:
வட அமெரிக்கா
SEP defends ballot status for third-party candidates
Press conference denounces Illinois
Democrats effort to remove Nader from ballot
மூன்றாம் கட்சி வேட்பாளர் வாக்குப்பதிவு அந்தஸ்தை சோசலிச சமத்துவ கட்சி பாதுகாக்கிறது
நாடரை வாக்குப் பதிவிலிருந்து நீக்க இல்லினோய் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முயற்சிப்பதை
பத்திரிகை மாநாடு வெளிப்படையாக கண்டனம் செய்கிறது
By Jerry White
20 July 2004
Back to screen version
சோசலிச சமத்துவக் கட்சி சாம்பைன் உர்பனா 103வது மாவட்டத்தின் அதன் மாநில
வேட்பாளர் பிரதிநிதியான ரொம் மக்காமனை விலக்கி வைக்க முயற்சிப்பதற்கு எதிராகவும், அதே போன்று ஜனநாயகக்
கட்சிக்காரர்கள், சுயேச்சை வேட்பாளர் ரால்ஃப் நாடர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு முயன்று
வருவதற்கும் கண்டனம் செய்ய கூட்டாக திங்களன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம்
இல்லினோய் ஐனநாயகக் கட்சியின் முயற்சிக்கு எதிரான அதன் பிரச்சாரத்தை விரிவுபடுத்தி வருகிறது.
நாடரை வாக்குச்சீட்டில் இடம்பெறாது தடுப்பதில் அமெரிக்கா முழுவதிலும் ஜனநாயகக்
கட்சிக்காரர்களால் நடத்தப்பட்டுவரும் பிரச்சாரத்தினை ஒட்டி அதில் ஒரு பகுதியாக இல்லினோய் ஜனநாயகக்
கட்சிக்காரர்கள் நாடரின் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட 35,000 வாக்காளர் கையெழுத்துக்களில்
20,000த்தை ஆட்சேபித்துள்ளனர். சென்ற வாரம் சிக்காகோ தேர்தல் வாரியத்தில் இந்த ஆட்சேபனை குறித்து பரிசீலனை
தொடங்கியது, அனைத்து ஆட்சேபனைகளையும் சரிபார்ப்பது அதிக காலம் பிடிக்கும் நடவடிக்கையாகும் மற்றும் இரண்டு
வாரங்களுக்கு இது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இல்லினோய் வாக்குப்பதிவில் நுழைவதற்கு கூட்டு போராட்டத்தை நடத்த தடையற்ற மற்றும்
சமத்துவ தேர்தல் கூட்டணி என்கின்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது, இதில் நாடர் பிரச்சாரத்தினர், பசுமைகள்
மற்றும் லிபேர்ட்டேரியன் ஆகியவற்றிலிருந்து வரும் பிரதிநிதிகள் உள்ளடங்குவர்.
ABC -TV சிக்காக்கோ
பிரிவினர், பாக்ஸ் நியூஸ் மற்றும் WBBM
செய்தி மற்றும் இதர வானொலி நிலையங்கள் உட்பட பல தொலைக்காட்சி நிலையங்கள் இந்த செய்தி மாநாட்டை
படம்பிடித்தன.
