:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
An exchange on Nader, Kerry and the US war in Iraq
நாடார், கெர்ரி கருத்துப்பரிமாற்றமும் ஈராக்கில் அமெரிக்க போரும்
By Patrick Martin
1 June 2004
Back to screen
version
WSWS-ல் ''நாடெர் கெரி-ஐ சந்திக்கிறார்:''
என்ற தலைப்பில் மே 22-ல் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது, அதற்கு பதிலளிக்கின்ற வகையில் வாசகர்
Elliott எழுதுகிறார்:
உண்மையை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளை வெளியிடும்போது
WSWS மகத்தான பணியை
செய்கிறது. WSWS -
தனது எழுத்தாளர்களை ஒருதலைப்பட்சமான நியாயமற்ற ஊகங்களை பிரசுரிக்க அனுமதிக்கும் போது மார்டின் கட்டுரையில்
எளிதாக விளக்கப்படுகிறவாறு நீங்கள் தொழில் முறைக்கு மாறாக
(Unprofessional), வசைமாரிகளை பொழிகிறீர்கள் (அதுதான்
நீடிக்குமா?).
நாடெர் ஆய்வாளர் என்கின்ற முறையில், அவரது எழுத்துக்கள் மற்றும் உரை
ஒவ்வொன்றையும் ஏறத்தாழ படித்தும், கவனித்தும் வருகிறேன். நாடெர் கொள்கை தொடர்பாக நீங்கள் தவறான தகவல்
அடிப்படையைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் கூறியாகவேண்டும்.
முதலாவதாக, ரால்ப் நாடெர் ஓர் சுயேட்சை வேட்பாளர், மார்டின் அந்த சுயேட்சை
என்ற சொல்லை மேற்கோள் குறிக்குள் காட்டியிருப்பது அவரது தப்பெண்ண கருத்தைக் காட்டுகிறது. மார்ட்டின் மறுக்கமுயல்கின்ற
இருகட்சி ஆதிக்கத்திற்கு நாடெர் கொள்கை அடிப்படையில் மாற்றீடாகும், சோம்ஸ்கி, மூர், குஷினிக் மற்றும் பிறர்
ஆதரிகின்றவர். நாடெர் "அக்கறையுள்ள" (Serious)
மாற்றீடல்ல என்று சொல்வதன் மூலம் மார்ட்டின் கேலி செய்ய முயலுகிறார்---
WSWS அவரது (40+
வருட) நீண்ட காலம் வாதிடும் சான்றை
(Record) பார்க்க
வேண்டும். அவரது தகுதி சந்தேகங்களுக்கு இடமில்லாதது.
நாடெரும் கெர்ரியும் ஈராக் போர் பற்றி அதிகம் பேசவில்லை அல்லது அப்பாவி ஈராக்கியர்
சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை பேசவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு மார்ட்டின் தனது முக்கிய
வாதத்தை எழுப்ப முயலுகிறார்--- எனவே நாடெரியிடம் எந்தவிதமான கவலையுமில்லை, அல்லது சேதத்தை சரிகட்டும்
கொள்கையில்லை என்று கூறுகிறார். நாடெரின்
Votenader.org- யை அல்லது/ அவரது பேச்சைக் கேட்டால்
நீங்கள் நன்றாக அறிந்து கொள்ளமுடியும். ஓரளவிற்கு விவாதிக்கப்பட்டது, ஓரளவிற்குத்தான் செயல்வடிவம் பெறும் என்று
நீங்கள் தர்க்க ரீதியில் பொருந்திவராத (Illogic)
வாதத்திற்கு தாவுகிறீர்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நாடெரும், கெர்ரியும் மத்திய அமெரிக்கா (தற்பொழுது
ஏதோ நடந்து கொண்டிருக்கும்) ஆட்சி கவிழ்ப்பு பற்றி பேசவில்லை, ஆனால் நாடெரின் நீண்ட சான்றைப் பார்த்தால்
அவர் அத்தகைய ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு எதிரானவர் என்பது தெளிவாகத்தெரியும். அதேபோன்று ஆபிரிக்க
AIDS நெருக்கடியிலும் அவரது கருத்துக்கள் தெளிவானவை.
இறுதியாக, மார்ட்டினின் வசைமாரியில், ''நாடெர் பேச்சில் ஈராக்கின் 'பிரதான
நீரோட்ட ஈராக்கியர்களை' 'கிளர்ச்சியாளர்களிடமிருந்து' வேறுபடுத்திக்காட்ட முயல்வது, காலனித்துவப் போருக்கான
அதிகாரபூர்வமான சாக்குப்போக்குகளை, அமெரிக்கா ஈராக் மக்களை ''விடுவிப்பதற்காகத்தான்'' தலையிட்டது
என்பதையும் சதாம் ஹூசைனின் ஆட்சியில் மிச்சமீதமிருக்கும் ஆதரவாளர்களும், குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும்தான்
ஆயுதம் ஏந்தி எதிர்க்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதாக ஆகும் என்று மார்ட்டின் கூறுகிறார். மார்ட்டின் நாடெரின்
கருத்துக்கள்/அல்லது
கொள்கைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய தவறிவிட்டார், நாடெர், மார்ட்டின் மிகவும் எள்ளிநகையாடத்தக்க வகையில் சித்தரித்திருப்பதற்கு
மாறான கருத்துள்ளவர், மார்டின், நாடெரை மனிதநேயமற்ற, அனுதாப உணர்வில்லாதவர் என்று கூற முயற்சிக்கிறார்.
இந்தத் தேர்தலில் WSWS
சிறிய பங்களிப்பு செய்யும் அமைப்பல்ல. எனவே நீங்கள் நேர்மையாகவும், என்னை போன்றவர்கள் மதிக்கின்ற அளவிற்கு
நடந்து கொள்ளவேண்டும். (இன்னும் நீங்கள் பெற்றிராத) அரசியல் சட்டபூர்வ அங்கீகாரத்தை இதுபோன்ற வெளியிடமுடியாத
அவதூறுகளை பிரசுரிப்பதன் மூலம் பெறமுடியாது.
பட்ரிக் மார்ட்டின் அளித்துள்ள பதில்
ஈராக் தொடர்பாக ரால்ப் நாடெர் எடுத்துள்ள நிலையை நாங்கள் விமர்சித்திருப்பதை
''அது பிரசுரிக்க முடியாத அவதூறு'' என்று நீங்கள் ஒதுக்கித் தள்ளுகிறீர்கள். என்றாலும் உங்களது இந்த புகாரை
நிரூபிப்பதற்கு ஆதாரமாக நாடெரின் சொந்தக் கொள்கை அறிக்கைகளிலிருந்து ஆதாரம் எதுவும் தரவில்லை அல்லது
WSWS கட்டுரையில்
பிரசுரிக்கப்பட்ட அடிப்படை விஷயத்தை மறுப்பதற்கு நீங்கள் முயலவில்லை.
முதலில் சில பூர்வாங்க கருத்துக்களை கூறுகிறேன். அடைப்புக்குறிக்குள் நாடெர் உண்மையிலேயே
''சுயேட்சை வேட்பாளர்'' அல்ல என்று காட்ட நாங்கள் முயன்றிருப்பதாக கூறுகிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை
ஒரு வேட்பாளரின் வார்த்தைகளை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்வதில்லை. அவர் பசுமைக் கட்சியின் அல்லது சீர்திருத்த
கட்சியின் வேட்பாளராக இல்லாத மாநிலங்களில் அவரது பெயர் வாக்குச்சீட்டில் சுயேட்சை அல்லது கட்சி சார்பற்றவர்
என்று குறிப்பிடப்பட்டிருக்காலம்--- ஆனால் அமெரிக்க சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்திவரும் ஆளும் செல்வந்த
தட்டிலிருந்து பிரிந்து அரசியல் அடிப்படையில் உண்மையான சுதந்திரமான வேட்பாளரைத்தான் நாங்கள் கருத்தில் எடுத்துக்கொள்வோம்.
