World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியாWhat is the United Kingdom Independence Party? ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி என்பது என்ன? By Julie Hyland and Chris Marsden பிரிட்டனில் சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UK Independence Party UKIP) யின் எழுச்சி, ஒரு முக்கியமான எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும். ஐரோப்பிய கண்டத்தை ஒரு சுதந்திரமான சோசலிச முன்னோக்கில் ஒன்றுபடுத்தக்கூடிய அமைப்பு இல்லாத நிலையில், UKIP யினால் ஐரோப்பிய ஒன்றியம், அதன் அதிகாரத்துவ, பெருவர்த்தக கொள்கை வலது புறம் திரும்புதல் இவற்றிற்கெதிரான கோபத்தையும் விரோதப் போக்கையும் தன்மூலம் வெளிப்படுத்த முடிந்தது. UKIP, 1999ல் தான் பெற்ற வாக்குகளைப் போல் இருமடங்கு பெற்றது, தேசிய வாக்குகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதனுடைய வெற்றி பிரிட்டிஷ் அரசியலில் ஒரு புதிய சக்தி என்று பாராட்டப்படுவதோடு, "ஆட்சியை யார் அமைப்பது" என முடிவு செய்யும் திறனையும் கொள்ளும் என்று கணிக்கப்படுகிறது. Telegraph, இந்த UKIP பெற்ற விளைவை பிரிட்டனின் எதிர்கால "Pim Fortuyn moment" என - நெதர்லாந்தில் அதன் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் நடந்த மே 2002 தேர்தலில் வலதுசாரி, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு List Pim Fortuyn கட்சியின் எழுச்சிக்கு ஒப்பிட்டு எழுதியுள்ளது.லிஸ்ட் பிம் பார்டூனுடைய குமிழியோ வெகு விரைவில் சிதறிப் போயிற்று. ஓராண்டிற்குள் அது தேர்தல்களில் தான் பெற்றிருந்த ஆதரவில் மூன்றில் இரு பங்கை இழந்தது. ஆனால் அதன் முக்கிய சாதனை டச்சு நாட்டு அரசியலில், சமூக நலன்புரிக்கு எதிரான தாக்குதலுடன் சேர்த்து புலம்பெயருவோருக்கு எதிரான வாய்ச்சவடால் மற்றும் சட்டம் ஒழுங்கு குற்றம் என்பதன் அடிப்படையில் ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை சட்டரீதியாக்கியதன் மூலம் வலதுக்கு திரும்பியது ஆகும், அவை மற்ற உத்தியோகரீதியான கட்சிகளாலும் விரைந்து ஏற்கப்பட்டது. UKIP உடைய வருங்காலம் எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. வலதுசாரி டோரிக்கள், புதிய பாசிஸ்ட்டுகளின் கலவையாக இருக்கும், இது அரசியல் நிறமாலையில் பலபுறத்திலிருந்தும் அதிருப்தி அடைந்தவர்கள் வாக்கைப் பெற்று, மிகவும் உறுதியற்ற அமைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் நீண்டகாலத் தலைவிதி எவ்வாறாயினும், பிரிட்டனில் அரசியலை வலது புறம் தீவிரமாகத் திருப்பும் ஒரு கருவியாகத்தான் இப்பொழுது உள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஜனநாயக முறையற்ற அமைப்பாக முகமற்ற அதிகாரத்துவத்திற்கு துணை நிற்கிறது என்ற கருத்து மக்களிடையே கணிசமான பிரிவில் இருப்பதையும் அதையொட்டிய விரோதப் போக்கையும் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் UKIP