:
வட அமெரிக்கா
Abu Ghraib and the failure of American society
அபு கிரைப்பும் அமெரிக்க சமுதாயத்தின் தோல்வியும்
By David Walsh
10 June 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஈராக்கிய கைதிகளை அமெரிக்க இராணுவ ஊழியர்களும், சிவிலியன் ஒப்பந்தக்காரர்களும்
சித்திரவதை செய்தமை ''கெட்டவர்கள்'' (Bad
Apples) சிலரது நடவடிக்கைகள் என்ற வாதத்தை அலட்சியமாக
புறக்கணிக்க வேண்டியது அவசியமாகும். செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலகக் குழு, (International
Committee of the Red Cross-ICRC) ஊடகங்கள்
அல்லது அமெரிக்க இராணுவமே கூட நடத்திய இணை நீதி விசாரணை அடிப்படையிலான புலன்விசாரணைகள்
அனைத்துமே, பல சந்தர்ப்பங்களில் ''திட்டமிட்டு'' கைதிகள் இழிவுபடுத்தப்படுவதையும் பயங்கரமாக நடத்தப்படுவதையும்
கைதிகளை கொல்லப்படுவதையும் அமெரிக்க சிறைகளிலும் மற்றும் ஈராக் கைதிகளின் முகாம்களிலும் தெளிவுபடுத்தியுள்ளன.
அது எப்படியிருந்தாலும், அண்மையில் நீதித்துறை வழக்கறிஞர்கள் பாதுகாப்புத்துறை செயலர்
டொனால்ட் ரம்ஸ்பீல்டுக்காக தயாரிக்கப்பட்ட 2002-03 ஆண்டிற்கான குறிப்பில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ''முப்படைகளின்
தலைமைத்தளபதி'' என்ற முறையில் சர்வதேச உடன்பாடுகள் அல்லது சித்திரவதையை தடுக்கும் அமெரிக்க சட்டங்களுக்கு
கட்டுப்பட்டவரல்ல என்று வாதிட்டிருப்பது அறிவிற்கு புறம்பானது. ஈராக்கிய படையெடுப்பின் ஆரம்பத்திலிருந்தே
இந்த சித்திரவரை அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவக்
கொள்கை இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இறுதி ஆய்வின் படி, ICRC
தகவல்படி 70 முதல் 90சதவீதம் பேர் கிளர்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட ''குற்றத்தைக்'' கூட செய்யாத கைதிகள்
மீது வன்முறைகள் நடத்தப்பட்ட விதம், இந்தப் போரின் கிரிமினல் தன்மையையும், சூறையாடும் போக்கையும் அதற்கெல்லாம்
மேலாக உருவாக்கப்பட்டுள்ள பூகோள மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முயற்சிக்கும்
மேலாதிக்கத்திட்டத்திலிருந்து கிளம்பி வந்திருக்கிறது:
இந்த அமெரிக்க இராணுவம் ஈராக்கிய மக்களது ''இதயத்தையும்
உள்ளத்தையும்'' வென்றெடுப்பதற்காக கடுமையான முயற்சியை மேற்கொள்ளும் என்ற ஆரம்பக்கூக்குரல்
பெரும்பாலும் தணிந்துவிட்டதால் இப்போது உலக மக்கள் மற்றும் சிறப்பாக அமெரிக்க மக்களது கண்ணில் மண்ணை
தூவுவதற்கான உளறல்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்க உதவியை நாடியிருப்பவர்களும் அல்லது
அமெரிக்காவை நம்பி வாழ முடியும் என்று நம்புபவர்களையும், தவிர அனைவரும் எதிர்க்கின்றனர் என்பது ஈராக்
மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்பான உலகரீதியாக நிலைநாட்டப்பட்டுவிட்ட உண்மையாகும். அமெரிக்க
மற்றும் கூட்டணிப்டைகளின் ஒவ்வொரு பின்னடைவும் ஈராக் மக்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாட்டம்
போல் வரவேற்கப்படுகிறது. இராணுவ நிலைப்பாட்டில் இந்த மோதலில் அமெரிக்கா தோற்றுவிட்டது.
அமெரிக்கப்படைகள் பயங்கரமான நிரந்தர சேதத்தை உண்டாக்க முடியும், ஆனால் ஈராக்கை ஆட்சி செய்யவோ
அல்லது அவர்களது கட்டுப்பாட்டில் ''ஸ்திரதன்மையை'' எந்த அர்த்தமுள்ள வகையிலும் செய்ய முடியாது.
இராணுவ புலனாய்வு கட்டுகோப்பு புஷ் நிர்வாகத்திலுள்ள பிற்போக்கு சிவிலியன்
கொள்ளை கும்பல் ஆகியோர் கண்ணோட்டத்தில் ஈராக் சிறைகளில் நடத்தப்பட்ட சித்தரவதை மற்றும் பலாத்காரச்
செயல்களின் நோக்கம் தெளிவானது. சென்ற கோடைகாலத்தில் பரவலாக பரவி வந்த எதிர்ப்பு அமெரிக்க
நிர்வாகத்தின் பிரச்சாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது, கொத்தடிமை அமெரிக்க ஊடகங்கள் ஈராக் மிக
எளிதாக ''விடுதலைப்'' பெறும் என்றும் ஈராக்கில் அமைதியை நிலைநாட்டி விட முடியும் என்றும் பிரச்சாரம்
செய்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் இராணுவம் CIA
மற்றும் புஷ் அதிகாரிகள் ''அல்ஜீரியா போர்'' முன்மாதிரியில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், 1950களின்
கடைசியில் அல்ஜீரியாவில் நடைபெற்ற காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் அடக்குவதற்கு
மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பதாக ஆகும்.
இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக மக்களை அச்சமூட்டுவதை உள்ளடக்கியுள்ளது:
சோதனைச் சாவடிகளிலும் பிற இடங்களிலும் ஆயிரக்கணக்கான
மக்களை ஒரே நேரத்தில் கைதுசெய்து அவர்களை அச்சுறுத்துவது, இழிவுபடுத்துவது மற்றும் அவர்களை
''பணியச்செய்வதற்காக'' சித்தரவதை செய்வது, அதற்குப்பின்னர் அவர்களிடம் காலனித்துவத்திற்கு எதிராக
நிலவும் எதிரணிகள் பற்றியும் அதன் ஆதரவாளர்கள் பற்றியும் புலனாய்வு செய்வது இத்தகைய நடவடிக்கைகள் மூலம்
எதிர்ப்பு கிளர்ச்சி பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி இராணுவம் அந்த எதிர்ப்பு அமைப்பையும், அதன்
உறுப்பினர்களையும் கொன்று குவிக்க ஆரம்பிக்கும்.
இதுதான் இந்த மூலோபாயம், அல்ஜீரியா அல்லது வியட்நாமில் இந்த மேற்கோள்
நீண்டகால அடிப்படையில் வெற்றிபெறவில்லை (எடுத்துக்காட்டாக வியட்நாமில்
CIA
செயல்படுத்திய படுபயங்கரமான Operation
Phoenix வெற்றிபெறவில்லை. இதில் 20,000
வியட்நாமியர்கள் கொல்லப்பட்டனர்).
இதில் மிகவும் குழப்பமிக்க ஒரு இயல் நிகழ்ச்சி என்னவென்றால் சில அமெரிக்க
இராணுவத்தினரும், ஆண்களும், பெண்களும் இந்த பயங்கரங்களில் பங்கெடுத்துக்கொள்ளுவது எப்படி? ஏன், இது
சாத்தியமாகிறது?
ஜேர்மனியின் நாசிசத்தின் ''கூட்டுக்குற்றம்'' (collective
guilt) கருத்தை சோசலிஸ்ட்டுகள் புறக்கணித்து விட்டனர்.
மற்றும் ''கெட்ட அமெரிக்கர்கள்'' தத்துவத்துடன் உடன்பட முயலவில்லை----வெள்ளை மாளிகையிலும்,
பென்டகனிலும் இடம்பெற்றுள்ள இழிவான மனிதர்களின் ஏகாதிபத்திய பேரினவாத ஆர்வம் அமெரிக்க மக்களில்
பரந்ததரப்பினரை தொற்றுநோய் போல் பிடித்துக்கொண்டது, எனவே அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்புத்
தெரிவிக்கும்போது கட்டுத்திட்டமில்லாத வன்முறையில் ஈடுபடுவது என்ற தத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அபு கிரைபிலும், இதர சிறைச்சாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர் மீது
படுபயங்கரமான முறைகேடுகள் பயன்படுத்தப்படும்போது அதை எதிர்க்க முடியாத அளவிற்கு மக்களில் ஒரு
தட்டினரை தயாரிப்பதற்கு திட்டவட்டமான சமுதாய மற்றும் பொருளாதார நடைமுறைகள் செயற்படுத்தப்பட்டு
வருகின்றன.
முதலில் ஆயுதப்படைகளின் ''தொண்டாற்றும்'' தன்மையின் ஆற்றிய பங்கை எதிர்கொள்ள
வேண்டும். அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிற்கு ஒரு போராடும் படை கிரிமினல்களைக் கண்டால் தயங்காத,
பூகோள முழுவதிலும் இரத்தக்களறி தலையீட்டில் ஈடுபடுகின்ற படைதேவை. இதில் முதல் நிபந்தனை இந்தப்படையில்
சேருபவர்கள் முற்போக்கு சமூகக் கருத்துக்கள் அல்லது சராசரி குடிமகனின் உணர்வுகள் மற்றும் விமர்சன கருத்துக்களுக்கு
அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். எனவே இராணுவத்தில் சேர்ந்ததும் அந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்,
அவர்களது சூழ்நிலைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது உணர்வுகளை மழுங்கச்செய்யும் பயிற்சி தரப்படுகிறது.
மேலும், புறநிலையாக பார்ப்பதென்றால், இராணுவத்தினர் ஒரு குழுவாக அமெரிக்க
சமுதாயத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களான பொதுவாக ஏற்பட்டுள்ள தார்மீக மற்றும் கலாச்சார சீர்குலைவு,
பெரிய மற்றும் சிறிய நகரங்களில் குறிப்பிட்ட பிரிவு மக்கள் உதிரிமயமாக்கல் (லும்பன்-lumpenization)
ஆகியவற்றை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும்.
இப்போதுள்ள இராணுவத்தில் எத்தனை பேர் தங்களது நீண்டகால சமூக பொருளாதார ஆணிவேர்கள்,
சிதைக்கப்பட்ட நிலையிலிருந்து வந்தவர்கள்? எத்தனை பேர் சிதைந்த குடும்பத்திலிருந்தும் எத்தனை பேர்
வாழ்க்கையில் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தவர்கள்?