ரொம் மக்கமனை வாக்குச்சீட்டில் இடம்பெறாது தூக்கி எறிவதற்கான முயற்சியில்
இருந்துவருவருவது போல, நாடரின் மனுக்களை பரிசீலிக்கவும், ஆட்சேபனைகளை எழுப்புவதற்கும் இல்லினோய் ஜனநாயகக்
கட்சிக்காரர்கள் அரசு ஊழியர்களை கூர்ந்து ஆராய பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற கட்சி சார்புள்ள
செயல்களுக்கு அரசாங்க ஊழியர்களை பயன்படுத்துவது 2003 இல்லினோய் அரசாங்க ஊழியர் நெறிமுறைச்சட்டம் மற்றும்
மாநில தேர்தல் நெறிமுறைகளின் கீழ் வெளிப்படையாகவே தடைசெய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான நாடரின் தேர்தல் பிரச்சார உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்
கிறிஸ்டியன் டோபின் கூறினார்: ''ஆட்சேபனை தொடர்பான பணிகளில் ஜனநாயகக் கட்சிக்காக 10க்கும் குறைவில்லாத
அரசாங்க ஊழியர்கள் பணியாற்றி வருவதை, ஏற்கனவே, நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம், அவர்களில்
மிகப்பெரும்பாலோர் சபாநாயகர் மைக்கேல் மடிகனின் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ள ஊழியர்கள். நான்
அந்த அலுவலக ஊழியர்களை பரிசீலனை செய்ய ஊதிய சான்றைக்கேட்டேன், ஆனால் மடிகன் அலுவலர்கள் ஏதோ
மறைப்பதைப் போல் செயல்படுகிறார்கள். அதுவும் போதாது என்று, மடிகன் 16-வயது இளைஞர்களை
சரிபார்ப்பதற்காக அனுப்பிக்கொண்டிருக்கிறார், அவர்களுக்கு இதுபோன்ற சட்டநடைமுறைகளில் தலையிடுவதற்கு எவ்வித
உரிமையும் இல்லை''.
''இந்த தகவல் அடிப்படையில்,'' நாடரின் மனுக்களை ஆட்சிபித்தல் மீதான வேலைகளில்
அரசு ஊழியர்கள் ஏன் வேலைசெய்தார்கள் என்று ''மைக் மடிகன் எங்களுக்கு விளக்கம் தர வேண்டும்'' என்றும், இந்த
ஊழியர்கள் வரி செலுத்துவோரின் பணத்தில் ஊதியம் பெறுபவர்களாக இருந்தால், அதேவேளை அவர்கள் ஜனநாயகத்திற்கு
முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்'' என்றும் இறுதியாக ரொபின் குறிப்பிட்டார்.
மாநில ஜனநாயகக் கட்சி தலைவரும் சிக்காகோவில் நீண்டகால அரசியல்வாதியுமான
மடிகன், மக்கமனை அகற்ற நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறார். மடிகன் ஊழியர்களில் ஒருவரான---Brendan
Hostetler--- மக்கமன் மனுக்களை தாக்கல் செய்த மறுநாள்
அவற்றை பிரதியெடுத்தார். மடிகனின் பேச்சாளர், ஸ்டீவ் பிரெளன் சாம்பைன்
News-Gazette-ற்கு
சனிக்கிழமையன்று அளித்த பேட்டியில் SEP
வேட்பாளர் வாக்குப்பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை வலியுறுத்தினார். அவர் அரசாங்க
ஊழியர்களை பயன்படுத்துவது, ''மையமான பிரச்சனையல்ல'' என்றும்
SEP ''போலி
மனுக்களை'' தாக்கல் செய்திருக்கிறது என மீண்டும் அவதூறு கூறினார்.
SEP ஆதரவாளர் ஒருவர் நாடர்
தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறைகளை எதிர்த்து
போராடுவதில் தனது ஒற்றுமையை காட்டும் அறிக்கையை வாசித்தார், ''ரால்ப் நாடர் உடன் எங்களுக்குள்ள அரசியல்
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சோசலிச சமத்துவக் கட்சி இல்லினோய்சில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அவரை
வாக்குப்பதிவிலிருந்து நீக்குகின்ற முயற்சியை கண்டிக்கின்றது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வாக்குப்பதிவில் கலந்து கொள்கின்ற
நியாயமான, சம அணுகு முறை வேண்டும் என்ற போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்."
