World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

What the September 11 commission hearings revealed

றிணீக்ஷீt tஷ்ஷீ: மிரீஸீஷீக்ஷீவீஸீரீ tலீமீ ஷ்ணீக்ஷீஸீவீஸீரீstலீமீ திஙிமி ணீஸீபீ யிustவீநீமீ ஞிமீஜீணீக்ஷீtனீமீஸீt

செப்டம்பர் 11 குழு விசாரணைகள் எவற்றை வெளிப்படுத்தின?

இரண்டாம் பகுதி: எச்சரிக்கைகள் அலட்சியப்படுதல் -- FBI-யும், நீதித்துறையும்

By Patrick Martin
26 April 2004

Back to screen version

அண்மையில் வாஷிங்டன் டி.சி.யில் செப்டம்பர் 11, 2001 உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது நடைபெற்ற தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை ஆய்வு செய்யும் தொடர் கட்டுரைகளில் இது இரண்டாம் பகுதியாகும். முதல் பகுதி ஏப்ரல் 22 அன்று (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது.

அண்மையில் 9/11 விசாரணை குழுவின் பொது விசாரணைகள், விளக்கம் காணமுடியாத, அலட்சியப் போக்கு மிகுந்த, செயலற்ற மற்றும் சிறிதும் கவனியாத் தன்மை, அமெரிக்காவில் நடக்கவிருந்த பேரழிவைத் தந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, புஷ் நிர்வாகம் கொண்டிருந்த விளைவின் எண்ணற்ற விளக்கும் உதாரணங்களைக் கொடுத்துள்ளன.

"கோடை காலத்தில் கொடுக்கப்பட்டிருந்து எந்த எச்சரிக்கைகள் பொதுவாகக் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதை விடக் கடுமையானதாகவும், குறிப்பிட்டுக் கூறிய வகையிலும் இருந்தன. அச்சுறுத்லைப்பற்றிய விவரங்கள் மீண்டும், மீண்டும் வெள்ளை மாளிகையின் மிக உயர்ந்த மட்டங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. நாற்பதுக்கும் மேற்பட்ட தகவல்கொடுப்புக்களில், மத்திய உளவுத்துறை இயக்குனரான ஜோர்ஜ் ஜெ. டெனட்(George J. Tenet), அல்கொய்தா தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து மிஸ்டர் புஷ்ஷிடம் எச்சரித்திருந்தார்." என்று சான்றுகளின் சுருக்கத்தைப் பற்றி New York Times குறிப்பிட்டிருக்கிறது.

இந்த எச்சரிக்கைகள் 2001 வசந்த காலத்திலும், கோடையிலும் முற்றிலுமாகத் தெரிவிக்கப் பட்டவை ஆகும்; செப்டம்பர் 6, 2001 வரைகூட, பாதுகாப்பு செயலர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட், தான் புஷ்ஷிற்கு பென்டகனுக்கு ஏவுகணைப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை, பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளுக்கு மாற்றப்படுவது தடுப்பதிகாரத்தின் மூலம் நிறுத்தப்பட வேண்டும் எனக் கடிதம் எழுதப்போவதாக செனட்டர் கார்ல் லேவின் அறிவித்திருந்தார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 10, 2001 அன்று, தலைமை வழக்குரைஞர், FBI இலிருந்து வந்திருந்த அதேபோன்ற முறையீட்டை நிராகரித்தார். FBI உடைய இடைக்கால இயக்குனரான தாமஸ் பிக்கர்ட், 2003 ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் நீதித்துறை 2002 தொகையைவிடக் கூடுதலாக பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 58 மில்லியன் டாலர் கூடுதலான தொகைக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆஷ்கிரோப்டைக் கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 12-ம் தேதி, உலக வர்த்தக மையம், பென்டகன் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற மறுநாள், பிக்கர்ட் இதற்கான விடையை அரசாங்க தலைமை வக்கீலிடமிருந்து பெற்றார்.

ஆஷ்கிரோப்ட் பதவியை ஏற்றதில் இருந்தே பயங்கரவாத அச்சுறுத்தலுக்குக் காட்டப்பட்ட அலட்சியப் போக்கின் தன்மை இவ்வாறுதான் இருந்தது. 9/11 விசாரணைக்குழு அதிகாரிகள் அறிக்கை வரைவின்படி, FBI உடைய பயங்கரவாத எதிர்நடவடிக்கைகளின் தலைவரான டேல் வாட்சன்(Dale Watson), மே 2001-ல் ஆஷ்கிரோப்ட் தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில் பயங்கரவாதம் அவருடைய முன்னுரிமைகளில் ஒன்றாகப் பட்டியல் இடவில்லை என்பதைக் கேள்விப்பட்டவுடன், தான் ''நாற்காலியிலிருந்தே சாய்ந்துவிட்டதாகச்'' சாட்சியம் கொடுத்தாராம்.

