World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Email indicates Cheney involved in Halliburton deal in Iraq

ஹாலிபர்டன் ஒப்பந்த பேரங்களில் செனியின் ஈடுபாடுகளை கோடிட்டுக்காட்டும் மின்னஞ்சல்

By Joseph Kay
8 June 2004

Back to screen version

இந்தவார டைம் பத்திரிகை அண்மையில் பென்டகன் வெளியிட்டுள்ள மின்னஞ்சல் (Email) சர்ச்சையில், ஈராக்கில் பெரிய ஒப்பந்தம் ஒன்றிற்கு ஹாலிபர்டன் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் துணை ஜனாதிபதி டிக் செனி (Dick Cheney) நேரடியாக ஈடுபட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2000 புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தில் சேர்ந்துகொள்வதற்காக ஹாலிபர்டன் உயர் நிர்வாக பதவியிலிருந்து (CEO) செனி ராஜிநாமா செய்தார்.

''பத்திரிகை தடயம்: செனி உடன்படிக்கை ஒன்றிற்கு அனுமதித்தாரா? (The Paper Trail: Did Cheney Okay a Deal?") என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தக்கட்டுரை இராணுவ பொறியாளர் கழகத்தை சார்ந்த (Army Corps of Engineers) ஒரு அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலில் அவர் குறிப்பிடப்பட்டதாவது, ஈராக்கில் எண்ணெய் குழாய்களை அமைப்பதற்கான அந்த ஒப்பந்தம் பாதுகாப்பு கொள்கை தொடர்பான துணைச் செயலாளர் டக்லஸ் பெயத் (Douglas Feith) இனால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ''நாளை வெள்ளை மாளிகைக்கு அந்தத்தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம். இதில் எந்தப் பிரச்சனையும் எழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை ஏனெனில் துணை ஜனாதிபதி அலுவலகம் இதில் ஒருங்கிணைப்பு செய்திருக்கிறது''- என்று அந்த மின்னஞ்சல் குறிப்பிடுகிறது. இராணுவப் பொறியாளர்கள் கழகம் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான பொறுப்பு வகிக்கின்ற காரணத்தினால் செனி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன்தான் ஹாலிபர்டனுக்கு அந்த ஒப்பந்தம் வழங்ப்பட்டிருக்கிறது என்று அந்த மின்னஞ்சல் குறிப்பிடுகிறது.

2003 மார்ச் 5 திகதியிடப்பட்ட இந்த மின்னஞ்சலை, நிர்வாகத்தின் எரிபொருள் கொள்கையை உருவாக்குவதில் துனை ஜனாதிபதி இரகசிய, பேரங்களை நடத்தினார் என்பது தொடர்பாக செனிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள பழமைவாத குழுவான Judicial Watch பெற்றிருக்கிறது. மூன்று நாட்களுக்குப் பின்னர் வேறு எந்த கம்பெனிகளும் பேரத்தில் கலந்து கொள்ளாமல் ஹாலிபர்டனுக்கு அந்த ஒப்பந்தம் தரப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஈராக்கில் ஹாலிபர்டன் 17 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

ஒப்பந்தங்கள் நிகழ்ச்சிப்போக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னர் செனி குறிப்பிட்டார். 2002 செப்டம்பரில் NBC தொலைக்காட்சியின் Tim Russert இற்கு கூறியபோது ''பொறியாளர்கள் கழகம் அல்லது மத்திய அரசில் வேறு எவரும் வழங்கிய ஒப்பந்தங்களில் எந்த வடிவத்திலும் அல்லது உருவத்திலும் எனக்கு எந்த விதமான சம்மந்தமும் இல்லை செல்வாக்கும் பயன்படுத்தப்படவில்லை எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது'' என்று செனி கூறியிருந்தார். மின்னஞ்சல் செனியின் தொடர்பு எதுவும் நேரடியாக சுட்டிகாட்டப்படவில்லை என்று செனியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மாறாக எதிர்காலத்தில் பிரச்சனைக்கு இடமளிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. என்பதை துணை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் ''விழிப்புடன்'' தான் அது அனுப்பப்பட்டிருக்கிறது.

