World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா நேட்டோ விரிவாக்கமும் ஐரோப்பாவில் அரசியல் நெருக்கடியும் பகுதி ஒன்று By Niall Green இக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரை கீழே பிரசுரிக்கப்படுகிறது ஏப்ரல் 1ம் தேதி, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, NATO 1949 ம் ஆண்டு அமெரிக்க தலைமையின்கீழ் அது இராணுவ கூட்டாகச் செயல்படத் தொடங்கியதில் இருந்து, மிக அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டது; ஏழு மத்திய-கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. புதிய உறுப்பு நாடுகள் அனைத்துமே பழைய வார்சோ ஒப்பந்த நாடுகள் அல்லது பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்தவையாகும். அவை முறையே பல்கேரியா, எஸ்தோனியா, லிதுவேனியா, லாத்வியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவையாகும். சமீப காலத்தில் NATO தன்னுடைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய-கிழக்கு ஐரோப்பிய பகுதியில் விரிவாக்கியது இது இரண்டாம் தடவையாகும். போலந்து, செக் குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் 1999 ல் இதில் சேர்ந்திருந்தன. இந்நாடுகள் இவ் ஒப்பந்தத்தில் இணைந்தமை வழக்கமான பாராட்டுக்களுடன் வரவேற்கப்பட்டாலும், அதிகாரபூர்வமான கொண்டாட்டங்களும், சொற்றொடர்களும் சுதந்திரம், ஜனநாயகம் இவற்றைப்பற்றி பேசப்பட்டாலும், இந்நாடுகள் ஒரு பிரிவிற்குட்பட்டுள்ள அமைப்பிற்குள்தான் சேர்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. நேட்டோவுடைய தலைமைச் செயலர் Jaap de Hoop Scheffer இதன் விரிவு எவ்வாறு ஐரோப்பிய பிரிவினைச் சகாப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று கூறினாலும், ஏழு புதிய நாடுகளும் ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ள நேரம் இதன் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையே எப்பொழுதும் இல்லாத அளவு விரோத உணர்வு கூடுதலாக இருக்கும் நேரமாகும். இப்புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சுதந்திரமான நாடுகளாக இராணுவ ஒப்பந்தத்தில் நுழையவில்லை; மாறாக பெரும் அதிகாரப் போராட்டத்தில் அமெரிக்காவின் பதிலாட்களாகத்தான் நுழைந்துள்ளன. புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்துக்கொள்ளும் ஒப்பந்தக் கையெழுத்து உலர்வதற்குள்ளாகவே, ஒப்பந்தம் கடந்த பத்தாண்டுகளில் தெளிவாகவே வெளிப்பட்டு பிரிந்துவிட்டிருந்த முகாம்களில் நன்கு தன்னைக் காட்டிக் கொண்டது. ஏப்ரல்1 இணைப்பை தொடர்ந்து வந்த நாட்களில், பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக்கும், ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரும் தனித்தனியே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தகைகளை நடத்தினர்; புட்டினுடைய நிர்வாகம் பலமுறையும் தனது அதிருப்தியை நேட்டோவின் கிழக்குப்புற விரிவாக்கத்தின்பால் வெளிப்படுத்தியுள்ளது. ஒப்பந்த உறுப்பு நாடுகளான பிரான்சும் ஜேர்மனியும் இந்த விரிவாக்கத்தைப் பற்றி, இதில் அமெரிக்காவிற்குத்தான் மிக அதிகமான ஆதாயம் கிடைக்கும் என எச்சரிக்கையுடன்தான் இருக்கின்றன. ஸ்லாவேனியாவைத் தவிர மற்ற புதிய நாடுகள் அனைத்தும் வலுவான முறையில் அமெரிக்கச் சார்புடைய வெளியுறவுக் கொள்கைகளை உடையவை ஆகும். மூன்று தலைவர்களும் வெளிப்படையாக தங்கள் ஆதரவை நேட்டோவின் விரிவாக்கத்திற்கு தெரிவித்திருந்தபோதிலும், மாஸ்கோ, பேர்லின், பாரிஸ் மூன்றுமே