இப்பொழுது உள்ளது; மேலும் தன் கட்சி ஒன்றுதான் பிரிட்டன் ஐரோப்பாவோடு கொள்ளவிரும்பும் திகைப்பான பிரச்சினையில் மற்ற மூன்று முக்கிய கட்சிகளும் கொண்டுள்ள ஒருமித்த கருத்திற்கு எதிராக இருப்பதாகவும் காட்டிக் கொண்டுள்ளது. எப்படியிருந்தபோதும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, UKIP சமுதாய பின்தங்கிய, தேசியவாத, அந்நியரிடம் காட்டும் எதிர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. "பிரிட்டிஷ் தேசிய இறைமை", "மக்களுடைய உரிமைகள்" போன்ற கோஷங்கள் உண்மையில் வேலைகொடுப்போரின் "உரிமைகள்", சமூக சிந்தனைகள், பொருளாதாரப் போக்குகள் இவற்றை மறைக்கும் திட்டத்தைத்தான் பெற்றுள்ளன; அதாவது அமெரிக்க முறையிலான நாய்-நாயைத்தின்னும் சமுதாயத்தை புகழ்தல், அனைத்து சமூக பொதுநலத்திட்டங்களை தகர்த்தல், பெருவர்த்தகத்திற்கு எதிராக உள்ள தடைகள் அனைத்தையும் சட்டபூர்வமாக அகற்றுதல், வாஷிங்டனுடன் வர்த்தக பாதுகாப்புத் துறைகளின் உடன்பாடு கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கொள்ளைமுறையை வளர்த்தல் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு யோர்க்ஷைர் சொத்துரிமையாளர் போல் சைக்ஸ், மற்றும் கென்ட்டின் அலன் பிரெளன் என்ற பெருவர்த்தகர் இவர்களால் பெரும் நிதியுதவி பெறும் UKIP பலகாலமாகவே "விளிம்பில்' நிற்கும் ஒரு கட்சியாகக் கருதப்படுகிறது. மார்க்கரெட் தாட்சரின் கருத்தளிப்புக்களை, கிட்டத்தட்ட ஒரு சமயவெறியில் வளர்க்கும் தன்மையில் EU வை நலன்புரித்திட்டங்களின் சொர்க்கம் எனப் பறைசாற்றி, ஆங்கிலோ-சாக்சனியர்களின் மாதிரியாக உள்ள "சுதந்திர நிறுவனங்களை" கீழறுக்கும் சதி ஆக "புள்ளியியலாளர்களால்" கருதப்படுகிறது. பெரு வணிகத்தின் கொள்ளைமுறைக் கோரிக்கைகளை கட்டுப்படுத்தும் எந்த முயற்சிகளுக்கும் குரோதமாக இருப்பதே UKIP உடைய முக்கிய சிறப்பியல்பாக உள்ளது. ஐரோப்பாவை பொறுத்தவரையில், தடையற்ற முதலாளித்துவத்திற்கு கோட்டை போல் ஒற்றை ஐரோப்பியச் சந்தை யைத் தோற்றுவிக்கும் முறைக்கு மார்க்கரெட் தாட்சர் ஆதரவு கொடுத்தது சரியே என்பது UKIP உடைய வாதம் ஆகும். ஆனால் இதன்பின்னர் EU ஒரு அரசாங்கக் கட்டுப்பாட்டின் கோட்டையாக இருந்து, பிரிட்டனின் பொருளாதார மாற்றத்தைக் கீழறுக்க அச்சுறுத்தும் வகையிலும் அல்லது திருப்பும் வகையிலும் கூட, டோரிக்களுடைய பழைய தலைவர் காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, மிகக்குறைவான பெருநிறுவன வரிகளைக் கொண்ட சொர்க்கமாக மாறியதையும் மாற்றும் போல் உள்ளது. இக்கொள்கையுடன், மரபுவழியில் வலதுகளின் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு வாய்ச்சவடாலும் இணைந்துள்ளது. இது UKIP ஆதரிக்கும் கொள்கைகளின் விளவாக வந்துள்ள சமுதாய அதிருப்திக்கே பலியாடாக அமைந்துள்ளது. இத்தகைய கொள்கைகள், கன்சர்வேடிவ், தொழிற்கட்சி ஆகிய இரு கட்சிகளுமே ஆதரவு கொடுத்துள்ள EU வின் கொள்கை கூறுபாடுகளைத்தான், அதாவது நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள், நிதி அமைப்புக்கள் ஆகியவை ஐரோப்பா முழுவதும் உழைக்கும் மக்களை திறமையுடன் சுரண்டும் வகையைத்தான் பிரதிபலிக்கின்றன. இத்தகைய கொள்கைகள், UKIP உடையதைப்போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முக்கிய போட்டியாளாக ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கு விரோதப் போக்கைக் காட்டுகின்றன; ஏனெனில் அத்தகைய வளர்ச்சி பிரிட்டன் மரபுவழியில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு "பாலமாக" விளங்கும் பங்கின் மதிப்பைக் குறைத்து, அதன் முக்கிய ஐரோப்பியப் போட்டியாளருக்கு எதிராகவும் பிரிட்டனை குறைமதிப்பிற்கு ஆளாக்கிவிடும். ஆனால் பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் எதிராக பதுங்குகுழிப் போர் நடத்தும் முறைக்கு அப்பாலும் UKIP செல்ல விரும்புகிறது. அரைகுறை சமரசப் போக்கிற்கு முற்றுப்புள்ளிவைத்து, உடனடியான, முழுமையான வகையில் EU விலிருந்து வெளியேறவேண்டும் என்று விரும்புகிறது. 1992 ம் ஆண்டு ஐரோப்பிய நாணய மாற்றுவிகித முறையில் இருந்து பவுண்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, டோரிக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை ஒட்டித்தான் UKIP இன் உடனடி மூலங்கள் இருந்தன. டோரிக்குள் இருந்த இத்தன்மைப் பிரிவுகள், அதாவது EU விற்குள் இருப்பதா, கூடாதா என்பதில் வெளியேறவேண்டும் என்ற கருத்து உடையவர்கள் இப்பிரச்சினையை ஒட்டி கட்சியைவிட்டே வெளியேறத்தயாராக இருந்தனர் என்ற அளவிற்குப் போய்விட்டது. UKIP உடைய சமீபத்திய வெற்றி, நடைமுறையிலுள்ள கட்சிகளின் வலதுபுறத் திருப்ப விளைவின் வெற்றியாகும்; மேலும் மக்களுடைய பரந்த அடுக்குகள் இடையே அவர்களின் சமூகத்தளத்தை இழந்தது, அத்துடன் ஈராக் போர் மற்றும் அதன் பின்னரான ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அதிகரித்துவரும் பதட்டங்களும் இதில் சேர்கின்றன.புஷ் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்கா மிக நேரடியாக ஒரு கண்ட சக்தியாக தன் பங்கையே வலியுறுத்தும் கொள்கைக்கு தக்கவகையில், தன்னுடைய முந்தைய கொள்கையான பிரான்ஸ் - ஜேர்மனி தலைமையின் கீழான ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு ஆதரவு கொடுப்பதை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றது. பிரிட்டனில் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் தன்னுடைய உறவுகளை வலுப்படுத்தும் வகையிலும், "பழைய ஐரோப்பிய" சக்திகளுக்குப் பதிலாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இணையும் நாடுகளை "புதிய ஐரோப்பாவின்" பிரதிநிதிகள் என்று பறைசாற்றுவதிலும் அது செயல்பட்டு அவ்வாறு செய்ய முற்படுகிறது. UKIP , பிரிட்டனுக்குள் மிக உறுதியான முறையில் இத்தகைய கொள்கையின் பிரதிநிதியாகத் தான் உள்ளது என்பதைக் காட்டிக் கொள்ள முற்படுகிறது. தன்னுடைய கட்சியின் அடையாளமாக பவுண்டை கொண்டு, யூரோவிற்கு எதிரான விரோதப் போக்கை வலியுறுத்தியுள்ளது; வாஷிங்டனால் டாலருக்கு எதிரான வலிமைத்திறன் கொண்டுள்ளதாக யூரோதான் கருதப்படுகிறது. ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் UKIP, இறுதியில் EU ஒரு சுதந்திரமான, அரசியல் சிறப்பை உலக அரங்கில் கொள்ளலாம் என்று நம்பும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இவை ஐரோப்பிய அரசியலமைப்பில் ஒற்றுமையுடன் உடன்பாடு கொண்டுவருவதற்கு காட்டும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு மீது குவிமையப்படுத்தியது.இது UKIP க்கு என்றுமில்லாத வகையில் நித ஆதரவிற்கு வழிசெய்ததுடன், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுடைய மேல்நிலை ஆலோசகர் டிக் மோரிசின் உதவியையும் பெற்றுத்தந்தது; அவர் வலது குடியரசுக் கட்சிக்காரரின் முன்னணிக் குரலாய் தோன்றி, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வலியத்தாக்கும் நடவடிக்கைகளுக்கு வாதிடுபவராகவும் EU வின் கடும் எதிர்ப்பாளராகவும் இருக்கிறார். Telegraph ஏட்டில் 2003ல் மொறிஸ் குறைகூறியதாவது: "ஈராக்கியப் போரிலிருந்து கிடைத்த அரசியல் படிப்பினை அமெரிக்க, பிரிட்டிஷ் மக்கள் கூடுதலான முறையில் ஒரே நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்; இது பிரிட்டிஷ் மக்கள் பிரான்ஸ் அல்லது ஜேர்மன் மக்களிடம் கொண்டுள்ள பிணைப்பைவிடக் கூடுதலாகும்."UKIP சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அவர் அமெரிக்காவுடனான நிலைப்பாட்டிற்கு அது ஆதரவு கொடுக்கவேண்டும் என்று Hill என்ற வெளியீட்டில் வலியுறுத்தியுள்ளார். "காலனிகள் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்? ஏனெனில் EU வை கடத்திவிட்ட சக்திகள் அதை ஒரு சோசலிச பொருளாதாரத்திற்கு, சமரசப் போக்கு வேண்டும் என்ற வெளிநாட்டுக் கொள்கையை ஏற்பதற்கு, ஜூரர்கள் இல்லாத நீதித்துறை முறைக்கு, ஜனநாயகத்தில் இருந்து வெளியேறி அதிகாரத்துவத்தினரின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு செயல்பட்டுவருகின்றன."EU வை ஒரு சோசலிஸ்ட் அமைப்பு என்று விவரிப்பது நகைப்பிற்கிடமானதாகும்; ஆனால் இத்தகைய சிவப்பு முலாம் பூசல் கட்சி, மற்றும் மொறிசின் இலக்கு வலதுசாரிச் சிந்தனையாளர்களை வெள்ளை மாளிகையிலுள்ள புஷ்ஷின் குழுவினர்பால் ஈர்க்கும் வழிவகையாகும்; இவர் "வெளியேற்றுதலை தடுக்கும் தொழிலாளர் சட்டங்கள், மிகப் பெரிய விடுப்புக் கொடுத்தல் மற்றைய நன்மைகள் தேவை" என்ற அனைத்தும் கண்டனத்திற்குரியவை என்றும் கூறியுள்ளார்."அமெரிக்காவைப் பொறுத்தவரையில், பாரிஸ்-பேர்லின் ஆதிக்கத்திற்குட்டபட்ட ஐரோப்பாவில் நம்பிக்கையான நண்பர்கள் இல்லாத நிலையில். ரோனால்ட் றேகன்-மார்க்கரெட் தாட்சர் கொள்கைகள் இங்கிலாந்தில் இருக்கவேண்டும் எனச் செல்லும் முறை, வருங்காலத்திற்கு பெரும் நன்மையை அளிக்கும் முன்னறிகுறி" என மொறிஸ் தொடர்ந்தார். ஆனால் இங்கிலாந்து மக்களைப் பொறுத்தவரையில் றேகன்-தாட்சர் கொள்கைகள் நலன்களைக் கொடுக்காதவை; அம்மக்கள் இதைப்பற்றித் தங்கள் கன்சர்வேடிவ், தொழிற்கட்சி