ஹாலிபர்டனிலிருந்து தொடர்ந்து செனி நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொண்டுதான் வருகிறார். அவர் சென்ற வருடம் 178,437 டாலர்கள் பெற்றுள்ளார். அவருக்கு அந்தக் கம்பெனியில் 433,000 பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது, 2000இல் அவர் உயர் நிர்வாக அதிகார பதவியிலிருந்து விலகியதற்காக அவருக்கு 20 மில்லியன் டொலர்கள் ''பொன் நன்கொடையாக'' வழங்கப்பட்டன.

ஹாலிபர்டன் பேரத்தில் செனியின் நேரடித்தலையீடு எதுவாக இருந்தாலும், புதிய மின்னஞ்சல் ஈராக் போர் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ''மறுசீரமைப்புப்'' பற்றி ஒரு முக்கியமான உண்மையை உயர்த்திக்காட்டுகிறது. ஒவ்வொரு மாதமும் செலவிடப்படும் பில்லியன்கணக்கான டொலர்களினால் பயனடையும் கம்பெனிகள் போரை ஆரம்பிப்பதற்கு பொறுப்பான தனி மனிதர்களோடு நெருக்கமான உறவுகளைக் கொண்டுருப்பவை.

இந்த உண்மை ஹாலிபர்டனை விட அதிகமாக வேறு எந்த கம்பெனிக்கும் பொருந்தாது, இது நீண்ட கால நெருக்கமான உறவுகளை அரசியல் ஸ்தாபனத்தோடு வைத்திருக்கிறது. 1990-களின் ஆரம்பத்தில் அரசாங்கம் ஒப்பந்தங்களை அதிக அளவில் நம்பி இந்தக் கம்பெனி செயல்பட ஆரம்பித்தது. முதலாவது புஷ் நிர்வாகத்தில், அன்றைய பாதுகாப்பு செயலர் செனி, ஹாலிபர்டன் சில முக்கியமான இராணுவப் பணிகளை தனியார் உடைமையாக்குவது பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கட்டளையிட்டார். போக்குவரத்து, கட்டுமானம், உணவு சேவை, இதல் அடங்கும்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிண்டன் நிர்வாகம் பதவிக்கு வந்ததும் செனி ஹாலிபர்டனில் உயர் நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான KBR-மூலம் கம்பெனியின் இராணுவ ஒப்பந்தங்களை பெருக்குவதற்கு அவர் பணியாற்றினார். குறிப்பாக, பால்கன் பகுதியில் KBR பாதுகாப்பு ஒப்பந்தம் பெற்றது. அதற்கு சேர்பியாவிற்கு எதிராக போர் ஆரம்பிக்ப்படும்போதும் அதற்குப்பின்னரும் பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பேரம் கிடைத்தது.

அதற்குப் பின்னர், ஹாலிபர்டன் மத்திய ஆசியா, குவாண்டநாமோ வளைகுடா, மற்றும் தற்போது ஈராக்கில் ஒப்பந்தங்களை பெற்றிருக்கிறது---அமெரிக்க அரசாங்கம் எங்கு போருக்குச் செல்கிறதோ அங்கெல்லாம் ஹாலிபர்டன் செல்கிறது, பில்லியன் கணக்கான டொலர்களை இந்த நிகழ்ச்சிப்போக்கில் பெறுகிறது. இதுபோன்ற ஒப்பந்தங்களில் கம்பனியின் பெருப்பகுதி செலவுடன் ஒரு குறிப்பிட்ட இலாப வரம்பும் வழங்கப்படுகிறது. பொதுவாக செலவிடுவதற்கு மேல் 3சதவீதம் அல்லது அதற்கு மேலாக இலாப வரம்பு அதிகரிக்கப்படுகிறது. எனவே அந்த நிறுவனம் செலவினங்களை அதிகரித்துக்காட்டுவதில் அக்கறை கொண்டிருக்கிறது. கூடுதலாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு டொலரிலும் 3 சதவீதங்கள் நேரடியாக இலாபமாக கிடைக்கிறது. இந்த நடைமுறை துல்லியமாக ஊழல் மற்றும் இலஞ்ச பேரங்களுக்கு ஏற்ற சூழ்நிலையாகும்.

