:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Attac and German Trade Union Federation hold joint congress in Berlin
A "Perspectives Congress" without perspectives
அற்றாக் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளனம் கூட்டாக பேர்லினில் மாநாடு நடத்தியுள்ளன
முன்னோக்குகளற்ற ஒரு ''முன்னோக்குகள் மாநாடு''
By Ute Reissner
26 May 2004
Back to screen version
இடதுகளிடமிருந்து வருகின்ற அரசியல் அறைகூவல்களை சமாளிக்கின்ற வகையில் அற்றாக்கும்,
ஜேர்மன் தொழிற்சங்கத் தலைமையும் இணைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பேர்லின் தொழில்நுட்பப்
பல்கலைக்கழகத்தில் மே 14 முதல் 16 வரை நடைபெற்ற இந்த மாநாடு, ''முன்னோக்குகள் மாநாடு'' என்று முக்கியத்துவம்
கொடுத்து அழைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கு அற்றாக் (Attac)
அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. குறிப்பாக, பல்வேறுவகையான 80 க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் தொழிற்சங்கங்களிலிருந்து,
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சமூக நலக் கூட்டமைப்புக்கள், மற்றும் பல்வேறு தீவிரவாதத் குழுக்கள் மற்றும்
உள்ளூர் அமைப்புக்கள் வரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 1500 பேரில் ஐந்தில் நான்கு பகுதியினர்
1968 ல் நடைபெற்ற மாணவர் இயக்கத்தில் பேர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு மையமாக செயல்பட்டபோது
பங்கெடுத்துக்கொண்டவர்கள் ஆவர். இப்போது அவர்கள் 50 முதல் 60 வயது வரையில் முதிர்ச்சியடைந்துவிட்டனர்.
அதிகாரப்பூர்வமான ஜேர்மன் தொழிற்சங்கங்ககள் கூட்டமைப்பின் (DGB)
உயர் அதிகார பிரதிநிதிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டபோதிலும், இதற்கு முன்னர் அவர்கள் இது போன்ற
நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தனர்.
DGB ன் தலைமை நிர்வாகக்குழுவின் ஐந்து
உறுப்பினர்களில் மூன்று பேருக்கும் குறைவில்லாமல் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில்,
Ursula Engelen- Kefer (DGB ன் துணைத்தலைவர் மற்றும்
சமூக ஜனாநாயக் கட்சி (SPD)
செயற்குழு உறுப்பினர்) Heinz Putzhammer (SPD)
மற்றும் Dietmar Hexel (SPD)
இது தவிர பெரிய DGB
தொழிற்சங்கங்களின் தலைவர்களான Jürgen Peters
(SPD), IG Metall; Klaus Wiesehügel (SPD) IG Bau
கட்டுமான தொழிலாளர் சங்கங்கள்: Frank Bsirske (பசுமைக்
கட்சி) ver.di,
சேவைத் துறை தொழிலாளர் சங்கம், மற்றும் ஆசிரியர் அங்கமான
GEW வைச் சேர்ந்த
Eva-Maria Stange
ஆகியோர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
சென்ற ஆண்டு இறுதியில் DGB
யானது, அற்றாக்குடன் எந்த உடன்படிக்கை அல்லது எந்த உறவுகளையும் வைத்துக்கொள்ள திட்டவட்டமாக
மறுத்துவந்தபோதிலும், அதற்குப்பின்னர் படிப்படியாக இரு தரப்பினரும் நெருங்கிவர ஆரம்பித்தனர். ஆளும் சமூக
ஜனநாயகக் கட்சிக்கும், உழைக்கும் மக்களுக்குமிடையே பெருகிவரும் இடைவெளியால், அதிலிருந்து மிகப்பெருமளவில்
உறுப்பினர்கள் குறைந்து வருவதும், தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும் கருத்தில் கொண்டு அவர்கள் தற்போது இப்படி
செயல்படுகின்றனர்.