மார்க்சிசக் கண்ணோட்டத்திலிருந்து,
WSWS அரசியல்
தலைவரை மதிப்பீடு செய்வது வெறுமனே இரு-கட்சி முறை ஸ்தாபனங்கள் தொடர்பாக அவள்/அவருக்குள்ள
உறவுகள் மட்த்தில் அல்லாமல் அந்த அரசியல் முறை தற்காத்து நிற்கின்ற முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பையும்
கவனத்தில் கொண்டுதான் மதிப்பீடு செய்வோம். நாடெர் சோசலிசத்திற்கு உறுதியான எதிரியாவார் மற்றும் சில
சீர்திருத்தங்களை அவர் வலியுறுத்தினாலும் அவர் இலாப அமைப்பு முறையை ஆதரிப்பவர். எனவே தற்போது
நடைமுறையிலுள்ள முதலாளித்துவ செயல் முறையிலிருந்து சுதந்திரமான வேட்பாளர் என்று எந்தவித அடிப்படை
அர்த்தத்திலிருந்தும் கருத முடியாது.
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளிலிருந்து வேறுபட்ட சுயேட்சை வேட்பாளர் என்று அவரை
கருதுவது நகைப்பிற்குரியது. அவர் பகிரங்கமாக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கிறார், அவர் ஜனநாயகக் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டவர், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கெர்ரிக்கு அவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பிரச்சாரத்தில் தேர்தலில்களில் இருசபைகளிலும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுவதற்கும்
அவரது பிரச்சாரம் உதவப்போவதாக கூறி வருகிறார்.
நாடெருக்கு ஆதரவாக "சோம்ஸ்கி, மூர், குஷினிக் மற்றும் பிறர் நிற்பதாக" நீங்கள்
வாதிடுகிறீர்கள், அது உங்களுக்கு சாதகமான வாதம் என்றும் கருதுகிறீர்கள். இப்போது நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற
பிரமுகர்கள் எங்கே இருக்கிறார்கள்? நோம் சோம்ஸ்கி
''புஷ்ஷிற்கு மாற்றாக எவரையும் ஏற்போம்'' என்ற முகாமில் இருந்து
கொண்டு கெர்ரியை ஆதரித்து வருகிறார். மூர் முன்னாள் தளபதி வெஸ்லி கிளார்க்கை ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளருக்கு தகுதியானவர் என்று ஆதரித்து நின்றார். இப்போது கிளார்க், கெர்ரியோடு இணைந்து துணை
ஜனாதிபதியாக போட்டியிடவிருக்கிறார். டென்னிஸ் குஷினிக்
ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்; அவர் தனது கட்சியில்
ஜனாதிபதி வேட்பாளர் தகுதியைப் பெறுவதற்கு இன்னமும் முயன்று வருகிறார். கடந்த காலத்தில் சோம்ஸ்கி, மூர் மற்றும்
குஷினிக் ஏதாவது ஒரு கட்டத்தில் நாடெரை ஆதரித்து இருக்கிறார்கள் என்றால் அது எங்களது கருத்தைத்தான் உண்மை
என்று நிரூபிக்கிறது. ரால்ப் நாடெர் ஜனநாயகக் கட்சி முகாமில் ஒரு காலை ஊன்றியிருக்கிறார், ஒப்புக்காக
''சுயேட்சை'' என்று கூறுகிறார்.
போகின்ற போக்கில் WSWS-ஐ
நீங்கள் வசைபாடியிருக்கிறீர்கள், வரலாற்று அடிப்படையில் உங்களது அறியாமையை அது காட்டுகிறது. 40-ஆண்டுகளுக்கு
மேல் நாடெர் அமெரிக்க கம்பெனி ஆதிக்க முறைகளை கண்டித்துவருவதாக கூறுகிறீர்கள், எனவே அவரது எதிர்கட்சி
அந்தஸ்தை ஆட்சேபிப்பது சட்டவிரோதமானது என்று கூறுகிறீர்கள்.