''இந்த பிரச்சாரத்தில் நாடரை தவிர்ப்பது போல, சாம்பைன்-உர்பனாவிலுள்ள 103வது
மாவட்டத்தின் மாநில பிரதிநிதிக்கான, SEP
வேட்பாளர் தோமஸ் மக்கமன் சார்பில் தாக்கல் செய்த கையெழுத்திட்ட மனுக்களில் நேர்மையற்ற முறையோடு
பாதிக்குமேற்பட்டவையை வாக்குப்பதிவிலிருந்து தூக்கி எறிவதற்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முயன்று வருவது, இரண்டு
கட்சி முறையை எதிர்க்க எழும் எந்த எதிர்ப்பு குரல்களையும் வாய்மூடப் பண்ணும் நோக்கம் கொண்டதாகும். ஜனநாயக
மற்றும் குடியரசுக் கட்சியினருக்கும் அவர்களின் போர்க்கொள்கைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும்
மற்றும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலுக்கும் ஒரு மாற்றை நாடும் மக்கள் தொகையினரின் பரந்த பகுதியினரிடையே
இடம்பெறுகிறது.
''இன்றைய பத்திரிகை மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருடனும் ஒருங்கிணைந்து
வாக்குப்பதிவில் இடம்பெறுவதற்காகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதிலும் போராடுவதற்கு
கிடைத்துள்ள வாய்ப்பை வரவேற்கிறோம்''.
இல்லினோய் லிபர்ட்டேரியன் கட்சி நிர்வாக இயக்குநர்
Jeff Trigg கும்
செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். அக்கட்சி குடியரசுக் கட்சியினரால் நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களை
சந்தித்துவருகிறது. ''இதர கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும், இல்லினோய்சில் இந்த நகைப்பிற்குரிய
வாக்குப்பதிவு நுழைவு சட்டத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடுகிறோம்.'' என்று பத்திரிகை மாநாட்டில் டிரிக்
குறிப்பிட்டார். இல்லினோய் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நாடரின் மனுக்களை ஆட்சேபிக்கிறார்கள், ஆனால் அவர்கள்
தேர்தல் சட்டப்படி கடைசி தேதியையும் ஜனாதிபதி புஷ் புறக்கணிக்க அவருக்காக வளைந்து கொடுக்கிறார்கள். இப்படி
புஷ்ஷிற்கு சலுகைதரும் வகையில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த புஷ் ஆதரவு வாதம்
ஜனநாயகக் கட்சியினர் யாரை அரசியல் எதிரியாக நினைக்கின்றனர் என்று காட்டுகிறது, அவர்களது எதிரி குடியரசுக்
கட்சியல்ல. அவர்களுடைய எதிரி வாக்காளர்களின் தேர்வுதான், அந்தக் கருத்து தவறானது'' என்று டிரிக் கூறினார்.
அந்த பத்திரிகை மாநாட்டில் கலந்துகொண்ட லிபர்ட்டேரியன் கட்சியை சேர்ந்த
வழக்கறிஞர் Andy Spiegel
அவருடைய கருத்தைக் குறிப்பிட்டார், அவர் நாடருக்கும்
SEPக்கும் வாதாடுகின்ற
வழக்கறிஞர் ஆவார். மக்கமனின் முன்மொழிவு மனுக்களுக்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தான்தோன்றித்தனமாகவும்,
போலியாகவும், தெரிவித்துள்ள ஆட்சேபனைகளை அவர் கோடிட்டுக்காட்டினார்.
''ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தீய எண்ணத்துடன், வாக்காளர் பதிவேடுகளை கூட சரிபார்க்காமல்
ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். SEP
2,003 கையெழுத்துக்களை தாக்கல் செய்தது, அவற்றில் 972 கையெழுத்துக்கள் தவிர அனைத்தையும் ஜனநாயகக் கட்சியினர்
ஆட்சேபித்துள்ளனர். நாங்கள் பூர்வாங்கமாக ஆராய்ந்ததில் மிகப்பெரும்பாலான ஆட்சேபனைகள் மேலெழுந்த வாரியாக
பார்க்கும்போதே தவறானவை என்று கண்டுபிடித்தோம். ஒரு சம்பவத்தில், அவர்கள் ரொம் மக்கமனின் சொந்தக்
கையெழுத்தையே ஆட்சேபித்தார்கள், மனுவில் அச்சிடப்பட்டுள்ள முகவரியில் அவர் தன்னை பதிவு செய்து
கொள்ளவில்லையென்று கூறினர். அவர்கள் அதை சற்று கவனமாக பார்க்கவில்லை, அந்த மாவட்டத்தில் மக்கமன் சுற்றுக்கு
விட்ட 105 மனுக்கள் தலைப்பிலும் அவரது முகவரி அச்சிடப்பட்டிருக்கின்றது.
''மற்றொரு சம்வத்தில், அதே தேர்தல் அலுவலகத்தில் பணிபுரிந்து மனுக்களை சோதனை
செய்கின்ற ஒரு எழுத்தரின் கையெழுத்தையே ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஆட்சேபித்தார்கள். அவரது பெயர் முகவரியை
சரி பார்த்துவிட முடியும், அப்படியிருந்தும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஆட்சேபித்தார்கள்''.
கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலும் கையெழுத்துக்களை நிராகரிப்பதற்கு அரசு ஊழியர்களை
அவர்கள் பயன்படுத்துவதன் காரணமாகவும் ஜனநாயகக் கட்சியினரின் ஆட்சேபனைகளை தள்ளுபடிசெய்யக் கோரும் தீர்மான
மனு ஒன்றைத் தான் தயாரித்து வருவதாக ஸ்பீகல் கூறினார்.
Hostetler, Liz Brown மற்றொரு சட்ட சபை ஜனநாயகக்கட்சி
உறுப்பினரின் பணியாளர் மற்றும் அந்த மாநில சட்ட சபையில் பதவியிலிருக்கும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதியும் மக்கமனால்
எதிர்த்து சவால்செய்யப்படுபவருமான Naomi Jakobsson-ன்
சட்டமன்ற உதவியாளர் Kristen Bauer
உட்பட குறைந்த பட்சம் மூன்று அரசு ஊழியர்களின் பங்களிப்பு பற்றி புலன்விசாரணை செய்யுமாறு ரொம் மக்கமனால்
இல்லினோய் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை காட்டினார்.
''இது தேர்தல் நடத்தை ஒழுங்குமுறையை, அரசு நெறிமுறை சட்டத்தை மீறுதலாகும்.
ஜனநாயகக் கட்சிக்காரர்கள் வரிசெலுத்துவோரால் சம்பளம் தரப்படும் அரசு ஊழியர்களை தங்களது கட்சிப்பணிக்கு பயன்படுத்துகிறார்கள்
என்றால் கிரிமினல் குற்ற அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும்'' என்று ஸ்பீகல் வலியுறுத்தினார்.
* * *
ரொம் மக்கமனை வாக்குப்பதிவில் இடம்பெறவிடாமல் ஜனநாயகக் கட்சி ஆட்சேபிப்பதை
நிராகரிக்குமாறும் ரொம் மக்கமனை வாக்குச்சீட்டில் இடம்பெறச்செய்யுமாறும், சாம்பைன் கவுன்டி தேர்தல் வாரியத்திற்கு
அழைப்பு விடுக்குமாறு ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பவர்களையும்
WSWS வாசகர்களையும்
சோசலிச சமத்துவக் கட்சியானது வேண்டிக் கேட்டுக்கொள்கிறது. அனைத்து மின்னஞ்சல்களையும் தயவுசெய்து இம்முகவரிக்கு
அனுப்பவும்: mail@champaigncountyclerk.com
உலக சோசலிச வலைத் தளத்திற்கு மின்னஞ்சல் நகலை தயவுசெய்து அனுப்பவும்
editor@wsws.org.
SEP பிரச்சாரத்திற்கு ஆதரவாக நிதி
வழங்கவும்பீஷீஸீணீtமீ ஷீஸீறீவீஸீமீ. |