2003 நவம்பர் முதல் தேதி அற்றாக்கும் இடதுசாரிக் குழுக்களும் அழைத்திருந்த
ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு DGB
தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளது. ஷ்ரோடர் அரசாங்கம் சமூக நலத்திட்டங்களை குறைத்துவருவதற்கு எதிராக
நடத்தப்பட்ட இந்த கண்டனப் பேரணியில் 100,000
திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் தனது உறுப்பினர்களை கண்டிப்பாக அந்தப் பேரணியில்
கலந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பின்னரும் தொழிலாளர்கள் திரண்டனர்.
அண்மை ஆண்டுகளில் DGB
ன் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 1991 ல் ஜேர்மனியின் மறு இணைப்புக்கு பின்பு அதன்
உறுப்பினர்களின் எண்ணிக்கை 11.8 மில்லியனாக இருந்தது. இப்போது அது 7.7 மில்லியனாக குறைந்துவிட்டது.
ஜேர்மனியில் ஐந்து தொழிலாளர்களில் ஒருவர்தான் தற்போது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக
இருக்கின்றார்.
ஷ்ரோடர் அரசாங்கம் மிகத்தீவிரமாக சமூக நலத்திட்டங்களை வெட்டிக் கொண்டு
வருவதால் தொழிற்சங்கத் தலைமை சமூக ஜனநாயகக் கட்சியுடன் தனது பாரம்பரிய உறவை நியாயப்படுத்துவதற்கு
மிகப்பெருமளவில் சங்கடப்படுகின்றது. அத்தோடு, தொழிலாளர்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்திக்கொண்டு
வருவதால் புதிய ஊக்குவிப்புக்கள் தேவைப்படுகின்ற வகையில், அவர்கள் தற்போது அற்றாக்கை நாடியுள்ளனர்.
''SPD
க்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பழைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இப்போது இதர சமூக
இயக்கங்களுடன் கூட்டாக இணைந்து தொழிலாளர்களை அணிதிரட்டுவதனால்தான் வெற்றிபெற முடியும் என்பதை
தொழிற்சங்கங்கள் உணரத் தொடங்கியுள்ளன. ஆகவே, தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை இது வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகும். ஏப்ரல் 3 ல் நடைபெற்ற பெரிய ஆர்பாட்டங்களுக்குப் பின்னர் இந்த
முன்னோக்குகள் மாநாடுதான் முதலாவது கூட்டு நடவடிக்கையாகும்'' என்று ஜேர்மன் அற்றாக் அமைப்பின் முன்னணி
பிரதிநிதியும், அதன் நிறுவனருமான Sven Giegold
குறிப்பிட்டார். (Freitag May,14)
இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இடைவிடாது ''ஐக்கியம்'' ''உடன்பாடு''
மற்றும் ''கருத்து ஒற்றுமை'' என்று தொடர்ந்து முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்ததால், மாநாட்டிற்கு பின்னணியில் நிலவிய
வலுவான கொந்தளிப்புக்கள் என்பன மறைக்கப்பட்டுவிட்டன. பொதுமக்களிடையே சமூக ஜனநாயகத்திற்கு எழுந்துள்ள
எதிர்ப்பு அனைவரையும் கவலையடையச் செய்தபோதிலும், பொதுமக்களது எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்பதில்
அவர்களுக்குள் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இப்படிப்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு முக்கியமான காரணம் புதிய கட்சி பற்றிய
பிரச்சனையாகும். DGB
ன் கட்டுக்கோப்பில் உள்ள மிகப்பெருபாலானவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியோடு உறுதியாக நிற்கின்றனர். மார்ச்சில்
இரண்டு புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டன. அவை வெளிப்படையாக இடதுசாரி சார்புள்ள சீர்திருத்தக்கட்சியை
உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தாவிட்டாலும் சமூக ஜனநாயகக் கட்சி மீது அழுத்தம் கொண்டு வருவதற்கு அவை
வாய்பளிக்கும் என்று கருதப்படுகிறது.
இவற்றில் ஒன்று ''வேலை சமூக நீதி'' என்றழைக்கப்படும்
(கீஷீக்ஷீளீ ணீஸீபீ ஷிஷீநீவீணீறீ யிustவீநீமீகிஷிநி)
கட்சியாகும். இதனை பவேரியாவின்
IG Metall தலைவர்கள் மற்றும் ஹம்பேர்க் பொருளாதார பேராசிரியர்
டாக்டர் Herbert Schui
ஆகியோர் நிறுவினர். இதனை நிறுவிய ஏழு பேரில், ஆறு பேர்கள் சமூக ஜனநாயகக் கட்சியில் 30 முதல் 40 ஆண்டுகள்
உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர். இவர்கள், 1970 களின் துவக்கத்தில் கீன்சிய கொள்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
சீர்திருத்தக் கொள்கைகளுக்கு திரும்பவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
மற்றொரு குழு 2006 தேர்தல் மாற்றீடு
(Election Alternative 2006)
என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு
Sozialismus
என்ற சஞ்சிகையின் ஆசிரியர்
Joachim Bischoff
ஐ சுற்றியுள்ள இடதுசாரி போக்குள்ள தொழிற்சங்கவாதிகளால் உருவாக்கப்பட்டதாகும். இதன் ஆதரவாளர்கள் பலர்
அதிருப்தி கொண்ட ஜனநாயக சோசலிசக் கட்சியின்
(Democratic Socialism-PDS) உறுப்பினர்கள் அல்லது
ஆதரவாளர்கள் ஆகும். PDS
ஆனது, கிழக்கு ஜேர்மனியின் முன்னாள் ஸ்ராலினிச அரசாங்கக் கட்சியின் வாரிசுக் கட்சியாகும்.
Bischoff மேற்கு
ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்றாலும் 1990 களில் சிறிது காலம் அவர்
PDS செயற்குழுவில்
இருந்திருக்கிறார்.
இந்த இரண்டு குழுக்களுமே தற்போது ஒத்துழைத்து வருவதால், பொதுமக்களது ஆதரவு
அவர்களுக்கே வியப்பூட்டும் வகையில் பெருகி வருகிறது. அவர்களது பத்திரிகைகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர்
சந்தாக்களை செலுத்துகின்றனர். அவர்களது கூட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்துக் கொள்கின்றனர். பல
உள்ளூர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் உழைக்கும் மக்களின் உண்மையான சீற்றத்தின் வெடிப்புகளை
சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிராக நேரடியாக திருப்பிவிட அவர்கள் தயாராக இல்லை.
ASG ம், 2006 தேர்தல் மாற்று அமைப்பும்
புதிய இடதுசாரிக் கட்சி அடிப்படையில் சோசலிச கண்ணோட்டத்தில் செல்வதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின், ரத்தத்தின் ரத்தமாக சதையின் சதையாக அவர்கள் உள்ளனர். ''நமது நகரங்களில்,
புறநகர் குடியிருப்புக்களில் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு அடிப்படையில் வாக்குரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்
வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்கு தலைவர்களாகிற தகுதி முற்றிலும் இல்லை. ஆனால், சம்பிரதாயமான முறையில் இடதுசாரி
தொழிற்சங்க நிர்வாகிகளாக பணியாற்றுவதற்கு நாம் தகுதியுள்ளவர்கள்தான்'' என்று ஒரு விமர்சகர் குறிப்பிட்டார். (Franz
Walter, BDIP- ல் ஏப்ரல் 5 ல் எழுதியது.)
