:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா
Beijing shuts the door on democratic reform in Hong Kong
பெய்ஜிங், ஹோங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தம் மீதான கதவை மூடியுள்ளது
By Peter Symonds
29 April 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஹோங்கொங் விவகாரங்களில் மிகக்கடுமையான கட்டளை ஒன்றை பெய்ஜிங் திங்களன்று
வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரிட்டிஷ் காலனியில் தலைமை அரசியல் பதவிக்கு 2007 ல் நேரடி தேர்தல்கள் எதுவும்
இல்லை என்றும், 2008 ல் நடைபெறும் சட்டக் கவுன்சில் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின்
எண்ணிக்கை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் பெய்ஜிங் அறிவித்துள்ளது. ஹோங்கொங்கின் தன்னாட்சி உரிமையை
மதிப்பதாக சீனா கூறிவருவதை எள்ளி நகையாடும் வகையில், இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்
விளைவாக பரவலான எதிர்ப்பு உருவாகுவதுடன், ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி மீண்டும் கண்டன பேரணிகள்
நடைபெறக்கூடும்.
ஹோங்கொங்கின் நடப்பு தலைமை நிர்வாகியான
Tung Chee-hwa
கோடீஸ்வர கப்பல் அதிபராக இருப்பதுடன், 1997 ம் ஆண்டு பிரிட்டன் ஹோங்கொங்கை சீனாவுடன் ஒப்படைத்தபோது
பெய்ஜிங் நியமித்த 800 உறுப்பினர் குழுவினால் அவர் நியமிக்கப்பட்டார். அப்போது பெய்ஜிங் தனது ''ஒரு
நாடு, இரு நிர்வாக முறைகள்'' என்ற தத்துவத்தை கடைபிடித்து ஹோங்கொங்கிற்கு ஓரளவிற்கு சுதந்திரம் வழங்குவதாகவும்,
இறுதியாக நேரடியாக உள்ளூர் அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வகை செய்யும் வகையில், வாக்கு உரிமையை
அனைவருக்கும் வழங்குவதாகவும் உறுதியளித்தது.
ஏப்ரல் தொடக்கத்தில், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் குழு (National
Peoples Congress-NPC) எந்த விதமான முன்னறிவிப்பும்
இல்லாமல், ஹோங்கொங்கின் எந்த அரசியல் மாற்றமும் தமது அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும், ''சமூகத்தில்
ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சியை'' பாதுகாக்கவும், சீனா தலையிடுவதாக சீன அதிகாரி
Qiao Xiaoyang
அறிவித்தார். மத்திய அதிகாரிகள் ''இது போன்ற விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமை உண்டு. சீனா ஒரே
அரசு மாறாக கூட்டமைப்பு அரசு அல்ல '' என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
ஏப்ரல் 11 ல் NPC
அறிவிப்பிற்கு எதிராக ஹோங்கொங்கில் 20,000 பேர் கண்டனப் பேரணி நடத்தினர். அணி வகுப்பாளர்கள்
Tung Chee-hwa
எதிராக முழக்கம் எழுப்பியும் அவர் தலைமை நிர்வாகி பதவியிலருந்து விலக
வேண்டும் என்றும் கோரினர். சிலர் கரங்களில் கறுப்பு ரிப்பன்களை அணிந்து ஜனநாயகம் ''இறந்து விட்டதை''
சுட்டிக் காட்டினர். ''இது ஒரு வலுவான சமிக்கை, குறிப்பாக, பெரிய அளவில் ஜனநாயக உரிமைகளை தற்பொழுது
அது கோருகின்றது'' என்று ஹோங்கொங் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்
Law Yuk Kai
ஊடகங்களுக்கு கூறினார்.