WSWS 1998-ல் தான்
நிறுவப்பட்டது. என்பது உண்மை, ஆனால் அதுதான் எங்கள் மூலத் தோற்றத்தின் புள்ளி அல்ல, ஆயினும், சர்வதேச அளவில்
ட்ரொட்ஸ்கிச இயக்கம் தனது அரசியல் பணிகளை நடத்துவதற்கான ஒரு வடிவம்தான்
WSWS. 1953-ல்
நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு WSWS-ஐ
உருவாக்கியது. இது 1940-ல் ட்ரொட்ஸ்கி நிறுவிய நான்காம் அகிலம் அதற்கு முன்னர் 1917, அக்டோபரில்
நடைபெற்ற ரஷ்ய புரட்சி, ஆகியவற்றின் தொடர்ச்சியாகும். இந்த
WSWS ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக, சர்வதேச தொழிலாள
வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதின் விளைபயனாகும். இதன் வரலாற்றில்
முதலாளித்துவத்தை திருத்தப்போகிறோம் என்று சொல்லி நாடெரைப் போன்று எத்தனையோ பேர் வந்துவிட்டதையும்,
மறைந்துவிட்டதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம்: ஈராக் போர் தொடர்பாக நாடெரின்
நிலைப்பாடு என்ன? கெர்ரியுடன் அவர் மேற்கொண்டு வரும் முயற்சியை பாருங்கள். எங்களது விமர்சனத்த்தின் விஷயத்திற்கு
நீங்கள் பதில் சொல்லவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை மூலோபாய நோக்குநிலையை நாடெர் பகிர்ந்து
கொள்கிறார். நாங்கள் ஈராக்கின் ''கிளர்ச்சிக்காரர்களுக்கும்,'' ''பிரதான நீரோட்ட ஈராக்கியருக்குமிடையே''
வேறுபடுத்திக்காட்ட முயலும் நாடெரின் கருத்துக்களை, புஷ் நிர்வாகம், ஜனநாயகக்கட்சி மற்றும் பெரிய நிறுவனங்கள்
கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் போல ஈராக்கிலுள்ள பல்வேறு போக்குகளைப் பற்றிய அதே ஆய்வை அவர் செய்கிறார்
எனக் காட்டுவதற்கு மேற்கோள் காட்டினோம்.
இந்த பிரதான நீரோட்ட ஈராக்கியர்கள் யார்?
அமெரிக்காவின் படி கூட, ஈராக் மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பிலே
ஷியாக்களின் தீவிரவாதி, மதபோதகர் மோக்தாதா அல்-சதர் பாக்தாத் குடிசைப் பகுதிகளிலும், தெற்கு ஈராக்கிலும்
ஏப்ரல் மாதம் கிளர்ச்சி தோன்றுவதற்கு முன்னரே ஏறத்தாழ 60 சதவீத ஈராக் மக்கள் அவரை ஆதரித்தனர். அந்தக்
கருத்துக்கணிப்போடு ஒப்புநோக்கும்போது அமெரிக்க ஆதரவு அடிமைகளான அஹமது சலாபி மற்றும்
CIA, நிதியில் இயங்கிவரும் அயத் அல்லாவி (Ayad
Allawi) ஆகியோருக்கு மிக அற்பமான ஆதரவுதான் உள்ளது. 80
சதவீதத்திற்கு மேற்பட்ட ஈராக்கிய மக்கள் அமெரிக்கப்படைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்று
விரும்புகின்றனர். பல்லூஜா, நஜாப் மற்றும் இதர நகரங்களில் ஆயுதந்தாங்கி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள
போராளிகள் பொதுமக்களது அமெரிக்க எதிர்ப்பு மற்றும் காலனித்துவ எதிர்ப்பு உணர்வின் உண்மையான வெளிபாடுகள்தான்.
எனவே இவர்களுக்கெதிராக அவர்களை கொண்டுவர முடியாது ஏனெனில் இவர்கள்தான் பிரதான நீரோட்டத்தைப் பிரதிநிதித்துவம்
செய்கின்றனர்.
ஈராக்கின் நடப்பு நிலவரத்திற்கும் அமெரிக்க புரட்சிக்கும் இடையில் இந்த ஒரு வகையில்
தவிர ஒப்பீட்டை செய்யமாட்டேன்: 1776- பிரிட்டிஷ் காலனி அலுவலகத்தில் ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு
மூலோபாயத்தை எழுதுபவர் அமெரிக்காவில்; தங்களது மன்னர் மீது விசுவாசமாக உள்ள ''தேசிய நீரோட்ட''
அமெரிக்கர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே பிரித்து வைக்கவேண்டிய அவசியத்தை எழுதிக் கொண்டிருந்தார்
என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அத்தகைய வேறுபாடுகள் வரலாற்றில் ஒவ்வொரு காலனித்துவப் போரிலும் அதற்கு
எதிர்ப்புரட்சிகர போரிலும் தோன்றுவது இயல்புதான். இந்த நடைமுறை ''பிரித்துவைத்து வெற்றிகொள்வது'' என்று
அறியப்பட்டதாகும்.
