:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraqi city of Karbala left in ruins by US military
அமெரிக்க இராணுவத்தால் அழிந்துவிட்ட ஈராக்கிய கர்பலா
நகரம்
By James Conachy
24 May 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஷியா மதபோதகர் மொக்தாதா அல்-சதர் தலைமையில் அமெரிக்கப்படைகளுக்கு
எதிராக போர் புரிந்து வரும் போராளிப்படை வீரர்களோடு மூன்று வாரங்கள் அழிவுகரமான போரை நடத்திய
பின்னர், கர்பலா நகரை தனது கட்டுபாட்டிற்குள் மீண்டும் கொண்டு வந்துவிட்டதாக அமெரிக்க இராணுவம் கூறிக்கொள்கிறது.
அமெரிக்க டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் ஷியைட்டுக்களின் புனித தளங்களான இமாம் உசேன் மற்றும் இமாம்
அப்பாஸ், நினைவிடங்களுக்கு அருகே வெள்ளி மற்றும் சனி இரவுகளில் வந்தன, எந்த விதமான தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை.
அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள ஈராக் போலீசார் மீண்டும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக
கூறப்படுகிறது.
கர்பலாவில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை சர்வதேச ஊடகங்களில்
இடம் பெறவேயில்லை. அந்த நினைவிடங்களைச் சுற்றியுள்ள பழைய கர்பலா நகர தெருக்கள் அமெரிக்கத் தாக்குதலால்
அழிந்து கிடக்கின்றன. ஏஜன்ஸ் பிரான்ஸ் பிரஸ் சனிக்கிழமையன்று தந்திருக்கிற தகவலின்படி: கட்டடங்கள் இடிந்து கிடக்கின்றன,
சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன, வர்த்தக நிறுவனங்கள் சிதைந்து குப்பை மேடுகள் போல் கிடக்கின்றன, இடிபாடுகளுக்கிடையே
இருந்து முறுக்கிக் கொண்ட கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளன.... தரையில் சிதைந்துவிட்ட எரிந்துவிட்ட வாகனங்கள்
சிதறிக்கிடக்கின்றன, நிலைகுலைந்த மக்கள் விழுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்து புரண்டுள்ளனர்''
Mukhaiyam
மசூதியின் பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது. நூற்றுக்கணக்கான வீடுகளில் துப்பாக்கிக் குண்டுகளும் வெடித்து சிதறிய
குண்டுகளும் வடு ஏற்படுத்தியுள்ளன.
சதரின் போராளிகள் தங்களது எதிர்ப்பு நடவடிக்கையை கைவிடாவிட்டால், அந்தப்
புனித நினைவிடங்களை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வருகின்ற குண்டுகள் எந்திரத்துப்பாக்கி தாக்குதல்களால் அந்தப் புனித
நினைவிடங்கள் சேதமடைவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க இராணுவம் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்து
கர்பலாவை பிணையில் வைத்திருந்திருக்கிறது. சதரின்
Mahdi இராணுவ போராளிகளது தலைமை அலுவலகங்கள் இருப்பதாக
கூறப்படும் கட்டிடங்கள் இமாம் உசேனின் நினைவிடத்திற்கு நேரடியாக பின்னால் இருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடம்
மற்றும் இதர கட்டடங்கள்மீது வெள்ளிக்கிழமை காலை அமெரிக்க டாங்கிகளும்
AC130- போர்விமானங்களும் குண்டுவீசி தாக்கின அந்தத் தாக்குதலில்
குறைந்த பட்சம் ஒன்பது சிவிலியன்கள் கொல்லப்பட்டாதக அல் ஜெசீரா தகவல் தந்தது. அந்த நினைவிடத்திற்கு
தெற்கிலுள்ள பகுதி ''முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக'' அமெரிக்க அதிகாரி ஒருவர் விவரித்தார்.
அவர்களது நடவடிக்கைகளை பதவு செய்கின்ற பத்திரிகையாளர்களையும், நிழற்படக்காரர்களையும்,
திட்டமிட்டு அமெரிக்கத் துருப்புக்கள் கொலை செய்ய முயன்று வருவதாக கர்பலாவிலிருந்து புதிய குற்றச்சாட்டுக்கள்
எழுந்துள்ளன. அல் ஜெசீரா கமரா குழுவை சார்ந்த
44 வயது ரஷீத்
ஹமீத் வாலி வெள்ளிக்கிழமைக் காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின் நான்காவது மாடியில், அமெரிக்க டாங்கிகள்
கடந்து செல்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வலைப்பின்னல்
(Network) இது குறித்து விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டிருக்கிறது. மே 14-ல், அமெரிக்க டாங்கிகள் பல பத்திரிகையாளர்கள் பணிபுரிந்து வந்த
Thulfiqar
ஹோட்டலின் மேற்கூரையில் சுட்டனர்.