ஈராக்கில் நடைபெற்ற போர் முழுவதுமே ஒரு கொடுமைதான், ஒரு போர் குற்றம்தான் பொய்களை
அடிப்படையாகக்கொண்டு அது ஆரம்பிக்கப்பட்டது. குருட்டுத்தனமான தேசபக்தி மற்றும் பேரினவாதம் என்ற
திட்டமிட்ட சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் செப்டம்பர் 11ல்
பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஈராக்கியர்கள்தான் பொறுப்பு என்று அமெரிக்க மக்களில் 70% பேர் கருத்துத்
தெரிவித்தனர். ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவப் படைகளில் ஒரு கணிசமான பகுதியினர் ஈராக்கில்
''பயங்கரவாதிகளை'' எதிர்த்து போர்புரியப் போகிறோம் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டவர்களாவர்.
தாங்கள் எதிர் கொள்வதை முற்றிலும் முன்னேற்பாடு இல்லாத நிலையில் ஒரு வெளிநாட்டில் விரோதச்சூழலில்
இறக்கிவிடப்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் அச்சத்தினால் வேலைபளுவினால் அல்லது உற்சாகக் குறைவினால் எத்தனை
குற்றங்களை வேண்டுமென்றாலும் புரியக்கூடும்.
ஒட்டுமொத்த போர்படையில் ஒரு குறிப்பிட்ட தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
ஒரு இராணுவ போலீஸ்காரர் அல்லது கைதிகளுக்கான காவலருக்குரிய தகுதி ஒவ்வொருவருக்கும் இருக்காது.
சிலருக்கு அதற்கான பின்னணி இருக்கலாம் சிலர் தங்களது தளபதிகள் சொல்வதையே கட்டளையாக எடுத்துக்கொண்டு
செயல்படுபவர்களாக இருக்கலாம்.
இறுதியில், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தற்செயலாக எந்த சக்திகளின்
உந்துதலால் செயற்பட்டிருந்தாலும் அபு கிரைப் கொடுமைகளை செய்தவர்கள் அமெரிக்க சமுதாயத்தினதும் மற்றும்
கலாச்சாரத்தினதும் உற்பத்திதான் ----அல்லது அமெரிக்க சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த
தோல்வியை எடுத்துக்காட்டுபவர்கள்தான்.
எதையும் தரவில்லை
குறிப்பாக ஈராக் கைதிகள் மீது ''ஆபாசமான கொடூர''
(Porno-Sadistic)
தன்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மிகக்கலரவரமூட்டும்
அளவிற்கு பண்பாட்டுச் சிதைவும், பிற்போக்குத்தனமும் சிதைந்துவிட்ட நிலையை எடுத்துக்காட்டுகின்றன. இராணுவ
நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், இந்தக் குற்றங்களை புரிந்தவர்கள் மனித வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட
கட்டத்தை கடந்துவர தவறியவர்கள் அவர்கள் அறிவுவளர்ச்சி குன்றியவர்கள்.
பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்ற கைதிகளது உடலில் டியூப் விளக்குகளையும்
(Phosphoric Light)
ஒளித்தடிகளையும் (Nightstick)
செருகிய ஆண்களையும், பெண்களையும் என்னவென்று நினைப்பது?
வாஷிங்டன் போஸ்ட் அபு கிரைப் சித்தரவதை தொடர்பாக கீழ்கண்ட
விவரத்தை தந்திருக்கிறது:
Mustafa Jassim Mustafa,
கைதி எண்: 150542, இராணுவ விசாரணையாளர்களிடம் தானும் பொாஸ்பரிக் விளக்கு தாக்குதலை கண்டதாக குறிப்பிட்டார்.
அது ரம்ஸான் நேரம் முஸ்லீம்களுக்கு புனிதமான மாதம், அவரது அறைக்கு கீழே இருந்த வேதனைக்கூக்குரல்
கேட்டது. அப்போது முஸ்தபா குனிந்து தனது அறைக்கு கீழே இருக்கிற அறையை பார்த்தார் சில போர்வீரர்கள்
அவரை மடக்கிப்பிடித்துக் கொண்டனர் மற்றவர்கள் விளக்கை அவருள் செருகினர்.
''இதில் [நிபுணரான
சார்லஸ்]
கிரானர் அந்தக் கைதி உடலில் பொஸ்பொரிக் விளக்கை செருகினார். என்று முஸ்தபா கூறினார். அந்தக்கைதி
''உதவிகோரி அலறினார்''. அப்போது உயரமான ஒரு வெள்ளைக்காரர் கிரானருடன் நின்று கொண்டு---
அவருக்கு உதவிக்கொண்டிருந்தார். ஒரு வெள்ளைக்கார குள்ளமான ஒரு பெண்போர்வீரரும் இருந்தார், அவர்
படம்பிடித்துக் கொண்டிருந்தார்''
''மற்றொரு கைதி இராணுவ விசாரணையாளர்களிடம் அமெரிக்க படையினர் தன்னை
பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தாக்கியதாகவும் குறிப்பிட்டார். அந்தக் கைதியின் பெயரை தி
போஸ்ட் வெளியிடவில்லை ஏனென்றால் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டவர், ஐந்து
நாட்கள் அபு கிரைப்பில் அவர் நிர்வாணமாக சிறைவைக்கப்பட்டிருந்தார், தலையில் முகமூடியுடன் 4-மணி நேரம்
முழங்காலில் ஊர்ந்துவர கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு நாள் அந்த முகமூடி தனது தலையிலிருந்து கீழே விழுகிற
அளவிற்கு தன்னைத்தாக்கினார்கள் என்று அந்தக்கைதி தெரிவித்தார். ''ஊர்ந்து செல்லுமாறு என்னை அரபு
மொழியில் போலீசார் கட்டளையிட்டனர். நான் எனது வயிற்றை பயன்படுத்தி ஊர்ந்து சென்றேன். அப்போது
போலீஸார் என்மீது துப்பினார்கள், அப்பொழுதும் ஊர்ந்து சென்றேன், எனது பின் பகுதியில் தலையில் காலில்
அடித்தார்கள்'' என்று அவர் தனது சத்தியபிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
''ஒரு நாள் அமெரிக்க இராணுவத்தினர் என்னை அமுக்கிப் பிடித்துக்கொண்டு எனது
கால்களை அகலமாக விரிக்கையில் இன்னொரு இராணுவத்தினர் தனது காற்சட்டையை அவிழ்க்க தொடங்கினார்.
நான் கூச்சலிட தொடங்கினேன், என்று கைதி கூறினார். ஒரு போர்வீரர் எனது தலையில் மிதித்துக்கொண்டார்,
யாரோ ஒருவர் பொஸ்பொரிக் விளக்கை உடைத்தார், அதன் பின் திராவகத்தை என்மீது தெளித்தார்கள்.
''நான் பிரகாசித்துக்கொண்டிருந்தேன், அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்''
என அவர் கூறினார்.
''கைதி கூறியதாக இறுதியாக அவரை அறைக்கு கொண்டுவந்தார்கள், ஒளித்தடியால்
(Nightstick)
என்னை பலாத்காரம் செய்தார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தையும் படம் பிடித்தார்கள்'' என்று அவர்
விசாரணையாளர்களிடம் தெரிவித்தார்.
இப்படி வன்முறையும் ஆபாசமும் கலந்த நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் பாசிச தரப்பை
சார்ந்தவை. வலதுசாரிகளிடமிருந்து எங்களுக்கு வருகின்ற மின்னஞ்சல்களில் ஒரு பகுதியை பிரசுரிப்பது பற்றி
WSWS
இல் ஒரு முறைக்கு மேலாக நாங்கள் ஆராய்ந்தோம். இந்த சமூக பிரிவினரின் மனப்பான்மையை மற்ற
வாசகர்களுக்கு தெரிவிப்பதற்காக இவ்வாறு ஆலோசனை செய்தோம். அந்த மின்னஞ்சல்களில்
மிகப்பெரும்பாலானவை கல்வியறிவற்றதாகவும், வசைபாடுவதாகவும் அச்சுறுத்துகின்ற வகையில் அமைந்திருந்தன.
அபு கிரைப் சிறைச்சாலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிமனிதர்கள்
அறிவுஜீவிதனமாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ மற்றும் கலையுணர்வோ, ஒன்றுமில்லாதவர்கள். கல்வியறிவு இல்லை
என்பது மட்டுமல்ல- இப்போது அமெரிக்காவில் பெரும்பாலோர் கல்வி கற்றவர்கள் அவர்களது கல்வி மிகக்குறுகிய
வட்டத்திற்குள்தான் உள்ளது--- அறிவாற்றலுள்ள தன்மையின் நிகழ்ச்சிப்போக்கின் நிலைமுறிவை காட்டுகிறது.
அவர்களுக்கு பகுத்தறியும் பண்பு இல்லை இதை ஈராக் கைதிகளை அவர்கள் நடத்திய விதத்திலிருந்தே தெரிந்து
கொள்ளலாம். அடிப்படை மனித அனுதாப உணர்வு அவர்களிடமில்லை. இங்கு சமூக பராமுகத்தின்
(அந்நியப்படுதலின்-Social alienation)
மிகக்கூடியளவிலான நிலையை பிரதிபலிக்கிறது.
ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலரது வாழ்க்கை குறிப்பை பார்த்தாலே அது
மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஏழு பேர் குழுவில் மிகவும் ஒடுக்கப்பட்ட தனிமனிதர்கள் இடம் பெற்றிருகின்றனர்.
அவர்கள் சிறைச்சாலைகள் மற்றும் போலீஸ்பணியில் மிகுந்த கொந்தளிப்பான பின்னணியிலிருந்து வந்தவர்கள்.
Lynndie England வயது
21, ரிசர்விஸ்ட் அவர் ஈராக் கைதிகளோடு மிகுந்த அருவருப்பாக காட்சி கொடுப்பதில் பிரபலமானவர். ஒரு
புகைப்படத்தில் சிகரெட் அவர் உதட்டிலிருந்து புகைந்து கொண்டிருக்கிறது, ஓரக்கண்ணால் முகமூடி அணிந்த நிர்வாணமான
ஈராக் கைதியின் ஆண்குறியை சுட்டிக்காட்டுகிறார். இன்னொரு புகைப்படத்தில் தனது காதலன் கிரானருடன்
கைகோர்த்து பிரமிடுபோல் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்திருக்கிற ஈராக் கைதிகளுக்கு பின்னால் நின்று கொண்டு இரண்டு
பேரும், வெற்றி சமிக்கை காட்டிக்கொண்டு நிற்கின்றனர். மூன்றாவது புகைப்படத்தில் அவர் ஒரு ஈராக் நிர்வாணக்
கைதியை கைவிலங்கினால் பிணைத்து இழுத்துக் கொண்டு வருகிறார்.
வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி:
England போருக்குச் செல்வதில்
உறுதியாக இருந்தார். முதலிலேயே இராணுவத்தில் சேருவதில் உறுதியாக இருந்தார். பழைய நிலக்கரி சுரங்க
(1300- மக்களே வாழ்கின்ற நகரம்) Fort Ashbyயில்
17 வயதான அவர் உயர் நிலைப்பள்ளியில், இளநிலை மாணவியாக பயின்று வந்தவர் தனது குடும்ப ஊர்திமனையிலிருந்து
வந்து இராணுவத்தில் சேர விரும்புவதாக அறிவித்தார். அப்போது அவர் வயதுகுறைந்தவராக இருந்ததால் அவரது
பெற்றோர்களது சம்மதம் தேவை, ஆரம்பத்தில் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
''அவர் 5அடி 2அங்குலங்களே உயரமாக இருந்தார். 100 இறாத்தலுக்கு மேல்
எடையில்லை இருந்தாலும் இராணுவத்தில் சேர உறுதியாக இருந்தார். ''விரைவில் எப்படியும் நான் 18 வயதாவேன்,
அப்போது இராணுவத்தில் சேருவேன்'' என்று அவர் கூறியதாக அவரது தந்தை
Kenneth England
தெரிவித்தார்.
''ஆனால் இராணுவத்தில் சேருவது என்ற முடிவு கல்லூரிக்குச் சென்று வானிலை, ஆய்வு
கற்க வேண்டுமென்ற விருப்பத்தினால் எழுந்தது என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இராணுவத்தில் சேருவது
சம்மந்தமான பல விளம்பர திரைப்படங்களை பார்த்து கல்லூரியில் படிப்பதற்கு அது உதவுமென்று தெரிந்து
கொண்டார். இராணுவ சேவைக்கு அழைக்கப்படாத நிலையில்
England
கோழியைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தார்.
Spc. Jeremy Sivits,
24வயது இராணுவத்தினரான இவர் ஒருவர் மட்டுமே கைதிகளை முறைகேடாக நடத்திய குற்றத்திற்கு ஒப்புதல்
வாக்குமூலம் கொடுத்திருக்கிறார், இவர் பென்சில்வேனியா,
Hyndman
குக்கிராமத்தைச் சேர்ந்தவர். ''அவரது குடும்பம் நகருக்கு குடியேறிய நேரத்தில்
Hyndman
ரயில்கள் அது ஒரு வர்த்தக ரயில் நிலையம் என்ற வகையில் அதில் நிற்கவில்லை. அங்கு கிடைத்த
வேலைவாய்ப்புக்கள் போய்விட்டதால் உள்ளூர் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. நகரத்தில் ஒரேயொரு கட்டடம்
தான் இருந்தது. இரண்டு பெட்ரோல் நிலையங்கள் இருந்தன. ஒரு வங்கி, ஒரு பழைய கார் விற்பனையாளர்
மற்றும் ஒரு போக்குவரத்து சிகப்பு விளக்குதான் அங்கிருந்தது. அங்கு மதுவிலக்கு கண்டிப்பாக அமுல்படுத்தப்பட்டது.
மது விற்பனை செய்வது சட்டவிரோதம் என்று போஸ்ட் விவரித்து உள்ளது.
''ஜெர்மி சிவிடிஸ் தாயாரான பிரிடா நகரின் ஒதுக்குபுறத்திலுள்ள டொலர் ஜெனரல்
ஸ்டோரில் பணியாற்றி வருகிறார். அங்கு பணியாற்றுகிற காசாளர்கள் 1500 ஹிங்மான் மக்களில் பலரது
பொழுதுபோக்கு பற்றி கிசுகிசுத்துக்கொண்டிருப்பது வழக்கம். அவர்கள் தந்தை ஒரு சிறிய ஓய்வூதிய தொகையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் முன்னாள் வியட்நாம் போர்வீரர், அவரது மாமனார் போரில்
மடிந்துவிட்டார். ஜேர்மியின் ஆசிரியர் ''படிப்பில் பின்தங்கிய நிலையில் இருப்பவரென்று'' கூறியிருக்கிறார்.
''தண்டவாளத்திற்கு குறுக்கே சற்றுதள்ளி எதிர்த்த வரிசையில் வர்ணங்கள் உரித்த நிலையில், ஆடும் கதவுகளாலான,
சாய்வான வீட்டில்'' அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது.
Pittsburgh Post-Gazette
பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது,
மேரிலாந்து
Cresaptown
இல் தான் இராணுவப்பணிக்கு அதிகமான ஊழியர்களை சேர்த்துள்ளது. 372 வது இராணுவ போலீஸ் பிரிவின் தளம்
மேரிலாந்தில் உள்ளது. ''அங்குள்ள மாநில சிறைச்சாலை இராணுவ படை பிரிவுகளை வழங்கி வருகிறது. அந்த
நகரில் உள்ள சிலர் அவர்களுக்காக பணியாற்றி வருகின்றனர்'' என போலீஸ் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை
விற்கும் கடையை நடாத்திவரும் Curt Tringler
தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேரில் 3 பேர் போலீஸ் அல்லது
சிறைச்சாலை தொடர்புகள் உள்ளவர்கள்.
Sabrina Harman, வயது
26, வெர்ஜினியா மாகாண அலெக்ஸான்டிரியா பகுதியைச் சார்ந்தவர் அவர் ஒரு போலீஸ் கொலை விசாரணை
அதிகாரியின் புதல்வி. CBSNEWS.com
தகவல் தந்துள்ள தகவலின்படி Sabrina
அடிக்கடி குற்றங்கள் நடந்த 'தோற்ற' (Profile)
புகைப்படங்களை குடும்பத்திற்காக கொண்டு வருவார்.
''அவர் குழந்தையாக இருக்கும்போதே குற்றக்காட்சி புகைப்படங்களை
பார்ப்பதிலும், சவ விசாரணை அறிக்கைகளை பார்ப்பதிலும் ஆர்வம் செலுத்தி வந்ததாக'' அவரது தாயார்
ரொபின் ஹார்மன் ஒரு நிருபரிடம் தெரிவித்தார்....
''Sabrina Harman
ஈராக்கிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் Papa John's
Pizza வில் துணை மேலாளராக பணியாற்றிவந்தார். தனது
தந்தையைப் போல் புலன்விசாரணை அதிகாரியாக வரவேண்டுமென்று கனவுகண்டார்'' என்று அவரது தாயார்
தெரிவித்தார்.
வெர்ஜினியா பக்கிங்ஹாமைச் சேர்ந்த 37வயது
Ivan Frederick ஊழியர் சார்ஜென்டாக ஈராக்கில்
பணியாற்றிவருகிறார். அவர் வெர்ஜினியாவில் Dillwyn
மாகாண சிறைகைதிகள் திருத்த அதிகாரியாக பணியாற்றிவருகிறார். அவரது குடும்பத்தினருடன் அவர் நடத்திவருகிற
ஒரு பத்திரிகையில் Frederick
தான் ஈராக்கில் சந்தித்து வருகிற கைதிகளை போன்றவர்களை சமாளிப்பதற்கு தன்னிடம் பயிற்சியோ,
பக்குவமோ, இல்லை என்பது குறித்து கவலை தெரிவித்தார். கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டனர். அவர்
தனது மாமனாரை பின்பற்றி விமானப்படை அதிகாரியாக வரவேண்டுமென்று விரும்பினார். அவரது மனைவியும் ஒரு
சிறைக்காவலர்தான்.
பென்சில்வேனியா, யூனியன்டவுனைச்சேர்ந்த சார்லஸ் கிரானர் பென்சில்வேனியா
Greene County
இலுள்ள உயர்பாதுகாப்பு மாகாண சிறையில் காவலராக பணியாற்றி
வருகிறார். அவருடன் உறவை முறித்துக்கொண்ட மனைவி 1997முதல் தன்னை முறைகேடாக நடத்துவதிலிருந்து
பாதுகாக்கும் மூன்று தற்காலிக உத்தரவுகளை பெற்றிருக்கிறார். கிரானர் தன்னைக் கொன்றுவிடுவதாக
மிரட்டியதாகவும், தனது துப்பாக்கியை மனைவி வைத்துக்கொண்டாலும், மனுதாரரைக் கொல்வதற்கு அது
தேவையில்லை என்று கூறியதாகவும் நீதிமன்றத்தில் முறையீடி செய்தார். நீதிபதி அந்த ஜோடி தங்களது குழந்தை
காபந்து பரிவர்த்தனையை போலீஸ் நிலையத்தில் நடத்திக்கொள்ளுமாறு கட்டளையிட்டார். ''தனது வீட்டில்
தனக்குத்தெரியாமல் வீடியோ காமிரா ஒன்றை பொருத்தியிருப்பதாகவும், டேப்புகளை தனக்கு காட்டியதாகவும்''
அவரது மனைவி குற்றம்சாட்டினார்.
இத்தகைய கலாச்சார- பிற்போக்குத் தன்மை அமெரிக்காவில் பரவலாக உள்ளது.
சிறிய நகரங்களில் இது பரவலாக காணப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலகளையும்
சுரங்கங்களையும், மூடிவிட்டு சென்றுவிட்டதால் இது போன்ற சிறிய நகரங்களில் சமுதாய மற்றும் கல்வி
உதவித்திட்டங்கள் வெட்டப்பட்டுவிட்டன. இதனால் அரசாங்கப்பள்ளிகளில் இசை, கலை படிப்புக்கள்
ஒழித்துதக்கட்டப்பட்டுவிட்டன. இதனால், அப்பகுதி மக்களது அறிவு வளர்ச்சி குன்றிவிட்டது. அரசியல்வாதிகளின்
புறக்கணிப்பாலும், தொழிற்சங்கங்கள் கைவிட்டுவிட்டதாலும் சீனாவில் ஒதுக்குபுற கிராமத்தைப்போன்ற
அமெரிக்காவின் சிறிய நகரங்கள் தார்மீக மற்றும் ஒழுக்க நெறிகளில் தனிமைப்படுத்தப்பட்டு கிடக்கின்றன.
இதுபோன்ற நகங்களில் வலதுசாரி வானொலி வழங்குகின்ற குப்பை கூளங்கள்
(Reality shows,' Cop shows, Daytime talk
shows, etc.) மற்றும் முட்டாள்தனமான
தொலைக்காட்சிகளே தவிர வேறு எதுவுமில்லை. இளைஞர்கள் பலருக்கு எதிர்காலமில்லாமல் வாழ்க்கை
இருண்டுவிட்டது.
நெடுஞ்சாலையை விட்டுவிட்டு
Dubois,
Pennsylvania, Blaine, Washington,
AdamsVille,
Michigan, Kingman, Arizona
ஆகிய பகுதிகளில் நீங்கள் பயணம் செய்வீர்களானால் அமெரிக்காவின் பெரும்பகுதி இப்போது பொருளாதார
மந்தநிலை காலத்தில் வாழ்ந்ததைத் போன்ற உணர்வுதான் உங்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகத்திற்கு
இடமில்லை. மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு அல்லது மூன்று பணிகளை மேற்கொண்டு கடனில் மூழ்கி வாழ்க்கையை
நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். வருகின்ற ஊதியத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் உண்மையிலேயே துன்பத்தில்
உழன்று கொண்டிருக்கின்றனர். வர்ணங்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்ற வீடுகளில் குடியிருப்பு, நெரிசல், அதிகமாக
உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு எந்திரசாதனங்கள் துருப்பிடித்துக் கொண்டிருப்பதால் நகரத்தெருக்கள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.
St. Louis Post-Dispatch
பத்திரிகை அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் சிறிய நகரங்கள் என்று
சொல்லப்படுபவை 40,000திற்கும் குறைந்த மக்கள் வாழ்பவை. அத்தகைய நகரங்கள்தான் ஈராக் போரில்
மிகப்பெருமளவிற்கு சுமையை தாங்கிக் கொண்டிருக்கின்றன என்று விளக்கப்பட்டிருக்கிறது. ஈராக்கில் கொல்லப்பட்ட
800 அல்லது அதற்கு மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின் 46% பேர் இத்தகைய சிறிய நகரங்களிலிருந்து
போர் பணிக்கு சென்றவர்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 27% இனர் தான் இதுபோன்ற சிறிய நகரங்களில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ''பொருளாதார நிர்பந்தங்கள்,'' காரணமாக சரியான வாய்ப்புக்கள்
கிடைக்காததால் இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றனர். இப்படி சேர்ந்த சக்திகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்
அபு கிரைப் குற்றங்ளை செய்யக்கூடியவர்களாக உள்ளனர்.
அவர்களது பிரதான தாக்கம் மதம் சார்ந்தது. பப்டிஸ மற்றும் பல்வேறு கிறிஸ்துவ
அடிப்படைவாத பிரிவுகளை சார்ந்தவர்கள் அந்த மக்கள் இதுபோன்ற அடிப்டைவாத மதக்குழுக்கள் பாலியல்
உணர்வுகளை ஒடுக்கிவந்ததன், விளைவு ஈராக் சிறையில் தலைகீழாக மாறியிருக்கிறது. அடுமட்டுமல்ல பல
தலைமுறைகாள வலதுசாரி ஆவேச பேச்சாளர்களும் அல்லது ஹாலிவுட் திரைப்படங்களும் இனவெறி கொள்கையையும்,
குறுகிய நோக்க வாதத்தையும், வளர்த்ததால் அவர்களில் சிலருக்கு ஈராக் மக்களை மனித இயல்புக்கும்
குறைந்தவர்கள் என்று நடத்துகின்ற இயல்பு மிக எளிதாக வந்துவிடுகிறது.
ஒரு ஈராக் கைதி விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் தரும்போது ஒரு
இராணுவத்தினர் உடைந்தகாலில் தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருப்பார். இஸ்லாத்தை பழிக்குமாறு
கட்டளையிடுவார், என்று கூறினார். ''எனது உடைந்த காலில் அவர்கள் உதைத்ததால் எனது மதத்தையே நான்
பழித்தேன். நான் உயிரோடு இருப்பதற்கு ஏசுவிற்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்கள். என்னை
கைவிலங்கோடு படுக்கைக்கு அனுப்பவார்கள், எதிலாவது நீ நம்பிக்கை வைத்திருக்கிறாயா? என்று ஒரு
இராணுவத்தினர் என்னை கேட்பார் நான் அவரிடம் நான் அல்லாஹ்வை நம்புகிறேன் என்று சொல்வேன் அந்த
இராணுவத்தினர் நான் சித்தரவதையை நம்புகிறேன் என்று கூறுவார்'' இவ்வாறு அந்தக் கைதி விசாரணை
அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.
பகிர்ந்து கொண்ட பொறுப்பு
இந்த மோசமான நிலைமைக்கான பொறுப்பு எந்த இடத்தில் உள்ளது?
ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக நிர்வாகம் அரசியல் கட்சிகள் பொழுதுபோக்கு
தொழிற்துறை மற்றும் பரந்த கலாச்சாரம், அறிவாளிகள் அனைவரிடமும் இந்த பொறுப்பு இருக்கிறது.
முட்டாள்தனமும், கொடுமையின் மீதான விருப்பும் தலைமையில் ஆரம்பமாகிறது.
டெக்ஸாஸ் கவர்னர் ஜோர்ஜ்
டபிள்யூ. புஷ்ஷை
Karla Faye Tucker தண்டனை நிலுவையில் உள்ளது பற்றி
கேட்டதாக ஒரு வலதுசாரியான Tucker Carlson
குறிப்பிட்டார்.
CNN இன்
Larry King
க்கு Tucker
கொடுத்த ஒரு பேட்டியில் நடித்ததைப்போன்று ''தயவுசெய்து
என்னை கொன்றுவிட வேண்டாம்'' என்று குறிப்பிட்டதை புஷ் நடித்துக்காட்டும் வகையில் தனது காதில் முணுமுணுத்தார்
என Tucker
தகவல் தந்திருக்கிறார்.
சிறிய நகரங்களில் வாழ்வபவர்கள் உட்பட அமெரிக்கர்கள் அன்றாட வாழ்வில்
வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொதுபண்பாடு பெரும்பாலும் தரம் குறைந்து வர்த்தக
மயமாக்கப்பட்டுவிட்டது. சுயநலமும், பணவெறியும் தனிமனித ஆதிக்க உணர்வும் மேலோங்கி நிற்கிறது.
Quentin Tarantino
வின் அராஜகவாத படங்களில் அல்லது
Mel Gibson
இன் எவங்கலிஸ-கத்தோலிக்க வகைப்பட்டதானாலும், அனைத்து திரைப்படங்களில் ''ஆபாசம் மீதான மோகம்''
தலைவிரித்தாடுகிறது. பாலியல் என்பது மயக்கமூட்டும், சகலரும் பாவிக்கும் ஒரு பொருளாக காட்டப்படுவதுடன்,
பாலியல் படத்துறையானது பில்லியன் வியாபாரத்துறையாகிவிட்டது. இளைஞர்களிடையே அண்மையல் நியூயோர்க்
டைம்ஸ் வார இதழ் கட்டுரையின்படி பாலியல் உறவுகள் தாறுமாறாக சென்று கொண்டுடிருக்கின்றன.
சூதாட்டவிடுதிகள், லாட்டரிகள், அதனோடு தொடர்ந்து வருகின்ற செயற்கையான கற்பனைகள் ஆகியவை செழித்து
வளர்கின்றன. உடனடி உணவுவிடுதிகளும், உடைகளையும் நடன பிரிவுகளும் நாடு முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன.
அப்படியிருந்தும் இந்த அதிருப்தி, அமைதியின்மை, ஆவேசம் நாடு முழுவதும் பரவலாக
காணப்படாதது எப்படி?
இவற்றிற்கு நடுவே ஊழல் மலிந்தவர்கள், பணக்காரர்கள் அரசியலில் ஆதிக்கம்
செலுத்தி வருகின்றனர். அது மக்களிடமிருந்து வெகுதூரம் விலகி சென்றுவிட்டது. மக்களுக்கு விரோதமாக
இயங்குகிறது. ஊடகங்கள் சமுதாயத்தின் மேல்தட்டுமக்கள் சிலருக்காக குரல் கொடுக்கின்றன. அவர்கள்
சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனித்து நிற்பவர்கள். தாராளவாத அறிவுஜீவிகள் என்று
அழைக்கப்படுபவர்கள் கோழைத்தனமாகவும், பிற்போக்குத்தனமாகவும் தீவிர வலதுசாரிபோக்கில் தம்மை
இசைவாக்கிக்கொண்டு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.
தங்களது சமுதாயத்தினால் தார்மீக அடிப்படையிலோ அல்லது கலாச்சார அடிப்படையிலோ
எதையும் பெறாதவர்கள்தான் அபு கிரைபில் குற்றம் புரிகின்ற தன்மையுடையவர்கள். அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு
இதுபோன்ற அருவருக்கத்தக்க பணிகளை செய்கின்ற சமுதாய பிரிவினர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
எனவே எச்சரிக்கை ஒன்று விடப்படவேண்டும், இராணுவத்துடன் பெருகிவரும் சிவிலியன்
கூலிப்படையினர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் மத்திய கிழக்கு மத்திய ஆசியா மற்றும் பிற நாடுகளிலுள்ள
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல அமெரிக்காவிலுள்ள மக்களது ஜனாநயக உரிமைகளுக்கும் ஆபத்தானவர்கள்,
இதே சக்திகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு பரந்த அடிப்படையிலான அச்சுறுத்துகின்ற இயக்கும்
வளரும்போது இதே சக்திகள் அமெரிக்க மக்களுக்கெதிராகவும் திரட்டப்படக்கூடும்.
பல்வேறு இராணுவ நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற விசாரணைக்குழுக்கள் அமெரிக்க
சமுதாயத்திலும் அமெரிக்க இராணுவத்திலும் நிலவுகின்ற இத்தகைய மோசமான போக்குகள் வளருவதை தடுத்து நிறுத்தமுடியாது.
மாறாக அது போன்ற விசாரணைகள் பிரச்சனைகளின் திட்டமிட்ட ஆழமான வேர்களை மூடிமறைப்பதற்கான மக்கள்
தொடர்பு முயற்சிகள்தான்.
ஈராக் சிறையில் நடைபெற்ற சித்தரவதை மற்றும் பைத்தியக்காரச் செயலுக்கு மாற்றுமருந்து
வன்முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் அடித்தளமாக இருக்கின்ற முதலாளித்துவத்தின் அழுகிவிட்ட அடித்தளத்தை
இல்லாதொழிக்கும் தொழிலாள வர்க்கத்தினது சக்திவாய்ந்த சுயாதீனமான அரசியல் இயக்கத்தை
உருவாக்குவதுதான். அமெரிக்காவின் சமூக சமத்துவத்தினதும் ஜனநாயக சிந்தனைகளினதும் மிகஉயர்ந்த
பாரம்பரியத்திற்கும் அழைப்புவிடும் ஒரு பரந்த சோசலிச இயக்கம் மில்லியன்கணக்கானோரை உயர்ந்த சிந்தனைகளோடு
கிளர்ந்தெழச்செய்யும்.
அபு கிரைப் பயங்கரங்கள் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முன்னால் இரண்டு மாற்றீடுகளை
தெளிவாக முன்வைக்கின்றது. அது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதுதான்.
Top of page |