இந்தச் சொல்லை நாடெர் தழுவியிருப்பது தற்செயலாக வாய்தவறிவிட்டதல்ல, அல்லது
எப்போதோ நடந்து விட்டதல்ல. அவரது வலைதளமான
www.votenader.org ல் ஒர் அறிக்கை இந்த போர்பற்றி
பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இதே சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ''அமெரிக்கப்படைகள் அங்கிருப்பதால்
கிளர்ச்சி எழுச்சிக்கு தூபம் போடப்படுகிறது. ஆட்கள் கடத்தப்படுகிறார்கள், பயங்கரவாதமும், குழப்பமும் ஏற்படுகிறது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு அமெரிக்காவிற்கு எதிராக பெருமளவில் பிரதான நீரோட்ட ஈராக்கியர்களை திருப்பிவிட்டுக்
கொண்டிருப்பதால் அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொள்வதை அறிவிக்கவேண்டும் மற்றும் ஈராக்கின்
பொருளாதாரம், எண்ணெய் வளம், ஆகியவற்றை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் எடுப்பதை முடிவுக்குக் கொண்டு
வர வேண்டும், இதன்மூலம் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈராக் மக்கள் தருகின்ற ஆதரவை மாற்ற முடியும்.''
அமெரிக்கத் துருப்புக்களை விலக்கிக் கொண்டு ஐ.நா துருப்புக்களை நியமிப்பதற்கு
மூன்றுகட்ட ஆலோசனைகளை நாடெர் வாதிடுகிறார். தேர்தல்களை நடத்தி அமெரிக்கா மனிதநேய உதவி புரிய வேண்டும்
என்கிறார். அமெரிக்கத் துருப்புகளுக்கு பதிலாக ஐ.நா துருப்புக்களுக்கு மாறும்போது ஈராக் காலனியாதிக்க
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மாறிவிடப்போவதில்லை என்பது கூறப்பட்டாக வேண்டும். அமெரிக்க சீருடைகளுக்கு பதிலாக
பிரெஞ்சு, ஜேர்மனி, ரஷ்ய, இந்திய, அல்லது நைஜீரிய சீருடையில் போர்வீரர்கள் இருப்பார்கள், அவர்கள் ஐ.நா
பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். உலக ஏகாதிபத்தியத்தின் முக்கிய அமைப்புக்களில் ஒன்றுதான் ஐ.நா
பாதுகாப்புசபை.
ஈராக் மக்களது தேசிய மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஏற்புடைய ஒரே கொள்கை
ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் மட்டுமல்லாது, எல்லா வெளிநாட்டுத் துருப்புக்களும் வெளியேற
வேண்டுமென்பதுதான். கடந்த 12- ஆண்டுகளாக ஐ.நா பொருளாதாரத் தடைகளாலும் ஒராண்டிற்கு
மேற்பட்ட போர் மற்றும் ஆக்கிரமிப்பினாலும் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதுதான் சரியான கொள்கையாக
இருக்கமுடியும்.
ஈராக்கை ஐ.நா தன் கையில் எடுத்து கொள்ள வேண்டுமென்று நாடெர் சொல்லுகின்ற
நேரத்திலேயே புஷ் நிர்வாகத்தை தீவிரமாகக் கண்டிக்கிறார். படையெடுத்துச் சென்று அந்த நாட்டை முறியடித்ததை
சாடுகிறார். ஒரு சட்டவிரோதமான போர் மூலம் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை மீறியதற்காக ஜோர்ஜ் புஷ் மீது
பதவி நீக்க விசாரணை கொண்டுவர வேண்டுமென்று அண்மையில் நிருபர்கள் பேட்டி ஒன்றில் நாடெர் கூறியுள்ளார்.
1998-ல் கிளிண்டன் தனிப்பட்ட முறையில் பாலியல் உறவு தொடர்பாக பொய் கூறினார்
என்ற "குற்றத்திற்காக" கிளிண்டன் மீது பதவி நீக்க விசாரணை கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில்
அமெரிக்க அரசியலில் தீவிர வலதுசாரிகளோடு நாடெர் சேர்ந்துகொள்ளாமல் இருந்திருப்பாரானால், இது அவர் பற்றிய
நம்பகத்தன்மையை அதிகமாக பெற்றிருக்கக்கூடும், 2000- தேர்தலில் ப்ளோரிடா நெருக்கடியின்போது குடியரசுக் கட்சி
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் நடத்திய தேர்தல் திருட்டில் கண்டனத்தோடு நாடெர் நின்றுவிட்டார்.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை தீவிர வலதுசாரிகள் சீர்குலைப்பதற்கும்
ஓரளவு பகுதி அரசியலமைப்பு கவிழ்ப்பு மூலம் தேர்தெடுக்கப்படாத ஜனாதிபதியாக நியமிப்பதற்கும், நாடெரின்
பங்களிப்பு பெரிதும் உதவியது. 2001- மார்ச்சில் புஷ் நிர்வாகம் பற்றி மிகத்தீவிரமான சமரச மதிப்பீட்டுக் கட்டுரை
ஒன்றை வோல் ஸ்ரீட் ஜேர்னலில் எழுதியிருந்தார். ''பெரிய நிறுவனங்கள் நலன்புரி'' மீது நடவடிக்கை
எடுக்க இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போது அமைதி காத்தார். ஈராக்
போருக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பொதுமக்களது கண்டனப் பேரணிகள் நடைபெற்றபோது
பகிரங்கமாக நாடெர் தன்னை அந்தக் கிளர்ச்சிகளோடு தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை.
(அமெரிக்க பசுமைக் கட்சி 2000- தேர்தலில் நாடெரை ஆதரித்தது. 1999-ல்
கொசோவாவில் அமெரிக்கா மேற்கொண்ட போரை மறைமுகமாக ஆதரித்தது. 2000 தேர்தலில் அக்கட்சி வெளியிட்ட
தேர்தல் அறிக்கையில் ''அமெரிக்கா பயனுள்ள இராணுவ வலிமையை நிலைநாட்ட வேண்டும், மிக கவனமாக வெளிநாட்டுக்
கொள்கைகளை கொண்டு செலுத்தவேண்டும், நமது மக்களுக்கு நமது ஜனநாயக அமைப்புக்களுக்கு மற்றும் அமெரிக்க
நலன்களுக்கு ஏற்படுகின்ற உண்மையான அச்சுறுத்தல்களை சமாளிக்கும் மூலோபாயங்களை தயாராக வைத்திருக்க
வேண்டும்'' என்று வலியுறுத்திக் கூறியிருந்தது)
இன்றைய தினம் புஷ்ஷின் போர் கொள்கைகளுக்கு மிகக்கடுமையான எதிர்ப்பை தெரிவித்து
வருகின்ற நாடெர், அதே வேளையில் கெர்ரி கூறிவருகின்ற போர்க்கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,
புஷ் மீது பதவி நீக்க விசாரணை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாடெர் அரசியல் அல்லது வேறுவகையில்
எந்த தண்டனைக்கும் ஆலோசனை கூறவில்லை, ஏனென்றால் கெர்ரியை போன்று இரண்டு அவைகளிலும் இருக்கின்ற உறுப்பினர்கள்
ஈராக் மீது படையெடுப்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாத அதிகாரத்தை புஷ்ஷிற்கு வழங்கினர். மாறாக கெர்ரி
நிர்வாகம் வருமானால் ஈராக்கில் அமெரிக்க கொள்கையில் சிறந்த மாற்றம் உருவாகும் என்று நாடெர் வெளிப்படையாக
நம்புகிறார்.
