய முறைகளைக் கணிசமாகப் பயன்படுத்துவோரைத்தான் குறிப்பிடுகின்றன.
IT Week
கிட்டத்தட்ட நிறுவனங்களில் 35 சதவிகிதம் இன்னும் விண்டோஸ் 95, 98 அல்லது
ME (Millennium)
ஆகியவற்றை டெஸ்க்டாப்பில் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
வீட்டு உபயோகிப்பாளர்களைப் பொறுத்தவரையில், நிலைமை பெரிதும் மாறுபட்டு விடவில்லை. இணையத்தின் தேடுபொறியான
Google
உடைய கருத்தின்படி, செப்டம்பர் 2003ல், இணையத் தேடலில் 29 சதவிகிதத்தினர் விண்டோஸ் 98 கணினிமுறையைப்
பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. Analyst IDC,
39 மில்லியன் பேர்கள் உலகம் முழுவதிலும் விண்டோஸ் 98ஐப் பயன்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது.
PC கணினித் தொழில்துறையில் பொதுவாக
விண்டோஸ் OS அமைப்பின் சராசரி பயன்பாட்டுக்காலம் சுமார்
மூன்று ஆண்டுகாலத்தைக் கொள்ளும் என்று அனுமானிக்கப்பட்டிருந்தது. இந்தக் கருத்தை ஒட்டி, விண்டோஸ் 98 முதலில்
சந்தையில் 1998ல் வெளியிடப்பட்டு, பின்னர் "98 SE (இரண்டாம்
பதிப்பு) 1999 ல் தொடர்ந்தது. NT
யோ 1996ல் வெளிவந்தது ஆகும். கடுமையான விளம்பரம், வசதியான தர உயர்வு என விண்டோஸ்
XP மொத்த உடன்பாட்டில் வந்திருந்த போதிலும் கூட, புதிய முறை மக்களிடையே
வாங்கப்படுதல் பெரிதும் குறைவாகத்தான் இருந்தது. இதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலில் புதிய
முறைக்குத் தேவையான வன்பொருள் (hardware) அதிகம்
ஆகும். மைக்ரோசாப்டிலிருந்து புதிய உரிமம் பெறுவதற்கு கொடுக்க வேண்டிய கட்டணங்கள், புதிய வன்பொருளை
கணினிக்கு வாங்குவதற்குச் செலவழித்தலை எதிர் கொள்கையில், வணிக மற்றும் தனி உபயோகிப்பாளர்கள் தரத்தை
உயர்த்த ஆகும் செலவு பற்றி நம்பிக்கை கொள்ளவில்லை என்று தெரியவருகிறது. மேலும் புதிய OS
முறையில் பழைய பயன்பாட்டுமுறைகளைக் கொள்ளுவதில் சில பிரச்சினைகளும் எழுகின்றன; laptop
கணினியில் குறிப்பாக இந்த வன்பொருள் இயைந்து போதல் கூடுதலான பிரச்சினையாகும்.
XP உடைய வெளியீடு 2001ல் மென்பொருள்
தொழில்துறையில் நிதிக் குமிழ் வெடித்ததைத் தொடர்ந்து வந்தது. நிறுவனங்களும் சாதாரண உபயோகிப்போரும்
விரைவில் அவர்கள் பணம், கணினித்தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, பயனுடைய வகையில் வேறுவிதத்தில் செலவழித்தால்
நன்று என்றும் இருப்பதே உயர்வு என்றும் கருதத்தலைப்பட்டனர். 2001ம் ஆண்டில் அமெரிக்கத் தனிநபர் கணினி(PC)
விற்பனையும் அதற்கு முந்தைய ஆண்டை விட 12 சதவிகிதம் சரிந்தது.
இந்தப் புறநிலை பொருளாதார உண்மைகளை கடந்து சென்று, உபயோகிப்பவர்களைப் பயமுறுத்தியே தர உயர்விற்குச்
செலவிடச்செய்யலாம் என்று மைக்ரோசாப்ட் நினைத்தது போலும்.
XP தரத்திற்கு
மேம்படுத்தல் ஒன்றுதான் வணிக மற்றும் வீட்டு உபயோகிப்பாளருக்கு ஒரேவழி என்பது இல்லை என்று உணர்ந்ததன்
அடிப்படையில்தான் விற்பனையை நிறுத்துவது அவர்கள் முடிவாயிற்று.