மே 2001 ல் ஒரு தேசியச் சட்டமன்ற விசாரணையில் ஆஷ்கிரோப்ட் சாட்சியமளிக்கையில் அக்குழுவிடம் அமெரிக்க மக்களைப் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்த காப்பது, தன்னுடைய துறையின் மிக உயர்ந்த முன்னுரிமை என்று கூறியிருந்தார். மறுநாள், அவருடைய துறை 2003 ஒதுக்கீட்டிற்கான வழிநெறிகள் பற்றி வெளியிட்ட குறிப்பில் போதைப் பொருள் கடத்தல், துப்பாக்கி வன்முறை இவை குறிப்பிடப்பட்டு இருந்தனவே ஒழிய பயங்கரவாதத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இதைப்பற்றி விசாரணைக் குழு அதிகாரிகள் கேட்டதற்கு, ஆஷ்கிரோப்ட் அந்த வழிகாட்டி நெறிகள் அவருக்கு முன் இருந்த கிளிண்டனின் அரசாங்கத் தலைமை வக்கீல் ஜேனட் ரெனோவினால் ஒரு மூலோபாயத் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று கூறினார். ஆனால் ரெனோவின் ஆவணத்தில் பயங்கரவாத எதிர் நடவடிக்கை பற்றி சில கருத்துக்கள் இருந்தன என்றும் தான் வெளியிட்டதில் அவை நீக்கப்பட்டுவிட்டன என்பதையும் ஒப்புக்கொண்டார். இவ்விஷயத்தில் ஆஷ்கிரோப்டின் வினோதமான இரட்டைத் தன்மையை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது; இது பற்றிப் பின்னர் கூறுவோம்.

FBI உம் விமானக்கடத்தல் அச்சுறுத்தலும்

FBI-க்குள்தான் வரவிருந்த, பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய இரு முக்கியமான அடையாளங்களில் இரண்டு நெறிக்கப்பட்டு, அடக்கிவைக்கப்பட்டிருந்தன. பினிக்ஸ், மற்றும் மின்னியாபோலிஸ் இவற்றில் இருந்த FBI உளவாளிகள் அனுப்பிய, இப்பொழுது இகழி புகழ்வு பெற்றுள்ள குறிப்புக்கள்தாம் அவை. முதல் குறிப்பு அரிஜோனாவில் பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளில் வல்லுனரான கென்னத் வில்லியம்ஸ் தயாரித்தது ஆகும்; இது சந்தேகத்திற்கு உரிய பயங்கரவாதிகள் உள்ளூர் விமானப்பயிற்சிப் பள்ளிகளில், பயிற்சி பெற்று வருவதைப் பற்றிய எச்சரிக்கையைக் கொடுத்திருந்தது. ஒரு அல்கொய்தா ஆதரவாளர் விமானம் ஒன்றில் லாக்கர்பீ (Lockerbie)தாக்குதல் மாதிரியில், ஒரு வெடிகுண்டை வைக்கக் கூடுமோ என்ற நிலைபற்றி முக்கியமாகக் கவலை கொண்டிருந்தார். பயிற்சிப் பள்ளிகள் முறையாக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர்கள் பற்றித் தகவல் கொடுப்பதற்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படவேண்டும் என்ற ஆலோசனையைத் தெரிவித்திருந்தார். இது பின்பற்றப்பட்டிருந்தால், 9/11 ல் பின்னர் வரவிருந்த விமானக் கடத்தல்காரர்களைப் பற்றிய அடையாளங்கள் விரைவில் தெரிந்திருக்கக் கூடும்.

Zacarias Moussaoui என்ற இஸ்லாமிய அடிப்படைவாதி, மின்னிசோடாப் புறநகரான ஏகனில் ஒரு பயிற்சிப்பள்ளியில் பயிற்சி நாடியதை அடுத்துக் கைது செய்யப்பட்ட பின்னணியில். மின்னியாபொலிஸ் குறிப்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் FBI அதிகாரிகள் அவருடைய நடவடிக்கை சந்தேகத்திற்குரிய முறையில் இருந்தன என்று பயிற்சியாளர்கள் கொடுத்த அறிவிப்பை ஒட்டி, குடியேற்றவிதி மீறுதல்களுக்காக அவரைக் கைது செய்தனர். Moussaoui ஒரு 747 போயிங் விமானத்தை ஓட்டும் பயிற்சியை விரும்பினார்; ஆனால் ஒரு சிறிய விமானத்தை இயக்கும் கணிசமான திறனோ அனுபவமோகூட அவரிடம் இல்லை. இவர் பயிற்சிக் கூடத்திற்கு முன்கூட்டியே கட்டணத்தைக் காசாகக் கொடுத்திருந்தார்; விரைவில் உணர்ச்சிவசப்படும் தன்மை உடையவராக இவர் இருந்தார் என்பதும் பெருங்கோபமுடையவர் என்பதும் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு அவர்மீது குற்றச் சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் பலமுறை நடந்துகொண்ட முறை நிரூபித்தது.