இந்தத் தலைவர்களது நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் புதிய கட்சியை உருவாக்குவதில்
பல்வேறு முக்கிய பிரச்சனைகள் எழுகின்றன: சமூக சீர்திருத்தங்களின் தோல்வி எடுத்துக்காட்டுவது எதை? அதன்
காரணங்கள் என்ன? அதிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும்? சமூக நீதியை நிலைநாட்டுகின்ற தொழிலாளர்களது
நலன்களை காட்டிக்கொடுக்காத ஒரு கட்சியை எந்த அடிப்படையில் செயற்திட்டத்தில் நிலைநாட்டுவது?
மிகத் தெளிவான, இன்றைய நிலவரத்தை எதிரொலிப்பவையாக இருக்கும் இந்தக்
கேள்விகளை ''முன்னோக்குகள் மாநாடு'' தவிர்த்துவிட்டது.
DGB மற்றும் அற்றாக் அல்லது பல்வேறு ''இடதுசாரிக்'' குழுக்கள்
இந்தப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த விரும்பவில்லை. ''முன்னோக்குகளுக்காக நடத்தப்பட்ட மாநாடு''
எந்தவிதமான முன்னோக்கும் இல்லாமல் முடிந்திருக்கிறது. இன்றைய உயிர் நாடியான பிரச்சனைகள் எதையும் கவனத்தில்
எடுத்துக்கொண்டு கலந்துரையாட மாநாடு மறுத்துவிட்டது. 120 கருத்தரங்குகளும், பணிப்பட்டறைகளும் நடத்தப்பட்டன.
அவற்றில் ஒரே பிரச்சனையைத்தான் விவாதித்தார்களே தவிர
ASG ம், 2006 தேர்தல் மாற்று அமைப்பும் சுயமுன்தணிக்கை செய்து
கொண்டு தங்களது செயற்திட்டம் எதையும் மாநாட்டில் எடுத்து வைக்கவில்லை. கருத்தரங்கை நடத்தவில்லை. அல்லது
தங்களுக்காக ஒரு திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. ஆனால், வேறு இடத்தில் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினார்கள்.
பகிரங்கமாக, நேர்மையாக செயற்திட்டம் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக மாநாட்டை
ஏற்பாடு செய்தவர்கள் வெற்று உணர்வு வெளிப்பாட்டிற்கு வழி செய்தனர். தொழிற்சங்கங்கள் செயல்பாடு குறித்து
தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அல்லது கண்டன கேள்விகளுக்கு பதிலளிக்கின்ற வகையில் பெரும்பாலும் பேச்சாளர்கள்
ஒற்றுமை பற்றிய வேண்டுகோள்களோடு முடித்துக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள ''நவீன தாராளவாத
ஐக்கியக் கட்சிக்கு'' எதிராக ''குறைந்தபட்சத் திட்டங்களை'' உருவாக்குவதுதான் மாநாட்டின் நோக்கமென்று
பேச்சாளர்கள் சலிப்பில்லாமல் கூறிக்கொண்டிருந்தனர். ''சீர்திருத்தமா அல்லது புரட்சியா'' என்பதுபற்றி நிகழ்ச்சி
நிரலில் குறிப்பிடப்படவில்லை. எனவே அவற்றை விவாதிக்கக்கூடாது என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
பேர்லின் சுதந்திர பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், பூகோளமயமாக்கல்
தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியவருமான
Elmar Altvater
இந்த அரசியல் கண்ணோட்டத்திற்கு தனது சேவையை வழங்கினார். சனிக்கிழமை பிற்பகலில் கருத்தரங்கில் உரையாற்றிய
அவர் சீர்திருத்தக்காரர்களுக்கு எதிராக ரோசா லுக்ஸம்பேர்க் எழுப்பிய புகழ்பெற்ற வாதங்கள் பற்றி குறிப்பிட்டார்.
சீர்திருத்தமும், புரட்சியும் பற்றிய இயங்கியல் இனி பயன்படாது என்றார். சமூக இயக்கங்கள் தங்களது
போராட்டங்களிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் ரோசா லுக்சம்பேர்க்கிடமிருந்து நாம்
பெறக்கூடிய மிக முக்கியமான படிப்பினையாகும் என்று குறிப்பிட்டார். லுக்சம்பேர்க்கைப் பொறுத்தவரை இந்த இறுதிக்
குறிக்கோள் தெளிவாக இருந்தது. ஆனால் இன்று, சோவியத் ஒன்றியத்தின் பொறிவை எடுத்துக் கொண்டால், அது இனி
பயன்படாது என்றும் அந்த பேராசிரியர் குறிப்பிட்டார்.
Altvater க்கு அருகில் அமர்ந்திருந்த
ஜேர்மன் அற்றாக் அமைப்பை சேர்ந்த Sven Giegold
அதே நிலைப்பாட்டை எடுத்தார். ''இந்த பழைய விவாதத்தில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்து முட்டிமோதிக்
கொண்டிருப்பது'' குறித்து அவர் எச்சரித்தார். அத்தோடு, இப்போதுள்ள நிர்வாகக் கட்டுக்கோப்பை
சமாளிப்பதற்கான திட்டம் எதுவும் தென்படவில்லை என்றும், அதேபோன்று எந்த ஐரோப்பிய அரசாங்கமும் குறுகிய கால
சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், சீர்திருத்தம் அல்லது புரட்சி ஆகியன நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாததால்
மற்றும் நடைமுறைக்கு ஏற்றபடி இல்லாததால், அந்தப் பிரச்சனைக்கு விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
மாநாட்டில் நிறைவுரையாற்றும் வகையில் ஞாயிறன்று
Magdeburg ஐ
சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் Roland Roth
நிறையுரையாற்றியபோது, அவரும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தார். இதில்,
Ver.di
தொழிற்சங்க தலைவர் Frank Bsirske
உடன் ஜேர்மன் அற்றாக் அமைப்பை சேர்ந்த Kerstin
Sack ம் சேர்ந்து கொண்டார்.
சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிக்கு எதிராக பொதுமக்களது இயக்கம்
அணிதிரட்டப்படுவதை அடக்கி ஒடுக்குவதற்காகவும், பயனற்ற, தனத்தனி கண்டன நடவடிக்கைகள் பலவற்றில் கவனத்தை
திசை திருப்புவதற்காகவும் மாநாட்டில் சில ''தீர்க்கமான'' விஷயங்களை விவாதிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது என்பதை
பேச்சாளர்கள் தெளிவுபடுத்தினர்.
நவீன-தாராளவாத கொள்கைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுவதற்கும் பொது
எதிர்ப்புதான் குறைந்தபட்ச வகுப்புத்திட்டம் என
Roth
வலியுறுத்தினார். மாற்றுக்கள் "பன்மையில் மட்டுமே உள்ளன". எதிர்ப்பு என்பது தெளிவாகவே போதுமானதல்ல.
எனினும், அன்றாடப் பிரச்சனைகளோடு கற்பனாவாத முன்னோக்குகள் கலந்த ஒரு சேர்க்கை" இயக்கத்திற்கு
தேவைப்பட்டாலும், "அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு முரண்பாடான புரட்சிகர ஞாயிற்றுக்கிழமை உரைகளுக்கு"
எதிராக அது விழிப்போடு இருக்கவேண்டும் என்று
Roth
கூறினார்.
''உடனடி புரட்சியைப்பற்றி'' எதுவும் பேசக்கூடாது. ஏனெனில் மூன்று தசாப்தங்களுக்கு
முன்னரே Marcuse
பொறுமையிழந்து நின்ற மாணவர்களை நோக்கிக் கூறியது என்னவென்றால், சமுதாய
மாற்றம் பல தலைமுறைகள் ஆற்றிய சேவைகளிலிருந்துதான் வருகிறது என்பதாகும். எமக்கு வயதாகிக் கொண்டுவரும்
காலத்தில் அந்த அறிவிப்பின் ஞானத்தை புரிந்துகொள்ள முடிகிறதென்று
Roth குறிப்பிட்டார்.
புதிய கட்சியை உருவாக்குவது குறித்து
Roth எச்சரிக்கை
விடுத்து, மாநாட்டில் இது சம்மந்தமாக பரவலாக நிலவிய விவாதத்தை எழுத்துரைத்தார். எடுத்துக்காட்டாக
பசுமைக் கட்சிகளை குறிப்பிட்டார். ''நாடாளுமன்ற வெற்றிக்கு தருகின்ற விலையாக அவர்கள் தங்களது மூல
குறிக்கோளை இழந்துவிட்டார்கள்'' என்று குறிப்பிட்ட Roth
புதிய கட்சிக்கு பதிலாக உள்ளூர் நிலவரங்களில் வேர்விடும், பரவலான
சமூக இயக்கம் காண வேண்டுமென்றார். அடுத்த நடவடிக்கையாக ''உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தும்போது பல
வாய்ப்புக்களை தரும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜேர்மனியிலுள்ள சமூகநல அமைப்புக்கள் சம்மேளத்தின் பிரதிநிதியாக அந்த மாநாட்டில்
கலந்து கொண்ட Adolf Bauer
என்பவர் புதிய கட்சி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ''நவீன தாராளவாத பிரச்சாரமானது,
தொழிலாளர்கள் தங்களது சொந்த அமைப்புக்களிலிருந்து பிரிந்து செல்வதற்கு வழிவகுத்துவிட்டதோடு, இது பழைய
'பிரித்தாளும்'' மூலோபாயமாக உள்ளது. இதற்கு எதிராக அனைவரும் தங்களது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அற்றாக் அமைப்பை சேர்ந்த
Kerstin Sack என்பவர், கடந்த காலத்தைப் பற்றி இடதுசாரிக்
கட்சிகள் ஒன்றிற்கொன்று தங்களை வேறுபடுத்திக் காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தினர் என்றும், இந்த அமைப்பில்
நான் சேர்ந்ததற்குக் காரணமே ''சீர்திருத்தம் அல்லது புரட்சியை'' ஒதுக்கி வைத்ததினால்தான் என்றும் குறிப்பிட்டார்.
பழைய அணுகுமுறைகளை மேற்கொள்வதால் ''பிளவுகள்தான்'' ஏற்பட்டன என்று அற்றாக்கை சேர்ந்த
Kerstin Sack
என்பவர் குறிப்பிட்டதோடு, அடுத்து என்ன செய்வதென்று தனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்,
பின்பு ஒற்றுமை தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்தினார்.
Frank Bsirske மிகவும் நளினமான
அணுகுமுறையை மேற்கொண்டார். புதிய சமூக இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்வது என்பது ஒரு புதிய கட்சியின் ஆதரவைச்
சார்ந்திருப்பது அல்லது எதிர்ப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்றார். பழமைவாதிகளும், சுதந்திர
ஜனநாயகவாதிகளும் பதவிக்கு வருவார்களேயானால், ஷ்ரோடரின் கொள்கைகளை இன்னும் தீவிரமாக கடைப்பிடிப்பார்கள்
என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Ver.di யின் தலைவர்
காலத்தால் துருப்பிடித்துக் கிடக்கும் ஒரு வாதமான, சமூக ஜனநாயக கட்சியினர் மற்றவர்களை விட ''தீங்கில் குறைந்தவர்கள்''
என்ற வாதத்தை முன்வைத்தார். ஆனால், மில்லியன்கணக்கான மக்களின் அன்றாட அனுபவம் இதற்கு முரணாக உள்ளது.
இறுதியில் அவர், நலம்புரி அரசின் அழிவுக்கான, அரசாங்கத்தின் வேலைத்திட்டமான
"2010 செயற்திட்டத்திற்கு" எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் "உள்ளூர் மயமாக்கல்" மற்றும் "பரவலாக்கல்"
இவற்றுக்கான Roland Roth
ன் அழைப்பில் சேர்ந்துகொண்டார். அடுத்த
ஆறு மாதங்களுக்கு இப்படி உள்ளூர்மயமாக்கல் மற்றும் பரவலாக்கல் இருந்தது என அவர் கூறியதோடு, இனி மிகப்பெரிய
கண்டனப்பேரணிகள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ''முன்னோக்குகள் பற்றிய மாநாட்டில்'' நிலவிய
சூழ்நிலை முற்றிலும் மேலெழுந்தவாரியாகவும், விரக்தி மனப்பான்மையை எதிரொலிப்பதாகவும் அமைந்திருந்தது. இந்த
மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் சமூக நெருக்கடியாலும் சீர்திருத்தக் கொள்கைகள் சிதைந்துவிட்டதால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள
கொந்தளிப்பான முரண்பாடுகளாலும் பீதியடைந்துள்ளனர். அவர்களது மனப்போக்கை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுவது
ஈராக் போராகும். அதைப்பற்றி இந்த மாநாட்டில் அவர்கள் மூச்சுவிடவில்லை. ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அமெரிக்கப்படைகள்
ஈராக் கைதிகளை சித்தரவதை செய்த புகைப்படங்கள் வெளிவந்திருப்பது தொடர்பாக உலகம் முழுவதும் மக்கள் கவனம்
திருப்பிக்கொண்டிருக்கிற நேரத்தில் அதைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
இப்படி வெளிப்படையாக தெரியும் ஒரு உண்மையை அவர்கள் விட்டுவிட்டது தற்செயலாக நடந்த
விடயமல்ல. மாறாக, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களது கொள்கையை முற்றிலுமாக தோலுரித்துக் காட்டுவதாக
ஈராக் போர் அமைந்திருப்பதால் அதைப்பற்றி அவர்கள் மூச்சுவிடவில்லை. தனிப்பட்ட நாடுகளில் தனிப்பட்ட அரசாங்கங்களை
நிர்ப்பந்தம் கொடுத்து படிப்படியாக மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவிட முடியுமென்ற முன்னோக்குகளை செல்லாக்
காசுகளாக ஆக்குகின்ற வகையில் ஈராக்போர் சர்வதேச நிலவரத்தை மாற்றியிருக்கிறது. அமெரிக்காவின் உலக மேலாதிக்க
முயற்சி, காலனி ஆதிக்கம் மீண்டும் தோன்றியிருப்பது என்பன உலகை மறுபங்கீடு செய்வதற்காக பிரதான வல்லரசு நாடுகளிடையே
நிலவுகின்ற போட்டிகளை எடுத்துக்காட்டுகின்றது. ஆகவே, இவற்றால் உருவாகியுள்ள சர்வதேச நிலவரம் இந்த மாநாட்டு
ஏற்பாட்டாளர்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறானதாக உள்ளது.
ஆகவே, சமூக வெற்றிகளைப் பாதுகாத்தல், இலாபத்திற்காக மனித வாழ்க்கையின்
அனைத்து அம்சங்களையும் கீழ்ப்படுத்துதலுக்கு எதிர்ப்பு, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் -
இவ்வனைத்து உடனடி மற்றும் முக்கிய குறிக்கோள்கள் என்பன, சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவதை நோக்கங்கொண்டவர்களின்
ஒட்டுமொத்த சோசலிச மூலோபாயத்தின் பகுதிகளாக மட்டுமே அடையப்பட முடியும். இந்த அடிப்படையில்தான் உலகம்
முழுவதிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், தோல்வி கண்டுவிட்ட சமூக சீர்திருத்தவாத அமைப்புக்களுக்கு ஒரு
மாற்றைக் கட்டுகின்றன. |