அரசாங்கங்கள் கொடுத்த அனுபவத்தை வைத்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு அறிந்தவர்கள், அக்கொள்கைகள் மிகப்பெரிய அளவில் ஏழைகளிடம் இருந்து செல்வத்தைப் பணக்காரர்களுக்குத்தான் மறுபகிர்வு செய்துள்ளது. UKIP, EU வின் ஒரே பிரச்சினையில் குவிப்பை ஏன் காட்டுகிறது என்பதை இது விளக்குகிறது. இது இல்லாமல், கடுமையான முறையில் தாட்சரிசத்திற்கு வெளிப்படையான ஆதரவைக் காட்டுவதற்கு பிரபலமான வேறு எந்த தளத்தையும் காண்பது அரிது.ஆனால் மிகத் துல்லியமான முறையில் கடுமையான தாட்சரிசக் கட்சியாகத்தான் UKIP உள்ளது. கடும் தாட்சர் வாதிகள் மற்றும் முன்னர் கிட்டத்தட்ட வெளிப்படையான பாசிச உருவாக்கங்களை சுற்றி முன்னர் ஈர்க்கப்பட்ட அதி வலதுசாரித் தட்டுகள் இவர்களிடையே இடம்பெற்ற அரசியல் ரீதியான மறுகுழு சேர்தலின் மூலம் அது ஒரு வழிமுறையாக ஆகியுள்ளது. 1993ம் ஆண்டு டாக்டர் அலன் ஸ்கெட் (Dr. Alan Sked) என்னும் கூட்டாட்சி எதிர்ப்புக் கழகம் (Anti-Federalist League) மற்றும் "புருக்கே குழு" உறுப்பினரால் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் UKIP தோற்றுவிக்கப்பட்டது; அவை தாட்சருக்கு பின் வந்த ஜோன் மேஜர் மாஸ்ட்ரிச் உடன்படிக்கையில் 1992 கையெழுத்து இட்டதை தாட்சரின் மரபை காட்டிக் கொடுத்ததாகக் கருதுகின்றனர். ஸ்கெட் பின்னர் கன்சர்வேடிவ் கட்சிக்குத் திரும்பிவிட்டார். இப்பொழுதைய UKIP உடைய தலைவரான ரோஜர் நாப்மன், மேஜருடைய ஆட்சியில் பாராளுமன்றத்தில் கொறடாவாக இருந்தவர்; தன்னுடைய பிரதிநிதித்துவத்தை 1997ல் இழந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MEP ஆஷ்லே மோட் Vigilance and Overcrowded Britain என்ற வெளிநாட்டிற்கெதிரான வெறி பிடித்த நூலின் ஆசிரியர்; இவர்கள் இருவரும் கன்சர்வேடிவ் டெமகிராடிக் அலையன்ஸ் வெளிக் கூட்டத்தில், அக்டோபர் 2002 ல் டோரிக் கட்சி மாநாட்டில் பேச்சாளர்களாகப் பிரபலப்படுத்தப்பட்டிருந்தனர். தன்னை "உண்மையான கன்சர்வேடிவ்கள்" என்று விவரித்துக் கொள்ளும் CDA 2001 ல் டோரி வலதுசாரியின் மரபுவழி மையமான Monday Club அதன் வெளிப்படையான இனவெறிக்காக தற்காலிகத்தடை செய்யப்பட்டபின் வந்ததாகும். பாசிச எதிர்ப்பு ஏடான Searchlight இன் கருத்தின்படி, Sam Swerling உள்பட CDA தலைமை ஒரு பழைய Monday Club தலைவர், மற்றும் சுதந்திர பிரிட்டனுக்கான பிரச்சார உறுப்பினராகவும் இருந்தவர், மற்றும் 1986ம் ஆண்டு பாசிச பிரிட்டிஷ் தேசியக் கட்சியில் சேருவதற்காக டோரிக் கட்சியை விட்டு நீங்கிய Stuart Millson -ம் உள்ளனர், 1992 ல் மில்சன் புரட்சி கன்சர்வேட்டிவ் உட்குழுவை அமைத்திருந்தார். அந்த உரை அரங்கில் நாப்மன், மற்றும் மோடேயுடன், Right Now என்ற சஞ்சிகையின் ஆசிரியரான டெரிக் டர்னரும் சேர்ந்திருந்தார்; அந்த ஏடு ஜெனரல் ஒகுஸ்டோ பினோசே ஆல் "சிலியைக் காத்தவர்" என்று அழைக்கப்பட்டிருந்த, Taki Theodorcopulous