ஜூன் 2001-ல் லூயி ப்ரீ(Louis Freeh) FBI பதவியிலிருந்து விலகியவுடன், இடைக்கால இயக்குனராகப் பதவியேற்ற தாமஸ் பிக்கர்ட் சாட்சியம் அளிக்கும்போது, இந்த இரு குறிப்புக்களைப் பற்றியும் தான், கடத்தப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையம், பென்டகன் ஆகியவை தாக்கப்பட்டுச் சில மணிநேரம் வரை அறியவில்லை என்று குறிப்பிட்டார். கலிபோர்னியா, சான் டீயாகோவில், ஒரு FBI தகவல் தெரிவிப்பவர் உண்மையில் விமானக் கடத்தல்காரர்களான கலீட் அல் மிக்டர் மற்றும் நவப் அல் ஹஜ்மி இருவருடனும் தொடர்பிருந்தது பற்றியும் பின்னர்தான் முதல்தடவையாகக் கேட்டதாக அவர் கூறினார். சில வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்களின்படி, தகவல் தருபவர் அவர்களோடு நட்பு கொண்டிருந்தததாகவும், சில மாதங்களுக்கு, 2000 ஆண்டுத் துவக்கத்தில். அவர்கள் சான் டீயாகோவில் வசித்தபோது, அவர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் தெரிகிறது. இக்காலக் கட்டத்தில்தான் எதிர்கால விமானக்கடத்தல்காரர்கள் இருவரும் சான் டீயாகோ தொலைபேசிப் புத்தகத்தில் பதிவுபெற்றனர்; CIA உடைய பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலிலும் அவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இவ்விருவரும் ஜனவரி 2000-த்தில் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர், அதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்ட கூட்டம் ஒன்று மலேசியாவில் நடைபெற்ற போது அவர்கள் அதில் பங்கு கொண்டிருந்தனர்; இதை உள்ளூர்ப் போலீஸ், CIA க்காகக் கண்காணித்திருந்தனர். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு தாங்கள் FBI இடத்தில் 2000ம் ஆண்டில், al Mihdhar-ரும், al Hazmi-யும் அமெரிக்காவில் இருப்பதைத் தெரிவித்ததாக CIA அதிகாரிகள் கூறியுள்ளது. ஆனால் FBI, CIA இரண்டின் அதிகாரிகளும் 9/11 விசாரணையில் இந்த மாதம் இத்தகவல் FBI-க்கு 2001 ஆகஸ்ட் 27, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இருவாரம் முன்புதான், தெரிவிக்கப்பட்டதாக சாட்சியம் அளித்தனர்.

முன்னாள்் FBI இயக்குனரான ப்ரீ, விசாரணை கமிசன் உறுப்பினரும், ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டிமோதி ரெமர் கேள்விகேட்டபோது இந்த சான் டீயாகோ நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைத் தெரிவித்தார். "சான் டீயாகோவில் இவ்விரு விமானக் கடத்தல்காரர்கள் இருந்தது, அவர்கள் தகவல் தருபவருடன் தொடர்புகொண்டிருந்தது, இது ஒரு சுரண்டுவதற்குப் பயனளிக்கக் கூடிய வாய்ப்பு என்பதை நீங்கள் அறியலாம்; உளவுத்துறைத் தகவல், சில நல்ல நேரங்களில் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். FBI க்கு அந்தக் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இருவருடைய பெயர்களும் தெரிந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்...நினைத்தபடியெல்லாம் நடந்திருக்கக் கூடும் என்றால், அந்தத் தகவல் கூறியவர் மற்றும் FBI க்குத் தகவல் கூறுபவர்கள் அனைவரும் இரண்டுபேரைப் பற்றியும் குறிப்பாகக் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்று உத்திரவு இடப்பட்டிருந்தால், நமக்கு வேறுவிதமான முடிவு கிடைத்திருக்கும்."

9/11 விசாரணைக் குழுவிற்குக் கொடுத்த சாட்சியத்தின்படி, CIA al Mihdhar அல்லது al Hazmi-யுடைய பெயர்களை அதிகாரபூர்வமான TIPOFF என்ற பட்டியலில் குறித்துக் கொள்ளவில்லை; இப்பட்டியலில் உள்ள பெயர்கள் குடியேற்றம், மற்றும் நாட்டின் குடிமைத்தன்மை பணி அலுவலகத்திற்கும் (INS) மற்றும் பல நிறுவனங்கள், ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி என்ற கண்காணிப்பிற்குட்பட்டவர் எனத் தெரியப்படுத்தப்பட்டு இருந்திருக்கும். இதைச் செய்யத் தவறியதற்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இறுதியில் CIA, FBI க்கு இதைத் தெரியப்படுத்தியவுடன், தகவல் நியூயோர்க் நகரப் பிரிவிற்கு அனுப்பப் பட்டது; இந்நகரத்தைத்தான் தாங்கள் அடையப் போவதாக இருவரும் விசா மனுவில் குறிப்பிட்டிருந்தனர். நியூயோர்க் அலுவலகம் இருவரும் அங்கு வரவே இல்லை என்பதை உறுதி செய்து அத்தகவலை, 2001 செப்டம்பர் 11 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்திற்கு மேல்விசாரணைக்காக அனுப்பி வைத்தது. ஒரு FBI அதிகாரி, சான் டீயாகோ தகவல் தருபவரிடம் விசாரித்தவர், தனக்கு இந்த இருவரும் விசாரணைக்குத் தேவைப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தால், "நாங்கள் உறுதியாக அவர்களைக் கண்டுபிடித்திருப்போம், ஒரு சில நாட்களுக்குள் அதைச் செய்திருப்போம்." என்று விசாரணைக் குழுவிடம் கூறினார்.

பிக்கர்ட் எதிர். அஷ்கிரோப்ட்

அஷ்கிரோப்ட் பயங்கரவாதம் பற்றிய அணுகுமுறையை, டேல் வாட்சன் போலவே பிக்கர்டும் கவலை கொண்டதாகத் தெரிவித்தார்; இவரும் மே 10ம் தேதி, குறிப்பில் பயங்கரவாதம் நீக்கப் பட்டிருந்ததை மேற்கோளிட்டார். தான் தலைமை வக்கீலிடம் இருமுறை பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றி 2001 கோடையில் தெரிவித்த பின்னர், ஆஷ்கிரோப்ட் "இதைப்பற்றிய தகவலை இனியும் கேட்கத் தயாராக இல்லை" எனக் கூறிவிட்டதாக, பிக்கர்ட் விசாரணைக் குழுவிற்குக் கொடுத்த பேட்டியில் கூறியது இன்னும் கூடுதலான விசித்திரம்தான்.

குழு உறுப்பினர், முன்னாள் வாட்டர்கேட் சிறப்பு வக்கிலான ரிச்சட் பென் வெனிஸ்டேயுடன் பறிமாறிக் கொண்ட கருத்துக்களில், பிக்கர்ட் இந்தக் குற்றச்சாட்டை மறுபடியும் கூறினார்.

பென்-வெனிஸ்டே : நீங்கள் தலைமை வக்கீலை ஏழு அல்லது எட்டு முறை சந்தித்தீர்களா?

பிக்கர்ட்: கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கைதான். துல்லியமாக எத்தனை என்று குறித்து வைத்துள்ளேன்; ஆனால் மொத்தத்தைப் தொகை எனக்கு தெரியாது.

பென் வெனிஸ்டே: எங்கள் அலுவலர்கள் உங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிக்கையின்படி, நீங்கள் ஒவ்வொரு முறையும், பயங்கரவாத எதிர்நடவடிக்கைகள் அல்லது உளவு எதிர்நடவடிக்கைகளுடன் தொடங்குவீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதே நேரத்தில் அச்சுறுத்தல் அளவு உயர்ந்தும் மிக உயர்ந்தும் சென்றுகொண்டிருந்தது. மிஸ்டர் வாட்சன் உங்களிடம் வந்து CIA இதைப் பற்றி பெரிதும் அக்கறை கொண்டுள்ளதாகவும் ஒரு தாக்குதல் இருக்கும் என்றும் கூறினார். இந்தக் கூட்டங்களில் தலைமை வக்கீலிடம் மீண்டும், மீண்டும் தெரிவித்தீர்கள் என கூறியிருந்தீர்கள். இது சரியா?

பிக்கர்ட்: நான் குறைந்தது இருமுறைகளாவது அவரிடம் குறிப்பிட்டேன்.

பென்-வெனிஸ்டே: உங்கள் அறிக்கையின்படி, அதிகாரிகளிடம் மிஸ்டர் ஆஷ்கிரோப்ட் இதைப்பற்றி இனிக் கேட்கத்தயாரில்லை எனக் கூறிவிட்டார் என்று தெரிவித்தீர்கள். இது சரியா?

பிக்கர்ட்: ஆம். இது உண்மையே.

ஆஷ்கிரோப்ட் இந்தப் பிக்கர்டின் கூற்றை வன்மையாக, முன்னாள் இல்லினாயுடைய கவர்னரும். நட்புடன் கூடிய விசாரணைக்குழு உறுப்பினருமான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜிம் தோம்சனுடன் பேசுகையில் மறுத்தார்.

தாம்சன்: இடைக்கால இயக்குனர் பிக்கர்ட் இன்று பிற்பகல் சாட்சியமளிக்கையில், அவர் இருமுறை அல்கொய்தா, ஓசாமா பின்லேடன் பற்றி உங்களிடம் தெரிவித்ததாகவும், பழையபடி அவ்வாறு தெரிவிக்க முயன்றபோது நீங்கள் இதைப்பற்றி அவர் இனிக் கூறவேண்டாம் எனச் சொல்லிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ஆஷ்கிரோப்ட்: முதலாவதாக, செயல் இயக்குனர் பிக்கர்டும் நானும் இருதடவைகளுக்கு மேல் சந்தித்துள்ளோம். நாங்கள் வழக்கமாக கூடிப்பேசுவதுண்டு. இரண்டாவதாக, பயங்கரவாதத்தைப் பற்றி இனி அவரிடம் கேட்கவிரும்பவில்லை என்று நான் அவரிடம் ஒருபோதும் சொன்னது கிடையாது. அமெரிக்க மக்களுடைய பாதுகாப்பைப் பற்றி நான் பெரிதும் அக்கறை உடையவன். பயங்கரவாதத்தைப் பற்றியும் பெரிதும் அக்கறை காட்டியிருந்தேன்; அவரிடமே குறிப்பாக அமெரிக்க மக்களைப் பற்றிய அச்சுறுத்தல், உள்நாட்டில் தாக்குதல் இவற்றைப் பற்றி கேள்விகள் கேட்டிருக்கிறேன்.