அண்மை மாதங்களில், ஈராக்கில் தனது பணிகளுக்காக கூடுதல் தொகைகளை அந்தக் கம்பெனி வசூலித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதுதான் ஹாலிபர்டன் சந்திக்கும் முதலவாது ஊழல் குற்றச்சாட்டு அல்ல. 1990 களின் நடுவிலும் பின்னர் பால்கன் பகுதி பணிகளிலும் செனி அந்த நிறுவனப் பொறுப்பில் இருந்தபோது கட்டணங்களை மிக அதிக அளவில் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பல்வேறு நேரங்களில் பென்டகன் புலன்விசாரணைகள் நடத்தப்போவதாக அறிவித்திருந்தாலும், இந்த நடைமுறைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது, விமர்சனங்களை அடக்குவதற்கான ஒரு பொது உறவு திசைதிருப்பலாகவே இந்த புலன்விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அண்மையில் ஒரு பேரம் கவனத்திற்கு வந்தது. ஹாலிபர்டன் குவைத்தின் கம்பெனி ஒன்றிற்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒரு துணை ஒப்பந்தத்தை வழங்கியது. அந்த குவைத் கம்பெனி ஆளும் குடும்பத்தோடு நெருக்கமான உறவுகளைக்கொண்டது. அந்தக் கம்பெனி எரிபொருள் மீது 61 மில்லியன் டொலர்கள் கூடுதலாக கட்டணம் வசூலித்தது, ஒரு பேரத்தில் 6மில்லியன் டொலர்கள் இலஞ்சம் வாங்கியதாக இரண்டு ஊழியர்களை ஹாலிபர்டன் பதவி நீக்கம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையை சேர்ந்த Rex Wempen இந்த பேரத்தில் ஒரு அரசியல் உள்ளடக்கம் சம்மந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ''போரை ஆதரித்தற்கு குவைத்திற்கு வழங்கப்பட்ட இராஜதந்திர விலை அது'' என்று கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான போருக்கு குவைத் ஆதரவு தந்ததற்கு கைமாறாக குவைத் அரச குடும்பத்திற்கு நெருக்கமான உறவுள்ள கம்பெனிக்கு ஒப்பந்தத்தை அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டில் நெருக்கமான உறவுடைய கம்பெனி துணை ஒப்பந்தத்தை தந்திருக்கிறது, இதில் அரசியலுக்கும் பெரு வர்த்தகத்திற்கும் இடையிலுள்ள இடைவெளிகள் மறைந்துவிட்டன.

ஹாலிபர்டன் செலவினங்கள் அனைத்தும் திருப்ப தரப்பட்டு விடுவதால், துணை ஒப்பந்தக்காரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைப்பற்றி அந்த நிறுவனம் கவலைப்பட வேண்டியதில்லை. ஹாலிபர்டனும் அதன் துணை நிறுவனங்களும் வசூலிக்கும் கட்டணங்களை நேரடியாக அமெரிக்க அரசாங்கம் தந்துவிடுகிறது, மற்றும் இறுதியாக அமெரிக்க மக்களே செலுத்திவிடுகின்றனர். அதே டைம் இதழில் மற்றொரு கட்டுரையையும் "The Master Builder" என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. அதில் ஹாலிபர்டனில் முன்னாள் ஊழியர் அதன் ஒப்பந்த வர்த்தகங்களை கையாண்ட Hunry Bunting கூறியுள்ள கருத்தை வெளியிட்டிருக்கிறது. ''நாங்கள் சிறந்த விலையை (துணை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து) எதிர்ப்பார்ப்பதில்லை. மேற்பார்வையாளகள் அடிக்கடி சொல்வது என்னவென்றால், 'விலையைப் பற்றிக் கவலைப்படவேண்டாம், ஹாலிபர்டனுக்கு செலவு செய்த தொகை முழுவதும் திரும்பக் கிடைத்துவிடும்' என்று கூறியிருக்கிறார்.

