World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

politics of opportunism: the "radical left" in France

Part five: the Pabloites and the Lula government

சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"

பகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்

By Peter Schwarz
25 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பகுதிகள்

 

 

 

 

 


பகுதி 1: LO-LCR தேர்தல் கூட்டு

பகுதி 2: "முதலாளித்துவ எதிர்ப்பு இடதை"
LCR ஒன்று திரட்டல்

பகுதி 3: பப்லோவாத அகிலத்தின் பதினைந்தாம் உலக மாநாடு

பகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு

பகுதி 6: லூத் ஊவ்றியேர் இன் மனச்சோர்வடைந்த அரசியல்
 

இக் கட்டுரை, பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு-கட்டுரைத் தொடரின் ஐந்தாம் பகுதியாகும். முதல்பகுதி மே 15 அன்றும், இரண்டாம் பகுதி மே 17, மூன்றாம் பகுதி மே 19, நான்காம் பகுதி மே 22 தேதிகளிலும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன.

LCR (புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்) இன் பிரேசில் நாட்டு சகோதர அமைப்பு, Luiz Inacio "Lula" da Silva இன் அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் கொண்டிருந்த பங்கும், அந்த அரசாங்கத்தை காத்திடும் பங்கும், பப்லோவாத அரசியலின் விளைவுகள் எத்தன்மையைக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுவதாக விளங்குகின்றன.

இது, ஐக்கிய செயலகத்தின் பிரேசில் பகுதி Democracua Socialista (DS) என்ற பெயரில் Workers Party (PT) க்குள் ஒரு போக்காகச் செயல்படுகிறது; 175 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டில், லூலா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அக்டோபர் 2002 லிருந்து, பழமைவாத கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணியில் ஆண்டு வருகிறது.

பிரேசிலிய பப்லோவாதிகள் தங்களை, அப்பொழுதுதான் நிறுவப்பட்டிருந்த PT உடன் 1980ல் இணைத்துக் கொண்டனர். அப்பொழுது ஐக்கியச் செயலகம் வெளிப்படையாகவே, இது ஒரு நுழைதல் முறை (Entryism) அல்ல என்பதை தெளிவுபடுத்தியிருந்தது. பிரேசிலிய உறுப்பினர்களின் பணி, "தங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் PT உடன் இணைத்துக்கொண்டு, அதை வளர்த்தல் ஆகும்; ஒரு சீர்திருத்தக் கட்சி என்னும் முறையில் நுழைதல் முறைக் கொள்கையை அதில் காட்டாமல் இருந்து, PT உடன் அதன் திட்டங்களை விரிவுபடுத்தலில் ஒத்துழைத்து, அதை தான் முன்னரே கருத்து கொண்டுள்ள எந்தத் திட்டத்தையும் ஏற்குமாறு வற்புறுத்தாமலும் இருக்கவேண்டும்" என டிசம்பர் 1980ல் ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சுப் பிரிவு எழுதியிருந்தது.(1)

நுழைதல் முறை என்றால், மார்க்சிச அமைப்புக்களைப் பொறுத்தவரையில் வேறு ஒரு அமைப்பில் சேர்ந்து பணியாற்றி, அந்நிலையில் தங்களுடைய வேலைத்திட்டத்தையோ, அமைப்புமுறையையோ கைவிடாமல் இருத்தல் என்பது பொருளாகும். 1934ம் ஆண்டு இரண்டாம் அகிலத்தின் பிரெஞ்சுப் பகுதியான பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சிக்குள் (SFIO), அப்பொழுதுதான் அதில் தோன்றியிருந்த இடதுசாரிப் பிரிவில் சேர்ந்து, அத்தகைய உத்தியைக் கையாளுமாறு தன்னுடைய தோழர்களுக்கு ட்ரொட்ஸ்கி கூறியிருந்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியல் தன்மை பற்றி எத்தகைய கற்பனைத் தோற்றங்களையும் ட்ரொட்ஸ்கி கொண்டிருக்கவில்லை. மாறாக, அவருடைய முன்னோக்கின்படி, கட்சிக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டு வழிவகைகளை செல்வாக்கிற்கு உட்படுத்தி, ட்ரொட்ஸ்கிசப் போக்கை வலுப்படுத்தவேண்டும் என்றுதான் இருந்தது. ஓர் ஆண்டு கடந்த பின்னர் SFIO வலதுபுறம் தீவிரமாகத் திரும்பி, இடது பிரிவின்மீது நடவடிக்கை எடுத்தவுடன், தன்னுடைய கொள்கையைக் கைவிட்டு, தன்னுடைய தோழர்களை SFIO விலிருந்து வெளியேறுவிடுமாறு கூறிவிட அவர் தயங்கவில்லை.

1970 களில், பிரேசில் நாட்டை அதிரவைத்த மிகப்பெரிய தொழில்துறைப் பூசல்களின் நடுவே PT எழுச்சியுற்றது. பிரேசிலில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை வியத்தகுமுறையில் பெருகியபோது இவ்வேலைநிறுத்தங்கள் எழுந்தன; இதற்குக் காரணம் 1964ம் ஆண்டு இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருந்தபோது, அதன் தலைமையில் வெளிநாட்டு முதலீடு பெருகியது. இயக்கத்தின் பெருமதிப்பிற்குரிய தலைவரான லூலா, அதற்கு முன் தொழிற்சங்க அமைப்பான CUT இன் தலைவராக இருந்திருந்தார்.

PT இன் அரசியல் நோக்குநிலை வெளிப்படையாக சீர்திருத்தம் என்னும் வகையில்தான் இருந்தது. பிரேசிலிய முதலாளித்துவத்தை அகற்றவேண்டும் என்ற எண்ணம் அதற்கு இருந்ததில்லை; உலகப் பொருளாதர நிலையில் அந்நாடு நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்த வகையில், அதை தூக்கியெறிவதற்கு ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு தேவைப்பட்டிருக்கும். மாறாக PT, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பியிருக்கும் தன்மையை பிரேசில் தளர்த்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதுடன், அதோடு தேசிய வடிவமைப்பிற்குள் சீர்திருத்த நடவடிக்கைகளையும் இணைத்துக் கொள்ளக் கருதியது. அத்தகைய முன்னோக்கு தவிர்க்கமுடியாமல் பெருகிக்கொண்டு வரும் உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்குதலுடன் மோதலுக்கு வந்துவிடும்.

PT இன் தோற்றங்களை கருத்தில்கொண்டு, ஒரு நுழைதல் கொள்கைக்கு முறைமையான வாதங்கள் சாதகமாக இருந்தன. மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரையில் அத்தகைய கொள்கை, மிகுந்த தொலைநோக்குடைய மற்றும் புரட்சிகர கூறுபாடுகளை ஒழுங்கமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் மற்றும் PTயை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ நிறுவனங்களுடன் சமரசப்படுத்திட விழையும் அனைவர் மீதும் போரை அறிவிக்கும். உண்மையில், பிந்தைய (சமரச) பாதைதான் லூலாவின் கீழ் PT முன்னெடுத்த ஒன்றாகும்.

இதற்கு எதிரிடையாக, ஐக்கிய செயலகம், பிரத்தியேகமான பப்லோவாத பாணியில், PT இன் தொடக்கங்களே அது ஒரு புரட்சிகர நோக்குநிலையை வளர்க்கும் என்பதற்கு உத்திரவாதமாகும் என அறிவித்தது. "ஒரு சுயாதீனமான வர்க்க அமைப்புக்கான அணிதிரட்டலின் நேரடி வெளிப்பாடுதான் PT" என பப்லோவாதிகள் அறிவித்தனர். மேலும், "அத்தகைய பாரிய தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நோக்குநிலையிலிருந்து சுயாதீனமாக, அதன் இருப்பே செயலாற்றும் திறமையைத் தோற்றுவிப்பதால், அவை வர்க்க சமரச நிலையைக் கணிசமாகக் குறைத்துவிடும்" என்றும் அவர்கள் கூறினர்.(2)

அடுத்த 20 ஆண்டுகளில், பப்லோவாதிகள் PT உடைய நம்பிக்கைக்கு உரிய உறுப்பினர்களாகச் செயல்பட்டதுமட்டும் அல்லாமல், அதன் கீழ்மட்ட அணிகளிலும் கீழிருந்து உயர்ந்து, அரசு சாதனங்களின் ஏணியில் ஏறி மிக உயர்ந்த இடங்களைப் பெறலாயினர். Raul Pont, மற்றும் Joao Verle இருவரும் தொடர்ந்து Porto Alegre நகரத்தின் மேயர்களாக ஆயினர்; PT உடைய பாராளுமன்றப் பிரிவில் வால்டர் பின்ஹெய்ரோ துணைத் தலைவராக இருந்தார். Miguel Rossetto லூலா அரசாங்கத்தில் விவசாய சீர்திருத்த அமைச்சராக ஆனார். மிகவும் பிரபலமாயிருந்த DS உறுப்பினர் பிமீறீஷீணsணீ பிமீறீமீஸீணீ, செனட் மன்றத்தில் PT பிரிவின் தலைவரானார்; பின்னர் PT கட்சிக்குழு உறுப்பினராகவும், கட்சி நிர்வாகியும் ஆனார். 1992ம் ஆண்டு அவர் Macéio நகரத்தின் துணை மேயராகவும், பின்னர், Alagoas மாநில சட்டமன்றத்தில் ஒரு பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ம் ஆண்டு, 56 சதவிகித வாக்குகளுடன், இவ்வம்மையார் செனட் மன்றத்தில் இதே மாநிலத்தின் சார்பில் இடம் பெற்றார். டிசம்பர் 2003ல் இவர் PT யிலிருந்து வெளியேற்றப்பட்டார். (இந்தப் பிரச்சினைக்குப் பின்னர் வருவோம்.)

PT இன் அரசாங்க நடவடிக்கைகள், தல சுய ஆட்சி, வட்டார அரசியல் துறைகளில், பிரேசிலிய ஆட்சி உயர்சிறுகுழுவிற்கு இக்கட்சி எவ்வித புரட்சிகர ஆபத்துக்களையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

அரசாங்கத்தில் PT

இரண்டு முந்தைய முயற்சிகளுக்குப் பின்னர், 2002 அக்டோபர் 27 அன்று, 61 சதவிகித வாக்குகளுடன் லூலா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வலதுசாரி தாராளவாத கட்சி மற்றும் PMBD எனப்பட்ட ஜனநாயகக் கட்சியின் ஒருபகுதியுடன் இவர் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டதை அடுத்து, ஆளும் செல்வந்தத் தட்டில் ஒரு பிரிவு இவருடைய பிரச்சாரத்தை ஆதரித்தது. இவருடைய துணை ஜனாதிபதி பெரும் ஆலை அதிபரும் தாராளவாத கட்சியின் தலைவருமான ஜோஸ் அலெங்கார் இருந்தார்; இந்தத் தேர்வு, PT கொள்கையான நவீன தாராள வாதத்தோடு முறித்துக் கொள்ளுவோம் என்று PT கூறியிருந்ததைக் கேலிக் கூத்தாக ஆக்கியது.

நாட்டின் உயர்ந்த பொருளாதாரப் பதவிகளில் பெருவர்த்தகத்தின் நம்பிக்கையைப் பெற்றிருந்த பிரதிநிதிகளிடம் லூலா ஒப்படைத்தார். மத்திய வங்கியின் தலைவராக லூலாவிற்கு முன் பதவியில் இருந்த அவரின் வெறுப்புக்கு ஆளாகி இருந்த Fernando Enrique Cardoso வின் ஆதரவாளரான Henrique Meirelles என்பவரை நியமித்தார். நிதித் துறைப் பொறுப்புக்கு முன்பு Riberao Prato வில் மேயராக இருந்தபோது பொதுத்துறைப் பணிகளை தனியார் மயமாக்கியும், "தடையற்ற சந்தைக்கு" ஆதரவு கொடுத்ததன் மூலம் பெயர் வாங்கியிருந்த Antonio Palocci இடம் கொடுக்கப்பட்டது. லூலாவின் கூட்டணி அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனத்தின் (IMF) கோரிக்கைகளை நிறுவேற்றுவதாக உறுதிமொழி அளித்தது.

PT இன் தேர்தல் வெற்றி "வலதுசாரிப் பிரிவுகளுடன் கூட்டு, மற்றும் தேர்தலின்போது நிராகரிக்கப்பட்டிருந்த பொருளாதார கொள்கையின் முக்கிய கூறுகளை தொடர்வதற்கான அர்ப்பணிப்புக்கள் மூலம்" தகுதிப்படுத்தப்பட்டிருந்தது என்பதை அது உண்மையென ஒத்துக்கொண்டபோதிலும், DS அதனை "ஒரு மகத்தான மக்கள் வெற்றி, நவீன தாராளவாத கொள்கைக்கு ஒரு முக்கிய தோல்வி" என கொண்டாடியது. லூலா, பெரு வர்த்தகத்துடன் கொண்டிருந்த தொடர்பு, DS ஐ அரசாங்கப் பொறுப்பை முற்றிலுமாக ஏற்று அதில் பங்கு பெறுவதைத் தீர்மானிப்பதற்கு தடை எதையும் கொடுக்கவில்லை.

DS அறிவித்ததாவது: "ஜனநாயக மற்றும் மக்கள் இயக்கம், முன்னோடியில்லாத வரலாற்று அனுபவத்தில் இறங்கியுள்ளது, இது எப்படிப் பார்த்தாலும் நம்முடைய வருங்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். PT இன் சோசலிச ஜனநாயகப் போக்கு, தன்னை இந்த செயற்பாட்டின் பகுதியாகத்தான் கருதிக்கொள்கிறது; PT மற்றும் பிரேசிலிய இடது ஆகியவற்றால் எதிர்கொள்ளப்படும் சவால்களில் பங்கு பெறும்."(3) DS, கூட்டணி அரசாங்கத்தில் நிலச்சீர்திருத்த அமைச்சகத்தை எடுத்துக்கொள்ளுவதற்கு தனது உறுப்பினர்களுள் ஒருவரான Miguel Rossetto- வை அனுமதிக்க உடன்பட்டது.

International Viewpoint, என்ற பெயருடைய ஐக்கிய செயலகத்தின் ஆங்கில ஏடு, இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி எழுதுகையில், DS, PT க்குள் ஒரு முக்கிய உயிரோட்டத்தைப் பெற்றுள்ளதாகவும், DS இன் ஜனாதிபதி வேட்பாளர் Raul Pont 17.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. "இந்த நிலையில், PT இன் உள்மரபுகளை எடுத்துக்கொண்டால், அரசாங்கத்தில் அவர்கள் பங்கு பெறவேண்டும் எனக் கோரும் கட்டாயத்தில் லூலா இருந்தார் எனவும், இதை மறுப்பது கட்சிக்குள்ளும், இன்னும் குறிப்பாக மில்லியன் கணக்கான வாக்காளர்கள் இடையே, உண்மையான மாற்றத்திற்கான நம்பிக்கையில் அவர்களின் பொறுப்பை மறுப்பதாகவும் கருதப்பட்டுவிடும். இடதில் கணிசமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள, அதுவும் பிரேசிலுக்கு வெளியே, இந்த முடிவு -DS உறுப்பினர் Miguel Rosetto, விவசாய சொத்துக்கள் மிகவும் சமத்துவமற்று உள்ள நாட்டின் மிகப்பெரும் எரியும் பிரச்சினையான விவசாயச் சீர்திருத்தத்தை, விவசாய மந்திரி என்ற முறையில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இது கிராமப்புற தொழிலாளர்களின் சுய அமைப்புக்களுக்கு உதவும் என்றும் அவர்கள் அதனால் உண்ர்ந்தனர்." (4)

இதையே வேறுவிதமாகக் கூறினால், 20 ஆண்டுகாலம் விமர்சனமற்று PT ஐ ஆதரித்த பின்னர், "உண்மையான மாறுதலுக்குத் தாவ வேண்டும்" என்ற பொய்த்தோற்ற மூடுதிரையின் கீழ், கூட்டணியின் உண்மையான அரசியல் நோக்குநிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சந்தேகமில்லாமல் தெரிந்திருந்தும், பப்லோவாதிகள், PT உடன் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் சேரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். வேறு எந்தவிதமான நடவடிக்கையும், DS ஆல் தவறாக வழிநடத்தப்பட்டுள்ள மில்லியன் கணக்கான வாக்காளர்களின் விரோதத்தைத்தான் சம்பாதித்திருக்கும்.

தேசிய அரசாங்கத்தில் அதன் நுழைவுடன், PT தன்னுடைய முதலாளித்துவ தன்மையை மறைக்கும் வகையில் உயர்ந்த இடது முழக்கச் சொற்றொடர்களைக் கூறிய காலக்கட்டம் முடிவுற்றது. இதன் வலதுசாரிப் போக்கு தெளிவாக வெளிப்பட அதிக நாட்கள் ஆகவில்லை. Miguel Rossetto உடைய தோழர் ஒருவர் இதைத் தெளிவாக விளக்குகிறார். உருகுவே நாட்டு பப்லோவாத அகிலத்தின் முக்கிய உறுப்பினரான Ernesto Herrera லூலா பதவிக்கு வந்தபின் எட்டு மாதங்கள் கழித்து கீழேயுள்ள விபரீத நிலையைக் குறிப்பிடுகிறார்.

"ஜனவரி 1ம் தேதி ஜனாதிபதி லூலா 'இந்நாட்டின் நூற்றாண்டுகால சமுதாயக் கடனைத் தீர்ப்பதாக' உறுதிமொழி கொடுத்தார்; அதையொட்டி Fernando Enrique Cardoso மற்றும் அவருடைய நவீன தாராளவாத பின்தோன்றல்களின் "சாபமுடைய மரபியத்தை" கடந்து விடலாம் என்ற உறுதிமொழியும் தொடங்கியது. இத்தகைய நிகழ்வு நடப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை. மாறாக இதற்கு எதிரான நிகழ்வுகள்தான் தோன்றியுள்ளன. இந்த மாற்றம் சிறிதும் மறைக்கப்படாத தொடர்ச்சியுடன் சேர்ந்தேதான் இருக்கிறது. லூலாவின் அரசாங்கம் இறுதியில் சர்வதேச பெருவர்த்தக நிறுவனங்கள் இட்ட விதிகளை ஏற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் குழுக்களுடனும், வங்கிகளுடனும், தனியார் மயமாக்கப்பட்ட பொதுநிறுவனங்களின் பெரும் பங்குதாரர்களுடனும் உடன்பாட்டிற்கு வந்தது. ஓய்வூதியத்தின் "சீர்திருத்தம்" (சமுதாயக் காப்பீடு) என்ற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதிய நலன்களுக்கு ஏற்ற முறையில் செயல்முறைகள் நடக்கின்றன; அதேநேரத்தில் வாஷிங்டன் வற்புறுத்தும் வகையான இன்னொரு 'சீர்திருத்தமும்', வரிவிதிப்பை பொறுத்த வரையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

"நவீன தாராளவாத கொள்கையின்படி, PT, (வேலைகொடுப்பவர்கள் மற்றும் IM்்F ஆகியவற்றால் கோரப்பட்டிருந்த) தொழிலாளர் சட்டங்கள் மிகவும் "வளைந்து கொடுக்கப் படவேண்டிய தன்மையை" யையும் ஏற்றது. GNP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) விகிதத்திற்கு ஏற்ப பொதுக் கடனை உயர்த்தி, மத்திய வங்கியின் 'தன்னாட்சிப் பொறுப்பையும்' அனுமதித்துள்ளது, உண்மையில், இவ் வங்கி வட அமெரிக்க கூட்டாட்சி வங்கியின் ஒரு துணைக் கிளை போலத்தான் செயல்பட்டு வருகின்றது. அனைத்துமே முன் இருந்தது போலத்தான் இருக்கிறது... அல்லது அதைவிட மோசமாகத்தான் உள்ளது. பெருநகரங்களில் வேலையின்மை 20 சதவிகிதாக இருக்கிறது.

குடும்பத்தின் சராசரி வருமானம் கடந்த 12 மாதங்களில் 16 சதவிகிதம் குறைந்து விட்டது. வாங்கும் திறன் என்ற அர்த்தத்தில் ....ஜனவரி மாதத்தில் இருந்து வருமானங்கள் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் குறைந்து விட்டன, மொத்தத்தில் 50 சதவிகித தொழிலாளர்களுக்கு எந்த விதமான சமூகக் காப்பீடும் இல்லை... பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் 2004ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து சமுதாயக் கொள்கைக்கான செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன; கடனுக்குத் திருப்பிக் கொடுக்கப்படுவதற்கான தொகைகள் மட்டும் மாறுதலுக்கு உட்படவில்லை." (5)

Herrera, பின்வருமாறு முடிவுரைத்தார்: "PT இன் ஆளும் பிரிவு (கன்னை) முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு தூணாகத் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது."

Herrera வின் DS இல் இருக்கும் தோழர்களுடைய பங்கு "ஆளும் பிரிவினுடைய" பங்கினின்றும் அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. தொழிற்சங்க அமைப்பான CUT- ல் ஜூலையில் நடந்த அலுவலர்கள் தேர்தலில், இடதுசாரி எதிர்ப்பினரின் பட்டியலுக்கு எதிராக லூலாவின் உத்தியோகபூர்வ அலுவலர்கள் பட்டியலை DS ஏற்கனவே ஆதரித்திருந்தது. ஆகஸ்ட் 5 அன்று, பாராளுமன்றம் பெரும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்ட வகையில், DS பாராளுமன்ற துணைத் தலைமைகளின் பெரும்பான்மையினர் கொடூரமான ஓய்வூதிய சீர்திருத்தங்களை ஆதரித்தனர். அதற்கு எதிராக இருவர் மட்டுமே வாக்களித்தனர், அவர்களுள் ஒருவர் பிமீறீஷீணsணீ பிமீறீமீஸீணீ.

அரசாங்கத்தின் பொதுப்போக்கு போலத்தான் பப்லோவாத மந்திரியின் விவசாயச் சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய பணியும் இருந்தது. வேலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், Miguel Rossetto கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்களுக்கு நிலம் தேவைப்படுகிறது என்றும் தன்னுடைய பதவியின் முதலாண்டில் 60,000 பிளாட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் உறுதிமொழி கொடுத்தார். 1988ல் அரசியல் அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு விதியின் அடிப்படையில், உபயோகப்படுத்தப்படாத தனியார் நிலங்கள் (திருச்சபை குழுக்களின்படி, நாட்டில் விளைநிலங்களில் நான்கில் ஒரு பங்கு இவ்வாறு உள்ளன) கையகப்படுத்தப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படலாம் என்று இருந்தது, அவர் அதனை அடிப்படையாகக் கொண்டார். ஆனால் ஓராண்டு பதவிக் காலத்திற்கு பின்னர், 10,000 நிலப்பிரிவுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன; பழமைவாத அரசாங்கம் ஓராண்டிற்கு முன்பு இருந்தபோது கொடுக்கப்பட்ட எண்ணிக்கையை விட இது குறைவானதாகும்.

Rosetto இன் நிலங்கள் ஒதுக்கீட்டில் உறுதிமொழி பின்னுக்குத் தள்ளப்பட்டபோது, ஏராளமான "சட்டவிரோத" நில ஆக்கிரமிப்புக்கள் இரட்டிப்பாகி உள்ளன; அதுபோலவே பெருநிலக்கிழார்களின் கட்டளையின் பேரில், ஒப்பந்தக் கொலைகாரர்களால் கொல்லப்பட்ட பண்ணைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இருமடங்காகியுள்ளது. நிலக் குழு (Land Commisiion CPT) அறிவிப்பின்படி, முந்தைய ஆண்டின் 30 பேரோடு ஒப்பிடும்போது, இவ்வாண்டு 60 பேர் கொலையுண்டுள்ளனர்.

கிராமப்புற வர்க்கப் போரில், Rosetto ஒரு நடுநிலையாளர் போன்ற நிலைப்பாட்டைக் கொண்டார். கடந்த கோடையில், O Estado செய்தித் தாளுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில்: "எந்த விதமான வன்முறை ஆர்ப்பாட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம், அது நிலமற்ற விவசாயிகள் ஆயினும் அல்லது பெரிய நிலக்கிழார்களுடைய ஆயுதமேந்திய போராளிகளாயினும் சரி." அதேநேரத்தில், நிலக்கிழார்களின் அழுத்தத்தின் கீழ், இவர் அரசாங்க நிலச் சீர்திருந்த அமைப்பின் தலைவரான Marcelop Resende ஐ அவர் நிலமற்ற விவசாயிகளுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால், பதவியிலிருந்து நீக்குவதற்கு உடன்பட்டார் என அவர் கூறினார்.

நகரங்களில், அரசாங்கத்தின் வலதுசாரிப் போக்கிற்கு எதிர்ப்பு வளர்ந்தது என Ernesto Herrera மேற்கூறிய கட்டுரையில் விளக்கியுள்ளார்: "சமூக உரிமைகளுக்கான இலட்சக்கணக்கான போராளிகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்குத் துணை நிற்க மறுத்துவிட்டனர். அவர்கள் தங்கள் வெறுப்பு உணர்வையும் எதிர்ப்பையும், லூலா அரசாங்கமும் PT யும் நிபந்தனையின்றி சரணடைந்ததற்கு எதிராக வெளிப்படுத்தினர். துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பல நகரங்களில் நடைபெற்ற பேரணிகள், தொழிற்சங்கக் கூட்டங்கள், மாணவர் பேரவைகள், கருத்து அரங்குகள், பொது விவாதங்கள் என அரசாங்கத்தின் 'காட்டிக்கொடுத்தல்' பற்றியதே பவவிதத்திலும் வெளிப்பட்டன. மக்கள் இயக்கத்தின் மிகவும் அரசியல் மற்றும் நனவுடைய பகுதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருந்த தேன்நிலவுக் காலம் முடிந்துவிட்டது. ஆளும் அரசியல் அமைப்புக்குள்ளே விரைவில் அழுத்தம் கொடுக்கும் அனுபவங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் இவற்றின் உறுதியற்ற காலக் கட்டம் இப்போது ஆரம்பமாகி விட்டன."

ஆனால், இவை அனைத்துமே, PT பாலான DS இன் பிரேசிலிய பப்லோவாதிகளின், கேள்விக்கிடம் இல்லாத விசுவாசத்தை குறைத்துவிடவில்லை.

ஹெலோய்சா ஹெலினாவை வெளியேற்றுதல்

பொதுமக்களுடைய பெருகிய மன அதிருப்தியை எதிர்கொண்ட நிலையில், PT இன் தலைமை இறுதியில் கட்சியின் இடதுசாரிப் பிரிவின்மீது தாக்குதலைத் தொடங்கியது. டிசம்பர் 14, 2003 அன்று, கட்சிக்குழு இடது பிரிவின் நான்கு பிரதிநிதிகளை, "கட்டுப்பாட்டை மீறியதாக" க் குற்றஞ்சாட்டி வெளியே அனுப்பத் தீர்மானித்தது; இதில் பாராளுமன்றப் பிரதிநிதிகளான சோசலிச தொழிலாளர் பிரிவினைச் (CST) சேர்ந்த யிஷீஏஷீ ஙிணீtவீstணீ ளிறீவீஸ்மீக்ஷீணீ பீமீ கிக்ஷீணீuழீஷீ (ஙிணீதீணீ என்றும் அறியப்பட்டவர்), சோஷலிஸ்ட் இடது இயக்கம் MES இன் Luciano Genro, எப்பிரிவையும் சாராத Joao Fontes, மற்றும் DS இன் செனட் உறுப்பினர் Heloisa Helena ஆகியார் ஆவர். Helena, இவர் ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிராக தன்னுடைய வாக்கைப் போட்டிருந்தமை இவருடைய விதியை நிர்ணயித்துவிட்டது.

DS இன் பிரதிபலிப்பு வரம்புமீறாத வகையில் இருந்தது. ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையில் அது அறிவித்தது: "இந்த வெளியேற்றுதலுக்கான வாக்கு ஒரு சோசலிச மற்றும் ஜனநாயக கட்சியாகப் பிரதிநிதித்துவம் செய்யும் PT க்கு கடுமையான தாக்குதலாகும். இது மிகப்பெரிய முறையில் உலகெங்கிலும் உள்ள இடது போராளிகளுடன் PT உடனான உறவுகளைக் குன்றவைத்து அரிக்கவும் செய்து விடும்." ஆயினும், இதற்கு அடுத்த வாக்கியத்தில், DS தன்னுடைய விசுவாசத்தை PT க்கு தெரிவித்துக் கொண்டது: "இதன் கடந்த மாநாட்டின் தீர்மானங்களுக்கு ஏற்ப DS, PT க்குள் இருக்கும் பூசல்களுள் தன் நடுநிலையைக் காட்டி, இதை ஒரு சோசலிச மற்றும் ஜனநாயக நோக்குநிலைக்கு கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்ளும்." (6) Miguel Rossetto தன்னுடைய மந்திரிப் பதவியில் தொடர்ந்து நீடித்தார்.

DS ஆல் எடுக்கப்பட்ட நிலைப்பாடு பப்லோவாத பத்திரிகைகளில் உலகெங்கிலும் ஆதரவைக் கொண்டது. ஜேர்மனியில் Hermann Dierkes, PDS (முன்னாள் கிழக்கு ஜேர்மன் ஆளும் ஸ்ராலினிச SED கட்சியின் வழித்தோன்றலான ஜனநாயக சோசலிசக் கட்சி) கட்சியின் பட்டியல் உறுப்பினராக Duisburg மாமன்ற உறுப்பினராக இருப்பவர் கீழே உள்ள கருத்தைத் தெரிவித்தார்: "இந்த இயக்கம் தொடர்பான DS போக்கு மற்றும் ஏனைய கட்சி இடதுகளின் நிலை இக்காலக்கட்டத்தில் PT ஐ முற்றிலும் விடுதல் காலப்பொருத்தம் இல்லாதது என்பதைக் காட்டுகிறது. மாறாக, அவர்களின் நோக்குநிலை ஒரு அடிப்படை அரசியல் விவாதத்தை நடத்துதல் ஆகும், இதுவரை ஜனநாயக முறையில் மிகுந்த ஆர்வத்தையும் பன்முக இடது சாரியாகவும் இருந்த கட்சி, இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அரசியலில் ஆர்வம் நிறைந்து ஒரு சிறந்த சோசலிச பிரேசில் உருவாகும் என்ற நினைப்பில் உள்ளனர் என்பது நினைவிற்கொள்ளப்பட வேண்டும்."(7)

ஹெலெனாவை வெளியேற்றுவதற்கு முன்பு, DS இன் முன்னணி உறுப்பினரும், பல்கலைக்கழகப் பொருளாதார விரிவிரையாளருமான யிஷீஏஷீ விணீநீலீணீபீஷீ ஏன் DS இவ்வாறு எந்தச் சூழ்நிலையிலும் PT யை விடாமல் பற்றியுள்ளது என்பதை நியாயப்படுத்தி பெரிய கட்டுரையை எழுதினார். பப்லோவாதிகளுடைய ஆங்கில மொழி ஏடான International Voiewpoint ல், அவர் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது பப்லோவாத போலித்தனத்திற்கு தலைசிறந்த உதாரணமாகும். அரிய சொற்றொடர்களைக் கையாண்டு, "முரண்பாடுகள்", "இயங்கியல்" போன்ற பேச்சுக்கள் மூலம் இவர் DS பின்வாங்கியதை நியாயப்படுத்தியுள்ளமை கூடுதலான சந்தர்ப்பவாதத்தின் அப்பட்டமான வடிவங்களாக உள்ளன." (8)

ஒன்பது மாதங்கள் பதவியில் இருந்த பின்னர், லூலா அரசாங்கம் "தன்னுடைய முரண்பாட்டை, உறுதிப்படுத்தி, பலவிதாங்களில் ஆச்சரியத்திற்குரிய தன்மையையும்" உறுதிப்படுத்தியது என்று Machado எழுதினார். "மிகப் பெரிய வியப்புக்களில்" ஒன்று பொருளாதாரக் கொள்கை, "முந்தைய அரசாங்கம் கொண்டிருந்ததின் தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது." "மாறாக, லூலா அரசாங்கம் சர்வதேச உறவுகள், விவசாயச் சீர்திருத்தம், மற்றய துறைகளில் PT இன் வரலாற்று வேலைத் திட்டத்துடன் கூட்டுப் பொருத்தத்தை தக்க முறையில் கொண்டுள்ளது." "நிலவும் பெரும் முரண்பாடுகள் இந்த செயல்பாட்டைப் பற்றிய சரியான மதிப்பீட்டை அமைக்க முடியாமல் கடினமாக்கியுள்ளன" என்று முடிக்கிறார்.

லூலாவின் இத்தேர்தல் வெற்றியை Machado ஒருபுறத்தில் "நவீன தாராண்மைக் கொள்கையின் தேர்தல் தோல்வி" மற்றும் "தொழிற்சங்கம் மற்றும் மக்கள் இயக்கத்திற்கான வெற்றி, இது "ஒழுங்கமைத்தலுக்கும் இன்னும் திரட்டப்படுதலுக்குமான அதன் வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது." ஆனால், "இன்னொரு புறம்" அரசாங்கம் "இயக்கத்திற்காக, எல்லாவற்றுக்கும் மேலாக வேலையின்மையை பொறுத்தவரை பாதகமான சமுதாய மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆழப்படுத்தி இருக்கிறது மற்றும் தொடர்ந்துள்ளது" என்று கூறுகிறார்.

"அரசாங்கத்திடம் எதிர்பார்ப்புக்கள் காட்டும் ஒரு கட்டம் மற்றொரு கட்டமாக மாற்றப்பட்டுள்ளது, இதில் பல கொள்கைகளை விமர்சித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அதன் விருப்பத்திற்கு எதிராக நிற்கும் குறியிலக்குடன் ஒன்றுபடுத்தல் மற்றும் அணிதிரட்டல்கள் இவற்றின் செயற்பாடுகள் அடங்கியுள்ளன." பல "சமுதாய இயக்கங்கள் அரசியலில் முக்கிய பங்கு பெறும் நிலை வந்துள்ளது; அவை தங்கள் பங்கை அரசாங்கத்திற்கு எவ்விதம் செலுத்துவது என்ற அச்சில் மறு விளக்கம் கொடுக்கவேண்டியுள்ளது: "இன்றைய பிரேசிலிய இடதின் முக்கிய பணிகளில் ஒன்று, சமுதாயத்தின் மற்றும் அரசாங்கத்தின் நோக்குநிலையின் மோதலில் சமூக இயக்கங்களை உறுதிப்படுத்தும் வழியில் இந்த செயற்பாடுகளை அபிவிருத்தி செய்ய உதவுவதாகும்" என்று Machado கூறியுள்ளார்.

இன்னும் பலபக்கங்கள் "ஒரு புறத்தில் இவ்வாறும், மறுபுறத்தில் அவ்வாறும்" என்று எழுதிய பின்னர் Machado, PT உடன் உறவை முறித்துக் கொள்ளக் கூடாது என வாதிடுகிறார். இதைக் கட்சியின் "ஆழ்ந்த வேர்களை" ஒட்டி நியாயப்படுத்தும் அடிப்படையாகவும் கொள்ளுகிறார்.

"அரசாங்கம், கட்சி ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளினால் மூச்சுத் திணறவில்லை. 23 ஆண்டுகளாக PT ஐ அமைத்த இயக்கத்தின் வேர்கள் ஆழமானவை, அவை தொழிலாள வர்க்கத்திடமும் மக்களிடமும் உள்ளன. PT கட்டப்பட்ட வரலாறு, பிரேசிலிய சமுதாயத்தில் சமூக, அரசியல், பண்பாட்டுப் போராட்டங்களின் வரலாறு என்பது மட்டுமின்றி அதன் உள் சர்ச்சைகளின் வரலாறும் ஆகும். இந்த வழிவகை தொடர்கிறது என்று கூறுவதற்கான வலுவான வாதங்கள் இருக்கின்றன."

"ஒன்பது மாத காலத்தில் அரசாங்கத்தின் நோக்குநிலையின் அடிப்படையில், எல்லாம் முடிந்து விட்டது என்று முடிவு கூறுவது தவறாகும்; ஏதோ விருப்பங்கள் ஒன்றுபட்ட முறையில் வெளிப்படுத்தப்பட்டு, முழு வருங்காலமும் இதில் குறிப்பிடப்பட்டது போலும், அவற்றை ஒட்டி முரண்பாடுகளும் மற்றும் அவை தொடர்பான சக்திகளும் வளரா என்பது " தவறாக இருக்கும் என்று அவர் முடித்துள்ளார்.

இறுதியாக, அவர் PT ஐ விட்டு நீங்குபவர்கள் பற்றி வெளிப்படையான தீர்ப்பைக் கொடுக்கையில்: "அவசரப்பட்டு PT யிலிருந்து நீங்கி PSTU MTM (PT க்கு வெளியே உள்ள "இடது" பிரிவு), சேர விரும்பும் சிறு பிரிவுகள் ஒரு மாற்றாக இராது - இதன் சாத்தியம் PT அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து கொண்டிருக்கும் குறைந்த பட்ச வரலாற்றுப் பொருளுக்கு அது உகந்ததாக இருக்காது. PT ஒரு சோசலிச மற்றும் ஜனநாயகக் கட்சியாக இருக்கவேண்டும் என்ற போராட்டத்திற்கு இன்னும் முடிவு காணப்படவில்லை" என்று கூறுகிறார்.

PT இன் முரண்பாடு மற்றும் வரலாற்று வேர்களைப் பற்றிய மார்ச்சடோவின் குறிப்பு, முக்கியமான கேள்விகளுக்கு திரையிட்டுவிடுகிறது; அதன் திட்டங்கள், சமூக செயல்பாடு இவையே அவை. இதே வாதங்களைப் பயன்படுத்தி எந்த அமைப்பையும் நியாயப்படுத்திவிட முடியும், திவாலாகிவிட்ட சீர்திருத்தக் கட்சிகளான Geman SPD (சமூக ஜனநாயகக் கட்சி கூட) அல்லது பிரான்சின் PCF (Communist Party of France) போன்றவற்றையும் நியாயப்படுத்த முடியும்; ஏனெனில் அவையும் தொழிலாள வர்க்கத்துள் ஆழ்ந்த வரலாற்று வேர்களைக் கொண்டு, உட்பூசல்களால் கொந்தளிப்பைக் கண்டுள்ளன. ஓர் இயக்கத்தின் அரசியல் பாதைக்கு திட்டவட்டமானது அதன் வரலாற்று மூலங்கள் மட்டும் அல்ல, அவற்றின் சமூக மற்றும் அரசியல் நோக்குநிலையே ஆகும்.

PT அரசாங்கம், IMF இன் முழு ஆதரவையும் பிரேசிலிய முதலாளித்துவ வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளின் ஆதரவையும் கொண்டுள்ள ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்ற உண்மையை Machado அசட்டை செய்கிறார். உண்மையில் PT இன் இந்த "வரலாற்று வேர்கள்", அதாவது உழைக்கும் வர்க்கத்தின் பல பிரிவுகளின் நம்பிக்கையை முற்றிலும் கொண்டுள்ளது என்ற உண்மைதான் - இக்கட்சியை ஆளும் செல்வந்தத் தட்டிற்கு மிகவும் பயன்படுவதாக செய்கிறது. மரபுவழியிலான முதலாளித்துவ கட்சிகள் தொழிலாள வர்க்கத்துடன் நேரடியாக மோதாமல் கொண்டுவர இயலாத வலதுசாரிக் கொள்கைகளை, PT இப்பொழுது செயல்படுத்தி வருகிறது. கடந்த கோடைகாலத்தில் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் பற்றிய பூசல்கள் இதை நன்கு வெளிப்படுத்துகின்றன. பழமைவாத அரசாங்கங்களின்கீழ் கிட்டத்தட்ட இதேபோன்ற சீர்திருத்த திட்டங்கள் மக்கள் எதிர்ப்பின் காரணமாக பல வேளைகளில் திரும்ப கைவிடப்பட்டிருந்தன.

PT இன் "முரண்பாடுகளைப்" பற்றி Machado பேசியிருந்தாலும்கூட, கட்சியின் தலைமை, எந்த சூழ்நிலையிலும் அது காரியாளர்களுடைய அழுத்தத்திற்காக விட்டுக் கொடுக்க முடியாது என்று எந்தவித பிழைக்கும் இடமில்லாமல் தெளிவுபடுத்தியுள்ளது. அதைப் பற்றிய தெளிவான அடையாளத்தைக் காட்டும் வகையில்தான் அது Heloisa Helena, மற்றும் சில இடதுசாரியினரை வெளியே அனுப்பிவைத்தது. கீழிருந்து வரும் அழுத்தத்திற்கு இடம் கொடுத்து கட்சிக் கொள்கையை மாற்றுவதை விடவும் கட்சியின் பொதுமக்கள் ஆதரவுபெற்ற பிரதிநிதிகளிடம் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டுவிடும். முதலாளித்துவ வேலைத் திட்டத்தின் தர்க்க வகை, அதன் சொந்த அணிகளின் உள்ளே உள்ள மன அதிருப்தியைப் பற்றி கவலை கொள்ளாது அதை இன்னும் கூடுதலான பிற்போக்குக் கொள்கையின் புறம்தான் கொண்டுசெல்லும். ஒரு சில மாதங்கள் அதிகாரத்தில் இருந்ததானது PT பற்றிய உண்மைத் தன்மையை நன்கு விளக்கிக்காட்டி விட்டது.

ஏமாற்றம் அடைந்த வாக்காளர்களும் உறுப்பினர்களும் கட்சிக்குத் தங்கள் புறமுதுகைக் காட்டி வெளியேறும்போது, Machado வும் DS உம் PT உடன் இறுதிக் கசப்பு முடிவு வரை தொடர்ந்திருப்பது என்ற முடிவில் உள்ளனர். "ஆழ்ந்த வேர்கள்" பற்றியும் "உள் முரண்பாடுகள்" பற்றியும் அவர்கள் பிரார்த்தனை செய்வது, தொழிலாளர்கள் கண்களின் மண்ணைத்தூவுவது போல்தான்; இதுவே அரசியல் பொறியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒரு கட்சியுடன் அவசியமாக முறித்துக் கொள்ளுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதாகும். அவர்களுடைய அக்கறைகள் சுயநலம் இல்லாமல் இல்லை -PT உடன் முறித்துக் கொண்டு வெளியேறுவது என்றால், வசதிகள், மற்றும் உயர்தகுதி அதிகாரப் பதவியைக் கட்சியிலும் அரசு இயந்திரத்தில் இருந்தும் விடவேண்டும் என்பதும் அர்த்தமாகும். பிரேசிலில் நிகழ்பவை பப்லோவாதிகளின் அரசியல் எங்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. 20- ஆண்டுகளுக்கும் மேலாக பப்லோவாதிகள் உழைத்து, தம்மையே அழிக்கக்கூடிய ஒரு பூதத்தை (Frankenstein Monster) தோற்றுவித்துள்ளனர்; அது இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் முதுகில் குத்துகிறது. LCR, பிரான்சில் அமைக்க இருக்கும் "முதலாளித்துவ-எதிர்ப்பு இடது" என்பதும் இதேபோன்ற பணியைத்தான் செய்யும்.

தொடரும்.

Notes:
1. Daniel Jebrac, Les portes étroites de la "liberalisation" et la construction du PT, Inprecor, no. 91, 15 December 1980.
2. XIe Congrès mondial de la IVe Internationale, November 1979, Inprecor, numéro spécial.
3. Brazil: A popular victory, Resolution of the National Coordination of the Socialist Democracy tendency of the PT, International Viewpoint 346, December 2002/January 2003
[http://www.3bh.org.uk/IV/Issues/2002/IV346/IV346 06.htm]
4. Brazil: another economic model is possible, International Viewpoint 349, May 2003 [http://www.3bh.org.uk/IV/Issues/2003/IV349/IV349 05.htm]
5. Ernesto Herrera, Dilemma in der PT-Linken..., Inprekorr Nr. 384/385 [http://www.inprekorr.de/384-bras.htm]
6. Erklärung der Tendenz ‘Sozialistische Demokratie' in der PT, 15. Dezember 2003, [http://www.die-welt-ist-keine-ware.de/isl/ds_heloisa.htm

Top of page