ஏப்ரல் 15 ல் Tung,
NPC நிலைக்குழுவிற்கு (Standing
Committee) ஒரு கடிதத்தை அனுப்பி, அதில் ஹோங்கொங்கின்
தேர்தல் நடைமுறையை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்க கூறியிருந்தார். ஆனால் அது வெறும் சம்பிரதாய
வேண்டுகோளாக இருந்தது. அதன் நோக்கம் ஹோங்கொங்கில் மாற்றங்கள் வேண்டுமென்று அழுத்தங்கள் வளருவதை
தளர்த்துவதற்கும், அதில் பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டை வலியுறுத்தியும் மற்றும் படிப்படியான மாற்றங்களுக்கு
ஆலோசனை கூறியும் அந்தக் கடிதம் விளக்கம் தந்திருந்தது. ஜனநாயக எதிர்க்கட்சியினர் அரசியல் சீர்திருத்தம்
சம்மந்தமாக கூட்டம் நடத்த வேண்டுமென்று விடுத்திருந்த கோரிக்கையை
Tung புறக்கணித்தார்.
இந்த முடிவின் மூலம் NPC
நிலைக்குழு, ஹோங்கொங்கிற்கு ஜனநாயக சீர்திருத்தம் கொண்டுவரும் எந்த முயற்சியையும் நிராகரித்துள்ளதுடன்,
ஹோங்கொங் தேர்தலுக்குரிய சட்டங்களில் முன்னறியக்கூடிய மாறுதலையும் தடுத்து நிறுத்திவிட்டது. பெய்ஜிங் 2007
ல் புதிய தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுப்பதுடன், 2008 வரை 60 உறுப்பினர்களைக் கொண்டுள்ள
சட்டசபையை அப்படியே நீடிக்கச் செய்யும். அத்தோடு, சபையில் பாதிப்பேர்கள் இந்த செப்டம்பரில்
தேர்ந்தெடுக்கப்படுவர். மீதிப்பேர்களை பெய்ஜிங்கிற்கு மிகப்பெருமளவில் ஆதரவு காட்டுகின்ற சிறிய
''செயலூக்க'' வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் குழுக்கள் தேர்ந்தெடுக்கும்.
பெய்ஜிங் எந்தவொரு சலுகைகளையும் கொடுக்காமல், எதிர்காலத்தில் படிப்படியான
மாற்றங்களுக்கு வழிவகை செய்யும் என்று தெளிவில்லாத விளக்கத்தை கொடுத்துள்ளது. வளர்ந்துவரும் அரசியல்
எதிர்ப்புக்கள் மீதான பயம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது காட்டப்படும் வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை
வெளிப்படுத்துகிற வகையில், சீன அதிகாரியான Qiao
Xiaoyang ஹோங்கொங்கின் தேர்ந்தெடுத்த குழுவிடம்
கருத்துதெரிவிக்கும் போது ''மக்களுடைய கருத்துக்களை பேசி வழி நடத்துகின்ற எந்த அரசாங்கங்களும்
பொறுப்பற்றவை'' என்று தெரிவித்தார். ''தீவிரமான சீர்திருத்தத்தின் முடிவானது, வன்முறை மோதலோடு
சம்மந்தப்பட்டதாகும்'' என்றும் குறிப்பிட்டார்.