ஆனால் 9/11 விசாரணை குழு உறுப்பினர் எவரும் யாருடைய கூற்று உண்மை என்பதைப் பற்றி அறிய முயற்சி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே தேசியத் தொலைக்காட்சியில், ஒருவருக்குச் சில மணிநேரம் கழித்து மற்றவர் என்று தோன்றி, நிகழ்வுகளைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை அளித்தனர். இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ - ஒருவர் நீதித் துறைத்தலைவர், மற்றவர் FBI உடைய தலைவர் -- செப்டம்பர் 11க்கு முந்தைய நிகழ்ச்சிகள் பற்றி பொய்யுரை கூறியுள்ளனர். இந்த உண்மை செய்தி ஊடகத்தில் அதிக குறிப்பைக் கொண்டிருக்கவில்லை.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், டிசம்பர் 2001-ல் ஓய்வு பெற்றுவிட்ட பிக்கர்ட், ஆஷ்கிரோப்ட்டின் நடத்தை பற்றி பொய் எதற்காகக் கூறவேண்டும் என்பதற்கு வெளிப்படையான காரணம் இல்லை. மாறாகத் தலைமை வக்கீல், உண்மையைத் திரித்துக் கூறுவதற்குத் தெளிவான உந்துதலைக் கொண்டுள்ளார்; இது ஒன்றில்தான் ஆஷ்கிரோப்ட் அவ்வாறு நடத்து கொண்டுள்ளார் என்பதில்லை.

ஜனாதிபதி புஷ், ஒருகால் உள்நாட்டில் அல்கொய்தா தாக்கக் கூடும் என்பது பற்றிய அறிக்கையைக் கேட்டிருந்தார் என்பதைப் பற்றி ஆஷ்கிரோப்ட், பிக்கர்ட் இருவருமே தங்களுக்குத் தெரியாது என்றும் ஜனாதிபதிக்கு அன்றாடக் குறிப்புத் தயாரித்தல் பற்றியும் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆகஸ்ட் 6, 2001ல் அக்குறிப்பு ஒரு தலைப்பான "பின் லேடன் அமெரிக்காவிற்குள் தாக்குதல் நடத்துவதில் உறுதியாக இருக்கிறார்." என்பதைக் கொண்டுள்ளது. PDB அப்பொழுது FBI 70 இடங்களில் தள விசாரணையில் அல்கொய்தா பற்றி ஈடுபட்டிருந்தது என்று கூறுகிறது. ஆனால் ஆஷ்கிரோப்ட், பிக்கர்ட் இருவருமே CIA அத்தகைய எண்ணிக்கை பற்றிய குறிப்பை எவ்வாறு பெற்றது என்பது தங்களுக்குத் தெரியாது எனக் கூறிவிட்டனர்.

செப்டம்பர் 11க்கு முன்னதாக தனக்கு PDB க்களைப் பார்க்க வாய்ப்பு இல்லை என்று ஆஷ்கிரோப்ட் கூறினார்; ஆனால் தன்னை பெரிதும் தேசியப் பாதுகாப்பிற்கு புறத்தே இருப்பவர் என அவர் காட்டிக்கொள்ளும் முயற்சி, கிளன்டன் நிர்வாகத்தில் உதவித் தலைமை வக்கீலாக இருந்திருந்த, விசாரணை குழுவில் உறுப்பினராகவும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தும் இருக்கும், ஜேமி கோரேலிக்கின் ஒரு கேள்வியினால் தகர்ந்து போயிற்று.

கோரேலிக்: இப்பொழுது இதுதான் என்னுடைய கேள்வி. ஜனாதிபதி தினசரி குறிப்பு (PDB) குறிப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் மூத்த நிர்வாக உளவுத் தகவல் (SEIB) அரசாங்கத்தின் அடுத்தபடியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படுவது கிடைத்தது. இது சரியா? இது அன்றாடம் உங்களுக்கு வந்ததா?

ஆஷ்கிரோப்ட்: SEIB ...

கோரேலிக்: ஆம் SEIB.

ஆஷ்கிரோப்ட்: ...ஆம், எனக்குக் கிடைத்தது.

கோரேலிக்: ஒரு SEIB, ஆகஸ்ட் 7 2001, முழுமையாக அதைப் பிரதிபலிக்காவிட்டாலும், பெரும்பாலும் ஆகஸ்ட் 6 ஜனாதிபதி தினசரி குறிப்பை ஒட்டியிருந்தது என்ற முறையில் வெளிவந்தது. ஒரு ஆவணம் "பின் லேடன் அமெரிக்காவிற்குள் தாக்க முடிவெடுத்துள்ளார்" என்ற தலைப்பில் SEIB இல் வந்தது பற்றி, உங்களுக்கு நினைவிருக்கிறாதா எனக் கேட்க விரும்புகிறேன்.