ஒரு புறத்தே வந்துள்ளது என்பது, அவற்றிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ள பிளவைத் தெளிவாக்கியிருக்கிறது; ஈராக் போருக்கு முன்பே தொடங்கிய இந்நிலை இன்னும் தொடர்கிறது என்பது புலனாகும். இதனால் இம்மூன்று நாடுகளும் சேர்ந்துகொண்டு வாஷிங்டனுடைய செயல்திட்டத்திற்கு ஏதேனும் மாற்றுக் கொடுத்துவிட இயலும் என்று கருதுவதற்கு இடமில்லை. செப்டம்பர் 2003ல் ஐக்கிய நாடுகள் மன்றத் தீர்மானத்தின்படி ஈராக்கை அமெரிக்க பொறுப்பில் விடுவதற்கு முன்பு, ரஷ்ய, ஜேர்மனிய, பிரெஞ்சு தலைவர்கள் வாஷிங்டன் கோரிக்கைகளுக்கு நிபந்தனையற்ற சரணடையக் கூடிய முறையை இக்கூட்டமும் பிரதிபலிக்கிறது. ஒரு பிளவுற்ற யூரேசியா NATO இன் விரிவாக்கம் பழைய வார்சோ ஒப்பந்த நாடுகள், பழைய சோவியத் ஒன்றிய பகுதிகளிலும் படர்கிறது என்பது, 1991 சோவியத் கலைப்பிற்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் முக்கியமான அம்சம் ஆகிறது. இந்த தேதிக்கு பின்னர், உலகின் பெரும்பகுதிகள், முன்னர் அமெரிக்காவால் அணுகமுடியாமல் இருந்தவை, இப்பொழுது அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கிற்குள் வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய தளத்தை கொண்டுள்ள மூலதனம் இப்பகுதியில் முக்கிய உள் முதலீடாக வெளிப்பட்டுவரும் நிலையில், அமெரிக்கா தன்னுடைய செல்வாக்கை இராணுவ உறவுகளை வளர்ப்பதின் மூலம் பெருக்க கருதுகிறது. இப்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ வலிமையின் ஆதிக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றாக இல்லாமல், முழு யூரேசியக்கண்டத்திலும் அமெரிக்க பெரு வணிக நலன்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டவை ஆகும். தன்னுடைய இராணுவ தளங்களின் வலைப்பின்னல்களையும், இருதரப்பு ஒப்பந்தங்களையும், நேட்டோவின் கட்டுமானங்களையும் பயன்படுத்தி, அமெரிக்கப் படைகளால் இப்பொழுது ஆட்களையும் கருவியையும் சற்றும் தடுப்பில்லா முறையில் கண்டத்தின் பெரும் எண்ணெய், எரிவாயு மையங்கள், போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் பால்டிக் கடற்கரையில் இருந்து காஸ்பியன் படுகை வரை கண்காணிக்க இயலும். அமெரிக்க இராணுவப் பிரிவினர், ஜேர்மனியில் இருந்த பழைய, பெரிய அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து கிழக்கே வார்சா ஒப்பந்தத் தளங்கள் இருந்த போலந்து, ஹங்கரி, பல்கேரியா, ருமேனியா ஆகியவற்றிற்கு மாற்றப்படும். அல்பேனியாவில் ஒரு புதிய அமெரிக்கத் தளத்தை நிறுவுவதற்கான வாய்ப்பும் ஆய்விற்குட்பட்டுள்ளது. NATO உடைய ஆதரவின்கீழ் அமெரிக்கா தன்னுடைய படைகளை முக்கிய மூலோபாய பகுதிகளில் நிறுத்திவைத்துள்ளது; இதில் குறிப்பிடத்தக்கது பழைய யூகோஸ்லாவிய பகுதியாகும்; இதல் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைவீரர்கள் தொடர்ந்து கடமையாற்றுகின்றனர். ரஷிய அரசாங்கம் இப்புதிய நேட்டோ விரிவாக்கத்திற்கு தன்னுடைய இசைவின்மையை கடுமையான முறையில் தெரிவித்துள்ளது; குறிப்பாக பால்ட்டிக் பகுதிகளில் இந்நிலையை அது ஏற்கவில்லை; நேட்டோ விரைவில் உக்ரைன், அஜெர்பைஜன், ஜோர்ஜியா நாடுகளையும், அவை நீண்ட காலமாக அமெரிக்கா, அவற்றின் நட்பு நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதால், அனுமதிக்கக் கூடும் என்றும் அஞ்சுகிறது. நேட்டோவில் பால்ட்டிக் நாடுகளை இணைப்பது ஏற்கனவே அவற்றிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகாரபூர்வ உறவுகளைச் சரிய வைத்துள்ளது. ஏப்ரல் மாதம் லாட்வியா ஒரு ரஷ்ய தூதரக அதிகாரியை "நேட்டோ இராணுவ அடிப்படைக் கட்டுமானம் பற்றி அறிய முற்பட்ட முயற்சியில் ஈடுபட்டதற்காக" நாடு கடத்தியது. இந்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தூதர்களில் இவர் ஆறாவது ரஷ்யராவார்; இரண்டு பேர் மார்ச் மாதம் எஸ்தோனியாவில் இருந்தும், பெப்ரவரி மாதம் லிதூவேனியாவில் இருந்து மூன்று பேரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதிகாரபூர்வமாக ஏப்ரல் விரிவாக்கத்தை கண்டிக்க மறுத்தாலும், புட்டின் நிர்வாகம் மாஸ்கோவிற்கும் நேட்டோவிற்கும் பெருகி வரும் அழுத்தங்கள் பற்றி பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவானோவ் இந்த நேட்டோ ஊடுருவல் ரஷ்ய எல்லை வரை வந்துள்ள நிலையால் நாட்டின் பாதுகாப்புக் கொள்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். "இக்கூட்டு கூடுதலான திறமையைக் கொண்டு ரஷ்ய நிலப்பகுதியை கண்காணிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டது. இதைக் கண்டு பாராமுகமாக இருக்க முடியாது; நேட்டோவின் விமான, இராணுவத் தளங்கள் மிகவும் நெருங்கி வந்து ஐரோப்பிய ரஷ்ய நகரங்கள், இராணுவ தளங்களுக்கு அருகில் உள்ளன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடத்தகுந்த முறையில் கவலைகள் ரஷ்ய கலிநின்கிராட் (Kaliningrad) பகுதியை பற்றிது, அது நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியாவால் சூழப்பட்டுள்ளதை அடுத்து வந்துள்ளன. கலிநின்கிராட், ஒருகாலத்தில் குறிப்பிடப்பட்ட இராணுவ தளமாக இருந்து பல்லாயிரக் கணக்கான சோவியத் தரைப்படை, கடற்படை வீரர்களின் இல்லமாக இருந்து, இப்பொழுதும் ரஷ்யாவின் மூப்பான பால்டிக் கடற்படையின் தளமாக உள்ளது. ரஷ்ய இராணுவ, ஆட்சித்துறை நிர்வாகங்கள் இவ்விரிவாக்கம் நாட்டின் முக்கியமான இராணுவ வசதியை தனிமைப்படுத்திவிட்டது என்றும், நேட்டோ போர்விமானங்களை சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு ஐந்து நிமிஷத் தொலைவிற்குள் கொண்டுவந்துவிட்டது என்றும் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் அமெரிக்க நலன்களை முன்னேற்றுவிக்க நேட்டோ எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது, லிதுவேனியாவை தளமாகக் கொண்டு, புதிய BALTNET பொது விண் பாதுகாப்புத் திட்டம் பால்டிக் நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதிலிருந்து புலனாகும். BALTNET என்பது அமெரிக்க இராணுவம் மற்றும், அமெரிக்க ஆயுத தளவாடங்கள் உற்பத்திப் பெருநிறுவனம் Lockheed Martin இவற்றின் மேற்பார்வையில் இருந்தாலும், இதற்கு ஆதரவும் இராணுவ உதவியும் நேட்டோவால் முழுமையாகக் கொடுக்கப்படும். 1990களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா பால்ட்டிக் நாடுகளின் இராணுவத்தை நவீனப்படுத்துவதில் முக்கிய பங்ககைக் கொண்டுள்ளது. புதிய நேட்டோ நாடுகளின், குறிப்பாக பால்டிக் நாடுகளின் நேட்டோ தேவைகளை நிறைவு செய்வதில் அமெரிக்கா கணிசமான உதவியை செய்துள்ளது. BALTNET தவிர மூன்று மற்ற கூட்டு, எஸ்தோனிய, லாட்விய, லிதுவேனிய இராணுவத் திட்டங்களும் பென்டகனால் செலவிடப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டும் வந்திருக்கின்றன. BALTBAT (ஒரு பொது தரைப்படைப் பிரிவு), BALTRON (ஒரு பொது கடற்படைப் பிரிவு), BALTDEFCOL (பால்டிக் பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரி) என்பவையே அவை. ரஷ்ய, மற்றும் ஐரோப்பிய கண்ட ஆளும் செல்வநத்தத் தட்டினர், நேட்டோவின் விரிவாக்கம் தங்களுடைய ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் நேரடியாக உள்ளது என்ற நியாயமான கவலையைத்தான் கொண்டுள்ளார்கள். இந்தப் புதிய கூட்டின் உறுப்பினர்கள் "புதிய ஐரோப்பா" என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் 2003 ஈராக் போருக்கு முன் அறிவித்ததின் பகுதிகள் ஆகும்; இந்தாட்டின் அரசாங்கங்கள் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதற்கு சலிப்பின்றி ஆதரவைக் கொடுத்தவை; ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான படையெடுப்புக்களுக்கு ஆதரவை அளித்தவை. புதிய கூட்டின் உறுப்பினர்கள் ஈராக் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு இவற்றிற்கு படைவீரர்களை அனுப்பியிருந்தன. ஸ்லோவேனியா மட்டும்தான், அது ஐரோப்பிய வல்லரசுகளுடன் நெருக்கமாக இருப்பதால், நேரடியாப் பங்கேற்கவில்லை. அமெரிக்கப் படைகள், ஈராக் போரின் போது, ருமேனியா, பல்கேரியா இவற்றிலுள்ள விமான, கடற்படைத்தளங்களைப் பயன்படுத்தின தனிப்பட்ட எந்தவிதமான சுதந்திரமும் பொறுக்கப்படமாட்டாது. "விருப்பமுடையோரின் கூட்டு" என்பதற்கு அடிபணிந்து நின்றாலும், சில நாடுகள் புஷ் நிர்வாகத்தால் EU கோரிக்கையான அமெரிக்கா தன்னுடைய படையை ICC (International Criminal Court சர்வதேச குற்றவியில் நீதிமன்றம்) இன் அதிகார வரம்பின்கீழ் கொண்டுவரவேண்டும் என்பதை கூறியதற்காக தீவிரமாய் கண்டிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கும் புதிய நேட்டோ உறுப்பினர்களுக்கும் இருக்கும் உறவு, ஒரு மூத்த லாட்வியத் தூதர், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் 2003 டிசம்பரில் கூறியதின் மூலம் தெரியவரும்: அவர், வாஷிங்டன், லாட்விய படைகள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டதற்காக ஆன செலவான $2.7 மில்லியன் டாலர்களைக் கொடுக்க மறுப்போம் என மிரட்டியதாக தெரிவித்தார்; இதற்குக் காரணம் பால்டிக் நாடு அமெரிக்கா ICC இன் அதிகாரத்தை மதிக்க வேண்டும் என்று கூறியதுதான். தங்கள் பங்கிற்கு, ஐரோப்பிய சக்திகள் தங்கள் கிழக்கு அண்டை நாடுகளை மிரட்டப் பார்க்கின்றன. கடந்த ஆண்டு, பிரான்சின் ஜனாதிபதி சிராக் ருமேனிய, பல்கேரிய அரசாங்கங்களை (இவை EU வில் 2007ல் சேரவுள்ளன) அமெரிக்காவிற்கு ஈராக் பிரச்சினையில் ஆதரவு கொடுத்ததற்குக் கடிந்து கொண்டார்; அந்நாடுகள் பேசாமல் இருந்திருக்கவேண்டிய ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டதாக அவர் கூறினார். பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் ஏராளமான அமெரிக்க சார்புடைய நாடுகள் நேட்டோவிற்குள் சேர்க்கப்படுவது கூட்டில் அவர்களுடைய நிலையை வலுவிழக்கச்செய்தது போல் ஆயிற்று. பாரிஸும் பேர்லினும், புதிய நாடுகளைப் பயன்படுத்தி, தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ளுவதுடன், அமெரிக்கா அதன் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய விமர்சனங்களை வெளியிடாமல் தடை செய்ய முற்படும் என்று அறிந்துள்ளன. பிரான்சும் ஜேர்மனியும் இன்னும் சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ சக்தியை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட, ரஷ்ய ஒத்துழைப்பை அவை நாடவேண்டியிருக்கும் என்றும், அத்தகைய நடவடிக்கை வாஷிங்டனின் கிழக்கு ஐரோப்பிய பகடைக்காய்களின் விரோதத்தைச் சம்பாதிக்கும் என்று அமெரிக்க மூலோபாய வல்லுநர்கள் எதிர்பார்க்கலாம். தொடரும் |