Linux க்கு பெருகிய
விளம்பரம் மூலம் வணிக ஆதரவு, முக்கியமான பல நிறுவனங்கள்
IBM உட்படக்
கொடுத்ததும் இந்த உணர்வில் ஒரு முக்கிய பங்ககைக் கொண்டிருந்தது; அதேபோல், புதிய
Linux
தளம்கொண்ட ஜாவா டெஸ்க்டாப்பை சன் நிறுவனம் பெரும் முயற்சியோடு விற்பனை செய்ய முற்பட்டதும் ஒரு காரணமாகும்.
கணினி மென்பொருளும் சமுதாயமும்
இப்பொழுது அது இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட
போதிலும், துவக்க அறிவிப்பு, மைக்ரோசாப்ட் மனத்தளவில் தன்னுடைய அன்றாடக் கொள்ளை அடிக்கும் பெருநிறுவன
முறையைத் தன்னுடைய வாடிக்கையாளர் தளத்திலேயே காட்டத் தலைப்படுவதில் எந்த உறுத்தலையும் காட்டவில்லை
என்பது புலப்படுத்துப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டைக் குறைகூற, அதிலும் அதன் பெருநிறுவனப் போட்டியாளர்களான
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்றோர் தயாராக இருந்தது கடினமான விஷயம் இல்லை. ஆனால் இதே நிலைமை
மாறியிருந்தால், சன் ஏகபோக உரிமை கொண்டிருந்தால், அவர்களுடைய நடவடிக்கைகள், மைக்ரோசாப்டைவிட
மாறுபட்டிருந்திருக்கும் என்று கூறுவதற்கில்லை.
சன், IBM,
மற்றவர்கள் தடையற்ற Linux
இயக்க முறைமையை மைக்ராசாப்டிற்கு எதிரான பெருநிறுவன ஆயுதம் என்று நினைத்த போதிலும், பெரும்பாலான
சாதாரண உபயோகிப்பவர்களுக்கு, Linux,
மைக்ரோசாப்டின் தடைகளிலிருந்து வெளிவரும் ஒரு வழியாக மட்டும் தோன்றாமல், முதலாளித்துவ உடைமை உரிமையாண்மை
ஒட்டுமொத்தத்திலிருந்தும் வெளிவருவதற்கு ஒரு வழியாகத் தெரிகிறது. இணையம் (Internet)
மக்களிடையே தொடர்பிற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் பெரிதும் பயன்படும் ஊடகமாக 1990களின் இடைப்பகுதியிலிருந்து
வளர்ந்தபின்னர், பொதுவான தரங்களின் தேவைகள் பற்றிய உணர்வும், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் மக்களுடைய
வாழ்வின் முக்கிய கூறுபாடாக உள்ள ஒரு பொருள் பொதுக் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்ற உணர்வும்
தோன்றியுள்ளன.
இருபது ஆண்டுகள் சந்தையைப் பிடிக்க நடத்திய போராட்டத்தின் விளைவான
மைக்ரோசாப்டின் இன்றைய ஏகபோக நிலைமை, உபயோகிப்போரின் வீட்டு வாசலில் கிடைக்கும் நன்மையைக் கூட,
அதாவது, கணினி நுட்பத்தின் சமூகத் தன்மையைக் கீழறுக்க, அது தயங்காது என்பதை நினைவுறுத்துகிறது.
டிரஸ்ட் எதிர்ப்பு வழக்கு சுட்டிக்காட்டியுள்ளது போல், ஏகபபோக உரிமையுடைய முதலாளித்துவத்தின்
கொடுமையான நடவடிக்கைகளைக் குறைக்க எடுக்கப் படும் மிகக் குறைந்த நடவடிக்கைகளும், அனைத்து
நிறுவனங்களுக்கும் சமதளம் எனக் கூறப்படும் வாய்ப்புக்களைத் தோற்றுவித்தல் என்ற கருத்துக்களும், தன்னுடைய
இன்றைய நலனுக்கு மட்டுமே வாழவேண்டும் என்று கருதும், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்ள விரும்பும் மற்றும்
சமூக முன்னேற்றத்தின் காலத்திற்கு ஒவ்வாதனவாகப் போய்விட்டதாகக் கருதப்படுவனவற்றைத் திரும்பப் பெற மறுக்கும்
ஆளும் செல்வந்தத் தட்டின் பிரதிநிதிகளால் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.
கணினி தொழில் நுட்பத்தின் எழுச்சியினால் வரக்கூடிய மகத்தான திறனை முற்றிலும் அடையப்பட
வேண்டும் என்றால், அது இலாப அமைப்பு முறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் மூலம் அனைத்தும் ஜனநாயகக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இன்றியமையாதது ஆகும்.
Top of page |