ஆஷ்கிரோப்ட்: எனக்கு அதுபற்றிக் கூறப்படுகிறது, தேவையான விஷயங்கள் அவ்வப்பொழுது என்னுடைய உதவியாளர்களால் என்க்குக் கூறப்பட்டு வந்தது.

தலைமை வக்கீலிடம் இருந்து ஒரு தூண்டிவிடல்

விசாரணைக் குழுமுன் சாட்சியம் அளிக்கும்போது செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி சில நேரங்களில் இவ்வாறு புஷ் நிர்வாகத்தின் இயலாத்தன்மையைக் குறைக்க அல்லது மறுக்க, ஆஷ்கிரோப்ட் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் மிகுந்த பாதுகாப்புடைய தன்மை பெற்றிருந்தது, எனவே மிகுதியாக வெளிப்படுத்திய தன்மையையும் கொண்டிருந்தது, அவருடைய சாட்சியத்தின் ஆரம்ப உரையில், அவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த விசாரணைக்குழு உறுப்பினர் கோரேலிக் பற்றி ஆணவத்துடனும், வெளிப்படையாகவும் கூறியிருந்த நேரத்தில் அமைந்தது.

தன்னுடைய ஆரம்ப உரையின் பகுதியை கீழ்க்கண்ட அறிவிப்புடன் தொடங்கினார்: "2001ல் அமெரிக்காமீது தவிர்க்கமுடியாத பயங்கரவாதத் தாக்குதல் வரும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நம்முடைய ஆயுதக் கிடங்கின் முழு ஆற்றலையும் அதற்கு எதிராகப் பயன் படுத்தியிருப்பேன். தவிர்க்கமுடியாத குறைகூறல் இருந்தபோதிலும், நீதித்துறையின் வீரர்கள், எங்கள் முகவர்கள் மற்றும் எங்களுடைய வக்கீல்கள் கட்டவிழ்த்துவிட்டிருப்பார்கள். தாக்குதல்கள் தொடங்கிய பின்னர் நாங்கள் மேற்கொண்ட ஒவ்வொரு கடின தந்திரமும், தாக்குதலுக்கு முன்னரே பயன்படுத்தப் பட்டிருக்கும்"

நாம் ஏற்கனவே பார்த்துள்ளபடி, அறியாமையின் இக்கூற்று ஒரு ஆணவம் நிறைந்த பொய். பலமுறை வரவுள்ள அமெரிக்காவின் மீதான தாக்குதல் ஒன்று பற்றி ஆஷ்கிரோப்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டார்; பிக்கர்ட் கொடுத்த தகவல்கள், மற்றும் CIA, தேசிய பாதுகாப்பு சபை (National Security Council) இவற்றின் தகவல்கள்படியும்.

இதன்பின்னர் ஆஷ்கிரோப்ட் தன்னுடைய பொது அரசியல் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டார். அவருடைய அறிக்கை தொடர்கிறது: "செப்டம்பர் 11ன் எளிய உண்மை இதுதான். ஒரு தாக்குதல் வரும் என்று நமக்குத் தெரியாது; ஏனென்றால் தசாப்தங்களாக நம்முடைய அரசாங்கம் தன்னுடைய விரோதிகளைப் பற்றிக் குருட்டுத்தனமாக இருந்து விட்டது. நம்முடைய முகவர்கள் அரசாங்கம் சுமத்திய தடுப்புச்சுவர்களினால் தனிமைப் படுத்தப்பட்டனர், அரசாங்கம் சுமத்திய தடைகளால் கைவிலங்கிடப்பட்டிருந்தனர், மற்றும் அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் இன்றிக் காய்ந்தனர்."

இந்தக் கூற்றை விரிவுபடுத்த ஆஷ்கிரோப்ட் முற்பட்டார்; உளவுத்துறைக் கூட்டத்திற்கும், குற்ற விசாரணைப் பிரிவிற்கும் இடையே இருந்த பிளவுதான் இவரால் தடுப்புச் சுவர் என்று வர்ணிக்கப்பட்டது. இது 1970-களில் சட்ட மன்ற விசாரணையை ஒட்டி, உள்நாட்டு ஒற்றுவேலை, கறைபடிந்த தந்திரங்கள், அரசியல் முறையில் உளைச்சலைக் கொடுத்தல் மற்றும் பல குற்றஞ்சார்ந்த நடதவடிக்கைகள் FBI, CIA இவற்றால் செய்யப்பட்டதை அடுத்து ஏற்படுத்தப்பட்டவை. இவர் இந்தச் ''சுவர்தான்'' சிமிகி, திஙிமி க் ணீறீ விவீலீபீலீணீக்ஷீ, al Hazmi இவர்களைப் பற்றித் தகவல் கொடுக்காததற்கு காரணம் என்றும் செப்டம்பர் 11-க்கு முன்பு பொதுவாகக் கவனக்குறைவிற்கும் காரணம் என்று ஆஷ்கிரோப்ட் குறைகூறுகிறார்.