மே 20-ல் கெர்ரியுடன் ஒரு மணிநேரம் சந்தித்துப் பேசிய நாடெர் ஈராக் போர்
தொடர்பாக அமுக்கியே வாசித்தார், அதற்குப் பின்னர் பல பொதுக்கூட்டங்களில் அது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
என்றாலும் நாடார் பிரச்சாரத்தின் நடுநாயகமான அம்சமாக போர் எதிர்ப்புக் கோரிக்கை அமைய வேண்டுமென்று
நீங்கள் கருதக்கூடும். நாடெரே அவ்வாறு கருதவில்லை, மே 23-ல்
ABC-ன் ''இந்த
வாரம்'' நிகழ்ச்சியில் நாடெரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் நாடெர் ஆதரவு
வாக்காளர்களது ஆதரவை பெறவேண்டும் என்று கெர்ரி விரும்புவாரானால், வடக்கு கரோலினா செனட்டர் ஜோன்
எட்வர்ட் (John Edwards)
அல்லது கீழ்சபை உறுப்பினர் மிசெளரி Richard Gephardt
தனது சக வேட்பாளராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
நாடெர் தனது சொந்த ஆதரவாளர்களை மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு
அவர் வேண்டுகோள் விடுப்பார்;
எட்வர்ட்சும்,
Gephardt - ம்
ஆரம்ப தேர்தல்களில் கெர்ரியை கண்டித்தது பொருளாதார தேசியம்
என்ற அடிப்படையிலேயே தவிர, ஈராக் போர் அடிப்படையில் அல்ல, வடக்கு கரோலினாவிலும், இதர தெற்கு மாகாணங்களிலும்
ஜவுளி ஆலைகள் மூடப்பட்டிருப்பதை திரும்பத்திரும்ப எட்வர்ட்சும் எடுத்துக் கூறினார். சுதந்திர வர்த்தகக் கொள்கைகளால்
ஏற்பட்ட துயரம் அது என்று வர்ணித்தார். Gephardt
தனது தேர்தல் பிரச்சார இயக்கத்தில் வடக்கு அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (Free
Trade Agreement) எதிர்ப்புத் தெரிவித்தார்.
போரைப் பொறுத்தவரை எட்வர்ட்ஸ் நிலைப்பாடு, கெர்ரியின் நிலைப்பாட்டை
ஒத்ததாகும். 2002 அக்டோபரில் போருக்கு ஆதரவான தீர்மானத்திற்கு வாக்களித்தார். அதற்குப் பின்னர் போர்
முன்னேற்பாடுகள் நடக்கும்போது புஷ் நிர்வாகத்தின் ராஜதந்திரத்தைக் கண்டித்தார். வெள்ளை மாளிகை 2003-
செப்டம்பரில் கோரிய 87-பில்லியன் போர்ச் செலவு மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.
Gephardt-ன்
நிலைப்பாடு இன்னும் பிற்போக்குத்தனமானது. போர் ஆதரவு தீர்மானத்தை சூழ்ச்சியாக கையாளுவதிலும் ஜனநாயகக்
கட்சி அதற்கு ஆதரவு தருவதை உறுதிப்படுத்துவதிலும் முக்கிய பங்கை ஆற்றினார், ஈராக்கிற்கு எதிரான அவரது ஆதரவை
அறிவிப்பதற்கு ரோசாத் தோட்டத்தில் புஷ்- உடன் அக்கம் பக்கமாகத் தோன்றினார். வாக்களித்தார். ஈராக்கில்
போர் தீர்மானத்திற்கும் இராணுவ நடவடிக்கைக்கும் ஆதரித்து வாக்களித்தார். இன்றுவரை அவர் போரை
ஆதரித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
நாடெர் தனக்கு துணையாகப் போட்டியிடுபவர் முன்னாள் வெர்மண்ட் கவர்னர் ஹோவார்ட்
டீன் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் குசினிக் போல, போர் எதிர்ப்பாளராக இருக்கவேண்டும் என்று
கூறவில்லை. நாடெரின் சொந்த கருத்துப்படி, தனக்கும் கெர்ரிக்கும் உள்ள வேறுபாடு வர்த்தகம் தொடர்பானது,
நாடெரின் கொள்கை இந்த வகையில் AFL-CIO,
அதிகாரத்துவத்தோடு சம்பந்தப்பட்டு, அமெரிக்க தேசியவாதத்தை தழுவி நிற்பது, அது அடிப்படையிலேயே
பிற்போக்குத்தனமானது ஆகும். கருத்தியல் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், உங்களைப் போன்று நேர்மையாகப்
போரை எதிர்த்து நிற்பவர்களது கண்ணோட்டத்தோடு திருப்தியற்ற வகையில் நெருங்கிவருகின்ற, குறுகிய பழிப்பு வாதம்
மற்றும் புஷ்ஷிற்கே சொந்தமான வாய்ச்சவடாலான "அமெரிக்கா எல்லாவற்றிற்கும் மேலானது" (America
über alles) போன்றவற்றுக்கு அது நெருக்கமாக இருக்கிறது. |