கர்பலாவில் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கப் படைகள்
மே மாதத் ஆரம்பத்தில் தாக்குதலை தொடக்கினர். கவச வாகனங்கள் ஹெலிகாப்டர், குண்டுவீச்சு விமானங்களுடன்
கவச வாகனங்களில் இரவில் எளிதில் இலக்குகளை குறிவைக்கும் சாதனங்களோடு காலாட்படைகளுடன் அமெரிக்கப்படைகள்
வந்து, துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் போன்ற சாதாரண ஆயுதங்கள் வைத்திருந்த ஈராக் போராளிகளுக்கு
எதிராக தாக்குதல்களைத் தொடுத்தன. சதரின் போராளிகள் குறைந்தபட்சம் 120-பேர் கொல்லப்பட்டதாகவும்,
நான்கு அமெரிக்கர்கள் மடிந்ததாவும், 52 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க இராணுவம் கூறியது. கொல்லப்பட்ட
அல்லது காயமடைந்த பொதுமக்கள் பற்றிய நம்பகமான தகவல் எதுவுமில்லை. கர்பலா நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர்
வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரிய வருகிறது.
வாரக் கடைசியில் கர்பலாவிற்குள் நுழைந்த அமெரிக்கத் துருப்புக்கள் ஏப்ரல்
தொடக்கத்திலிருந்து சென்றவாரம் வரை கர்பலா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான
போராளி வீரர்களைக் காண முடியவில்லை. நியூயோர்க் டைம்ஸ் நிருபர் தந்துள்ள தகவலின்படி, வியாழன்
மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் Mahdi
இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஷியா புனித நினைவாலயஙகளைச் சுற்றி தற்காப்பு நிலைப்பாடுகளிலிருந்து தங்களது
ஆயுதங்களை மூட்டைகட்டிக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது. ''பேருந்துகளில் பல்லூஜாவிலிருந்து வந்த
போராளிகளோடு'' வெள்ளிக்கிழமையன்று கர்பலாவிலிருந்து புறப்பட்டுச் சென்றனர், அமெரிக்க டாங்கிகளோடு
மோதுவதற்கு ஏற்ற ஆயுதமில்லை என்று முடிவு செய்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டதாக அந்நகர மக்கள் ஞாயிறன்று
அமெரிக்கத் துருப்புக்களிடம் தெரிவித்ததாக டைம்ஸ் குறிப்பிட்டது.
அந்தப் பகுதியில் அமெரிக்கத் துருப்புக்களுக்கான கள தளபதி கேர்னல் பீட்டர்
மன்சூர், ''அவர்கள் ஆயுதங்களை மூட்டைகட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டதாக தோன்றுகிறது.'' என்று
பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஈராக் போராளிகள் வெளியேறியது தொடர்பான சூழ்நிலைகள் முற்றிலும்
தெளிவாகயில்லை. சதரின் போராளிகள் கர்பலா மற்றும் நஜாப் நகரங்களைவிட்டு வெளியேறிவிட வேண்டும்,
அப்போது தான் ஷியா புனித நினைவிடங்களை சேதமின்றி காப்பாற்ற முடியுமென்று முன்னணி ஷியா மதபோதகர் அலி
அல்-சிஸ்தானி திரும்பத் திரும்ப வேண்டுகோள்களை விடுத்தார்.
போராளிகள் நகரின் மைய பகுதியிலிருந்து வெளியேறினால் தாங்களும் அவ்வாறே
செய்வதாக அமெரிக்கத் துருப்புக்களுடன் உடன்பாடு செய்து கொண்டதன் விளைவாக தங்கள் தரப்பினர்
வெளியேறிவிட்டதாக அல்-சதர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவத்தலைமை
அத்தகைய உடன்பாடு அல்லது பேரம் எதுவும் நடத்தப்படவில்லை என்று அறிவித்தது. ஆனால் வெள்ளிக்கிழமை காலை
கர்பலா நகர மையப்பகுதிகளிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு வெளியேறி சென்றுவிடுமாறு அமெரிக்கத்
துருப்புக்களுக்குக் கட்டளையிடப்பட்டன.
வெள்ளிக்கிழமை காலை
Mukhaiyam
மசூதியைச் சுற்றி நின்ற அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற கட்டளையிடப்பட்டது. போர் நின்றுவிட்ட வாய்ப்பை
பயன்படுத்தி ஈராக் போராளிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
உடன்பாட்டு பேச்சு நடந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கான ஈராக்
கிளர்ச்சிக்காரர்கள் எளிதாக மக்களிடையே இணைந்து தலைமறைவாகி மற்றொரு நாள் போராடுவது அமெரிக்க
ஆகிகிரமிபப்பு படைகளுக்கு மகத்தான இராணுவ கஷ்டங்களை உருவாக்கியுள்ளது. மிகப்பெரும்பாலான ஈராக்
மக்களது ஆதரவு பெற்றிருப்பதால் இந்த கொரில்லாப் போர் காலவரையற்று நீடித்துக்கொண்டிருக்கிறது. கர்பலா
நகர மக்கள் போராளிகளுக்கு அனுதாபம் காட்டவில்லை என்று அமெரிக்க சார்பில் பேசவல்ல பேச்சாளர்கள்
அறிவித்துக்கொண்டிருந்தாலும் அந்நகரத்தை தற்காத்து நிற்பதற்காக போராடும் ஷியைட்டுப் போராளிகள் அல்லது
சுன்னி போராளிகளை கண்டு பிடிப்பதில் அந்நகர மக்கள் அமெரிக்க இராணுவத்திற்கு உதவுவதாக எந்தவிதமான
தகவலும் வரவில்லை.
தற்போது அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் நஜாப் மற்றும் அருகாமையிலுள்ள
Kufa நகரங்களின் பக்கம் திரும்பியுள்ளன, இவை சதரின்
கட்டுப்பாட்டிலுள்ள கடைசி கிளர்ச்சி பகுதியாகும். கர்பலாவிலிருந்து பல ஈராக் போராளிகள் நஜாப் நகருக்கு
வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமாம் அலியின் புனித நினைவிடத்தைச் சுற்றி
பல்லாயிரக்கணக்கான போராளிகள் அல் சதரின் அணியைப் பலப்படுத்துவற்காக நிலை கொண்டிருக்கின்றனர். அந்தப்
புனித தளம் ஷியா பிரிவினரின் மிக உயர்ந்த முக்கியத்துவம் பெற்ற பகுதியாக மதிக்கப்படுகிறது.
வெள்ளியன்று, அமெரிக்கத்துருப்புக்கள் அல்-சதரின் முக்கிய உதவியாளர்
Mohammed Tabtabai-ஐ
பிடித்தனர், அவர் நஜாப்பிற்கும் அருகாமையிலுள்ள குஃபா நகருக்குமிடையே அவர் பயணம் செய்து
கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டார். அந்த வாகனங்களில் அல்-சதரே பயணம் செய்கிறார் என்று நம்பி
அமெரிக்கர்கள் அவரை பிடித்திருக்க வேண்டும். சில மணி நேரத்திற்கு முன்னர் அவர் குஃபா பிரதான மசூதியில்
1500 ஆவேசம் கொண்ட போராளிகளுக்கு இடையே உரையாற்றிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர்
பின்வருமாறு கூறினார்: ''நான் கொல்லப்பட்டாலோ, அல்லது கைது செய்யப்பட்டாலோ, அதை ஒரு
நொண்டிச்சாக்காக எடுத்துக்கொண்டு நீங்கள் செய்து வரும் காரியத்தை நிறுத்திவிட வேண்டாம், ஏனெனில் நீங்கள்
உண்மையை நிலைநாட்டவும், தவறை எதிர்த்து நிற்கவும் போராடி வருகிறீர்கள்''.
ஞாயிறன்று அமெரிக்க துருப்புக்களும் ஒரு ஈராக் பிரிவும் குஃபாவிலுள்ள
Sahla மசூதியில்
புகுந்தது. அந்த மசூதியின் கதவுகளை உடைக்க ஒரு டாங்கி பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க இராணுவம் அந்த
நடவடிக்கையில் 20 போராளிகளை கொன்றதாக தெரிவித்தது, ஆனால் நஜாப் பிரதான மருத்துவ மனை
ரியட்டர்ஸ்சுக்கு தெரிவித்துள்ள தகவலின் படி அந்த மருத்துவமனைக்கு 14- சடலங்கள் வந்து சேர்ந்தன,
37-பேர் காயம்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களில் பெரும்பாலோர் போரில் ஈடுபடுபவர்கள்
அல்ல.
ஞாயிறன்று நஜாப் நகர விளிம்பிலுள்ள மிக பிரம்மாண்டமான ஷியா நினைவிடத்தில்
மிகப்பெரும் சண்டை நடைபெற்றது, அங்கிருந்து போராளிகள் அமெரிக்கப்படை நிலைப்பாடுகள் மீது பீரங்கித்
தாக்குதல்களை நடத்தினர். தற்போது அமெரிக்கத் துருப்புக்கள் நகரின் மையப் பகுதியை சுற்றி
வளைத்துக்கொண்டிருக்கின்றன.
நஜாப் நகரத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற நிலை ஈராக்
முழுவதிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் மிகப்பெரிய அளவிற்கு சீற்றத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. பாக்தாத்தில்
தொழிலாளர் வர்க்கம் மிகுதியாகவுள்ள ஷியா புறநகரம் சதரின் பிரதான ஆதரவு பகுதிகளாகும், அங்கு
பதட்டங்கள் முற்றிக்கொண்டிருக்கிறது மற்றும் எந்த நேரத்திலும் அது வெடித்துச் சிதறக்கூடும்.
அமெரிக்காவின் ஆதரவு-அரசான மற்றும் அமெரிக்காவின் பிரதான கப்பற்படை
தளமுள்ள பாரசீக வளைகுடாவான Bahrain-ல்
வெள்ளிக்கிழமையன்று ஷியைட்டுகள் கண்டனப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியை கலைப்பதற்கு போலீசார்
முயன்றபோது நடைபெற்ற மோதல்களில் 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்படி வெடித்துச் சிதறும்
நிலையை உணர்ந்து கொண்டு Bahrain
மன்னர் போலீஸ் நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்ட உள்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்கியதுடன், மன்னர்
இப்பிரச்சினையைப்பற்றி, ''பாலஸ்தீனத்திலும் புனித நினைவிடங்களிலும் நடைபெற்று வருகின்ற ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறை
தொடர்பாக நமது மக்களின் ஆவேசத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்'' என்று அறிவிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
லெபனானில் ஷியைட்டுக்களின்
Hizbollah இயக்கம் வெள்ளிக்கிழமையன்று விடுத்த அழைப்பை
ஏற்று Beirut-ல்
300,000 மக்கள் வரை திரண்டு ''கர்பலா மற்றும் நஜாப் நகர்களிலுள்ள ஷியைட்டு புனித தளங்கள் மீது அமெரிக்கா
தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எதிர்த்து நிற்க உறுதியளித்துக் கொண்டனர்.''
பல்லாயிரக்கணக்கான லெபனானின் ஷியைட்டுக்கள் இறுதிச்சடங்குகளில் அணியும் வெள்ளை முக்காடுகளோடு அல்-சதரின்
புகைப்படங்களையும் ஏந்தி அணிவகுத்து வந்தனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களும் அதில் கலந்து கொண்டு
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வரும் அட்டூழியங்களைக் கண்டித்தனர்.
அந்தப் பேரணியில் உரையாற்றிய
Hezbollah
பொதுச்செயலாளர் Sayyed Hassan Nasralla
கூறினார்: ''தங்களது நாட்டை விடுவிப்பதற்கு எப்போது, எப்படி,
எங்கே போராடுவது என்பதை ஈராக் மக்கள் முடிவு செய்வார்கள். ஆயினும், நஜாப் மற்றும் கர்பலா என்று
வரும்போது நாங்களும் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறோம் என்று கருதுகிறோம். நாங்கள் இன்றைக்கு இறுதிச்சடங்கு
ஆடைகளை அணிந்திருப்பதன் மூலம் எதிரிகளுக்கு புனித நினைவிடங்களை அதன் பகுதிகளை தற்காத்து நிற்பதில்
போரிட்டு மடிவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டிக்கொண்டிருக்கிறோம்''.
Top of page |