சீன ஸ்ராலினிச அதிகாரத்துவமும் ஹோங்கொங்கிலுள்ள அவர்களது பொம்மையாட்சியாளர்களும்,
சென்ற ஆண்டு புதிய நாசவேலைகளுக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்த
Tung தீட்டிய திட்டங்களுக்கு
எதிராக கடந்த வருடம் உருவான வெகுஜன வெடிப்பைக்கண்டு மிக ஆழ்ந்த நடுக்கம் கண்டுள்ளனர். கடந்த ஜூலை
1 ம் தேதி மிகப்பிரமாண்டமான கண்டப்பேரணியில் அரை மில்லியன் மக்கள் கலந்துக்கொண்டு, ஜனநாயக விரோத
நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பினர். இதில் ஹோங்கொங் பகுதியில் குடியிருப்போர் மீது பெய்ஜிங்கிற்கு
எதிரான தேசத்துரோகம் மற்றும் நாசவேலைகளுக்காக வழக்குத் தொடரும் நடவடிக்கையும் அடங்கியிருந்தது. தனது
நெருக்கமான நண்பர்கள் சிலர் கைவிட்டு விலகிய பின்னர்,
Tung இறுதியாக
சட்டத்தைத் திருத்தும் முயற்சியை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
கடந்த நவம்பர் கடைசியில், ஹோங்கொங்கிலுள்ள பெய்ஜிங்கின் அரசியல் கூட்டாளிகள்
உள்ளூர் மாவட்ட சபை தேர்தல்களில்போது படுதோல்வியடைந்தனர். ஜனநாயகக் கட்சி 92 இடங்களில் வெற்றி
பெற்றதை ஒப்பிடும்பொழுது, பெய்ஜிங் ஆதரவு ஹோங்கொங் சீர்திருத்த ஜனநாயக கூட்டணி
(DAB) 62
இடங்களை மட்டுமே பெற்றது. இந்த செப்டம்பர் மாதம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று இதே முடிவுகள்
திரும்புமானால், ஜனநாயகக் கட்சி தலைமை நிர்வாக அமைப்பில் சரிசமமான நியமன உறுப்பினர்களைக் கொண்டு
குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்றதாக இருக்கும்.
DAB ன் தேர்தல் தோல்வியைத்
தொடர்ந்து, சீன ஸ்ராலினிச அதிகாரத்துவம் அரசியல் தாக்குதல்களில் இறங்கியது. கடந்த டிசம்பரில் சீன
ஜனாதிபதி Hu Jintao
ஹோங்கொங்கில் பரவலான தேர்தல் ஏற்பாடுகள் யாவற்றையும் நிறுத்த வேண்டும் என்று
Tung க்கு
கட்டளையிட்டார். இந்த மாதம் NPC
நிலைக்குழு ஹோங்கொங் விவகாரங்களில் தமது கட்டுப்பாட்டை வலியுறுத்துவதற்கு முன்னர், பெய்ஜிங் பிப்ரவரியிலும்
மார்ச்சிலும் திட்டமிட்டு, ஊடகங்கள் மூலம் ஹோங்கொங்கில் உள்ள ஜனநாயக ஆதரவு இயக்கத்தைச்
சேர்ந்தவர்களை ''கோமாளிகள்'' அல்லது ''துரோகிகள்'' என்று கண்டனம் செய்தது.
ஜனநாயக சீர்திருத்தத்திற்கு எந்தச் சலுகைகளைக் காட்டினாலும், ஹோங்கொங்கில்
மட்டுமல்ல சீனாவிற்குள்ளேயும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்கைத்தர உயர்வுகோரி மேலும் கோரிக்கைகள்
எழுப்பப்பட்டு ஊக்குவிக்கப்படும் என்ற அச்சம் பெய்ஜிங்கில் நிலவுகிறது. 2002 கடைசியில் புதிய சீனத் தலைமைப்
பொறுப்பை Hu-Jintao
தலைமையில் ஏற்றுக் கொண்டவர்கள், தாங்கள் எந்த நேர்த்திலும் வெடித்துத் சிதறக்கூடிய சமூக கொந்தளிப்பு
குண்டின்மீது அமர்ந்திருப்பதை எச்சரிக்கையாக உணர்ந்துள்ளனர். சீனாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து
கொண்டிருப்பதால் பயனடைந்த ஒப்பிட்டளவிலான சிறிய தட்டான முதலாளித்துவ வர்க்கமும், மற்றும் செல்வந்த
மத்தியதர வர்க்கமும் உதித்தெழுந்துள்ளது. அத்தோடு, மிகப்பெரும்பாலான மக்கள் பரவலான வறுமை மற்றும்
வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Hu பதவியில்
அமர்த்தப்பட்டபோது, அவர் மிகவும் கவனமாக மட்டுப்படுத்தப்பட்ட ''அரசியல் சீர்திருத்தங்களை''
மேற்கொள்ளப்போவதாக கோடிட்டுக் காட்டினார். அதன் நோக்கம் என்னவென்றால், உண்மையான ஜனநாயக
உரிமைகளை எப்போதுமே வழங்கக்கூடாது என்பதும், மத்தியதர வர்க்கத்திற்குள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு
ஒரு அடித்தளத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதும் மற்றும் புதிய தலைமையானது அரச இயந்திரத்தை தன் பிடியில்
இறுக்கமாக வைத்துக்கொள்ள வகை செய்வதையும் கொண்டிருந்தது. ஹோங்கொங்கில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு
பெய்ஜிங் அளித்துள்ள பதில், Hu
தலைமையானது அவர்களது முன்னோடிகளைப்போல, தனது ஆட்சியை
நிலைநாட்ட சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையாகும்.
ஹோங்கொங்கை
NPC
யின் நிலைக்குழு ஆளும் நேரத்தில் மற்றொரு
விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தாய்வானின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில்
Chen Shui-bian
குறுகிய மற்றும் சச்சரவுக்குரிய வெற்றியை பெற்றிருக்கிறார். ஹோங்கொங்கைப் போன்று, தீவின் மறு
இணைப்பிற்காக தாய்வான் ஆளும் செல்வந்த தட்டுடன் ''ஒரு நாடு, இரு முறைகள்'' என்ற அடிப்படையில்
பெய்ஜிங் நீண்டகால பேரம் ஒன்றிற்கு முயன்று வருகிறது. தாய்வான் தேர்தல் முடிவுகள் வரும்வரை ஹோங்கொங்
மீது நடவடிக்கையை சீனா தாமதித்து வந்ததாக தெரிகிறது. ஏனென்றால் சுதந்திர தாய்வான் இயக்கப்
போராட்டத்தில் சென்னும் அவரது ஜனநாயக முற்போக்கு கட்சியும் (DPP)
வலுப்படுத்தப்படுவதை சீனா தவிர்த்து வந்துள்ளது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியன
NPC ன் முடிவை
மிதமாக விமர்சித்துள்ளன. ''கூட்டு (சீன-பிரிட்டிஷ்) பிரகடணத்தின் கீழ் ஹோங்கொங்கிற்கு உறுதிசெய்து
தரப்பட்டுள்ள 'உயர்ந்த அளவு தன்னாட்சி உரிமைக்கு' முரணாக
NPC யின் முடிவு
அமைந்திருக்கிறது'' என்று பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர்
Bill Rammell
அறிவித்தார். அதேபோல, பெய்ஜிங் மற்றும் ஹோங்கொங்கின் வர்த்தக
செல்வந்த தட்டுக்கள் அதிகாரத்தில் முதன்மையான நலன்களை கொண்டிருப்பது என்பது, ஹோங்கொங் மற்றும்
சீனாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி தொடர்ந்தும் இலாபகரமான மலிவான கூலியை தடையின்றி
சுரண்டுவதற்காகும். சீனா தனது சொந்த ஜனநாயக விரோத நடைமுறைகளை நியாயப்படுத்துகின்ற வகையில்,
ஹோங்கொங் மக்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் கூட வெகுசில உரிமைகளைத்தான் பெற்றிருந்தனர் என்று
குறிப்பிடுகிறது.
ஹோங்கொங்கில், NPC
யின் அறிக்கையை வெளியிடுவதற்கு Tung
ஐயத்திற்கிடமின்றி பதட்டத்துடன் காணப்பட்டார். பெய்ஜிங்கின் இந்த நகர்வு
''ஹோங்கொங்கின் நலனுக்கும், நீண்டகால வளத்திற்கும்'' சிறப்பானது என்று அவர் வலியுறுத்தினார். ''மக்கள்
அறிவுபூர்வமாக அமைதிகாக்க வேண்டும். அத்தோடு, ஹோங்கொங்கின் அபிவிருத்தியில் ஒட்டுமொத்த
பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார். இந்த ''பொதுக்கருத்தென்று'' அவர்
அர்த்தப்படுத்துவது என்னவெனில், பெய்ஜிங் உடன் உடன்பாட்டிற்கு வருவதைக் காட்டுகிறது என்பதாகும். பரவலாக
மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட Tung
இதில் தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்தவிதமான
வழியுமில்லை.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும், செயலூக்கர்களும் ஹோங்கொங்கில்
NPC யின் முடிவை
மிக ஆவேசமாகக் கண்டித்தனர். சிவில் மனித உரிமைகள் முன்னணியைச் சேர்ந்த தலைவர்
Rose Wu- எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.''ஹோங்கொங்
மக்கள் இதை ஏற்றக்கொள்ளமாட்டார்கள். எங்களது கருத்து வேறுபாட்டை, எங்களுக்குள்ள மனக் குறைகளை,
எங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதை நிறுத்த மாட்டோம்... இது ஒரு தார்மீக நெறிகெட்ட அரசாங்கம்.
அவர்கள் அச்சத்தையும், விரக்தியையும் உருவாக்குவார்கள். ஆனால், அவர்கள் மக்களது உள்ளத்தை வென்றெடுக்க
மாட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். மற்றொரு செயலூக்கரான
Leung Kwok-hung கூறும்போது, ''ஹோங்கொங் என்கின்ற
உடலின் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது தலையை பொருத்துவற்கு நடவடிக்கை எடுக்கிறது என்பது மிகவும்
தெளிவாகிவிட்டது. இப்போது நாங்கள் நீண்ட போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.
பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பெய்ஜிங் எந்த மாற்றத்திற்கும் இடம் கொடுக்காத
வகையில் பிடிவாதமாக கதவை மூடிவிட்டதென்று தங்களது ஏமாற்றத்தை வெளியிட்டனர். ஹோங்கொங்கில் உள்ள
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களோடு எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்பது
குறித்து நகர பர்வர்த்தனை (Civic Exchange)
ஆய்வுக்குழுவின் தலைமை நிர்வாகி Christine Loh
வருத்தம் தெரிவித்தார். ''அவர்கள் (பெய்ஜிங்) தமது தேவைக்கும் அதிகமாகவே சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஐயத்திற்கிடமின்றி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், அவர்களை நிலைகுலையச் செய்திருப்பது அவர்கள்
நடந்து கொண்ட முறைதான்'' என்று அவர் கூறினார்.
பெய்ஜிங் நடவடிக்கைகளால் அதிகாரப்பூர்வமான எதிர்கட்சியின் கட்டுப்பாட்டையும்
மீறி நிலவரம் சென்றுவிடக்கூடும் என்று Loh
கவலைப்படுகிறார். ஹோங்கொங் ஸ்தாபன பிரிவினர் ஓரளவிற்கு தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட விரும்பினாலும்,
பெய்ஜிங் உடன் பொதுவான ஒரு கவலையை பகிர்ந்து கொள்கின்றனர். அத்தோடு, எந்த மக்கள் இயக்கமாக
இருந்தாலும் அது பெரு வர்த்தக நிறுவனங்களின் நலன்களை சீர்குலைத்துவிடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
சென்ற ஆண்டு மிகப்பெரும் அளவில் பொதுமக்கள் கண்டனப் பேரணிகளை நடாத்தி,
வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும், வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் மற்றும் ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட
வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 1997 - 98 ல் ஆசிய பொருளாதார நெருக்கடியின் போதும், அதற்குப்பின்னர்
சென்ற ஆண்டு சார்ஸ் தொற்று நோய் தோன்றிய போதும் ஹோங்கொங்கின் பொருளாதாரம் மிகக்கடுமையாக
பாதிக்கப்பட்டதோடு, வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்தது. பணி நிலைகள் மோசமடைந்தன.
1989 ல் தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மீது பெய்ஜிங்
கொடூரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்ததையும், சென்ற ஆண்டு ஜூலை 1 தேதி ஹோங்கொங்கில் அரை
மில்லியன் மக்கள் பேரணி நடாத்தியதையும் குறிக்கும் வகையில், ஜூன் 4 ந்தேதி மிகப்பெரும் அளவில் கண்டனப் பேரணிகளை
நடாத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது.
Top of page |