இவருடைய சாட்சியம் கொடுக்கப்படவேண்டிய முதல் வாரம், ஆஷ்கிரோப்ட் நீதித்துறையை 1995ல் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை இரகசியக் காப்பில் இருந்து நீக்கச்செய்தார்; அதில் வழிகாட்டிகள் பற்றி "சில வெளிநாட்டு உளவு எதிர் நடவடிக்கைகள், குற்றவியல் விசாரணையில் இருந்து பிரிக்கப் படுவதற்கான விதிமுறைகள்" என்ற தலைப்பில் கூறப்பட்டிருந்தன. தன்னுடைய குழுவிற்கான ஆரம்ப அறிக்கையில் இந்தக் குறிப்பை அறிமுகப்படுத்தி, ஆஷ்கிரோப்ட் கூறினார்: "இந்தக் குறிப்புத்தான் ஒரு சுவர் குற்ற விசாரணை, உளவு எதிர் விசாரணைகளைப் பிரித்தது ஆகும்; உண்மையில் 1993 உலக வர்த்தக மையத் தாக்குதலை அடுத்து இந்தச்சுவர் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் பயங்கரவாதத்தினர் மிகப்பெரிய அளவில் சர்வதேச அமைப்பு ஒன்றை இலக்காகக் கொண்டிருந்தது இத்தாக்குதல்தான்; செப்டம்பர் 11க்கு முன்பும் பெரிய தாக்குதல் இதுதான். இந்தச்சுவரின் வலிமையைக் குறையவைக்கும் சக்தியை நீங்கள் உணர்ந்தாலும், இவ் விசாரணைக்குழுவினர் அனைவரும் இதை அறிந்துள்ளவர் என்று நான் நினைக்க முடியாது. எனவே நான் அதை இரகசியக் காப்பிலிருந்து உங்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பரிசீலனையின் பொருட்டு நீக்கியுள்ளேன். முழுமையாக அனைத்தையும் கூறல் என்பது உங்களுக்கு இந்த குறிப்பை எழுதியவர் இக்குழுவில் ஒரு உறுப்பினர் எனக் கூறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கோரேலிக்கிற்கு ஒரு சுட்டிக்காட்டுதல் ஆகும்.

கோரேலிக் குறிப்பு வேண்டும் என்றே, ஒரு போலிச் சிவப்புக் கோடாகக் காட்டபட்டு, விசாரணையில் இரண்டு காரணங்களுக்காக நுழைக்கப்பட்டது என்பதில் கேள்விக்கு இடம் இல்லை; முதலாவதாக, புஷ் நிர்வாகத்தைக் விமர்சிப்பவர்களைச் சகதியால் அடிப்பதற்கும், குறைகூறும் திறனுடையவர்களை அச்சுறுத்துவதற்கும், இரண்டாவதாக கவனத்தை அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள் செப்டம்பர் 11-ல் கொண்டிருந்த பங்கிலிருந்து திசை திருப்புதல் என்பதற்காகவும்தான்..

வாஷிங்கடன் மாநிலத்தின் பழைய செனட்டரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான விசாரணை குழு உறுப்பினர் ஸ்லேட் கார்டன், தான் ஆஷ்கிரோப்டைக் கேள்வி கேட்பதை கோரேலிக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பயன்படுத்தினார்; ஆகஸ்ட் 2001ல் ஆஷ்கிரோப்ட் தன்னுடைய துணை வக்கிலான லாரி தோம்சனை, உளவுத்துறை, குற்ற விசாரணைகள் பிரிக்கப்படவேண்டும் என்ற குறிப்பை மறு உறுதி செய்யச் சொன்னதை அவர் வெளிப்படுத்தினர். இதன் பின்னர் கீழ்க்கண்ட கேள்வி பதில்கள் தொடர்ந்தன.

கார்டன்: உங்கள் இரண்டாம் பிரச்சினை 1995 குறிப்புக்களைப் பற்றிக் கடுமையான விமர்சனம் ஆகும்; இவை மாபெரும் தடைகளை சட்டத்தை செயல் படுத்தும் அமைப்பிற்கும் உளவுத்துறை நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படுத்தின என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த தடுப்புச்சுவர், செப்டம்பர் 11, 2001 க்கு எட்டு மாதங்கள் முன்பு வரை கண்டுபிடிக்கப்படவில்லையா, நீங்கள்தான் அப்பொழுது அதை மாற்றினீர்கள். உண்மையில் இங்கு லாரி தோம்சன் ஆகஸ்ட் 6 எழுதிய குறிப்பில், ஐந்தாவது வரி கூறுகிறது, "1995 குறிப்பின்படியான நடைமுறைகள் இன்றளவும் உள்ளன." அந்தச் சுவர் செயலற்ற தன்மையைக் கொண்டது என்றால், இது ஏன் அந்த எட்டு மாத காலத்தில் தகர்க்கப்படவில்லை?

ஆஷ்கிரோப்ட்: துணை அரசாங்க வக்கீலான லாரி தோம்சன் ஆகஸ்ட் 6 குறிப்பில், குறிப்பிடத் தக்க வகையில் தகவல் பறிமாற்றம் ஏற்படுவதைக் கொண்டுவந்தார்; உளவுத்துறை விசாரணைகளில் நபர்கள் கூட்டாட்சிக் குற்றம் பற்றிய தகவல் வந்தால் கூட்டாட்சிக் குற்றப்பிரிவிற்குத் தகவல் கொடுக்கும் நிலை குற்றவியில் பிரிவினருக்குக் கட்டாயமாக்கப் பட்டது. அது அச்சுவரைத் தகர்க்கும் வகையில் ஒரு கட்டமாகும். சுவரைக் கீழிறக்கும் கூடுதலான தகவல் பறிமாற்றத்திற்கு அது வகை செய்தது.

கார்டன்: ஆனால் ஆகஸ்ட் 6, 2001க்குப் பின்னர்தான் மெளசவி(Moussaoui) பிடிக்கப்பட்டு அவருடைய கணினியைச் சோதனையிட பிடிவாரண்ட் கிடைக்காது என்ற முடிவு FBI இனுள் எடுக்கப்பட்டது. எனவே அந்த மாறுதல்கள் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.

ஆஷ்கிரோப்ட்: கமிஷனர் அவர்களே உங்களுடைய கேள்வி புரியவில்லை.

கார்டன் : 1995 வழிகாட்டுமுறைகள் பற்றிய குறைகளின் ஒருபகுதியாக, FBI மெளசவியைக் கைது செய்த பிறகு, உங்கள் முனைவர்கள் அவருடைய வணிக விமான அக்கறை பற்றியதில் சந்தேகம் கொண்டார்கள் என்றும், ஒரு குற்றப் பிடிவாரண்ட் அவருடைய கணினியைச் சோதிக்கத்தேவை எனக் கேட்டதாகவும் கூறுகின்றீர்கள். இது நிராகரிக்கப்பட்டது; ஏனெனில் FBI அதிகாரிகள் சுவரைத் தகர்க்கத் தயக்கம் காட்டினர். ஆனால் இந்த மாறுதல்கள் ஆகஸ்ட் 6க்குப் பிறகு குறிப்பிடத்தக்கவை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

இன்னும் அடிப்படையில் இந்த ஆஷ்கிரோப்டின் தூண்டுதல், செப்டம்பர் 11, 2001 பற்றிய செய்தி ஊடகத்தின் பெரும்பாலான வர்ணனைகள் அனைத்துமே, அந்த நாளின் நிகழ்விகளுக்கும் முன்பு அமெரிக்க உளவு எதிர் நடவடிக்கைத் துறை செயல்பட்ட உண்மை நிலைமகளைப் பெரிதும் சிதைத்த அடிப்படையைக் கொண்டுள்ளன. முன்னாள் தலைமை வழக்குரைஞர் ஜேனட் ரெனோ, 9/11 குழுவிற்காகத் தன்னுடைய தயாரிக்கப்பட்ட வாக்குமூலத்தில் கூறுகிறார்: "பெரும்பாலான உளவு எதிர் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை பகிர்ந்து கொள்ளுவதில் எந்தச் சுவர்களும், தடைகளும் இல்லை. உளவுத்துறை உறுப்பினர்கள் அவைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துக்ளொள்ளவதிலும் சட்ட பூர்வமான எந்தத் தடைகளும் இல்லை.

"உளவுத்துறை அதிகாரிகளும், குற்றவியல் அதிகாரிகளும் தகவல் பகிர்ந்து கொள்வதில், கண்காணிப்பு மூலமாக அறியப்பட்ட தகவல் அல்லது இரகசிய ஒற்றர் மூலம் அறியப்பட்ட தகவல் தடையின்றி சட்டபூர்வமாகப் பகிர்ந்துகொள்ளப்படலாம்."

"ஜூரர்கள் விசாரணையை ஒட்டி அல்லது Title wiretaps ஒட்டிய குற்ற விசாரணகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களில் சில தடைகள் இருந்தபோதிலும், அவை பெரும் தடையாக மாறாது; ஏனென்றால் அவற்றை ஒட்டி அதிக முக்கியத்துவம் அற்ற தகவல்கள்தான் பகிரப்படமுடியும்."

ஆகப் பெரும்பாலும் கற்பனையான "தடுப்புச்சுவர்" FBI, CIA இரண்டும் செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி, தவிர்க்கமுடியாமல் செய்ய முயற்சிகளைத் தீவிரமாகக் கொள்ளவில்லை என்பதற்குக் காரணமாக முடியாது. இந்தச் செயலற்ற தன்னமையின், அல்லது வேண்டுமென்றே துணைநின்றதற்கான ஆதாரம், புஷ் நிர்வாகத்தின் அரசியல் தேவைகளில் காணப்படவேண்டும். அது மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அமெரிக்க இராணுவத் தலையீட்டைக் கொள்ளுவதற்கு ஒரு காரணத்தைத் தேடிக்கொண்டிருந்தது.

தொடரும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved