World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Georgian authorities wrest back control of Adjaria

ஜோர்ஜியா அதிகாரிகள் அட்ஜரியாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்

By Simon Whelan
11 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

அட்ஜரியாவின் போர்பிரபுவான Aslan Abashidze தப்பி ஓடி வசதியாக ரஷ்யாவில் மே-6ல் தஞ்சம் புகுந்திருக்கிறார்; இதன் மூலம் அவரது உள்ளூர் படைகளுக்கும் ஜோர்ஜிய ராணுவத்திற்குமிடையே மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

நீண்ட கால அடிப்படையில், உள்ளூர் போர்பிரபு பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஜோர்ஜியாவில் இராணுவ மோதலுக்கான வாய்ப்புக்களை முன்பிருந்ததைவிட குறைத்துவிடவில்லை. ஜோர்ஜியாவின் ஜனாதிபதி Mikhail Saakashvili தனது Tbilisi ஆதிக்கத்தின் கீழ் எளிதாக Adjaria மீண்டும் வந்துவிட்டதால் துணிச்சல் அடைந்து Abkhazia மற்றும் தெற்கு Ossetia இரண்டையும் அச்சுறுத்துகின்றார்.

ஆறு மாதங்கள் நீடித்த இடைவிடாத கடும் இராணுவ நடவடிக்கையின் பின் Saakashvilli மீண்டும் பதவிக்கு கொண்டுவரப்பட்டதுடன் இது துவங்கியது, இறுதியில் Abashidze எந்த விதமான எதிர்ப்பு குரலையும் எழுப்பாமல் வெளியேறிவிட்டார். அண்மையில் ஒரு பாலத்தைத் தவிர அனைத்து ஜோர்ஜியாவுடன் தொடர்புகொள்ளும் பாலங்களையும் வெடிவைத்து தகர்த்துவிட்டு இந்த உள்ளூர் சர்வாதிகாரி மாஸ்கோவில் தஞ்சம் புக முடிவுசெய்தார். மே-5-ல் நள்ளிரவில் நடந்த கூட்டத்தில் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு சபையில் செயலாளர் Igor Ivanov, Abashidze- க்கு ஆயுதங்கள் அல்லது துருப்புக்களை தருவதற்கு மறுத்துவிட்டதன் மூலம் Abashidze-இன் தலைவிதி தீர்மானிக்கப்ட்டது. அட்ஜரிய ஏதேச்சாதிகாரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருக்கமான நண்பர்கள் Ivanov-ன் ஆதரவில் ரஷ்யாவிற்குச் சென்று விட்டனர்.

Tbilisi, Abashidze-வின் பழைய பாரம்பரியத்தை ஆராய்வதற்கோ அல்லது அவருக்கு அழுத்தம் கொடுக்கவோ போவதில்லை என்று உறுதியளித்தாலும் தனது நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட ஏதேச்சாதிகாரியை இழிவுபடுத்துகிற வகையில் அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த சர்வாதிகாரியின் உயர்ந்த ரக நாய்கள், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பல்வேறு வகையான சொகுசு ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றை ஏலத்தில் விற்கப்போவதாக ஜோர்ஜியா அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். Abashidze-வின் விருப்பத்திற்குரிய நாய் Basmach என்று அழைக்கப்படுவதாகவும், 1920-களில் மத்திய ஆசியாவில் போல்ஷேவிக்குகளை எதிர்த்து போரிட்ட கிளர்ச்சிகாரர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டனர் எனவும் MZE- தொலைக்காட்சி அறிவித்திருந்தது.

Abashidze பதவியிலிருந்து இறக்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அட்ஜரியன் பொதுமக்கள் அந்த ஏதேச்சாதிகாரிக்கு தங்களது வெறுப்பை அலட்சியத்தை வெளிப்படுத்துகிற வகையில் தெருக்களில் திரண்டு கண்டனப்பேரணிகளை நடத்தினர். தனது எதிரி ஓடிய பின்னர், Saakashvili உடனடியாக பட்டுமியில் (Batumi) இரண்டாவது ''ரோஜா புரட்சி'' உருவாக்கி அதை அறிவித்தார். இந்த கருங்கடல் பிராந்தியத்தை வென்றெடுத்த ஜோர்ஜியா ஜனாதிபதி கடல் நீரை தனது முகத்தில் தெளித்துக்கொண்டு அதைக்கொண்டாடினார். அவற்றை கொண்டாட சிறந்த காரணம்: ஜோர்ஜியா முழுவதிலும் உள்ள மிகப்பெரிய வர்த்தக தொழிற்துறை பிராந்திய துறைமுகம் Batumi ஆகும். அந்த கருப்புக்கடல் துறைமுகம் ஜோர்ஜியா வழியாக காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து வருகின்ற எண்ணெயில் 60-சதவீதத்தை சர்வதேச சந்தைகளுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த வருவாய் நலிவுற்ற ஜோர்ஜிய பொருளாதாரம் மூச்சுவிடுவதற்கு சிறிது அவகாசம் கொடுக்கும்.

Batumi-ல் மக்கள் நிறைந்த கூட்டத்தில் உரையாற்றிய Saakashvili ஜார்ஜியாவை தான் திரும்ப ஐக்கியப்படுத்துவதாக உறுதியளித்தார். இப்போது Abashidze தலைமறைவாகிவிட்டதால், இரண்டு பிராந்தியங்களில் தற்போது Saakashvili தனது கவனத்தை சுதந்திரமாக செலுத்த முடியும் Adjaria வைப்போல் இல்லாமல்--- Abkhazia மற்றும் தெற்கு Ossetia இரண்டிலும் ஏற்கெனவே Tbilisi-லிருந்து தன்னாட்சி உரிமை வடிவத்தை பெற்றுவிட்டதாக பிரகடனப்படுத்திவிட்டன. Baku- Tbilisi Ceyhan (B-T-C) எண்ணெய் குழாய் செல்லுகின்ற பகுதிகளைச்சேர்ந்த நாடுகள் இரும்புக்கரம் கொண்ட தலைவரால் வழி நடத்திச் செல்லப்பட வேண்டும் என்று வாஷிங்டன் கட்டளையிட்டிருக்கிறது. எனவே பிரிந்து சென்றுவிட்ட அந்த குடியரசுக்கட்சிகளுக்கு எதிராக அமெரிக்காவில் பயிற்சிபெற்ற வழக்கறிஞரான அவர் கடுமையான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

இந்தப்பணிக்கு Saakashvili சிறந்த தகுதிபெற்றவர்: அவர் வாள் வீச்சில் நாட்டம் செலுத்துபவர். அப்படியிருந்தும் போரில் ஈடுபட்டு பிரிந்து சென்றுவிட்ட பிராந்தியங்களில் குறிப்பாக Abkhazia, Adjaria-விலும் பார்க்க மிகக்கடுமையான சவாலாக தோன்றியுள்ளது. தங்களது பிராந்திய தன்னாட்சி உரிமையை ரத்துசெய்வதற்கு ஜோர்ஜியா மேற்கொண்ட முயற்சிகளை இரண்டு பிராந்தியங்களும் முறியடித்துள்ளன. ஜோர்ஜியாவுடன் தனது பிராந்தியத்தை இணைத்துக்கொள்வதற்கு ஜோர்ஜியாவின் முன்னாள் ஜனாதிபதி Eduard Shevardnadze முயற்சி மேற்கொண்டு தோல்வியைச் சந்தித்த நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நடத்தப்பட்ட இனப்டுகொலையை Tbilisi ஒப்புக்கொள்ளும் வரை Saakashvili- யுடன் பேசக்கூடப்போவதில்லை என்று தெற்கு Ossetia- தலைவர் அறிவித்துள்ளார்.

Abashidze-த் தொடர்ந்து Abkhazian பிரதமர் Raul Khajimba மாஸ்கோவில் தன் குதிக்காலை பதியவைத்துள்ளார். நிலைமையின் கடுமையை விளக்கிய Abkhazian வெளியுறவு அமைச்சர் Sergei Shamba "அட்ஜாரியா காட்சிகளைப்போன்று'' சாத்தியக்கூறு இல்லை என்று அறிவித்தார். ரஷ்ய செய்தி நிறுவனமான RIA Nostovi-க்கு பேட்டியளித்த அவர் Abkhazia ஜோர்ஜியா அல்ல, Abkhazia வைச் சேர்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட மனப்போக்குள்ளவர்கள். இதை ஜோர்ஜிய அரசியல் வாதிகள் கணக்கில் எடுத்தக்கொள்ளவதில்லை'' என்று கூறினார்.

Abkhazia-வை மீண்டும் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முற்சியும் ஜோர்ஜியாவை தோல்விக்கே இட்டுச்செல்லும் என்று Shamba எச்சரித்தார்.

Abkhazian அதிகாரிகள் தெற்கு Osstia-விலுள்ள அவர்களது சகாக்களுடன் சேர்ந்து பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர், தங்களது இறையாண்மையை தற்காத்து நிற்பதற்கு தங்களது படைகள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். பிரிந்துவிட்ட பிராந்தியங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் விருப்ப முயற்சி வெற்றிபெறுவது மிகக்குறைந்த அளவிற்கே முடியும். பட்டூமியிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கூட சேர்துக்கொண்டாலும், சர்வதேச சந்தைகளில் ஜோர்ஜியாவின் பொருளாதாரம் பயங்கரமான நெருக்கடியில் உள்ளது, அடுத்த ஆண்டு B-T-C எண்ணெய் குழாய் செயல்பட துவங்கியதும் கிடைக்கின்ற கட்டணம் பல்வேறு போட்டி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்காது. எனவே ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை தவிர அந்த இரண்டு பிராந்தியங்களையும் மீண்டும் ஜோர்ஜியாவிற்குள் கொண்டுவருவதற்கு வேறு எந்த வகையிலும் முயற்சி செய்ய முடியாது.

ஜோர்ஜியாவிற்கு இது ஒரு ''வரலாற்று சிறப்புமிக்க நாள்'' என கூறி வாஷிங்டன் இதனை "Tibilisi-ன் அதிகாரத்தின் சமாதான மீட்சி'' என அழைத்து அதற்கு நல்வரவளித்துள்ளது. அமெரிக்க பத்திரிகைகள் Saakashvili-யை ஜனநாயக-நேய சுதந்திர-சந்தையாளர் என்று வர்ணித்து அவரை ஏற்றுக்கொண்டுமுள்ளன. இதற்கு முரணாக, ரஷ்ய ஊடகங்கள் தெற்கு காக்கசில் ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துவருவது குறித்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன. Shevardnadze-MTM Saakashvili வெற்றிகண்டது மற்றும் ஜோர்ஜியாவில் Abashidze, அஜர்பைஜானில் மேற்கு நாட்டு ஆதரவு அலியேவ் பரம்பரை ஆட்சிக்கு வந்திருப்பது, செச்சன்யாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ரத்தக்களரியில் மாஸ்கோ ஆதரவு பிரதமர் Kadyrov-வை இழந்தது ஆகியவை காரணமாக பல விமர்சகர்கள் கிரம்ளின் மாளிகையில் வெளியுறவுக் கொள்கையில் குழப்பம் ஏற்ட்டிருப்பதாக பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளனர்.

சில வட்டாரங்களில் Igor Ivanov பெயரை வெறுப்புணர்ச்சியுடன் பார்க்கின்றனர். இந்த ஆறுமாதங்களில் இரண்டாவது தடவையாக, பெயருக்கு மாஸ்கோ ஆதரவு தலைவர்களாக விளங்கிவந்த முதல் Shevardnadze அதற்குப்பின்னர் Abashidze பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதில் இவர் சம்மந்தபட்டிருக்கிறார். ரஷ்யாவின் கூட்டாட்சி சபையின் பாதுகாப்புக்குழு தலைவரான Viktor Ozerov, ஜோர்ஜியாவில் அமெரிக்க ஆதரவு நிலை நோக்கு கொண்ட Saakashvili-க்கு எதிரான தலைவர் தோல்வியடைந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல Abashidze-யின் அவசர பதவி விலகல் Tbilisi மாஸ்கோ மீது அழுத்தத்தை கொண்டு வந்து பாட்டூமியில் உள்ள ராணுவதளத்தை அப்புறப்படுத்துவதற்கு முயலுவதற்கு வழிவகுத்து கொடுத்துவிட்டதாக CIS நிறுவனத்தின் (institute) இயக்குநர் Konstantin Zatulin நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பாரசீக வளைகுடா சம்பவங்களின் கசப்பான அனுபவத்தை ஒப்புநோக்கி The Moskovskiy Komsomolets எழுதியிருப்பதாவது'' வாஷிங்டன் ஈராகில் மேலும், மேலும் ஆழமாக புதை சேற்றில் சிக்கிக்கொண்டு வருகின்ற நேரத்தில் காக்கசஸ் பகுதியில் வாஷிங்டன் தனது புதிய புவியியல் அரசியல் வெற்றியை நிலைநாட்டியுள்ளது.''

மற்றொரு தினசரி பத்திரிகையான, Moskovskaya Pravda சரிசமமான கசப்போடு கூறியிருப்பதாவது; ''இந்த சம்பவங்கள் Saakashvili, Abashidze மீது வெற்றி பெற்றதை காட்டவில்லை, ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா வெற்றிபெற்றுவிட்டது. காக்கசஸ் பிராந்தியத்தில் தனது பொம்மை ஆட்சியின் மூலம் அமெரிக்கா தொடர்ந்து தனது செல்வாக்கை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறது.''

Saakashvili பிரிந்து சென்ற இரண்டு பிராந்தியங்கள் மீதும் வாஷிங்டன் கட்டளைப்படி ராணுவ அழுத்தங்களை கொடுப்பதற்கான கட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது. Abashidze மாஸ்கோவிற்கு தப்பியோடிய அதே நாளில், ஜோர்ஜிய பிரதமர் Zurab Zhvania தனது நாடு அமெரிக்காவின் ''ஆயிரம் ஆண்டுகால சவால் கணக்கில்'' (Millennium Challenge Account) சேர்க்கப்ப்டிருப்பதாக அறிவித்தார். இந்த கணக்கில் இருந்து வாஷிங்டனுக்கு கீழ்படிந்து நடக்கின்ற பொம்மை ஆட்சிகளுக்குத்தான் பணம் வழங்கப்படும். ஜோர்ஜியாவை மறு ஐக்கியப்படுத்தும் பணியை துவக்கியிருப்பதன் மூலம் Saakashvili புஷ் நிர்வாகத்தின் தயவிற்கு பாத்திரமானவராக தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

Top of page