குவைத் எரிபொருள் போக்குவரத்து துணை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இராணுவ பொறியாளர்கள் கழகம் ஊழலை ஊக்குவிக்கிற வகையில் அசாதாரண நடைமுறையை கையாண்டது. துணை ஒப்பந்தக்காரர் விரிவான செலவு மற்றும் விலை பட்டியலை தரவேண்டும் என்ற விதியை தளர்த்திவிட்டார். பாதுகாப்புத்துறை ஒப்பந்த தணிக்கை அமைப்பு அரசாங்கத்திடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தனது பூர்வாங்க விசாரணையில் கண்டுபிடித்ததற்கு பிறகு இந்த விதி தளர்வு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குப்பின்னர் மே மாதத்தில், பென்டகன் KBR அமெரிக்க அலுவலக பணியாளர்களுக்கான உணவு வினியோகம் செய்ததில் 160 மில்லியன் டொலர் கட்டணத்தை நிறுத்தி வைத்துவிட்டது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் தனது உணவு ஒப்பந்தங்களில் 6 மில்லியன் டொலர் அளவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஹாலிபர்டன் ஒப்புக்கொண்டது-- வழங்கப்படாத சமைக்கப்படாத உணவிற்காக ஹாலிபர்டன் கட்டணம் வசூலித்திருக்கிறது.

ஹாலிபர்டனுக்கு ஈராக் போரினால் ஏற்பட்ட பூரிப்பை அளவிற்கு அதிகமாக மதிப்பிடுவது இயலாத காரியம். டைம் நிருபர் Jyoti Thottam குறிப்பிடுவதைப்போல் ''ஈராக்கிலிருந்து வெகுதொலைவு வெற்றிகரமாக எண்ணெய் கிணறு வர்த்தகத்தை நடத்துகின்ற ஹாலிபர்டன் போன்ற ஒரு கம்பெனி ஈராக்கில் தங்கியிருக்க சம்மதித்தது ஏன்? இலாபம்தான். 2003 ஜனவரி முதல் ஈராக் ஒப்பந்தங்கள் மூலம் ஹாலிபர்டனின் வருவாய் 5.7 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளன, அந்த நேரத்தில் கம்பெனி 4 பில்லியன் டொலர்கள் கூரைத்தகடுகள் (Asbestos) கோரிக்கை தொடர்பாக ஆட்டம் கண்டுகொண்டிருந்தது அப்போது ஈராக் ஒப்பந்தங்கள்தான் அந்தக் கம்பெனியின் வளர்ச்சி முழுவதற்கும் அடிப்படையாகும். உண்மையில் போர், ஹாலிபர்டனின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்''

ஈராக்கில் போர் பல்வேறு காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது- ஆளும் செல்வந்த தட்டின் பூகோள அரசியல் நலன்களுக்காக மத்திய கிழக்கையும் அதன் எண்ணெய் வளங்களையும் கட்டுப்படுத்துவது அமெரிக்காவிற்குள் வளர்ந்துவரும் சமுதாய நெருக்கடியிலிருந்து மக்களது கவனத்தை திசைத்திருப்புகின்ற முயற்சி--- என்றாலும் உண்மையான ஓர் அம்சம் என்னவென்றால் நேரடி ஊழலும், கொள்ளை இலாபமும் தான்.

அமெரிக்காவின் மிகப்பெரும்பாலான கம்பெனிகள் தங்களது சூதாட்டப்போக்குகளை மறைத்துக் கொள்வதற்காக இரண்டு அரசியல் கட்சிகளுக்குமே நன்கொடைகளை வழங்கிவருகின்றன. பாரம்பரியமாக ஹாலிபர்டன் குடியரசுக் கட்சிக்காக மிகப்பெருமளவிற்கு தனது ஆதரவு நிதிகளை செலவிட்டு வருகிறது. 2000 ஆண்டு தேர்தலில் ஹாலிபர்டன் 5,36,765 டொலர்களை நன்கொடையா கொடுத்திருக்கிறது, இதில் 97சதவீதம் குடியரசுக் கட்சிக்கு சென்றது.

2001-ல் புஷ் நிர்வாகம் பதவியேற்ற பின்னர் ஹாலிபர்டன் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட்ட தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக 2004 மார்சில் Boston Globe பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் கம்பெனி 1999-2000 இல் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்க ஆதரவுகளுக்காக 1.2 மில்லியன் டொலர்கள் செலவிட்டது, 2001 மற்றும் 2002இல் இது 600,000 டொலர்களாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அமெரிக்க பல்கலைக் கழகப் பேராசிரியர் James Thurber ''அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் எனவே ஆதரவிற்காக செலவிடவேண்டியதில்லை''- என்று கூறியிருக்கிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved