World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Berlin: Successful rally concludes PSG European election campaign

பேர்லின்: ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய வெற்றிகரமானக் கூட்டம்

By our reporter
9 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி PSG, ஜூன்5 சனிக்கிழமை ஜேர்மன் தலைநகர் பேர்லினில் முக்கிய ஐரோப்பிய தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்தியது. 100 மேற்பட்டோர், முன்னாள் மேற்கு மற்றும் கிழக்கு முக்கியமான நகரங்களிலிருந்து பயணம் செய்து வந்து கலந்து கொண்டனர். ஈராக் போர் விளைவுகளின் மத்தியில் உரைகளும், விவாதங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஐரோப்பிய அரசியல் அபிவிருத்தியில் அதன் தாக்கங்கள் ஆகியவை முக்கிய இடம்பெற்றன. மூன்று பேச்சாளர்கள் கூட்டத்தில் பேருரையாற்றினர்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு உறுப்பினர் Peter Daniels அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சகோதர வாழ்த்துக்களை தெரிவித்தார். அமெரிக்கா முழுவதிலும் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திவருகிற தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கங்களை அவர் விளக்கினார்.

இப்போதுள்ள நிலையில் தேர்தல்களில் பெருமளவிற்கு வாக்குகளைப் பெறமுடியும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எதிர்பார்க்கவில்லை மற்றும் முதலாளித்துவ தேர்தல்கள் அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் கட்சி தேர்தலில் தலையிடவில்லை. ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச மாற்று உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்காவும், உழைக்கும் மக்களில் பரவலான பிரிவுகளுக்கு கல்வியூட்டுவதும், மனித இன பேரழிவு போர், வறுமை மற்றும் சர்வாதிகாரம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றைய நெருக்கடியிலிருந்து தப்புதவற்கு ஒரு வழியிருக்கிறது என்று காட்டுவதுதான் எங்களது தேர்தல் பிரச்சார இயக்கத்தின் நோக்கம் என்று அவர் விளக்கினார். புதிய தொழிலாள வர்க்க கட்சியை உருவாக்க வேண்டுமென்ற அழைப்பிற்கு சக்தி வாய்ந்த ஆதரவு திரண்டு வருவதாக அவர் விளக்கினார்.

அவர் தொடர்ந்தார்: ''நம்முடைய வேலை கொந்தளிப்பான நிலைமைகளில் இடம் பெறுகின்றன. 15மாதங்களுங்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஈராக் படையெடுப்பு பெருகிவரும் நெருக்கடிக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு முட்டுக்கட்டை நிலையையும் உருவாக்கிவிட்டது. இப்படிப்பட்ட ஒரு முட்டுக்கட்டை நிலை உருவாகும் என்பதை முன்கூட்டியே நமது இயக்கம் கூறியது. பேரழிவுகரமான ஆயுதங்கள் மற்றும் சதாம் ஹூசைன் ஆட்சிக்கு 2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலில் சம்மந்தமிருக்கிறது என்று குற்றச்சாட்டு பொய் என்றும் அம்பலத்திற்கு வந்தபின்னர், உலகம் முழுவதும் டிஜிடல் புகைப்படங்கள் மூலம் அபுகிரைப் சிறைச்சாலையில் என்ன நடந்தது என்பதையும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப்படைகளின் குற்றவியல் நடவடிக்கைகளையும் ஆவண ஆதாரங்களை பார்த்தார்கள்.

''இந்த அபிவிருத்தியில் இரகசியம் ஏதுவுமில்லை. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பலருக்கு அதில் வியப்பு எதுவுமில்லை நிச்சயமாக கூறுவேன். இப்படிச்சொல்வதால் நான் அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை, அல்லது உலகின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சிகள் வந்த தன்மையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இன்றைய தினசான்று, 70 ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்ட 'எதிர்வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு என்பதைமட்டுமல்ல,' தனது நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்க அரசாங்கம் முயலுகின்ற நேரத்தில் உருவாகின்ற ஆழமான முரண்பாடுகளையும் அந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

''அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்துகாட்டாக வியட்நாமில் நடந்ததைப்போல், ஈராக்கில் ஆரம்பத்தில் சில இராணுவ வெற்றிகளை பெற்றது. ஆனால் காலனித்துவ சூறையாடலாலும், அடக்கு முறையாலும் உழைக்கும் மக்களை மீண்டும் அமைதிபடுத்த முடியவில்லை. இப்போதுள்ள சமுதாய ஒழுங்கின் மிக அடிப்படையான முரண்பாடுகளை நாம் எதிர்நோக்குகின்றோம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நெருக்கடியை, உலக முதலாளித்துவமுறை மனித இன போரிலும், சர்வாதிகாரக் கொடுமைகளிலும் மூழ்கடித்துவிட ஆம்பிக்கும். தனது காலாவதியாகிவிட்ட சமூக உறவுகளை நிலைநாட்டுவதற்காக, இலாபம் இல்லாத உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதிகளை ஒழித்துக்கட்டியாக வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தொழிலாள வர்க்கத்தையே ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்ற முடிவிற்கு முதலாளித்துவம் வரும்.

''இதுதான் அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தன செயலின் உண்மையான பொருளாகும். அத்துடன் தொடர்புடைய கருத்தும் அதில் பதிந்திருக்கிறது, ஈராக் மக்கள் மனித இனத்தின் இயல்புகளுக்கு குறைந்தவர்கள் என்பதுதான். அதே நடவடிக்கைகளின் அந்த தயாரிப்புகள் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கெதிராக மேற்கொள்ளும் தண்டனையை துரிதப்படுத்திவிட்டன. நாம் சுட்டிக்காட்டியுள்ளபடி, மிகப்பெரிய அமெரிக்க சிறைகளில் ஈராக்கிய புகைப்பட முறைகேடுகள் காட்சி ஏற்கனவே உலாவி வருவதை நாம் அடையாளப்படுத்தியிருந்தோம்.

ஈராக்கில் நாம் காண்கின்ற குற்றங்கள் அனைத்தும் பலவீனத்தின் சமிக்கையே தவிர பலத்தினால் அல்ல. நெருக்கடியால் சூழப்பட்டு வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தின் கொள்கை ஒரு உலகரீதியான தீவிரமயமாக்கலுக்கு இட்டுச்சென்றுள்ளதுடன், இது தகுதியில்லா ஜோர்ஜ் புஷினால் ஊக்கமளிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு இருந்தபோதிலும், சிறப்புமிக்க வெளிப்பாட்டை அண்மையில் நடைபெற்ற தென்கொரியா, ஸ்பெயின், ஓரளவிற்கு இந்தியத் தேர்தல்களிலும் காணலாம். இந்தத் தேர்தல்களால் உழைக்கும் மக்களை எதிர் நோக்கியுள்ள அடிப்படை பிரச்சனை எதுவும் தீர்த்து வைக்கப்படவில்லை அல்லது தொடக்கூட வில்லை. ஆனால் ஈராக் போருக்கு ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்பு தெரிவித்த முதலாளித்துவ அரசியல் சக்திகள் மிகப்பெரும் வெற்றி பெற்று பதிவிக்கு வந்திருகின்றன அல்லது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த போருக்கு எதிரான, பரந்த சர்வதேச உணர்வு ''அமெரிக்கவாதத்திற்கு எதிரானதல்ல'' ஆனால் புஷ் நிர்வாகம் மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி என்பதை உலகம் அங்கீகரித்திருக்கிற உண்மையை வெளிப்படுத்துகிறது.

''இந்த அங்கீகாரம் அரசியலில் ஆரோகியமானது, அவசியமானது மற்றும் முற்றிலும் வரவேற்கத்தக்கது. புஷ்ஷை வெள்ளை மாளிகையிலிருந்து விரட்டிவிடுவதில் மட்டும் குறிகோளாகக் கொண்டு மட்டுப்படுத்திவிடக்கூடாது. அத்தகைய கண்ணோட்டத்தின் குறைபாடுகள் என்ன என்பதை புஷ்ஷிற்கு ஜனநாயகக் கட்சி மாற்றை நிதானமாக ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியும். நாம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருப்பதைபோல் கெர்ரி போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் இப்போது பயங்கர இராணுவ தோல்வியை தடுப்பதற்காக ஈராக்கில் அமெரிக்கப்படைகள் வலுப்படுத்த வேண்டுமென்று கோரிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார். ஈராக்கிற்குள்ளேயும் உலகம் முழுவதிலும் போருக்கு எதிரான பொதுமக்களது எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருக்கிற நிலையில் குடியரசுக் கட்சிக்காரர்களும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

''புஷ்ஷை தோற்கடிக்க கெர்ரியின் பின்னால் அணிவகுத்துவர வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை, அமெரிக்க வரலாற்றிலேயே மிக பிற்போக்கான இந்த அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிற வகையில் நாம் இதைச் செய்யவில்லை. இரண்டு முகாம்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் மற்றும் ஆழமாகி வரும் அரசியல் மோசடிகள் பற்றி ஆராய்வதற்கு மிகவும் சுலபமாக மறுத்து வருகின்றன என்ற காரணத்தினால் மட்டும் சாதாரணமாக இவர்களை நாம் தள்ளுபடி செய்துவிடவில்லை.

''இதற்கு முரணாக, இந்த வளர்ச்சிகளை நாம் ஆராய்ந்தபோது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நிருபித்துக் காட்டியிருப்பதைப் போல் ஆளும் செல்வந்த தட்டின் ஏதாவது ஒரு தரப்போடு நாம் சேர்ந்து கொள்ளவில்லை, ஆனால் அதன் நெருக்கடியை, மற்றும் குழப்பத்தை பழைய முறையில் ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஒரு சோசலிச தீர்வை முன்னெடுத்துச் செல்வற்காக பயன்படுத்திக் கொள்கிறோம். அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் நமது கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் தலைமை தாங்கி முன்னெடுத்து செல்ல தயாரிப்பு செய்துள்ள அகநிலைக் காரணிகள், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தலைமையை உருவாக்கும் என்று நாம் நம்புகிறோம், இந்நம்பிக்கை கனவுகள் அல்லது விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக எதிர்காலத்தில் வரவுள்ள சோசலிச போராட்டத்திற்கான புறநிலை யதார்த்தத்தை அடித்தளமாக கொண்டது.''

பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் மனப்பூர்வமான வாழ்த்தையும், வரவேற்பையும் தெரிவித்தார், அமெரிக்க அரசியல், நெருக்கடியின் விளைவுகள், ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் ஆளும் வட்டாரங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விளக்கினார்.

மார்ஸ்டன் உரையாற்றும்போது பல ஐரோப்பிய அரசாங்கங்களை பாதித்துக் கொண்டிருக்கிற அரசியல், நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டினார். ஈராக்கிற்கெதிரான போரில் தங்களை நெருக்கமாக இணைத்துக்கொண்ட ஆட்சிகளின் எதிர்காலம் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்: ''ஸ்பெயினில் அஸ்னர் ஆட்சி காணாமல் போய்விட்டது. இத்தாலியில் சில்வியோ பெர்லுஸ்கோனி, மற்றும் பிரிட்டனில் பிரதமர் டோனி பிளேயரின் அரசியல் எதிர்காலம் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

''11 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் போருக்கெதிராக கொந்தளித்தெழுந்த கண்டனப்பேரணிகள் பழைய அரசியல் மற்றும் சமுதாய கட்டுக்கோப்பின் மீதான அதிருப்தியின் பரந்த அபிவிருத்தியடைந்த வெளிப்பாடாகும். போருக்கான எதிர்ப்புடன் பிளேயர், அஸ்னர், பெர்லுஸ்கோனி, மற்றும் புஷ் போன்றோரின் தொழிலாளவர்க்கத்திற்கு எதிரான சமூக பொருளாதார கொள்கைகள் மீதான அதிருப்தியும் இணைந்துகொண்டது. போர்மீதான விமர்சகர்களான ஜேர்மனியின் ஷ்ரோடரும், பிரான்சு ஜனாதிபதி சிராக்கும் அக்கொள்கையையே தொடருகிறார்கள்.

''சிறிது காலம் வரை பாரிசிலும், பேர்லினிலும் உள்ள மோசடிப்பேர்வழிகள் அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான ஈராக் போருக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பதன்மூலம் ஓரளவிற்கு பொதுமக்களது அனுதாபத்தையும் பெற்றனர். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஈராக்கில் ஒரு நாசம் ஏற்படுவதை தடுப்பதற்கான உயிர்நாடி பணியில் வாஷிங்டனுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க அவர்கள் தயாரானார்கள். ஏனென்றால் ஈராக்கில் நாசம் ஏற்பட்டால் தங்களது சொந்தப் பதவிக்கே அச்சுறுத்தல் ஏற்படும் தங்களது சொந்த பெரிய வர்த்தக சார்பு செயற் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாகவும், நலன்புரி சீர்திருத்தத்திற்கும் பேரழிவு ஏற்படும் என்று கருதினார்கள்''.

ஐரோப்பாவில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நடவடிக்கைகளின் எதிரொலி பிரிட்டனில் மிக முன்னேறிய கட்டத்திற்கு வந்திருப்பதாக மார்ஸ்டன் வலியுறுத்திக் கூறினார். புஷ் நீங்கலாக வேறு எந்தத் தலைவரையும் விட பிளேயர் ஈராக் போரினால் அதிக வெறுப்பிற்கு இலக்கானவர். என்று சுட்டிக்காட்டிய மார்ஸ்டன் மேலும் விளக்கம் தந்தார்:

''பிளேயரின் தலைவிதி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் நெருக்கடியை வெளிப்படுத்துவதால் பிளேயர் தப்பிப்பிழைத்துள்ளார். அண்மையில் பிளேயர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தேச அரசியல் சட்டம் இயற்றப்படுவதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதுபற்றி பொது மக்களது கருத்துக்கணிப்பை நடத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நாம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு மிக கவனமாக விளக்கியிருந்தோம்.

''ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பற்றி அமெரிக்காவிற்கும், பிரதான ஐரோப்பிய அரசுகளுக்குமிடையில் நிலவுகின்ற போட்டிகளின் பெருகிவரும் தாக்கத்தால் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்குள் இந்த மோதல் வளர்ந்து வருவதாக நாம் வலியுறுத்திக் கூறியிருத்தோம்.

''இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய சகாப்தம் முழுவதிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வாஷிங்டனின் அதிக நம்பிக்கைக்குரிய நட்பு நாடு என்ற முறையில் தனக்கென்று ஒரு உலக பங்களிப்பை நிலைநாட்ட முயன்று வருகிறது. தனது பிரதான ஐரோப்பிய எதிரி நாடுகளான ஜேர்மனி, மற்றும் பிரான்சிலிருந்து வந்த சவால்களை சந்தித்து சமாளிப்பதற்கு இதனால் பிரிட்டனுக்கு சாத்தியமாயிற்று. ஐரோப்பாவிலும், உலகம் முழுவதிலும் தனக்கு ஒரு அந்தஸ்து நிலையை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.

''சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் தன்னை தட்டிக்கேட்க ஆள் இல்லாத மேலாதிக்கத்தின் அடிப்படையில் உலகையே மறுசீரமைப்பு செய்ய ஆரம்பித்தது. கெடுபிடிப்போர், சகாப்தத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் செய்துகொண்ட பல சமரசங்களை நீடிக்க அமெரிக்கா தயாராக இல்லை. இந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு வெடிப்பின் வெளிப்பாட்டுடன் இணங்கிப்போவதை தனது மத்திய பணி என பிளேயர் பார்த்தார். இந்தப்பணியின் மூலம் தனது ஐரோப்பிய பங்காளிகளை பகைத்துக்கொள்ளவும் தயாரானார். ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பாவில் அமெரிக்கா ஆதரவு அரசியல் தரகராக தான் செயல்படுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ள முடியுமென்றும், ஜேர்மனி பிரான்சு, மைய நாடுகள், இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஒரு மாற்றாக தன்னை உருவாக்கிக்கொள்ள முடியுமென்றும் டோனி பிளேயர் கணக்கிட்டார்.

''சிறிது காலத்திற்கு இந்தப்போக்கு அவருக்கு நன்றாகப் பயன்பட்டது. ஏனெனில் வாஷிங்டனோடு பகிரங்கமாக பிரிந்து செல்ல பேர்லினும், பாரிசும் விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்காவிற்கும், பிரிட்டிஷ் நலன்களுக்கும் ஏற்ற அம்சங்களை பிளேயர் ஆதரித்து நிற்க முடிந்தது. குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சந்தைகளை திறந்துவிடுவது, நலன்புரி விதிகளை தளர்துதவது, ஆகிய நடவடிக்கைகளில் அமெரிக்க பிரிட்டிஷ் நலன்களை காத்துக்கொண்டார். அதே நேரத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்சு மேலாதிக்கத்தில் ஐரோப்பா அமெரிக்காவிற்கு சவாலாக தோன்றுகின்ற அளவிற்கு வலுப்படுத்த வகைசெய்யும் நடவடிக்கைகளை பிளேயர் எதிர்த்து நிற்க முடிந்தது.

''சுருக்காமாக சொல்வதென்றால் பிளேயரின் ஐரோப்பிய கண்ணோட்டம் பிரான்சு மற்றும் ஜேர்மனியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துகின்ற வாஷிங்டனின் முயற்சிகளை எதிரொலித்தன. பழைய ஐரோப்பாவிற்கு எதிராக புதிய ஐரோப்பாவை கிளப்பிவிடும், ஒரு ஐரோப்பிய சக்தியாக அமெரிக்காவின் பங்களிப்பை உறுதிப்படுத்த பிளேயரால் முடிந்தது. இப்போது பிளேயருக்குள்ள ஆபத்து என்னவென்றால் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையில் பெருகிவருகின்ற கொந்தளிப்புக்கள் பிளேயரின் இச்சமநிலைப்படுத்தும் நடவடிக்கையை சிதைத்துவிடுவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

''ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்கா தனது நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இரக்கமற்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. எனவேதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தை சீர்குலைக்க பிரிட்டன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா ஆளும் செல்வந்த தட்டு பிரிவுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகிற வகையிலும், பிரான்சு மற்றும் ஜேர்மனியின் அரசியல் பேராவல்களை சீர்குலைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றன

''இந்த இசைக்கு பிளேயர் நடனமாடிதான் தீரவேண்டும். ஏனெனில் ஒரு நிதி ஆளும்தட்டு உருவாக்கிய ஒரு அரசியல் பிராணிதான் பிளேயர். உலகம் முழுவதிலும் வளங்களை சுரண்டுகின்ற தனது ஆற்றலுக்கு இரண்டாம் பட்ச நிலையில்தான் ஐரோப்பிய வர்த்தகத்தை இந்த அதி உயர்மட்ட பணக்கார பிரிவுகள் கருதுகின்றன. உலகை சூறையாடும் தனது உரிமைக்கு அமெரிக்கி ராணுவ வலிமை உத்திரவாதம் செய்து தரும் என்று எதிர்பார்க்கின்றன.''

பிரான்சும், ஜேர்மனியும் ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு எதையும் கைவிட்டுவிட்டு புஷ் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து செல்வதற்கு முயன்று வருகின்றன என்பதை மார்ஸ்டன் சுட்டிக்காட்டினார். பிளேயருக்கும் இதர ஐரோப்பிய தலைவர்களுக்கும் இடையே கணிசமான அளவிற்கு பிளவுகள், உருவாயின என்றாலும் ''இதனால் ஐரோப்பாவில் ஒரு பிளவை உருவாக்கும் ஒரு நிர்பந்தம் பிளேயருக்கு ஏற்படும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது மாறாக வாஷிங்டனின் கட்டளைப்படி தான் அவர் செயல்படுவார் அண்மையில் ஜேர்மனியும், பிரான்சும் வாஷிங்டன் முன் சரணாகதி அடைந்தது தன் நிலைப்பாட்டைவிட சற்றுக்குறைந்தது தான் என்று பிளேயர் கருதுகிறார்'' என்று மார்ஸ்டன் குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டத்தில் இறுதியாக உரையாற்றியவர் Ulrich Rippert ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி வேட்பாளர் அவர் ஐரோப்பிய அரசியல் உறவுகளில் அமெரிக்கா ஆளும் செல்வந்த தட்டின் நடப்பு நெருக்கடியின் முக்கியத்துவத்தை தனது உரையில் வலியுறுத்தினார்.

''சென்ற ஆண்டு ஈராக் போருக்கு எதிராக எல்லா பிரதான ஐரோப்பிய நகரங்கள் உட்பட உலகம் முழுவதிலும் மில்லியன் கண்க்கான மக்கள் கண்டனப்பேரணிகளை நடத்தினர். இவ்வளவு மகத்தான எதிர்ப்பு நிலவினாலும், அந்தப்போரை அல்லது புஷ் அரசாங்கத்திதன் கொடூரமான இராணுவக் கொள்கைகளை கடைபிடிப்பதை தடுத்துநிறுத்த முடியவில்லை. இதன் விளைவாக போர் எதிர்ப்பாளர்கள் பலர் விரக்தி மனப்பான்மையோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் வலிமை நிறைந்தது, தான் விரும்புவதை செய்ய முடியுமென்ற முடிவிற்கு வந்துவிட்டனர். நமது கட்சியும் குறிப்பாக அமெரிக்காவிலுள்ள நமது நண்பர்களும் புஷ் நிர்வாகம் வலுவான நிலையில் இருந்துகொண்டு இவற்றை செய்யவில்லை என்றபதைத் தெளிவுபடுத்தினர். உலக சோசலிச வலைத் தளத்தில் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள போர் எண்ணெய்காக மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பூகோள மூலோபாய நலனுக்காக, மட்டுமல்ல அமெரிக்காவிற்குள்ளேயே கொந்தளித்து கொண்டுள்ள மகத்தான சமுதாய, பொருளாதார, மற்றும் அரசியல் பிரச்சனைகளிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக அமெரிக்கா ஆளும் குழு பிரிவுகள் மேற்கொண்டுள்ள முயற்சியுமாகும் என்பதை எடுத்துகெகாட்டியது.''

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளேயே ஈராக் தொடர்பாக கருத்து மாறிவருவதை Rippert சுட்டிக்காட்டினார். D-Day 60-வது ஆண்டு நிகழ்ச்சியில் ஐரோப்பிய தலைவர்களுக்கும், புஷ்ஷிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்புப்பற்றி அண்மையில் ஜேர்மனி பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள கருத்தை அவர் மேற்கோள் காட்டினார்.

''இதற்கெல்லாம் மேலாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் எல்லா அரசியல் தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் நாகரீகமான, கணிசமான விட்டுக்கொடுகும் சமரசதொனியில் பேசினார்கள். இதில் மற்றவர்களைவிட ஷ்ரோடர், சிராக், அல்லது புட்டினை விட புஷ் தான் அதிகமாக கசப்புணர்வை சகித்துக்கொள்ள வேண்டிவந்தது. சிறப்பித்துக்காட்ட என்னதான் முயன்றாலும் புஷ்ஷின், ஈராக் மூலோபாயம் இப்போது சிதைந்துகிடக்கிறது. இத்தகைய மிக பலவீனமான நொருங்குகின்ற நிலையிலுள்ள முயற்சியை மேற்கொள்ள வேண்டாமென்று முதலில் புஷ்ஷை எச்சரிக்கை செய்த அதே ஐரோப்பிய நாடுகளோடு தற்போது ஏதாவதொரு வகையில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் புஷ்ஷிற்கு ஏற்பட்டுள்ளது.'' Wolfgang Koydl எழுதியுள்ளார்.

''அது எப்படியிருந்தாலும் நடைமுறை அரசியல் என்று வரும்போது நிலவுகின்ற சூழ்நிலையை நிதானமாகப் பார்க்கும்போது முடிந்தவரை நெருக்கமாக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதைத்தவிர வேறுவழியில்லை. பங்காளிகளுக்கிடையே உணர்வுகள் பிளவை ஏற்படுத்தின. தற்போது பொதுநலன்கள் அவர்களை ஒன்று சேர்த்திருக்கின்றன'' என்று Koydl எழுதியிருந்தார்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் பொதுநலன்கள் மத்திய கிழக்கிலும் மற்றும் உலகம் முழுவதிலும் முதலாளித்துவ ஆட்சியை நிலைநாட்டுவதிலேயே அடங்கியிருக்கின்றன. ஈராக்கில் அமெரிக்கா நிர்வாகத்தின் இரக்கமற்ற போக்குகளால் இந்த மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

Ripper தனது உரையின் முடிவில், சோசலிச சமத்துவக்கட்சி உருவாக்க விரும்பும் தலைமையின் தன்மையை ஜேர்மனியில் அண்மையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஒப்புநோக்கி கருத்துத் தெரிவித்தார். ''ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி நெருக்கடி கட்டத்தை அடைந்துள்ளதால் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கவனமாக எழுப்பியுள்ளார்கள். எவ்வாறிருந்தபோதிலும், அவர்கள் ஒன்றை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள், கட்சி தொடர்பான அவர்களது கருத்து, கொள்கைகளை அவர்கள் நிராகரிக்கின்றனர். தமது பிரசுரங்களில் கொள்கை இது கொள்கை தொடர்பானது அல்ல என குறிப்பிடுகின்றனர். இது ''சீர்திருத்தம் அல்லது புரட்சி'' பற்றிதல்ல. பதிலாக அவர்கள் ஒரு ''பரந்த சாத்தியமான இயக்கத்தை'' உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் எவரையும் விலக்கிவிட விரும்பாததுடன், ''ஏனையவர்களுக்கு எதிரான தீவிரக்கொள்கை'' அபிவிருத்தியையும் அடக்கிவைக்க விரும்புகின்றனர்.

''ஜேர்மனியில் மாற்றுக்கட்சிகளை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் உலகப்போருக்குப்பின் USPD (சுயாதீன சமூக ஜனநாயக கட்சி) உருவாக்கப்பட்டது. முப்பதுகளில் SAP (சோசலிச தொழிலாளர் கட்சி) அமைக்கப்பட்டது. அதில் Willy Barandt மிகப்பெரும் துரோக பங்களிப்பு செய்தார். அல்லது மிக அண்மை காலத்தில் பசுமைக் கட்சிக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், புதிய கட்சியை உருவாக்க நினைப்பவர்கள் இருபதாம் நூற்றாண்டு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என்று சாதிக்கின்றனர். சமூக ஜனநாயக கட்சி மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்களில் இருந்து உடைக்க விரும்புவர்கள் மத்தியில் முடிந்தவரை குழப்பத்தையும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குவதும் தான் அவர்களது நோக்கமாகும்.

''மாற்று கட்சியைப்பற்றி நமது கருத்து முற்றிலும் மாறுபட்டது. நாம் இடது சாரிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு பிரச்சாரம் நடத்தவில்லை, இருபதாம் நூற்றாண்டு படிப்பினைகளின் பற்றிய ஒரு மதிப்பீட்டை தொழிலாள வர்க்கம் செய்துகொள்வதன் ஊடாகவே தொழிலாள வர்க்கம் தனது சொந்த புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்துகொள்ளமுடியும் என்ற தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக பிரச்சாரம் செய்கின்றோம். இந்தப் பிரச்சனைகளை தெளிவுபடுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டுதான் ஐரோப்பிய தேர்தல்களில் நமது கட்சி போட்டியிடுகிறது'' என்று Rippert விளக்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் சோசலிச சமத்துவக் கட்சி பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் உலக சோசலிச வலைத் தளத்தில் இணைந்து பணியாற்றவும் ஆர்வம் காட்டினர்.

Top of page