ஆல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அணியை முடிவிற்கு கொண்டுவருபவர் ஆட்ரியன் டேவிஸ் ஆவார்; இவர் வரலாற்றாசிரியரும், ஹாலோகாஸ்ட் மறுப்பாளருமான டேவிட் இர்விங்கின் வழக்குரைஞர் ஆவர். டேவிஸ் முன்பு Monday Club இன் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார் என்று Searchlight கூறுகிறது. இவர் Freedom கட்சியின் தலைவாக இருக்கிறார்; அதன் வேர்களோ பிரிட்டிஷ் தேசியக் கட்சியின் உட்பூசல்களில் உள்ளது; இவர் புளூம்ஸ்பரி நிறுவனத்திலும் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். புளூம்ஸ்பரி நிறுவனம் என்பது 1996ம் ஆண்டு Western Goals Institute UK இன் பழைய ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இகழ்வுடைய நபர்களான எல் சால்வடோர் மரணப்படையின் தலைவரான மேஜர் ரோபர்டோ டி ஒளபிசன், தென்னாபிரிக்க கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கிரைஸ் ஹனியின் மரணத்திற்காக ஆயுள்தண்டனை பெற்ற டெர்பி-லெவி இவர்களைக் கொண்டுள்ளது. Searchlight இன் கூற்றின்படி, புளூம்ஸ்பரி நிறுவனத்தின் நோக்கம் பிரான்சின் ஜோன் மரி லூ பென்னுடைய தேசிய முன்னணியின் முயற்சிகளை இங்கிலாந்தில் பதிவு செய்வதுதான்; அதற்காக தேவையான அறிவார்ந்த, அரசியல் வடிவமைப்பை பிரிட்டிஷ் பாசிசத்திற்குக் கொடுத்து அதை "ஒரு அரசியல் உண்மையாக, அது கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளே, அல்லது நவீனப் படுத்தப்பட்டுள்ள BNP [British National Party] அல்லது ஒரு புதிய பெயருடைய கட்சியாக ஏற்படுத்தினாலும் சரி, அதற்குள்ளே எப்படியோ கொண்டு வர வேண்டும்" என்பதுதான்.UKIP இன் தற்போதைய, பழைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முன்பு New Britiain Party என்ற ரொடீசிய ஆதரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கட்சியில் தீவிரமாக இருந்தவர்கள் ஆவர்.1997 ம் ஆண்டில் UKIP உடைய நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரான மார்க் டேவின் BNP உடைய இரகசிய உறுப்பினர் என்று அம்பலப்படுத்தப்பட்டார்; பெப்ரவரி 2002ல் அலிஸ்டர் மகோனொசி UKIP யிலிருந்து Holocaust மறுப்பிற்காக வெளியேற்றப்பட்டார்.தங்களுடைய சமீபத்திய பிரச்சாரத்திற்கு முன் UKIP, ஷ்ரூஸ்பரி பிரபு உட்பட கன்சர்வேடிவ் பரம்பரை பிரபுக்கள் பதினோரு பேருடைய ஆதரவைத் திரட்டினர். அவர் பின்னால் டோரிக் கொறடாப் பதவியை இழந்த நான்கு பிரபுக்களில் ஒருவராவர். UKIP பழைய கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய ஆதரவையும் சிறுநகர மன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் இக்கட்சி ஸ்பெயினுக்கருகில் உள்ள வேற்றுநாட்டால் சூழப்பட்ட பிரிட்டிஷ் பகுதியான ஜிப்ரால்டரில் கணிசமான வாக்குகளைப் பெற்றது; ஏனேனில் "மலையில்" ஆதிக்கம் செய்யும் அரசியல் வாழ்வாக தேசப் பற்று நிலவுகிறது. தனக்கு மிகவும் உகந்த முறையில் பொதுத் தோற்றத்தைக் காட்டுவதற்கு UKIP க்கு Robert Kilroy-Silk என்னும் பழைய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், இடதை வேட்டையாடுபவரும் கிடைத்துள்ளார்; பகல் நேர பேட்டி காட்சியில் BBC யில் இருந்த இவர், பின்னர் ஒரு இனவெறிசார்ந்த கருத்தை எழுதி அரேபியர்களை "தற்கொலைப் படைக்காரர்கள், உறுப்புக்களை சிதைப்பவர்கள், பெண்களை அடக்கியாளுபவர்கள்", உலகிற்கு எண்ணெயைத் தவிர வேறு எதையும் அளிக்காதவர்கள் என்று எழுதியதால் ராஜிநாமா செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார். UKIP இன், மக்களிடம் இருப்பதாகக் கூறப்படும் ஆதரவு மிகை மதிப்பீடு செய்யப்படக் கூடாது. அது 16 சதவிகித வாக்குகளைப் பெற்றாலும் அது 40 சத விகித மக்களே வாக்குப் போட வந்த நிலையில் ஏற்பட்டது. "அனைத்து கட்சிகள் மற்றும் எக்கட்சியும் இல்லாதவர்" என்று பலராலும், அரசியல் நிறமாலையின் பல புறத்திலிருந்தும் வாக்குகளைப் பெற்றுள்ளதாக அது கூறிக்கொண்டாலும், உண்மையில் அதன் ஆதரவாளர்கள் பாதிக்கு மேல் பழைய கன்சர்வேடிவ் ஆவார்கள்.ஆனால், UKIP இன் மேலும் கூடுதலான வளர்ச்சி, மூன்று பெரும் வணிக ஆதரவு தரும் கட்சிகளுக்கு முன்னேற்றமான மாற்று இல்லாத நிலையில், வளர்ச்சி அடையாது எனக் கூறுவதற்கில்லை. கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து உடைந்து கொண்டிருக்கும் நிலையில் UKIP அதிலிருந்து ஆதாயம் அடைந்துள்ளது; மேலும் அதிருப்தி அடைந்த வாக்காளர்களின் பரந்த தட்டுக்களிடையேயும் அது ஒரளவு ஆதரவைப் பெறுவதில் வெற்றிபெற்றுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நலன்களைப் பாதுகாப்பதன் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பை முன்னெடுக்காததுதான் இதற்கு முழுக் காரணம் ஆகும். தேர்தல்களில் இரண்டு முன்னோக்குகள்தான் முன்வைக்கப்பட்டுள்ளன; பெருவணிக நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு அல்லது மூலதனத்தின் போட்டிப் பிரிவுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேசியவாத எதிர்ப்பு என்பவையே அவை. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதுதான், பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்க இவற்றிலுள்ள அனைத்து முதலாளித்துவ வர்க்க பகுதிகளின் பொதுச் செயல் பட்டியலும் வலதுசாரித் தனமும் கொண்டுவந்துள்ள சமூக பேரழிவிற்கு எண்ணிப்பார்க்கத்தக்க ஒரே மாற்றாகும். ஐரோப்பாவிற்கு தேவையான முற்போக்கான ஒன்றிணைத்தல், ஆளும் செல்வந்தத் தட்டுக்களுக்கு எதிராக கண்டத்தின் வளங்களைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சோசலிச வேலைத் திட்டம் மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். இதன் பொருள் ஆளும் வர்க்கங்களின் பிரிவுகளின் ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவு கொடுப்பவர் அனைவரையும் எதிர்ப்பதும், தொழிலாளர்களை சுரண்டுவோருக்கு எதிராக, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட தாக்குதலை எதிராக முன்வைப்பதும்தான். |